30 நாட்கள் சுயநினைவின்றி இருந்த பெர்ரேயரா தன் குழந்தையின் பசி குரல் கேட்டு சட்டென்று கண் விழித்து தாய்ப்பால் கொடுத்தார்.
உலகம்

அர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம்: மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்

அர்ஜென்டினாவில் கோமாவில் இருந்த தாய் ஒருவர் தனது குழந்தையின் பசி குரல் கேட்டு கண் விழித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பதிவு: டிசம்பர் 05,  2019 

பியூனோஸ் அயர்ஸ்,

அர்ஜென்டினா நாட்டின் வடக்கு மாகாணமான கோர்டோபாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் மரியா லாரா பெர்ரேயரா (வயது 42). 3 குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபரால் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்.

பல நாட்கள் தீவிர சிகிச்சை பெற்ற பிறகும் பெர்ரேயராவுக்கு சுயநினைவு திரும்பாததால், அவர் மூளை இறப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் எனவே அவரது உறுப்புகளை தானம் செய்யும்படியும் குடும்பத்தினருக்கு டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இதனை கேட்டு அவரது கணவர் மார்ட்டின் டெல்கடோ அதிர்ச்சியடைந்தாலும், நம்பிக்கையுடன் தனது மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க கோரினார். அதன்படி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த வாரம் மருத்துவமனைக்கு வந்த பெர்ரேயராவின் 2 வயது இளைய மகள் பாசத்துடன் அவர் அருகில் சென்று படுத்தார். பின்னர் தனது தாயின் அவல நிலையை அறியாத அந்த குழந்தை வழக்கமாக கேட்பது போல அவரை கட்டி அணைத்து கொண்டு தனக்கு பசிக்கிறது என கூறி தாய்ப்பால் கேட்டது. அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. 30 நாட்கள் சுயநினைவின்றி இருந்த பெர்ரேயரா தன் குழந்தையின் பசி குரல் கேட்டு சட்டென்று கண் விழித்து தாய்ப்பால் கொடுத்தார்.

இதைப்பார்த்த பெர்ரேயராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். பெர்ரேயராவின் தாய்மை உணர்வை கண்டு அவர்கள் மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டனர். ஆனால் இந்த ஆச்சரியம் சில நிமிடங்கள்தான் நீடித்தது. தனது குழந்தையின் பசியை தீர்த்துவிட்டு பெர்ரேயரா மீண்டும் கோமாவுக்கு சென்று விட்டார். எனினும் மகளின் குரலை கேட்டதும் பெர்ரேயரா கோமாவிற்கு முன் இருந்ததை போல இயல்பாக எழுந்து தாய்ப்பால் கொடுத்ததால் அவர் விரைவில் குணமடைவார் என நம்புவதாக அவரது கணவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

[…]

மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்
பெண்கள்

ஐதராபாத் கொடூரம்; குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் - மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்

ஐதராபாத்தில் கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் என மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசமாக கூறினார்.

புதுடெல்லி,

ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்த குற்றத்தை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பல்வேறு கட்சி எம்.பி.க்களும் வலியுறுத்தினர்.

இன்று  மாநிலங்களவையில் பல்வேறு கட்சி எம்.பி.க்களும் இந்த பிரச்சினையை எழுப்பினர். சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்.பி. ஜெயா பச்சன் பேசும்போது கூறியதாவது:-       "நிர்பயா தொடங்கி எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன. ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர் கதையாகி வருகிறது.

 

மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றன. ஐதராபாத்தில் நடந்த சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்ல வேண்டும்"’ என கூறினார்.

அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த் பேசும்போது,

"நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது" என வேதனை தெரிவித்தார். மக்களவையிலும் இதுதொடர்பாக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  இதற்கு பதிலளிக்கையில், ‘பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது'  என கூறினார்.

[…]

அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளத்தில் துப்பாக்கி சூடு
உலகம்

அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளத்தில் துப்பாக்கி சூடு; 3 பேர் படுகாயம்

அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

பதிவு: டிசம்பர் 05,  2019 10:28 AM

லாஸ் ஏஞ்சல்ஸ்,

 அமெரிக்காவின் ஹவாய் தீவில் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது.  இங்குள்ள தெற்கு நுழைவுவாயில் வழியே மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.  அவர் திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி தன்னிடம் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.  அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.  இந்த சம்பவத்திற்கு பின் துப்பாக்கி சூடு நடத்திய நபர் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவர் கடற்படை சீருடை அணிந்து இருந்து உள்ளார்.  எனினும், காயமடைந்தோரின் எண்ணிக்கை உயர கூடும் என ஹவாய் நியூஸ் நவ் தெரிவித்து உள்ளது.

[…]

விபத்து
உலகம்

குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 23 பேர் பலி

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் பலியானார்கள். பிசி பீ என்ற உள்நாட்டு நிறுவனத்தை சேர்ந்த அந்த விமானம் கோமா (goma) விமான நிலையத்தில் இருந்து பெனி நகருக்கு புறப்பட்டு சென்றது.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் ஒரு என்ஜினில் இருந்து பயங்கர சப்தம் எழுந்ததாகவும், அதனைத் தொடர்ந்து விமானத்தை புறப்பட்ட இடத்திற்கே விமானி திருப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 23 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

[…]

டிரம்ப்
உலகம்

14 நிமிடங்களில் ஹாங்காங் அழிக்கப்பட்டு இருக்கும் - டிரம்ப்

ஹாங்காங்கில் போராட்டத்தை நசுக்க சீனா தனது படைகளை அனுப்பிய நிலையில், தாம் தலையிட்டிருக்கா விட்டால் 14 நிமிடங்களில் ஹாங்காங் முழுவதுமாக அழிக்கப்பட்டு இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிரம்ப், ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்காக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அதே நேரத்தில், சீனாவின் நிலைப்பாட்டையும்ஆதரிப்பதாக தெரிவித்தார்.

அதிபர் ஷி ஜின்பிங் தமது மிகச்சிறந்த நண்பர் என்று கூறிய டிரம்ப், ஹாங்காங் பிரச்சினைக்கு சீனா தீர்வு காணும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பல லட்சம் சீன வீரர்கள் ஹாங்காங்கில் நுழைய தயாராக இருந்தபோது, அதனை தாம் தடுத்து நிறுத்தியதாக கூறிய டிரம்ப், இது மிகப்பெரிய தவறான நடவடிக்கை என்றும் அமெரிக்க-சீன வர்த்தக உறவுகளை பாதிக்கும் என்றும் சீனாவை எச்சரித்ததாக கூறினார்.

[…]

செவ்வாய்
உலகம்

என்னில் கால் பதித்தால் இந்நோய்களுக்கு தயாரா? சவால் விடும் செவ்வாய் கிரகம்

சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் செவ்வாய் (Mars) ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக 2-வது சிறிய கோளாக செவ்வாய் உள்ளது.

இந்த கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு காரணமாகவே இக்கோள் செந்நிறமாக காட்சியளிக்கிறது. இதனிடையே செவ்வாய் கிரகத்திற்கு எப்படியாவது மனிதனை அனுப்பிவிட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

2035 ஆம் ஆண்டளவில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா விரும்புகிறது. அங்கு ஒரு மனித காலனியை நிறுவ தேவையான அனைத்து வளங்களும் இந்த கிரகத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். செவ்வாயின் மேற்பரப்புக்குக் கீழே உள்ள நீர் உட்பட, ஒரு காலத்தில் அந்த கிரகத்தில் உயிரினங்கள் இருந்தன என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும் விஞ்ஞானம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வசிக்கும் சூழல் வந்தால் படிப்படியாக சுயநினைவை இழந்து டிமென்சியா எனும் நாட்பட்ட மனநோய்க்கு ஆளாக கூடும் என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் நபர்கள் தங்கள் பெயர்களை வரலாற்றில் செதுக்குவார்கள், என்றாலும் இதற்கு முன்பு யாரும் எதிர்கொள்ளாத சுகாதார அபாயங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றனர்.

இவற்றில் முதலாவதும் மிக முக்கியமானது என்னவென்றால், உலோகம், பிளாஸ்டிக் மற்றும் மனித தோல் வழியாக பயணிக்கும் திறன் கொண்ட அதிக அளவு கதிர்வீச்சு. இதை பார்க்கவோ அல்லது உணரவோ முடியாது

இந்த அபாயகரமான விண்வெளி கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்துவதுடன் கடுமையான அறிவாற்றல் குறைபாடுகளையும் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலின் எந்தப் பகுதியும் கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாகக்கூடும். புற்றுநோய் தவிர இருதய பிரச்சினைகள், நினைவாற்றல் பிரச்சினைகள் உள்ளிட்ட எண்ணற்ற உடல்நல பாதிப்புகள் சரளமாக வரக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்

இருப்பினும் கதிர்வீச்சுக்கு எதிராக சில பாதுகாப்பை வழங்குவதற்கான வழிகளில் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர், அதைத் தடுப்பதற்கான புதிய பொருட்கள், புதுமையான மருந்து அணுகுமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

[…]

இலங்கை
உலகம்

இலங்கையின் புதிய பிரதமராக இன்று பதவியேற்கிறார் மஹிந்த ராஜபக்ச

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்சே இன்று பதவியேற்கிறார். ரணில் விக்ரமசிங்கே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதையடுத்து, அப்பதவிக்கு தனது சகோதரர் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ளார் அதிபர் கோத்தபயா ராஜபக்ச.

பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்டு இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா அபார வெற்றி பெற்றதும், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என அவரது ஐக்கிய தேசிய கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் இன்று அளிக்க இருப்பதாகவும் ரணில் அறிவித்தார். ரணில் இன்று முறைப்படி பதவி விலகியதும், பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்பார் என இலங்கை அரசு செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த 2005 - 2015 வரை மகிந்த ராஜபக்சே இலங்கை அதிபராக பதவி வகித்தார். பின்னர் 2015ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌சேவின் செல்வாக்கு சரிந்திருந்தது. இதனால் ரணில் விக்ரமசிங்கேவின் கட்சி சார்பில் போட்டியிட்ட, மைத்திரி பால சிறிசேனா வென்று அதிபரானார்.

ராஜபக்‌சே ஆட்சியில் நிகழ்ந்த ஊழல் மற்றும் பல குற்றங்களுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள். மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என பல வாக்குறுதிகளை தந்த பிரதமர் ரணில் பதவிக்கு வந்த பின்னர் அதனை நிறைவேற்ற தவறினார்.

மேலும் சிறிசேன, இலங்கை அதிபராக இருந்த போது, ரணிலுடன் மோதல் அதிகரித்ததால் பிரதமர் பதவியில் இருந்து அவரை நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக்கினார். ஆனால் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ரணில், மீண்டும் பிரதமராக பதவியேற்று கொண்டார்.

தற்போது காட்சிகள் தலைகீழாக மாறியுள்ளன. அதிபர் மற்றும் பிரதமர் என நாட்டின் இரு பெரும் பதவிகளும் மற்றும் அதிகாரங்களும் ராஜபக்ச சகோதரர்களிடம் குவிய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

[…]

இணையதள
உலகம்

இணைய சேவையை முடக்கிய ஈரான்

ஈரானில் வெடித்திருக்கும் போராட்டங்களை அடக்கும் விதமாக, நாடு முழுவதும் இணையதள சேவையை, அந்நாட்டு அரசு முடக்கியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை 300 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தலைநகர் தெஹ்ரான் உட்பட நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்கள், வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைப்படுவதால் இணையதள சேவையை சனிக்கிழமை முதல், திங்கட்கிழமை நள்ளிரவு வரை முடக்கியிருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், மிகப்பெரிய அளவிலான இணைய சேவை முடக்கம் இது என ஆரக்கிள் நிறுவனத்தின் இணைய நுண்ணறிவு பிரிவு தெரிவித்திருக்கிறது. 

[…]

கோத்தபய ராஜபக்சே
உலகம்

இலங்கையின் 7ஆவது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்பு..!

இலங்கையின் 7ஆவது அதிபராக, கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.  

இலங்கையில், நேற்று முன்தினம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், 52 புள்ளி 25 விழுக்காடு வாக்குகளை பெற்று, கோத்தபய ராஜபக்சே வெற்றிப்பெற்றார். இதனைத் தொடர்ந்து, தனது மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான, மகிந்த ராஜபக்சேவின் பிறந்தநாளில் பதவியேற்க முடிவு செய்தார்.

இதன்படி, புத்தர் ஞானம் பெற்ற போதி மரக் கிளையிலிருந்து வளக்கப்பட்ட புனித மரம் அமைந்துள்ள அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகாபோதி ஸ்தலத்திலும், ருவன்வெலி மகா சாய பௌத்த விஹாரிலும் மத வழிபாட்டில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, ருவன்வெலி மகா சாய பெளத்த விஹார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், இலங்கையின் 7ஆவது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூர்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

கோத்தபய பதவியேற்பு விழாவில், முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே, மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே உள்ளிட்டோரும், வெளிநாடுகளின் தூதர்களும் பங்கேற்றனர்.

இலங்கை அதிபராக பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே, அரசு அலுவலகங்களில், தனது படத்தையோ, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் படங்களையோ வைக்க கூடாது என முதல் உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அதிகாரபூர்வ கொடியாக, தூய்மையின் சின்னமான வெண்தாமரை மலர் பொறிக்கப்பட்ட கொடி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையில் ஒவ்வொரு அதிபருக்கும், பிரத்யேக கொடிகள் அறிமுகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே, இலங்கை அதிபராக கோத்தபய பதவியேற்றுள்ளதை, அவரது பொதுஜன பெரமுனா கட்சியினர் கொண்டாடுகின்றனர். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களுக்கு பால் சோறு மற்றும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

[…]

ரணில்
உலகம்

இலங்கைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் திட்டம்

ந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக, இலங்கையின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை ரணில் ராஜினாமா செய்யப் போவதாகவும், மகிந்த ராஜபக்சே பிரதமராகப் பொறுப்பேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறிசேனாவின் பதவிக்காலம் நிறைவடைவதால், இலங்கையில் புதிய அதிபரைத் தேர்வு செய்ய நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கோத்தபய ராஜபக்சே 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகள் பெற்றிருந்தனர்.

தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சஜித் பிரேமதாசாவிற்கும், சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் கோத்தபயவிற்கும் கூடுதல் வாக்குகள் கிடைத்தன. 52 புள்ளி 25 விழுக்காடு வாக்குகளை பெற்ற கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டின் அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அநுராதபுரத்தில் இன்று நடைபெறும் விழாவில், நாட்டின் 7ஆவது அதிபராக கோத்தபய பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கோத்தபயவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்கும் என்று கூறியுள்ளார்.

பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும் பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயல்பட விரும்புவதாக தமிழில் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மோடிக்கு நன்றி தெரிவித்து கோத்தபய வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புத்தமத தத்துவங்களின் அடிப்படையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவும், இரு நாடுகளிடையே சகோதர உறவை வலுப்படுத்தவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கொழும்பில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் பதவியில் இருந்து விலகி விட்டு எதிர்க்கட்சி தலைவராக செயல்பட ரணில் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, அதிபர் பதவிக்கு போட்டியிட்ட சஜித் பிரேமதாசா, மங்கள சமரவீரா உள்ளிட்ட அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை பிரதமர் ரணிலிடம் அளித்துள்ளனர்.

[…]

இலங்கை
உலகம்

இலங்கை அதிபர் தேர்தல் முடிவு - கோத்தபய ராஜபக்சே வெற்றி

இலங்கை அதிபர் தேர்தலில், 52.25 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கும் கோத்தபய ராஜபக்சே, வெற்றிப்பெற்றதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதிபர் தேர்தலில் வாகை சூடிய கோத்தபயவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் 9ஆம் தேதி முடிவடைகிறது. இதையொட்டி, அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 12,845 வாக்குச்சாவடிகளில், நேற்று நடைபெற்றது. இதில் 81 புள்ளி 52 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி, நேற்றிரவில் தொடங்கி நடைபெற்றது. பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

பிற்பகல் 3.30 மணியளவில் வெளியிடப்பட்ட இறுதி வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, கோத்தபய ராஜபக்சே 69 லட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகள் பெற்றுள்ளார்.

சஜித் பிரேமதாசாவை விட, 13 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான திரிகோணமலை, கண்டி, வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில், பதிவான மொத்த வாக்குகளில், 75 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை, சஜித் பிரேமதாசா பெற்றார்.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோத்தபயவுக்கு மிக குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன.

இருப்பினும், சிங்களர்கள் அதிகம் வசிக்கும், கொழும்பு, பொலன்னறுவை, கம்பஹா, ஹம்பன்தோட்டா, நுவரெலியா, புத்தளம், மொனராகலை, உள்ளிட்ட மாவட்டங்களில், கோத்தபய ராஜபக்சே அதிகளவிலான வாக்குகளை தனதாக்கியிருக்கிறார்.

50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றுவிட்டால், அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அத்தகையை பெரும்பான்மையை யாரும், தனதாக்காவிட்டால், வாக்காளர்களின் இரண்டாவது தேர்வை அடிப்படையாக கொண்டு, வெற்றி நிர்ணயிக்கப்படும்.

இந்த வகையில், இலங்கை அதிபர் தேர்தலில், 52 புள்ளி 25 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கும் கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டின் அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது, கடுமையான போட்டியை அளித்த சஜித் பிரேமதாசா 42 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவியிருக்கிறார்.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, தங்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இருநாடுகளுக்கு இடையே, நெருக்கமான, சகோதரத்துவ உறவுகளை மேலும் ஆழமானதாக மாற்ற முடியும் எனக் கூறியிருக்கிறார்.

தன்னை வாழ்த்திய, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள கோத்தபய, தங்களுடன் பேசும் நாளை, தாமும் எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் முன்னாள் அதிபரும், மூத்த சகோதரருமான மகிந்தா ராஜபக்சே, நடப்பு அதிபரான மைத்திரிபால சிறிசேனா உள்ளிட்ட தலைவர்களும், கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே, தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சே, நாளை, இலங்கையின் பண்டைய கால தலைநகராக விளங்கிய அநுராதபுரத்தில் நடைபெறும் விழாவில், நாட்டின் 7ஆவது அதிபராக பதவியேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்சேவிற்கு நாளை பிறந்தநாள் என்பதால், தனது அண்ணனின் பிறந்தநாளில், கோத்தபய பதவியேற்க இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

[…]

வாக்குப்பதிவு
உலகம்

இலங்கையின் புதிய அதிபர் யார்? எண்ணப்படும் வாக்குகள்..!

இலங்கையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலின்போது 69 இடங்களில் வன்முறை நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 9ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், 12 ஆயிரத்து 845 வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில், அதிபர் பதவிக்கு 35 பேர் போட்டியிடுகின்றனர்.

பொதுஜன பெரமுனா கட்சி சார்பில், மஹிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவையொட்டி, 60 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தேர்தலில் வெற்றிபெறுவது யார் என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையே, இலங்கையில் வாக்குப்பதிவின்போது 69 இடங்களில் வன்முறை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து மன்னார் - மறிச்சிக்கட்டி நோக்கி 4 பேருந்துகளில் 200 சிறுபான்மையின இஸ்லாமியர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

52 பேர் பயணம் செய்த, ஒரு பேருந்து மீது மர்ம நபர்கள் 17 முறை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

[…]

மின்னல்
உலகம்

மின்னல் தாக்கி 20 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டில் மின்னல் தாக்கி, 20 பேர் உயிரிழந்தனர்.

சிந்து மாகாணத்தில், தார்பார்க்கர் (Tharparkar) மாவட்டத்தில், இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள மித்தி (Mithi), சாச்சீ (Chhachhi), ராம்சிங் சோதா (Ram Singh Sodho) ஆகிய கிராமங்களில், நேற்றும், அதற்கு முன்தினமும், அடுத்தடுத்து, பேரிடிகளுடன், மின்னல் தாக்கியது.

கால்நடை மேய்ச்சல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த 10 பெண்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள், மின்னல் தாக்கியதில், உடல்கருகி இறந்தன. 

[…]

முஷரப்
உலகம்

ஒசாமா பின்லேடன் போன்றோர் தான் பாகிஸ்தானின் ஹீரோக்கள் - முஷரப்

ஒசாமா பின்லேடன் போன்றவர்கள் தான் பாகிஸ்தானின் ஹீரோக்கள் என, அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த ஃபர்ஹதுல்லா பாபர் என்ற அரசியல் பிரமுகர் முஷரபின் பேட்டி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில், காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானிற்கு வந்தவர்களை வரவேற்று, இந்திய ராணுவத்திற்கு எதிராக சண்டையிட அவர்களுக்கு பயிற்சி அளித்ததாக பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார். மேலும், ஒசாமா பின்லேடன் மற்றும் ஜலாலுதின் ஹக்கானி ஆகியோர் தான் பாகிஸ்தானின் ஹீரோக்கள் எனவும் முஷரப் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

[…]

பனிப்பிரதேசம்
உலகம்

உலகின் மிகப் பெரிய பனிப்பிரதேசம் மாயம்

வடதுருவப் பகுதியான ஆர்க்டிக் பிரதேசத்தில் மிகப்பெரிய பனிப்பிரதேசமே முற்றிலும் காணாமல் போனது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தின் வடக்குப் பகுதியில் 3 லட்சத்து 86 ஆயிரம் சதுர மைல் பரப்பளவுள்ள மிகப்பெரிய பனிப்பிரதேசம் இருந்தது.

கடந்த 35 ஆண்டுகளில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக இந்தப் பகுதியில் பனி உருகும் வேகம் மிக அதிகமாக இருந்ததால், தற்போது அந்தப் பனிப்பிரதேசத்தின் 95 விழுக்காடு பனி கரைந்து போனதாக அமெரிக்க நிலவியல்துறை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதே வேகத்தில் பனிகரையுமானால் வரும் 2030ம் ஆண்டுக்குள் மீதமுள்ள 5 விழுக்காடும் மாயமாகி விடும் என்று எச்சரித்துள்ளனர். 35 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த வீடியோவை டைம்லாப்ஸ் (timelapse) முறையில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

[…]

புதன்
உலகம்

சூரியனை கடந்து சென்ற புதன்கிரகம் - நாசா வெளியிட்ட அபூர்வ காட்சி

புதன் கிரகம் சூரியனைக் கடந்து செல்லும் அரிய காட்சியை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.

சூரியனை நேர்கோட்டில் கடக்கும்போது சிறிய அளவிலான கரும்புள்ளி போல புதன் கிரகம் காட்சி அளித்தது. இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன் கிரகம் சூரியனை, கடந்து செல்லும் போது, புதனின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சி அளித்தது.

இந்தியாவில் கடந்த 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வை திங்களன்று நடைபெற்றது. அடுத்த நிகழ்வு வரும் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதிதான் காணமுடியும் என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

[…]

மோடி
உலகம்

பிரிக்ஸ் மாநாடு இன்று தொடக்கம்.. பிரதமர் மோடி பங்கேற்பு..!

சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி வழியாக பிரேசிலியாவிற்கு பயணமாகி உள்ளார்.

பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளின் மாநாடு பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரில் இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நேற்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றார். ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரை சென்றடைந்த மோடி, சிறிது நேர ஓய்வுக்குப் பின் பிரேசிலியாவிற்கு புறப்பட்டார்.

‘வளமான எதிர்காலத்துக்கான பொருளாதார வளர்ச்சி’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

இந்த மாநாட்டின்போது, பயங்கரவாத எதிர்ப்பு விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாகவும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘பிரிக்ஸ்’ நாடுகளின் தொழிற்துறையினர் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு வங்கியைச் சேர்ந்த அதிகாரிகளையும் சந்தித்துப் பேச உள்ளார்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி 6வது முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசவுள்ளார்.

பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோவுடன் (Jair Bolsonaro) பிரதமர் மோடி நடத்தும் இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, பாதுகாப்பு, வர்த்தகம், வேளாண்மை, எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

[…]

வானியல்
உலகம்

சூரியனை புதன் கடந்து செல்லும் அரிய நிகழ்வு இன்று நடக்கிறது

புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் அரிதான வானியல் நிகழ்வு இன்று நிகழ்கிறது.

இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழும். புதன் கிரகம் சூரியனை, கடந்து செல்லும் போது, புதனின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும்.

இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது என்றும தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வை இன்று காணலாம். அடுத்த நிகழ்வு வரும் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதிதான் மீண்டும் நிகழும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

[…]

சிறிசேனா
உலகம்

பதவியில் இருந்து செல்லும் சிறிசேனா நடவடிக்கையால் உலகம் முழுவதும் அதிர்ச்சி

இலங்கையில் சுவீடன் நாட்டு பெண்ணின் தலையை 64 துண்டுகளாக நொறுக்கி கொலை செய்ததாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு அந்நாட்டு அதிபர் சிறிசேனா மன்னிப்பு வழங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பெரும் கோடீஸ்வரர் குடும்பத்தைச் சேர்ந்தவன் ஜெயமஹா. இவன் 2005 ஆம் ஆண்டு கொழும்புவுக்கு சுற்றுலா வந்த சுவீடன் நாட்டு பெண் யுவோன் ஜான்சன் என்பவரை அடித்து கொன்று அவரது மண்டையை 64 துண்டுகளாக நொறுக்கியதாக  மரணத் தண்டனை விதித்து இலங்கை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த நிலையில் தனக்கு மன்னிப்பு வழங்க கோரி ஜெயமஹா அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொண்ட அதிபர் சிறிசேனா, கொலை வழக்கில் அவனுக்கு மன்னிப்பு வழங்கினார். இதையடுத்து ஜெயமஹா வெலிகட சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளான். அதிபர் பதவிக்காலம் முடியும் நிலையில் சிறிசேனா கொடிய குற்றவாளிக்கு வழங்கியுள்ள மன்னிப்பு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

[…]

மீன்
உலகம்

நீர் நிலையில் காணப்பட்ட மனித முகம் கொண்ட அதிசய மீன்

சீனாவில் மனித முகம் கொண்ட மீன் ஒன்று நீர்நிலையில் காணப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

மியோ கிராமத்தில் ((Miao Village )) உள்ள நீர் நிலை அருகே பெண் ஒருவர் அமர்ந்திருந்தபோது, தண்ணீரில் நீளமான மீன் ஒன்று கரையை நோக்கி நீந்தி வந்ததை கண்டார். கரையை நோக்கி வந்த அந்த மீனுக்கு, கண்கள், மூக்கு மற்றும் வாய் மனிதர்களை போன்ற தோற்றத்தில் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். இதையடுத்து அந்த அதிசய மீனை, தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வெய்போ வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். 12 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ, தற்போது அனைத்து சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

இதேபோல் நார்வேயை சேர்ந்த மீனவர் ஒருவர், டைனோசர் போன்ற தோற்றம் கொண்ட மீனை இதற்கு முன்பு பிடித்தார். அந்த வீடியோவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

[…]

டிரம்ப்
உலகம்

விரைவில் இந்தியா வர வாய்ப்பிருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

விரைவில் இந்தியாவிற்கு வர வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன் வெள்ளைமாளிகையில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு மிகச்சிறந்த நட்பு இருப்பதாகவும் இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு சிறந்த நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தமக்கு மிகச்சிறந்த நண்பர் என்றும் இந்தியாவுடன் பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடைபெற்று வருவதாக டிரம்ப் விளக்கம் அளித்தார். கடந்த செப்டம்பர் மாதம் ஹூஸ்டனில் பிரதமர் மோடியுடன் நடத்திய சந்திப்பை சுட்டிக்காட்டிய டிரம்ப், இந்த உறவு இருநாடுகளின் கனவுகளுக்கும் புதிய வடிவம் கொடுக்கும் என்றார். இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ரீதியான பிரச்சினைகள் கடந்த ஜூன் மாதம் உருவாகின.

பாதாம் மற்றும் ஆப்பிள் போன்ற 28 பொருட்கள் மீது  இந்தியா வரி விதித்ததையடுத்து இந்தியாவின் சிறப்பு வர்த்தக அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்தது. இருநாடுகளிடையே ஏற்பட்ட வர்த்தக வேறுபாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் சரிசெய்யப்பட்டு மீண்டும் அமெரிக்காவும் இந்தியாவும் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள தயாராகி வருகின்றன.

[…]

டிரம்ப்
உலகம்

டிரம்புக்கு, இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்த பெண் நீதிபதி

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, பெண் நீதிபதி ஒருவர் இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், 'டொனால்ட் டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்தசெலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தைதையடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு அந்த அறக்கட்டளை மூடப்பட்டது.

இது தொடர்பாக நடந்து வரும் வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவரக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிபர் டிரம்ப் தனது அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14 கோடி அபராதம் விதித்துள்ளது.

முன்னாள் ராணுவத்தினருக்காக வசூலிக்கப்பட்ட பணம், 2016ஆம் ஆண்டில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைக்கு முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என்று நீதிபதி சேலியன் ஸ்கார்புலா ((Saliann Scarpulla)) தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத வேறு எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

[…]

இந்தியா
உலகம்

கடல் நீர்மட்டம் உயர்வதால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து என எச்சரிக்கை

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இந்திய பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐநா சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்ரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உலகில் காலநிலை மாற்றம் என்பது மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டார்.

முன்பை விட கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட குட்ரெஸ், இதன் காரணமாக வரும் 2050ம் ஆண்டிற்குள் 300 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அச்சம் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் மற்றும் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு தொடர்ந்தால் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளான ஜப்பான், சீனா, வங்கதேசம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பெரும் ஆபத்தைச் சந்திக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். எனவே உலக நாடுகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

[…]

மழை
உலகம்

சோமாலியாவில் தொடர் மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரம்

சோமாலியாவில் உள்ள Beledweyne நகரில், தொடர் மழைக்காரணமாக பள்ளிக்கட்டிடங்களை சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அங்குள்ள பள்ளிகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் சுமார் இரண்டரை லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நகரில் உள்ள சுமார் 86 பள்ளிக்கட்டிடங்களை சுற்றிலும் வெள்ளம் தேங்கி நிற்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களை, பேரிடர் மீட்பு குழு உதவியுடன் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வரும் அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கி வருகின்றனர்.

[…]

மலைப்பாம்பு
உலகம்

அமெரிக்காவில் மலைப்பாம்பு கழுத்தில் இறுக்கிய நிலையில் உயிரிழந்த இளம்பெண்

அமெரிக்காவில் வீட்டில் வளர்த்த மலைப்பாம்பு கழுத்தை இறுக்கியதில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இண்டியானா பகுதியைச் சேர்ந்த லாரா ஹர்ஸ்ட் என்ற இளம்பெண் தனது வீட்டில் 140க்கும் மேற்பட்ட பாம்புகளை வளர்த்து வந்தார். மேலும் தனது செல்லப்பிள்ளைபோல மஞ்சள் நிற மலைப்பாம்புகளையும் லாரா வளர்த்து வந்ததார்.

இந்நிலையில் கடந்த வாரம் அவரின் வீடு  பூட்டப்பட்டு உள்ளே துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை பார்த்த போது 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கழுத்தில் சுற்றிய நிலையில் லாரா இறந்து கிடந்தார்.

போதையில் மயங்கி விழுந்த நிலையில் அவர் கீழே விழுந்த பின் பாம்பு கழுத்தை இறுக்கியிருக்கலாம் என்று கூறிய போலீசார், லாராவின் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

[…]

5 ஜி
உலகம்

சீனாவில் அறிமுகமானது 5ஜி இணையசேவை..

இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதற்கு குறைந்தபட்ச மாதாந்திரக் கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 272 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சக் கட்டணமான 6 ஆயிரம் ரூபாய் செலுத்துவோருக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் 300 ஜி.பி. டேட்டாவைப் பெற முடியும்.

பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5 ஜி சேவையைப் பெறுவதற்கு ஏற்பனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்ததாகவும், ஹூவேய் மற்றும் ஸியோமி நிறுவன செல்போன்கள் ஏற்கனவே 5ஜி தொழில்நுட்பம் கொண்ட போன்களை தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் 4G LTE தொழில்நுட்பத்தினைவிட 10 முதல் 100 மடங்கு 5ஜியின் பதிவிறக்க வேகம் அதிகம் என்று கூறப்படுகிறது.

[…]

டிரம்ப்
உலகம்

நிரந்தர குடியிருப்பை நியூயார்க்கிலிருந்து புளோரிடாவுக்கு மாற்றும் அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நிரந்தர குடியிருப்பை நியூயார்க்கிலிருந்து புளோரிடாவுக்கு மாற்றியுள்ளதாக டுவிட்டர் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார்.

புளோரிடா மாநிலத்தில் உள்ள பாம் பீச் பகுதியில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான Mar-a-Lago எஸ்டேட் உள்ளது. அதிபர் பதவி ஏற்ற பின்னரும் நியூயார்க் நகரில் உள்ள தனது டிரம்ப் டவர் வீட்டை தவிர்த்து பெறும்பாலான நேரங்களை டிரம்ப் இந்த எஸ்டேட்டில் செலவிட்டு வந்தார்.

இந்த நிலையில், தனது நிரந்தர குடியிருப்பை பாம் பீச் பகுதிக்கே மாற்றியுள்ளதாக டிரம்ப் நேற்று டுவிட்டர் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், நியூயார்க் மற்றும் அங்குள்ள மக்களை நேசித்து, ஒவ்வொரு ஆண்டும்  லட்சக்கணக்கில் வரி செலுத்தி வந்தும், அதன் தலைவர்கள் தன்னை மிகவும் மோசமாக நடத்தியதாக குறை கூறியுள்ளார். 

[…]

குழந்தை
உலகம்

பிரேசிலில் இன்குபேட்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட குழந்தை ஒன்று தவறி விழுந்த வீடியோ வெளியாகி உள்ளது

பிரேசில் நாட்டில் இன்குபேட்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட குழந்தை ஒன்று தவறி விழுந்த வீடியோ வெளியாகி உள்ளது.

தலைநகர் பிரேஸிலியாவில் உள்ள மருத்துவமனையில் ராபர்டோ மக்காடோ எனப் பெயரிடப்பட்ட 3 மாதக் குழந்தை ஒன்று உடல் நலக் குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள இன்குபேட்டரில் குழந்தையை வைத்து செவிலியர்கள் கண்காணித்து வந்தனர். அப்போது குழந்தை காலை உதைத்தபோது, இன்குபேட்டரின் சிறிய பூட்டு திறந்து கொண்டது.

அடுத்த சில நொடிகளில் குப்புற கவிழ்ந்த குழந்தை இன்குபேட்டரில் இழுந்து தரையில் விழுந்தது. இதனைக் கண்ட செவிலியர்கள் பதற்றத்துடன் குழந்தையை தூக்கி முதலுதவி அளித்தனர்.

இந்த சம்பவத்தில் குழந்தையின் தலையில் எலும்புகள் உடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

[…]

நாசா
உலகம்

நாசா வெளியிட்டுள்ள சூரியனின் புகைப்படம் வைரல்

ஹாலோவின் தினத்தையொட்டி நாசா வெளியிட்டுள்ள சூரியனின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

தீய சக்திகளை விரட்டும் ஹாலோவின் திருவிழா அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் அடுத்தவர்களை பயமுறுத்தும்விதமாக பூசணிக்காய் உள்ளிட்டவற்றை விளக்குகள் கொண்டு மக்கள் அலங்கரிப்பார்கள்.

இந்நிலையில், ஹாலோவினுக்கு அலங்கரிக்கப்படும் ஜாக்கோ லேண்டர்ன் வடிவ பூசணிக்காயை போல சூரியன் காட்சியளிக்கும் சுவாரஸ்ய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.

சூரியனும்கூட ஹாலோவினை கொண்டாட தயாராகிவிட்டது என இப்புகைப்படம் குறித்து நாசா குறும்பாக குறிப்பிட்டுள்ளது.

இப்புகைப்படம் 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

[…]

நாய்
உலகம்

அல் பாக்தாதி மரணத்துக்கு உதவிய நாயின் புகைப்படம் வெளியீடு

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியை கொல்ல நடத்தப்பட்ட அமெரிக்க ராணுவ தாக்குதலுக்கு உதவிய நாய்க்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி மரணமடைந்ததாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்தது. சுரங்கத்தில் பதுங்கியிருந்த பாக்தாதி மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவத்தினர் சென்றனர்.

சுரங்கத்தில் பதுங்கியிருந்த பாக்தாதி தற்கொலை தாக்குதல் நடத்தலாம் என்று கருதிய ராணுவத்தினர், முதலில் வெடிகுண்டுகளைக் கண்டறியும் நாயை அனுப்பினர். அப்போது, பாக்தாதி தனது உடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும், இதனால் நாய்க்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நாயின் புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாக்தாதி மீதான தாக்குதலில் இந்த நாய் முக்கிய பங்குவகித்ததாக கூறி, புகழாரம் சூட்டியுள்ளார்.

[…]

ஹார்வர்டு
உலகம்

உலகின் சிறந்த CEO பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 இந்தியர்கள்

உலகின் சிறந்த தலைமை செயல் அதிகாரிகள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர்.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் பொது மேலாண்மை இதழான, ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ, 2019ஆம் ஆண்டின் சிறந்த 100 தலைமை செயல் அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் ஆய்வு செய்து வெளியாகியுள்ள இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளனர்.

அந்த வகையில், அடோப் நிறுவனத்தை சேர்ந்த சாந்தனு நாராயண் 6ஆவது இடமும், மாஸ்டர்கார்டு நிறுவனத்தை சேர்ந்த அஜய் பங்கா 7ஆவது இடமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சேர்ந்த சத்ய நாதெல்லா, 9ஆவது இடமும் பிடித்துள்ளனர். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவைச் (NVIDIA) சேர்ந்த ஜென்சன் ஹாங் முதலிடம் பிடித்துள்ளார்.

[…]

பெங்குவின்
உலகம்

சீல் என்ற கடல் பிராணியின் பிடியில் இருந்து தப்பிய பெங்குவின், அதனை மீண்டும் எதிர்த்து நிற்கும் வீடியோ

சீல் என்ற கடல் பிராணியின் பிடியில் இருந்து தப்பிய பெங்குவின், அதனை மீண்டும் எதிர்த்து நிற்கும் அரிய வீடியோ வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இயற்கையிலாளர் டேவிட் ஆட்டன்பரோ ஒரே கிரகத்தில் ஏழு பூமிகள் என்ற புதிய உயிரியல் தொகுப்பு ஆவணப்படத்தை தயாரித்து வருகிறார்.

பிபிசி தொலைக்காட்சிக்காக 41 நாடுகளில் ஆயிரத்து 749 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள இந்த வீடியோவின் சில காட்சிகளை அவர் வெளியிட்டுள்ளார். அதில் ஆர்க்டிக் பகுதியில் லெப்பர்ட் சீல் எனப்படும் கடல் உயிரினம் பெங்குவினை விரட்டிச் செல்வது படமாக்கப்பட்டுள்ளது.

நொடிப் பொழுதில் தப்பிய பெங்குவின் மீண்டும் பனிப்பாறையின் மீது ஏறி நின்று தன்னை விரட்டி வந்த சீலை துணிவுடன் எதிர்கொண்டு அதனை விரட்டியடிக்க முயற்சிக்கிறது. இதுபோன்ற காட்சிகள் அரிதாகவே நடக்கும் என்றும், இதனைப் படமாக்கியது தனக்கு பெருமை என்றும் டேவிட் ஆட்டன்பரோ தெரிவித்துள்ளார்.

[…]

ட்ரம்ப்
உலகம்

ஆப்பிள் ஐபோன் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சனம்..!

ஆப்பிள் நிறுவன ஐ போன்களில், தற்போதுள்ள ஸ்வைப் வசதியைவிட, முன்பிருந்த ஹோம் பட்டன் வசதி சிறப்பாக இருந்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவன ஐபோன்களில் 2007ஆம் ஆண்டு முதல் வட்ட வடிவிலான ஹோம் பட்டன் வசதி இருந்துவந்தது. இதனிடையே, 2017ஆம் ஆண்டு வெளியான சில மாடல்களில் அந்த வசதி நீக்கப்பட்டு, ஸ்வைப் வசதியாக மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஐபோன்களின் வடிவமைப்பு குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போதைய ஸ்வைப் வசதியைவிட முன்பு பயன்பாட்டில் இருந்த ஹோம் பட்டன் வசதி சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஐபோனை ட்ரம்ப் விமர்சனம் செய்வது இது முதல்முறை அல்ல. ஐபோன்களில் பெரிய திரை வசதி இல்லை எனக் கூறி கடந்த 2013ஆம் ஆண்டும் இதேபோல ட்ரம்ப் விமர்சனம் செய்திருந்தார். 

[…]

ஹகிபிஸ்
உலகம்

ஜப்பானில் வெளுத்து வாங்கும் கனமழை

ஹகிபிஸ் புயலுக்கு பின் ஜப்பானில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், சுமார் 60 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த இரு வாரங்களுக்கு முன் பலத்த சூரைக்காற்றுடன் ஹகிபிஸ் புயல் கோரத்தாண்டவமாடியது. இதில் பல இடங்களில் நிலச்சரிவும், ஆங்காங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

புயலில் சிக்கி 82 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் சுமார் 300 பேர் காயமடைந்தனர். புயல் மழையில் காணாமல் போனவர்களையும் தேடும் தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் அங்கு தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால், மீண்டும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் புயல் தாக்கிய Sagamihara பகுதியிலிருந்து 50,000 பேர் மற்றும் சிபா பகுதியிலிருந்து 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

[…]

விசா
உலகம்

இந்தியாவிலிருந்து பிரேசில் செல்ல இனி விசா பெறத் தேவையில்லை

இந்தியர்கள் பிரேசில் வர விசா தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபராகப் பொறுப்பேற்ற ஜயர் போல்சொனாரோ, குறிப்பிட்ட சில வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்கள் பிரேசில் வர விசா தேவையில்லை என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.

அந்த வகையில், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள், பிரேசில் நாட்டுக்கு சுற்றுலா சென்றாலும், தொழில்-வர்த்தக நோக்கங்களுக்காக சென்றாலும் விசா தேவையில்லை. 

தற்போது விசா விதியில் இருந்து இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுவதாக பிரேசில் அதிபர் ஜயர் போல்சொனாரோ அறிவித்துள்ளார். இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் பிரேசில் செல்வதாக இருந்தால் இனி விசா பெறத்தேவையில்லை. பாஸ்போர்ட் வைத்திருந்தால் அனுமதிக்கப்படுவர்.

[…]

சீனா
உலகம்

தொழில் நடத்தும் சூழல்! உலக தரவரிசையில் 15 இடங்கள் முன்னேறியது சீனா!

தொழில் நடத்துதல் 2020 எனும் ஆண்டறிக்கையை உலக வங்கி 24-ஆம் நாள் முற்பகல் வெளியிட்டது. இவ்வாண்டு, சீனாவில் தொழில் நடத்துவதற்கான சூழல், உலக தரவரிசையில், 15 இடங்கள் முன்னேறி, 31-ஆவது இடத்தில் உள்ளது. முன்பாக, இத்தரவரிசையில் சீனா 78-ஆவது இடத்தில் இருந்து, 46-ஆவது இடத்துக்கு வந்தது நினைவுகூரத்தக்கது. நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் உள்நாட்டில் தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் வகையில், மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சீனா முனைப்புடன் சீர்திருத்த வேகத்தை நிலைநிறுத்தியுள்ளது. தொழில் நடத்துவதற்கான பல்வகை குறியீடுகளில் பாராட்டத்தக்க முன்னேற்றமும் அடைந்துள்ளது என்று உலக வங்கியின் சீன ஆணைய தலைவர் மார்டின் ரெஸ்சர் தெரிவித்தார்.

தொழில் நுடத்துவதற்கான சூழல் மேம்பாடு மிக வேகமாக உள்ள முதல் 10 பொருளாதாரங்களில் சீனாவைத் தவிர, இந்தியா, பாகிஸ்தான், சௌதி அரேபியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

[…]

பாமாயில்
உலகம்

பாமாயில் வாங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டாம் - மலேசியா

தங்களிடம் இருந்து தொடர்ந்து பாமாயில் வாங்குமாறு இந்தியாவை மலேசியா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா.பொதுச் சபையில் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டிடம் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதைக் குறைத்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த எண்ணெய் வர்த்தக அமைப்பு ஒன்று, மலேசியாவிடம் இருந்து பாமாயில் வாங்குவதை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள மலேசிய வர்த்தக அமைச்சர் டேரல் லீக்கிங், தங்களிடம் இருந்து தொடர்ந்து பாமாயில் வாங்கும்படி, இந்தியா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார். 

[…]

டிரம்ப்
உலகம்

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு கும்பல் தாக்குதல் போன்றது - டிரம்ப்

அமெரிக்கா அதிபர் பதவியிலிருந்து தன்னை நீக்க கோரி கொண்டுவரப்படும், நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒரு கும்பல் தாக்குதலை போன்றது என, டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனின் மகன் மீதான புகாரை விசாரிக்க உக்ரைன் உதவியை டிரம்ப் நாடினார் என்பது குற்றச்சாட்டாகும்.

இதனை அடிப்படையாக கொண்டு, ஜனநாயக கட்சியின் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தனக்கு எதிராக, எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம், ஒரு கும்பல் தாக்குதலைப் போன்றது என டிரம்ப் கூறியிருக்கிறார். 

[…]

ஜஸ்டின்
உலகம்

கனடா அரசியலின் கிங்மேக்கரானார் ஜக்மீத் சிங்

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்தை அடையாத போதும் அவர் தொடர்ந்து தமது பதவியில் நீடித்து வருகிறார். கனடா நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மை பலத்திற்கு 170 இடங்கள் தேவை. ஆனால் ட்ரூடோவின் அரசு 157 இடங்களுடன் மைனாரிட்டி அரசாக உள்ளது.

ட்ரூடோவுக்கு ஆட்சியை தக்கவைக்க வெளியில் இருந்து ஆதரவு தேவைப்படும் நிலையில், ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயக கட்சியின் ஆதரவை அவர் நாடியுள்ளார். இந்நிலையில் இந்திய வம்சாவளியினரான 40 வயது மனித உரிமை வழக்கறிஞரான ஜத்மீத் சிங்கின் கட்சி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜகமீத்தின் கட்சிக்கு 24 இடங்கள் உள்ளன. கடந்த தேர்தலில் 44 இடங்களை வென்ற ஜக்மீத்தின் கட்சி இந்த தேர்தலில் 20 இடங்களை இழந்து 24 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்த போதும் மைனாரிட்டி அரசுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் ஜக்மீத்தை கனடா அரசியலில் கிங் மேக்கராக மாற்றியுள்ளது.

[…]

நீர்தேக்கம்
உலகம்

ஆபத்தை உணராது மீன்பிடித்த மீனவர்கள்..!

இங்கிலாந்தில் உள்ள நீர்தேக்கம் ஒன்றில் மீனவர்கள் இருவர் அபாயகரமாக படகு பயணம் செய்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் டெர்பிஷைர் பகுதியில் லேடிபோவர் என்ற அணை கட்டப்பட்டுள்ளது. தொடர் மழையால் அணை நிரம்பி வழியும்போது, அதிகப்படியான நீரை அங்குள்ள டெர்வென்ட் ஆறு வழியாக வெளியேற்றுவதற்கென இரு இடங்களில் 66 அடி ஆழத்துக்கு துளையிடப்பட்டு அங்கிருந்து சுரங்கப்பாதை வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, இந்த துளை அருகே படகு சவாரி செய்தால், துளை வழியாக உள் இழுக்கப்படும் அபாயம் உள்ளது. அண்மையில் அப்பகுதியை சேர்ந்த Flo Neilson என்ற பெண் நாய்களுடன் நடைபயிற்சி சென்றபோது, மீனவர்கள் இருவர் படகில் அந்த துளை அருகே நெருங்கி செல்வதை கண்டார். ஆனால் துளை அருகே படகு நெருங்குவதை அறிந்த மீனவர்கள், சமார்த்தியமாக படகை திருப்பி அங்கிருந்து தப்பினர்.

Flo Neilson பதிவு செய்த இந்த வீடியோ காட்சி வைரலானதை தொடர்ந்து, அணைக்கு மீன் பிடிக்க வருவோர், ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

[…]

கார்
உலகம்

உலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் கார் தயாரிக்கப்பட்டுள்ளது

உலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் காரினை பொறியியல் வல்லுநர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர்கள் ப்ளட்ஹவுன்ட் என்று பெயரிடப்பட்ட காரினைத் தற்போது தயாரித்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் குதிரைத் திறன் கொண்ட இந்தக் கார் மணிக்கு ஆயிரத்து 227 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. 

இதற்காகவே இந்தக் காருக்கு டைபூன் என்ற போர் விமானத்தின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 44 அடி நீளமும் 9 அடி உயரமும் கொண்ட இந்தக் கார் ஏழாயிரத்து 500 கிலோ எடை கொண்டது.

இந்தக் கார் புறப்படும் போது கிட்டத்தட்ட 3 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை வெளிவிடும் தன்மை கொண்டது. தரையில் இயக்கப்படும் வாகனங்களில் அதிவேகமானது என்ற பெயரை ப்ளட்ஹவுன்ட் பெற்று விடும் என அதனைத் தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தயாரிக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது இந்தக் கார் ஆப்பிரிக்காவின் ஹக்ஸ்கீன்பன் பாலைவனத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தக் கார் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

ஹிட்லர்
உலகம்

ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி சொகுசு ஹோட்டலாக மாற்றம்

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி ஒன்று தற்போது சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க்கின் செயின்ட் பாலி மாவட்டத்தில் உள்ள ஹோச்பங்கர் என்ற இடத்தை பதுங்கு குழிகளாக நாஜி படையினர் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 1942ம் ஆண்டு 300 நாட்களில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான பதுங்கு குழி நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் இந்தப் பதுங்கு குழி தொலைக்காட்சி நிலையம், பிற வணிக வளாகமாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் என் ஹெச் ஹோட்டல் என்ற குழுமம் இந்த இடத்தை வாங்கி அங்கு மிகவும் ஆடம்பரமான ஹோட்டலைக் கட்டி வருகிறது.

136 அறைகள் கொண்ட இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு 100 யூரோக்கள் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டல் 2021ம் ஆண்டு திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

[…]

செம்மறி ஆடு
உலகம்

பாரம்பரிய முறைப்படி முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்ற செம்மறி ஆடுகள்

ஸ்பெயின் நாட்டில் வருடாந்திர செம்மறி ஆடுகளின் ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்பெயினின் வடக்குப்பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு வாழ்வாதாரத்திற்காக செம்மறி ஆடுகளுடன் விவசாயிகள் இடம்பெயர்ந்தனர். அதனை நினைவுபடுத்தும் விதமாக, அதே வழித்தடத்தில் பாரம்பரிய முறைப்படி செம்மறி ஆடுகளை கொண்டு செல்லும் நிகழ்ச்சி, 1994 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்காக ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் பெயரளவிற்காக ஆயிரம் ஆடுகளுக்கு 50 மரவெதிஸ் நாணயங்கள் மட்டும் கட்டணமாக அவர்களிடம் வாங்கப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 ஆயிரம் செம்மறி ஆடுகளும், 100 ஆடுகளும் மந்தையில் இடம்பெற்றன.

ஆடுகளை தலைநகர் மேட்ரிட்டின் பிரபலமான முக்கிய வீதிகள் வழியே மேய்ப்பவர்கள் அழைத்துச் சென்றதை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 

[…]

விமானம்
உலகம்

இடைநிற்றல் இன்றி 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்த குவான்டஸ் விமானம்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த குவான்டஸ் (qantas) விமான நிறுவனம், நீண்ட தூரம் செல்லும் விதத்தில் சோதனை முயற்சியாக இயக்கிய விமானம், வெற்றிகரமாக 19 மணி நேர பயணத்தை நிறைவு செய்துள்ளது.

போயிங் 787 - 9 டீரிம்லைனர் ரகத்தை சேர்ந்த அந்த விமானம் 49 பேருடன் நியூயார்க்கில் இருந்து பயணத்தை தொடங்கியது. அங்கிருந்து 10 ஆயிரத்து 66 மைல்கள் தொலைவில் உள்ள ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, இடையில் எங்கும் நிற்காமல் 19 மணி நேரம் 6 நிமிடத்தில் சென்றடைந்தது.

இது வழக்கமான விமான சேவைக்கான முன்னோட்டம் என்று தெரிவித்த குவான்டஸ் விமான நிறுவன தலைமை செயல் அதிகாரி அலன் ஜாய்ஸ், பூமியின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கு மக்கள் செல்வதற்கான பயணம் இனி வேகமெடுக்கும் என்றார். விமானம் பறந்து கொண்டிருந்த போது அதில் பயணித்தவர்களின் உடல் நலனும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

விமானிகளின் மெலடோனின் அளவு, உஷார்நிலை, மூளை செயல்பாடுகளும் ஆராயப்பட்டன. பயணிகளின் சவுகரியமான பயணம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்த இந்த ஆய்வு உதவும் என்று அலன் ஜாய்ஸ் குறிப்பிட்டர்.

இதே போன்று இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் ஒரு முறை நியூயார்க்கில் இருந்து சிட்னிக்கு சோதனை முறையில் விமானம் இயக்க இருப்பதாகவும், வரும் நவம்பர் மாதம் லண்டனில் இருந்து சிட்னிக்கு சோதனை முயற்சியாக விமானம் இயக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2022 அல்லது 2023ல் இருந்து நேரடி விமான சேவை தொடங்கும் என்றும் ஆலன் நம்பிக்கையுடன் கூறினார்.

[…]

ரபேல்
உலகம்

14 ஆண்டுக்கால காதலியை மணந்தார் ரபேல் நடால்

டென்னிஸ் உலகின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், 14 ஆண்டுக்காலமாக தான் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கிவரும் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ரபேல் நடால், ஸிஸ்கா பெரெல்லோ என்பவரை கடந்த 14 ஆண்டுக்காலமாக காதலித்துவந்தார்.

நடால் விளையாடும் பல போட்டிகளையும் நேரில் வந்து ரசிப்பதை ஸிஸ்கா பெரெல்லோ வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் தனது காதலியை நடால் திருமணம் செய்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில்  உள்ள மல்லோர்கா தீவு பகுதியில் உள்ள கோட்டையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 350 பேர் மட்டும் இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டதாகவும், ஸ்பெயினின் முன்னாள் மன்னரான ஜூவான் கார்லோஸ் இதில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

[…]

ஆயே ஆயே
உலகம்

ஆயே ஆயே என்ற விசித்திர மிருகம் குட்டி ஈன்றுள்ளது

அமெரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் உள்ள ஆயே ஆயே என்ற விசித்திர மிருகம் குட்டி ஈன்றுள்ளது.

வடக்கு கரோலினாவில் உள்ள டி எல் சி எனப்படும் டியூக் லெமூர் மையத்தில் ஆயே ஆயே என்ற அரிய வகையைச் சேர்ந்த அபூர்வமான உயிரினம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதன் தோற்றம் பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் இந்த உயிரினம் தீமையின் சகுனம் என்று அழைக்கப்படுகிறது. மடகாஸ்கர் தீவை பூர்விகமாகக் கொண்ட ஆயே ஆயே சிறு சிறு பூச்சிகள் மற்றும் புழுக்களை உணவாகக் கொள்ளும். இரவு நேரங்களில் மட்டும் வேட்டையாடும் திறன் கொண்டது.

சிறிய பொந்துகள் மற்றும் மரங்களில் உள்ள சிறிய துளைகளில் பதுங்கியிருக்கும் பூச்சிகளைப் பிடிப்பதற்காகவே இதன் விரல்கள் மிகவும் நீளமாக பார்ப்பதற்கே கொடூரமாகக் காட்சியளிக்கும். ஆனால் சாதுவான இந்த உயிரினம் அழிவின் விளிம்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

[…]

இரட்டை
உலகம்

100ஆவது பிறந்தநாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்

பிரான்ஸ் நாட்டில் இரட்டை சகோதரிகள் 2 பேர் தங்களது நூறாவது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர்.

பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள ஃபே - டி- ப்ரெடக்னே நகரில் கடந்த 1919ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இருவரும் பிறந்தனர். அவர்களின் பெயர், மேரி லீமேரி, ஜெனிவிவிபோலிகான்ட் ஆகும்.

அவர்களின் நூறாவது பிறந்த தினம் உறவினர்கள், நண்பர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு, சகோதரிகள் 2 பேரும் கேக்குகளை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.

மதுபழக்கம் இல்லாதது, குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது ஆகியவையே தங்களது நீண்ட நாள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணமென்று சகோதரிகள் 2 பேரும் தெரிவித்துள்ளனர்.

போலிகான்ட்டுக்கு 4 வாரிசுகளும், 11 பேர குழந்தைகளும், 16 கொள்ளு பேர குழந்தைகளும் உள்ளனர். லீமேரிக்கு 2 வாரிசுகளும், ஒரு பேர குழந்தையும், 3 கொள்ளு பேர குழந்தைகளும் உள்ளனர்.

[…]

விமானம்
உலகம்

உலகிலேயே நீண்ட நேரம் பயணிக்கும் விமான சேவை தொடக்கம்

உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவை இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

குவாண்டாஸ் போயிங்787 ரக விமானம் ஐம்பது பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக பயணிக்க உள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு புறப்படும் இந்த விமானம் இடையில் எங்கும் நிற்காமல் பயணித்து ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகரை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  விமானத்துறையில் புதிய வரலாற்றை படைக்கும் இந்த முயற்சியில் பயணிகளுக்கு தேவையான உணவு, உறக்கம், மருத்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளாதாக குவாண்டாஸ் போயிங் 787 நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பயணிகளின் அனுபவத்தை தொடர்ந்து குவாண்டாஸ் போயிங் 787 விமானங்களின் சேவை 2022ம் ஆண்டுமுதல் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

[…]

இந்தியர்
உலகம்

சொந்த குடும்பத்தையே கொன்று காவல் நிலையம் சென்ற அமெரிக்க வாழ் இந்தியர்

அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர், தனது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொன்று, சடலத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ரோஸ்வில்((Roseville)) நகரில் 53 வயதான சங்கர் நாகப்பா ஹாங்காடு என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தியரான இவர் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கி பல நிறுவனங்களில் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

அண்மையில், அவரது வீடு அருகேவுள்ள காவல் நிலையத்துக்கு காரில் சென்ற அவர், தனது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார். இதனை நிரூபிக்க காரில் ஒருவரது சடலத்தை எடுத்து வந்துள்ளதாகவும், மீதமுள்ள உடல்கள் தனது வீட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதன்படி அங்கு சென்று போலீசார் ஆய்வு செய்தபோது, இரு சிறுவர்கள் உட்பட 4 பேரின் சடலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது ஹாங்காட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகவலை தற்போது வெளியிட்டுள்ள காவல் நிலைய அதிகாரி ஜோசுவா சைமன் என்பவர், உயிரிழந்தவர்களின் விவரம், கொலைக்கான காரணத்தையும் கூற மறுத்துவிட்டார். ஆனால் ஹாங்காட் இந்த ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 27 லட்சத்தை((178,603 அமெரிக்க டாலரை)) வருமான வரியாக ((Federal tax))செலுத்தியதாக கூறப்படுகிறது.

[…]

சவூதி
உலகம்

பேருந்தும், கனரக வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில், 35 பேர் பலி

சவூதி அரேபியாவில், சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்தும், கனரக வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில், வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்.

ஆசியா மற்றும் பிற அரபு நாடுகளை சேர்ந்த ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் சென்ற அந்த தனியார் பேருந்து, மதீனா அருகே எக்சகவேட்டர் கனரக வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்து உருக்குலைந்ததுடன், தீப்பிடித்தும் எரிந்ததாக, சவூதி அரேபிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டுப் பயணிகள் 35 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் அல்-ஹம்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவிற்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வகையில் முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க சவூதி அரேபியா முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

[…]

லோப்பஸ்
உலகம்

சொந்த வீடு கூட இல்லாத இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம் - தீவு ஒன்றிற்கு உரிமையாளர்

சொந்த வீடு கூட இல்லாத இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தற்போது தீவு ஒன்றிற்கு உரிமையாளராகி உள்ளார்.

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த பிரண்டன் லோப்பஸ் என்பவர் தற்போது துபாயில் வசித்து வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லோப்பஸ், எமிரேட்ஸ் என்பிடி என்ற நிறுவனம் நடத்திய குறும்படப் போட்டியில் பங்கேற்றார். அதில் முதல் பரிசாக அவருக்கு ஒரு லட்சம் திர்ஹாம்கள் கிடைத்தன.

மேலும் கனடாவின் நோவா ஸ்கோட்டியா அருகே ஹால்பாயிண்ட் தீவு ஒன்றும் பரிசாக கிடைத்துள்ளது. சுமார் 6 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் தீவு 5 கால்பந்து மைதானம் பரப்பளவைக் கொண்டதாகும்.

இந்தப் பரிசு குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட லோப்பஸ், சொந்தமாக வீடுகூட இல்லாத தான், தற்போது ஒரு தீவுக்கு  உரிமையாளர் என்பதை நம்பமுடியவில்லை என்று கூறினார். தனது பெற்றோருடன் அந்தத் தீவில் வசிக்க விரும்புவதாகவும் லோப்பஸ் தெரிவித்துள்ளார்.

[…]

பாகிஸ்தான்
உலகம்

பாகிஸ்தானை அடர் சாம்பல் பட்டியலில் வைக்க வாய்ப்பு

பாரீசில் நடைபெறும் சர்வதேச நிதி கண்காணிப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விதிக்கப்பட்டுள்ள சாம்பல் நிற பட்டியலில் இருந்து அந்நாடு அடர் சாம்பல் நிறப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.

அடர் நீலம் என்பது பாகிஸ்தானுக்கு நிலைமையில் முன்னேற்றம் காண்பதற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதனால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி, ஐ.எம்.எப். ஐரோப்பிய யூனியன் போன்றவை நிதியளிக்க மறுக்கலாம். இதையடுத்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டால் அதற்கு சர்வதேச அளவில் நிதி பெற முடியாத நெருக்கடி உருவாகும்.

தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தீவிரவாதிகளை கைது செய்யவும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நிதி ஆதாரங்களைத் தடுக்கவும் பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நிதி கண்காணிப்பகம் பரிசீலனை செய்துவருகிறது.

மொத்தமுள்ள 27 அம்சங்களில் பாகிஸ்தான் 6 அம்சங்களில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாகிஸ்தான் குறித்து அனைத்து உறுப்பினர்களும் அதிருப்தி கொண்டிருப்பதால் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.

[…]

ஜின்பிங்
உலகம்

சீனாவை பிரிக்க முயற்சிப்போர் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படுவார்கள்

சீனாவை பிரிக்க முயற்சிப்போர் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படுவார்கள் என நேபாள பயணத்தின் போது சீன அதிபர்  ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

மாமல்லபுரம் பயணத்தை முடித்துக் கொண்டு நேபாளம் சென்ற சீன அதிபர், அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆகியோரை சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்திய அவர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடப்பட்டது.

கடந்த 23 ஆண்டுகளில் சீன அதிபர் ஒருவர் நேபாள நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் நேபாள அதிபருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அந்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக நேபாள மதிப்பில் 5 ஆயிரத்து 637 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என ஜின்பிங் அறிவித்தார்.

மேலும் சீனாவை யாரேனும் பிரிக்க நினைத்தால் அந்த முயற்சி இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படும் என சீன அதிபர் எச்சரித்துள்ளார். இது போன்ற முயற்சிகளை ஆதரிக்கும் வெளிப்புற சக்திகளை சீன மக்கள் பகல் கனவு காண்பவர்களாக தான் கருதுவார்கள் எனவும் ஜின்பிங் தெரிவித்ததாக, சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

[…]

மயில்
உலகம்

மயில் போல மணநாளுக்கு கேக் ஆர்டர் செய்த மணமகள்

மயில் போல மணநாளுக்கு கேக் ஆர்டர் செய்து ஆர்வத்தோடு காத்திருந்த மணமகள் தொழுநோய் வந்த வான்கோழி போல விநியோகிக்கப்பட்ட கேக்கை கண்டு பேரதிர்ச்சி அடைந்தார்.

ஜார்ஜியாவைச் சேர்ந்த ரெனா டேவிட், அழகிய மயில் தோகை விரித்து 2 அடுக்கு கேக் மீது அமர்ந்திருப்பது போன்றும், தோகையின் மீதி, தரையில் கப் கேக்குகளாக படர்ந்திருப்பது போன்றும் கேக் வேண்டுமெனக் கூறி ஒரு பேக்கரிடம் ஆர்டர் கொடுத்தார்.

அதற்காக இந்திய மதிப்பில் 21 ஆயிரம் ரூபாயும் பணம் கொடுத்தார். திங்களன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஞாயிறன்று மாலை சரியாக 6 மணிக்கு கேக் வீட்டுக்குக் கொண்டு வந்து வழங்கப்பட்ட கேக்கை ரெனா ஆர்வத்தோடு பிரித்துப் பார்த்து, பேரதிர்ச்சி அடைந்தார்.

தான் ஆர்டர் செய்த மயிலுக்கு பதிலாக தொழுநோய் வந்த வான்கோழி தன் இறகுகளை இழந்திருப்பது போன்ற தோற்றத்தில் அந்த கேக் அமைந்திருந்தது. முதலில் பணத்தைத் திரும்பத் தர மறுத்த பேக்கர், ரெனாவின் கணவருடைய சகோதரி அன்னெட்டே ஹில்  இந்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வைரலான பின் பணத்தைத் திரும்பக் கொடுத்துள்ளார்.

[…]

நோய்கள்
உலகம்

மெதுவாக நடப்பவர்களை தாக்கும் பல்வேறு நோய்கள்..!

மெதுவாக நடப்பவர்களுக்கு 45 வயதுக்கு மேல் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டன.

அப்போது மெதுவாக நடந்து பழகியவர்களுக்கு அல்சைமர் போன்ற நோய்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மெதுவாக நடப்பவர்களின் நுரையீரல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களுக்கு மூளையின் மேற்பரப்பில் சிறிய புள்ளிகள் இருப்பது தெரியவந்தது.

இந்த அறிகுறிகள் வயதானவர்களுக்கு ஏற்படுவதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மேலும் வேகமாக நடப்பவர்களை விட மெதுவாக நடப்பவர்களுக்கு ஐ.க்யூ திறன் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று வேகமாக நடந்தால் நமக்கு நன்மை நடக்கும் என்பதையே ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

[…]

ஹகிபிஸ்
உலகம்

ஜப்பானை சூறையாடிய ஹகிபிஸ் புயல் - பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

ஜப்பானை சூறையாடிய ஹகிபிஸ் புயலுக்கு பலியானர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

ஜப்பானில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் டோக்யோவின் தென்மேற்குப்பகுதியில் ஹகிபிஸ் புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 144 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியடன் கனமழை கொட்டியது. அதனால் வீடுகளின் மேற்கூரைகள், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஏராளமான குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின.

முன்எச்சரிக்கையாக குடியிருப்புகளில் இருந்த 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். டோக்கியோவை சுற்றிலும் பல்வேறு நகரங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. புயல் பாதிப்பிற்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. 140 பேர் காயமடைந்து இருப்பதாகவும், 19 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, காவல்துறையினர், தீயணைப்பு மீட்பு துறையினர், கடலோரப் பாதுகாப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் 27 ஆயிரம் பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹகிபிஸ் புயால் பாதிப்பு காரணமாக ரக்பி உலக கோப்பை போட்டியில் 3 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. புயல் தாக்கியல் ஜப்பானின் ஹோன்சு தீவில் கடும் சேதம் ஏற்பட்டது. அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மின்சார இணைப்பு வழங்க முடியாததல் மக்கள் பரிதவிக்கும் நிலை உள்ளது. நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. டோக்யோவின் தெற்கு பகுதிக்கு செல்லும் அதிவேக ரயில் போக்குவரத்து மீண்டும் இன்று தொடங்கப்பட்டது.

ஹகிபிஸ் புயல் பாதிப்பினால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த பேரிடரை சமாளிக்க ஜப்பான் அரசு எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். அங்கு இருக்கும் இந்திய கடற்படையினர், மீட்பு பணியில் உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

[…]

வெள்ளப்பெருக்கு
உலகம்

ஜப்பானை நெருங்கிக் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல்

ஹகிபிஸ் புயல் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட கனமழையால் மத்திய ஜப்பானில் உள்ள வீடுகள் சேதமடைந்ததுடன், குடியிருப்பு பகுதிகள் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இன்று மாலை ஜப்பானில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட அதிவேக காற்றினாலும், மழைப்பொழிவாலும் மத்திய ஜப்பானில் உள்ள சிபா நகரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. குடியிருப்பு பகுதிகள் முழுவதும் மழைநீர் சூழந்துள்ள நிலையில், காரில் இருந்த ஒருவர் வெளியே வரமுடியாமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் மொழியில் வேகம் என்று பொருள்படும் ஹகிபிஸ் புயலால் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புயலின் வேகம் அதிகமாக காணப்படுவதால் தலைநகரான டோக்கியோவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது. 

[…]

உலக சாதனை
உலகம்

ஒரே நேரத்தில் இரண்டு உலக சாதனை படைத்தார் ஃபிரடெரிக்

ஜெர்மனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிக உயரத்தில் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஃபிரடெரிக் ஹூனே என்பவர் யோகாவில் உலக சாதனை படைக்க ஆவல் கொண்டிருந்தார். இதன் காரணமாக ரஷ்யா சென்ற அவர், அங்கிருந்த ஓ கே ஓ டவர் மற்றும் நேவா டவர் ஆகிய இரு கட்டடங்களுக்கு நடுவே கயிற்றில் யோகா செய்ய முடிவு செய்தார். தரைமட்டத்தில் இருந்து சுமார் ஆயிரத்து 148 அடி உயரத்தில் கயிற்றில் ஆடியபடியே ஃபிரடெரிக் யோகா செய்தது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

அதிக உயரம் கொண்ட கட்டடத்தின் உச்சியில் யோகா செய்ததாலும், அதே உயரத்தில் செல்ஃபி குச்சி மூலம் செல்ஃபி எடுத்ததற்காகவும் ஃபிரடெரிக் பெயர் உலக சாதனைப் புத்தகமான கின்னஸில் இடம் பெற்றுள்ளது. முன்னதாக ஜெர்மனைச் சேர்ந்த ஸ்லாக்லைனர் என்பவர் 807 அடி உயரத்தில் நடந்து சென்றதே உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

[…]

நோபல் பரிசு
உலகம்

அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அலிக்கு அறிவிப்பு

2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு ((Abiy Ahmed Ali))அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

இந்த விருதுகளில் மிகவும் உயரியதாக கருதப்படும் அமைதிக்கான நோபல் விருது எத்தியோப்பிய நாட்டின் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காகவும், அண்டை நாடான எரித்தியாவுடன்பல ஆண்டுகளாக நிலவிய எல்லை பிரச்னைக்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுத்ததற்காகவும் அபய் அகமது அலி அந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

முன்னதாக, நோபல் விருதுக்கு ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெடா தன்பர்க், ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல், கீரிஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், வடக்கு மேசிடோனியா பிரதமர் ஜோரன் ஜேவ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதற்கு முற்றிலும் மாறாக, எத்தியோப்பிய பிரதமர் அபய் அகமது அலி அந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1901ம் ஆண்டு முதல் இதுவரை 99 நோபல் அமைதி விருதுகள் தனியார் மற்றும் 24 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் விருது நார்வே தலைநகர் ஓஸ்லோவிலும், பிற விருதுகள் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

[…]

மேம்பாலம்
உலகம்

மேம்பாலம் இடிந்து வாகனங்கள் மீது விழுந்து கோர விபத்து

சீனாவில் மேம்பாலம் இடிந்து சாலையில் சென்ற கார்களின் மீது விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள வுக்சி நகரில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டப்பட்ட இந்த மேம்பாலம் மற்றும் அவ்வழி சாலையை பயன்படுத்தி வாகன ஓட்டிகள் சென்று வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு இரு வழிகளிலும் வாகனங்கள் சென்றபோது, திடீரென மேம்பாலம் உடைந்து சாலையில் சென்ற 2 கார்கள் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்தது.

திடீரென மேம்பாலம் இடிந்து விழுந்ததில், மேம்பாலத்தில் சென்ற 3 கார்கள் மற்றும் இரு லாரிகளும் கீழே விழுந்தன. இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கிரேன் உள்ளிட்டவற்றின் உதவியுடன் விடிய விடிய இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், லாரி ஒன்று அனுமதிக்கப்பட்டதை விட அதிக லோடு ஏற்றி சென்றதால், மேம்பாலம் இடிந்து விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.இருப்பினும் தொடர் விசாரணை நடந்து வருகிறது.

[…]

10 பெரிய திட்டங்கள்
உலகம்

சீன அரசின் 10 பெரிய திட்டங்கள் அறிவிப்பு

பொருளாதார மந்தநிலை சீனாவிலும் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து பொருளாதாரத்தை மீட்க அந்நாட்டு அரசு பத்து பெரிய திட்டங்களை அறிவித்துள்ளது. அதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.4 சதவிகிதமாக இருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த காலாண்டில் 6.2 சதவிகிதமாக குறைந்தது. தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை அடுத்து, புதிய திட்டங்களை அறிவித்தும், வரி குறைப்பு செய்து பொருளாதார வளர்ச்சிக்கு சீன அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் புதிதாக பத்து பெரிய திட்டங்களை அந்த அரசு அறிவித்துள்ளது.
 

அதில் முதலாவது திட்டம் ஷாங்காய் நகர ரயில் திட்டம்

44.23 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிலான இந்த திட்டத்தை 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 286 கிலோ மீட்டர் தூரத்திற்கு 9 ரயில் பாதை திட்டங்கள் இதன் படி செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்களின் மூலம் சீனாவின் வர்த்தக தலைநகரமான ஷாங்காயில் உள்ள இரு விமான நிலையங்களையும், இரு ரயில் நிலையங்களையும் இணைக்க கூடுதல் வழித்தடங்கள் உருவாக்கப்பட உள்ளன.

ஜிங்சூ ரயில் திட்டம்

ஜிங்சூ பிராந்தியத்தில் உள்ள 8 நகரங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வகையில் ஜிங்சூ ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. யாங்சீ ஆற்றின் கரைகளில் உள்ள நகரங்களை இணைப்பதன் மூலம் பொது போக்குவரத்து அதிகரிக்கப்படும். 34.35 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிலான இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.


ஊகான் நகர ரயில் திட்டம்

ஊகான் நகரில் புதிதாக நான்கு மெட்ரோ ரயில் திட்டங்களும், 4 எக்ஸ்பிரஸ் ரயில் திட்டங்களும் அமைக்கப்பட உள்ளன. பெருநகரான ஊகானின் போக்குவரத்து நெரிசலை குறைத்து பொது போக்குவரத்தை அதிகரிக்க இந்த திட்டங்கள் உதவுமென சீன அரசு கூறியுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் முடிவடைய உள்ள இந்த திட்டங்களின் மொத்த மதிப்பீடு 21.78 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

காங்டாங் ரயில் திட்டம்

காங்டாங் பிராந்தியத்தில் உள்ள நகரங்களை இணைப்பதே இந்த ரயில் திட்டத்தின் நோக்கம். இதன் மொத்த மதிப்பீடு 100.2 பில்லியன் டாலர்களாகும். ஷாங்டூ, ஷான்வாய், சோசூ, ஜியெங் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் 320 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. 

சோகூ நகர ரயில் திட்டம்

சோகூ நகரை பிற ஊர்களுடன் இணைக்கும் வகையில் புதிதாக நான்கு ரயில் பாதைகள் அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். 13.84 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிலான இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறும்.

சாங்சூன் நகர ரயில் திட்டம்

மூன்று ரயில் வழித்தடங்களை நீட்டிப்பு, நான்கு புதிய ரயில் தடங்களை அமைப்பது இந்த திட்டத்தின் நோக்கம். சீனாவின் வடகிழக்கில் உள்ள சாங்சூன் பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க இந்த ரயில் திட்டம் கை கொடுக்குமென சீன அரசு தெரிவித்துள்ளது. 10.55 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிலான இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். 

சியான் - யனான் அதி விரைவு ரயில்

சாங்சீ பிராந்தியத்தில் உள்ள சியான் மற்றும் யனான் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் புரட்சியின் பிறப்பிடமான யனான் நகரை இணைக்கும் இந்த ரயில் பாதை, சீன அதிபர் ஜின் பிங்கின் சொந்த ஊரான பியூபிங் நகரம் வழியாகவும் செல்கிறது. 8.18 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹாங்சூ நகர ரயில் திட்டம்

வூசான் மேற்கு ரயில் நிலையத்தில் இருந்து ஹாங்சூ விமான நிலையம் வரை அமைக்கப்படும் இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு 8.3 பில்லியன் அமெரிக்க டாலர். 2022 ஆம் ஆண்டு ஹாங்சூ நகரில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காக இந்த ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. 

சோங்கிங் - கியான்ஜிங் அதி வேக ரயில் திட்டம்

7.93 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டிலான இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாங்சீ ஆற்றுக்கு அடியில் சுரங்கம் அமைத்து இந்த ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 265 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில் பாதையில் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க முடியும். 

காங்சி ரயில் திட்டம்

காங்சி பிராந்தியத்தில் உள்ள நானிங் - யூலின் நகரங்களை இணைக்கவும், நானிங் - காங்சூ நகரங்களை இணைக்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 7.67 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டுகள் முடிக்கப்படும்.

இந்த பத்து திட்டங்களுக்காக மொத்தம் 219.43 பில்லியன் அமெரிக்க டாலர்களை சீன அரசு முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகி, பொருளாதாரம் உயர்வதோடு , தொழில் வளர்ச்சி பெருகுமென அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

[…]

  ஜின்பிங் 
உலகம்

காஷ்மீர் விவகாரம் குறித்து கவனித்து வருகிறேன்- சீன அதிபர்

காஷ்மீர் விவகாரம் குறித்து கவனித்து வருவதாகவும், பாகிஸ்தானின் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சனைகளில் அந்த நாட்டுக்கு ஆதரவு அளிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று சீனா சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது சீன அதிபர்  ஜின்பிங்  காஷ்மீரின் நிலைமையைக் கவனித்து வருவதாகவும், முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கப்படும்  என்று கூறியதாக  அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், இந்த நிலைமையின்  சரியும் தவறும் தெளிவாக உள்ளதாக சீன அதிபர் கூறியதாகவும் அதில் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் அமைதியான  பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை தீர்க்க வேண்டும் என்று கூறியதாக சின்ஹுவா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு பிராந்திய, உலக முக்கியத்துவம் சார்ந்த இருதரப்பு உறவுகள், இந்தியா-சீனா இடையிலான ஒத்துழைப்பில் நெருங்கிய முன்னேற்றம் காண்பது உள்ளிட்டவை குறித்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ள வாய்ப்பளிக்கும் என்று நம்புவதாகவும் அதில் தெரிவித்துள்ளது.

சீன பிரதமரின் இந்திய பயணத்துக்கு முன்னால், பாகிஸ்தான் பிரதமரை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததாகவும், பாகிஸ்தானின் சுதந்திர இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பதில் சீனா ஆதரவளிக்கும் என்றும் சீன பிரீமியர் லி கெகியாங் நேற்று கருத்து தெரிவித்திருந்தார்.

[…]

 அசிம் உமர்
உலகம்

அல்கொய்தா இந்திய பிரிவு தலைவன் அசிம் உமர் உயிரிழப்பு

அல்கொய்தாவின் இந்திய பிரிவுக்கான தலைவன் மவுலானா அசிம் உமர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் கடந்த செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டான். இத்தகவலை இப்போது அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்தவன் உமர். சனாவுல் ஹக், சன்னு என்ற பெயர்களில் அப்பகுதியில் அவன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான். பின்னர் 2018ம் ஆண்டு பாகிஸ்தான் சென்று தீவிரவாதப் பயிற்சி பெற்றான். இதனால் அவன் சர்வதேச அளவில் தேடப்படும் தீவிரவாதியாக அமெரிக்காவால் தடை செய்யப்பட்டான். இந்தியாவில் அல்கொய்தாவை வளர்க்கவும் சதித்திட்டங்களை செய்யவும் அவன் அல்கொய்தா தலைவர் அல் ஜவாரியால் நியமிக்கப்பட்டான்.

மெக்கா செல்வதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு போய், 14 ஆண்டுகளாக காணாமல் போன நபராக குடும்பத்தினரால் தேடப்பட்டு வந்த அசிம் உமர், வான்தாக்குதலில் உயிரிழந்ததாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

[…]

மாத்திரை
உலகம்

ஊசியாகப் போடப்பட்டு வந்த இன்சுலின் மாத்திரையாக வடிவமைப்பு

ஊசியாகப் போடப்பட்டு வந்த இன்சுலின் மருந்தை மாத்திரையாக உட்கொள்ளும் வகையில் அமெரிக்க ஆய்வாளர்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.

மசாசுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவன ஆய்வாளர்கள் பன்றி ஒன்றை வைத்து மேற்கொண்ட பரிசோதனையின் முடிவுகள் நேச்சர் மெடிசன் என்ற இதழில் இந்த வாரம் வெளியாகியுள்ளது.

இன்சுலின் மருந்து ஊசி மூலமே செலுத்தப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன் புளூ பெர்ரி அளவிலான மாத்திரையைக் கண்டறிந்து அதன் மூலம் இன்சுலின் செலுத்தி சோதனையிட்டனர்.

ஆனால், அதில் சில குறைகள் இருந்ததால் அவற்றைக் களைந்து, மேம்படுத்தியுள்ள ஆய்வாளர்கள், மாத்திரையை விழுங்கியதும், அது வேறெங்கும் சிக்காமல் நேராக சிறுகுடலை அடையும் வண்ணம் வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

30 மில்லி மீட்டர் நீள மாத்திரை ஜீரண மண்டல அமிலங்களில் பாதிக்காமல் இருக்க அதன் மீது பிரத்யேக பூச்சு பயன்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

சிறுகுடலில் பி.ஹெச். அளவு அதிகம் இருக்கும் என்பதால் அப்பகுதியை அடைந்த பின்பே மாத்திரை வெடிக்கும் என்றும், பின் மடங்கிய கைகள் போன்ற அமைப்பு, ஒரு மில்லி மீட்டர் நீளம் கொண்ட ஊசி போன்ற கொத்துக்களை சிறுகுடல் சுவற்றில் புகுத்தும் என்றும் கூறியுள்ளனர்.

அப்போது, ஊசி போன்ற கொத்துகள் கரைந்து அதில் உள்ள இன்சுலின் மருந்து ரத்த ஓட்டத்தில் கலக்கும் என்றும், மாத்திரையோடு வந்த பிற பாகங்கள் தன்னிச்சையாகவே கரைந்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

[…]

பேஸ்புக்
உலகம்

தவறான கணக்கீடு - விளம்பரதாரர்களுக்கு ரூ.284 கோடி செலுத்த பேஸ்புக் ஒப்புதல்

வீடியோ விளம்பரங்களை பார்ப்போரின் எண்ணிக்கையை உயர்த்தி காண்பித்து, தவறான கணக்கீட்டை வழங்கிய வழக்கில், பேஸ்புக் நிறுவனம், 284 கோடி ரூபாயை, தனது விளம்பரதாரர்களுக்கு செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த 2015-2016ஆம் ஆண்டுகளில், முகநூல் நிறுவனத்திற்கு, வீடியோ விளம்பரங்களை அளித்த நிறுவனங்கள், அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில், கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குத் தொடர்ந்தன. இதையடுத்து, வழக்கை நடத்தி வந்த, பேஸ்புக் நிறுவனம், தற்போது, வீடியோ விளம்பரங்கள் அளித்த நிறுவனங்களோடு, சமரச உடன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதன்படி, வீடியோ விளம்பரங்களை பார்ப்போரின் எண்ணிக்கை உயர்த்தி காண்பித்து, தவறான கணக்கீட்டை வழங்கியதை இலைமறை காயாக ஒப்புக் கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனம், பாதிக்கப்பட்ட விளம்பரதாரர்களுக்கு, இந்திய மதிப்பில், 284 கோடி ரூபாயை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது

[…]

கிரேட்டா தன்பெர்கின்
உலகம்

தூக்கில் தொங்கவிடப்பட்ட இளம் இயற்கைப் போராளி கிரேட்டா தன்பெர்கின் உருவபொம்மை

பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா.சபையில் உரையாற்றிய இயற்கைப் போராளி கிரேட்டா தன்பெர்கின் உருவபொம்மையை இத்தாலியில் பாலத்துக்கு அடியில் தூக்கில் தொங்கவிட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கு என்ன தைரியம்? என ஐ.நா. சபையில் உலகநாடுகளைக் கடுமையாகச் சாடி பேசியவர் இளம் இயற்கைப் போராளி கிரேட்டா தன்பெர்க். இவரால் ஈர்க்கப்பட்ட பள்ளிச் சிறார்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் பருவ நிலை மாற்றத்தின் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்..

அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கக் கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பாலம் ஒன்றின் கீழ் கிரேட்டா தன்பெர்கின் உருவ பொம்மையை தூக்கில் மர்மநபர்கள் தூக்கில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். அதில் கிரேட்டா உங்கள் கடவுள் என ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.

இத்தகைய மோசமான அச்சுறுத்தலுக்கு டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்த ரோம் நகர மேயர் விர்ஜினியா ரக்கி (Virginia Raggi ) கிரேட்டா தன்பெர்கின் உருவபொம்மை தங்களது நகரில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருப்பது வெட்கக் கேடானது என குறிப்பிட்டுள்ளார்.

கிரேட்டாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் ரோம் நகரின் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதாகவும், பருவநிலைமாற்றத்தைத் தடுப்பதற்கு கடமைப்பட்டிருப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டோம் என்றும் விளக்கமளித்துள்ளார்.

[…]

ஓவியம்
உலகம்

ரூ.177 கோடிக்கு ஏலம் போன ஓவியம்

சீனாவில் ஓவியம் ஒன்று 177 கோடி ரூபாக்கு ஏலம் போனது.அந்நாட்டின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றது.

இதில் ஜப்பான் ஓவியர் யோஷிடோமொ வரைந்த ஒரு சிறுமி குறித்த ஓவியம் 177 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. பெரிய கண்களுடன், முறைப்பது போல் நிற்கும் சிறுமி, ஒரு கையை மறைத்து இருப்பது போல் ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கிறது. இந்த ஓவியத்தை சிலர் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலத்தை உயர்த்தினர்.

முடிவில் இந்த ஓவியம் இந்திய ரூபாய் மதிப்பில் 177.9 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. நியூயார்க்கில் நவம்பரில் நடைபெறவுள்ள ஓவிய ஏலத்திலும் யோஷிடோமாவின் ஓவியம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[…]

சுவிஸ் வங்கி
உலகம்

சுவிஸ் வங்கியில் பணம் இந்தியர்களின் முதல் பட்டியல்

சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை முதல் முறையாக அந்த நாட்டு அரசு, இந்திய அரசிடம் வழங்கி உள்ளது. 

இந்தியர்கள் பலர் கறுப்பு பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் சேமித்து வைத்துள்ளதாக பல ஆண்டுகளாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இதையடுத்து சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கியோருக்கு இரட்டை வரி விதிக்க வகை செய்யும் ஒப்பந்தம் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி கையெழுத்தானது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி, இந்தியா- சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதன் படி சுவிட்சர்லாந்து வங்களில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விபரத்தை ஒப்படைக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களின் விபரங்களை முதல் முறையாக அந்நாட்டு அரசு இந்திய அரசுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இதுகுறித்து பேசிய சுவிட்சர்லாந்து வரி நிர்வாகத்துறை செய்தி தொடர்பாளர்,சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு,  இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளுடன் 31 லட்சம் வங்கி கணக்குகள் குறித்த விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

இதில் இந்தியர்கள் எவ்வளவு பேர், அவர்கள் முதலீடு செய்துள்ள பணத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பதை கூற மறுத்து விட்டார்.

முதல் பட்டியலில் வங்கி கணக்கு வைத்திருப்போரின்  பெயர்கள்,தொழில், வங்கி கணக்கு எண், முகவரி, இருப்பிடம், வரி செலுத்தும் எண், வருமானம், வங்கி கணக்கில் உள்ள இருப்பு, வங்கியில் முதலீடு செய்தது எவ்வளவு, எடுத்த பணம் எவ்வளவு, முதலீட்டில் இருந்து பெறும் வட்டி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

நடப்பில் உள்ள மற்றும் கடந்த 2018-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த கணக்குகள் குறித்த தகவல்களை வழங்கி உள்ளதாகவும்,  இதே போன்ற அடுத்த பட்டியல் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பட்டியலில் பெரும் தொழிலதிபர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, தெற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பெயர்களே அதிக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபரங்களை பெற்று உள்ளதன் மூலம், கறுப்பு பணத்தை பதுக்கியவர்கள், வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்தவர்கள், கணக்கில் வராத பணத்தை வைத்து உள்ளவர்கள், வரி ஏய்ப்பு செய்தவர்கள் குறித்த தகவல்களை இந்திய அரசு அறிந்து கொள்ள முடியும் என்றும், வருமானவரி செலுத்துவோர், தங்களின் கணக்கு விபரங்களை முறையாக அறிவித்துள்ளார்களாக அல்லது, அரசை ஏமாற்றி உள்ளார்களா என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

[…]

பாகிஸ்தான் தவறிவிட்டது
உலகம்

பயங்கரவாதிகளை வேரறுக்க பாகிஸ்தான் தவறிவிட்டது

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் நாடு மேற்கொள்ளவில்லை என நிதி முறைகேடுகள் மூலம், தீவிரவாதிகளின் கைகளுக்கு பணம் செல்வதை தடுக்கும், சர்வதேச அமைப்பான FATF குற்றம்சாட்டியிருக்கிறது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தீவிரவாதத்திற்கு எதிராகவும், அவற்றை ஒடுக்குவது தொடர்பாகவும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வகுத்தளித்த, 40 தீர்மானங்களில், 36 தீர்மானங்களை பாகிஸ்தான் நிறைவேற்ற தவறிவிட்டதாக தெரிவித்திருக்கிறது.

பயங்கரவாதத்தை தனது மண்ணிலிருந்து அகற்றுவதற்கான, ஐக்கிய நாடுகள் அவையின் குறிப்பிட்ட 4 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு கூட பாகிஸ்தான் முயற்சிக்கவில்லை என்றும், FATF சுட்டிக்காட்டியிருக்கிறது.

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க வேண்டும் என கடந்த ஜூன் மாதமே FATF எச்சரித்திருந்தும், அதனையும் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறது.

[…]

 தீவிரவாதிகள் 89 பேர் பலி
உலகம்

பாதுகாப்பு படையினர் தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகள் 89 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தாஹார் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 89 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பல இடங்களில் அவர்கள் பின்வாங்கிவிட்டனர் என்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரோஹுல்லா அகமத்ஸி தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் தாஹார் மாகாணத்தில் மட்டும் தலிபான் தீவிரவாதிகள் 89 பேர் கொல்லப்பட்டதாகவும் 67 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து தாஹார் மாகாணத்தின் பாஹார்க் மாவட்டம், ஆப்கானிஸ்தான் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

[…]

சவுதி அரேபியா
உலகம்

ஈரானுடன் பதற்றத்தை தணிக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட சவுதி அரேபியா

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீதான தாக்குதலையடுத்து நிலவும் பதற்றமான சூழலை தவிர்ப்பது தொடர்பாக ஈரானுடன் பேசுமாறு ஈராக் மற்றும் பாகிஸ்தானை சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது கடந்த செப்டம்பர் 14ம் தேதி, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என சவுதி மற்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியதுடன், பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தன. இந்நிலையில், இந்த பிரச்சனையில் ஈராக் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள் தலையிடுமாறு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கேட்டுக் கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கூறியுள்ளது.

பதற்றத்தை தணிப்பது தொடர்பாக ஈரானுடன் பேசுமாறு, இரு நாட்டு தலைவர்களையும் சவூதி பட்டத்து இளவரசர் சல்மான் கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த நாளிதழ் குறிப்பிடப்பட்டுள்ளது. போரைத் தவிர்க்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும், ஈரானுடன் பேசுங்கள் என்றும் இம்ரான்கானிடம் சவூதி அரேபிய இளவரசர் கூறியதாகவும் நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஈராக் பிரதமர் அப்துல் மஹதி சவூதி அரேபியா சென்றிருந்தபோதும், இதே கோரிக்கையை அந்நாட்டு பட்டத்து இளவரசர் விடுத்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஈரான், தனிப்பட்ட முறையிலும், பகிரங்கமாகவும் சவூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

[…]

நீதிபதி
உலகம்

தீர்ப்பளிக்க சுதந்திரம் இல்லை - நீதிமன்றத்திலேயே நீதிபதி தற்கொலை முயற்சி

தாய்லாந்தில் நீதிபதி ஒருவர் தீர்ப்பளிக்க சுதந்திரம் இல்லை என்று கூறி நீதிமன்றத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

யாலா நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் கனகோர்ன் பியன்சனா (Khanakorn Pianchana).

கொலை மற்றும் துப்பாக்கி ஆயுதங்கள் வைத்திருந்த வழக்கு ஒன்றை விசாரித்து வந்த நிலையில் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை குற்றவாளி என தீர்ப்பளிக்க வேண்டும் என மூத்த நீதிபதிகள் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் நீதிபதி கனகோர்ன் விடுவித்தார்.

இந்நிலையில், வழக்குகளில் மூத்த நீதிபதிகளின் தலையீடு இருப்பதாகவும், சுதந்திரமாக விசாரித்து தீர்ப்பளிக்க முடியவில்லை எனவும் 25 பக்க கடிதம் எழுதி அதை பேஸ்புக்கில் பதிவேற்றிய நீதிபதி கனகோர்ன், நீதிமன்றத்திலேயே துப்பாக்கியால் தனது நெஞ்சில் சுட்டுக் கொண்டார்.

அவரை மீட்ட பணியாளர்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சக நீதிபதிகள் தன்னைப் போன்றே நடத்தப்பட்டதாகவும், பதவிஏற்கும் போது, தான் அளித்த உறுதிமொழியை காப்பாற்ற முடியாவிட்டால், நீதியின்றி வாழ்வதை விட சாவதே மேல் என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்து நீதித்துறையில் ஊழல் மலிந்திருப்பதாகவும், அதை மாற்ற பல முறை முயற்சித்தும் அரசியல் அழுத்தங்களால் முடியவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. பல வழக்குகளில் நியாயமான தீர்ப்பு வழங்கமுடிவதில்லை என தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நீதிபதி கனகோர்ன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

[…]

 டிரம்ப்
உலகம்

சுகாதார சேவைக்கு செலவிட முடியாவிட்டால், அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டாம் - டிரம்ப்

சுகாதார சேவைக்கு செலவிட முடியாவிட்டால், அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழைய வேண்டாம் என்ற புதிய திட்டத்துக்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

அகதிகள் விவகாரத்தில், முன்னர் பதவி வகித்த அமெரிக்க அதிபர்களை காட்டிலும் அதிபர் டிரம்ப் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.

கடந்த மாதம், அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற அகதிகளில் 18,000 பேரை மட்டும் 2020ம் நிதியாண்டில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் 30 நாட்களுக்குள் சுகாதார காப்பீடு பெற முடியாத அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்ற புதிய அறிவிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, வருகிற நவம்பர் 3ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என கூறியுள்ளது.

அதன்படி அகதிகள் விசா மூலம் அமெரிக்காவுக்குள் நுழைவோர், நிறுவனம் வழங்கும் மருத்துவ காப்பீடு அல்லது முதியவருக்கான மருத்துவ காப்பீடு வைத்திருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட அகதிகள் வைத்திருக்கும் மெடிகெய்டு என்ற ஏழைகளுக்கான மருத்துவ காப்பீடு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா அரசு மருத்துவமனைகளில் சொந்த நாட்டை சேர்ந்தவர்கள் அல்லாத சிலர் சிகிச்சை பெறுவதால் அந்நாட்டு சுகாதாரத்துறை செலவை ஈடுகட்ட முடியாமல் தவித்து வருவதாகவும், அதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள

[…]

சிவப்பு நரி
உலகம்

விமானநிலையத்திற்குள் புகுந்து போக்குக் காட்டிய சிவப்பு நரி

ரஷ்யாவில் விமான நிலையத்திற்குள் பாதுகாக்கப்பட்ட பகுதியில் நரி ஒன்று நுழைந்து சுற்றித்திரிந்தது. தலைநகர் மாஸ்கோவின் தெற்குப் பகுதியில் டொமோடிடோவோ விமான நிலையம் உள்ளது. இங்கு பயணிகள் புறப்படும் பகுதிக்குள் புகுந்த சிவப்பு நரி ஒன்று அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது.

இதனைக் கண்ட விமான நிலைய ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். ஆனாலும் சிலர் ஆர்வமிகுதியால் நரியைப் பின்தொடர்ந்து தங்கள் மொபைல் போனில் படம் பிடித்தனர்.

இதனைக் கண்டு மிரண்டு போன நரி, பாதுகாப்பு பகுதிக்குள் புகுந்து பின்னர் சிறிதுநேரத்தில் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டது. பாதுகாப்பை மீறி நரி உள்ளே புகுந்தது குறித்து விசாரிக்க விமான நிலைய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

[…]

பூஞ்சை
உலகம்

மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பூஞ்சை கண்டறியப்பட்டது

ஆஸ்திரேலியாவில் உள்ள மழைக்காடுகளில் கொடிய விஷத்தன்மை உள்ள பூஞ்சை கண்டறியப்பட்டுள்ளது.

தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளில் வளரும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த காளானை காட்டிலும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் கண்டறியப்பட்ட ஃபயர் கோரல் பூஞ்சை கொடிய விஷத்தன்மை உள்ளதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விஷத்தன்மை உடைய பூஞ்சையை உட்கொண்டால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கை கால்களில் தோல் உரிதல், மூளை சுருங்குதல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும் என்று அறியப்பட்டுள்ளது. இயற்கையாக ஆஸ்திரேலியாவின் வடக்குபகுதியில் வளர்ந்துள்ள இந்த வகை பூஞ்சைகள் இந்தோனேசியா, பப்புவா உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுவதாகவும் தகவல்கள் பதிவாகியுள்ளன.

[…]

டேனி அர்னால்டு
உலகம்

550 மீட்டர் உயரம் கொண்ட மலையை நாற்பத்தி ஆறே நிமிடங்களில் ஏறி சாதனை

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மலையேறும் வீரரான டேனி அர்னால்டு , 550 மீட்டர் உயரம் கொண்ட கரடு முரடான மலையை நாற்பத்தி ஆறே நிமிடங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

புகழ்பெற்ற இத்தாலிய ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியில் ஏறிய டேனி அர்னால்டு, கயிறு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களின் உதவியும் இல்லாமல் மலையில் விறுவிறுவென ஏறினார்.

மலை ஏறுவதில் சாகசக்காரரான அவர், ஆபத்தான செங்குத்து மலையில், சாதாரண சமதள பாதையில் நடப்பதைபோல நடந்தார். கைகளை லாவகமாக மலையில் ஊன்றி ஊன்றி, முன்னேறிச் சென்ற அவர், 46 நிமிடம் 30 விநாடிகளில் மலையின் உச்சியை அடைந்து சாதனை படைத்தார்.

ஐரோப்பிய வடக்கு மலைப்பகுதிகளில் நான்கு முறை தனியாக ஏறி சாதனை படைத்தவர் என்ற பெருமையையும் டேனி அர்னால்டு பெற்றுள்ளார்.

[…]

 23 முறை திருமணம்
உலகம்

ஒரே மாதத்தில் 23 முறை திருமணம் செய்து விவகாரத்து

சீனாவில் அரசு தரும் வீட்டை பெறுவதற்காக ஒரே மாதத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 23 முறை தங்களுக்குள் மாறி மாறி திருமணம் செய்து விவகாரத்தான செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது. 

கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் மேம்பாட்டுத்திட்டத்துக்காக இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதில் 40 சதுர மீட்டரில் அங்கு வசித்தவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தின் வாசியாக பதிவு செய்யப்பட்ட ஷி, அரசு தரும் புதிய வீட்டை பெற திருமண ஆவணங்கள் தேவைப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் தனது முன்னாள் கணவர் பானை மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.

ஆறு நாட்களுக்கு பின்பு வீட்டுக்கான ஒப்புதல் கிடைத்ததும் தம்பதி மீண்டும் விவகாரத்து பெற்றனர். இதோடு பான் நிறுத்திவிடாமல் 15 நாட்களுக்குள் தனது மைத்துனியையும் அவரது சகோதரியையும் அடுத்தடுத்து திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார்.

மேலும் வீடு பெறுவதற்காக ஷி தனது மற்றொரு முன்னாள் கணவரையும் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதேபோல் உறவினர்கள், அண்ணன், தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர், 23 முறை திருமணம் செய்து விவகாரத்து பெற்றுள்ளனர். இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

[…]

பிரதமர் மோடி
உலகம்

ஹூஸ்டன் என்ஆர்ஜி அரங்கில் பிரதமர் மோடி சொற்பொழிவு: சர்வதேச வல்லுநர்கள் பாராட்டு

ஹூஸ்டன் என்ஆர்ஜி அரங்கில் திரண்டிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, அதிபர் டிரம்புக்கும் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினருக்கும், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும், இந்திய மக்களுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒட்டு மொத்த  உலகிற்குமே பிரதமர் மோடி  உரையாற்றினார் என்பதுதான் அவரது ஹூஸ்டன் உரையின் தனிச்சிறப்பு என வல்லுநர்கள் பாராட்டுகின்றனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுவது புதிதல்ல என்றபோதிலும், ஹூஸ்டன் உரை நிகழ்த்தப்பட்ட காலகட்டம் என்பது மிக முக்கியமானது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ள அதேநேரம், அதை சர்வதேச பிரச்சனையாக்க முயற்சி செய்யும் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்தாக வேண்டும், அமெரிக்காவின் நம்பிக்கையை வென்றாக வேண்டும் என்ற நிலையில் இந்த உரை நிகழ்த்தப்பட்டுள்ளது.

வர்த்தக விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே உரசல்கள் எழுந்துள்ள நேரத்திலும், காஷ்மீர் விவகாரத்தில் மேற்கத்திய ஊடகங்களில் தவறான சித்தரிப்புகள் எழும் நேரத்திலும், உலக அளவிலும் இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள் நிலவும் நேரத்திலும் இந்த உரையை பிரதமர் ஆற்றியுள்ளார். அதுமட்டுமல்ல, 50 ஆயிரம் பேர் திரண்ட கூட்டத்தில் இந்தியப் பிரதமருடன், அமெரிக்க அதிபரும் பங்கேற்றார் என்பது, இதுவரை இல்லாத ஒரு வரலாறு என்பது ஹூஸ்டன் உரையின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலையீடு, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற முயற்சி என பாகிஸ்தான் கடும் முயற்சிகளை மேற்கொள்ளும் இந்த நேரத்தில், அமெரிக்காவுடனான சுமூக உறவு என்பது மிகவும் அவசியமாகும். ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை காட்டி, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என பாகிஸ்தான் கருதும் வேளையில், அந்த முயற்சிகளை தடுத்தாக வேண்டும்.

இதை மனதில் கொண்டும், டிரம்பின் தற்பெருமிதம் மிக்க ஆளுமை ஒருபுறம் இருந்தபோதிலும், அடுத்த அதிபர் தேர்தலில் வென்றாக வேண்டும் என்ற அவரது கணக்கீடுகளையும் மனதில் கொண்டே மோடியின் பேச்சு இருந்தது என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டிரம்பின் தலைமை, அமெரிக்க பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் அவரது முயற்சிகள், ஒப்பந்தங்களுக்கு இணங்கச் செய்யும் திறமை, அமெரிக்காவின் வளர்ச்சிக்கு அவர் உறுதிபூண்டிருப்பது என்ற அம்சங்களை குறிப்பிட்டு மோடி பாராட்டியதும் அதனால்தான். சுருக்கமாக சொன்னால் டிரம்பை இந்தியாவின் வசப்படுத்தும்  முயற்சியில் மோடி வெற்றி பெற்றுள்ளார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தீவிரவாதத்திற்கு எதிரான போரை மையப்படுத்தி பாகிஸ்தானை தனிமைப்படுத்துவது, ஜனநாயகம், கலாச்சார பன்முகத்தன்மையின் அடிப்படையில் இந்தியா தொடர்ந்து கட்டியெழுப்பப்படும் என்பதை உறுதிப்படுத்துவது, இதுவே இரு நாடுகளையும் பிணைக்கும் அம்சம் என்பதை அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினருக்கும் உணர்த்துவது, பொருளாதார சீர்திருத்தங்களிலும் நவீனமயமாக்கத்திலும் இந்தியா உறுதியாக இருப்பதை உலக தொழில்-வர்த்தக சமூகத்தினருக்கு உணர்த்துவது ஆகியவற்றை இலக்குகளாக கொண்டு மோடியின் ஹூஸ்டன் உரை அமைந்திருந்தது.

இதேபோல அமெரிக்க வாழ் இந்தியர்களையும் இலக்காக கொண்டு அமைந்திருந்த மோடியின் உரை அவர்களது முக்கியத்துவத்தை உணர்த்தியிருப்பதோடு, அமெரிக்காவில் செல்வாக்குமிக்க சமூகமாக அவர்கள் தங்களை அடையாளம் காணவும் உதவியிருக்கிறது. அந்த வகையில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கும் மோடி உத்வேகம் அளித்திருக்கிறார். இறுதியாக, ஹூஸ்டன் சொற்பொழிவு மூலம் இந்திய மக்களுக்கும் மோடி உரையாற்றியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஒரே மேடையில் தோன்றி, உலக அரங்கில் இந்தியா தனக்குரிய முக்கியத்துவத்துவம் பெற்று முத்திரை பதித்திருப்பதை   இந்திய மக்களுக்கு அவர் உணர்த்தியிருக்கிறார். ஹூஸ்டன் உரைமூலம் ராஜதந்திர வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் மோடி என்பதே சர்வதேச பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. 

[…]

சந்திரயான் 2 நிகழ்வுகளை ஆர்வத்துடன் பின்தொடர்ந்த பாக்., மக்கள்
உலகம்

சந்திரயான் 2 நிகழ்வுகளை இந்தியாவைப் போலவே ஆர்வத்துடன் பின்தொடர்ந்த பாக்., மக்கள்..!

சந்திரயான் 2 நிலவில் விக்ரம் லேண்டரைத் தரையிறக்கியபோது, இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் ஆர்வத்தோடு அதன் நிலை குறித்து கூகுளில் தேடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 6-ம் தேதி முதல் 7-ம் தேதிக்குள் கூகுள் டிரெண்ட்ஸில் சந்திரயான் 2, விக்ரம் லேண்டர் ஆன் மூன் உள்ளிட்ட வார்த்தைகள் தேடப்பட்டது குறித்து இந்தியா, பாகிஸ்தான் ,இடையே கூகுள் டிரெண்ட்ஸ்-ல் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.

அப்போது, இந்தியர்களைப் போலவே, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்களும் அந்த சொற்களை மொபைலில் உள்ள கூகுள் தேடுபொறியில் பதிவிட்டு தேடியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிலும், அனைவரும் நன்கு உறங்கக் கூடிய நள்ளிரவு இரண்டரை மணிக்கே அதிகம் பேர் அந்த சொற்களைத் தேடியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு அதன் பின் நிகழ்வுகளை கூகுளில் தேடுவது இந்தியாவில் குறைந்துவிட்ட பின்பும், பாகிஸ்தானில் அதே ஆர்வம் தொடர்ந்ததாக கூகுள் தரவு தெரிவிக்கிறது.

இந்திய ஊடகங்கள் வாயிலாக மக்கள் தொடர்ந்து தகவல்களைத் தெரிந்துகொண்டே இருந்ததால், கூகுளில் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை என்றும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

[…]

பெட்ரோலியப் பொருட்களின் விலை எகிறும் என அமெரிக்கா கவலை
உலகம்

எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் - பெட்ரோலியப் பொருட்களின் விலை எகிறும் என அமெரிக்கா கவலை

சவூதி அரேபியாவின் எண்ணெய் கிடங்குகள் மீது வான் தாக்குதல் தொடுக்கப்பட்டதையடுத்து பெட்ரோலியப் பொருட்கள் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அவசியமானால் அவசர காலத்திற்காக கையிருப்பில் உள்ள பெட்ரோலியப் பொருட்களை சந்தைக்கு அனுப்பி சந்தைகளில் விநியோகம் பாதிக்கப்படாதிருக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்த ட்விட்டர் பதிவில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட உள்ள பைப் லைன் பெட்ரோல் விநியோகத்தை அங்கீகரிக்கவும் தமது அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சவூதியில் அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலமாக  வான் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு கிடங்கில் பயங்கர தீப் பற்றியது. இதனால் 5 புள்ளி 7 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

[…]

 ராட்சத விண்கல்
உலகம்

நாளை பூமியைக் கடந்து செல்கிறது புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் அளவைக் கொண்ட ராட்சத விண்கல்

850 அடி நீளமுடைய ராட்சத விண்கல் பூமியை கடந்து சென்று விட்ட நிலையில், புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் அளவைக் கொண்ட மற்றொரு விண்கல் நாளை கடந்து செல்கிறது.

2000 QW7 மற்றும் 2010 CO1 எனப் பெயரிடப்பட்ட இரு விண்கற்களை நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்து அவற்றைத் தொடர்ந்து கண்காணித்தது. அவற்றில், 2010 C01 விண்கல்லானது, 400 முதல் 850 அடி நீளம் கொண்டது என்றும்,  மற்றொரு விண்கல், உலகிலேயே மிக  உயரமான கட்டிடமான பூர்ஜ் கலிபாவுக்கு இணையானது  எனவும் கணிக்கப்பட்டது. 

அந்த விண்கல்லின் நீளம் 950 முதல் 2100 அடி வரை இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டது. பூமிக்கு அருகே உலவும் விண் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில், இந்த இரு விண்கற்களும் சிக்கின.

இரு விண்கற்களும், பூமியில் இருந்து 56 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லும் என்று நாசா கூறி இருந்தது. அதன்படி, 2010 C01 விண்கல்லானது. சனிக்கிழமை காலை 9.12 மணி அளவில் பூமியைக் கடந்து சென்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புர்ஜ் கலிஃபா கட்டிடத்தைப் போன்ற விண்கல்லானது நாளை அதிகாலை 5.24 மணி அளவில் பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று நாசா விளக்கம் அளித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 20,000 விண்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

[…]

இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து
உலகம்

இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (8 ஆம் தேதி) தனது சுற்றுப் பயணத்தை துவங்கிய அவர் ஐஸ்லாந்தில் இருதரப்பு ஒப்பந்தங்களை நிறைவேற்றிய பிறகு நேற்று  சுவிட்ஸர்லாந்து சென்றார்.

அவரை சுவிட்சர்லாந்து ஜனாதிபதி உவேலி மௌரர் வரவேற்றார். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ராம் நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன: 1. பருவநிலை மாற்றம் குறித்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு  2. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டணி அமைப்பது  3.லாசேன் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழிக்கான அமர்வை புதுப்பித்தல்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்துவது என்று இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்தனர். மேலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதத்தை ஒழிக்க தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ராம் நாத கோவிந்த் தனது சுற்றுப்பயணத்தின் இறுதியாக நாளை ஸ்லோவேனியாவிற்கு செல்கிறார்.  செப்டம்பர் 17 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு இந்தியா திரும்புகிறார்.

[…]

ஒரு கப் சூடான காபியால் அவசரமாக தரையிறங்கிய விமானம்
உலகம்

ஒரு கப் சூடான காபியால் அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஒரு கப் சூடான காபியால் 326 பேர் பயணித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவத்தில் 10 ஆயிரம் யூரோ முதல் 80 ஆயிரம் யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியின் பிராங்க்பர்டில் இருந்து மெக்சிகோவின் கேன்கன் நகருக்கு ஏர்பஸ் ஏ330 ரக விமானம் புறப்பட்டது அட்லான்டிக் கடலின் மேற்பரப்பில் பறந்துகொண்டிருந்த போது, விமானி அறையில் டிரேயில் வைக்கப்பட்ட காபி சிந்தியது.

அதை சாதாரணமாக முதலில் நினைத்த நினையில் விமானத்தைக் கட்டுப்படுத்தும் பேனல் பகுதியில் விழுந்ததால் ஆடியோ செயலிழந்தது. அத்துடன், மின்சாதனப் பொருட்கள் கருகும் வாடையும் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பைலட் உடனடியாக விமானத்தை அயர்லாந்துக்குத் திருப்பி தரையிறக்கினார். 326 பேரும் பத்திரமாக தரையிறங்கினர்.

ஏர்பஸ் விமானங்களில் காபி வைப்பதற்கென தனி பிடிப்பான் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை மூடியும் வைக்காமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட 49 வயதான விமானக் கேப்டன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரியில் நடந்த இச்சம்பவம் குறித்து விமான விபத்துப் புலனாய்வு பிரிவு விசாரணையை நடத்தி வரும் நிலையில், உள்நாட்டு வான்போக்குவரத்து சட்டப்படி 10 ஆயிரம் முதல் 80 ஆயிரம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

[…]

பூமி 2.0
உலகம்

புதிய கோள் கண்டுபிடிப்பு - பூமி 2.0?

சூரியக் குடும்பத்திற்கு அப்பால், பூமியைப் போன்றதொரு கோளின்  வளிமண்டலத்தில் நீராவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள ஒரு கோளில், உயிர் வாழ்வுக்கு அடிப்படையான நீர், திரவ வடிவில் இருப்பது, விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

சூரிய குடும்பத்திற்கு வெளியே இதுவரை 4 ஆயிரத்து 109 கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான கோள்களில் வளிமண்டலம் இருந்தாலும், அவை அடிப்படையில் வாயு உருண்டைகளாக உள்ளன.

பல கோள்களில் பாறைகளுடன் கூடிய நிலத்தரை இருந்தாலும், அவற்றில் வளிமண்டலம் இல்லை. இந்த இரு அம்சங்களுடன் புவியைப் போன்ற கோள்கள் கண்டறியப்பட்டாலும், அவற்றிலும் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான சாத்தியங்கள் இருந்ததில்லை. மிகக் கடுங்குளிர் அல்லது மிகக் கடுமையான வெப்பம் என்ற இந்த இரு சூழ்நிலைகளிலும் கோள்களில் திரவ வடிவில் நீர் இருக்க முடியாது.

இந்நிலையில், பூமியைப் போல 8 மடங்கு நிறையும், இரு மடங்கு பெரியதுமான K2-18b என்ற கோள் விஞ்ஞானிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது சூரிய மண்டலத்தில் இருந்து 110 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள, நட்சத்திரத்தை K2-18b சுற்றி வருகிறது.  இந்த K2-18b கோள், பூமியோடு ஒப்பிடத்தக்க வகையில் உள்ளது. மிக முக்கியமாக, பூமியைப் போலவே, அதன் நட்சத்திரத்திலிருந்து மிக அதிக தொலைவிலோ அல்லது மிகக் குறைந்த தொலைவிலோ இல்லாமல், திரவ வடிவில் நீரை தக்க வைத்துக் கொள்வதற்கான தொலைவில், K2-18b சுற்றி வருகிறது.

அதுமட்டுமின்றி, இந்த கோளின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திரவ வடிவில் நீர் இருந்தால் மட்டுமே, வளிமண்டலத்தில் நீராவி கலந்திருக்கும். அந்த வகையில், உயிர் வாழ்வதற்கு சாத்தியமான, பூமியைப் போன்ற தட்பவெப்ப நிலையுடன் கூடிய ஒரு கோளின் வளிமண்டலத்தில் முதல் முறையாக நீராவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரிய மண்டலத்திற்கு வெளியே உயிர் வாழ்க்கை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்கு மிகப்பொருத்தமான கோள் இதுதான் என்று, Nature Astronomy என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான Giovanna Tinetti தெரிவித்துள்ளார்.

இந்தக் கோளைஹப்பிள் வானியல் தொலைநோக்கியின் நிறமாலைமானி மூலம் ஆராய்ந்து, நீராவி இருப்பதை மிகவும் துல்லியமாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  இதேபோல, K2-18b கோளில் ஹைட்ரஜன், ஹீலியம் இருப்பதற்கான சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

நைட்ரஜன், மீத்தேன் போன்றவையும் இருக்கலாம் என்றாலும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. வளிமண்டலத்தில் மேகங்கள் எந்த அளவுக்கு உள்ளன மற்றும் நீரின் அளவு போன்ற விவரங்கள் குறித்து தொடர் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட உள்ளது.

உயிர் வாழ்க்கை என்பது நீரை அடிப்படையாக் கொண்டது என்பதால், பிராணவாயு எனக் குறிப்பிடப்படும் ஆக்சிஜனை கொண்டிருக்கும் நீரை அடிப்படையாக வைத்தே, வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை தேட முடியும் என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

[…]

பிலிப்பைன்ஸ் நாட்டில் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் ஒரு கிலோ அரிசி இலவசம்
உலகம்

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் ஒரு கிலோ அரிசி இலவசம்

பிலிப்பைன்ஸ் நாட்டில், பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கொடுக்கும் மக்களுக்கு, அந்நாட்டு அரசு இலவச அரிசி வழங்கி வருகிறது.

உலகளவில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, எளிதில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேகரமாகின்றன. இதனை உண்ணும் கடல்சார் உயிரினங்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின்றன. கடந்த 2015ம் ஆண்டு,கடல் சார்ந்த சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அதிக பிளாஸ்டிக் வெளியேற்றும் நாடுகளின் வரிசையில் பிலிப்பைன்ஸும் முன்னணி வகிப்பதாக குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான முயற்சி மட்டுமல்லாது அதனை மறுசுழற்சி செய்யும் பணியிலும் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் அந்நாட்டின் தலைநகர் மணிலா அருகிலுள்ள பேயனான் கிராமத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்காக திட்டம் ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது.

ஒரு கிலோ அரிசியை சுமார் 50 ரூபாய் கொடுத்து வாங்க சிரமப்படும் இந்த மக்கள், பயன்பெறும் விதமாக பிளாஸ்டிக் குப்பைகளுக்கு பதில் அரசு அரிசி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இரண்டு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அரசிடம் ஒப்படைத்தால் , மக்களுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

இதனை வாங்கி அன்றாட பிழைப்பை நடத்த அந்த கிராம மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். மக்களிடம் இருந்து சேகரிக்கும் இந்த குப்பைகளை அரசு தானாக மறுசுழற்சியும் செய்துகொள்கிறது.

[…]

 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
உலகம்

சீன இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி, 2 வாரம் தள்ளிவைப்பதாக டிரம்ப் அறிவிப்பு

சீன இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை, 2 வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போரால் இரு நாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு போட்டி போட்டு வரிகளை விதித்து வருகின்றன. இதனால் உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக வரி அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் சீனாவில் 70வது தேசிய தினம் அக்டோபர் ஒன்றாம் தேதி கொண்டாட இருப்பதால், கூடுதல் வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று சீனாவின் துணை பிரதமர் லியுஜி அமெரிக்காவுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

அதனை ஏற்று நல்ணெண்ண நடவடிக்கையாக கூடுதல் வரி விதிப்பு அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப் பதில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா - சீனா நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாத மத்தியில் வாஷிங்டனில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[…]

தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
உலகம்

துபாயில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தம்: தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு - 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

துபாய்,

தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். இங்கிலாந்து, அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அவர் நேற்று முன்தினம் இரவு துபாய் வந்தடைந்தார். இதன் மூலம் துபாய் நகருக்கு வருகை தரும் முதல் தமிழக முதல்-அமைச்சர் என்ற பெருமையை எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார்.

பாயில் உள்ள தாஜ் ஓட்டலில் நேற்று மதியம் வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

அவருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் க.சண்முகம், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், வர்த்தக தலைவர்கள் பேரவையின் தலைவர் பாராஸ் ஷதபுரி, பொதுச் செயலாளர் ஸ்ரீபிரியா, முதலீடுகள் பிரிவின் தலைவர் சுதேஷ் அகர்வால், இந்திய துணைத்தூதர் விபுல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஸ்ரீபிரியா தமிழில் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “அமீரகம்-இந்தியா இடையே எப்போதும் சிறப்பான உறவு இருந்து வருகிறது. 2 வார வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் நிறைவாக அமீரகத்திற்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், உணவு தயாரிப்பு, ஏர்கிராப்ட் எம்.ஆர்.ஓ. தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னோடியாக விளங்குகிறது. குறிப்பாக வாகன உதிரிபாக உற்பத்தியில் இந்திய அளவில் 35 சதவீதம் தமிழ்நாட்டில்தான் தயாரிக்கப்படுகிறது. மருத்துவ சுற்றுலாவில் தமிழகம் உலகளவில் சிறந்து விளங்குகிறது. அமீரகத்தில் உள்ள வர்த்தகர்களை தமிழ்நாட்டிற்கு முதலீடு செய்ய அன்புடன் அழைக்கிறேன்” என்றார்.

வர்த்தக தலைவர்கள் பேரவையின் முதலீடுகள் பிரிவு தலைவர் சுதேஷ் அகர்வால் அமீரகம்-இந்தியா இடையே செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து கூறியதாவது:-

அமீரகம்-தமிழகம் இடையே முதலீடு தொடர்பாக மொத்தம் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தை பல்வேறு நிறுவனங்கள் செய்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.4,200 கோடி. இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

துபாய் துறைமுக குழுமம் சார்பில் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மட்டும் தமிழ்நாட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். துபாய் துறைமுக குழுமம் (சேமிப்பு கிடங்குகள் அமைக்கும் திட்டம்), ஐ-டெக் நிறுவனம் (பல்நோக்கு வர்த்தக ஏற்றுமதி திட்டம்), ஜெயன்ட் நிறுவனம் (பயோ டீசல் திட்டம்), முல்க் ஹோல்டிங்ஸ் (புதிய தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டம்), புரோ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் (விவசாய பொருட்கள் உற்பத்தி திட்டம்), பிரைம் மெடிக்கல் (மருத்துவ சுற்றுலா), எம் ஆட்டோ (மின்சார வாகன தயாரிப்பு) ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடுகளில் இருந்து இதுவரை மொத்தம் ரூ.9,280 கோடி மதிப்பில் தமிழகத்தில் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.

[…]

ஆப்கானிஸ்தானில் அரசு படைகள் தாக்குதல்
உலகம்

ஆப்கானிஸ்தானில் அரசு படைகள் தாக்குதல்; தலீபான் ஆளுநர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன.  இதனால் அந்த நாட்டில் பாதுகாப்பு நிலைத்தன்மையற்ற சூழ்நிலை உள்ளது.  கடந்த 2015ம் ஆண்டில் இருந்து அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்நாட்டு ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியொன்றில், பதக்ஷான் பகுதியின் ஆளுநராக உள்ள கியாரி பசிஹுதீன் என்பவர் வார்தஜ் மாவட்டத்தில் நடந்த அரசின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார் என தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலில் பசிஹுதீனின் காவலர்களில் ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது.  எனினும் ராணுவ அமைச்சக அறிக்கையை தலீபான் அமைப்பு மறுத்துள்ளது.

[…]

உலகின் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ்
உலகம்

உலகின் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் சிக்காகோவில் திறக்கப்படுகிறது

உலகின் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் சிற்றுண்டியகம் சிக்காக்கோவில் திறக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் டோக்யோவில்தான் தற்போது மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் சிற்றுண்டியகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் 15-ம் தேதி 43 ஆயிரம் சதுரடியில் 4 தளங்கள் கொண்ட ஸ்டார்பக்ஸ் சிற்றுண்டியகத்தை திறக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதிய தளமாக இது இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஸ்டார்பக்ஸ், இங்கு சிறப்பான காஃபி, டீக்களை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. வளாகத்திலேயே காஃபிக் கொட்டைகளை வறுக்கும் ரோஸ்டரிக்களும், அதன் சேமிப்பகங்களும் இருக்கும் என்றும், பார், கிரேஃப்ட் காக்டெயிலுடன், வழக்கத்தை விட வித்தியாசமாக பல ஆடம்பர உணவுப் பண்டங்கள் இங்கு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

சிக்காகோவில் காஃபிக்கான மிக உணர்வுப் பூர்மான சூழலை உருவாக்கித் தருவதாக ஏற்கெனவே 2017-ல் அறிவித்த நிலையில், கலைநயமிக்க கட்டிட வடிவமைப்பு மூலம் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் மத்தியில் மகிழ்ச்சியோடு செல்வதற்கு உகந்த  3-வது இடமாக இது இருக்கும் என கூறியிருந்தது. 

[…]

ஸ்பைடர்மேனை போல செயல்திறன் கொண்ட புதிய டிரோன்கள்
உலகம்

ஸ்பைடர்மேனை போன்று செயல்திறன் கொண்ட டிரோன்கள்

ஸ்பைடர்மேனை போல செயல்திறன் கொண்ட புதிய டிரோன்களை சீனா உருவாக்கி உள்ளது.

உலகளவில் குறைந்த செலவில், சிறிய டிரோன்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் சீனா தலைசிறந்து விளங்குகிறது. இந்நிலையில் சீனாவின் ஏரோஸ்பேஸ் அறிவியல் மற்றும் தொழில் நிறுவனம் புதிய டிரோன்களை உருவாக்கி உள்ளது. இவை எதிரி நாட்டு டிரோன்களை குறிவைத்து, அதன் மீது 16 மீட்டர் அளவிலான வலையை வீசி அதனை பிடிக்கும் என்று சீனா தெரிவித்துள்ளார். டிரோன்கள் மீது வலையை வீசிவதால், அவை செயல் இழந்து தரையில் விழுந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிரோன்கள் சீனாவின் பாதுகாப்பு துறையுடன் இணைந்து சிறிய, வேகம் குறைந்த மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் எதிரி நாட்டு டிரோன்கள் மற்றும் சிறிய விமானங்களையும் குறிவைத்து பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 கோணங்கள் கொண்ட இந்த டிரோன்கள் கண்காணிப்பு மற்றும் உளவு பணிக்கும் பயன்படும் என சீனாவின் ராணுவ இணையதளம் தெரிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானங்களை எதிர்கொள்ள கூடிய வகையில் எல்ஜே- ஐ ((LJ-I)) டிரோனை சீனா அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

[…]

ஹாங்காங் போராட்டங்கள்
உலகம்

மக்களின் போராட்டத்திற்கு பணிந்தது ஹாங்காங் அரசு

ஹாங்காங்கில் வரலாறு காணாத போராட்டங்களுக்கு காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய மசோதா ரத்து செய்யப்படும் என்று அந்நாட்டின் நிர்வாகத் தலைவர் கேரிலாம் அறிவித்துள்ளார்.

குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்திச் சென்று விசாரணை நடத்த வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு காணப்பட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் அங்கு பெரும் வன்முறைகள் தலைவிரித்தாடின. போராட்டங்கள் வெடித்தன. அதனைத் தொடர்ந்து அந்த மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஹாங்காங் நிர்வாகம் அறிவித்தது. ஆயினும் மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டங்கள் நீடித்து வந்தன.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அமைதியற்ற சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய மசோதாவை முழுமையாக ரத்து செய்ய இருப்பதாக ஹாங்காக் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார். சீன அரசு நிர்வாகிகள், ஹாங்காங் எம்பிக்களுடன் ஆலோசித்த பிறகு இதனை அவர் அறிவித்தார். இதனால் விரைவில் அதிகாரப்பூர்வமான அரசு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[…]

ஸ்பெயின்
உலகம்

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து புலம்பெயர முயற்சி

ஸ்பெயினில் ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து சட்டவிரோதமாக வேலி ஏறிக் குதித்து புலம்பெயர முயன்ற 150 பேரை போலீசார் விரட்டியடித்தனர்.

வட ஆப்பிரிக்க நாடான மொராக்காவில் இருந்து ஸ்பெயினின் ஆதிக்கத்துக்குட்பட்ட சியூடா மற்றும் மெலில்லாவுக்கு நல்வாழ்வு தேடி புலம்பெயர்வோர் எண்ணிக்கை சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஸ்பெயின் ஆதிக்கப்பகுதிக்குள் நுழைந்த 118 பேரில் பெரும்பாலானோர் மொராக்கோவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 2 தினங்களுக்கு முன் மொராக்கோ - ஸ்பெயின் இடையேயான அல்போரன் கடல் வழியே ஊடுருவ முயன்ற 200 பேர் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், மொராக்கோவில் இருந்து 200 பேர் நேற்று ரேசர் வயர் கொண்ட ஆபத்தான 20 அடி உயர வேலியை ஏறிக் குதித்து வர முயன்ற நிலையில், 155 பேர் ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்ததை அடுத்து அம்மண்ணை முத்தமிட்டு, ஆடிப்பாடிக் கொண்டாடிக் களித்தனர்.

பின் ஸ்பெயின் எல்லைக் காவல் பணியில் இருந்த போலீசார் வந்து அவர்களை தடுக்க முயன்றபோது அவர்கள் தாக்கியதில் 6 போலீசார் காயமடைந்தனர்.

பதில் தாக்குதலில் புலம்பெயர்ந்தவர்களும் காயமடைந்ததை அடுத்து, அவர்கள் மீது தண்ணீரைத் தெளித்து காயங்கள் குணமடைய உதவினர். சாலையில் படுத்துக் கொண்ட நகர மறுத்த அவர்களை ஸ்பெயின் போலீசார் விரட்டியடித்தனர்.

[…]

பெண் குழந்தை
உலகம்

1 வயது பெண் குழந்தையை எட்டி உதைத்த கொடூரன்

ஒரு வயது பெண் குழந்தையை காலால் எட்டி உதைத்துச் செல்லும் கொடூரனை சீன போலீசார் தேடி வருகின்றனர்.

57 வயதான பாட்டி தன் ஒரு வயது பேத்தியை அழைத்துக் கொண்டு ஷென்ஸென் மாகாணத்தில் உள்ள ஸிங்செங் ஷாப்பிங் மாலில் கடந்த புதன் கிழமை வந்திருந்தார்.

குழந்தை தூண் ஒன்றின் அருகே உலவிக் கொண்டிருந்த நிலையில் பாட்டி அவரைக் கண்காணித்து வந்தார். அப்போது திடீரென அவ்வழியே சென்ற கொடூரன் ஒருவன், ஒரு வினாடி நின்று குழந்தையை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிச் சென்றான்.

பாட்டி ஓடிச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவனை எச்சரித்த நிலையில், அவன் மிரட்டல் விடுத்துச் சென்றதாக பெற்றோர் புகார் அளித்தனர்.

இதில் குழந்தை லேசான காயமடைந்தது. சந்தேகத்துக்கு இடமான அவனை அடையாளம் கண்டுள்ளதாகவும் விரைவில் கைது செய்வதாகவும் ஷென்ஸென் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

[…]

அமேசான் காடு
உலகம்

அமேசான் காட்டுத்தீயை கட்டுப்படுத்த அமெரிக்காவின் உதவியை நாடி உள்ள பிரேசில்

அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த அமெரிக்காவின் உதவியை பிரேசில் நாடி உள்ளது. உலகிலேயே பெரிய மழைக்காடான அமேசானில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவி செய்ய தயாராக இருப்பதாக ஜி7 அமைப்பின் உறுப்பு நாடுகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அந்த உதவியை பிரேசில் அதிபர் ஜெயர் போல்சோனரோ ஏற்றுக்கொள்ளவில்லை.

தற்போது அமேசானில் காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு துறையினருடம் இணைந்து பிரேசில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த 29ஆம் தேதி மட்டுமே அமேசானில் ஆயிரத்து 255 காட்டுத்தீ பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த 17ஆம் தேதி முதல் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச காட்டுத்தீ எண்ணிக்கை இது தான் என்றும், பிரேசில் விண்வெளி ஆராய்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் உதவியை பிரேசில் நாடி உள்ளது.  இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரேசில் அதிபரின் மகன் எடுவார்டோ போல்சோனரோ மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எர்னெஸ்டோ அரவ்ஜோ ஆகியோர் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு பேசிய Eduardo Bolsonaro, தான் பிரேசில் சென்றதும் தனது தந்தையுடன் ஆலோசனை நடத்திய பின், டிரம்ப் உடன் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்தும், எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறினார். இந்த சந்திப்பின் போது, காட்டுத்தீ மட்டும் இன்றி வர்த்தகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

[…]

எலன் மஸ்க்
உலகம்

தொழில்நுட்பப் பணியாளர்களுக்காண பணி எது?- எலன் மஸ்க் கணிப்பு

எதிர்காலத்தில் தொழில்நுட்ப பணியாளர்களுக்கென மிஞ்சும் ஒரே பணி என்னவாக இருக்கும் என டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி எலன் மஸ்க் தன் கணிப்பை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான மாநாட்டில் டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அனைத்து விதமான தொழில்நுட்பப் பணிகலும் ஆர்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வசம் சென்றுவிடும் என்றார்.

மனிதர்களைத் தொடர்புப் படுத்தி செய்யப்படும் ஒரே தொழில்நுட்பப் பணி செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துக்கான மென்பொருள் தயாரிக்கும் பணி தான் என அவர் கூறியுள்ளார். அதுவும் சில காலம் தான் என்ற அவர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமே அதை தயாரித்துக் கொள்ளும் அளவு தொழில்நுட்பம் விரைவில் வளர்ந்துவிடும் என்றார்.

மனிதர்களோடு மனிதர்கள் பேசிக் கொள்வது மனிதர்களுக்கு பிடித்தமான செயல் என்பதால் அவர்கள் ஏன், பொறியியல் இயற்பியல் உள்ளிட்டவற்றைப் படிக்கிறார்கள்? என தாம் நினைத்ததுண்டு எனவும் கூறினார்.

தன்னை ஊமையாக நினைத்துக் கொள்ளும் மனிதர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் என எலன் மஸ்க் குறிப்பிட்டார். அதே மாநாட்டில் பங்கேற்ற அலிபாபா குழும துணை நிறுவனர் ஜேக் மா, மனிதர்களை இயந்திரம் கட்டுப்படுத்தும் என ஒரு போதும் தான் நினைத்ததில்லை என்று எலன் மஸ்கின் கருத்துக்கு எதிரானதொரு கருத்தை முன்வைத்தார். 

[…]

செயற்கைக்கோள்
உலகம்

ஈரானின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி

ஈரானின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிவடைந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தொடர்பில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதனிடையே ஈரானின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்த ஏவுதளத்தின் புகைப்படத்தை, அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை செயற்கைக்கோளை ஏவும் ஈரானின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. ஈரானின் வடபகுதியில் அமைந்துள்ள இமாம் கொமேனி விண்வெளி மையத்தில், செயற்கைக்கோளுடன் ஏவ முயன்றபோது, ஏவுதளத்திலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது.

இதன் மூலம் இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக, ராக்கெட்டை ஏவும் ஈரானின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதுதொடர்பாக, செயற்கைக்கோளில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வெளியானது.

இந்நிலையில், ஈரானின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்த ஏவுதளத்தின் புகைப்படத்தை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சஃபீர் எஸ்எல்வி ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட தயாரிப்புகளின்போது நிகழ்ந்த, பெரும் சேதத்தை ஏற்படுத்திய விபத்திற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஏவுதளத்தில் என்ன தவறு நடந்தது என்பதை ஈரான் கண்டுபிடிக்க வாழ்த்துகள் எனவும் ட்விட்டர் பதிவில் டிரம்ப் கூறியுள்ளார். இதனிடையே, டிரம்ப் வெளியிட்டுள்ள புகைப்படம் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஈரான் வான்பரப்பில் அமெரிக்கா அத்துமீறி உளவு பார்ப்பதை இந்த புகைப்படம் வெளிப்படுத்தியிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

டிரம்ப் பகிர்ந்த புகைப்படம் மிகவும் ரகசிய ஆவணங்களின் ஒருபகுதியாக இருக்கக் கூடும் என்றும், உளவுத்துறையினர் அவரிடம் காட்டியபோது செல்போன் மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கேமரா ஃபிளாஷ் வெளிச்சமும், ஒரு ஆளின் நிழலும் பதிவாகியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

டிரம்பின் ட்விட்டர் பதிவு, அவர் வெளியிட்ட புகைப்படம், அது விமானம் அல்லது ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டதா, செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படும் ரகசிய ஆவண பாதுகாப்பு அறையில் வைத்து காட்டப்பட்ட புகைப்படமா என்ற கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை பதிலளிக்க மறுத்துவிட்டது.

ஈரானுக்கு நேரடி செய்தியுடன், இந்த புகைப்படத்தை டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்டது ஏன், அந்த புகைப்படம் அவரே எடுத்ததா என்ற கேள்விகளுக்கும் வெள்ளை மாளிகை பதிலளிக்க மறுத்துவிட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், புகைப்படம் இருந்ததால் வெளியிட்டதாகவும், அதற்கு தனக்கு முழு உரிமை இருப்பதாகவும் தெரிவித்தார். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா எப்படி உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பது வெளிப்பட்டு விடலாம் என்பதால், உளவுத்துறையின் நடவடிக்கைகளையோ, உளவுத்துறை திரட்டும் விவரங்களையோ அந்நாடு மிகவும் அரிதாகவே வெளியிடும்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் வெளியிட்ட புகைப்படம், அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிடுவதாக அமைந்துவிடலாம் எனவும் அந்நாட்டில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், ஒரு ரகசிய ஆவணத்தை பகிரங்கப்படுத்தும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு உண்டு என்றும், பொதுவாக உளவுத்துறையினருடன் கலந்தாலோசித்த பிறகே, அதிபர் இப்படிப்பட்ட விவரங்களை வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[…]

எய்ட்ஸ் நோயால் பாதிப்பு
உலகம்

பாகிஸ்தானில் ஒரே ஆண்டில் 140 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு

பாகிஸ்தானின் ஷாகாட் ((Shahkot)) நகரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசிடம் சட்ட அமலாக்க நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் ஷாகாட் நகரில் 140 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வசதிகள் மாவட்ட நிர்வாகங்களிடம் இல்லாததே எச்.ஐ.வி. பாதிப்பு மேலும் அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி. பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் கணக்கில் வராத நோயாளிகளும் இருக்கக் கூடும் என்பதால் மாகாண அளவிலான ஆய்வின் கட்டாயத்தை ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிந்து மாகாணத்தில் மட்டும் 600 பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரச்சினையை எதிர்கொள்ள பாகிஸ்தான் அரசு உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை கோரியுள்ளது. பாகிஸ்தானில் 2017-ஆம் ஆண்டில் மட்டும் 20 ஆயிரம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டதாகவும், அந்த நாடு ஆசியாவின் இரண்டாவது அதிக எச்.ஐ.வி. பாதிப்பு நாடாகியுள்ளதாகவும் ஐ.நா. அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

[…]

காகிதப் பூ
உலகம்

அசல் பூ போல காகிதப் பூ வடிவமைக்கும் இந்தியர்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவர், அசல் பூக்களைப் போன்றே காகிதப் பூக்களை வடிவமைத்து அசத்தி வருகிறார்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சவுரப் குப்தா இந்தியாவில் கட்டிடக் கலைப் படித்து, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனில் கல்வி உதவித் தொகை மூலம் பயிற்சியில் சேர்ந்தார். அங்கு அவரது ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில் ஜப்பானைச் சேர்ந்த ஆடைகளுக்கு பூ வடிவமைக்கும் கலைஞரிடம் பயிற்சி பெற்றார் தன் பள்ளிப் பருவத்தில் காகிதம், ஷூ பாலிஷ் மூடி, டயர், வயர் என கிடைத்த பொருட்களிலெல்லாம் கலைப்படைப்பை உருவாக்கி வந்த திறமைக்கு தீனி போடும் விதமாக அமைந்த அந்த பயிற்சி, தற்போது அவரை பிரபல மலரலங்காரக் கலைஞராக மாற்றியுள்ளது.

நியூயார்க்கில் மிகச்சிறிய அபார்ட்மென்டில் தனது ஸ்டூடியோவைத் தொடங்கிய சவுரப் குப்தா, தன் அழகிய, மெய்நிகர் மலர் படைப்புக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பிரபலமானார். அதன் மூலம் ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருகிறது. உணவுப் பொருட்களின் வண்ணம் மற்றும் வாட்டர் கலர் கொண்டு காகிதத்தில் தயாரிக்கும் மலர்கள், காண்போரை பூந்தோட்டத்தில் நிற்பதைப் போல உணரச் செய்கிறது.

[…]

அதிபர் டிரம்ப்
உலகம்

போலந்து பயணத்தை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்..!

டொரியன் புயலால், புளோரிடா மாகாணத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது போலந்து பயணத்தை ரத்து செய்துள்ளார்.

சக்திவாய்ந்த டொரியன் புயல் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது  . இதனையடுத்து புளோரிடாவின் 26 மாவட்டங்களுக்கு அந்த மாகாண ஆளுநர் ரோன் டிசன்டிஸ், புயல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அரசுமுறையாக போலந்து செல்லவிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

டொரியன் மிகவும் சக்திவாய்ந்த புயல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் எச்சரிக்கை ஏற்பாடுகள்  சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கவனிக்க தான் நாட்டிலேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு பதிலாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் போலந்துக்கு செல்லவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது அமெரிக்க தொழிலாளர் தினமான வரும் திங்கள் அன்று கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தீவிரத்தை அளவிடம் சஃபிர்-சிம்சன் அலகு படி இரண்டாவது சக்திவாய்ந்த புயலாக டொரியன் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையை கடக்கும் போது மத்திய புளோரிடாவில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியாவிலும் 12 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

[…]

பாகிஸ்தான் பிரதமர்
உலகம்

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் மின்கட்டண பாக்கி...

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் 41 லட்ச ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்துள்ளதால் மின் இணைப்பை துண்டிக்கபோவதாக அந்நாட்டு மின்சாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் இம்ரான் கானின் செயலகத்துக்கு இஸ்லாமாபாத் மின்சார விநியோக வாரியமான ஐ.இ.எஸ்.சி.ஒ. நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளது. அதில்  பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம், மின்சாரத்துறைக்கு தற்போது வரை 41 லட்சம் ரூபாய் மின்கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும் இது கடந்த மாதம் 31 லட்சமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பாக்கியை செலுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள மின்சாரத்துறை, இந்த நிலை தொடர்ந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் மின்வெட்டு அதிகரித்துள்ளது. இது அந்நாட்டில் மிகப்பெரிய அதிருப்தியாக உருவாகியுள்ளது. பெரும்பாலும் கோடை காலங்களில் அரை நாள் வரை மின்சாரம் இல்லாத நிலை இருந்து வருகிறது

[…]

காஷ்மீர்
உலகம்

காஷ்மீர் தொடர்பான வழக்குகள் 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்..!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றிய உச்சநீதிமன்றம், மத்திய அரசு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு கடந்த 5 ஆம் தேதி நீக்கப்பட்டது. முன்எச்சரிக்கையாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். தகவல் தொடர்பு சேவை முடக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 14 பேர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டது தொடர்பான அனைத்து வழக்குகளும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி, வீட்டு சிறையில் உள்ள கட்சி நிர்வாகியும் முன்னாள் எம்எல்ஏவுமான முகம்மது யூசுப் டரிகாமியை சந்திப்பதற்காக காஷ்மீர் செல்ல அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே நேரத்தில் வேறு ஏதேனும் அரசியல் நடவடிக்கையில் அவர் அங்கு ஈடுபட்டால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். நாட்டின் எந்த பகுதிகளுக்கும் செல்வதற்கு குடிமகனான யெச்சூரிக்கு உரிமை இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இன்டர்நெட் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த உத்தரவிடக் கோரி காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் அனுராதா பாசின் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக 7 நாட்களுக்குள் மத்திய அரசு மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் விளக்கம் அளிப்பதற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அப்போது இந்த விவகாரத்தில் நோட்டீஸ் எதுவும் அனுப்ப தேவையில்லை என்று அட்டார்னி ஜெனரல் கேகே. வேணுகோபால் மற்றும் சொலிசிடர் ஜெனரல் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும் என்றும், எதையும் தாங்கள் மாற்றப் போவது இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

[…]

பிரேசில் - பிரான்ஸ் அதிபர்கள்
உலகம்

பிரேசில் - பிரான்ஸ் அதிபர்களிடையே முற்றும் வார்த்தைப் போர்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் மன்னிப்பு கேட்டால் தான் அமெசான் காடுகளில் பற்றியெரியும் தீயை அணைப்பதற்கான ஜி 7 நாடுகளின் உதவியை ஏற்பது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என்று பிரேசில் அதிபர் ஜாய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) தெரிவித்துள்ளார்.

அமேசான் காட்டுத் தீ தொடர்பான இரு தலைவர்களின் வார்த்தைப் போர் முற்றிவருகிறது. அமேசான் தீ சர்வதேச நெருக்கடி என்றும் அது குறித்து ஜி7 உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்த நிலையில் அது காலனியாதிக்க மனோநிலை என பிரேசில் அதிபர் போல்சொனாரா கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் இருவரின் மோதல் தொடர்பான மீம்சில் மேக்ரானின் மனைவியின் வயது குறித்து கிண்டல் செய்யப்பட்டிருந்த்து. அதற்கு "பிரான்ஸ் அதிபரை விட்டுவிடுங்கள் அவமானப்படுத்த வேண்டாம்" என போல்சொனாரா கிண்டலாக பதில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த மேக்ரான் அதிபர் பதவியின் தகுதியில் இருந்து தரம் தாழ்ந்து போல்சொனாரா நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் அமேசான் தீயை அணைக்க ஜி 7 நாடுகளின் தரப்பில் 22 புள்ளி 2 மில்லியன் டாலர் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. ஆனால் தென்அமெரிக்க நாடுகளை, காலனிகள் அல்லது ஆளில்லாத நிலப்பரப்பு என கருதிக் கொண்டு, அமேசானை காப்பாற்றப்போவதாக ஜி7 நாடுகள் கூறுவதாக போல்செனாரோ எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டால் ஜி7 நாடுகள் அளிப்பதாகக் கூறும் உதவியை ஏற்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

[…]

பாகிஸ்தான் பிரதமர்
உலகம்

பாகிஸ்தான் பிரதமர் திறமையற்றவர் என எதிர்க்கட்சிகள் விமர்சனம்

பாகிஸ்தான் பிரதமர் திறமையற்றவர் என விமர்சித்துள்ள அந்நாட்டின் எதிர்க்கட்சியினர், ஜம்மு காஷ்மீரை மறந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ, தனது தந்தை மற்றும் அத்தையை அடியாலா சிறையில் சென்ற சந்தித்த பின் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தியப் பிரதமர் மோடிக்கு வளைகுடா நாடுகள் விருது வழங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வெளியுறவுக் கொள்கை தோல்வியை காட்டுவதாக விமர்சித்தார்.

பாகிஸ்தானில் அரசு நிர்வாகம் தூங்கிக் கொண்டும், சொந்த நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துக் கொண்டும் இருந்த போது, இந்தியா காஷ்மீரை இணைத்துக் கொண்டதாக பிலாவல் பூட்டோ விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் திறமையற்ற நிர்வாகத்தால் காஷ்மீரை மீட்க வேண்டும் என்ற அரசின் கொள்கை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை காப்பாற்றும் நிலைக்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

[…]

அமேசான் காடு
உலகம்

பரவி வரும் நெருப்பு ஆபத்தில் அமேசான் பூமிக்கு எச்சரிக்கை

பூமியின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிவதால் உலகிற்கு ஏன் நெருக்கடி ஏற்படும் என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

55 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 8 நாடுகளில் பரந்து விரிந்துள்ளன அமேசான் காடுகள். இது இந்தியாவின் மொத்த பரப்பளவை விட அதிகமாகும். ஒட்டுமொத்தமாக பூமியில் 4 சதவீத பரப்பளவை கொண்டிருப்பதுடன், மழை காடுகளில் 60 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பூமியில் இருக்கும் மரங்கள் 240 கோடி டன்கள் அளவிற்கு கார்பனை உள்வாங்கும் நிலையில், அதில் ஏறத்தாழ 25 சதவீதம் அளவிற்கு அமேசான் மழைக்காடுகள் கிரகித்துக் கொள்கின்றன. புவி வெப்பமயமாததை கணிசமாக தடுக்க இது உதவுகிறது.

அமேசான் காடுகள் அழிக்கப்படுவது, மீளமுடியாத விபரீதத்தில் பூமியை தள்ளிவிட்டு விடும் என்று அறிவியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 40 சதவீதம் அமேசான் காடுகள் அழிக்கப்பட்டாலே இந்த நிலை ஏற்பட்டு விடும் என்றுள்ள நிலையில், தற்போது அழிவின் விகிதம் 20 முதல் 25 சதவீதம் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது அதிகரிக்கும்பட்சத்தில் 2 டிகிரி செல்சியஸ் வரை உலகின் வெப்பநிலை உயர்வதை தடுக்க இயலாது என்றும் எச்சரிக்கின்றனர்.

பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீப்பிடித்த சம்பவங்களின் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டு 35 ஆயிரத்து 567 ஆக இருந்தது. இது ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக உயர்ந்து, தற்போது 74 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது இருமடங்காகும். பிரேசில் அதிபர் போல்ஸ்னரோ கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பின், முன் எப்போதும் இல்லாத விதத்தில் அமேசான் காடுகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக நன்மையைப் பற்றி அக்கறை கொள்ளாமல், வேளாண்மை மற்றும் சுரங்க திட்டங்களுக்காக அமேசான் காடுகள் பிரேசிலில் அழிக்கப்படுவதே இதற்கு முதன்மையான காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

உலகில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் 30 சதவீதம் அமேசான் காடுகளில் தான் இருப்பதாகவும், அனைத்து உயிரினங்களில் 10 சதவீத உயிரினங்களுக்கு வாழ்விடமாக இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அமேசான் காடுகளில் மட்டும் 16 ஆயிரம் வகையான 39 ஆயிரம் கோடி மரங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே மிக நீளமான நதியான அமேசான் மற்றும அதன் கிளை நதிகள், பூமிக்கு 20 சதவீத தண்ணீரை வழங்குகிறது.

கோடைகாலங்களில் காடுகளில் தீப்பிடிப்பது இயல்புதான் என்ற போதிலும், முறைகேடாக வேளாண்மைக்கு தேவையான நிலத்திற்காக அமேசான் காடுகள் அழிக்கப்படுவதாக பிரேசிலிலுள்ள தேசிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது அமேசான் காடுகள் அழிக்கப்படுவது நடப்பு ஆண்டின் முதல் 7 மாதங்களில் 67 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிட்டால், இது 3 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.

ஏறத்தாழ 60 சதவீதம் அமேசான் காடுகள் பிரேசில் நாட்டில் தான் உள்ளன. பொலிவியா, பெரு, பராகுவே, ஈக்வடார், உருகுவே, வடக்கு அர்ஜென்டினா, வடமேற்கு கொலம்பியா பிரான்சின் கயானாவிலும் அமேசான் காடுகள் பரந்து விரிந்துள்ளன.

தென் அமெரிக்காவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அமேசான் காடுகளில் தீப்பிடித்த பகுதிகளை வெளிக்காட்டும் விதத்தில் டெரா மற்றும் அக்வா மோடிஸ் என்ற செயற்கைகோள்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

அமேசான் மழைக்காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி உலகின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அமேசான் காடுகளை காப்பதற்காக பல கோடி டாலர் நிதி உதவி அளிப்பதாக ஜி 7 நாடுகள் அறிவித்ததையும், பிரேசில் திபர் ஏற்க மறுத்துவிட்டார்.

பல நாடுகள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, அமேசான் காடுகளில் பரவி வரும் தீயை அணைக்க, ராணுவ விமானங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்களையும் பிரேசில் களமறக்கி இருக்கிறது. கடந்த சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டும் 1113 இடங்களில் புதிதாக தீ பரவி இருக்கிறது. இதனால் போர்டோவெல்கோ நகரம் புகை மண்டலமாக மாறியதுடன், வடமேற்கிலுள்ள ரோன்டோனியாவிலுள்ள விமான நிலையம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

அமேசான் காடுகளில் தீயை அணைக்கும் பணி பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், விரைவில் நெருப்பு கட்டுப்படுத்தப்பட்டு, பூமியின் நுரையில் காக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

[…]

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
உலகம்

மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த  எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.  நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு உள்ள அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பிரதமரின் மனைவி மற்றும் பெற்றோர்களுக்கும் இந்த வகை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.  முன்னாள் பிரதமர்களுக்கு அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை பொறுத்து இந்த வகை பாதுகாப்பு நீட்டிக்கப்படுகிறது. 

 

ஆண்டு தோறும் உளவுத்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், எஸ்.பி.ஜி. பாதுகாப்பு வழங்குவது ஆய்வு செய்யப்படுகிறது.  இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.  இனிமேல், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மன்மோகன்சிங்கிற்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

[…]

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி
உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை..

ஜி 7 மாநாட்டின் இடையே இன்று பிற்பகல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஜி 7 நாடுகள் மாநாடு நடைபெறும் பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் இன்று பிற்பகல் 3.45 முதல் 4.30 மணி வரை டிரம்ப்பும் மோடியும் நேருக்கு நேராக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த ஆண்டில் இந்த இரு தலைவர்களும் சந்திப்பது இரண்டாவது முறையாகும்.

முதல் சந்திப்பு ஜி 20 மாநாடுகளிடையே ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் நடைபெற்றது. தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தால் நிலவும் பனிப்போர் குறித்து டிரம்ப் மோடியுடன் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய இந்திய அரசு எடுத்த முடிவு அதன் உள்நாட்டு விவகாரம் என்றும் இந்தப் பிரச்சினையில் இந்தியா பாகிஸ்தானைத் தவிர மூன்றாம் நாட்டின் தலையீட்டுக்கு இடமே இல்லை என்று இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

ஆயினும் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று டிரம்ப் அண்மையில் மூன்றாவது முறையாக குறிப்பிட்டுள்ளார். இன்றைய சந்திப்பிலும் அதனை டிரம்ப் முன்வைப்பார்.ஆனால் டிரம்ப்புக்கு உரிய விதத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி தெளிவுபடுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் அமைதியை நிலைநிறுத்துவதற்கு மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகள் குறித்தும் மோடி டிரம்ப் பேச்சுகளில் எதிரொலிக்கக் கூடும்.இது தவிர வர்த்தக உறவுகளில் சுங்க வரிவிதிப்பு உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் நீடிப்பதால் அதற்கு தீர்வு காண இருதலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். டிரம்ப் தவிர மேலும் நான்கு நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி இருநாட்டு பரஸ்பர உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

பிரதமர் மோடி- டிரம்ப் பேச்சுவார்த்தையின் போது ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது, ஜி 7 நாடுகளில் ரஷ்யாவை இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.சுற்றுச்சூழல், டிஜிட்டல் பொருளாதாரம், சீனா வர்த்தகம் போன்றவற்றுடன் இவை விவாதிக்கப்பட உள்ளன. இந்நிலையில் நேற்று திடீரென எதிர்பாராத விருந்தினராக ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜாரீப் பிரான்சுக்கு வந்து ஜி 7 மாநாட்டில் கலந்துக் கொண்டார்.

ஈரான் அணு ஆயுத சோதனை நடத்துவதைத் தடுப்பதற்கும் அமெரிக்கா ஈரான் இடையிலான மோதலை தணிப்பதற்கும் இச்சூழல் உதவும் என்று ஜி 7 நாட்டு தலைவர்கள் நம்புகின்றனர்.ஈரானுடன் எண்ணெய் பொருட்கள் வாங்குவதற்கான புதிய ஒப்பந்தம் செய்வதை இந்தியா வரவேற்கிறது.

[…]

பாடல் பாடிய பெண்
உலகம்

ரயில்வே நடைமேடையில் பாடலைப் பாடிய பெண்ணுக்கு திரைப்பட வாய்ப்பு...ஆச்சர்யம் ...!

லதா மங்கேஷ்கர் பாடலை பாடி இணையதளத்தில் வைரலான பெண்ணுக்கு பாலிவுட் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிமேஷ் ரேஷம்மையா தனது புதிய படத்தில் வாய்ப்பளித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்தவர் ரேணு மண்டல். இவர் வயிற்றுப் பிழைப்புக்காக பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கரின் பிரபல பாடலான ஏக் பியார் கா நக்மாஅ ஹேய் ((Ek pyaar ka nagma hai)) என்ற பாடலை ரயில்வே நடைமேடையில் பாட அதனால் கவரப்பட்டவர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டனர்.

ரேணுவில் குரலில் கவரப்பட்ட பாலிவுட் இசையமைப்பாளரும் நடிகருமான ஹிமேஷ் ரேஷம்மையா ((Himesh Reshammiya)) தனது அடுத்த படமான ஹேப்பி ஹர்டி அண்ட் ஹீர் ((Happy Hardy and Heer)) படத்தில் ரேணுவுக்கு வாய்ப்பளித்துள்ளார்.

ரேணுவை பார்த்த மாத்திரத்திலேயே அவரது குரலில் தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்துள்ள ஹிமேஷ், திறமை எங்கிருந்தாலும் அதனை கண்டுபிடித்து அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என்ற அறிவுரையை கடைபிடித்து வருவதாகவும், ரேணுவின் குரலை அனைவரும் கேட்க செய்வதே தனது இலக்கு என்றும் கூறியுள்ளார்.

[…]

மாலத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித்
உலகம்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு மேலும் பின்னடைவு..!

காஷ்மீரில் 370 பிரிவு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம் என்று மாலத்தீவு அரசு பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆதரவு திரட்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி முயற்சித்து வருகிறார். ஆனால் தொடர்ச்சியாகவே அவருக்கு தோல்விதான் கிடைத்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாலத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித், இந்தியா எடுத்த முடிவு முழுக்க முழுக்க அதன் உள்நாட்டு விவகாரம் தான் என்று தெரிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தானுக்கு மேலும் ஒருமுறை பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

[…]

பிரதமர் மோடி
உலகம்

பிரான்சில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை,  பிரான்சில் நாளை சந்தித்து பேச்சு நடத்த உள்ள பிரதமர் மோடி, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீட்டுக்கு இடமே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்க உள்ளார்.

பாரீசில் இருந்து நேற்றிரவு அபுதாபி சென்றடைந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பட்டத்து இளவரசர் முகமது பின் ஜையத் அல் நஹ்யன் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அபுதாபியில் இருந்து மோடி பஹ்ரைன் செல்ல உள்ளார்.

அங்கும் மன்னர் ஷேக் ஹமத் பின் அல் காலிபாவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வளைகுடா நாடுகளில் உள்ள பழைமை வாய்ந்த சிவாலயத்தை புதுப்பிப்பது குறித்து இப்பேச்சுவார்த்தையில் மோடி வலியுறுத்துவார். பின்னர் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டிற்கு சென்று ஜி 7 நாடுகளின் உச்ச மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார். இந்த மாநாட்டுக்கு இடையே அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது டிரம்ப் காஷ்மீர் பிரச்சினை குறித்து மோடியுடன் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிடுவதற்கு இடமே இல்லை என்ற இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் மோடி டிரம்ப்பிடம் நேரில் வலியுறுத்துவார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக அண்மையில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆனால் டிரம்ப்பின் இந்த விருப்பத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்பதால் டிரம்ப் காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்று மோடியிடம் வலியுறுத்தக் கூடும் .

[…]

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
உலகம்

மாநிலங்களவை எம்.பி.யாக மன்மோகன் சிங் பதவி ஏற்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை (மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், காங். தலைவருமான மன்மோகன் சிங், இன்று முறைப்படி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

 

இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த் சர்மா ஆகியோர்  கலந்து கொண்டனர்.

 

மன்மோகன் சிங்கின் அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

[…]

இங்கிலாந்து பிரதமர்
உலகம்

சர்ச்சையை ஏற்படுத்திய இங்கிலாந்து பிரதமரின் சர்சைக்குரிய செயல்.

பிரான்ஸ் அதிபர் மாளிகையில் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசிய, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சின் போது நடுவிலிருந்த மேசை மீது காலை தூக்கி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சான், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார்.

பிரான்ஸ் நாட்டிலுள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இம்மானுவேல் மேக்ரானிடம் ஜோக் ஒன்றை சொல்லிச் சிரித்த போரிஸ் ஜான்சன், அங்கிருந்த மேசை மீது காலை வைத்தபடி பேசியுள்ளார். போரிஸ் ஜான்சன் கூறிய நகைச்சுவைக்கு இம்மானுவேல் மேக்ரான் சிரிந்துக் கொண்டிருக்க, முன்பிருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த போரிஸ் ஜான்சன் கால்களை மேசை மீது தூக்கி வைத்துள்ளார். 

பேச்சுவார்த்தையை படம்பிடித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் எடுத்த அந்த புகைப்படம் தான் தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது. பிரான்ஸ் அதிபரை அவமதிக்கும் வகையில் இங்கிலாந்து பிரதமரின் செயல் அமைந்ததாக, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

[…]

  கரடி
உலகம்

வீட்டின் குளிர்சாதன பெட்டியில் நுழைந்து தன் பசியை போக்கிய வினோத கரடி .....

அமெரிக்காவில், நள்ளிரவு வீட்டுக்குள் நுழைந்த கரடி ஒன்று, குளிர்சாதன பெட்டியை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அண்மையில் கலிபோர்னியாவில் உள்ள ‘ஹாலிடே ஹோம்’ ஒன்றுக்குள் நள்ளிரவு கரடி ஒன்று நுழைந்தது. பசியுடன் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த கரடி, இருட்டில் குளிர்சாதன பெட்டியை தேடி கண்டுபிடித்து அதன் அருகே சென்றது. பின்னர் மனிதர்களை போல், அதனை லாவகமாக திறந்த கரடி, அங்கிருந்த இறைச்சியை எடுத்து வந்து, நடுவறையில் படுத்தபடி சாப்பிட்டது. வீட்டுக்குள் வினோத சத்தம் கேட்பதை அறிந்த வீட்டிலிருந்த இரு சிறுவர்கள் தங்களது ஸ்மார்ட் வாட்ச் மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, வீட்டில் உலாவிக்கொண்டிருந்த கரடியை வெளியேற்றினர்.

இந்த சம்பவம் முழுவதும் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவான நிலையில், அதனை வலைதளத்தில் பதிவிட்ட காவல் துறையினர், விலங்குகள் வீட்டுக்குள் நுழைவதை தவிர்க்க வீடுகளை பூட்டிவைத்து தூங்கவும், தகுந்த பாதுகாப்புடன் செயல்படவும் அறிவுறுத்தியுள்ளனர். […]

மெக்கா
உலகம்

உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் மெக்காவில் குவிந்தனர்

புனித ஹஜ் பயணத்தை முன்னிட்டு சவுதிக்கு 18 லட்சம் பேர் வந்தள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புனித ஹஜ் பயணத்திற்காக சவுதியின் மெக்காவில் உள்ள காபா என்ற இடத்திற்கு உலகில் உள்ள இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்காக உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் சவுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் சவுதியின் கடவுச்சீட்டு இயக்குநரகத்தின் ஜெனரல் சுலைமான் பின் அப்துல் அஜிஸ் எஹியா கூறும்போது, நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்காக 18 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசாரும், ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். […]

லெபனான் நாட்டில் புதிய சட்டம்
உலகம்

லெபனான் நாட்டில் பெண்களுக்கு முழு சுதந்திரம், புதிய சட்டம் அமல்

லெபனான் நாட்டில் பெண்கள் ஆண் துணை இல்லாமல் தனியாக வெளிநாடுகளுக்குப் பயணிக்கலாம் என்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதனையடுத்து சமூக ஊடகங்களில் பட்டத்து இளவரசரை புகழ்ந்து பதிவுகள் குவிகின்றன. பெண்கள் அவசரமாக விமானநிலையம் செல்ல வேண்டும் அதுவும் தனியாக என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
தந்தையோ, கணவனோ, மகனோ, சகோதரனோ இனி தங்கள் வாழ்வுகளில் அதிகாரம் செலுத்த முடியாது என்ற சுதந்திர குரல்களும் ஒலிக்கத் தொடங்கி விட்டன.
சுதந்திரமாக வாகனம் ஓட்டவும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்றவற்றுக்கு தனியாக செல்லவும் சட்டரீதியான உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

நீண்ட காலமாக மறுக்கப்பட்ட உரிமைகளை பெண்கள் இப்போது அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சவூதி அரேபியாவின் கடுமையான சட்டங்கள் இப்போது தளர்ந்து வருகின்றன. […]

போயிங் நிறுவனம்
உலகம்

விமான விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போயிங் நிறுவனம் ரூ.688 கோடி உதவித்தொகை அறிவிப்பு

இந்தோனேஷியா மற்றும் எத்தியோப்பியாவில் நடந்த இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போயிங் நிறுவனம் சுமார் 688 கோடி ரூபாயை உதவித்தொகையாக அறிவித்துள்ளது.

போயிங் நிறுவன தயாரிப்பிலான 737 மேக்ஸ் ரக விமானங்கள் இந்தோனேஷியா மற்றும் எத்தியோப்பியாவில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 346 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு நலன் கருதி, அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பான 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த இரு விபத்துகளில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 688 கோடியை முதல்கட்ட உதவித்தொகையாக வழங்க அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கல்வி, வாழ்வாதாரம் உள்ளிட்ட ஏனைய செலவினங்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் குறிப்பிட்டிருந்த அந்நிறுவனத்தின் தலைவர் டென்னிஸ் முல்லென்பர்க் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, போயிங் விமானத்தில் பயணிக்கும் விமான குழு மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். […]

வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்
உலகம்

வடகொரிய மண்ணில் கால்வைத்து வரலாறு படைத்த டிரம்ப்!

அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் வடகொரியாவுக்குச் சென்றது இதுவே முதன் முறை.

ஜி20 மாநாடு முடிந்து அமெரிக்கா திரும்பிய டொனால்ட் டிரம்ப் வழியில் நேற்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை திடீரென சந்தித்து பேசினார்.

இருவரும் தென்கொரியா-வடகொரியா போருக்கு பின்னர் சமாதானப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பன்முன்ஜோம் நகரில் சந்தித்து கொண்டனர். இந்த பகுதி ராணுவமற்ற பகுதி என்று அழைக்கப்படுகிறது.

இதற்கு முன்பு இருவரும் சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் தலைநகர் ஹனாய் ஆகிய இடங்களில் சந்தித்து கொண்டனர். இதன் பிறகு இருநாட்டுத் தலைவர்களும் மீண்டும் 2 வாரங்களுக்குப் பிறகு சந்தித்துப் பேச உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
வடகொரிய எல்லைக்குள் சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை
உலகம்

பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் உருவான சூழலில் ஈரானில் உளவு பார்த்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈரானின் முக்கிய பகுதிகளில் ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, கடைசி நேரத்தில் அந்த உத்தரவை திரும்ப பெற்றார்.

ஆனாலும் ஈரானுக்கு பாடம் புகட்டுவதற்காக அந்நாட்டின் புரட்சிகர படையின் ஆயுதகட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்கள் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் நடத்தி அவற்றின் செயல்பாட்டை முடக்கியது.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல் இதுவரை வேறு எந்த நாட்டுக்கும் விதிக்காத வகையில் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. ஈரானின் உச்ச அதிகாரம் படைத்த தலைவர் அயத்துல்லா அல் காமெனி மற்றும் முப்படை தளபதிகள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டன.

இதற்கான உத்தரவில் நேற்று முன்தினம் கையெழுத்திட்ட ஜனாதிபதி டிரம்ப், ஈரானுடன் போரை விரும்பவில்லை. அதே சமயம் அந்நாடு அணு ஆயுதங்களை வைத்திருக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கூறினார்.

இந்த நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே நீடித்து வரும் பதற்றம் தங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும், இதற்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அதன் உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அல் ஒட்டாய்பி கூறுகையில், அமெரிக்கா-ஈரான் இடையேயான கருத்து வேறுபாடுகள் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் களையப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் வலியுறுத்துகின்றன என்றார்.

ஆனால், பொருளாதார தடைகள் தொடரும் நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் மஜித் தக்த் ரவாஞ்சி இதுபற்றி கூறியதாவது:-

அமெரிக்கா, ஈரான் மீது அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது. தற்போது ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடையை அமெரிக்கா விதித்திருக்கிறது. அமெரிக்கா இதே அணுகுமுறை தொடரும் பட்சத்தில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்பே கிடையாது என்றார்.

மேலும் அவர், தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் பொருளாதார தடைகள் ஈரான் மக்கள் மற்றும் நாட்டின் தலைவர்களுக்கு எதிரான அமெரிக்காவின் விரோத போக்கை காட்டும் மற்றொரு அறிகுறியாகும். அத்துடன் சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமெரிக்கா மதிப்பு அளிப்பதே இல்லை என்பதையும் காட்டுகிறது என கூறினார். […]

போரிஸ் ஜான்சன்
உலகம்

இங்கிலாந்தின் அடுத்த பிரதமரின் லீலை: காதலியுடன் சண்டை

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜான்சன், தன் காதலியுடன் சண்டையிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரெக்சிட் விவகாரத்தில் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்ததையடுத்து பிரதமர் போட்டியில் இருப்பவர்கள் போரிஸ் ஜான்சனும் ஒருவர்.இரு திருமணம் செய்து இரு மனைவியரையும் விவாகரத்து செய்துவிட்டு கேரி சைமண்ட்ஸ் என்ற பெண்ணுடன் போரிஸ் ஜான்சன் தற்போது வாழ்ந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு போரிஸ் ஜான்சனுக்கும் அவரது காதலிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்குள் இருந்து உரத்த குரலில் திட்டிக்கொள்ளும் சத்தம் கேட்டது மட்டுமின்றி பொருட்கள் துாக்கி வீசப்படும் சத்தமும் கேட்டது.அவ்வழியே சென்ற ஒருவர் கொலை நடப்பது போன்ற சத்தம் கேட்பதாக போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் இருவருக்குமிடையேயான தகராறு என நிம்மதியடைந்தனர். இச்சம்பவம் போரிஸ் ஜான்சன் பிரதமராவதற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர்.காலையில் வீட்டை விட்டு வெளியே வந்த போரிஸ் ஜான்சன் எதுவும் நடக்காததுபோல் சிரித்துக் கொண்டே கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். […]

இனக்கலவரம்
உலகம்

இனக்கலவரம்... ஒரே நாளில் 100 பேர் படுகொலை...

மாலி நாட்டில் தோகன் என்ற வேட்டையாடும் இனத்தவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது மாலி குடியரசு. இங்கு தோகன் என்ற வேட்டையாடும் இனத்தவர்களுக்கும், அல்கொய்தா அமைப்பினருடன் தொடர்புடைய புலானி என்ற பிரிவினருக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. பழிக்குப்பழி நடவடிக்கையாக இவர்கள் நடத்தும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

இந்நிலையில், மத்திய மாலி பகுதியில் உள்ள தோகான் கிராமத்துக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென நுழைந்த புலானி அமைப்பினர் துப்பாக்கியுடன் சென்று தாக்குதல் நடத்தினர். அந்த கிராமத்தில் மொத்தம் 300 பேர் இருந்தனர். அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய புலானிக்கள், அவர்களது வீடுகளிலும் கொள்ளையடித்தனர். அதன்பின் சுட்டுக் கொன்றவர்களின் உடல்களை தீயிட்டு கொளுத்தினர். இப்பகுதியில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மாலியிலுள்ள புலானி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

பிரதமர் ரணில்
உலகம்

இலங்கையில் அமைதியான சூழல் நிலவுகிறது- பிரதமர் ரணில்

இலங்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், வெளிநாட்டினர் அச்சமின்றி தங்களது நாட்டுக்கு வருகை தரலாம் எனவும், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஏராளமானோர் பலியாகினர்.

உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலர், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள தயக்கம் காட்டிவருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை அமைதி நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், பாதுகாப்பான சூழல் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவேண்டாம் என, உலக நாடுகள் தங்களது நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை அறிவுறுத்தவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். […]

அமெரிக்க அதிபர்
உலகம்

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்களின் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அமெரிக்க- இந்திய உறவில் மகத்தான ஒத்துழைப்பு ஏற்படும் என்றும் டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் வாழ்த்துக்கு டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த வெற்றி 130 கோடி இந்திய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் நட்பை மேம்படுத்தவும் உலக அமைதிக்காக ஒன்றுபட்டு செயல்படவும் பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். […]

ஜி ஸ்பாட்
உலகம்

ஜி ஸ்பாட் பயனர்களிடம் மன்னிப்பு கோரிய கூகுள்

தனது நிறுவனத்தின் ஜி ஸ்பாட் மென்பொருளில், எளிதில் கண்டறியக் கூடிய வகையில் பாஸ்வேர்டுகளை சேமித்து வைத்திருந்ததற்காக கூகுள் நிறுவனம் பயனர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
கூகுளின் ஜி ஸ்பாட்டில் பல ஆண்டுகளாக குறியாக்கத்துடன் கூடிய பாஸ்வேர்டுகளாக அல்லாமல், வெறும் எழுத்து வடிவிலாகவே பல பயனர்களின் பாஸ்வேர்டுகள் சேமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு பயன்படுத்தப்படுவதால் பயனர்களின் கணக்குகள் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது எனும் அபாயம் தற்போது உணரப்பட்டுள்ள நிலையில், கூகுள் நிறுவனம் தனது அந்த செயலுக்காக மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும் அத்தகைய பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்படாமல் இருக்க அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. […]

சூறாவளித் தாக்குதல்
உலகம்

அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல்..

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக்லஹாமா, டெக்ஸாஸ், கான்ஸாஸ் மற்றும் மிசௌரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சூறாவளி வீசியது. அடுத்தடுத்து 22 முறை வீசிய சூறாவளியால் காலநிலை மிகவும் குளிர்ச்சியாக மாறியது.

இதனால் சில இடங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆக்லஹாமாவின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

சூறாவளி, மழை மற்றும் வெள்ளம் காரணமாக மத்திய அமெரிக்க மாகாணங்களில் அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாகாண அரசுகள் தெரிவித்துள்ளன. […]

கடல்வழி வணிக ஒப்பந்தம்
உலகம்

சீனாவுக்கு போட்டியாக ஒப்பந்தத்தில் இணையும் இந்தியா, ஜப்பான், இலங்கை

இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.

இந்திய பெருங்கடலில் நடைபெறும் கடல்வழி வணிகத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையின் மிக பெரிய துறைமுகமான கொழும்பு துறைமுகத்தினை மேம்படுத்த இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைய உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தம் சில நாட்களில் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ள இந்த திட்டத்தில் குறிப்பாக கொழும்பு துறைமுகத்தில் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட தெற்கு பகுதிக்குள் பெரிய சரக்கு கப்பல்கள் நுழையும் வண்ணம் ஆழப்படுத்தப்பட உள்ளது.

ஆசிய உட்பட பல பகுதிகளில் நடக்கும் வணிகத்தில் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் சீனா தனது முக்கியத்துவத்தை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு போட்டியாக இந்த 3 நாடுகளும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. […]

சீனா
உலகம்

சீனாவில் நடந்த குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி.

சீனாவில் நடந்த குழந்தைகளுக்கான சைக்கிள் ரேஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சீனாவின் சொங்கியிங்((Chongqing)) பகுதியில் குழந்தைகளுக்கான சைக்கிள் ரேஸ் நடைபெற்றது.

இதில் பெடல் இல்லாத கால்களால் தரையில் தட்டி ஓட்டும் சின்ன சைக்கிள்களில் 10க்கும் மேற்பட்ட 6 வயது வரையிலான குழந்தைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். ஹெல்மெட் போன்ற பாதுகாப்புகளுடன் இந்த போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளை பெற்றோர் உடன் இருந்து உற்சாகப்படுத்தினர்.

இந்த போட்டி கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதாகவும், குழந்தைகளின் உடல் தகுதியையும், உடல் ஒத்துழைப்பையும் அதிகரிக்க இந்த விளையாட்டு உதவுகிறது என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். […]

எச்-1 பி
உலகம்

உரிய தகுதி இருந்தும் எச்-1 பி விசா மறுப்பது ஏன்.?

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தொழில்நுட்ப மையமான சிலிகான் வேலியில் இயங்கி வரும் ஐ.டி நிறுவனம் ஒன்று, அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. தனது தகுதி வாய்ந்த இந்திய ஊழியருக்கு அமெரிக்க அரசு எச்-1 பி விசா வழங்க மறுத்ததற்கு எதிராக இவ்வழக்கை தொடர்ந்துள்ளது. எக்ஸ்டெரா சொல்யூஷன்ஸ் என்ற அந்த ஐடி நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கில், தங்கள் நிறுவனத்தில் வணிக முறை ஆய்வாளராக பணியமர்த்தப்பட்ட இந்தியரான பிரஹார்ஷ் சந்திராவிற்கு, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் எச்-1 பி விசாவை தவறாக மறுத்துள்ளது.
அவருக்காக பரிந்துரைத்து நிறுவனம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட எச்-1பி விசாவை பரிசீலித்த அரசு, அவருக்கு வழங்கப்பட்ட வேலை எச் 1 பி சிறப்பு விசா பெறுவதற்கு தகுதியுடையதாக இல்லை என கூறியுள்ளது.
தங்களது ஊழியருக்கு விசா வழங்க மறுத்த அரசு அதற்குரிய காரணத்தை ஆதாரப்பூர்வமாக வழங்க மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. இச்செயல் சட்டப்பூர்வ முன்மாதிரிக்கு முரண்பாடாக உள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்திய ஊழியருக்கு விசா வழங்க மறுத்துள்ள சம்பவம் தன்னிச்சையாக உள்ளது அரசின் இச்செயல் நம்பமுடியாத தெரிந்தே வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ள ஒரு தவறு போலவே உள்ளதாக எக்ஸ்டெரா சொல்யூஷன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே அரசின் முடிவை நிராகரித்து பிரஹார்ஷ் சந்திராவிற்கு எச் 1 பி விசா வழங்க உத்தரவிடுமாறு கலிபோர்னியாவின் வடக்கு மாவட்ட அமெரிக்க நீதிமன்றத்தில் வாதாடியது.
பிரஹார்ஷ் சந்திரா எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார் தவிர டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவத்தின் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். தற்போது அவர் தனது மனைவி மூலம் H-4 விசா வைத்துள்ளார் இருப்பினும் அவர் முக்கிய ஐடி நிறுவனம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டுள்ளதால் தற்போது அவருக்கு எச் 1 பி விசா வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. […]

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் திடீரென மரணடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பலியான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
Ulagam

தேனிலவு சென்ற இந்தியா வம்சாவளிப் பெண் ! இலங்கையில் திடீர் மரணம்

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் திடீரென மரணடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பலியான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல். இவரும் லண்டனை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளரான சந்தாரியாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த மாதம் 19-ந்தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தேன்நிலவுக்காக லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்றனர். அங்கு காலே நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கினர். இங்கு தங்கியிருந்து பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, பின்னர் மாலத்தீவு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி 2 பேருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த வாந்தி மற்றும் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலனின்றி உஷிலா பட்டேல் பரிதாபமாக இறந்தார். உடலில் நீர்வறட்சி மற்றும் தொடர் வாந்தி காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தனது மனைவி இறப்புக்கு ஓட்டல் உணவு தான் காரணமென்றும் அவர்கள் அளித்த உணவில் ஏதோ துர்நாற்றம் வீசியதாகவும் சந்தாரியா கூறினார். ஆனால், ஓட்டல் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.இந்நிலையில் விசாரணை முடியும் வரை சந்தாரியாவை நாட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சந்தாரியா கைது செய்யப்படவோ அல்லது அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவோ இல்லை என்றும், எனினும் விசாரணை முடியும் வரை அவர் இலங்கையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். […]

Ulagam
Ulagam

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்னும் அல் - கயீதா வீழவில்லை: எச்சரிக்கும் சர்வதேச உளவு அமைப்புகள்

பாகிஸ்தான் அபோடபாத் நகரத்தில் அமெரிக்க படைகளால் அல் கயீதா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிறது. ஜிகாதி அமைப்புகளிலேயே மிகவும் பயங்கரமான அமைப்பாக அல […]