மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
தமிழ்நாடு

ஜெயலலிதா காலத்தை வென்றவர்... காவியமானவர்!

 

சினிமா, அரசியலில் உச்சம் தொட்டவர் ஜெயலலிதா. இவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

சினிமா, அரசியலில் உச்சம் தொட்டவர் கர்நாடாகாவின் மைசூருவில் 1948 பிப்., 24ல் பிறந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். 1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி அந்தக்காலத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.கர்நாடாகாவின் மைசூருவில் 1948 பிப்., 24ல் பிறந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். 1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி அந்தக்காலத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.கர்நாடாகாவின் மைசூருவில் 1948 பிப்., 24ல் பிறந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். 1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி அந்தக்காலத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.ஜெயலலிதா. இவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

[…]

நித்யானந்தா- தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்
தமிழ்நாடு

தனி நாட்டை உருவாக்கிய நித்யானந்தா- தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாகக் கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன. குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா.

நாள்தோறும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் நித்யானந்தா, 'கைலாஷ்' என்ற பெயரில் தனிநாடு அமைக்கப் போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, விர்ச்சுவல் இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா. 

 

தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வாடிகன் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில், அண்மையில் வெளியிட்ட வீடியோவில் தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார். 

 

தனிநாடு இணைய தளத்தில், இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார் நித்யானந்தா.

 

கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடி பேர் என்று பலரையும் வியக்கவைக்கும் வகையில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும், அந்த நாட்டுக்கென்று பாஸ்போர்ட், மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு அமைச்சரவையையும் உருவாக்கி உள்ளார். நாட்டின் பிரதமருக்கு இணையாக கைலாசா நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார். இந்தியாவைப்போல், உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்திற்கு தனித் துறை அமைத்துள்ளார் நித்யானந்தா. ஒவ்வொரு நாளும் அங்கு அமைச்சரவை கூட்டத்தையும்  நடத்தி வருகிறார்.

 

கைலாசா நாடு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இணையதளத்தில், ‘இந்த நாடு எல்லைகள் கடந்தது. சனாதனத்தைக் காப்பதற்காக இந்த நாடு அமைக்கப்படுகிறது. தங்களுடைய நாட்டில் இந்து மதத்தை பின்பற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான நாடு என்று குறிப்பிட்டுள்ளார். கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு. உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை கடைபிடிக்கும் உரிமையை இழந்து உள்ளனர் என கூறப்பட்டு உள்ளது

 

கைலாசா அரசாங்கத்தில் 10 துறைகள் உள்ளன, அவற்றில் ஒன்று ‘அலுவலகத்திற்கு பொறுப்பானது’.  அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள், டிஜிட்டல் ஈடுபாடு, சமூக ஊடக அலுவலகம்.  வீட்டு விவகாரங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகியவை பிற துறைகளாகும். நித்யானந்தா கைலாசத்திற்கு  தனி நாடு அந்தஸ்து வழங்க ஐ.நா.வை நாட உள்ளார். 

 

பாஸ்போர்ட் இரு நிறங்களில் ( தங்கம் மற்றும் சிவப்பு)  அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். இங்கு இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். இந்த நாட்டை சட்ட ரீதியாக அறிவிக்கும் பணிகளையும் சட்ட செயற்பாடுகளையும் அமெரிக்காவை சேர்ந்த மிகப் பெரிய நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன

 

[…]

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை-  திமுக மனு
தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்ற, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில், திமுக புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு, உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது, பழங்குடியின பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவைத் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்தச் சூழலில், வார்டு மறுவரையறை முடியும் வரை தேர்தல் நடத்த கூடாது என உத்தரவிடக்கோரி திமுக சார்பில் அண்மையில், தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பாணைக்குத் தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில், திமுக சார்பில், இன்று, புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

[…]

மோடி -  மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்..

மிழ்நாட்டின் 16 முக்கிய பிரச்சினைகளை பட்டியலிட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த 9 பக்க கடிதத்தை, திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வழங்கினர்.

அதில், மாநில சுயாட்சியை நிலைநிறுத்தும் பொருட்டு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரமளிக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில், உள்ளூர் மக்களுக்கு 90 விழுக்காடு பணிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிறப்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, 50 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு, மத்திய அரசு தர வேண்டிய 7825 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

[…]

வேலுமணி
தமிழ்நாடு

முதலமைச்சரின் ராசியால் அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன: அமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராசியால், அனைத்து குளங்களும் நீர் நிரம்பி காட்சியளிப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை சுண்டக்காமுத்தூர் ஐயப்பன் கோவில் அருகே நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர், பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டதோடு, கட்சி வேறுபாடு பாராமல், ஆளும் அதிமுக அரசு, மக்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

[…]

TNPSC
தமிழ்நாடு

குரூப் 4 தேர்வு பணியிடங்கள் 9,398 ஆக அதிகரிப்பு

குரூப் 4 தேர்வுப் பணியிடங்களின் எண்ணிக்கையை 9 ஆயிரத்து 398 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவை அலுவலர் உள்ளிட்ட 8 வெவ்வேறு பணியிடங்களில் காலியாக இருந்த 6,591 இடங்களுக்கான தேர்வு கடந்த செப்.1-ம் தேதி நடைபெற்று, அதன் முடிவுகள் கடந்த நவம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்போது குறிப்பிட்ட 8 பணியிடங்களில் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை 6,591-லிருந்து 9,398 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது.

மேலும் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் இருந்து 9,398 பணியிடங்களுக்கும் விரைவில் தகுதியான ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக TNPSC செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

[…]

ராமசாமி படையாச்சியார்
தமிழ்நாடு

ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம்... முதலமைச்சர் திறந்துவைத்தார்..!

கடலூரில், சுதந்திரப் போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இணைந்து திறந்துவைத்தனர்.

கடலூரில் பிறந்த ராமசாமி படையாச்சியார் இந்திய விடுதலைக்காக போராடியவர்களில் ஒருவர். சட்டமன்ற உறுப்பினராகவும், காமராஜர் ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றிய இவரது பெயரே விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயராக இருந்தது.

ராமசாமி படையாச்சியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் அவரது உருவப்படத்தையும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் திறந்துவைத்தார். இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

அதனருகே அவரின் வெண்கலச் சிலையும் நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இணைந்து திறந்துவைத்தனர்.

விழாவில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி. சம்பத், கே.சி. வீரமணி, துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை உயரதிகாரிகளும் பங்கேற்றனர். ராமசாமி படையாச்சியாரின் மகன் ராமதாஸ் விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

மணிமண்டபத்தை திறந்துவைத்தபின் விழா மேடையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் தொட்டே பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆட்சியை அதிமுக வழங்கி வருவதாகக் கூறினார். 

[…]

தேர்தல்
தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டம்?

உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தேதியை டிசம்பர் 2-ந் தேதி தெரிவிப்பதாக அண்மையில் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு தனித்தனியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாமா? என்று மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. 2 கட்ட தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாகவும், டிசம்பர் மாத இறுதியில் பஞ்சாயத்துகளுக்கான தேர்தலையும், ஜனவரி மாத தொடக்கத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தலையும் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

[…]

அதிமுக
தமிழ்நாடு

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம்..!

சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இக்கூட்டம் நடந்தது. பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளது.

மேலும் அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிமுகவின் உட்கட்சிப் பதவிகளுக்கு போட்டியிட விரும்புகிறவர், தற்போதைய நிலையில், 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோருக்கும், இந்த விதிகள் பொருந்தும் என்றும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

[…]

இளைஞர்
தமிழ்நாடு

பழுதடைந்த பாலத்தின் ஓட்டையில் புகுந்து மறுபுறம் வெளியே வரும் இளைஞர் - வீடியோ

நாகையில் இளைஞர் ஒருவர் பழுதடைந்த பாலத்தின் ஓட்டையில் ஆபத்தான நிலையில் உள்ளே நுழைந்து மறுபக்கம் வெளியே வரும் வீடியோ வெளியாகி உள்ளது.

அக்கரைக்குளத்தில் உள்ள பழமை வாய்ந்த தேவநதி பாலம் கடந்த பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக பாலத்தின் நடுவே ஆழ்துளை கிணறு போல பெரிய ஓட்டை விழுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் அந்த ஓட்டை வழியாக அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கீழே இறங்கி பாலத்தின் கீழ் வழியாக ஆபத்தை உணராமல் வெளியே வரும் வீடியோவை பலரும்  பகிர்ந்து வருகின்றனர்.

[…]

தங்கமணி
தமிழ்நாடு

2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. அதிசயம் நிகழ்த்தும் - அமைச்சர் தங்கமணி

வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, வெற்றியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பிப்போம் என்ற அமைச்சர் தங்கமணி பேசி உள்ளார்.

சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், ஒருபுறம் எதிரி, மறுபுறம் துரோகி என அனைவரையும் சமாளித்து ஆட்சியை முதலமைச்சர் சிறப்பாக நடத்தி வருகிறார் என்றார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக தொண்டர்களையும் ஆட்சியையும் காப்பாற்றும் தலைவராக முதலமைச்சர் உருவாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதிசயம் நடக்கும் என சிலர் கூறி வருவதாக கூறிய அமைச்சர், 2021ல் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று அதிசயம் நடக்கும் என்றார். வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று அந்த வெற்றியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்பிப்போம் என்று தங்கமணி தெரிவித்தார்.

[…]

திருச்சி
தமிழ்நாடு

6 மாத கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலை...போலீசாரின் அறிவுரைக்கு பின் நீதி.!

திருச்சி மாவட்டம் முசிறியில் 6 மாத கர்ப்பிணியான காதலியை, திருமணம் செய்ய மறுத்த காதலன், போலீசாரின் அறிவுரையை ஏற்று கோவிலில் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

துறையூர் பச்சமலை, தண்ணீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப். 10 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவருக்கு, அதே பகுதியைச்சேர்ந்த சூரியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூரியா கர்ப்பிணியாகி 6 மாதம் ஆன நிலையில் பெற்றோருக்கு தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

மகளை திருமணம் செய்யுமாறு பிரதாப்பிடம் வற்யுறுத்திய போது மறுத்ததால் போலீசில் புகார் அளித்தனர்.விசாரணையில் இருவரும் மேஜர் என்று தெரியவந்ததால், பிரதாப்பை அழைத்து அறிவுரை வழங்கினர். இதில் மனம் மாறி கோவிலில் வைத்து சூரியாவின் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

[…]

வானிலை
தமிழ்நாடு

தென் மாவட்டங்களுக்கு.. கனமழை எச்சரிக்கை..!

தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ராமநாதபுரம், திருநெல்வேலி தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட வானிலை தகவலில், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு திருவண்ணாமலை, கடலூர் விழுப்புரம், தேனி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தஞ்சை  மாவட்டம் மஞ்சளாறு பகுதியில் 9 செ.மீ மழையும், நாகையில் 8 செ.மீ மழையும், சோழிங்கநல்லூர், சிதம்பரம், மரக்காணம், பாளையங்கோட்டை பகுதிகளில் 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. 

புதுவை யூனியன் பிரதேசத்தைச்சேர்ந்த காரைக்காலில் இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் தேங்கியுள்ளது.

இதில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

[…]

சுப்ரமணியன் சுவாமி
தமிழ்நாடு

சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள்

ரஜினி தனது பட விளம்பரத்திற்காக மட்டுமே அரசியல் பேசுகிறார் என, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ரஜினியின் அரசியல் வருகை குறித்து கேட்டபோது, நடிகர்கள் தமிழகத்திற்காக எதுவும் செய்யப்போவதில்லை என்றார்.

மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்பம் குறித்து கேட்டபோது அதுபற்றி  தனக்கு தெரியாது என பதிலளித்தார்.

சசிகலா இன்னும் ஓன்று அல்லது ஒன்றைரை ஆண்டுக்குள் விடுதலையாகி வருவார். கட்சியை நல்ல முறையில் அமைப்புகளோடு நடத்த சசிகலாவுக்கு திறமை உள்ளது. அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம் தான் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன்..

[…]

தென்காசி
தமிழ்நாடு

தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி உதயம்..!

தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி இன்று உதயமானது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, புதிய மாவட்டத்திற்கான ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இனறு தென்காசி இசக்கிமகால் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி புதிய மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தொடங்கி வைத்தார்.புதிய மாவட்டத்திற்கான நிறைவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

[…]

கொலை
தமிழ்நாடு

முறையற்ற உறவால் வந்த வினை! திருமணமாகி 5வது மாதத்தில் பெண் கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட இளம் பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் அந்தப் பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் அருகே கடந்த 18ஆம் தேதி, கைகள் கட்டப்பட்ட, வாயில் துணிவைத்து அடைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர்.

விசாரணையில் அந்தப் பெண் நாமக்கல் மாவட்டம் ராம்புதூரைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ரமேஷ் என்பவரது மனைவி திருமங்கை என்பது தெரியவந்தது. ஒரே ஓட்டலில் பணிபுரிந்து வந்த இருவரும் காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துள்ளனர்.

கடந்த 17ஆம் தேதி மாலை கோவிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற திருமங்கை இரவு வீடு திரும்பவில்லை என்கிறார் ரமேஷ். செல்போனும் சுவிட்ச் ஆஃப் ஆன நிலையில், காலை திருமங்கையின் உடல் மீட்கப்பட்ட செய்தி கிடைத்துள்ளது.

இதனையடுத்து திருமங்கையின் செல்போன் பதிவுகளை ஆராய்ந்த போலீசார், கடைசியாக அவர் சேலம் மாவட்டம், சோத்துநாயக்கன்காட்டைச் சேர்ந்த தனபால் என்பவனிடம் பேசியிருப்பதை கண்டறிந்தனர். நாமக்கல் சென்று அவனை பிடித்து வந்து விசாரணை செய்ததில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

22 வயதான தனபால் நாமக்கல் பகுதியில் ஜே.சி.பி இயந்திரம் ஓட்டிக் கொண்டிருந்தபோது திருமங்கை வேலை செய்த ஓட்டலுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது இருவருக்குமிடையே முறையற்ற உறவு ஏற்பட்டிருக்கிறது.

வயதை காரணம் காட்டி தனபாலை திருமணம் செய்ய மறுத்த திருமங்கை, உடன் பணிபுரிந்த ரமேஷை கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்திருக்கிறார்.

இருப்பினும் தனபாலுடனான உறவை துண்டிக்க மனமின்றி, திருமணத்துக்குப் பிறகும் அவ்வப்போது அவனுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோவிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் நாமக்கலிலுள்ள தனபாலின் அறையில் அவனோடு தனிமையை கழித்துள்ளார்.

அப்போது திருமங்கையின் கையில் “ஆடம்ஸ்” என பச்சை குத்தியிருந்ததைப் பார்த்த தனபால், அது யாரென்று கேட்டுள்ளான். அது தனது கணவரின் மற்றொரு பெயர் என திருமங்கை கூறியதை நம்பாமல், அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். வாக்குவாதம் முற்றி திருமங்கையின் கைகளைக் கட்டியும், வாயில் துணியை வைத்து அடைத்தும், கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை தனபால் ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.

பின்னர் ஊருக்குச் செல்வதாகக் கூறி நண்பனின் காரை வாங்கி, அதில் உடலை ஏற்றிக் கொண்டுவந்து மூலனூர் பகுதியில் சாலையோரம் வீசிச் சென்றுள்ளான் தனபால்.

தனபாலை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

[…]

ரஜினிகாந்த்
தமிழ்நாடு

2021ல் அற்புதம் நிகழும்- ரஜினி

2021-ஆம் ஆண்டில் அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மத்திய அரசின் விருதைப் பெற்று கோவாவில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் நான் வாங்கிய விருதுக்கு தமிழ் மக்கள்தான் காரணம், அந்த விருதை தமிழ் மக்களுக்கே தமிழக மக்களுக்கே சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

கமல்ஹாசனுடன் இணைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி வருகிறதே என செய்தியாளர்கள் கேட்டபோது, அதுபற்றி இப்போது பேச விரும்பவில்லை என ரஜினி பதிலளித்தார்.

கமலும், ரஜினியும் இணைவது ஜீரோவும் ஜீரோவும் இணைவதற்கு சமம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது பற்றியும் தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றியும் செய்தியாளர்கள் கேட்டபோது, 2021-ல் அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் என ரஜினி பதிலளித்தார்.

[…]

ரஜினிகாந்த்
தமிழ்நாடு

2021ல் அற்புதம் நிகழும்- ரஜினி

2021-ஆம் ஆண்டில் அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மத்திய அரசின் விருதைப் பெற்று கோவாவில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் நான் வாங்கிய விருதுக்கு தமிழ் மக்கள்தான் காரணம், அந்த விருதை தமிழ் மக்களுக்கே தமிழக மக்களுக்கே சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

கமல்ஹாசனுடன் இணைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி வருகிறதே என செய்தியாளர்கள் கேட்டபோது, அதுபற்றி இப்போது பேச விரும்பவில்லை என ரஜினி பதிலளித்தார்.

கமலும், ரஜினியும் இணைவது ஜீரோவும் ஜீரோவும் இணைவதற்கு சமம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது பற்றியும் தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றியும் செய்தியாளர்கள் கேட்டபோது, 2021-ல் அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் என ரஜினி பதிலளித்தார்.

[…]

பெண்
தமிழ்நாடு

உடலில் ஊசியுடன் வைத்து தையல் : டாக்டர், நர்ஸ் சஸ்பெண்ட்

ராமநாதபுரம் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்துக்குப்பின் உடைந்த ஊசியுடன் வைத்து தையல் போட்டதால், உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர், செவிலியர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உச்சிப்புளியை அடுத்த மரவெட்டி வலசை பகுதியை சேர்ந்த ரம்யா பிரசவத்துக்காக உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு கடந்த 19 ந் தேதி ரம்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரம்யாவுக்கு தொடர்ந்து உதிரப்போக்கு ஏற்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப்பார்த்ததில் அடிவயிற்றுப் பகுதியில் உடைந்த ஊசியின் பாகம் இருப்பது தெரியவந்தது. உடனே அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மீண்டும் எக்ஸ்ரே எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சம்பவ தினத்தன்று உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர் கால தாமதமாக வந்ததால் செவிலியர்கள் இருவர் பிரசவம் பார்த்து, தையல் போட்டதாக பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பிரசவத்துக்குப்பின் தையல் போட்டபோது தவறு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் பத்மா தலைமையிலான 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் யாஷிர், செவிலியர் அன்புச்செல்வி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுரை மருத்துவமனையில் இளம்பெண் ரம்யா உடலில் இருந்த ஊசி அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டது. மகப்பேறு, சிறுநீரகத்துறை,மற்றும் மயக்கவியல் ஆகிய மருத்துவ குழுவினர் 2 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகவும், தற்போது இளம்பெண் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

[…]

போலீஸ்
தமிழ்நாடு

ரோந்து பணியின் போது நிஜ போலீசிடம் சிக்கிய, போலி போலீஸ்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், இன்ஸ்பெக்டர் எனக் கூறிக்கொண்டு வலம் வந்த மோசடி ஆசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாராபுரம் பகுதியை சேர்ந்த செல்வகணேஷ் என்பவர், திருவெண்காடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் விஜயகணேஷ் என்பவரிடம் டாடா சுமோ ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

பின்னர் அந்த காரில் கூம்பு விளக்கு, வாக்கி டாக்கி பொருத்தி, போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, தான் ஒரு இன்ஸ்பெக்டர் எனக்கூறிக்கொண்டு ஒட்டன்சத்திரம் பகுதியில் வலம் வந்துள்ளார்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அருகே இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாசன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, போலீஸ் வாகனத்தில் வந்த செல்வகணேசை பிடித்து விசாரித்ததில், அவன் ஒரு போலி போலீஸ் என தெரியவந்தது.

பின்பு அவனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

[…]

காமராஜ்
தமிழ்நாடு

ரஜினியும், கமலும் இணைவது பேசும் பொருளாக மட்டுமே இருக்கும், நாட்டிற்கு உதவாது - அமைச்சர் காமராஜ்

நடிகர் ரஜினியும், கமலும் இணைவது பேசும் பொருளாக இருக்குமே தவிர, நாட்டிற்கு உதவாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட தாலுக்காக்களில் மகளிர் குழுவைச் சேர்ந்த 509 பேருக்கு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சமுதாய முதலீட்டு நிதியாக ஒருகோடியே 54 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எத்தனை பேர் வந்தாலும், எவராலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது என்றார்.

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

அன்பழகன் உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் விசாரித்தார்

வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் திமுக General Secretaryஅன்பழகனை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அன்பழகன் ஓய்வில் உள்ளார். இந்நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ளஇல்லத்தில் ஓய்வு எடுத்து வரும் அன்பழகனை திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

முன்பை விட அவரது உடல்நலம் தற்போது தேறி உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

[…]

மேட்டூர் அணை
தமிழ்நாடு

100 நாட்களாக 100 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் பருவமழையால், மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 100 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.  

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையானது தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களின் நீராதாரமாக விளங்குகிறது.

இந்த ஆண்டு கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் விடாது பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ம் தேதி 90 அடியாக இருந்த நீர்மட்டம், பிறகு 1 லட்சம் கன அடிக்கு மேல் நீர்வரத்தால் கிடுகிடுவென உயர்ந்து 100 அடியை கடந்து 106 புள்ளி 70 அடியாக உயர்ந்தது.

தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 7ந் தேதி நடப்பாண்டில் முதல் முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அதன்பின் நீர் மட்டம் குறைந்தாலும் செப்டம்பர் 24 மற்றும் அக்டோபர் 23 ஆகிய தேதிகளிலும், இம்மாதம் 11 -ம் தேதி என நடப்பாண்டில் 4 முறை நிரம்பி வழிந்தது மேட்டூர் அணை.

மேலும் இன்றுடன் 100 வது நாளாக நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை 8 மணிக்கு நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

அணைக்கு நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 510 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு 8 ஆயிரத்து 143 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீரும், கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் வெளியேற்றப் பட்டு வருகிறது.

[…]

கொலை
தமிழ்நாடு

வேறு ஜாதி இளைஞருடன் காதல்...!!! மகளை எரித்துக்கொன்ற தாய்

நாகை அருகே 18 வயது கூட நிரம்பாத நிலையில், வேறு ஜாதியை சேர்ந்த இளைஞரை காதலித்த மகளை பெற்ற தாயே தீ வைத்து எரித்துக்கொன்று, தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

நாகை மாவட்டம் வாழ்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரது 17 வயதான மகள் பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இந்நிலையில் தாய் மகள் இருவரும் அதிகாலையில் தீயில் எரிந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் நாகை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகள் உயிரிழந்தார். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீசார் விசாரணையில் 17 வயது சிறுமி அதே பகுதியைச்சேர்ந்த ராஜ்குமார் என்ற 22 வயது இளைஞரை காதலித்து வந்ததாகவும், இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் சிறுமி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வேறு மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே இது தொடர்பாக தாய்க்கும் மகளுக்கும் இரவில் தூங்கும் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தாய் பேச்சை மகள் பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த போது மகள் மீது உமாமகேஸ்வரி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததுடன், தனக்குத்தானே ஊற்றி தீவைத்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் இருவரிடமும் நாகை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மரண வாக்குமூலம் வாங்கியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[…]

கீர்த்தனா
தமிழ்நாடு

அரியலூர் ஆட்சியரின் பெற்றோர் சென்ற கார் ஏற்படுத்திய விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னாவின் பெற்றோர் சென்றதாக கூறப்படும் கார் மோதிய விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவி கீர்த்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துறைமங்லகத்தைச் சேர்ந்த கல்வியியல் மாணவி கீர்த்தனா கடந்த 18ம் தேதி தோட்டத்திற்கு சென்று விட்டு பைக்கில் திரும்பியுள்ளார். மூன்று ரோடு பாலத்தின் சர்வீஸ் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ கார் மோதியதில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட கீர்த்தனா பலத்த காயமடைந்தார்.

விபத்தை ஏற்படுத்திய காரில் வந்தவர்கள் உடனடியாக கீர்த்தனாவை மீட்டு, பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் தலையில் பலத்த காயமடைந்த கீர்த்தனா திருச்சி கே.எம்.சி.மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் அரியலூர் மாவட்ட ஊராட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்டது என்றும் அந்த காரை ஆட்சியர் ரத்னா தனது குடும்பத்தின் சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[…]

கொலை
தமிழ்நாடு

எந்த அடிப்படையில் மேலவளவு கொலையில் 13 பேர் விடுதலை முடிவு? நீதிமன்றம் கேள்வி

மேலவளைவு கொலையில், 13 பேரை விடுதலை செய்யும்முன் அதற்காக தயார் செய்யப்பட்ட பட்டியலை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் படுகொலை  வழக்கில் 13 பேர் நன்னடத்தையில் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விடுதலை தொடர்பான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 13 பேருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், எந்த அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு பதில் அளிக்கவும், முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட விடுதலையாவோர்  பட்டியலை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

[…]

கமல்ஹாசன்
தமிழ்நாடு

தேவைப்பட்டால் தான் ரஜினியும், நானும் இணைவோம் - கமல்ஹாசன்

தமிழகத்தின் நலனுக்காக தேவைப்பட்டால் தான் ரஜினியுடன் இணைய உள்ளதாக கூறியதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் அளித்த பங்களிப்பை பாராட்டி ஒடிசாவில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. அதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு மேலதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ரஜினியும் தானும் நண்பர்கள் என்பதை விட தமிழகத்தின் நலன் முக்கியம் என்று கூறியுள்ளார்.

[…]

ரஜினிகாந்த்
தமிழ்நாடு

மக்கள் நலனுக்காக கமலுடன் இணைந்து செயல்பட தயார் - ரஜினிகாந்த்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து, ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து நிதர்சனமான உண்மை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களின் நன்மைக்காக கமலுடன் இணைந்து செயல்பட தயார் என்று ரஜினியும் கூறியுள்ளார்.

அண்மையில், சென்னையில் நடைபெற்ற கமல் 60 என்ற விழாவில் பேசிய ரஜினிகாந்த், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராவார் என கனவில்கூட நினைத்திருக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்துவிடும் என்று பலரும் பேசிய நிலையில் அதிசயமாகவும் அற்புதமாகவும் அவரது ஆட்சி நீடிப்பதாக ரஜினி தெரிவித்திருந்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ரஜினிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது குறித்து ரஜினியின் விமர்சனத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கமல், ரஜினிகாந்த் கூறியது விமர்சனம் அல்ல, நிதர்சனம் என்றார்.

மேலும், மக்கள் நலனுக்காக ரஜினியுடன் இணைந்து பயணிக்கத் தயார் என்றும் கமல் கூறினார். இதனைத் தொடர்ந்து, சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக கோவா சென்ற ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்களுடைய நலனுக்காக கமலுடன் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என கூறினார்.

[…]

காயத்ரி
தமிழ்நாடு

சிறுத்தைகளால் கலக்கத்தில் காயத்திரி..! டிவிட்டர் கணக்கு முடக்கம்

இந்து மதவழிபாட்டு தளங்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்க வேண்டும் என்று டிவிட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணியினர் செருப்புகளை வீசி போராட்டம் நடத்தினர். இதற்கிடையே காயத்ரி ரகுராமின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தன்னுடன் நடனமாடிய நடிகரின் தோளில் அனாசயமாக தனது காலை தூக்கிபோட்டு தனது நடன திறமையை காட்டியதால் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை காயத்திரி ரகுராம்.

போதிய படவாய்ப்புகள் இல்லாததால் நடிகை காயத்திரிரகுராம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோவிலாக இருக்கும் என்று மேடையில் பேசி இருந்தார்.

மேலும் இந்து கோவில்கள், இந்து மத கடவுள்களை தொடர்ந்து விமர்சிக்கும் விதமாக திருமாவளவன் பேசி வருவதாக கூறி ட்விட்டரில் எதிர் கருத்து பதிவு செய்தார் நடிகை காயத்திரி ரகுராம். அதில் இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் என்று காயத்ரி ரகுராம் குறிப்பிட்டிருந்தார்.

இந்து கோவில்கள் குறித்த பேச்சுக்கு திருமாவளவன் வருத்தம் தெரிவித்து அறிக்கைவிட்ட போது , நடிப்பு பத்தல கிளிசரின் போட்டுக்கங்க என்று மற்றொரு பதிவை வெளியிட்டார் காயத்ரி ரகுராம்.

இதனால் காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தரப்பில் இருந்து காயத்திரிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விசிக மகளிரணியினர் காயத்திரி வீட்டை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

போலீசார் தடுத்து நிறுத்தியதால் மகளிரணியை சேர்ந்தவர்கள் தங்கள் காலில் கிடந்த செருப்பை கழற்றி வீசி காயத்திரிக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தனக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்துவதால் தான் பயந்துவிடப்போவதில்லை என்றும் அந்த கட்சியினர் தனக்கு எதிராக எவ்வளவு கீழ்நிலைக்கும் செல்வார்கள் என்று தனக்கு தெரியும் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

மேலும் தான் பின்பற்றும் இந்து மதத்திற்காக தனது உயிரையும் கொடுக்க தயார் என்று கூறிய காயத்திரி, நவம்பர் 27 ந்தேதி காலை 10 மணிக்கு மெரீனாவிற்கு தனியாளாக தான் வருவதாகவும் துணிவிருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தன்னை அங்கு வந்து எதிர்கொள்ளட்டும் என்றும் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.  

இந்த நிலையில் காயத்திரி ரகுராமின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதற்கிடையே டெல்லியில் இருந்து பேஸ்புக் நேரலையில் தங்கள் கட்சியினருடன் பேசிய திருமாவளவன், விரல் கொண்டு நசுக்கும் எறும்பை வேல் கொண்டு தாக்கலாமா ? என்றும் பெண்களை வைத்து தொழில் செய்து, ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ள தற்குறிகளுக்கு என்ன தெரியும் என்றும் அவிழ்த்து போட்டும் ஆடைகளை அகற்றியும் நடிப்பது அவர்களுக்கு தொழில் எனவே அவர்களுக்கு எதிராக போராடுவது வீண் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

[…]

குழந்தையை
தமிழ்நாடு

கைதவறி விழுந்ததா குழந்தை ? போலீசார் தொடர் விசாரணை

சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவிக்கப்பட்ட குழந்தையின் இரு கைகளிலும் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ள நிலையில் பயிற்சி மருத்துவர்கள் குழந்தையை கீழே தவறவிட்டுவிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆரோக்கியமேரி பிரசவத்துக்காக அக்டோபர் மாதம் ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்து இன்குபேட்டரில் வைத்திருந்துள்ளனர். 9 நாட்கள் கழித்து ஆரோக்கியமேரி பார்த்தபோது, குழந்தையின் இரு கைகளிலும் முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டிருந்ததாகவும் தலையிலும் காயமிருந்ததாகவும் கூறப்படுகிறது.

தனக்கு பிரசவம் பார்த்தவர்கள் பயிற்சி மருத்துவர்கள் என்றும் அவர்கள் குழந்தையை கீழே தவறவிட்டதால்தான் அதன் கைகளில் முறிவு ஏற்பட்டது என்றும் ஆரோக்கியமேரி கூறுகிறார். 

தற்போது குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆரோக்கியமேரியின் இந்தப் புகாரை மறுக்கும் மருத்துவமனை நிர்வாகம், குழந்தை பிறக்கும்போதே அதிக எடையுடன் இருந்ததாகவும் அதன் காரணமாக வெளியே எடுக்கும்போது எலும்புமுறிவு ஏற்பட்டதாகவும் கூறினர்.

தாய் ஆரோக்கியமேரி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மருத்துவமனையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

[…]

ஈஸ்வரன்
தமிழ்நாடு

நடிகர் ரஜினியின் கருத்து அறியாமையின் வெளிப்பாடு: கொ.ம.தே.க ஈஸ்வரன்

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானதை போல், நாளை அதிசயம் நிகழ்ந்து, தானும் முதல்வராவேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கும் கருத்து, அறியாமையின் வெளிப்பாடு என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென்று முதல்வராகவில்லை என்றும், கட்சி பதவிகள், எம்எல்ஏ, எம்.பி, அமைச்சர் என படிப்படியாக பல்வேறு பதவிகளை வகித்து, அதன்பின்னரே, முதலமைச்சரானார் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, எம்ஜிஆரும், நேரடியாக முதலமைச்சர் ஆகவில்லை என்றும், படிப்படியாக அரசியலில் வளர்ந்து, முதலமைச்சர் ஆனவர் என்றும் ஈஸ்வரன் கூறியுள்ளார். எனவே, மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டு, தானும் முதலமைச்சர் ஆவேன் என நடிகர் ரஜினிகாந்த் நினைத்தால், அது தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வதாகும் என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

[…]

அமைச்சரவைக் கூட்டம்
தமிழ்நாடு

வரும் 19ல் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் நிதிஒதுக்கீடு செய்வது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாநது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

துணை முதலமைச்சரின் அமெரிக்கா சுற்றுப்பயணத்தின்போது, பெறப்பட்ட முதலீடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

உரிமை மீட்புப் போராட்டம் மு.க.ஸ்டாலின் சூளுரை....

அதிமுக ஆட்சியில் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உரிமை மீட்பு போராட்டங்கள் தொடரும் என சூளுரைத்திருக்கிறார். 

சேலம் ஐந்துரோடு அருகே, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. வீரபாண்டி ஆறுமுகம் எழுத்துகள் தொகுக்கப்பட்டு, "திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்" என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட, வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினரும், திமுக நிர்வாகிகளும் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்நாட்டில், தாம் மிசாவில் கைது செய்யப்பட்டேனா? என சிலர், விவஸ்தையே இல்லாமல் விவாதித்துக் கொண்டிருப்பதாக சாடினார்.

மிசா சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படவில்லை என பொய்யான தகவல்களை சிலர் பரப்பிக் கொண்டிருப்பதாகவும், மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதிமுக ஆட்சியில் பறிபோகும் மாநில உரிமைகளை மீட்பதற்காக போராட்டங்கள் தொடரும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

[…]

உதயநிதி
தமிழ்நாடு

பஞ்சமி நில விவகாரம் - உதயநிதிக்கு நோட்டீஸ்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் இருந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், முரசொலி அறக்கட்டளையின் மேலாண் இயக்குநர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலினுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வரும் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் சென்னை சாஸ்திரி பவனில் விசாரணை நடைபெறும் என்றும், அதற்குத் தேவையான ஆவணங்கள், கோப்புகள், தொடர்பான அறிக்கைகளுடன் ஆஜராகுமாறு  நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் விசாரணை நடத்துவார் என்றும், புகார்தாரரும் விசாரணையின்போது அழைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

தேர்தல்
தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் - கட்சிகள் தீவிரம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில், அதிமுக சார்பில், இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன. மாவட்ட தலைநகரங்களில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் இன்றும், நாளையும், விருப்ப மனுக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனு வாங்கும் பணி நேற்று துவங்கியது. வரும் 20 ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன. சென்னை மேயர் பதவிக்கு திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட இளைஞர் அணியினர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இதனிடையே, மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமியை பணியிட மாற்றம் செய்துள்ள தமிழக அரசுக்கு திமுக தலைவர், மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பணியிடமாற்றம் செய்யப்பட்டது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

[…]

வாக்குவாதம்
தமிழ்நாடு

பொதுமேடையில் திமுக எம்எல்ஏ அமைச்சருடன் வாக்குவாதம்...

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமாருக்கும் இடையே மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஆதரவாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்ட மேடையில் மைக்கில் பேசிய எம்.எல்.ஏ நந்தகுமார், தமது தொகுதியில் பெறப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து அவரது தொகுதியைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண்ணை மேடைக்கு அழைத்த நந்தகுமார், அவருக்கு விதவை பென்ஷன் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அமைச்சரைப் பார்த்து புகார் கூறினார்.

இதனைக் கேட்ட அமைச்சர், விளம்பரத்துக்காக இப்படி செய்ய வேண்டாம் என எம்.எல்.ஏ நந்தகுமாரைப் பார்த்துக் கூறியதாகத் சொல்லப்படுகிறது. இதனையடுத்து இருவருக்கும் மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கீழே இருந்து அவர்களது ஆதரவாளர்கள் மேடையை நோக்கி வந்து கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வாக்குவாதம் கைலகலப்பாக மாறிய சூழலில் அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு நியாயம் கிடைக்க வேண்டுமெனில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திமுக எம்.எல்.ஏ குறைகளை தெரிவிதிருக்கலாம் என்றார். அவற்றை தவிர்த்து மேடையில் நின்று கொண்டு அவ்வாறு செய்தது மேடை நாகரீகமற்ற செயல் என தெரிவித்தார்.   

[…]

சரவணாஸ்டோர்ஸ்
தமிழ்நாடு

பிளாக் மெயில் கும்பலுக்கு ரூ15 லட்சம் கொடுத்தது ஏன் ? திருடனுக்கு தேள் கொட்டிய கதை

சென்னை தியாகராய நகர் சரவணாஸ்டோர்ஸ் எலைட் தங்க நகை கடையில் தரமற்ற தங்க நகை விற்பதாக  கூறி 15 லட்சம் ரூபாயை மிரட்டி பெற்ற கட்டப்பஞ்சாயத்து கும்பல் ஒன்று, மீண்டும் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது.

திருடனுக்கு தேள் கொட்டியது போல கடை உரிமையாளர், சிக்கிய பரிதாபம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தூத்துக்குடி மாவட்டம் பணிக்க நாடார் குடியிருப்பை பூர்வீகமாக கொண்டவர் யோகரத்தினம் இவரது மகன் மருத்துவர் சிவா அருள் துரை. இவர் சென்னை தியாகராய நகர் துரைச்சாமி சுரங்க பாலம் அருகில் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் என்ற பெயரில் நகை கடை நடத்தி வருகின்றார்.

இந்த கடைக்கு கடந்த 3ந்தேதி திருவேற்காடு சுந்தரா சோழபுரம் ஏழுமலை நகரைச் சேர்ந்த தனசேகர் என்பவர் நகை வாங்க சென்றுள்ளார். தான் கொண்டு சென்ற தங்க நாணயங்கள் சிலவற்றை கொடுத்து 3 சவரனில் தங்க சங்கிலி ஒன்றை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு அங்குள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து திரும்பிய தனசேகர், தான் புதிதாக வாங்கிய தங்க சங்கிலியில் கொக்கி உடைந்து விட்டதாகவும், தங்கத்தின் தரத்தில் தனக்கு சந்தேகம் எழுவதாகவும் கூறியுள்ளார்.

அப்போது கடை ஊழியர்கள் தங்கசங்கிலியை வாங்கி சரிசெய்ய முயன்ற போது தங்க சங்கிலியின் கம்பிக்குள் சிறிய அளவிலான வெள்ளி உருண்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து தன்னை பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகி என்றும் தரம் குறைந்த தங்கம் விற்பதை கண்டறிந்து விட்டதால் ஊடகங்களை அழைத்து கடையின் பெயரை கெடுத்து விடுவேன் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் கூறி மிரட்டியதாகவும், செல்போன் மூலம் பேசி இரு வழக்கறிஞர்களை வரவழைத்ததாகவும் கூறப்படுகின்றது.

சிறிது நேரத்தில் அங்கு வந்த இரு வழக்கறிஞர்களும் சத்தமிட, கடையின் உரிமையாளர் சிவா அருள் துரை, தனியாக பேசலாம் என்று அழைத்துச்சென்று, அவர்களுடன் சமாதனம் பேசியுள்ளார். கடையில் வியாபார நேரம் என்றும் தீபாவளி விற்பனை தொடர்பான கணக்குகள் ஏதும் இதுவரை தாக்கல் செய்யவில்லை, அதனால் பிரச்சனை வேண்டாம் சத்தமாக பேசாதீர்கள் 15 லட்சம் ரூபாய் தருகிறேன் பிரச்சனையை கமுக்கமாக முடித்துக் கொள்ளலாம் என்று திருடனுக்கு தேள் கொட்டியது போல நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

ருசி கண்ட பூனையான தனசேகர், இதனை தனது கூட்டாளிகளிடம் தெரிவிக்க, கூடுதலாக ஒரு கோடி ரூபாய் பணம் பறிக்கும் திட்டத்துடன் மீண்டும் சரவணாஸ்டோர்ஸ் எலைட் நகைகடைக்கு புதன்கிழமை மாலை சென்றுள்ளது தனசேகர் தலைமையிலான 16 பேர் கொண்ட பிளாக் மெயில் கும்பல்..!

அந்த தங்கசங்கிலி தரம் குறைவாக இருந்ததால் கழுத்தில் காயம் ஏற்பட்டு விட்டது என கூறி ஒரு கோடி ரூபாய் கேட்டு மீண்டும் பஞ்சாயத்தை கூட்டியுள்ளனர். இந்த முறை கடை உரிமையாளர் சிவா அருள் துரை உஷாராகி, தியாகராய நகர் துணை ஆணையர் அசோக் குமாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

காவல் ஆய்வாளர் பாலமுரளி தலைமையில் வந்த காவல்துறையினர் கட்டப்பாஞ்சாயத்து கும்பலை சுற்றி வளைத்த போது 6 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

தனசேகர், வழக்கறிஞர்கள் என்று போலீசிடம் வாதிட்டுக் கொண்டிருந்தவர்கள் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் பிடித்து மாம்பலம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். தனசேகரிடம் நடத்திய விசாரணையில் அவன் யுனிவர்செல் மீடியா என்ற பெயரில் செயல்பட்டு வரும் போலி பத்திரிக்கையாளன் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து தனசேகரையும் மிரட்டி பணம் பறிக்க துணையாக வந்த அரசியல் கட்சி பிரமுகர் ஜீவா, புதுப்பேட்டை செய்யது அபுதாகீர் , வழக்கறிஞர்கள் ஜெகதீஸ்வரன், அமானுல்லா, ஸ்ரீராம், முருகன், திருமால், இடுப்பில் கத்தியுடன்வந்திருந்த கட்டிட ஒப்பந்ததாரர் வெங்கடேசன், தண்டபாணி உள்பட 10 பேரை மாம்பலம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தப்பி ஓடிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தனசேகரிடமிருந்து போலியான காவல்துறை அடையாள அட்டையும் 4 ஊடகம் சார்ந்த போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஜீவா என்பவரிடம் இருந்து 2 துப்பாக்கிகளும், இரண்டு கார்களும் கைப்பற்றப்பட்டன. 10 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏற்கனவே மிரட்டி பறித்த 15 லட்சம் ரூபாயில் 13 லட்சம் ரூபாய் தனசேகரின் வங்கி கணக்கில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவனது காரில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மீதம் உள்ள பணத்தை தன்னுடன் வந்த கும்பலுக்கு செலவழித்ததாக தனசேகர் தெரிவித்துள்ளான்.

மேலும் 15 லட்சம் ரூபாயையும் மிரட்டி பெற்றதாக சிவா அருள் துரை அளித்துள்ள புகாரின் பேரில் தனசேகர் மீது 2 வதாக புதிய வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தங்கம் தரமானது என்றால் எதற்காக பிளாக்மெயிலர் தனசேகருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது ? துப்பாக்கியை காட்டி மிரட்டி பறித்தனர் என்றால், 3 ந்தேதியே ஏன் புகார் அளிக்கப்படவில்லை ? என்ற கேள்விகளுக்கும் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் நகைகடை நிர்வாகம் தரப்பில் இருந்து ஒருவர் கூட கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

[…]

கோவை
தமிழ்நாடு

கோவை அருகே ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு...

கோவை மாவட்டம் சூலூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர், போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விடவே, அவர்கள் மீது ரயில் மோதியதில் துடிதுடித்து உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கவுதம் ஆகிய இரு இளைஞர்கள், சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் அரியர் தேர்வு எழுதுவதற்காக நேற்று அங்கு சென்றனர்.

அருகில் வாடகைக்கு அறை எடுத்து தங்கிய அவர்கள், தற்போது அதே கல்லூரியில் படிக்கும் கொடைக்கானலைச் சேர்ந்த சோதிக் ராஜா, தேனியைச் சேர்ந்த விஸ்வனேஷ் மற்றும் நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோரை மது அருந்த அழைத்ததாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து மதுபாட்டில்கள் வாங்கிய அவர்கள், சூலூர் - இருகூர் இடையே ராவத்தூர் என்ற இடத்தில் உள்ள தண்டவாளத்திற்குச் சென்று அமர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

நேரம் செல்லச் செல்ல போதை தலைக்கேறவே விஸ்வனேஷ் தவிர்த்து மற்று அனைவரும் தண்டவாளத்தில் மயங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயில், தண்டவாளத்தில் மயங்கிக் கிடந்த இளைஞர்கள் மீது ஏறியது. இதில் தண்டவாளத்தில் மது போதையில் மயங்கிக்கிடந்த நால்வரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு சென்ற போத்தனூர் ரயில்வே போலீசார், 4 பேரின் சடலங்களை மீட்டதுடன், காயத்துடன் உயிருக்கு போராடிய விஸ்வனேசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்தின் ஓரத்தில் விஸ்வனேஷ் அமர்ந்திருந்திருக்கலாம் என்றும் அதன் காரணமாக அவர் படுகாயங்களுடன் தப்பி இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போத்தனூர் ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

[…]

அழகிரி
தமிழ்நாடு

”தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்” - மு.க.அழகிரி

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மு.க. அழகிரி , ’ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறியது உண்மை தான்’ என்று தெரிவித்தார்.

[…]

மீன்குஞ்சு
தமிழ்நாடு

சிறுவனின் மூக்கிற்குள் சென்ற மீன்குஞ்சு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே, சிறுவனின் மூக்கிற்குள் சென்ற மீன்குஞ்சு அகற்றப்பட்டது.

மண்ணவேளாம்பட்டியை சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் அருள்குமார் நேற்று மாலை நண்பர்களுடன் வீட்டருகே உள்ள கிணற்றில் குளித்துள்ளான்.

அப்போது மூக்கிற்குள் ஏதோ செல்வதை உணர்ந்த அவன், வலியால் துடித்தபடி பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதையடுத்து அவனை அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

சிறுவனை பரிசோதித்த மருத்துவர் மூக்கிற்குள் உயிருடன் ஜிலேபி மீன் குஞ்சு சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். பிறகு இடுக்கி போன்ற ஒரு உபகரணத்தை வைத்து மருத்துவர்கள் மீன் குஞ்சை வெளியே எடுத்தனர்.

[…]

அரசாணை
தமிழ்நாடு

5 புதிய மாவட்டங்கள் உதயம், தமிழ்நாடு அரசு அரசாணை..!

செங்கல்பட்டு, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி  ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. மேலும், புதிய தாலுகா விவரங்களையும், தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. 

காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி, 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதுகுறித்த அரசாணையை, நவம்பர் 12ஆம் தேதியிட்டு, தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது.

இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தை தலைமையிடமாகவும், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டை தலைமையிடமாகவும் கொண்டு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இதன்படி, திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டும், தென்காசி மாவட்டம் தென்காசியை தலைமையிடமாக கொண்டும் செயல்படும். 

தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர், மூன்றாக பிரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. வேலூர் மாவட்டம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களின், அதனதன் நகரங்களே, தலைமையிடமாக விளங்கும் என்றும், தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம், திண்டிவனம் என இரண்டு வருவாய் கோட்டங்களை உள்ளடக்கிய வகையிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர் ஆகிய வருவாய் கோட்டங்களை உள்ளடக்கியதாகவும், ஏற்படுத்தப்பட்டுள்ளது.

[…]

திமுக
தமிழ்நாடு

திமுக பிரமுகரை அதிரடியாக கைது செய்து இழுத்து சென்ற கியூ பிரிவு போலீசார்

சேலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் அப்படையில் திமுக பிரமுகரை, கியூ பிரிவு போலீசார் இழுத்து காருக்குள் போட்டு தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அயோத்தியாபட்டணம் ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார், தனியார் பள்ளியில் உறவினரின் குழந்தையை சேர்ப்பது தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது, பள்ளி வளாகத்தில் வந்த வந்த ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் அவரை தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர் வர மறுத்த நிலையில் நான்கு பேரும் சேர்ந்து பலவந்தமாக இழுத்துச் சென்று காருக்குள் தூக்கிப் போட்டுக் கொண்டு அவசரமாக சென்றனர்.

இதையடுத்து விஜயகுமார் கடத்தப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகாரை வாங்க போலீசார் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே விஜயகுமார் இழுத்துச் செல்லப்படும் சிசிடிவிக் காட்சிகள் பள்ளி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது- அதில் அவரை இழுத்து செல்வது சேலம் கியு பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலா தலைமையிலான போலீசார் என தெரியவந்தது.

இதனை அடுத்து திமுகவினர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதற்கிடையே இரவு 11 மணியளவில் விஜயகுமார் விடுவிக்கப்பட்டார். அவரை எதற்காக போலீசார் இழுத்துச் சென்றனர் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

[…]

கொலை
தமிழ்நாடு

அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை.. விருதுநகரில் நள்ளிரவில் பயங்கரம்..!

விருதுநகரில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை  செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்த சண்முகவேல் ராஜன் அதிமுகவில் மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.

தகவலறிந்த விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சண்முகவேல் ராஜன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அல்லம்பட்டியை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சண்முகவேல் ராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

[…]

சீமான்
தமிழ்நாடு

ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்த விஜயகாந்த் ஆளுமைமிக்கவர் - சீமான்

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது துணிச்சலுடன் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் தான் ஆளுமைமிக்கவர் என்றும், வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு வந்தேன் என்று சொல்பவர்கள் ஆளுமை மிக்கவர்கள் அல்ல என்றும் நாம் தமிழர் கட்சி ஒருக்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1996 ம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக அருகில் மூப்பனாரை வைத்துக்கொண்டு ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்த ரஜினிகாந்த் அதன்பிறகு ஏன் குரல் கொடுக்கவில்லை என்றும் கேள்வி விடுத்தார்.

[…]

தேர்வு
தமிழ்நாடு

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகளை, தேர்வு நடைபெற்ற 72 நாட்களுக்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வில் சுமார் 16 லட்சத்து 29 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மதிப்பெண் மற்றும் தர வரிசையை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ல், பதிவெண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு நடைபெற்ற 72 நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

[…]

ஸ்மிரிதி இரானி
தமிழ்நாடு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சந்திப்பு

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய  ஜவுளித்துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி சந்தித்து பேசினார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அவர், மரியாதை நிமித்தமாக முதலமைச்சரை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர், முதலமைச்சரிடம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. 

[…]

ஹவாலா
தமிழ்நாடு

ரூ.3,300 கோடி ஹவாலா மோசடி..!

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போலி ரசீதுகள் மூலம் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை ஹவாலா மோசடியில் ஈடுபட்டது வருமான வரித்துறையினரின் சோதனை மூலம் தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு நிறுவனம் கட்டுமானம் மற்றும் குடிநீர் குழாய் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. குழாய் அமைக்கும் அரசு பணிகளில் 450 கோடி ரூபாய் GST- மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.

தமிழகத்தைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை, கோவா, டெல்லி மற்றும் ஆக்ரா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக சோதனை நடத்தி வந்தனர். இந்தச் சோதனையில் பல்வேறு நிறுவனங்கள் போலியான ஒப்பந்தங்கள், போலியான ரசீதுகள் மூலம் ஹவாலா மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இவ்வாறாக நாடு முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவிற்கு ஹவாலா மோசடி நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் கணக்கில் காட்டப்படாத 4 கோடி ரூபாய் பணமும், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிற்கு நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் ஆக்ராவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்கு 150 கோடி ரூபாய்க்கும் மேல் ரொக்கமாக தரப்பட்டதும் வருமான வரித்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணமோசடியில் பெரும் முன்னணி நிறுவனங்களே ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் மோசடியில் தொடர்புள்ள நிறுவனங்களின் பெயரோ அல்லது நபர்களின் பெயரோ இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், இன்று ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனும் ஸ்டாலினை சந்தித்தார்.

அப்போது விரைவில் வர உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம பேசிய திருமாவளவனிடம், உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும என்று மட்டும் கூறினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், ஸ்டாலின் உடனான சந்திப்பின் போது உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசவில்லை என்றார். அதே சமயம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் திமுக தலைமையில் எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

[…]

பால்
தமிழ்நாடு

பாலில் புற்றுநோய் வேதிப் பொருள்?

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட பால் மாதிரிகள் சிலவற்றில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய 'அப்லாடாக்ஸின் எம்1' வேதிப் பொருள் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து விரிவாக ஆய்வுசெய்ய தமிழக அரசு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 34 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுபோக தமிழகத்தில் உற்பத்தியாகும் மற்ற பால் தனியார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் பாலின் தரத்தை அறியும் நாடு தழுவிய ஆய்வு ஒன்றை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்தியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 114 நகரங்களில் 551 மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதில் புற்றுநோயை ஏற்படுத்தும் 'அப்லாடாக்ஸின் எம்1' அளவு 88 மாதிரிகளில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகம் இருந்தது  கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்ய உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த குழுவில், உணவுப் பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின், கால்நடைப் பல்கலைக்கழகம் மற்றும் சில ஆய்வு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கால்நடைத் தீவனம் மற்றும் பால் மாதிரிகளை சேகரித்து அதில் நச்சுப் பொருட்கள் உள்ளனவா என ஆய்வுசெய்வதே இந்த குழுவின் நோக்கம். இதற்காக மாநிலம் முழுவதும் 135 பால் உற்பத்தி மையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் 135 பால் உற்பத்தி மையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  'அப்லாடாக்ஸின் எம்1' வேதிபொருள், கால்நடைத் தீவனங்கள் மூலம் பாலில் கலப்பதாக கூறப்படுகிறது.

மாடுகள் உண்ணும் தீவனத்தில் பூஞ்சைகள் இருந்தால் அவை கல்லீரலில் 'அப்லாடாக்ஸின் பி1' ஆக சேரும். பின் அங்கிருந்து சுரக்கும் பாலில் கலக்கும். அப்போது 'அப்லாடாக்ஸின் எம்1' ஆக மாறும். பாலில் இது குறிப்பிட்ட அளவை விட அதிகரிக்கும் போது அருந்துவோரின் உடல்நிலையை பாதிக்கும். அடிக்கடி அருந்தினால் புற்றுநோய் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

[…]

நெடுஞ்சாலை
தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ.4,929 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் நிறுத்தம்

தமிழகத்தில் 4 ஆயிரத்து 929 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி விழுப்புரம் - புதுச்சேரி , புதுச்சேரி - பூண்டியங்குப்பம், பூண்டியங்குப்பம் - சட்டநாதபுரம் மற்றும் விழுப்புரம் - நாகப்பட்டிணம் ஆகிய 4 நெடுஞ்சாலை திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜானா திட்டத்தின் கீழ் வரும் விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையிலான 180 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலை திட்டத்தால், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி மற்றும் காரைக்கால் இடையேயான பயண தூரம் குறைவதோடு, தொழில் வளர்ச்சியும் மேம்படும்.

இந்நிலையில் இந்த சாலை திட்டங்களை நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துள்ளது. நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது தாமதாவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

திமுக பொதுக் குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்...

திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசியதற்கு கண்டனம், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, தேர்தலில் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறை ஆகிய தீர்மானங்கள் திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைமை நிலைய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4500 பேர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினின் தனிச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இந்திய அரசியல் சட்டத்தின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

நிதி, கல்வி, மானியம், கடன் வழங்குதல் போன்றவற்றில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க திமுக பொதுக் குழு வலியுறுத்தியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர வகுப்பினர் என்ற சட்டத்திருத்தத்தை திரும்ப பெறுதல், பிறப்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்துதல், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு போன்றவற்றை திமுக பொதுக்குழு வலியுறுத்தியுள்ளது.

தனிச் சிறப்பு தீர்மானம் தவிர்த்து 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, சிலைக்கு அவதூறு ஏற்படுத்தியதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் எனவும், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கையை திரும்பப்பெறவும், தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்பு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே திமுகவின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்கட்சியில் பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரம் திமுக தலைவருக்கும் வழங்கப்பட்டது. இளைஞரணி பொறுப்பில் இருப்பவர்கள் திமுகவில் வேறு பொறுப்புகள் வகிக்க முடியாது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை திமுகவில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு அங்கேயே கிளை அமைத்துக் கொள்ளலாம். அகில இந்திய கட்சியாக தரம் உயர்த்தும் வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உறுப்பினர்களை சேர்த்து தமிழகத்தைப் போலவே அங்கும் செயற்குழு, பொதுக்குழு அமைத்துக் கொள்ளலாம்.

இணையதளம் வழியாகவும் உறுப்பினராக சேர்ந்துக்கொள்ளலாம். திருநங்கைகளை உறுப்பினர்களாக சேர்க்கும் வகையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனிடையே மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு பொதுக் குழுவில் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய நிர்வாகிகள், கட்சிக்குள் அணிகளாக இருந்து கொண்டு செயல்படுபவதாக தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், கட்சிக்குள் அணிகள் இருப்பதில் தவறில்லை என்றும், ஆனால் கட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக அவர்கள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இனி வரும் காலம் சவாலாக இருக்கக் கூடும் எனக் கூறிய ஸ்டாலின், ஒற்றுமை இல்லாமல் என்ன உழைத்தாலும் சாதாரணமாக வெற்றி கிடைக்க விடமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார். அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

[…]

கொலை
தமிழ்நாடு

நடு மண்டையில் நச்.. டிக் டாக் பெண் கொலை..!

திருப்பதி அருகே நடு ரோட்டில் காதல் பாடலுக்கு தோழியுடன்  டிக்டாக்கில் நடனம் ஆடிய பெண் உருட்டு கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கணவரின் எச்சரிக்கையை மீறி டிக்டாக்கில் ஆண் நண்பர்களுடன் நெருங்கியதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

பதினாறு வயதினிலே மயில் மாதிரி வயல் வெளியில் தெலுங்கு பாடலுக்கு டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு சுற்றித்திரிந்த இந்த நடிகையர் திலகம் தான் கணவனால் அடித்துக் கொல்லப்பட்ட பாத்திமா..!

திருப்பதி அடுத்த தணிகிரி மண்டலம் தாலூறு கிராமத்தை சேர்ந்த டெயிலர் சேக்பாஷா வின் மனைவியான பாத்திமா டிக்டாக் வீடியோக்களை பார்க்கும் ஆர்வத்தால் அதற்கு அடிமையானதாக கூறப்படுகின்றது.

லைக்கிற்கு ஆசைபட்டு கடந்த சில மாதங்களாக தன்னுடைய நடிப்புத்திறமையையும் நடன அசைவுகளையும் டிக்டாக்கில் பதிவிட்டு வந்துள்ளார் பாத்திமா. அக்கம்பக்கத்தினர் சூப்பராக இருப்பதாக தூபம் போட, புதிதாக நிறைய நண்பர்கள் கிடைத்ததால் கணவர் கடைக்கு சென்ற பின் வீட்டில் நாட்டிய போரொளியாக மாறி குத்தாட்டம் போட்டுள்ளார் பாத்திமா

பாத்திமாவின் வீடியோக்களுக்கு லைக்குகள் குவிய, வீட்டுக்குள் இருந்த இந்த மயில் வெளியே வந்து வயல் வெளியிலும் வீதியிலும் ஆட தொடங்கி உள்ளது

ஒரு கட்டத்தில் தனது தோழியுடன் நடு ரோட்டில் நின்று டிக் டாக் செய்து பதிவிட்டதால் குடும்பத்திற்குள் பிரச்சனை உருவாகியுள்ளது. மனைவி பாத்திமாவை கணவர் சேக்பாஷா கடுமையாக கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தனது மனைவி பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் சேக்பாஷா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாத்திமாவை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

பாத்திமா டிக் டாக் மூலம் அறிமுகமான சில ஆண் நண்பர்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது. பாத்திமாவின் தவறான நடவடிக்கைகளை அறிந்து உறவினர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கும் அஞ்சாமல் பாத்திமா டிக் டாக் நண்பர்களுடன் நேரத்தை போக்கி வந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த சேக்பாஷா சம்பவத்தன்று, பாத்திமாவை உருட்டு கட்டையால் நடு தலையில் நச்சென்று அடித்து கொலை செய்துள்ளார். அத்தோடு தனது மனைவியை இதற்காக அடித்து கொலை செய்தது வெளியில் தெரிந்தால் குடும்ப கவுரவம் போய் விடும் என்று அஞ்சி, அவர் தற்கொலை செய்து கொண்டது போல் இருக்க வேண்டும் என்பதற்காக பாத்திமாவின் சடலத்தை தூக்கில் தொங்க விட்டு நாடகமாடியுள்ளார் கணவர் சேக்பாஷா..! என்கின்றனர் காவல்துறையினர்.

இதையடுத்து மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சேக்பாஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். பாத்திமாவின் டிக்டாக் மோகம் அவரது வாழ்க்கையை சீரழித்ததோடு, தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்த கணவரையும் கொலையாளியாக்கி சிறைக்கு அனுப்பி வைத்து விட்டதாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

[…]

அயோத்தி
தமிழ்நாடு

அயோத்தி ராமஜென்மபூமி பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.  அங்கு முஸ்லீம்கள் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. 

அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது- அதன்படி, காலை 10.30 மணியளவில் தொடங்கி 11 மணி வரை தீர்ப்பை தலைமை நீதிபதி வாசித்தார். அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்று இருந்த 5 நீதிபதிகள் அமர்வும் ஒருமித்த தீர்ப்பை கொடுத்துள்ளனர்.

அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாராவின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே ராம்லல்லா அமைப்பின் மனுவை ஏற்று சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 3 மாதத்தில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அவ்வாறு உருவாக்கப்படும் அறக்கட்டளை ராமர் கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ளும் என்றும் கூறினர்.

பாபர் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அயோத்தியில் 5 ஏக்கர் பரப்பளவில் மாற்று இடம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதே போல் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அமைக்க வேண்டிய அறக்கட்டளையில் நிர்மோஹி அகாராவுக்கு பிரதிநிதித்துவம் வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

[…]

பாண்டியராஜன்
தமிழ்நாடு

மிசா கைது ஆவணங்களை மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கலாமே? - அமைச்சர் பாண்டியராஜன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது பற்றி, தனக்கு எழுந்த சந்தேகத்தையே கேட்டதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

மிசா சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருந்தால், அதற்கான ஆவணங்களை அவரே வெளியிட்டிருக்கலாமே என்றும் பாண்டியராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் 2 நாட்கள் கழித்து தாம் விரிவான பதிலடி தர இருப்பதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

[…]

கமல்ஹாசன்
தமிழ்நாடு

திருவள்ளுவருக்கு வண்ணம் பூசப்பட்ட சர்ச்சை - கமல்ஹாசன் கருத்து

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமது தொழில் சினிமா என்றும், தமது கடமை  அரசியல் என்றும் குறிப்பிட்டார்.

திருவள்ளுவர் சிலைக்கு வண்ணம் பூசுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, எல்லா மதத்தினரும் அவர் தங்களது மதத்தை சேர்ந்தவர் என்று கூறலாம், ஆனால் அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றார். திருவள்ளுவருக்கு வண்ணம் பூசி, அவருக்கு உரிமை கொண்டாட நினைப்பதாகவும், திருவள்ளுவருக்கு  வண்ணம் பூசுவதை கை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்த கேள்விக்கு, அத்தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கமலஹாசன் பதிலளித்தார்.

[…]

புயல்
தமிழ்நாடு

வங்க கடலில் நாளை புயல் சின்னம்

வங்க கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் உருவாகும் புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்து செல்லும் - வானிலை மையம்

இன்று முதல் 7ந் தேதி வரை மீனவர்கள் வங்க கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம்

இதனிடையே, நாகை, புதுவை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோல, கடலூர், பாம்பன் துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாவதால், மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்க வேண்டாம் என மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீனவர்களுக்கு உரிய முறையில் வானிலை தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதற்கு முன்னரே மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனே கரை திரும்புமாறு தகவல் அனுப்ப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மீன்துறை இயக்குநர் அலுவலகத்தில் மைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து, அனைத்து கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு புயல் குறித்த தகவல் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

[…]

சசிகலா
தமிழ்நாடு

சசிகலாவின் ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

சசிகலாவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, பினாமி பரிவர்த்தனைகள் தடைச் சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முடக்கப்பட்டுள்ள சொத்துகள் 2016ஆம் ஆண்டு நவம்பர்8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குப் பிறகு வாங்கப்பட்டவை என கூறப்படுகிறது. 

பினாமி பெயர்களில் இந்த சொத்துகளை சசிகலா வாங்கியதாக சொல்லப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பரில் ஆப்பரேசன் கிளீன் மணி என்ற பெயரில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. அப்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதில் பினாமி சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டதாக சொல்லப்பட்டது.

மேலும் கார் டிரைவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட வீட்டுப் பணியாளர்களின் பெயர்களில் பினாமி சொத்துகள் வாங்கப்பட்டது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை, புதுச்சேரி, கோவை ஆகிய இடங்களில், சசிகலாவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் 9 சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால்,  புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட், கோவை செந்தில் பேப்பர்ஸ் அண்டு போர்ட்ஸ் என்ற பெயரில் உள்ள ஒரு சொத்து உள்ளிட்டவை முடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரித்துறையின் கீழ் வரும், பினாமி சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கும் பிரிவு, சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பான உத்தரவை சம்மந்தப்பட்ட சார் பதிவாளர்களுக்கும், கம்பெனிகள் பதிவாளருக்கும் அனுப்பியுள்ளது.

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு சசிகலா தரப்புக்கு 90 நாட்கள் அவகாசம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

[…]

சசிகலா
தமிழ்நாடு

சசிகலாவின் ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

சசிகலாவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, பினாமி பரிவர்த்தனைகள் தடைச் சட்டத்தின் கீழ் முடக்கியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முடக்கப்பட்டுள்ள சொத்துகள் 2016ஆம் ஆண்டு நவம்பர்8ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்குப் பிறகு வாங்கப்பட்டவை என கூறப்படுகிறது. 

பினாமி பெயர்களில் இந்த சொத்துகளை சசிகலா வாங்கியதாக சொல்லப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பரில் ஆப்பரேசன் கிளீன் மணி என்ற பெயரில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. அப்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதில் பினாமி சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்டதாக சொல்லப்பட்டது.

மேலும் கார் டிரைவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட வீட்டுப் பணியாளர்களின் பெயர்களில் பினாமி சொத்துகள் வாங்கப்பட்டது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை, புதுச்சேரி, கோவை ஆகிய இடங்களில், சசிகலாவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் 9 சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால்,  புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட், கோவை செந்தில் பேப்பர்ஸ் அண்டு போர்ட்ஸ் என்ற பெயரில் உள்ள ஒரு சொத்து உள்ளிட்டவை முடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரித்துறையின் கீழ் வரும், பினாமி சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்கும் பிரிவு, சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பான உத்தரவை சம்மந்தப்பட்ட சார் பதிவாளர்களுக்கும், கம்பெனிகள் பதிவாளருக்கும் அனுப்பியுள்ளது.

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு சசிகலா தரப்புக்கு 90 நாட்கள் அவகாசம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

தமிழா..திராவிடமா.. என்ற சண்டை நீண்ட நாட்களாக உள்ளது - மு.க.ஸ்டாலின்

தமிழா திராவிடமா என்ற சண்டை நீண்ட நாட்களாக தமிழ் நாட்டில் எழுந்து வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் நெடுஞ்செழியன் எழுதிய ஆசீவகமும் ஐயனார் வரலாறும் என்ற நூலை ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது பேசிய ஸ்டாலின், தமிழா திராவிடமா என்ற சண்டை நீண்ட நாட்களாக தமிழ் நாட்டில் எழுந்து வருகிறது என்றார். பேராசிரியர் நெடுஞ்செழியன் எழுதிய நூலில் திராவிடத்திற்கு உரியது என்றால் தமிழருக்கு உரியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறினார். 

[…]

திருவள்ளுவர் சிலை
தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசி மர்மநபர்கள் அவமதிப்பு

தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசியும் கறுப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். 

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே தமிழர்களால் தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவர் சிலை உள்ளது. கையில் எழுதுகோல் மற்றும் திருக்குறள் ஏந்தியவாறு அமர்ந்த நிலையில் இந்த சிலை நிறுவப்பட்டது.

இந்நிலையில் சிலையின் மீது விஷமிகள் சிலர் சாணத்தை வீசியும், கறுப்பு காகிதத்தால் கண்களை மறைத்தும் அவமதிப்பு செய்துள்ளனர்.

இன்று காலையில் இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த வல்லம் போலீசார் விரைந்து வந்து திருவள்ளூர் சிலையை கழுவி சுத்தம் செய்து மாலை அணிவித்தனர்.

மேலும் அங்கு திரண்டிந்த மக்கள் சிலை அவமதிப்பை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். மர்ம நபர்களை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்ததைதொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

இதற்கிடையே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் அங்கு திரண்டு வந்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு தொடர்பாக தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலைய போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் சீதாராமன் நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் மர்ம நபர்கள் பற்றி விசாரணை நடத்தினார். தஞ்சையில் இருந்து வல்லம் வழியாக திருச்சி செல்லும் சாலையில் இப்பகுதி அமைந்துள்ளதால் அதிகாலை நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்றும், மேலும் பல கோணங்களில்  விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்நிலையில் எம் எல் ஏ நீலமேகம் தலைமையில், சிலை அவமதிப்பைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக தமிழ்ப்பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனை அடுத்து தமிழக போலீஸ் டிஜிபி ஜே கே திரிபதி உத்தரவின் பேரில், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலைய போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் சீதாராமன் நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் மர்ம நபர்கள் பற்றி விசாரணை நடத்தினார். மேலும் அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது.

இந்நிலையில் எம் எல் ஏ நீலமேகம் தலைமையில், சிலை அவமதிப்பைக்கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக தமிழ்ப்பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு தொடர்பாக சிசிடிவி யில் பதிவாகியுள்ள மர்ம நபர் பற்றி விசாரித்து வருவதாக திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ ஜி வரதராஜூலு தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து தொலை தூரத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் வேட்டி கட்டிய நபர் ஒருவர் நடமாடும் காட்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். 

சிலை அவமதிப்பு தொடர்பாக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் வகையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ ஜி வரதராஜூலு மேலும் கூறினார்.

[…]

ராமதாஸ்
தமிழ்நாடு

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுப்போருக்கு ஒரு கிலோ அரிசி - ராமதாஸ்

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு பசுமை தாயகம் சார்பில் ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் சில இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்ததால் அரிசி கொடுக்கும் திட்டம் வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் தமிழ்நாட்டிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ராமதாஸ், மாவட்டத் தலை நகரங்களில் வரும் 9, 10 மற்றும் 16, 17 ஆகிய நாட்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் முகாம்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் மூலம் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

[…]

மழைக்கு
தமிழ்நாடு

தென் தமிழகம், வட தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகம், வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் உள்ள மஹா புயலானது, அதிதீவிர புயலாக மாறி வரும் ஆறாம் தேதி குஜராத் பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. இதேபோல, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 8 சென்டிமீட்டர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 4 சென்டிமீட்டர், சங்கரன்கோவில் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனிடையே, அரபிக் கடலில் தீவிர புயலாக உள்ள மஹா,  அடுத்த சில மணி நேரங்களில் அதிதீவிர புயலாக மாறும் என்றும், வரும் ஆறாம் தேதி குஜராத் மாநிலம் துவாரகா அருகே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஹா தீவிர புயலானது தொடர்ந்து  மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், திசையில் மாற்றமடைந்து வடகிழக்காக குஜராத்தை நோக்கி நகர்கிறது. இந்த புயல் இந்திய துணை கண்ட பகுதியை விட்டு  நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்த நிலையில் திசையில் மாற்றம் பெற்று குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[…]

பேனர்கள்
தமிழ்நாடு

மகனின் திருமண விழாவில் பேனர் - முன்னாள் திமுக MLA மீது வழக்கு பதிவு

நெல்லையில் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு இல்ல திருமண விழாவில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அப்பாவு மகனின் திருமணம் கடந்த ஒன்றாம் தேதி நடந்தது. இந்த நிலையில் பணகுடியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஷான் தாமஸ் மஹால் திருமண மண்டபம் முன்பு பிளக்ஸ் பேனர்கள் வைக்கபட்டன. இந்த பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக அப்பாவு மீது பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின்

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் நம் உயிரோடு கலந்துள்ளனர் என்றும் அவர்கள் நம்மோடு இருக்கும் வரை எந்த கொம்பனும் தமிழகத்தில் நுழைந்து விட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை போல வருகின்ற சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றிபெறும் என்றும் அவர் கூறினார். 

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின்

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்டோர் நம் உயிரோடு கலந்துள்ளனர் என்றும் அவர்கள் நம்மோடு இருக்கும் வரை எந்த கொம்பனும் தமிழகத்தில் நுழைந்து விட முடியாது எனவும் குறிப்பிட்டார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை போல வருகின்ற சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றிபெறும் என்றும் அவர் கூறினார். 

[…]

அதிமுக
தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் குறித்து, வரும் 6ஆம் தேதி, அதிமுக ஆலோசனைக் கூட்டம்

தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் 6ம் தேதி அதிமுக ஆலோசனை நடத்தவுள்ளது.

சென்னையில் அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் கூட்டணியை இறுதிப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

[…]

திமுக
தமிழ்நாடு

ஸ்டாலினை சந்தித்து தனது இல்லத் திருமண விழாவிற்கு அழைப்பு விடுத்தார் எச்.ராஜா

திமுக தலைவர் ஸ்டாலினை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது இல்லத் திருமண விழாவிற்காக அழைப்பு விடுத்ததாக திமுக சார்பில் வெளியிடப்பட்ட  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பூம்புகார் நகரைச் சேர்ந்த சட்ரக் என்பவருக்கு நீரிழிவு நோயால் இடதுகால் அகற்றப்பட்ட நிலையில், அவரின் கோரிக்கையை ஏற்று செயற்கை கால் வழங்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டது.

அதேபோல், திருவிக நகரை சேர்ந்த திமுக உறுப்பினர் சுந்தரமூர்த்தியின் மகன் நவீன் குமார் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவருக்கான கல்வி உதவித்தொகையை அறிவாலயத்தில் ஸ்டாலின் வழங்கியதாகவும் திமுக அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது. 

[…]

ஏஞ்சலா
தமிழ்நாடு

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், டெல்லியில் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் போக்குவரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டாக இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதற்காக 1 பில்லியன் டாலர்கள் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க 200 மில்லியன் யூரோக்கள் அதாவது ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்தார்.

டெல்லியில் காற்று மாசுபாட்டின் ஆபத்தை உணரும் யாரும், டீசல் பேருந்துகளை கழித்துக்கட்டி விட்டு மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்வார்கள் என்றும் ஜெர்மனி பிரதமர் குறிப்பிட்டார்.

[…]

ஏஞ்சலா
தமிழ்நாடு

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஜெர்மனி பிரதமர் நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், டெல்லியில் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் போக்குவரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டாக இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

இதற்காக 1 பில்லியன் டாலர்கள் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க 200 மில்லியன் யூரோக்கள் அதாவது ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்தார்.

டெல்லியில் காற்று மாசுபாட்டின் ஆபத்தை உணரும் யாரும், டீசல் பேருந்துகளை கழித்துக்கட்டி விட்டு மின்சார பேருந்துகளை பயன்படுத்துவதன் அவசியத்தை புரிந்துகொள்வார்கள் என்றும் ஜெர்மனி பிரதமர் குறிப்பிட்டார்.

[…]

கைது
தமிழ்நாடு

2 பெண்களை மணப்பதற்காக இரு முறை மதம் மாறிய பொறியாளர்

மும்பையை சேர்ந்த விதவைப் பெண்ணை மதம் மாறி மறுமணம் செய்து ஏமாற்றி விட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கணினி பொறியாளர் கைது செய்யப்பட்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூரைச் சேர்ந்த தங்கபொன்சன் கடந்த 2010ஆம் ஆண்டு மும்பையில் கணினி பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அங்கு கணவரை இழந்த பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதற்காக இஸ்லாமிய மதத்துக்கு மாறியதாகக் கூறப்படும் தங்கபொன்சனுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

மனைவியை கடந்த 2016ஆம் ஆண்டு சொந்த ஊரான செண்பகராமன்புதூருக்கு அழைத்து வந்தவர், சில காலம் குடும்பம் நடத்தியுள்ளார். தங்கபொன்சன் குடும்பத்தாருக்கு பாத்திமாவை பிடிக்காமல் போகவே அவரை எப்படியாவது கழற்றிவிட்டுவிட்டு மறுமணம் செய்ய திட்டம் போட்டதாகத் தெரிகிறது. இதனை தங்கபொன்சனும் ஏற்றுக்கொண்டு மனைவியை மும்பைக்கே அனுப்ப முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, “ஊரில் சரியாக வருமானம் இல்லை, எனவே முதலில் நீ மும்பையிலுள்ள உன் வீட்டுக்குச் செல், சில நாட்களில் நானும் வந்துவிடுகிறேன்” எனக் கூறி பாத்திமாவை அனுப்பிவைத்துள்ளார். அவரை அனுப்பிவைத்த கையோடு, இஸ்லாமிய மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர், ஷகீலா என்ற பெண்ணை மணந்ததாகச் சொல்லப்படுகிறது.

கணவர் மும்பைக்கு வருவார் எனக் காத்திருந்த பாத்திமாவுக்கு அவர் மறுமணம் செய்த தகவல்தான் கிடைத்துள்ளது. உடனடியாக 2 குழந்தைகளுடன் புறப்பட்டு செண்பகராமன் புதூர் வந்து நியாயம் கேட்டவரை, தங்கபொன்சன் குடும்பத்தார், அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து பாத்திமா நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கணவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் தங்கபொன்சனை கைது செய்து சிறையிலடைத்த காவல்துறையினர், அவரது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[…]

துரைமுருகன்
தமிழ்நாடு

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசுக்கு தெளிவில்லை - துரைமுருகன்

இடைத்தேர்தல் தோல்வி குறித்து திமுக பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது என்றும் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசுக்கு தெளிவில்லை என்று விமர்சித்தார். திமுக பொதுச் செயலாளர் ஓய்வில் இருப்பதால் அவருடைய பணிகளை மற்றவர்களுக்கு பிரித்து தரப்படவுள்ளதாக கூறப்படுவது பற்றி கேட்டபோது, அதுகுறித்து திமுக தலைமை தான் முடிவு செய்யும் என துரைமுருகன் பதிலளித்தார்.

[…]

திருச்சி
தமிழ்நாடு

திருச்சி வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை..! மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.

திருச்சி பாரத் மிகுமின் நிலைய வளாகத்தில் செயல்பட்ட வங்கியிலிருந்து ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர் பாரத் மிகுமின் நிலைய (BHEL) வளாகத்தில் கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கென இயங்கும் இந்த வங்கியை ஒட்டி ஏடிஎம் இயந்திரமும் வைக்கப்பட்டு, 24 மணிநேரமும் பாதுகாவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஊழியர்கள் வங்கிக்கு வந்தபோது, அங்கு பணம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகம் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். மேலும் அதன் பக்கவாட்டில் இருந்த ஜன்னலின் அலிமினிய வலை ஸ்குரூ அகற்றப்பட்டு திறந்த நிலையில் இருந்தது.

ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த அலுமினியம் வலையை அகற்றி சுமார் ஒரு கோடியே 47 லட்சம் திருடப்பட்டுள்ளதை அறிந்த வங்கி அதிகாரிகள், அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார், வங்கி ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையன் ஒருவன் முகமூடி அணிந்து பணத்தை திருடி சென்றதாக கூறியுள்ளனர். இந்த கொள்ளையில் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பபட்டிருந்த 30 லட்சம் ரூபாயை  அப்படியே விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நேற்று மாலை கொண்டு வந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது BHEL நிறுவன ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

[…]

திருச்சி
தமிழ்நாடு

திருச்சி வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை..! மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.

திருச்சி பாரத் மிகுமின் நிலைய வளாகத்தில் செயல்பட்ட வங்கியிலிருந்து ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர் பாரத் மிகுமின் நிலைய (BHEL) வளாகத்தில் கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கென இயங்கும் இந்த வங்கியை ஒட்டி ஏடிஎம் இயந்திரமும் வைக்கப்பட்டு, 24 மணிநேரமும் பாதுகாவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஊழியர்கள் வங்கிக்கு வந்தபோது, அங்கு பணம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகம் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியுற்றனர். மேலும் அதன் பக்கவாட்டில் இருந்த ஜன்னலின் அலிமினிய வலை ஸ்குரூ அகற்றப்பட்டு திறந்த நிலையில் இருந்தது.

ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த அலுமினியம் வலையை அகற்றி சுமார் ஒரு கோடியே 47 லட்சம் திருடப்பட்டுள்ளதை அறிந்த வங்கி அதிகாரிகள், அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் வந்த போலீசார், வங்கி ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையன் ஒருவன் முகமூடி அணிந்து பணத்தை திருடி சென்றதாக கூறியுள்ளனர். இந்த கொள்ளையில் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பபட்டிருந்த 30 லட்சம் ரூபாயை  அப்படியே விட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நேற்று மாலை கொண்டு வந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது BHEL நிறுவன ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

அதிமுக அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா?-மு.க.ஸ்டாலின்

2 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அல்வா கொடுத்து வெற்றி பெற்றதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவை, மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

விழாவில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2 தொகுதி இடைத்தேர்தலில் தோற்றாலும், உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிபெறும் என்றும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றது என்று விமர்சித்த அதிமுக, 2 தொகுதி இடைத்தேர்தலில் அல்வா கொடுத்தா வெற்றி பெற்றது என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஆட்சியாளர்களின் தவறுகளை எதிர்க்கட்சி சுட்டிக்காட்டுவதுதான் ஜனநாயக முறை எனக் குறிப்பிட்ட திமுக தலைவர், இதைச் செய்தால் முதலமைச்சருக்கு கோபம் வருகிறது என சாடினார்.

[…]

சோதனை
தமிழ்நாடு

தீவிரவாத தொடர்பு.. தொடரும் சோதனை..!

கோவை மற்றும் தூத்துக்குடியில் மூன்று இடங்களில் சோதனை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நாகையில் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

கோவை லாரிப்பேட்டை பகுதியில் செளருதீன் என்பவரது வீட்டிலும், ஜி.எம்.நகரில் உள்ள சமீர் என்பவரது வீட்டிலும் காலை 6மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கணினிகள் மற்றும் செல்போன்களில் உள்ள விவரங்களை அவர்கள் ஆராய்ந்தனர்.

திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் கே.டி.எம்.தெருவை சேர்ந்த அபுல் ஹசன் சாதூலி என்பவரின் வீட்டில் காலை 6 மணி தொடங்கி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் சில ஆவணங்களும், ஒரு செல்போனும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் நாகை மாவட்டம் நாகூர் அருகே சண்ணமங்கலம் சேவாபாரதி பகுதியைச் சேர்ந்த முகமது அஜ்மல் என்பவரிடம் 3 மணி நேரம் வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

[…]

திமுக
தமிழ்நாடு

நவம்பர் 10ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம்

சென்னையில் நவம்பர் 10 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழுக்கூட்டம் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொண்டுள்ள க.அன்பழகன், இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டதிட்ட திருத்தம், ஆக்கப்பணிகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

[…]

திமுக
தமிழ்நாடு

நவம்பர் 10ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம்

சென்னையில் நவம்பர் 10 ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழுக்கூட்டம் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக்கொண்டுள்ள க.அன்பழகன், இந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டதிட்ட திருத்தம், ஆக்கப்பணிகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

[…]

முத்துராமலிங்கத் தேவரின்
தமிழ்நாடு

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி..!

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 

முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி மற்றும் 57ஆவது குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, பசும்பொன்னில் 8 ஆயிரத்து 500 போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதே போல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள், மழையையும் பொருட்படுத்தாது பால் குடம் சுமந்து ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினர். சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தேவரின் புகைப்படத்திற்கு முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர் தூவினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பியுமான வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

[…]

முத்துராமலிங்கத் தேவரின்
தமிழ்நாடு

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி..!

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 

முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி மற்றும் 57ஆவது குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, பசும்பொன்னில் 8 ஆயிரத்து 500 போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதே போல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள், மழையையும் பொருட்படுத்தாது பால் குடம் சுமந்து ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினர். சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தேவரின் புகைப்படத்திற்கு முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர் தூவினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பியுமான வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

[…]

விடுமுறை
தமிழ்நாடு

கனமழை : பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை..!

9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

கொடைக்கானலில் மலைப் பகுதிகளில் பள்ளிகள்- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

நெல்லை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை- காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை

ராமநாதபுரம், தேனி, விருதுநகர் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

தனது ஆதங்கத்தை முதல்வர் தவறாகப் புரிந்து கொண்டதாக மு.க. ஸ்டாலின் அறிக்கை

சிறுவன் சுஜித்தை மீட்பதில் ராணுவத்தின் உதவியைப் பெற்றிருக்கவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை முதலமைச்சர் தவறாகப் புரிந்து கொண்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் விழுந்த 2வது நாளில், தான் சென்றால் தேவையற்ற கவனச்சிதறல் ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அமைச்சர்களும், அதிகாரிகளும் பேட்டிகள் கொடுத்தார்களே தவிர, சிறுவனை உயிருடன் மீட்பதற்குத் தேவைப்படும் நகர்வுகள் இல்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.

சுஜித்தின் பெற்றோரை சந்தித்த பின், அரசாங்க இயந்திரம் முழுமையாகச் செயல்படவில்லை, ராணுவ உதவியை விரைந்து பெற்று இருக்க வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை முதலமைச்சர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகவும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

[…]

வேளாண்துறை
தமிழ்நாடு

விவசாயிகள் வருமானத்தைப் பெருக்க இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு சட்டம்

விவசாயிகளின் வருமானம் பெருகுவதற்காக தமிழக அரசால் இயற்றப்பட்ட ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டத்திற்கு குடியரசு தலைவர் அனுமதி அளித்ததை அடுத்து, அதனை உடனடியாக செயலாக்கத்திற்கு கொண்டு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஒப்பந்த சாகுபடி முறையில் ஈடுபடும் வேளாண் பெருமக்களின் நலனைப் பாதுகாக்க சட்டம் இயற்றப்படும் என 2018 - 2019 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது. அதற்கு இணங்க, தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்ட முன்வடிவு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டது.

அந்த சட்டத்திற்கு தற்போது குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த்தின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அகில இந்திய அளவில் ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று பிரத்யேகமாக எந்த சட்டமும் எந்த மாநிலத்திலும் இதுவரை இயற்றப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு முதன் முதலில் தனிச் சட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது என்பது இதன் தனிச்சிறப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகள் அல்லது உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களது விளைபொருட்கள் அல்லது கால்நடைகள் அல்லது அதிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஒப்பந்தம் செய்த அன்று, நிர்ணயம் செய்த விலையிலேயே பரிமாற்றம் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள கொள்முதலாளர் அந்தப் பகுதியை சார்ந்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், ஒப்பந்தப் பண்ணைய உற்பத்தியாளருடன் ஒப்பந்தத்தினை அலுவலர் முன்னிலையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகும் நிலையில், இந்த சட்டத்தினால் விவசாயிகளுக்கு எந்த வித பொருள் மற்றும் பண இழப்பும் ஏற்படாமல் முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தப் பண்ணைய சட்டத்தில் கொள்முதலாளரோ அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனமோ ஒப்பந்த விதிகளை மீறும் போது விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை களைந்து விவசாயிகளின் விளைபொருட்களுக்குரிய தொகையைப் பெற்றுத் தரும் வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் இச்சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தினை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சட்ட விதிகளை உடனடியாக வகுத்து, முழுச் செயலாக்கத்திற்கு கொண்டு வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாண்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

[…]

சிறுவன்
தமிழ்நாடு

சிறுவன் சுஜித் உயிரிழப்பு.. ஆழ்துளைக் கிணற்றில் இருந்து உடல் மீட்பு..!

மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் 650 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்களான நிலையில் அழுகிய நிலையில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ - கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன், கடந்த 25 ந்தேதி மாலை 5:40 மணி அளவில் வீட்டுமுன்பு விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் மூடப்படாமல் இருந்த 650 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். 

சிறுவன் சுஜித்தை மீட்க முதலில் தீயணைப்பு வீரர்கள், ரெஸ்கியூ ரோபோ மணிகண்டன், தமிழக பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஸ்டன்ட் கலைஞர்கள் அன்பறிவு, ஐஐடி ஆராய்சியாளர்கள் என பலரும் சிறுவன் சுஜித்தை மீட்க முயற்சி மேற்கொண்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் அந்த ஆழ்துளை கிணற்றுக்கு இணையான கிணறு தோண்டும் பணியும் கடுமையான பாறைகளால் கை கொடுக்கவில்லை.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்க ஒவ்வொருவர் புதிய புதிய முயற்சிகள் மேற்கொண்ட போதும் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக 10 அடி ஆழத்தில் இருந்து 25 அடி, 40 அடி, 65 அடி என நழுவி 88 வது அடிக்கு சென்றதால் மீட்புப் பணி மேலும் சவாலானது.

துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீட்புப் பணிகளை பார்வையிட்டு தேவையான ஆலோசனைகளை வழங்கிச் சென்றாலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் நாளில் இருந்தே அங்கேயே தங்கி இருந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும் அங்கேயே இருந்தனர். காவல்துறையினர் தன்னார்வலர்களும் பொறுப்புடன் கடமையாற்றினர்.

சிறுவன் சிக்கிய உள்ள ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் 10 அடி தூரத்தில் 1 மீட்டர் சுற்றளவில் 90 அடி ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் உள் வீரர்களை இறக்கி 10 அடி தூரத்திற்கு டிரில்லிங் செய்து சிறுவன் சிக்கியுள்ள குழாய்க்குள் சென்று சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி ஓ.என்.ஜி.சி 300 ரிக் எந்திரம், எல் அண்ட் டி கம்பெனியின் 350 ரிக் எந்திரம், ஆகியவற்றை கொண்டு ஆழ்துளை கிணற்றுக்கு துளையிடப்பட்டது. அதுவும் பாறையில் துளையிட முடியாமல் தவித்ததால் பாறைகளை விரைவாக துளைத்தெடுக்கும் போர்வெல் லாரி வரவழைக்கப்பட்டது.

ஒரு மீட்டர் சுற்றளவுக்கு 6 இடங்களில் போர்வெல் துளை போட்டு, பின்னர் ரிக் எந்திரத்தால் உடைத்து எடுத்தனர். இதுவரை 65 அடிக்கு போர்வெல் துளையிடப்பட்ட 55 அடிக்கு ரிக் எந்திரம் உடைத்து துளையிட்டுள்ளது. 90 அடிக்கு துளையிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

சிறுவன் சுஜித் மீட்பு பணி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு தெரிந்து கொண்டதாகவும், சிறுவன் விரைவாக மீட்கப்படவேண்டும் என்றும் பிரதமர் மோடி டிவிட் வெளியிட்டிருந்தார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சிறுவன் மீட்பு பணி குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டார்..!

பலூன் மூலம் மீட்பது, கம்பியை உள்ளே விட்டு மீட்பது என்று பலரது ஆலோசனைகளும் ,அறிவுரைகளும் மீட்பு பணியின் போது செயல்படுத்தப்பட்டாலும் சிறுவனை மீட்கும் பணி சவாலானது என்பதை விட பல சவால்களை தகர்த்து எரிந்து சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அதிகாலை 2:22 மணியளவில் சிறுவன் உயிரிழப்பை ராதாகிருஷ்ணன் அதிகாரபூர்வமாக அறிவித்தார், திங்கட்கிழமை இரவு 10:30 மணி அளவில் சிறுவன் சுஜித் தவறி விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாகவும், சிறுவனின் உடல் அழுகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

5 நாட்களாக 80 மணி நேரம் சிறுவனை உயிருடன் மீட்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் சிறுவன் மீண்டு வர வேண்டும் என்ற அனைத்து தாயுள்ளம் கொண்டவர்களின் வேண்டுதல்களும் வீணாகிபோனது தான் வேதனையின் உச்சம்..!

பயன்பாடில்லா மூடப்படாத தரைமட்ட ஆழ்துளை கிணறுகள் எத்தனை விபரீதமானது என்பதற்கு சிறுவன் சுஜித்தின் மரணம் ஒரு உதாரணம் ..!

[…]

சிவசேனா
தமிழ்நாடு

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல்

முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வதாக, தாங்கள் உறுதியளிக்கவில்லை என்ற தேவேந்திர பட்னாவிஸ் மறுப்பை தொடர்ந்து பாஜக உடனான சந்திப்பை சிவசேனா ரத்து செய்தது.

ஆட்சியில் சரிபாதி அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது தாமதமாகி உள்ளது.

இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வதாக தாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் உறுதியளிக்கவில்லை என்று தெரிவித்தார். பாஜக தலைமையிலான கூட்டணி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நிலையான மற்றும் திறமையான ஆட்சியை வழங்கும் என அவர் கூறினார்.

பட்னாவிஸ் பேட்டியை தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அடுத்த அரசை அமைப்பது தொடர்பாக பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு இருந்ததை ரத்து செய்தார். இதனால் இரு கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான விரிசல் அதிகரித்து வருகிறது.

இதனிடையே பாஜக தலைமையிலான மாநில அரசாங்கத்தில் பதவிகள் மற்றும் பொறுப்புகளை சமமாகப் பகிர்வது குறித்து பட்னாவிஸ் முன்பு பேசிய வீடியோ ஒன்றை சிவசேனா வெளியிட்டுள்ளது.

[…]

எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

மீட்புப்பணிகளின் நிலையைப்பொறுத்து மத்திய அரசிடம் உதவி கோரப்படும்- முதலமைச்சர்

திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி குறித்து பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகளை கண்காணிக்க 3 அமைச்சர்கள், பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் களத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், என்.எல்.சி., ஓஎன்ஜிசி, என்ஐடி, எல்&டி நிறுவனங்களின் வல்லுநர்கள் ஆலோசனைகள் அளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். துளையிடும் பணிக்காக கனரக எந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு பணிகளின் நிலையைப் பொறுத்து மத்திய அரசிடம் உதவி கோரப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

[…]

78 மணி
தமிழ்நாடு

ஆழ்துளையில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 5வது நாளாக நீடிப்பு

மீட்புப் பணி 78 மணி நேரத்தைத் தாண்டி நீடிக்கிறது

ஆழம் செல்லச் செல்ல கடினமான பாறைகள் இருக்க வாய்ப்பு - புவியியல் ஆய்வாளர் சுப்பிரமணியன்

படிமப் பாறைகளை ரிக்கிங் எந்திரம் மூலம் அறுத்தெடுக்க முடியும் - புவியியல் ஆய்வாளர் சுப்பிரமணியன்

கடினப் பாறைகளை அறுத்து எடுப்பது என்பது மிகக் கடினம் - புவியியல் ஆய்வாளர் சுப்பிரமணியன்

பாறைகள் ஒரே மாதிரியாக இருக்காது, தன்மை மாறி மாறி இருக்கும்

மழை நீர் உட்புகாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன

நடுக்காட்டுப்பட்டி பகுதியில் கனமழைக்கு வாய்ப்பில்லை - புவியரசன்

நடுக்காட்டுப்பட்டி பகுதியில் சாரல் மழை மட்டுமே பெய்யும் - புவியரசன்

65 அடி ஆழத்திற்கு துளையிட்ட பின், மீண்டும் போர்வெல் பயன்படுத்தப்படும்

98 அடி வரை துளையிட்ட பின்னரே பக்கவாட்டு சுரங்கம் அமைக்கப்படும்

முன்பை விட சற்று வேகமாக துளையிடும் பணி நடைபெறுவதாக தகவல்

குழந்தை மீட்பு விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை - மு.க.ஸ்டாலின்

சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என்பதே நமது எண்ணம் - மு.க.ஸ்டாலின்

குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது

குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளையில் மண் சரிவு ஏற்படாமல் கண்காணிக்கப்படுகிறது

36 மணி நேரமாக துளையிடும் பணி நடைபெற்று வருகிறது

சுமார் 52 அடிவரை ரிக் எந்திரம் துளையிடப்பட்டுள்ளது.

55 அடி ஆழத்திற்கு துளையிட்ட பின், மீண்டும் போர்வெல் பயன்படுத்தப்படும்

மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை

குழந்தை சிக்கியுள்ள குழியில் மண் சரிவு நிகழ்ந்துள்ளதா என்றும் ஆலோசனை

கேமரா காட்சிகளைக் கொண்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை

மழை பெய்தாலும் பணிகளில் தொய்வு ஏற்படாத வகையில் முன்னேற்பாடு

55 அடியை ரிக் எந்திரம் எட்டுவது சவாலாக உள்ளது

இன்னும் 2 மணி நேரத்தில் 65 அடி ஆழத்தை எட்டி விடலாம் - ராதாகிருஷ்ணன்

இன்னும் 12 மணி நேரத்தில் 98 அடி ஆழ துளை அமைக்க திட்டம்

பக்கவாட்டில் துளை அமைக்க 6 மணி நேரம் ஆகும் - ராதாகிருஷ்ணன்

பக்கவாட்டில் துளை அமைக்க நவீன துளையிடும் கருவி தயாராக உள்ளது

பக்கவாட்டில் துளை அமைக்கும் பணியில் 12 பேர் ஈடுபட தயாராக உள்ளனர்

பக்கவாட்டில் துளையிடுவோருக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார்

மீண்டும் போர்வெல் எந்திரம் மூலம் துளையிட ஆயத்தப் பணிகள்

55 அடி ஆழம் வரை ரிக் எந்திரம் மூலம் துளையிடப்பட்டுள்ளது 

ஏணி மூலமாக 55 அடி ஆழ துளைக்குள் இறங்கி ஆய்வு செய்ய நடவடிக்கை

55 அடிக்குக் கீழே பாறை எந்த அளவில் உள்ளது என ஆய்வு செய்ய முடிவு

95 அடி ஆழம் வரை போர்வெல் மூலம் துளைபோட திட்டம்

தீயணைப்பு வீரர் திலிப்குமார் 55 அடி ஆழ துளையில் இறங்கியுள்ளார்

55 அடி ஆழ துளையில் ஏணி மூலமாக இறங்கி ஆய்வு

துளைக்குள் பாறைகள் உடைந்து கிடக்கின்றனவா என்றும் ஆய்வு

ஆழ்துளைக்குள் உடைபட்ட பாறைகளை அகற்ற நடவடிக்கை

பாறைகளை அகற்றும் நடவடிக்கைக்காக மீட்பு வீரர் உள்ளே இறங்கியுள்ளார்

உள்ளே இறங்கிய மீட்பு வீரர் வெளியே வந்துள்ளார்

உள்ளே உடைபட்ட பாறைகளின் பாகங்கள் உள்ளதாக தகவல்

உடைபட்ட பாறைகளை வெளியே கொண்டுவர நடவடிக்கை

உடைபட்டுக் கிடந்த பாறை வெளியே எடுக்கப்பட்டது

துளையிடுவதற்கு இடையூறாக இருந்த பாறை வெளியே எடுக்கப்பட்டது

போர்வெல் மூலமாக மேலும் துளையிடப்படுகிறது

6 துளைகள் இடப்பட்டு அதன் பின்னர் ரிக் மூலம் அகழ்ந்தெடுக்கப்படும்

98 அடி ஆழம் வரை ஒரு மீட்டர் விட்ட துளையிட திட்டம்

துளையிடும் பணி 40 மணி நேரத்தைத் தாண்டி நடைபெறுகிறது

மீட்புப் பணி 78 மணி நேரத்தைத் தாண்டி நீடிக்கிறது

பக்கவாட்டில் துளையிட தயார்நிலையில் என்.எல்.சி.

ஆழ்துளையில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 5வது நாளாக நீடிப்பு

 

[…]

கனமழைக்கு
தமிழ்நாடு

10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வடதமிழகத்திலும், தென் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அருகே தென்மேற்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்து வலுப்பெறும் என தெரிவித்தார்.

மேலும் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதிக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் தெரிவித்தார். இதனால் குமரி,நெல்லை, தூத்துக்குடி, புதுகோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் பாலச்சந்திரன் கூறினார்.

[…]

பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழ்நாடு

பேரிடரை சந்திக்கும்போது குறை பேசுவது முறையல்ல - பொன்.ராதாகிருஷ்ணன்

மீட்புப் பணிகள் பற்றி முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்

குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

மீட்புப் பணி வெற்றிகரமாக முடிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்

மீட்புப் பணியில் மத்திய அரசு முழுஒத்துழைப்பு வழங்குகிறது

பேரிடரை சந்திக்கும்போது குறை பேசுவது முறையல்ல

மீட்பு நடவடிக்கைக்காக எல்லா முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

[…]

திருச்சி
தமிழ்நாடு

சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுக் குழந்தையை மீட்க, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் விடிய விடிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான பிரிட்டோ ஆரோக்கியதாஸ். இவரது இரண்டு வயது மகன் சுஜித் வின்சென் நேற்று மாலை 5.30 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளான். 5 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டு பயன்பாடில்லாமல் திறந்த நிலையில் இருந்த இந்த ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் 26 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த மணப்பாறை தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள், குழந்தையை மீட்கும் முயற்சியாக ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். 20 அடி ஆழம் தோண்டப்பட்ட நிலையில் பாறை இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் உருவாக்கிய பிரத்யேக இயந்திரத்தின் உதவியுடன் குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்றது. குழந்தையுடன் தாய் கலாமேரி மற்றும் உறவினர்கள் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர். கலாமேரி பேசியபோது உம் என்று உள்ளே இருந்த குழந்தையின் பதில் வந்தது.

இரவு 10.30 மணி அளவில் இயந்திரத்தின் வழியாக விடப்பட்ட கயிற்றைக் கொண்டு கைகளில் சுருக்கு போட முயற்சி மேற்கொள்ளப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றது.அப்போது, குழந்தையின் ஒரு கையில் சுருக்கு சரியாக மாட்டிய நிலையில், மற்றொரு கையில் சுருக்கு மாட்டும்மோது கயிறு தவறிவிட்டது. தொடர்ந்து நடைபெற்ற இம்முயற்சியிலும் மீண்டும் தொய்வு ஏற்பட்ட நிலையில், மீட்புப் பணி முடுக்கிவிடப்பட்டது.

மதுரை, திருச்சியிலிருந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். கோவையிலிருந்து ஒரு மீட்புக் குழு வரவழைக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் கொண்டு வந்த சாதனங்களை வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பல மணி நேரமாக நடைபெற்ற மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டது.

அதன்பின்னர் ஆழ்துளை கிணற்றை சுற்றி 5 பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீண்டும் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று அதிலும் தொய்வு ஏற்பட்டது. அதிகாலை 2.30 மணிக்கு ஐஐடியைச் சேர்ந்த ஒரு குழுவினர் வந்து பிரத்யேக சாதனங்களை கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே குழந்தை மீட்கப்பட்டால் அவருக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சம்பவ இடத்தில் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அருகில் இருந்து குழந்தை மீட்புப் பணிகளைக் கண்காணித்து, ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

[…]

வாக்குவாதம்
தமிழ்நாடு

தலைகவசம் அணியாமல் வந்த அரசு வழக்கறிஞருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்

நெல்லை மாவட்டம் புளியங்குடியில் தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

புளியங்குடி - சங்கரன்கோவில் சாலையில் உள்ள எஸ்.வி.சி பொறியியல் கல்லூரி முன்பு வெள்ளிக்கிழமை மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக தலைக் கவசம் அணியாமல் வந்த நபரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர் தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் அரசு வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலையில் நடுவே நின்று கொண்டு அவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது. ஒரு கட்டத்தில் காவலர் ஒருவரை எரித்துக்கொன்று விடுவேன் என்று கோபத்தில் அந்த நபர் பேசும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் வீரிருப்பு கிராமத்தைச் சேர்ந்த வேல்சாமி என்பதையும், அவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் மட்டும் தான், அரசு வழக்கறிஞர் இல்லை என்பதையும் கண்டறிந்து, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

 

[…]

உமா பாரதி
தமிழ்நாடு

கோபால் கான்டாவின் ஆதரவு தேவையா - பாஜகவுக்கு உமா பாரதி கேள்வி

ஹரியானாவில் பாஜக ஆட்சியமைக்கலாம், ஆனால் கோபால் கான்டாவின் ஆதரவை நிராகரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி வலியுறுத்தியுள்ளார்.

விமானப் பணிப்பெண் கீதிகா மற்றும் அவரது தாயாரை தற்கொலைக்குத் தூண்டியதாக கோபால் கான்டா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தேர்தலில் வெற்றிபெற்று விட்டதால் குற்றமற்றவர் என பொருளாகாது என்பதை உமா பாரதி சுட்டிக் காட்டியுள்ளார்.

பாஜக தனது தார்மீக நிலையில் இருந்து பிறழக்கூடாது என்றும் உமா பாரதி டிவிட்டர் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பின்னால் உலகமே இருக்கிறது. அவருக்கு கான்டாவின் ஆதரவு தேவையில்லை என்றும் உமா பாரதி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு பூபேந்திர் சிங் ஹூடா தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தவர் கோபால் கான்டா, விமான நிறுவனம் ஒன்றை தொடங்கி வைத்தார். அதில் பணிபுரிந்த கீதிகா என்ற விமானப் பணிப்பெண் தற்கொலை செய்துக் கொண்டார். இதற்கு கோபால் கான்டாவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.

சில ஆண்டுகளில் கோபால் கான்டாவின் அடியாட்கள் கொடுத்த தொல்லை தாங்காமல் கீதிகாவின் தாயாரும் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து புகார்களால் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கான்டா, தனிக்கட்சி ஆரம்பித்தார். கடந்த தேர்தலில் அவர் ஹரியானா முழுக்க வேட்பாளர்களை நிறுத்திய போதும், அவர் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற்றார்.

[…]

மழை
தமிழ்நாடு

தீபாவளியன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 27ஆம் ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 28, 29ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடக்கு நோக்கி நகர்ந்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு கியார் என பெயரிடப்பட்டுள்ளது. மும்பைக்கு தெற்கு-தென்மேற்கே 380 கிலோமீட்டரில், மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயல், அடுத்த 5 நாட்களுக்கு மேற்கு-வடமேற்கு திசையில் நகரும். இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறும்.

இதேபோல, கடலோர ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டி, மேற்குமத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இதன் காரணமாக, அடுத்தடுத்த நாட்களில் கடலோர கர்நாடகம், மும்பை, கோவா, ஒடிசா, அசாம், மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாகவும், கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 31 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும். வரும் 27ஆம் தேதி வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 28, 29ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் 3 சென்டி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் சோலையார் மற்றும் பவானி பகுதிகளில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

[…]

தமிழ்நாடு
தமிழ்நாடு

நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு நாள்..!

நவம்பர் 1ம் தேதியை, தமிழ்நாடு நாள்., என்று கொண்டாட நிதி ஒதுக்கி, தமிழ்நாடு அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது.

1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்டதை, பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.

இதன்படி, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதியினை தமிழ்நாடு நாள் என சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் மொழிக்காவலர்கள், மற்றும் தமிழறிஞர்களையும் சிறப்பிக்கும் வண்ணம் விழா எடுத்து சிறப்பிக்கவும் முடிவு செய்திருக்கிறது. மேலும், இளைய சமுதாயம் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்துகொள்ளும் வகையில் கவியரங்கங்கள், பட்டிமன்றம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை முன்னெடுக்க ஏதுவாக, 10 லட்சம் ரூபாய் நிதியினையும் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. 

 

[…]

தேர்தல்
தமிழ்நாடு

இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக வினோதம்

இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் கட்சியை பின்னுக்கு தள்ளி 'நோட்டா' இரண்டாம் இடம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிராவின் லத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இளைய மகனான தீரஜ் தேஷ்முக் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவசேனாவின் ரவி ராம்ராஜே தேஷ்முக் போட்டியிட்டார்.

நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் தீரஜ் 1 லட்சத்து 34 ஆயிரத்து 615 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரவி ராம்ராஜே 13 ஆயிரத்து 459 வாக்குகளை பெற்றார். ஆனால் இரண்டாம் இடம் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்த தொகுதியில் 'நோட்டா' என்னும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்னும் பட்டனை வாக்கு எந்திரத்தில் 27,449 பேர் பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலம் இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் கட்சியை பின்னுக்கு தள்ளி நோட்டா' இரண்டாம் இடம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

[…]

தேர்தல்
தமிழ்நாடு

இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக வினோதம்

இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் கட்சியை பின்னுக்கு தள்ளி 'நோட்டா' இரண்டாம் இடம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மகாராஷ்டிராவின் லத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இளைய மகனான தீரஜ் தேஷ்முக் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவசேனாவின் ரவி ராம்ராஜே தேஷ்முக் போட்டியிட்டார்.

நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் தீரஜ் 1 லட்சத்து 34 ஆயிரத்து 615 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரவி ராம்ராஜே 13 ஆயிரத்து 459 வாக்குகளை பெற்றார். ஆனால் இரண்டாம் இடம் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்த தொகுதியில் 'நோட்டா' என்னும் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்னும் பட்டனை வாக்கு எந்திரத்தில் 27,449 பேர் பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலம் இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் கட்சியை பின்னுக்கு தள்ளி நோட்டா' இரண்டாம் இடம் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

[…]

சீமான்
தமிழ்நாடு

நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் - சீமான்

நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிகில் திரைப்பட விவகாரத்தில், பழி வாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

இதுபோல செய்வதால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுவதாகக் கூறிய சீமான், கத்தி, சர்கார் திரைப்படங்களைப் போல் பிகில் பிரச்சனையிலும் விஜய்க்கு உறுதுணையாக இருக்கப் போவதாகத் தெரிவித்தார்.

[…]

சீமான்
தமிழ்நாடு

நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் - சீமான்

நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிகில் திரைப்பட விவகாரத்தில், பழி வாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.

இதுபோல செய்வதால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுவதாகக் கூறிய சீமான், கத்தி, சர்கார் திரைப்படங்களைப் போல் பிகில் பிரச்சனையிலும் விஜய்க்கு உறுதுணையாக இருக்கப் போவதாகத் தெரிவித்தார்.

[…]

விக்கிரவாண்டி
தமிழ்நாடு

விக்கிரவாண்டி அதிமுக தொடர்ந்து முன்னிலை

விக்கிரவாண்டி 15வது சுற்று

விக்கிரவாண்டியில் 15வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 88091வாக்குகள் பெற்று முன்னிலை

15வது சுற்றில் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தி 52447 வாக்குகள் பெற்று 2வது இடம்

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 35644 வாக்குகள் வித்தியாத்தில் முன்னிலை

விக்கிரவாண்டி 11வது சுற்று

விக்கிரவாண்டியில் 11வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 58777வாக்குகள் பெற்று முன்னிலை

விக்கிரவாண்டியில் 11வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் புகழேந்தி 33656 வாக்குகள் பெற்று 2வது இடம்

11சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 25121 வாக்குகள் வித்தியாத்தில் முன்னிலை

விக்கிரவாண்டி 9வது சுற்று

விக்கிரவாண்டியில் 9வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 51864வாக்குகள் பெற்று முன்னிலை

விக்கிரவாண்டியில் 9வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் புகழேந்தி 31873 வாக்குகள் பெற்று 2வது இடம்

9 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 19991 வாக்குகள் வித்தியாத்தில் முன்னிலை

விக்கிரவாண்டி 7வது சுற்று

விக்கிரவாண்டியில் 7வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 39675 வாக்குகள் பெற்று முன்னிலை

விக்கிரவாண்டியில் 7வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் புகழேந்தி 24468 வாக்குகள் பெற்று 2வது இடம்

7 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 15207 வாக்குகள் வித்தியாத்தில் முன்னிலை

விக்கிரவாண்டி 5வது சுற்று

விக்கிரவாண்டியில் 5வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 27319 வாக்குகள் பெற்று முன்னிலை

விக்கிரவாண்டியில் 5 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் புகழேந்தி 16961வாக்குகள் பெற்று பின்னடைவு

5 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 10358 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்

விக்கிரவாண்டி அதிமுக முன்னிலை

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் முன்னிலை

முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 5312 வாக்குகள் பெற்று முன்னிலை

முதல் சுற்றில் திமுக வேட்பாளர் புகழேந்தி 3265 வாக்குகள் பெற்று 2வது இடம்

முதல் சுற்றில் 2047 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்

[…]

விக்கிரவாண்டி
தமிழ்நாடு

இடைத்தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை..!

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. தி.மு.க. இடையே நேரடி போட்டியும், நாங்குநேரியில், அ.தி.மு.க. காங்கிரஸ் இடையேயும், புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் இடையேயும் போட்டி நிலவுகிறது.

84.41 சதவீத வாக்குகள் பதிவான விக்கிரவாண்டி தொகுதியில், 188659 பேர் வாக்களித்துள்ளனர். 66.35 சதவீத வாக்குகள் பதிவான நாங்குநேரியில் 170622 பேர் வாக்களித்துள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை ஈ.எஸ். பொறியியல் கல்லூரியிலும், நாங்குநேரி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கும் வகையில் எல்.இ.டி டிவியும் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி, மொத்தமாக 14 மேசைகளில் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்கு எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

[…]

பட்டாசு
தமிழ்நாடு

பட்டாசு வெடிக்கும் நேரம்.? தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்கும் நேரத்தை, தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறது. 

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில், தீபாவளியன்று, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரம், தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன்படி, தீபாவளி பண்டிகை நாளன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களையும் அரசு வழங்கியிருக்கிறது.

அதில், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளையும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளையும் தவிர்க்கலாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது என்றும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது, பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம் என்றும் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

பட்டாசு வெடிக்கும் முன், பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், கூறப்பட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை, பட்டாசுகளை வெடித்து மகிழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

[…]

பட்டாசு
தமிழ்நாடு

பட்டாசு வெடிக்கும் நேரம்.? தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்கும் நேரத்தை, தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறது. 

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில், தீபாவளியன்று, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கான நேரம், தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதன்படி, தீபாவளி பண்டிகை நாளன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களையும் அரசு வழங்கியிருக்கிறது.

அதில், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளையும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளையும் தவிர்க்கலாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது என்றும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது, பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம் என்றும் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது.

பட்டாசு வெடிக்கும் முன், பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், கூறப்பட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை, பட்டாசுகளை வெடித்து மகிழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

[…]

கனமழை
தமிழ்நாடு

வங்க கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்..!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு மத்திய மற்றும் தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை நோக்கி நகரும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் மிக கன மழை முதல் அதீத கன மழையும் ஒடிசாவின் தெற்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியும் மண்டலமாக மாறும் என்றும், இதன் காரணமாக கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

[…]

ரஜினிகாந்த்
தமிழ்நாடு

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்

நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவில் சேர வேண்டும் என்று தாம் விரும்புவதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பாஜக சார்பில் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நிகழ்ச்சி விருதம்பட்டில் நடைபெற்றது . இதில் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பாத யாத்திரையை மேற்கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி பாஜகவில் சேர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருவதாகவும், மக்களின் நன்மதிப்பை பெற்றவர், மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற சிந்தனை உடையவர் ரஜினி என்றும் கூறினார்.

[…]

வானிலை
தமிழ்நாடு

ரெட் அலர்ட் இல்லை..! 24 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில்  நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதே நேரத்தில் 8 மாவட்டங்களில் மிக கனமழையும், 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் பாம்பன், மண்டபத்தில் தலா 18 செ.மீட்டரும், ராமேசுவரம், தங்கச்சிமடத்தில் தலா 17 செ.மீட்டரும், காரைக்கால், புதுக்கோட்டை, அரிமளம், அறந்தாங்கியில் தலா 11 செ.மீட்டரும், சேலம், மோகனூரில் தலா 10 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது என்றார். மத்திய மேற்கு மற்றும் அதனை சுற்றி உள்ள தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்று அவர் கூறினார். இதே நேரத்தில் அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நிலவுவதாக கூறிய அவர், இதனால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகத்தில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றார். 

தமிழகத்தை ஒட்டிய வங்க கடல் பரப்பில் சூறைக்காற்று வீசுவதாக பாலசந்திரன் கூறினார். இதனால் அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். 

வருகிற 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்று பாலசந்திரன் கூறினார். 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றார். 

சென்னை நகரை பொறுத்தவரை இரு தினங்களுக்கு மழை தொடரும் என்றார். கடந்த ஒன்றாம் தேதி முதல் இப்போது வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் இயல்பை விட 6 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது என்றும் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

[…]

சுங்கச்சாவடியில்
தமிழ்நாடு

சுங்கச்சாவடியில் வம்பு.. தம்பிக்கு தர்ம அடி..! சட்டை கிழிந்த சோகம்

புதுக்கோட்டை அருகே, சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்துவிட்டு உருட்டுக் கட்டையால் தாக்குதலில் ஈடுபட்ட, நாம் தமிழர் கட்சிப் பிரமுகரை மடக்கி பிடித்து, சுங்கச் சாவடி ஊழியர்கள் தர்மஅடி கொடுத்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி தொகுதி வேட்பாளராக களம் கண்ட வினோத்குமார் என்பவர் தான், புதுக்கோட்டை கீரனூர் சுங்கச்சாவடியில் தாக்குதலுக்கு உள்ளானவர்..! 

திங்கட்கிழமை புதுக்கோட்டைக்கு செல்லும்போது, தன்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் என்று சொல்லி சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளார் வினோத் குமார். திரும்பி வந்த போதும் அதேபோல, தான் நாம் தமிழர் கட்சி என்று சொல்ல ஆரம்பித்ததும், சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டு செல்லுமாறு கூறியதால் ஊழியருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது சுங்கச் சாவடியில் பணியில் இருந்தவர்களை வட மாநிலத்தவர்கள் என நினைத்து தமிழ்நாட்டில் வந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பதா ? என்று உருட்டுக் கட்டையை எடுத்து சுங்கச்சாவடி ஊழியரை வினோத் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்கிய பின்னர் தான் தெரிந்துள்ளது சுங்கச்சாவடிப் பணியில் இருக்கும் அத்துணை பேரும் தமிழர்கள் என்று. அங்கிருந்த 15க்கும் மேற்பட்டோர், உருட்டுக்கட்டையுடன் நின்ற வினோத்குமாரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி தர்மஅடி கொடுத்து விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சட்டை கிழிந்த நிலையில் வினோத்குமார் தப்பியுள்ளார்.

முதுகுத் தோல் பிய்ந்து பலத்த காயம் அடைந்த நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த நாம் தமிழர் தம்பி வினோத்குமார், இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி முதலில் புகார் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

சுங்கச்சாவடி தரப்பில் புகார் அளித்ததால் வினோத்குமாரும் புகார் அளித்ததாகவும், இதன் பேரில் சுங்கச்சாவடி ஊழியர்கள் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வினோத்தைத் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்களை கைது செய்யக் கோரி திருச்சி, புதுக்கோட்டையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடியை நோக்கி அவர்கள் செல்வதை போலீசார் தடுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

[…]

ஈரோடு
தமிழ்நாடு

சிலைகள் உடைப்பால் பதற்றம்... போலீஸ் குவிப்பு

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஒரு சமூகத்தினர் வழிபடும் முன்னோர் சிலைகளை, மர்மநபர்கள் கடப்பாரை மற்றும் சுத்தியலால் உடைத்து நொறுக்கியதால் பதற்றம் நிலவியது. 

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள பொன் காளியம்மன் கோவில் தொடர்பாக இரு தரப்பு மக்களிடையே பிரச்சனை இருந்ததாகவும், அது தற்போதும் தொடர்வதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கோவிலை கூரைக்காளியண்ணன் - இளையக்காளியண்ணன் என்ற சகோதரர்கள் ஒரு தரப்பு மக்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன் மீட்டுக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதன் நினைவாக தெப்பம்பாளையத்தில், காளியண்ணன் சகோதரர்களுக்கு சிலை அமைக்கப்பட்டது. சிலைகள் அமைப்பதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பையும் மீறி சிலைகள் அமைக்கப்பட்டதை அடுத்து, அவற்றை அகற்றக் கோரி, அந்தத் தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில், காளியண்ணன் சிலைகள் புதுப்பிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று காலை காளியண்ணன் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதாக சிவகிரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி வந்த 7 மர்மநபர்கள், காளியண்ணன் சிலைகள் வைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து சிலைகளை கடப்பாரையாலும், சுத்தியலாலும் அடித்து நொறுக்குவது பதிவாகி இருந்தது. சிசிடிவியையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

சிலைகள் உடைக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த தெப்பம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சிலைகளை உடைத்த மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

பதற்றம் நிலவியதால் போராட்டம் நடக்கும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டனர். இரண்டு நாட்களில் மர்மநபர்களைக் கைதுச் செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், வன்முறை, கலவரத்தை தூண்டுதல், சேதம் விளைவித்தல், அத்துமீறி நுழைந்து தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் 7 பேர் மீது சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

[…]

மனு
தமிழ்நாடு

சசிகலா, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி மீது கிரிமினல் வழக்குப்பதிய திமுக மனு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கைரேகை தொடர்பான புகாரில் சசிகலா, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப்பதியக் கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வேட்புமனுவில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகையை முறைகேடாக பயன்படுத்தியதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரி வீரராகவராவ், தேர்தல் நடத்தும் அதிகாரி ஜீவா, மருத்துவர் பாலாஜி, அப்பல்லோ மருத்துவர்கள் பாபு, ஆப்ரகாம் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சிபிஐ நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா, மதுசூதனன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிய கோரி சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ இணை இயக்குனர் அலுவலகத்தில் திமுக சார்பில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் மனு அளித்தார்.

[…]

எடப்பாடி
தமிழ்நாடு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

சென்னை மதுரவாயலை அடுத்த வேலப்பன் சாவடியில் உள்ள பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சிறந்த சேவை செய்ததற்காகவும், மக்கள் நலத்திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தியதற்காகவும் அவருக்கு டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழக வேந்தர் ஏசி சண்முகம் வழங்கினார்

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளதன் மூலம் தனது பொறுப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

மாணவர்களுக்காக தமது அரசு மேற்கொண்டுள்ள நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என்றார். ஏட்டுக் கல்வியோடு வாழ்க்கை கல்வியையும் மாணவர்கள் கற்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

DRDO தலைவர் சதீஷ் ரெட்டி, கோவை கங்கா மருத்துவமனை தலைவர் ராஜா சபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் பரதநாட்டிய கலைஞர்- நடிகை ஷோபனா ஆகியோருக்கு டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் வழங்கினார்.

துறைவாரியாக முதல் தரவரிசை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

[…]

ஆசிரியர் தேர்வு
தமிழ்நாடு

ஆசிரியர் தேர்வு வாரிய பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் சர்ச்சை

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா படிப்பு பட்டியலிடப்படாததால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பாணையில் விஷூவல் கம்யூனிகேசன் பிரிவில் 21 இடங்கள், ஜர்னலிசம் பிரிவில் 11 இடங்களும் இடம் பெற்றுள்ளன.

இவற்றுக்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி. விஸ்காம் அல்லது எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா முடித்து பி.எச்.டி. அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக்குழு விதியாக உள்ளது.

ஆனால் டி.ஆர்.பி. இணையதளத்தில் விஷூவல் கம்யூனிகேசன் பாடங்களுக்கு எம்.எஸ்.சி. விஸ்காம் அல்லது எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படியே அறிவிப்பாணை வெளியிடப்பட்டு தேர்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அரசு அனுப்பிய இணையான படிப்புகள் பட்டியலில் எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா குறித்த தெளிவான வரையறை எதுவும் இல்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

[…]

கருணாஸ்
தமிழ்நாடு

நடிகர் சங்க விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு இல்லை - கருணாஸ்

நடிகர் சங்க விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எதுவும் இல்லை என்று நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சங்க செயல்பாடுகளை முடக்கிவிட்டு தனிப்பட்ட முறையில் நாடக நடிகர்களுக்கு ஐசரி கணேசன் தீபாவளி பரிசு வழங்குவது சுய லாபத்திற்கான செயல் என்று குறிப்பிட்டார். 

[…]

தலைக்கவசம்
தமிழ்நாடு

போலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கலாமா? போலீசாரிடம் வாக்குவாதம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே, விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் மூன்று பேராக பயணித்த நபர்கள், தலைக்கவசம் அணியாதது குறித்து கேள்வி கேட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் மட்டும் விதிகளை மீறலாமா என்று விதண்டாவாதம் செய்த அவர்களை அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்த நிகழ்வு வலைதளங்களில் பரவி வருகிறது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜவேல், தனது மகன்மற்றும் மகனின் நண்பனை பின்னால் ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் தலைக்கவசம் அணியாமல் விதிமீறிச் சென்ற ராஜவேலைத் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜவேலுவின் மகன், தனது செல்போனில் போலீசாரை படம் பிடித்துள்ளார். அவரைக் கண்டித்த காவல் ஆய்வாளர் மதனலோகன்
செல்போனை வாங்கியுள்ளார். அச்சமயத்தில் கள்ளச்சாராயம் விற்ற நபரை கைது செய்து கொண்டு இரு போலீசார், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக சொல்லப்படுகிறது. இதைக் கண்ட ராஜவேலுவின் மகனும், அவரது நண்பரும், போலீஸ் மட்டும் தலைக்கவசம் அணியாமல் செல்லலாமா என்று கேள்வி கேட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

மழை பெய்யவே அனைவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று அறிவுரை கூறினர். கைது செய்யப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் போலீசார் சென்றது ஏன் என்பது குறித்து காவல் ஆய்வாளர் விளக்கம் அளித்தார்.

விளக்கம் அளித்துக் கொண்டிருந்த போது ஆவேசம் அடைந்த ஆய்வாளர் மதன லோகன், தாங்கள் செத்தாலும் பரவாயில்லை, மக்களின் உயிரைக் காப்பதே தங்கள் நோக்கம் என்று கூறி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.

மக்களின் பாதுகாப்பிற்காக அல்லும் பகலும் உழைக்கும் போலீசார் முதல், அனைவரின் உயிருக்கும் பாதுகாப்பு தலைக்கவசம். எனவே, தலைக்கவசம் அணியாமல் விதண்டாவாதம் செய்வதை விடுத்து, நம் உயிர்காக்க நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்...

[…]

சோதனை
தமிழ்நாடு

விடிய விடிய சோதனை...

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா? என்று போலீசார் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல்  பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. பிரசாரத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மாலை 6 மணிக்கு விழுப்புரம் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமையிலான போலீசார் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி, பனையபுரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் வெளியாட்கள் தங்கி உள்ளார்களா என தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,  தேர்தல் பணிக்கு 3 துணை ராணுவ படையை சேர்ந்த 300 பேர் மற்றும் 7 தமிழ்நாடு சிறப்பு காவல் படை சேர்ந்த போலீசார் மற்றும் மூன்று கூடுதல் எஸ்.பி, 19 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார். 

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

வழக்கமான பாணியில் நழுவிடாமல் அறைகூவலை ராமதாஸ் ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்

பாமக நிறுவனர் ராமதாஸ் தமது அறைகூவலை ஏற்றால், முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் தொடர்பான நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தை காட்ட தயார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும், அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம் என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக தாம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

image

பஞ்சமி நிலம் என நிரூபித்தால் தாம் அரசியலைவிட்டு விலகத் தயார் என தெரிவித்திருந்ததாகவும், ராமதாஸ் கூறியது பச்சைப் பொய் என்பதை ஊர்ஜிதம் செய்தால் அவரும், அவருடைய மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத் தயாரா என அறைகூவல் விடுத்திருந்ததாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமது அறைகூவலை ஏற்பதாக உறுதிசெய்தால், ராமதாஸ் கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்ட தயார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தை ராமதாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும், விவகாரத்தை திசை திருப்பாமல், வழக்கமான பாணியில் நழுவிடாமல்  அறைகூவலை ராமதாஸ் ஏற்பார் என எதிர்பார்ப்பதாகவும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

வழக்கமான பாணியில் நழுவிடாமல் அறைகூவலை ராமதாஸ் ஏற்பார் என எதிர்பார்க்கிறேன்

பாமக நிறுவனர் ராமதாஸ் தமது அறைகூவலை ஏற்றால், முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் தொடர்பான நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தை காட்ட தயார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், முரசொலி அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும், அது பஞ்சமி நிலமல்ல; பட்டா நிலம் என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக தாம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

image

பஞ்சமி நிலம் என நிரூபித்தால் தாம் அரசியலைவிட்டு விலகத் தயார் என தெரிவித்திருந்ததாகவும், ராமதாஸ் கூறியது பச்சைப் பொய் என்பதை ஊர்ஜிதம் செய்தால் அவரும், அவருடைய மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத் தயாரா என அறைகூவல் விடுத்திருந்ததாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமது அறைகூவலை ஏற்பதாக உறுதிசெய்தால், ராமதாஸ் கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்ட தயார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தை ராமதாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும், விவகாரத்தை திசை திருப்பாமல், வழக்கமான பாணியில் நழுவிடாமல்  அறைகூவலை ராமதாஸ் ஏற்பார் என எதிர்பார்ப்பதாகவும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - மு.க.ஸ்டாலின்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

புதுபாளையம்,மேலக்கொந்தை, பனையபுரம், துறவி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் சென்று அவர் ஆதரவு திரட்டினார். இந்த பிரசாரத்தின் போது அவர், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.

நாடு முழுக்க உள்ள 220 பணக்கார ர்கள் வாங்கிய 70,000 கோடி ரூபாய் வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறினார். ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தொகுதி சிந்தாமணி பகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தற்போது தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சி அதிமுக ஆட்சி அல்ல மத்திய அரசின் ஆட்சி என்றார்.

[…]

 5 சதவீதம்
தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்து வந்த நிலையில், அகவிலைப்படியை மேலும் 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 9-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

[…]

அமித் ஷா
தமிழ்நாடு

இந்தியாவின் வரலாற்றை இந்திய கண்ணோட்டத்தில் மாற்றி எழுத வேண்டும் - அமித் ஷா

வெள்ளையர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட வரலாற்றை இந்தியர்களின் கண்ணோட்டத்தில் மாற்றி புதிதாக எழுத வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். 

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்து மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்ட நிலையில் அது குறித்த சர்ச்சை வலுத்துள்ளது.

இதன் எதிரொலியாக பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். வாரணாசியில் பனராஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, 1857ம் ஆண்டின் சிப்பாய் கலகம் குறித்து பிரிட்டன் குறிப்புகளில் இடம் பெறாத தகவல்களை தமது பேச்சில் சுட்டிக்காட்டினார்.

சுதந்திரத்திற்கான முதல் போராட்டத்திற்கு கிராந்தி என பெயரிட்டவர் வீர சாவர்க்கார்தான் என்று கூறிய அமித்ஷா, வீரசாவர்க்கர் இல்லாவிட்டால் அது ஒரு புரட்சிகரமான எழுச்சி என்பது நமது தலைமுறைகளுக்குத் தெரியாமலே போயிருக்கும் என்றும் கூறினார்.  இந்தியா எந்த வெளிநாட்டின் மீதும் படையெடுத்தது இல்லை என்றார்.

ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பெரும் பகுதிகளை போரில்வென்ற ஹூவான்களை இந்தியாவின் ஸ்கந்தகுப்தா போன்ற வீரர்கள் விரட்டியடித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

நமது குழந்தைகளுக்கு இந்தியாவின் எல்லையை ஆப்கானிஸ்தான் வரை விரிவுபடுத்திய இதுபோன்ற உண்மையான ஹீரோக்களைப் பற்றி தெரியவில்லை என்று அமித் ஷா குறிப்பிட்டார். 

[…]

கொள்ளையன்
தமிழ்நாடு

கொள்ளையன் கொடுத்த லஞ்சம்? - சிக்கும் காவல் ஆய்வாளர்?

பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், சென்னையில் உள்ள காவல் ஆய்வாளர் ஒருவரிடம் 30 லட்ச ரூபாய் பணம் கொடுத்து வைத்திருப்பதாக, பெங்களூர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பெங்களூர் போலீசார் திருவாரூர் முருகனை அழைத்துக் கொண்டு சென்னை விரைந்துள்ளனர். 

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனை மீண்டும் 8 நாட்கள் போலீஸ் காவலில் பெங்களூர் போலீசார் எடுத்துள்ளனர். அவர்களிடம் திருவாரூர் முருகன் கொடுத்த வாக்குமூலத்தில், கொள்ளையடித்த நகைகளை பணமாக மாற்றி, சென்னையில் உள்ள காவல் ஆய்வாளர் ஒருவரிடம் 30 லட்ச ரூபாய் கொடுத்து வைத்திருப்பதாக கூறி அதிர வைத்துள்ளான். திருவாரூர் முருகன் மீது சென்னையிலும் வழக்குகள் உள்ளன.

கடந்த ஆண்டு சென்னை அண்ணா நகர், நொளம்பூர் பகுதிகளில் தொடர்ச்சியாக 17 கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றினான். அந்த வழக்குகளில் முருகனின் கூட்டாளிகள் கைது செய்யப்பட தன்னை கைது செய்யாமலிருக்க., அப்போது நொளம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஒருவரிடம் 10 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், பின்னர், அண்மையில் சந்தித்து 20 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும் திருவாரூர் முருகன் பெங்களூர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பணத்தை சென்னையில் ஒரு காபி ஷாப் அருகே காரில் வைத்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பெங்களூரில் தொழிலதிபர் வீட்டில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில்,  ஹூண்டாய் ஐ-20 ரக திருட்டு கார் ஒன்றினை திருவாரூர் முருகன் பயன்படுத்தியுள்ளான். அந்த காரை பறிமுதல் செய்வதற்காகவும்,  திருவாரூர் முருகனை, பெங்களூர் போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர். மேலும், திருவாரூர் முருகன் தங்கியிருந்த, தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த பெங்களூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

[…]

சைக்கோ
தமிழ்நாடு

வேட்டையாடு விளையாடு பாணியில் மாணவி கொலை..! சைக்கோ இரட்டையர்கள் பகீர்

மதுரை அடுத்த உசிலம்பட்டி அருகே தோட்டத்து கிணற்றுக்கு குளிக்கச்சென்ற பள்ளி மாணவியை வேட்டையாடு விளையாடு பாணியில் பலாத்காரம் செய்த சைக்கோ குணம் கொண்ட இரட்டை சகோதரர்கள் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர்

மதுரை பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேடப்பட்டி அருகே உள்ள தனது உறவினர் ஊர் திருவிழாவுக்கு சென்றுள்ளார். குடும்பத்தினர் மறுநாள் ஊருக்கு திரும்பிவிட மாணவி மட்டும் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

சம்பவத்தன்று காலையில் அங்குள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிப்பதற்கு சென்ற மாணவியை நீண்ட நேரமாகியும் காணவில்லை. அவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் நீண்ட நேரம் தேடிய போது அங்குள்ள மலைப்பகுதியில் கல்லால் தலை நசுக்கப்பட்ட நிலையில் மாணவி சடலமாக கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சேடப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்த போது வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் இரு வில்லன்கள் போன்ற சைக்கோ மனம் கொண்ட இரட்டையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த கிராமத்தை சேர்ந்த அம்மாசி என்பவருக்கு மது, மாதவன் என இரட்டையர்கள் உள்ளனர். சண்டையில் இருந்து சந்தோசம் வரை எதை செய்தாலும் சேர்ந்தே செய்யும் வினோத குணம் கொண்டவர்கள் இவர்கள் என்று கூறப்படுகின்றது. சில நேரங்களில் இவர்களின் எண்ணங்கள் குரூரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாணவி மட்டும் தனியாக அந்த பகுதியில் நடந்து செல்வதை நோட்டமிட்ட மாதவன் பின் தொடர்ந்து சென்றுள்ளான். அவனை தொடர்ந்து மதுவும் சென்றுள்ளான்.

தோட்டத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு மாதவனும், மதுவும் சேர்ந்து மாணவியை பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் மாணவியை கொன்று சடலத்தை தூக்கிச்சென்று அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கல்லால் முகத்தை சேதப்படுத்து மலை புதர் மண்டிய பாறை இடுக்கில் தூக்கி வீசி விட்டு சென்றதும் தெரியவந்தது.

மாதவனை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தலைமறைவான மது நீதி மன்றத்தில் சரண் அடைந்துள்ளான். முதலில் அந்த மாணவியை காதலித்ததாகவும், இருவரும் பேசிவிட்டு சென்றுவிட்டதாகவும் கதை அளந்து விட்ட மாதவன் காவல்துறையினரின் சிறப்பான கவனிப்பால் பலாத்காரம் செய்து கொலைசெய்ததை ஒப்புக் கொண்டுள்ளான் என்கின்றனர் காவல்துறையினர்.

மேலும் இது போல இந்த விபரீத இரட்டையர்கள் வேறு ஏதாவது பெண்களை பலாத்காரம் செய்துள்ளனரா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்

நகர்புறமோ, கிராமப்புறமோ ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு இளம் பெண்கள் தனியாக சென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு உதாரணமாக மாறி இருக்கின்றது இந்த விபரீத சம்பவம்..!

[…]

சீமான்
தமிழ்நாடு

இனிமேல்தான் எங்கள் ஆட்டம் - சீமான் ஆவேசம்

தலையில்லாத முண்டம்போல் தலைமை இல்லாமல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீன் மதியழகனை ஆதரித்து அவ்வை திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தாம் பேசியது வரலாறு என்றும் அதிலிருந்து பின்வாங்கப் போவது இல்லை என்றும் கூறினார்.

விடுதலைப் புலிகள் குறித்து பேசிய சீமான், முடிந்துபோன விஷயத்தை பேசுவதாக கூறுகிறார்கள். ஆனால் எதுவும் முடியவில்லை, இனிதான் விளையாட்டே ஆரம்பம் என்றார். மேலும் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிராகப் பேசியதற்காக தங்களை கைது செய்யத் துடிக்கிறார்கள் என்றும் ஒருநாள், அவரை ஆதரித்துப் பேசுபவர்களை தாங்கள் கைது செய்யப் போவதாகவும் ஆவேசமாகக் கூறினார். 

[…]

பருவமழை
தமிழ்நாடு

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இயல்பு அளவில் மழை பெய்யும் என்றும் அந்த மையம் கூறியுள்ளது. 

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் கணித்ததற்கு ஒரு நாள் முன்னதாகவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், ஈரபத த்துடன் கூடிய கிழக்கு திசைக் காற்று தென்னிந்திய பகுதிகளில் பரவி பரவலாக மழை பெய்துள்ளது என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில் பூவிருந்தவல்லியில் அதிகபட்சமாக 11 செ.மீட்டரும், பாம்பனில் 10 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக அவர் கூறினார். 

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் தமிழகத்தை ஒட்டிய கடற்பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக அவர் கூறினார். இதனால் அடுத்து வரும் இரு தினங்களில் தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற அவர், 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார்.   

சென்னை நகரை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பாலசந்திரன் கூறினார்.

சென்னை நகரில் அதிகபட்சமாக87.8 டிகிரி பாரன் ஹீட் வெப்பமும், குறைந்த பட்சமாக 77 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாக கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். வருகிற 17,18 ஆம் தேதிகளில் குமரி கடல் பரப்பிலும், மாலத்தீவு கடல் பரப்பில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுக்கூடும் என்ற பாலசந்திரன், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றார்.

[…]

திருமாவளவனின்
தமிழ்நாடு

கவனமாக பேசும் படி சீமானுக்கு திருமாவளவன் அறிவுரை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்பப்படும் என ஒரு நபர் விசாரணை ஆணைய நீதிபதி தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 14-வது கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரான சீமான், சுமார் 2 மணி நேரம் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா 2 கோடி ரூபாய் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு அரசு வேலையும் வழங்கக் கோரி தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

விடுதலை புலிகள் குறித்து பேசும் போது கவனமாக பேசவேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் அறிவுரை குறித்த கேள்விக்கு அண்ணன் சொன்னபடி கவனமாக பேசப் போவதாக சீமான் பதில் அளித்தார்.

[…]

திருமாவளவனின்
தமிழ்நாடு

கவனமாக பேசும் படி சீமானுக்கு திருமாவளவன் அறிவுரை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்பப்படும் என ஒரு நபர் விசாரணை ஆணைய நீதிபதி தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 14-வது கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரான சீமான், சுமார் 2 மணி நேரம் விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா 2 கோடி ரூபாய் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு அரசு வேலையும் வழங்கக் கோரி தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

விடுதலை புலிகள் குறித்து பேசும் போது கவனமாக பேசவேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் அறிவுரை குறித்த கேள்விக்கு அண்ணன் சொன்னபடி கவனமாக பேசப் போவதாக சீமான் பதில் அளித்தார்.

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

நீட் தேர்வு தமிழகத்திற்குள் வர ஜெயலலிதா அனுமதிக்கவில்லை : மு.க.ஸ்டாலின்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, நீட் தேர்வை தமிழகத்திற்குள் வர விடாமல் தடுத்தார் என்று தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மருதகுளத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் வர அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

[…]

லலிதா ஜுவல்லரியில்
தமிழ்நாடு

லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் காவிரிக்கரையோரம் மீட்பு..!

திருச்சி திருவெறும்பூர் அருகே காவிரி கரையோரம் மண்ணில் புதைத்து வைத்திருந்த நகைகளை பெங்களூரு போலீசார் ரகசியமாக வந்து மீட்டச் சென்ற நிலையில், அவற்றை பெங்களூரில் கொள்ளையடிக்கப்பட்டதாக காட்சிப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ள கர்நாடக போலீசாரின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் சுவற்றைத் துளையிட்டு பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் மற்றும் அவனது கூட்டாளிகள் 13 கோடி ரூபாய் மதிப்புடையை நகைகைகளை கொள்ளையடித்து அதிரவைத்தனர். இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த திருவாரூர் முருகனை தீவிரமாக தேடிவந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் அவன்சரணடைந்தான்.

இதையறிந்த திருச்சி போலீசார் பெங்களூரு சென்று கொள்ளையன் முருகனை காவலில் எடுக்கவும் திட்டமிட்டிருந்த நிலையில், பெங்களூரு போலீசார் அங்கு நடைபெற்ற கொள்ளை வழக்குகளில் விசாரிக்க வேண்டும் எனக்கூறி திருவாரூர் முருகனை 6 நாட்கள் காவலில் எடுத்தனர்.

பெங்களூர் போலீசார் திருவாரூர் முருகனிடம் விசாரணை நடத்தி கொள்ளை நகைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை தெரிந்துக் கொண்டனர். திருச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் காவலில் இருந்த திருவாரூர் முருகனை அழைத்து வந்து யாருக்கும் தெரியாமல் 12 கிலோ நகைகளை மீட்டுச் சென்ற போது, திருச்சி போலீசாருக்கு தகவல் கிடைக்க பெரம்பலூர் அருகே சுற்றி வளைத்தனர். அவர்கள் வைத்திருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது தான் என தெரிந்திருந்தும் நீதிமன்ற ஆணை பெங்களூர் போலீசாரிடம் இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்யமுடியவில்லை.

இந்த நிலையில் கொள்ளையன் முருகன் பெங்களூரிலும் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டிருப்பதால், அந்த வழக்குகளிலும் மீட்கப்பட்டதாக கணக்கு காண்பித்து நகைகளை காட்சிப்படுத்தி வீடியோ வெளியிடுள்ளனர். மேலும், கைவிலங்குடன் திருவாரூர் முருகனை அழைத்து வந்து, நகைகள் புதைக்கப்பட்ட இடத்தை காண்பிக்க அவற்றை தோண்டி நகை பையை மீட்கும் காட்சிகளையும் பெங்களூர் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 12 கிலோ தங்க நகைகளில் பெரும்பாலான நகைகள் திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டவை தான் என்பதை திருச்சி போலீசாரும் உறுதி செய்துள்ள நிலையில் பெங்களூர் போலீசாரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேறொரு மாநிலத்திற்கு செல்லும் போது, அந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதியை கூட பின்பற்றாமல் பெங்களூர் போலீசார் நடந்துகொண்டதாக தமிழக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் திருவாரூர் முருகனின் கூட்டாளிகளிடம் 6 கிலோ மட்டுமே மீட்கப்பட்டிருந்த நிலையில், திருச்சி போலீசார் மீதமுள்ள நகைகளை மீட்க முடியாத நிலையில் உள்ளனர்.

பெரம்பலூரில் நகைகளுடன் பெங்களூர் போலீசார் சிக்கிய போதே தமிழக போலீசார் நகைகளை வீடியோ பதிவு செய்து வைத்துள்ளனர். அவற்றை வைத்து நீதிமன்றம் மூலம் நகைகளை மீட்க திருச்சி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

[…]

சுபஸ்ரீ
தமிழ்நாடு

உங்கள் மருமகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுள்ளீர்கள் - ஜெயகோபாலுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

உங்கள் வீட்டு மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்று விட்டீர்கள் என பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ இறந்த வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிகழ்ச்சிக்காக சாலை நடுவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம் பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதால் உடல் நசுங்கி அவர் பலியானார். பேனர் வைத்ததாக அ.தி.மு.க. நிர்வாகி ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

கைது செய்யப்பட்டு 12 நாட்களாக சிறையில் உள்ள இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். தனது மகனின் திருமணத்துக்காக வாழ்த்துக் கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

விக்கிரவாண்டி
தமிழ்நாடு

பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்த அமைச்சர் உற்சாக நடனம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், மேள தாளத்திற்கேற்ப உற்சாக நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் செம்மேடு கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது மேள தாளத்திற்கேற்ப அமைச்சர் கருப்பண்னன் உற்சாகமாக நடனமாடினார்.

[…]

சீமான்
தமிழ்நாடு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானைச் சேர்க்கக் கோரி, சி.பி.ஐ. அதிகாரியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் புகார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சீமானைச் சேர்க்கக் கோரி, வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரியிடம் தமிழ் நாடு காங்கிரஸ் சட்டத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் டி.ஜி.பி அலுவலகத்திலும், தேர்தல் ஆணையத்திலும் காங்கிரஸ் கட்சி சார்பில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சி.பி.ஐ.யில் தொடர்ந்து நிலுவையில் உள்ள நிலையில் அந்த வழக்கில் சீமானையும் இணைத்து விசாரணை நடத்தக் கோரி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணை அதிகாரி புனிதமணியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

[…]

ஸ்காட்லாந்தில்
தமிழ்நாடு

பிரதமர் மோடியை விமர்சித்து கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த போலி புகைப்படம்

மாமல்லபுரம் கடற்கரையை பிரதமர் மோடி சுத்தம் செய்ததை விமர்சித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த புகைப்படம் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. சீன அதிபருடனான சந்திப்பை ஒட்டி கோவளத்தில் தங்கிய பிரதமர் மோடி அதிகாலை மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது கடற்கரையில் போடப்பட்டிருந்த குப்பைகளை மோடி தனது கைகளால் அப்புறப்படுத்தி சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் மோடி சுத்தம் செய்யும் போது சூட்டிங் நடைபெற்றது போன்று கேமராக்கள், கேமரா மேன்கள் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் செய்திருந்தார்.

வைலரான அந்த புகைப்படத்தை பலர் ரீடிவீட் செய்ததால் அதன் உண்மைநிலை குறித்து அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த புகைப்படம் போலி என்றும், அது 14 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என்பதும் தெரியவதுள்ளது.  

[…]

திருச்சி லலிதா ஜூவல்லரி
தமிழ்நாடு

முருகனிடம் விசாரணை - திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக ஒருவாரம் குடும்பத்துடன் சென்று நோட்டமிட்டதாகவும், 4 பேர் சேர்ந்து கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றி, நகைகளை பங்கிட்டுக் கொண்டதாகவும் போலீசாரிடம் முருகன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல கொள்ளையன் முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தான்.

அவனை ரகசியமாக தமிழகம் அழைத்து வந்த கர்நாடக மாநில போலீசார், திருவெறும்பூர் பூசத்துறை ஆற்றங்கரையோரம் முருகன் புதைத்து வைத்திருந்த லலிதா ஜூவல்லரிக்குச் சொந்தமான 12 கிலோ நகைகளை மீட்டுக் கொண்டு சென்ற போது தமிழக போலீசிடம் சிக்கினர். பெரம்பலுர் ஆயுதப் படை மைதானம் அழைத்துச் சென்று முருகனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக போலீசார் கூறியுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த கணேஷ், திருவாரூர் மணிகண்டன் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து லலிதா ஜூவல்லரியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக முருகன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கணேசனும், தானும் சுவரை துளையிட்டு உள்ளே சென்று நகைகளை அள்ளி வந்ததாகவும் மற்ற இருவரும் வெளியில் இருந்ததனர் என முருகன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

திட்டம் போட்டது தான் தான் என்பதால் தனக்கு 12 கிலோ, கணேசனுக்கு 6 கிலோ மற்ற இருவருக்கும் தலா 5 கிலோ என பிரித்துக் கொடுத்ததாகக் கூறி போலீசை அதிர வைத்துள்ளான் முருகன். கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பாக ஒரு வாரம் லலிதா ஜுவல்லரிக்கு தனது குடும்பத்துடன் பலமுறை சென்று நோட்டமிட்டதாகவும் அதனடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் முருகன் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கடந்த ஜனவரி மாதம் திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளையில் 150 கிராம் தங்கம் மட்டுமே கிடைத்ததாகவும் அதனை சமமாக பகிர்ந்து கொண்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளான்.

ஜீயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூன்று கிலோ தங்கம் கொள்ளை போனது குறித்து கேட்ட போது முருகன் சரியாக பதில் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

மதுரை தல்லாகுளம் மருதுபாண்டியர் நகரில் கோபிநாத் என்பவருக்கு சொந்தமான நகைகடையில் 1500 சவரன் தங்க நகை மற்றும் ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், முருகன் மற்றும் கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் மதுரை சின்ன சொக்கிகுளத்தில் சங்கர் என்பவரின் வீட்டில் 170 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கிலும் முருகன் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

எனவே காவலில் எடுத்து விசாரிக்கும் போது இன்னும் பல தகவல்கள் வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொள்ளையில் தொடர்புடைய மற்றொரு முக்கிய நபரான சுரேசை திருச்சி தனிப்படையினர் இன்று காவலில் எடுக்க உள்ளனர். இதனிடேயே முருகனின் மதுரை கூட்டாளி கணேஷ் என்பவனை கைது செய்த போலீசார் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சுரேஷை, 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, திருச்சி நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம் தொடர்பாக சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். இதனிடையே சுரேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி திருச்சி நீதிமன்றத்தில் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கோசலராமன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு திருச்சி மத்திய சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் அழைத்துவரப்பட்ட சுரேஷ், திருச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது, தன்னை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினால் போலீசார் அடித்து காலை உடைத்துவிடுவார்கள் என தனக்கு பயமாக இருப்பதாக நீதிபதியிடம் சுரேஷ் கதறியுள்ளான். 

தொடர்ந்து விசாரணை செய்த நீதிமன்றம், சுரேஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சுரேஷை அழைத்துச்சென்ற போலீசார், ரகசிய இடத்தில் வைத்து அவனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

[…]

சீமான்
தமிழ்நாடு

சீமான் மீது வழக்கு பதிவு..!

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில்  2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள விக்ரவாண்டி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், ராஜீவ்காந்தி கொலையை குறிப்பிட்டுப் பேசினார். ராஜீவ்காந்தியை தாங்கள்தான் கொன்றோம் என்பது சரிதான் என்றும், அமைதிப் படையை அனுப்பி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜீவ்காந்தி தமிழர்களின் தாய் நிலத்தில் கொன்று புதைக்கப்பட்டார் என வரலாறு ஒருநாள் திருத்தி எழுதப்படும் என்றும் சீமான் கூறினார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைவர்களை அவதூறாக பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல் என 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தேசத்திற்கு விரோதமாக பேசிய சீமான் மீது, மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

சீமான் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. டாக்டர் ஜெயக்குமார் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அவதூறாக, கொச்சைப்படுத்தும் வகையில் சீமான் தொடர்ந்து பேசி வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை போரூரில் உள்ள சீமான் வீட்டிற்கும், நாம் தமிழர் கட்சி அலுவலகத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த வழியே செல்லக்கூடிய வாகனங்கள் சோதனைக்கு பிறகே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சியினர் சீமான் வீடு அல்லது அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடயே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், காந்தியை தாங்கள் தான் கொன்றோம் என்று கூறுபவர்கள் மீது ஏன் கோபம் வரவில்லை என கேள்வி எழுப்பினார். ராஜீவ் காந்தி கொலை குறித்த பேச்சிற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி கேட்டபோது, தன் மீது ஏற்கனவே லட்சக்கணக்கான வழக்குகள் உள்ளன என அவர் பதிலளித்தார்.(தேசிய ஒருமைப்பாட்டை பற்றி பேச காங்கிரசுக்கு என்ன தகுதி உள்ளது? என கேள்வி எழுப்பிய சீமான், ஒரே ஒரு மரணத்திற்காக ஒரு இனத்தை அழித்தார்கள் என்றும் சாடினார். பிரதமர் மோடி வேட்டி அணிந்து, சீன அதிபரை சந்தித்ததை வரவேற்க வேண்டும் எனவும் சீமான் பதிலளித்தார்.

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருக்கிறார்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்லாப்பாளையம், கடையம்,பணமலை, சங்கீதமங்கலம் உள்ளிட்ட கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் வெங்காயம், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை என குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என்றும் ஸ்டாலின் சாடினார்.

உலக வங்கியிடம் 300 கோடி ரூபாய் நிதி பெற்று செயல்படுத்திய நந்தன் கால்வாய் திட்டத்தை அதிமுக அரசு கிடப்பில் போட்டதாக அவர் குற்றம்சாட்டினார். ஏரிகளை தூர் வராமலேயே தூர்வாரியதாக அரசு கூறுவதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார்.

[…]

ஸ்டாலின்
தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருக்கிறார்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்லாப்பாளையம், கடையம்,பணமலை, சங்கீதமங்கலம் உள்ளிட்ட கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் வெங்காயம், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை என குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என்றும் ஸ்டாலின் சாடினார்.

உலக வங்கியிடம் 300 கோடி ரூபாய் நிதி பெற்று செயல்படுத்திய நந்தன் கால்வாய் திட்டத்தை அதிமுக அரசு கிடப்பில் போட்டதாக அவர் குற்றம்சாட்டினார். ஏரிகளை தூர் வராமலேயே தூர்வாரியதாக அரசு கூறுவதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார்.

[…]

திருச்சி லலிதா ஜுவல்லரி
தமிழ்நாடு

நகைக் களவாணியுடன் கர்நாடக போலீஸ் கூட்டு ? 12 கிலோ தங்கம் சிக்கியது

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையன் திருவாரூர் முருகன், காவிரி ஆற்றில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை ரகசியமாக பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற கர்நாடக காவல்துறையினர், பெரம்பலூர் போலீசாரிடம் சிக்கினர். நகையைப் பங்கு போட போலீசுடன் நடந்த பேரம் அம்பலமான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைகடையின் சுவற்றில் துளையிட்டு 28 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்று ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் 7 தனிப்படைகள் அமைத்து திருச்சி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில்

4 1/2 கிலோ நகையுடன் திருவாரூர் போலீசில் மணிகண்டன் என்பவன் மட்டும் சிக்கினான். அவன் அளித்த தகவலின் பேரில் இந்த கொள்ளை சம்பவத்தில் கில்லாடி கொள்ளையன் திருவாரூர் முருகன், அவனது தம்பி சுரேஷ் உள்ளிட்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

சுரேஷை நெருங்கி விட்டதாக காவல்துறையினர் கூறிவந்த நிலையில், அவன் நீதிமன்றத்தில் சரண் அடைந்து போலீசாருக்கு அதிர்ச்சி அளித்தான். கொள்ளையன் திருவாரூர் முருகனை தேடி, டெல்லி, ஆந்திரா, புதுச்சேரி என்று தனிப்படையினர் வலம் வர பெங்களூரில் பதுங்கி இருந்த கொள்ளையன் முருகன் அங்குள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தான்.

சரண் அடைந்த இரு கொள்ளையர்களும் தங்களுக்கும் இந்த கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று அடம்பிடித்து வந்த நிலையில், முருகனை ஆறு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்த பொம்மனஹள்ளி போலீசார் முருகனை உரிய முறையில் விசாரிக்க, லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகையில் பெரும்பகுதியை காவிரி ஆற்றங்கரையில் புதைத்து வைத்துவிட்டு வந்திருப்பதாக தெரிவித்துள்ளான் முருகன்.

இந்த நகைகளை எல்லாம் தமிழக போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் எடுத்து சென்றுவிட வேண்டும் என்ற திட்டத்துடன், பொம்மனஹள்ளி போலீசார் திருவாரூர் முருகனை அழைத்துக் கொண்டு திருவெறும்பூர் அடுத்த பூசத்துறை காவிரி ஆற்றுபடுகைக்கு சாதாரண உடையில் சென்றுள்ளனர்.

அங்கு முள்செடி போட்டு மூடி வைக்கப்பட்ட இடத்தை தோண்டியபோது அங்கிருந்து 12 கிலோ அளவிலான தங்க நகைகளை கைப்பற்றினர். பின்னர் அந்த நகைகளுடன் பெங்களூருக்கு விரைந்தனர். வழியில் பெரம்பலூர் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் நகைகளுடன் சிக்கிய பொம்மனஹள்ளி போலீசார், திருட்டு நகைகளை பறிமுதல் செய்து கொண்டு செல்கிறோம் என்று தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

அந்த நகைகள் அனைத்திலும் லலிதா ஜூவல்லரி பெயர் கொண்ட துண்டுச்சீட்டு தொங்கியதால் சந்தேகப்பட்டு அவர்களை காருடன் பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்து சென்று விசாரித்தபோது பொம்மன ஹள்ளி போலீசாரில் சிலர் கொள்ளையன் முருகனுடன் ரகசிய கூட்டு வைத்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

நகைக்கடை கொள்ளையில் காவல்துறையினர் தன்னை தீவிரமாக தேடுவதை அறிந்த முருகன், தனக்கு தெரிந்த பொம்மனஹள்ளி குற்றப்பிரிவு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான். அங்கு ஏற்கனவே நிலுவையில் இருக்கும் கொள்ளை வழக்கு ஒன்றில் காவலில் எடுப்பதுபோல முருகனை அழைத்துச்சென்று, தமிழகத்தில் காவிரி ஆற்றுக்குள் பதுக்கி வைத்துள்ள கிலோ கணக்கிலான நகைகளை கைப்பற்றி தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வது என்றும், முருகனை வழக்கில் இருந்து காப்பாற்றி விடுவது என்றும் திட்டமிட்டுள்ளனர்.

ஒருவேளை தமிழக காவல்துறையிடம் சிக்கினால், தனக்கும் கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்றும், நகைகள் ஏதும் தன்னிடம் இருந்து திருச்சி போலீசார் கைப்பற்றவில்லையெனில் திருட்டுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றாகி விடும் எனவும் திருவாரூர் முருகன் திட்டமிட்டுள்ளான்.

அதிர்ஷ்டவசமாக பெரம்பலூர் போலீசாரிடம் சிக்கியதால் லலிதா ஜுவல்லரி நகை கொள்ளையில் முருகன் மூளையாக செயல்பட்டது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பொம்மனஹள்ளி போலீசாருக்கு களவாணியுடனான கூட்டு குறித்து கர்நாடக மாநில காவல்துறை தலைமைக்கு உடனடியாக விவரிக்கப்பட்டவுடன், அந்த நகைகளை முறைப்படி தமிழக போலீசாரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து கைப்பற்றப்பட்ட நகைகளை பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைத்து அவர்கள் அனுமதியுடன் திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து நகைகளுடன் பொம்மனஹள்ளி போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொள்ளையனுடன் கூட்டு சேர்ந்து ரகசியமாக நகைகளை பங்குபோட நினைத்த திட்டம் தோல்வியில் முடிந்தது. ஒவ்வொருமுறையும் திருவாரூர் முருகன் இதே பாணியில் தான் கொள்ளையடித்த நகைகளை பல்வேறு பகுதி காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் மூலம் பங்கு போட்டு தப்பி வந்துள்ளான். ஆனால் லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் போலீசாரின் தொடர் வாகன சோதனையால் நகையை வெளியில் கொண்டு செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டான் என்கின்றனர் காவல்துறையினர்.

வாகன சோதனை நடத்துவது வாகன ஓட்டிகளை வதைப்பதற்கு அல்ல, இவர்களை போன்ற கேடிகளை அடையாளம் காண்பதற்கு என்று சுட்டிக்காடும் காவல்துறையினர் மீதமுள்ள நகைகளை மீட்கவும் , முருகனின் கூட்டாளிகளை கைது செய்யவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

[…]

பிரதமர் மோடி
தமிழ்நாடு

பிரதமருக்குள் இருந்த கவிஞனை வெளிக்கொணர்ந்த கடற்கரை நடைப்பயிற்சி

பிரதமர் மோடி தனது மாமல்லபுரம் வருகையைத் தொடர்ந்து கடல் குறித்த கவிதை ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பை முன்னிட்டு மாமல்லபுரம் வந்த பிரதமர் மோடி கடற்கரையில் அதிகாலை நேர நடைப் பயிற்சி மேற்கொண்டார்.

இந்நிலையில் அவர் தனது டிவிட்டர் பதிவில் மாமல்லபுரத்தின் கண்ணுக்கினிய கடற்கரையில் புத்துணர்ச்சியூட்டும் நடைப் பயிற்சி மற்றும் உடற் பயிற்சி மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு படி மேலே சென்று மாமல்லபுரம் கடற்கரை நடைப் பயிற்சி பிரதமர் மோடிக்குள் இருந்த கவிஞரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

டிவிட்டரில் அவர் கடல் குறித்த கவிதை ஒன்றை இந்தி மொழியில் பதிவிட்டுள்ளார். கடலே உனக்கு வணக்கம் எனத் தொடங்கும் அந்தக் கவிதை அவர் கடலுடன் உரையாடுவதைப் போல அமைந்திருக்கிறது.

இந்த உரையாடல் என் உள்ளார்ந்த உணர்வு உலகைப் பற்றியது என்றும் என் உணர்வுகளை உன்னோடு பகிர்ந்துகொள்கிறேன் என்றும் கடலிடம் கூறும் அவர், கடலுக்கு, அலைகளுடனும், சூரியனுடனும் உள்ள உறவையும், கடலின் வலிகளையும் வர்ணிக்கிறார்

[…]

மழை
தமிழ்நாடு

இடி மின்னலுடன் கனமழை..!

நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

ஈரோடு மாவட்டம் ஈரோடு,பெருந்துறை,பவானி,சென்னிமலை கொடுமுடி,காஞ்சிகோயில்,திங்களூர், விஜயமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான காவேரி நகர், எம்ஜிஆர் நகர், கோட்டைமேடு,படை வீடு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. விவசாயிகள் தற்போது நாற்று நடவு செய்ய நிலங்களை சேறு அடித்து இருந்த நிலையில் இந்த மழை பெய்திருப்பது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதற்கிடையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தன்னுடைய நிலத்தில் வேலை செய்து விட்டு வீடு திரும்புகையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை, நீலகிரி,திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

[…]

மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

அரசுப் பேருந்தில் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசுப் பேருந்தில் மக்களை சந்தித்து வாக்குசேகரித்தார். 

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 21ஆம் தேதி அன்று சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அந்தத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த இரு தொகுதிகளிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணையில் அமர்ந்தும், நடைபயணமாகச் சென்றும் வாக்கு சேகரித்து வருகிறார். இன்று காலை விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் நகரை ஒட்டிய ஸ்டாலின் நகரில், வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது மக்களிடம் குறைகளைக் கேட்ட மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் எந்த ஒரு அடிப்படை பணிகளும் நடைபெறவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

இதை அடுத்து ஆரியூர் என்ற ஊரில் அவர் திண்ணைப் பிரச்சாரம் செய்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்படும் என உறுதி அளித்தார்.
பின்னர் அந்த ஊரில் நடைபயணமாக சென்று வாக்குகளை சேகரித்தார்.

அப்போது ஏழு செம்பொன் பகுதியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறிய மு.க.ஸ்டாலின், பேருந்தில் பயணம் செய்தவர்களிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரித்தார்.

இதேபோல் நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கொங்கந்தான் பாறையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திண்ணைப் பிரச்சாரம் செய்தார். அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாங்குநேரியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு உபரிநீர் கால்வாய் திட்டம் திமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டதாகவும், தந்தை கொண்டு வந்த திட்டத்தை, அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என வைகோ வாக்குறுதி அளித்தார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால், அதில், திமுக வெற்றிப்பெற்று, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 

விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காணை, கல்பட்டு, மல்லிகைப்பட்டு, சூரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டார். பரப்புரைக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

திமுக ஆட்சிக்காலத்தில், விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மக்களின் தேவைகளை, மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளிலும் முறைகேடுகள் நிலவுவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால், அந்த முறைகேடுகள் தடுக்கப்படும் என்றும், மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மத்திய அரசிடம் வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முன்வரவில்லை என திமுக தலைவர் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால், அதில், திமுக வெற்றிப்பெற்று, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். 

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட சிதம்பராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், அதிமுக வேட்பாளர் நாராயணன், வீடு வீடாக சென்று, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக வேட்பாளரை, கட்சித் தொண்டர்கள், மலர்கள் தூவி வரவேற்றனர்.

கூட்டணி கட்சியினர், ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் வாக்குசேகரித்தார். தேர்தலில் வெற்றிபெற்றால், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, நிறைவேற்றி தருவதாக, அதிமுக வேட்பாளர் நாராயணன் உறுதியளித்தார். 

[…]

கொலை
தமிழ்நாடு

பெற்றவர்களை கொன்ற கொடூரன்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சொத்துக்காகவும் வங்கியிலுள்ள பணத்துக்காகவும் பெற்ற தாய் தந்தையை திட்டம்போட்டு 6 மாத இடைவெளியில் அடுத்தடுத்து கொலை செய்த கொடூர மகன் கைது செய்யப்பட்டான். 

கண்ணங்கோட்டை நாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் - செல்லாயி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களின் மூத்த மகன் முத்து கண்பார்வை அற்ற மாற்றுத்திறனாளி.

இளைய மகனான சோனை முத்து, கடந்த 2016ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்துள்ளான். திருமணமாகி மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில், வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி ஊர் சுற்றி வந்துள்ளான் சோனைமுத்து.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ஆறுமுகம் உயிரிழந்தார். அவர் இயற்கையாக மரணமடைந்ததாகக் கூறி ஊர்மக்கள் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு முன் அவரது மனைவி செல்லாயி உயிரிழந்தார்.

தனது தாய் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும் போதை அதிகமாகி, அதன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் கூறி, அவரது உடலையும் அடக்கம் செய்துள்ளான் சோனைமுத்து.

இந்த நிலையில்தான் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான மூத்த மகன் முத்து, தனது தாயின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ஊர் மக்களிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் சார்பில் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இறந்துபோன ஆறுமுகத்துக்குச் சொந்தமாக திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் 16 செண்ட் நிலம் இருந்துள்ளது. இதில் 6 செண்ட் நிலம் சாலை விரிவாக்கப் பணிக்காக நெடுஞ்சாலைத் துறையால் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இழப்பீடாக 7 லட்ச ரூபாய் ஆறுமுகத்தின் வங்கிக் கணக்கில் கடந்த ஆண்டு செலுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பணத்தை தனக்குத் தருமாறு சோனைமுத்து தந்தை ஆறுமுகத்திடம் கேட்டு அவ்வப்போது தகராறு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள 10 செண்ட் நிலத்தையும் கேட்டு சோனைமுத்து தகராறு செய்து வந்துள்ளான். குடித்துவிட்டு ஊரைச் சுற்றிவந்ததால் பணத்தையோ நிலத்தையோ தர முடியாது என ஆறுமுகமும் செல்லாயியும் மறுத்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த சோனைமுத்து 6 மாதங்களுக்கு முன் தந்தை ஆறுமுகத்தை வயல்காட்டில் வைத்து அடித்தே கொலை செய்துவிட்டு, இயற்கை மரணம் என நாடகமாடியுள்ளான். உடனடியாக தாயையும் கொன்றால் சந்தேகம் வரும் என எண்ணி 6 மாதங்கள் கழித்து ஆட்டுக் கொட்டகையில் வைத்து தாயை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, மதுவை அவர் மீது தெளித்துவிட்டு, போதையில் உயிரிழந்துவிட்டதாக நாடகமாடியுள்ளான்.

போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த உண்மைகளை அவன் ஒப்புக்கொண்டதை அடுத்து, இருவரது உடல்களும் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. 

“பணம் பத்தும் செய்யும் என்பார்கள்”. அந்தப் பணம் பெற்ற தாய் தந்தையரையும் கூட கொலை செய்யத் தூண்டும் என்பது இந்த சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது.

[…]

கொலை
தமிழ்நாடு

திருமண அழைப்பு கணவன் – மனைவி கொன்று புதைப்பு..! போலீஸ் பிடியில் சகோதரி

திருப்பூரில் வசிக்கும் சகோதரிக்கு மதுரையில் இருந்து திருமண அழைப்பிதழ் கொடுக்கச்சென்ற பைனான்சியரும் அவரது மனைவியும் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சகோதரி வீட்டின் பின்புறம் ஒரே குழியில் புதைக்கப்பட்ட இருவரது சடங்களையும் காவல்துறையினர் தோண்டி எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அடுத்த சூளபுரம் கிராமத்தை சேர்ந்த பைனான்சியர் செல்வராஜ். இவரது மனைவி வசந்தாமணி. இவர்களுக்கு பாஸ்கர் என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர். மகள் சரண்யாவுக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் பாஸ்கருக்கு நவம்பர் 1ந்தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இதனால் செல்வராஜ் தனது சொந்தங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10 ந்தேதி திருப்பூர் அடுத்த வெள்ளகோவில் உத்தண்ட குமார வலசு கிராமத்தில் வசித்து வரும் தனது மூத்த சகோதரி கண்ணம்மாளுக்கு திருமண அழைப்பிதல் கொடுக்க மனைவி வசந்தாமணியுடன் காரில் அவர் புறப்பட்டார்.

அதன் பின்னர் தம்பதியர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர்கள் புறப்பட்டுச்சென்ற இண்டிகா கார் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சாலை பிரிவு சர்வீஸ் ரோட்டில் வெள்ளிக்கிழமை காலை கேட்பார் இன்றி நின்றது.

ரோந்து சென்ற தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள், இது பற்றி தான்தோன்றி மலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

காரை திறந்து சோதனை செய்த போது, அதில் பைகளில் திருமண பத்திரிகைகள், அரிசி உள்ளிட்ட பொருட்கள் இருந்துள்ளன. மேலும், ஓட்டுநர் இருக்கை மற்றும் காரின் உள் பகுதி, வெளிப்பகுதி முழுவதும் மிளகாய் பொடி சிதறி கிடப்பதை பார்த்த போலீசார் காரை தான்தோன்றி மலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

திருமண பத்திரிக்கையை கொண்டு அது மாயமான பைனான்சியர் பயணித்த கார் என்பதை கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செல்வராஜின் மருமகன் கவுசிக் என்பவர் தனது மாமனார் மற்றும் மாமியார் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் புறப்படுவதற்கு முன்னதாக செல்வராஜின் உறவினர்கள் செல்வராஜின் சகோதரி கண்ணம்மா வீட்டிற்கு சனிக்கிழமை சென்று பார்த்த போது கண்ணம்மாள் மாயமாகி இருந்தார்.

வீட்டின் பின்புறத்தில் புதிதாக குழி ஒன்று வெட்டப்பட்டு இருந்தது. அதில் பாதி அளவு மண் போட்டு அதன் மேல் துணி போட்டு மூடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

அதில் இருந்து துர் நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த துணியை எடுத்து பார்த்த போது கணவன் மனைவி இருவரும் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில் குழிக்குள் சடலமாக பாதி அளவு புதைக்கப்பட்ட நிலையில் கிடந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இரவு நேரம் ஆகிவிட்டதால் இரு உடல்களையும் எடுக்க இயலாது என்று அப்படியே துணி போட்டு மூடிவைத்தனர். அங்கு காவலுக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர்.

ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில் கணவர் இறந்து விட்டதால் அந்த ஓட்டு வீட்டில் கண்ணாம்மா மட்டும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது கண்ணம்மாவை பிடித்து விசாரித்து வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமை இருவரது சடலங்களையும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கவுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற இடத்தில் கண்ணம்மா வீட்டில் பார்க்க கூடாத காட்சியை பார்த்து விட்டதால் இந்த கொலை நடந்ததா ? அல்லது கணவனை இழந்து தனியாக வசிக்கும் தன்னை பைனான்சியரான அண்ணன் கவனிக்கவில்லை என்ற முன்பகையால் இந்த சம்பவம் நடந்ததா ? என்ற இருவேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் கண்ணம்மாவுக்கு துணையாக இருந்து இந்த கொலைகளை செய்தது மர்ம ஆசாமி யார் ? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உடன் பிறந்த சகோதரி வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற இடத்தில் அண்ணனும் அண்ணியும் கழுத்தறுத்து கொல்லப்பட்ட இந்த சம்பவம் திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

[…]

சோதனை
மாவட்டம்

தனியார் பள்ளியில் 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தாளாளர் வீட்டில் 2-வது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

போதுப்பட்டி போஸ்டல் காலனியில் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் அதன் கீழ் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளிடம் அரசு நிர்ணயம் செய்ததை விட அதிகமாக ஆண்டுக்கு மூன்று லட்சத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் நீண்ட கால நீட் பயிற்சிக்கு ஒன்றே முக்கால் லட்சம் வரை கட்டணம் பெறப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மற்றும் கோவையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் பள்ளி, நீட் பயிற்சி மையம், பள்ளியின் தாளாளர் சரவணன் மற்றும் இயக்குனர்கள் வீடுகளில் நேற்று சோதனையில் ஈடுப்பட்டனர்.

இரவு 10 மணி வரை சுமார் 14 மணி நேரம் சோதனை நடந்தப்பட்ட நிலையில் இன்று காலை 7 மணியில் இருந்து அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

[…]

பிரதமர் மோடி - சீன அதிபர்
தமிழ்நாடு

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தை

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இரண்டாம் நாள் பேச்சுவார்த்தையை கோவளம் கடற்கரையோர ரிசார்ட்டில் மேற்கொண்டனர்.

சென்னை சந்திப்பின் மூலம் உருவாகியுள்ள தொலைநோக்கு பார்வை, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய அத்தியாயம் படைக்கும் என மோடி அப்போது குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் இடையே முறைசாரா உச்சிமாநாட்டின் பேச்சுவார்த்தை நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது நாள் பேச்சுவார்த்தை கோவளத்தில் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ரிசார்ட்டில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கியிருந்த சீன அதிபர் ஜின்பிங், காலை 9.05 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. அதையொட்டி செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, சீன அதிபர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் முன்னர் சொல்லப்பட்டதில் இருந்து 35 நிமிடங்கள் தாமதமாக, 9.40 மணிக்கு, தங்கியிருந்த கிண்டி ஹோட்டலில் இருந்து ஜின்பிங் புறப்பட்டார்.

அங்கு அவரை வரவேற்கும் விதமாக சீனர்கள் கையில் இரு நாட்டு தேசிய கொடிகளுடன் நின்றிருந்தனர். அவர்களை பார்த்து கையசைத்தபடியே காரில் சென்ற ஜின்பிங், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாதஸ்வர கச்சேரியையும் காரில் இருந்தபடியே கேட்டு ரசித்தார்.

கிண்டியிலிருந்து கோவளம் செல்லும் வழியில், சீன அதிபரை வரவேற்கும் வகையில் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மத்திய கைலாஷ் பகுதியில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், பார்வையிட்டனர். சீன அதிபர் அப்பகுதியை கடந்து சென்றபோது, கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளிலும் ஜின்பிங்கை வரவேற்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் களைகட்டின. சீன அதிபர் ஒவ்வொரு பகுதியாக கடந்துசென்ற பின்னர் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கோவளம் ரிசார்ட் சென்றடைந்த ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்றார்.பின்னர் இருவரும் உரையாடியபடியே பேட்டரி காரில் பயணித்து, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கண்ணாடி அறையை சென்றடைந்தனர். மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் உடன் இருக்க, அங்கு இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்ட சீன அதிபருடன் வந்த மோடி, அவருக்கு கோவளம் கடற்கரையோர எழில் காட்சி குறித்து எடுத்துரைத்தார். பின்னர் இருவரும் சிறிது தூரம் உரையாடியபடியே நடந்துசென்றனர்.

தத்தமது நாட்டு குழுவினருடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடியுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே உள்ளிட்டோர் இடம்பெற்றனர். இதேபோல, சீன அதிபருடன் அந்நாட்டு உயரதிகாரிகள் குழு பங்கேற்றது.

 பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், தமிழகம்-சீனா இடையே இருந்த பழமையான வர்த்தக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளில் பெரும்பாலான காலக்கட்டங்களில் இந்தியாவும் சீனாவும் பொருளாதார வல்லரசாக திகழ்ந்தன என்றும் அவர் குறிப்பிட்டார். சீனாவின் வூகான் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற முறைசாரா உச்சிமாநாடு, இரு நாடுகளின் உறவில் புதிய நம்பிக்கையையும் புதிய உத்வேகத்தையும் அளித்தது எனவும் பிரதமர் கூறினார்.

சென்னை மூலம் ஏற்பட்டுள்ள பிணைப்பு, இந்திய-சீன உறவில் புதிய சகாப்தம் படைக்கும் என்றும் மோடி தெரிவித்தார். இருதரப்பு உறவுகள் தொடர்பாக, நண்பர்களைப் போல, இதயபூர்வமான சந்திப்பை மேற்கொண்டதாக சீன அதிபர் ஜின்பிங் அப்போது குறிப்பிட்டார். பிரதமர் மோடி அளித்த விருந்தோம்பலில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்ததாகவும், தாமும் தம்முடன் வந்த குழுவினரும் விருந்தோம்பலில் திளைத்ததாகவும் அவர் கூறினார்.

தமக்கு இது மறக்கவியலாத அனுபவத்தை வழங்கியிருப்பதாகவும் ஜின்பிங் தெரிவித்தார். இதன் பிறகு இரு தலைவர்களும் முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விவேகத்துடன் கையாள்வது என்றும், அவை தகராறுகளாக மாற அனுமதிக்கப் போவதில்லை என்று இருதரப்பும்  முடிவெடுத்திருப்பதாக மோடி குறிப்பிட்டார். இரு நாடுகளிடையேயான நல்லுறவு உலகின் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் பங்களிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

கோவளத்தில் இருந்து சாலை வழியாக சென்னை விமான நிலையம் வந்த ஜின்பிங், தனி விமானத்தின் மூலம் நேபாளம் புறப்பட்டுச் சென்றார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். அப்போது சீன அதிபர் ஜின்பிங், ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் சிறிதுநேரம் அளவளாவினார்.

இதனிடையே கோவளத்தில் இருந்து திருவிடந்தைக்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். இதையடுத்து 2 நாள் தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.

[…]

லலிதா ஜூவல்லரி
தமிழ்நாடு

லலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை மீட்ட தனிப்படை போலீசார்..

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையன் முருகன் திருடிய நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி அன்று 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போயின. இந்தக் கொள்ளைக்கு திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன், மூளையாகச் செயல்பட்டது அம்பலமானது.

இந்த வழக்கில், முருகனின் உறவினரான மணிகண்டனும், மற்றொரு கொள்ளையனும், முருகனின் அக்காள் மகன் சுரேஷ் என்பவனின் தாய் கனகவள்ளியும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் சரண் அடைந்தான். இதைத் தொடர்ந்து கொள்ளையன் முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தான்.

முருகன் மீது ஏற்கெனவே அந்த ஊரில் பல்வேறு கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் தொடர்பாக முருகனை காவலில் எடுத்து அம்மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, திருச்சி மற்றும் பெரம்பலூரில் நகைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக முருகன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. முருகனை அழைத்துக் கொண்டு தமிழகம் வந்த கர்நாடக போலீசார், திருச்சி மற்றும் பெரம்பலூரில் முருகன் சொன்ன இடங்களில் எல்லாம் சோதனை நடத்தி நகைகளை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நகைகளுடன் அவர்கள் புறப்பட்டுச் செல்லவே, இதுதொடர்பாக திருச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஒருவேளை அவர்கள் பறிமுதல் செய்த நகைகள், லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்ததாக இருக்கக் கூடும் என்று சந்தேகம் எழவே பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதை அடுத்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த கர்நாடக போலீசாரின் காரை, வாலிகண்டபுரம் என்ற இடத்தில் வைத்து பெரம்பலூர் போலீசார் மறித்தனர். பறிமுதல் செய்த நகைகள் மற்றும் முருகனோடு, கர்நாடக போலீசாரை, எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஆயுதப் படை வளாகத்திற்கு பெரம்பலூர் போலீசார் அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து நகைகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது, அந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நகைகளை எடை போடும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

முருகனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளை அடையாளம் காட்டுவதற்காக திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடை மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் பெரம்பலூர் ஆயுதப் படை வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். கடை நகைகளை அவர்கள் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

[…]

மோடி
தமிழ்நாடு

சென்னை மாமல்லபுரம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினார் பிரதமர் மோடி

மாமல்லபுரம் கடற்கரையில், காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினார். பொது இடங்களை தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்வோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்த பிரதமர் மோடி, கோவளத்தில் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் என்ற ரிசார்ட்டில் தங்கினார். இந்நிலையில் இன்று காலை கடற்கரையில் நடைப் பயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதுதொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாமல்லபுரத்தில் எழில்மிகு கடற்கரையில், புத்துணர்ச்சியூட்டும் நடைப் பயிற்சியும், உடற்பயிற்சியும் மேற்கொண்டதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, கடற்கரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றித் தூய்மைப் பணியில் ஈடுபட்ட வீடியோவையும் பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜாகிங் செய்தபடியே, செல்லும் வழியில் குப்பைகூளங்களை அகற்றி துப்புரவு பணியில் ஈடுபடுவதை பிளாகிங் (plogging) எனக் குறிப்பிடுகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவது சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக மாறியதைத் தொடர்ந்து, பிளாகிங் எனப்படும் இந்த முன்னுதாரணமான நடைமுறை உலகம் முழுவதும் பரவி வருகிறது.

பிளாகிங் எனப்படும் இந்த முறையில், நடைப் பயிற்சி மேற்கொண்ட படியே பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை மாமல்லபுரம் கடற்கரையில் அகற்றியதாகவும், 30 நிமிடங்களுக்கும் அதிகமாக இந்த பணியை மேற்கொண்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரையில் சேகரித்த குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பொது இடங்கள் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் இருப்பதை உறுதி செய்வோம் என்றும், உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதை உறுதிசெய்வோம் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

[…]

கொள்ளையன்
தமிழ்நாடு

லலிதா ஜூவல்லரி நகைக் கடையை இரண்டு மாதம் நோட்டமிட்டு கைவரிசை செய்த கொள்ளையன்

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் திருவாரூர் முருகன் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வரும் நிலையில், அவன் திருச்சியில் வீட்டை வாடகைக்கு எடுத்து இரண்டு மாதங்கள் நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ள தகவல் தெரியவந்துள்ளது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. திருவாரூரைச் சேர்ந்த பலே கொள்ளையன் முருகனும், அவரது அக்காள் மகனான சுரேஷூம் இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டது, திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே வாகனச் சோதனையின் போது போலீசாரிடம் சிக்கிய கொள்ளையன் மணிகண்டன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

கைது செய்யப்பட்ட அவனிடம் இருந்து நான்கரை கிலோ நகைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கொள்ளையில் வழக்கில் தொடர்புடைய சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான்.

இந்த நிலையில் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார். இவர் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள நறுங்குழல் நாயகி நகரில், கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி லலிதா ஜூவல்லரி நகைக் கடையை தனியாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

மனைவி, மகன், மகள் மற்றும் நாயுடன் வசித்து வந்திருக்கிறான் திருவாரூர் முருகன். ஆறாயிரம் ரூபாய் வாடகைக்கு சிறிய வீட்டை வாடகை எடுத்திருந்த அவன், பத்து மாத வாடகை தொகையான 60 ஆயிரம் ரூபாயை முன்பணமாக வீட்டு உரிமையாளரிடம் வழங்கி இருக்கிறார்.

அவர் வசிக்கும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதை கண்ட கொள்ளையன் முருகன், அதனை சரி செய்ய அப்பகுதியினரிடம் முடிந்த அளவிற்கு பணத்தை திரட்டுங்கள், மீதம் தேவைப்படும் பணத்தை தாம் தருவதாக கூறியிருக்கிறார். கொள்ளையன் முருகன் இரண்டு கார்களில் அடிக்கடி வெளியே சென்று வந்த தகவலை அக்கம் பக்கத்தினர் மூலம் போலீசார் பெற்றிருக்கின்றனர்.

கடந்த மாதம் 29 ஆம் தேதி திடீரென குடும்பத்துனருடன் வெளியே சென்றதாக கூறப்படும் முருகன், அதன் பிறகு ஒன்றாம் தேதி வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது. அடுத்த நாளான அதாவது லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 2ஆம் தேதி இரவுக்குப் முருகன் குடும்பத்தினரை பார்க்கவில்லை என்று கூறுகின்றனர் அப்பகுதியினர்.

இந்த நிலையில் கொள்ளையன் முருகன் தங்கியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு ஏதும் கைப்பற்றப்பட்டதா அல்லது ஏதுல் சிக்கவில்லையா என்பது போன்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. தலைமறைவாக உள்ள கொள்ளையன் திருவாரூர் முருகனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

[…]

பிரதமர் மோடி-சீன அதிபர்
தமிழ்நாடு

பிரதமர் மோடி, சீன அதிபர் இன்று மாமல்லபுரம் வருகை....

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்னை வர உள்ளனர். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு அவரை ஆளுநர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களும் அதிகாரிகளும் வரவேற்கிறார்கள். இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் கோவளம் சென்று அங்கு உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து சீனாவில் இருந்து தனி விமானத்தில் வரும் அந்நாட்டு அதிபர் ஜின் பிங், இன்று மதியம் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலுக்கு ஜின்பிங் செல்கிறார். கிண்டி ஓட்டலில் ஜின் பிங் தங்குவதை ஒட்டி, அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜின் பிங் தங்கும் அறை, அந்த அறை இருக்கும் மாடியில் முதல் அடுக்கு பாதுகாப்பு மொத்தமும் சீன அதிபரின் தனி பாதுகாப்பு படையின் வசம் உள்ளது.

மாலை 4 மணியளவில் ஹோட்டலில் இருந்து கார் மூலம் மாமல்லபுரம் செல்லும் சீன அதிபருக்கு சாலையின் பல்வேறு இடங்களிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியவாறு அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோவில் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட உள்ளனர். கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு இரவு உணவை ஒன்றாக பகிர உள்ளனர். இந்த சந்திப்பு நாளையும் மாமல்லபுரத்தின் புகழ்மிக்க பகுதிகளில் தொடர உள்ளது. தீவிரவாதம், தீவிரவாதத்திற்கான நிதி ஆதாரங்களை ஒடுக்குதல், எல்லை பாதுகாப்பு, வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இந்த பேச்சுவார்த்தைகளில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-சீனா இடையிலான அரசாங்க உறவுகளை மேம்படுத்த இந்த பேச்சுவார்த்தைகள் உதவும் என்றாலும் இரு தலைவர்களிடையே எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்றும் காஷ்மீர் தொடர்பான பேச்சு வார்த்தை இடம் பெறாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை பிற்பகல் 2 மணிக்கு மேல் பிரதமர் மோடியுடனான விருந்துக்குப் பின்னர் அதிபர் ஜின்பிங் நேபாளம் புறப்பட்டு செல்கிறார். அதன் பின்னர் மோடியும் டெல்லி திரும்புகிறார்.

கடந்த 2017ம் ஆண்டு இந்திய-சீன எல்லையான டோக்லாம் பகுதியில் சீனப்படைகளும் இந்தியப் படைகளும் நேருக்கு நேர் அணிவகுத்து 73 நாட்களுக்கு எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், wuhan மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தை இந்த பதற்றத்தைத் தணிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.

[…]

விபத்து
தமிழ்நாடு

அரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்

சேலம் அருகே அயோத்தியாப்பட்டினம் பிரிவுசாலையில் அரசுப் பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாணவ மாணவிகள் உள்பட 35 பேர் காயம் அடைந்தனர்.

அயோத்தியாப்பட்டினம் அருகே ராமலிங்கபுரத்தில் உள்ள ஏவிஎஸ் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று சேலத்தில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தது.

அயோத்தியாப்பட்டினம் பிரிவுசாலை அருகே சென்றபோது எதிரே வாழப்பாடியில் இருந்து  சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து அயோத்தியாப்பட்டினம் ஊருக்குள் சென்று திரும்புவதற்காக வலது பக்கமாக திரும்பி சாலையை கடக்க முயன்றது.

பாதி தூரம் கடந்த நிலையில் இடது பக்கமாக சாலையில் வேகமாக வந்த கல்லூரி பேருந்து அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில் அரசுப்பேருந்தின் பக்கவாட்டு பகுதி முழுவதும் கடும் சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் 5 பேரும்,  பேருந்து பயணிகள் 30 பேரும் காயம் அடைந்து, தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அரசு பேருந்து சாலையை கடப்பதை கவனிக்காமல், கல்லூரிப்பேருந்து அதிவேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்து காளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

[…]

சுரேஷ்
தமிழ்நாடு

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட சுரேஷ் எனும் நபர் செங்கம் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்ட சுரேஷ் எனும் நபர் செங்கம் நீதிமன்றத்தில் சரண்

கடந்த வாரம் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக சுரேஷ் என்பவனை போலீசார் தேடி வந்தனர்

போலீசாரால் தேடப்பட்டு வந்த சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான்

[…]

தீக்குளித்த காதலி
தமிழ்நாடு

சந்தேக தீயில் கருகிய காதல்..! தீக்குளித்த காதலி

பொறியியல் படித்துக் கொண்டிருந்த போதே, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தபால் ஊழியராக மத்திய அரசு பணியில் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரை மாய்த்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சந்தேக தீயில் காதலியை பொசுக்கிய விபரீத காதலன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரை பகுதியை சேர்ந்த நகராட்சி ஊழியர் சுமதி என்பவரின் மகள் பிரீத்தி. கணவர் 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட சுமதி தான் பிரீத்தியை வளர்த்து வந்தார்.

கோவை தனியார் பொறியியல் கல்லூரி விடுதி ஒன்றில் தங்கி படித்து வந்த பிரீத்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் தபால் ஊழியர்களுக்கான தேர்வு எழுதி வெற்றி பெற்றதால், தபால் ஊழியராக தாமரைக்குளம் அடுத்த எடகீழையூரில் பணிக்கு சேர்ந்தார்.

கடந்த 20 நாட்களாக தனது தாத்தா தங்கையன் வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு கோவைக்கு சென்று கல்லூரி நண்பர்களை சந்தித்து திரும்பிய பிரீத்தி, திங்கட்கிழமை இரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய பிரீத்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரீத்தி பரிதாபமாக பலியானார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மன்னார்குடி காவல்துறையினர் விசாரித்தபோது, பிரீத்தி கல்லூரியில் படித்தபோது அவரை மாணவர் ஒருவர் காதலித்ததாகவும், தபால் ஊழியராக பணி கிடைத்த பின்னர் பிரீத்தியால் முன்புபோல் பேச நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கோவை சென்ற பிரீத்தி தனது காதலன் சொன்ன இடத்தில் அறை எடுத்து தங்காமல், தனியாக ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகின்றது. இதனால் பிரீத்தியின் நடவடிக்கை குறித்து காதலனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பிரீத்தி தன்னை ஏமாற்றி விட்டதாக வார்த்தைகளால் சுட்டதால் நொந்து போன பிரீத்தி இந்த சோக முடிவை தேடிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

மேலும் தங்களது பூர்வீக சொத்தை தனது தாய் விற்பதற்கு எடுத்த முடிவும் பிரீத்திக்கு அதிருப்தியை கொடுத்ததாக கூறப்படுகின்றது. உலகில் யாரும் நம்மை புரிந்து கொள்ள வில்லையே ? என்ற விரக்தியில் தபால் ஊழியர் பிரீத்தி இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது, மன அழுத்தத்தை குறைத்து, பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டால் மட்டுமே சாதனைகளைப் படைக்க முடியும்..!

[…]

 2.0 பெண் குழந்தை கொலை..!
தமிழ்நாடு

சித்திக்கொடுமை 2.0 பெண் குழந்தை கொலை..! திகிலில் மென் பொறியாளர்

சென்னை தாம்பரம் அருகே மென் பொறியாளரின் முதல் மனைவிக்கு பிறந்த 6 வயது குழந்தையை, கழுத்தை நெரித்து கொலை செய்து மாடியில் இருந்து தூக்கி வீசியதாக அவரது இரண்டாவது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சித்தி கொடுமையின் அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம் சக்கரபானி தெருவை சேர்ந்த மென்பொறியாளர் பார்த்திபன் துரைப்பாக்கத்தில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ராகவி என்ற ஆறு வயது மகள் உள்ள நிலையில் முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து சூர்யகலா என்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

சூரியகலாவிற்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும், அவர் தன்னுடைய முதல் கணவனுக்கு பிறந்த ஆண் குழந்தையை தன்னுடன் வளர்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த குழந்தை ராகவி , தனது சித்திக்கு பிறந்த தம்பி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்

சம்பவத்தன்று தனது சித்தியுடன் வீட்டில் தனியாக இருந்த நிலையில் குழந்தை ராகவியை 2 மணி நேரமாகக் காணவில்லை என்றும் அவரை தேடி வருவதாகவும் தனது கணவருக்கு சூரியகலா செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே வீட்டிற்கு வந்த பார்த்திபன் அப்பகுதி முழுவதும் ராகவியை தேடியுள்ளார். அப்போது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து பார்த்தபோது வீட்டின் பின்புறத்தில் ராகவி சடலமாக கிடப்பதை பார்த்து பார்த்திபன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர். சிறுமி மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்திருக்கலாம் என முதலில் போலீசாரிடம் கூறப்பட்டது. ஆனால் மாடியில் இருந்து குழந்தையின் சடலம் தூரத்தில் விழுந்து கிடந்ததால், குழந்தை தானாக அங்கு சென்று விழ வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய போலீசார், தூக்கி வீசியது யார்? என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்தனர்.

அப்போது குழந்தை ராகவி மீது சித்தி சூரியகலா வெறுப்பை வெளிப்படுத்தி துன்புறுத்தி வந்ததை அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து சூரியகலாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

உறவினர்களின் வற்புறுத்தலாலும், தனது பெண் குழந்தையை நல்ல முறையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, பார்த்திபன் செய்திதாளில் நிபந்தனைகளுடன் விளம்பரம் வெளியிட்டு பெண் தேடியுள்ளார். இருவருக்கும் ஒரு குழந்தை இருப்பதால் புதிதாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற உடன்பாட்டுடன் இருவரும் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகின்றது.

பார்த்திபன் தனது முதல் மனைவியின் குழந்தையான ராகவி மீது தான் அதிக அன்பு செலுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்டால் தான் கணவன் பிரிந்து செல்ல மாட்டார் என்று சூரியகலாவிடம் அவரது உறவினர்கள் தூபம் போட்டுள்ளனர். இதையடுத்து தன்னுடைய சாமர்த்தியத்தால் கணவன் பார்த்திபன் மூலமாக சூரியகலா கருவுற்றதாக கூறப்படுகின்றது.

ஏற்கனவே தனக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் 3வது குழந்தை வேண்டாம் என்று வெறுப்பு காட்டிய பார்த்திபன் குழந்தையை கலைத்துவிட கூறியுள்ளார். முதல் மனைவிக்கு பிறந்த இந்த பெண் குழந்தை இருப்பதால் தானே தன்னுடைய கருவை கலைக்க சொல்கிறார் என்ற ஆத்திரத்தில் குழந்தை ராகவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளாள் கொடூர சித்தி சூரியகலா,..!

இதையடுத்து குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக சடலத்தை மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். இதில் அங்கு கிடந்த கற்குவியலில் பட்டு குழந்தையின் தலை சிதறியுள்ளது. இதையடுத்து, சூரியகலாவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு தாய் வேறு, சித்தி வேறு என்று ஒரு போதும் அடையாளம் தெரியாது, தங்களிடம் சிரித்த முகத்துடன் அன்பு காட்டும் தாயுள்ளம் கொண்ட அனைவருமே அவர்களுக்கு தாயாகத்தான் தெரிவார்கள். ஆனால் தான், தனக்கு என்ற எண்ணம் கொண்ட கொடூர மனம் படைத்த கொலைகாரி சூரியகலா போன்றவர்களின் நடவடிக்கைகள் எப்போதுமே குடும்ப உறவுகளுக்கும், அவர்களது உயிருக்கும் ஆபத்தை உண்டாக்க கூடியவை என்று எச்சரிக்கின்றனர் மனோதத்துவ நிபுனர்கள்.

[…]

காதல் ஜோடி
தமிழ்நாடு

காருக்குள் சடலமாக கிடந்த காதல் ஜோடி

சேலத்தில் காருக்குள் சடலமாக கிடந்த காதல் ஜோடியின் உடல்களை மீட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செவ்வாய்பேட்டை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த சுரேஷ் தனது தந்தையுடன் இணைந்து வெள்ளிப்பட்டறை தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வெளியில் சென்ற சுரேஷ் இரவு வரை வீடு திரும்பாமல், செல் போனையும் அணைத்து வைத்திருந்ததால்  பதட்டமடைந்த பெற்றோர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தேடியுள்ளனர்.

நள்ளிரவு 12 மணி அளவில் சுரேஷின்  நண்பர்கள் சற்று தொலைவில் உள்ள அவரது கார் ஷெட்டின் கதவு லேசாகத் திறந்திருப்பதைக் கண்டு அங்கு சென்று தேடிய போது காருக்குள் சுரேஷ் ஒரு பெண்ணுடன் சடலமாக கிடந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுரேசின்  நண்பர்கள்  செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்திற்கும் சுரேஷின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் இருந்த இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுரேஷுடன் இருந்த பெண் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு படித்து வரும் ஜோதிகா என்பதும், இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கலாம் எனக் கருதி அவர்கள் வெள்ளிப்பட்டறையில் பயன்படுத்தப்படும் சயனைடை  சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

[…]

பேராசிரியர் நிர்மலா தேவி
தமிழ்நாடு

விசாரணைக்கு ஆஜரான போது மயங்கி விழுந்த நிர்மலா தேவி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி விசாரணைக்கு ஆஜரான போது மயங்கி விழுவது போன்ற வீடியோ வெளியானது.

வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்.

அப்போது விசாரணை தொடங்கும் நேரத்தில் திடீரென நிர்மலா தேவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்தும் , பெண் காவலர்கள் அவரது கைகளைத் தேய்த்து விட்டும் அவரை ஆசுவாசப்படுத்தினர்.

பின்னர் 3 பேரும் வரும் 23 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நிர்மலா தேவி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

[…]

ஓ.பி.எஸ்
தமிழ்நாடு

அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆறுதல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை நேரில் சந்தித்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரி மகன் லோகேஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் அமைச்சர் சி.வி.சண்முகத்தைச் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக திண்டிவனத்தில் உள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டிற்குச் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், உயிரிழந்த லோகேஸ்வரன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து, அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

[…]

மழை
தமிழ்நாடு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இம்மாதம் 20ம் தேதிக்கு மேல் வடக்கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல காற்றின் திசை மாறுபாட்டினால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில், இம்மாதம் 20ம் தேதிக்கு மேல்வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி நெல்லை, மதுரை, திண்டுக்கல், சேலம், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

[…]

கொலை
தமிழ்நாடு

பழிக்கு பழியாக நிதி நிறுவன உரிமையாளர் வெட்டிக் கொலை

காஞ்சிபுரத்தில் பழிக்கு பழியாக நிதி நிறுவன உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் இறந்த பிறகு அவனுடைய இடத்தை யார் பிடிப்பது என்பது தொடர்பாக, ஸ்ரீதர் தனபாலின் டிரைவரான தினேஷ் தலைமையில் ஒரு கும்பலும், மைத்துனரான தணிகா தலைமையில் ஒரு கும்பலும் மோதி கொண்டது.

இதன் தொடர்ச்சியாக அண்மையில் தினேஷின் நெருங்கிய கூட்டாளியான சதீஷ் என்ற இளைஞர் செய்யாறில் ஓடும் பேருந்தில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக எதிர் தரப்பான தணிகா கும்பலைச் சேர்ந்த சிலர் கைதாகினர்.

இந்த நிலையில் சதீஷ் கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் தாதா ஸ்ரீதர் தனபாலில் சித்தப்பா மகன் கருணாகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வணிகர் வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் கருணாகரன், அங்கு நண்பர் விக்னேஷ் என்பவருடம் பேசிக் கொண்டிருந்த போது தினேஷ் தரப்பினரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அப்போது தடுக்க முயன்ற நண்பர் விக்னேஷிக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. கொலை குறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாதா ஸ்ரீதர் தனபாலின் இடத்தை பிடிக்க கொலைவெறியுடன் மோதிக் கொண்டு வரும் இரு தரப்பையும் காஞ்சிபுரம் போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்பாக உள்ளது.

[…]

பெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்
தமிழ்நாடு

என் பேச்சைக் கேட்டுதான் காவல்துறைக்கு வாரவிடுமுறை கொடுத்தார் ஜகன்மோகன் - சீமான்

காவல்துறைக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என தாம் கூறியதை கேட்டு ஆந்திர முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி அதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி மூலக்கரைப்பட்டியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் இவ்வாறு கூறினார். 

[…]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

சீன அதிபரை மனமார வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழகம் வரும் சீன அதிபரை மனமார வரவேற்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல்லவ மன்னர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தருவது, இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்துக்கும் சீனாவுக்குமான பண்பாட்டு உறவுகள், வணிகத் தொடர்புகள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்றும், குடியரசு மற்றும் காலனிய காலத்துக்கும் முந்தைய மன்னராட்சிக் காலங்களில் இருந்து தொடர்வதாகவும் ஸ்டாலின் சுட்டிக் காட்டியுள்ளார். உலகம் உற்றுநோக்கி, பாடம் பெறத் தகுந்த ஒரு தேசத்தின் அதிபர், தமிழகம் வருவது தமிழர்கள் அனைவருக்கும் பெருமைதரத்தக்கது என்று ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்திய - சீன நல்லுறவுப் பேச்சுவார்த்தைக்கு தமிழகத்தைத் தேர்வு செய்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி கூறிக் கொள்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தேசம் வேறு வேறு ஆனாலும், வானம் ஒன்றே.. எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே என்ற அடிப்படையில் அமையும் இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு தேசங்களுக்கு மட்டுமல்ல,  உலக சமுதாயத்துக்கும் ஒளிதருவதாய் அமையட்டும் என்று ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

[…]

அமைச்சர் ஜெயக்குமார்,
தமிழ்நாடு

பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் அவரது வீடு அமைந்துள்ள வீதியில் பூம் பூம் மாட்டுக்காரர் சென்று கொண்டிருந்தார். இதைக் கண்ட அமைச்சர் ஜெயக்குமார், வீட்டை விட்டு வெளியில் சென்று பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றார்.

பூம் பூம் மாட்டிடம் ஆசி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், "பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி" என்பது அந்தக்கால இளசுகளின் ரிங்டோன் என்று கூறியுள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும், மாட்டின் தலையசைப்பும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் தன்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நமது பண்பாட்டு கூறுகளை, பாரம்பரிய அம்சங்களை கேலியாக பார்க்கும் மனோபாவம் நிறைய பேரிடம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பூம் பூம் மாட்டுக்காரர் போன்றவர்களை மறந்து விடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

[…]

பாரத ஸ்டேட் வங்கி ATM
தமிழ்நாடு

பாரத ஸ்டேட் வங்கி ATM மையத்தில் கொள்ளை முயற்சி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்ற நிலையில் எந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால் பணம் தப்பியது.

திருப்பனந்தாளை அடுத்த பந்தநல்லூரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு பணம் எடுக்கச் சென்றவர்கள் ஏ.டி.எம். எந்திரம் சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் பந்தநல்லுர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏ.டி.எம். எந்திரம் முழுமையாக உடைக்கப்படாததால் அதில் இருந்த பணம் தப்பியது. தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

[…]

கெலவரப்பள்ளி அணை
தமிழ்நாடு

தொடர்ந்து 4வது நாளாக நுரைபொங்க வரும் தண்ணீர் - ஆய்வு செய்ய கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தொடர்ந்து 4வது நாளாக நுரைபொங்கி வரும் தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து திறந்துவிடப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீராலேயே தண்ணீரில் நுரைபொங்குவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதனிடையே தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவு ஆயிரத்து 368 கன அடியாக உள்ளது.

அணையின் முழு கொள்ளளவான 44.28 அடியில், 41.82 அடிநீர் இருப்பில் வைக்கப்பட்டு, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

வெள்ளத்தின் முன் நின்று செல்ஃபி எடுக்கவோ, துணி துவைப்பது, குளிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

[…]

ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்
தமிழ்நாடு

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் - தெலங்கானா ஆளுநர்

தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் இடையே ஆரோக்கியமான பாலமாக இருப்பேன் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலு பிரதமரின் பிட் இந்தியா திட்டத்தை பின்பற்றி, ஆளுநர் மாளிகையில் பணியாளர்களுடன் இணைந்து தினசரி யோகா செய்து வருவதாகவும், தெலங்கானா ஆளுநர் மாளிகையை பிளாஸ்டிக் இல்லா மாளிகையாக மாற்றியிருப்பதாகவும் கூறினார்.

[…]

அமைச்சர் செங்கோட்டையன்
தமிழ்நாடு

விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை, அவ்வழியாக சென்ற அமைச்சர் செங்கோட்டையன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

கோபிச்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவர், தனது மனைவி மற்றும் 8வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் ஈரோடு சென்றுள்ளார். தாசம்பாளையம் அருகே, எதிரே வந்த லாரி கடந்து சென்ற போது அவர்களது இருசக்கரவாகனத்தை உரசியதில், குழந்தை உட்பட மூவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

அதில் குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கூடியவர்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க முயன்று கொண்டிருந்தனர். அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு அவ்வழியாக வந்த அமைச்சர் செங்கோட்டையன் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து தனது காரை நிறுத்தி கீழே இறங்கினார்.

தொடர்ந்து தனது பாதுகாவலர்கள் மூலம் அவர்களுக்கு முதலுதவி அளிக்கச் செய்து, தன்னுடன் பாதுகாப்புக்காக வந்த மற்றொரு காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார்.விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்.

[…]

குப்பைக் கூடை திருடர்கள்..!
தமிழ்நாடு

அங்குட்டு வேணாம்.. இங்குட்டு போவோம்.. குப்பைக் கூடை திருடர்கள்..!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருட வந்த இடத்தில் சிசிடிவியைப் பார்த்த திருடர்கள், குப்பைக் கூடையை தலையில் கவிழ்த்துக் கொண்டு 2,500 ரூபாயை திருடிச் சென்ற நகைச்சுவை சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிசிடிவி இருப்பதை பார்த்த பிறகும் கூட அது சிசிடிவி தானா என்பதை, தங்களது முகம் பதிவாகும் வரை குறுகுறுவென கவனிக்கும் இவர்கள் தான் குப்பைக் கூடைத் திருடர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடியில் உள்ள பெண்கள் தொழில் பயிற்சி மையத்தில் திருட முயன்ற இவர்கள் தான் தற்போது குப்பைக் கூடையும், கையுமாக சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளனர். 4 ஆம் தேதி இரவு சுமார் 12 மணி அளவில் பயிற்சி மையத்தின் தாழ்ப்பாளை உடைத்த அந்த திருடர்கள், சிசிடிவி கேமராவைப் பார்த்ததும் திகைத்துப் போயினர். இதை அடுத்து இருவரும் கூடிப் பேசி, தலையில் குப்பைக் கூடையை கவிழ்த்துவதென ஒரு முடிவுக்கு வந்தனர்.

உள்ளே நுழைந்த பிறகு 2,500 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு குப்பைக் கூட திருடர்கள் அங்கிருந்து சென்றனர். பணத்தை பறிகொடுத்த, தொழில் பயிற்சி மையத்தின் நிர்வாகி ராஜேந்திரன் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[…]

கொலை
தமிழ்நாடு

வட மாநில இளைஞர் ஒருவர் நள்ளிரவில் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி குத்திக் கொலை

மதுரையில் வட மாநில இளைஞர் ஒருவர் நள்ளிரவில் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மதுரை எஸ் எஸ் காலனியில் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் உள்ள படிக்கட்டில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று அவரை ஓட ஓட விரட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக அப்பகுதிமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்களும் வந்து  தடயங்களை சேகரித்தனர்.

உடல் அருகே கத்தியும், கஞ்சா பொட்டலமும் கைப்பற்றப்பட்டுள்ளது. வடநாட்டு இளைஞர்போல் காணப்பட்ட அவர் யார், கொலைக்கான காரணம் என்ன, கஞ்சா கும்பல் கைவரிசையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[…]

விஏஓ அட்டகாசம்
தமிழ்நாடு

'லஞ்சம் கொடுத்தால்தான் சான்றிதழ்' - விஏஓ அட்டகாசம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோதூர் அக்ரஹாரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் முத்தையன். இவர் தன்னிடம் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் கேட்டு வருவோரிடம் 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதாக பரவலாக புகார் உள்ளது.

இந்த நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கான பட்டா, சிட்டா, அடங்கல் வழங்க பெண் ஒருவரிடம் முத்தையன் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லஞ்சம் தரவில்லை என்றால் சான்றிதழ் வழங்க அலைக்கழிப்பதாகக் கூறும் பொதுமக்கள் முத்தையன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

[…]

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
தமிழ்நாடு

கோவை மாநகருக்கு விரைவில் மெட்ரோ ரயில் திட்டம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாநகருக்கு விரைவில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

அதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மேலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதைப் போல், ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

[…]

சீன அதிபர்
தமிழ்நாடு

சென்னை வருகிறார் சீன அதிபர்.. பலப்படுத்தப்படும் பாதுகாப்பு..!

வரும் 11 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங் பிங் இடையேயான உச்சி மாநாட்டிற்கான பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சீன அதிபரின் வருகையின் போது சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகிற 11-ந்தேதி முதன் முறையாக தமிழகம் வருகிறார். 3 நாட்கள் அரசு முறை பயணமாக வரும் அவரை, பிரதமர் மோடி வரவேற்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.

பிரதமர் மற்றும் சீன அதிபரின், வருகையையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் அவர் செல்லும் பாதை, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11-ந்தேதி சீன அதிபர் சென்னை விமானநிலையத்தில் வந்திறங்குவது முதல், அங்கிருந்து மாமல்லபுரம் செல்லும் வரை, விமானநிலையத்தில், சரக்கு மற்றும் பயணிகள் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த நேரத்திற்கான விமானங்கள் தங்களின் பயண நேரப் பட்டியலை மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தில், இசை, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளுடன் சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து சீன அதிபர் வெளியே செல்வதற்கு பயன்படுத்தப்படவுள்ள 5-வது மற்றும் 6-வது நுழைவு வாயில் வண்ணம் தீட்டப்பட்டு, சுவர் ஓவியங்களுடன் புதுப் பொலிவுடன் மாற்றப்படுகிறது.

நுழைவு வாயில் முன் பகுதியில் நீள்வாக்கில் புதிய செயற்கை பூங்கா ஒன்றும் உருவாக்கப்படுகிறது. விமான நிலைய பகுதி மற்றும் பாதையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்படுவதுடன், எந்தவித சுவரொட்டிகளும் ஒட்டக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ஏற்கனவே சீன அதிகாரிகள் வந்த நிலையில், அடுத்ததாக சீன சிறப்பு பாதுகாப்பு படையினர் வர உள்ளனர். சீன அதிபர் பயணம் செய்வதற்காக சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்கள் 747- போயிங் சரக்கு விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இத்துடன் அதிபர் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அவருடைய முக்கிய உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தும் சாதனங்களும், கொண்டு வரப்படுகின்றன. சீன அதிபர் வரும்போது அமைப்புகள் சார்பில் போராட்டமோ, எதிர்ப்பு நடவடிக்கைகளோ நடந்து விடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையுடன் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல், மாமல்லபுரத்திலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா வரும் பயணிகளின் அடையாள ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

பராமரிப்பு பணிகள் காரணமாக மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வெண்ணை உருண்டை பாறை, மற்றும் ஐந்து ரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை, புல்வெளிகள் அமைப்பது மற்றும் அலங்காரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

[…]

மு.க ஸ்டாலின்
தமிழ்நாடு

இன்பதுரை, துன்பதுரை ஆனார் மு.க ஸ்டாலின் கிண்டல்

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையால் இன்பதுரை துன்பதுரை ஆகிவிட்டார் என்றும் அந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளதாக வரும் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாகும் என்றும் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

அமமுகவில் இருந்து பிரிந்த சுமார் 5 ஆயிரம் பேர் அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ சகோதரர் பரணிகார்த்தி தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், 2016 ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கலவரத்தை ஏற்படுத்தி அதிமுக வெற்றிப்பெற்றதாக முறைகேடாக அறிவித்தனர் என்றார். கிட்டத்தட்ட 15 இடங்களில் நியாயமாக வாக்கு எண்ணிக்கை நடந்திருந்தால் திமுக தான் ஆட்சியில் இருந்திருக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

ராதாபுரம் தொகுதிக்கான மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வேட்பாளர் அப்பாவு தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் ஆனால் அதனை தற்போது வெளியிட்டால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

அதே சமயம் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திமுக ராதாபுரத்தில் வென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதிமுகவினர் அமைதியாக இருப்பதை பார்த்தாலே முடிவு மக்களுக்கு தெரிந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சால்வை , வேட்டி , பட்டாடைகள் போன்றவற்றை தனக்கு வழங்குவதை தவிர்த்து புத்தகங்களை நிறைய வழங்குமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதே போல் காலில் விழுவது மோசமான கலாச்சாரம் என்றும் தனது காலில் யாரும விழக்கூடாது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலினை, ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு சந்தித்துப்பேசினார். அப்போது அவர் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை மற்றும் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விவரங்கள் தொடர்பாக முக ஸ்டாலினிடம் விளக்கி கூறியதாக சொல்லப்படுகிறது. 

[…]

 இடைத்தேர்தல் பிரச்சாரம்
தமிழ்நாடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காமராஜ் நகர் தொகுதிக்கும் வரும் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விக்கிரவாண்டி 

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் இன்று காலை ஒரத்தூர், லட்சுமிபுரம்,கஸ்பாகரணை,தும்பூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச்சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.அப்போது அவர் பெண்களின் காலை தொட்டு வணங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டார். முன்னதாக அவருக்கு மேளதாளங்கள் முழங்க, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மேல்கரணை, சிறுவளை, ஏழு செம்பொன், கஞ்சனூர், கல்யாணபூண்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று மாலை கனிமொழி எம்பி மூங்கில்பட்டு, மதுரபாக்கம், ராதாபுரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜய் பாஸ்கர், புதுக்குறிச்சி, ஆழ்வார்னேரி, மருதகுளம், கோவை குளம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

நெல்லை கே ட்டீ சி நகரில் நடந்த நாங்குனேரி தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நாங்குனேரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் களக்காடு, மேலச்செவல், சோனாவூர், கோதைச்சேரி, புளியங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர், தன்னை வெளியூர் வேட்பாளர் என்று சொல்வதை மறுத்ததுடன், அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் தனது சொந்த ஊர் என்றும், தான் வெற்றிபெற்றதும், கடைசிவரை தொகுதி மக்களுடன் தங்கியிருப்பேன் என்றும் பேசினார்.

புதுச்சேரி

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து, என். ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி , அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் சித்தன்குடி பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இதில் அதிமுக, பா ஜ க நிர்வாகிகள் பங்கேற்று ஆதரவு திரட்டினார்கள்.

இதேபோல் இங்கு திமுக காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தென்றல் நகர் , ஞானப்பிரகாசம் நகர் பகுதியில் திமுக, விடுதலை சிறுத்தைகள், மற்றும் கம்யூனிஸ்டு நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிகளுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காமராஜ் நகர் தொகுதிக்கும் வரும் 21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விக்கிரவாண்டி 

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் இன்று காலை ஒரத்தூர், லட்சுமிபுரம்,கஸ்பாகரணை,தும்பூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச்சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.அப்போது அவர் பெண்களின் காலை தொட்டு வணங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டார். முன்னதாக அவருக்கு மேளதாளங்கள் முழங்க, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மேல்கரணை, சிறுவளை, ஏழு செம்பொன், கஞ்சனூர், கல்யாணபூண்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று மாலை கனிமொழி எம்பி மூங்கில்பட்டு, மதுரபாக்கம், ராதாபுரம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜய் பாஸ்கர், புதுக்குறிச்சி, ஆழ்வார்னேரி, மருதகுளம், கோவை குளம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

நெல்லை கே ட்டீ சி நகரில் நடந்த நாங்குனேரி தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நாங்குனேரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் களக்காடு, மேலச்செவல், சோனாவூர், கோதைச்சேரி, புளியங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அவர், தன்னை வெளியூர் வேட்பாளர் என்று சொல்வதை மறுத்ததுடன், அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் தனது சொந்த ஊர் என்றும், தான் வெற்றிபெற்றதும், கடைசிவரை தொகுதி மக்களுடன் தங்கியிருப்பேன் என்றும் பேசினார்.

புதுச்சேரி

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் என் ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து, என். ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி , அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் சித்தன்குடி பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இதில் அதிமுக, பா ஜ க நிர்வாகிகள் பங்கேற்று ஆதரவு திரட்டினார்கள்.

இதேபோல் இங்கு திமுக காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தென்றல் நகர் , ஞானப்பிரகாசம் நகர் பகுதியில் திமுக, விடுதலை சிறுத்தைகள், மற்றும் கம்யூனிஸ்டு நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

[…]

போலி நியமன ஆணை
தமிழ்நாடு

தருமபுரி நீதிமன்றப் பணியில் சேர போலி நியமன ஆணை - 4 பேர் கைது

போலி நியமன ஆணை மூலம், தருமபுரி நீதிமன்ற அலுவலக உதவியாளர் மற்றும் துப்பரவு பணிக்கு சேர முயன்ற விவகாரத்தில் இடைத்தரகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம், மராமங்களத்துப்பட்டியை சேர்ந்த தவசெல்வன், தோரமங்கலம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் பணி நியமன ஆணையை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழங்கியுள்ளனர்.

அதனைப் பார்வையிட்ட அலுவலர்கள் ஆணையில் முத்திரை பதித்த சீல்களில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர்.  முதன்மை நீதிமன்ற நிர்வாக அலுவலர் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், போலி நியமன ஆவணங்கள் கொடுத்த நபர்களிடம்  அதியமான் கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், இருவரிடமும் 8 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, பழைய சூரமங்கலத்தை சேர்ந்த  இளையராஜா, பத்மநாபன் ஆகிய இருவர் போலி நியமன ஆணை தயாரித்து கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து இளையராஜா, பத்மநாபன், தவசெல்வன், வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

[…]

கொலை
தமிழ்நாடு

பெண்ணை கொன்று ஆசிட் ஊற்றிய கொடூரன்..! காதல் கசந்ததால் சம்பவம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காதலியைக் கொலை செய்து, சடலம் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தில் ஆசிட் ஊற்றிய மேஸ்திரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் அருகே கூடல் மாநகர் என்ற பெயரில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு புதர் மண்டிக் கிடக்கும் பகுதியில் கடந்த 29 ம் தேதி அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி சோதனை செய்தபோது, அப்பெண்ணின் உடலில் பல இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்ததோடு, முகம் அடையாளம் தெரியாதவாறு ஆசிட் ஊற்றி எரிக்கப்பட்டிருப்பது தெரியவரவே, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தாராபுரம் காவல் ஆய்வாளர் கோபிநாத், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வணிதாமணி ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து, கொலை செய்யப்பட்ட பெண் யார் என்றும், அவரை கொலை செய்தது யார் எனவும் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், தாராபுரம் அடுத்த எல்லப்பநாயக்கன் வலசை சேர்ந்த சித்தாள் வேலைசெய்யும் மகாலட்சுமி என்ற பெண் மாயமானதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த மகாலெட்சுமி, ரஞ்சிதாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற கட்டிட மேஸ்திரியுடன் சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்த போது கொலைக்கான மர்மம் விலகியது.

கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த மகாலட்சுமியை, வேலைக்கு சென்ற இடத்தில் கருப்பசாமி காதல் வலையில் வீழ்த்தி நெருங்கி பழகி வந்துள்ளான். கடந்த ஒரு வருடமாக நீடித்த இவர்களது பழக்கத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கருப்பசாமியின் தொல்லை தாங்காமல் காதலை துண்டித்த மகாலெட்சுமி, கடந்த இரண்டு மாதங்களாக கருப்பசாமியை சந்திப்பதையும் தவிர்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி, மகாலட்சுமியை தீர்த்துகட்டும் முடிவிற்கு வந்துள்ளான். கடந்த 29ம் தேதி தாராபுரம்- பொள்ளாச்சி சாலையில் உள்ள வேறு ஒரு கட்டிடத்தில் வேலை செய்து விட்டு வெளியே வந்த மகாலட்சுமியை சந்தித்து சமாதானம் செய்துள்ளான் கருப்பசாமி.

பின்னர் அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிகொண்டு, புதர் மண்டிக் கிடந்த கூடல் மாநகர் மனைப் பிரிவுக்கு சென்றுள்ளான். மதுபோதையில் மகாலெட்சுமியுடன் தனிமையை கழித்த கருப்பசாமி, திடீரென மகாலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், சடலத்தை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக, தான் ஏற்கனவே தயாராக எடுத்து சென்றிருந்த ஆசிட்டை எடுத்து மகாலட்சுமியின் முகத்தில் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து கொடூரக் கொலையாளி மேஸ்திரி கருப்பசாமியை கைது செய்த காவல்துறையினர், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கணவரைப் பிரிந்து தனிமையில் வசிக்கின்ற பெண்கள் கருப்பசாமி போன்ற நபர்களை நம்பிச் சென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு, இந்த கொடூர கொலை சம்பவம் ஒரு உதாரணம்..!

[…]

மாசடைந்த காவிரி நீர்
தமிழ்நாடு

மாசடைந்த காவிரி நீர்..! விவசாயிகள் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,333 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், தண்ணீர் பச்சை நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,848 கன அடியில் இருந்து 19,333 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.71 அடியாகவும் நீர் இருப்பு 91.42 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 20,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடியும் நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில் அணையின் நீர்தேக்கப் பகுதிகளில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களும் விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பச்சை பசேலன்று காட்சி அளிக்கிறது.

காவிரி கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் அணை நீரை குடிநீருக்காக பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த நீரில் குளித்தால் தோலில் அரிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் மீன்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கடந்த மே மாதத்தில் இதேபோல் காவிரி நீர் பச்சை நிறமாக மாறி சீர்கேடு அடைந்த போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கர்நாடகாவில் உள்ள ஆலைகள், ரசாயனக் கழிவுகளை காவிரியில் கலந்து விட்டதே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஆனால், நீரில் அம்மோனியா மற்றும் பாஸ்பேட் அதிகளவில் காவிரியில் கலந்ததே நிறம் மாறக் காரணம் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். 

தற்போது மீண்டும் தண்ணீர் நிறம் மாறியுள்ளதால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு காரணத்தைக் கண்டறிவதுடன், அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

[…]

நகைக்கொள்ளை
தமிழ்நாடு

நகைக்கொள்ளை - ஆந்திரா விரைந்துள்ள தனிப்படை

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் திருவாரூர் முருகன் உள்ளிட்டோரைப் பிடிக்க தனிப்படை போலீசார், ஆந்திரா விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையின் சுவற்றில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சி, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மடப்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்வனை கைது செய்தனர். அவனுடன் இருசக்கர வாகனத்தில் வந்து தப்பியோடிய சுரேஷ் என்பவனையும் தேடி வந்தனர். விளமல் என்ற இடத்தில் இவர்கள் இருவரையும் போலீசார் துரத்திச் செல்வது போன்ற சிசிடிவி காட்சியும் வெளியானது.

போலீசாரிடம் பிடிபட்ட மணிகண்டனிடம் இருந்த அட்டைப் பெட்டியில் இருந்து லலிதா ஜுவல்லரிக்குச் சொந்தமான 5 கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டன.

மணிகண்டனிடம் திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதேநேரம் தப்பியோடிய சுரேஷின் தாயார் உட்பட உறவினர்கள், நண்பர்கள் என 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின் முடிவில் திருவாரூரில் பதுங்கியிருந்த சுரேஷும் கைது செய்யப்பட்டான். மணிகண்டனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டதும் அவன் கைது செய்யப்பட்ட சுரேஷின் உறவினர் என்பதும் தெரியவந்தது.

முருகன் மீது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன. வடமாநிலங்களில் நடந்த பல்வேறு வங்கி, ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களில் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். இதனையடுத்து அவனைப் பிடிக்க ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தனிப்படைகள் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

[…]

அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாடு

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்-ஜெயக்குமார்

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை நிச்சயம் வெற்றி பெறுவார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பள்ளியில் பசுமை என்கிற பெயரில் மரம் நடும் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, உரையாற்றினார். மூன்றாம் உலகப்போர் என ஒன்று வந்தால், அது நிச்சயம் குடிநீருக்காக மட்டுமே தான் வரும் என்றார். குடிநீருக்காக நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும் அபாய நிலை தான் தற்போது உள்ளது என்றும், மழை நீரை சேமிப்போம் என்கிற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மரம் நடும் பண்பாட்டை மாணவர்களிடையே  ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக பள்ளியில் பசுமை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவித்தார். மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும்  அவர்களை வரவேற்பது  என்பது தமிழர் பண்பாடு என்றும், நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் பேனர் வைக்கப்படும் என்றும் கூறினார்.

என்ன தோப்புக் கரணம் போட்டாலும், பல்டி அடித்தாலும் கமலால் ஆட்சி அமைக்க முடியாது என்றும், அதிமுக அரசை விமர்சித்து காலத்தை கடத்தி விடலாம் என கமல் நினைப்பதாகவும் ஜெயக்குமார் பதிலளித்தார்.

[…]

 பணம் பறிமுதல்
தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கோண்ட சோதனையில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. 

மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுத குடியைச் சேர்ந்த செந்தில்குமார். இவர் ஒரு டெண்டர் தொடர்பாக லஞ்சம் கேட்டதாகவும், ஒப்பந்ததாரர் ஒருவர் லஞ்சம் கொடுக்க இருப்பதாகவும் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் செந்தில்குமார் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத 8 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செந்தில்குமாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரூரை அடுத்த தாந்தோன்றிமலையில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்திய 9 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை குழுவினர் கணக்கில் வராத 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய், மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணியன், ஊழியர்கள், மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தீயணைப்பு துறை அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது கணக்கில் வராத 72,640 ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. அது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது தீயணைப்புத்துறையினர் தீபாவளி இனாமாக அந்தத் தொகையை வசூல் செய்தது தெரியவந்தது.

இதே போன்று சென்னை அண்ணாநகரில் போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகம் உட்பட மேலும் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத 6 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

[…]

 கொள்ளையன்
தமிழ்நாடு

SBI ஏ.டி.எம் என்றால் கொள்ளையடிப்பேன்..! காதலிக்காக களவாணியானார்

மிழகத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையங்களை மட்டும் குறிவைத்து வயதானவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடிச்சென்ற கொள்ளையன் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளான்.

இராமநாதபுரத்தில் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாரதிநகர் அருகே ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த நபரை விசாரிக்க முயற்சி செய்ய அவன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றான்.

அவனை பிடித்து தங்களது பாணியில் சிறப்பாக கவனித்து போலீசார் விசாரித்த போது, அந்த நபர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நெசவாளர் காலனியை சேர்ந்த கோபி என்கிற புதுச்சட்டை கோபி என்பதும், ஏ.டி.எம் களில் பணம் எடுக்க வரும் வயோதிகர்களை ஏமாற்றி பணம் திருடி வந்ததும் தெரியவந்தது.

10 வகுப்பு வரை மட்டுமே படித்த கோபி வேலை வெட்டி எதற்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்ததோடு, அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை செல்போனில் பேசி மயக்கி காதல் வலையில் சிக்கவைத்ததாகவும் கூறப்படுகின்றது.

காதலி முன்பாக தன்னை வசதி படைத்த இளைஞனாக காட்டிக்கொள்ள தெரிந்தவர்களிடமெல்லாம் கடனாக பணம் வாங்கி பந்தாவாக சுற்றிவந்துள்ளான் கோபி. ஒருகட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்ட நிலையில், தனது சொகுசு வாழ்க்கைக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஏ.டி.எம். களில் பணம் எடுக்க வரும் முதியவர்களை குறிவைத்து கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளான்.

அதன்படி ஏ.டி,எம்மில் பணம் எடுக்க உதவி வேண்டி நிற்கும் முதியவரிடம் பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு பின்னர் அதனை கேன்சல் செய்யவேண்டுமென கூறிவிட்டு மீண்டும் ஏடிஎம் கார்டை மெசினில் நுழைத்துவிட்டு அவரிடம் முடிவுற்றதாக கூறி அனுப்பி உள்ளான். அவர் அங்கிருந்து சென்றதும் அவரது வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடியாக எடுத்துள்ளான்.

அன்று ஆரம்பித்த தனது திருட்டுப் பயணத்தை திருச்சி,திண்டுக்கல்,மதுரை,ஒட்டன்சத்திரம்,கண்ணிவாடி,பழனி,ஈரோடு,மேலூர்,தாரமங்கலம்,மோச்சூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் களிலும் தொடர்ந்துள்ளான்.

எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் பணத்தை பறி கொடுத்தால் அந்த வங்கியின் அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பதால் தொடர்ந்து அந்த வங்கியின் ஏடிஎம்மை குறிவைத்துள்ளான்.

மேலும் ஏ.டி.எம் கேமராவில் தான் டிப்டாப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கொள்ளை சம்பவத்தின் போதும் புதியசட்டை அணிந்து சென்று கொள்ளை அடித்துள்ளான்

அதிலும் குறைந்த பணமிருந்தாலும் திருடி விடும் கொள்கை கொண்ட புதுச்சட்டை கோபி, எவ்வளவு அதிகமாக பணம் இருந்தாலும் 30 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக ஒரு ரூபாய் கூட எடுப்பதில்லை என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளான். இதுவரை அவன் சுமார் 2,30,000 ரூபாய் வரை கொள்ளையடித்திருப்பதாக கூறுகின்றனர் காவல்துறையினர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் முதுகுளத்தூர் பரமக்குடி ரோமன் சர்ச்சு ஆகிய பகுதிகளில் கைவரிசையை காட்டிவிட்டு பாரதி நகர் எஸ்.பி.ஐ ஏ.டி.எம். முன்பாக திருட காத்திருந்தபோது பக்குவமாக பிடித்த குற்றப்பிரிவு போலீசார் தற்போது அவனை இராமநாதபுரம் பஜார் காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஏ.டி.எமில் பணம் எடுக்க செல்லும் விபரம் தெரியாத முதியவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களில் ஒருவரை அழைத்து செல்வது நல்லது. எக்காரணம் கொண்டும் அறிமுகம் இல்லா நபரிடம் ஏடிஎம் மற்றும் ரகசிய குறியீட்டு எண்ணை பகிர்ந்து கொள்ள கூடாது வங்கி சார்ந்த பண பரிவர்த்தனையில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு சாட்சியாக இருக்கின்றது இந்த சம்பவம்..!

[…]

உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
தமிழ்நாடு

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்காலத் தடை..!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரை, திமுக சார்பில் அப்பாவு ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு தாக்கல் செய்த மனுவில், தபால் மூலம் பதிவான 203 வாக்குகளை அதிகாரிகள் எண்ணவில்லை என குறிப்பிட்டிருந்தார். 19, 20 மற்றும் 21 ஆவது சுற்றுகளை எண்ணும்போது காவல்துறையினர் தங்களை வெளியேற்றி விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தபால் வாக்குகள் மற்றும் 3 சுற்று வாக்குகளின் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ஏ இன்பத்துரை அவசர மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரையின் வழக்கு 64-வது எண்ணாக பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது.

மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா, ரவீந்திராபட் அமர்வு முன் விசாரணைக்கு வந்த வழக்கில் இன்பதுரை சார்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி, வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கவேண்டும் என வாதிட்டார். ஆனால் மறுவாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கமுடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட வருகிற 23 வரை இடைக்காலத் தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதுகுறித்து விளக்கமளிக்க அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

[…]

கொலை
தமிழ்நாடு

கள்ளக்காதலன் உதவியுடன் கணவனை காவிரி ஆற்றில் தள்ளி கொலை செய்த மனைவி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தினமும் குடித்து விட்டு அடித்து துன்புறுத்திய கணவனை கள்ளக்காதலன் மூலம் காவிரி ஆற்றில் தள்ளி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏரி தெரு பகுதியை சேர்ந்த செல்வி மற்றும் வெங்கடேசன் தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் வெங்கடேசன் குடி போதைக்கு அடிமையானதால் தினசரி குடித்து விட்டு செல்வியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் விசைத்தறி தொழிலில் பணிபுரிந்து வந்த குமாரபாளையம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் செல்விக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரிடம் கணவனின் கொடுமையை செல்வி எடுத்து கூறியதாக தெரிகிறது. இதனை கேட்ட   பெருமாள்  கடந்த 8ஆம் தேதி இரவு வெங்கடேஷூக்கு அளவுக்கதிகமாக மது வாங்கிக் கொடுத்துள்ளார்.

பின்னர் வெங்கடேஷ் குடிபோதையில் இருந்த பொழுது அவரை காவேரி நகர் பகுதியில் உள்ள காவிரி ஆற்று பாலத்திற்கு அழைத்து சென்ற பெருமாள் அங்கிருந்து அவரை ஆற்றில் தள்ளி விட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெங்கடேஷை கொலை செய்ததை யாரிடமும் சொல்லாமல் இருப்பதற்காக செல்வியை கட்டாயப்படுத்தி அவருடன் பலமுறை தகாத உறவில் பெருமாள் ஈடுபட்டுள்ளார். இதனால் மனமுடைந்த செல்வி காவல் நிலையத்தில் சரணடைந்து தனது கணவனை  பெருமாள் மூலம் காவிரி ஆற்றில் தள்ளி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெருமாளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் காவிரி ஆற்றில் தள்ளி விட்டதாக கூறப்படும் பகுதியில் வெங்கடேசன் சடலம் உள்ளதா எனவும் போலீசார் தேடி வருகின்றனர்.  

[…]

கொள்ளையன்
தமிழ்நாடு

கொள்ளைக்கும்பல் தலைவனுக்கு வலைவீச்சு..!

திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவர்களில் இரண்டு பேர் சிக்கி உள்ளனர். இந்த கொள்ளைக்கு திட்டம் போட்டு கொடுத்த கொள்ளை கும்பல் தலைவனை போலீசார் தேடி வருகின்றனர். 

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த 1-ஆம் தேதி அன்று இரவு சுவரில் துளை போட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்த 2 கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக நகைகளை பைகளில் அள்ளிப்போட்டு கொண்டு சென்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.முதலில் இது வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை என்று கருதிய போலீசார், கொள்ளை நடந்த இடத்தில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததால், இது உள்ளூர் ஆசாமிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

இதையடுத்து திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, திருவாரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் திருவாரூர் அருகே உள்ள விளமல் அடியக்கமங்கலம் சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் பெட்டிகளுடன் வந்த 2 பேரை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றனர். அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற இருவரையும், 1 கி.மீ. தூரம் வரை போலீசார் விரட்டி சென்ற நிலையில், ஒருவன் சிக்கினான், மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான்.

பிடிபட்டவன், வைத்திருந்த அட்டைப்பெட்டியை போலீசார் திறந்து பார்த்த போது அதில் லலிதா ஜூவல்லரியின் முத்திரையுடன் நான்கரை கிலோ தங்க நகைகள் இருந்தன. நகைகளை பறிமுதல் செய்து, போலீசார் நடத்திய விசாரணையில் அவன் திருவாரூர் அருகே உள்ள மடப்புரம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவனுடன் வந்து தப்பி ஓடியவன் திருவாரூர் பேபி டாக்கீஸ்ரோட்டை சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது.

லலிதா ஜூவல்லரியில் நகைகளை கொள்ளையடித்த பின்னர், தலைமறைவாக இருந்த மணிகண்டன், தனது பங்கு நகையை பிரித்து கொண்டு வீட்டுக்கு சென்றபோது வாகன சோதனையில் சிக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து, திருவாரூர் போலீசார் கொடுத்த தகவலின் பேரில், அங்கு சென்ற தனிப்படை போலீசார், மணிகண்டனை திருவாரூர் ஆயுதப்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கொள்ளையடிக்கப்பட்டதில் மீதி நகைகள் தப்பியோடிய கூட்டாளி சுரேஷிடம் உள்ளதாக அவன் கூறினான். மேலும், பிரபல வங்கி கொள்ளையனான திருவாரூர் முருகனுக்கும் இதில் தொடர்பு உள்ளதாக தெரிவித்தான்.

இதற்கிடையே சுரேசின் தாய் கனகவள்ளி மற்றும் நண்பர்கள் குணா, ரவி, மாரியப்பன் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார், திருவாரூரில் பதுங்கி இருந்த சுரேஷை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சுரேஷ், போலீசார் தேடி வரும் முருகனின் அக்காள் மகன். இந்த கொள்ளைக்கு திருவாரூர் முருகனே திட்டம் போட்டு கொடுத்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முருகன் வடமாநிலங்களில் நடந்த பல்வேறு வங்கி, ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவன். லலிதா ஜூவல்லரியில் எந்த இடத்தில் துளையிடுவது? எப்படி கொள்ளையடிப்பது, எப்படி தப்பி செல்வது? என்றும் முருகனே திட்டம் வகுத்து கொடுத்ததாக கூறும் போலீசார், வடமாநில கொள்ளையர்கள் போல ஜீன்ஸ் பேண்ட், ஜெர்கின், முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முருகன் திட்டம் வகுத்து கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். கொள்ளையன் முருகன் உள்ளிட்ட கூட்டாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

[…]

பெண் மாயம்
தமிழ்நாடு

டிக் டாக் மோகத்தில் சிக்கிய பெண் தங்கும் விடுதியில் இருந்து மாயம்

Tik- Tok மோகத்தில் சிக்கிய தேவகோட்டை கடம்பக்குடிபெண் வினிதா காரைக்குடி மகளிர் தங்கும் விடுதியில் இருந்து மாயமானார்.   

வினிதாவிடம் தேவகோட்டை காவல் நிலையத்தில் தொடர்ந்து அவரிடம் இரு தினங்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், திருவாரூரில் வசிக்கும் தனது Tik-tok தோழி அபிக்கு தனது கரூர் தோழி சரண்யா மூலம் 20 சவரன் நகையை கொடுத்ததாக  கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து தேவகோட்டை போலீசார் அபி மற்றும் கரூர் பெண் சரண்யா ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணைக்காக தேவகோட்டைக்கு வரும்படி உத்தரவிட்டனர் . ஆனால் இருவரும் வராததால் அவர்களை கைது செய்து விசாரிக்க  தனிப்படை போலீசார் திருவாரூர் மற்றும் கரூருக்கு  விரைந்தனர்.

இந்நிலையில் போலீசாரிடம் இருந்த வினிதா தனது தாய் மற்றும் கணவருடன் செல்ல மறுத்ததால் அவரை காரைக்குடியில் உள்ள மகளிர் இல்லத்தில்  தங்க வைத்தனர்.

ஆனால் அங்கிருந்து  வினிதா மாயமானதை அடுத்து தனியார் தங்கும் விடுதி சார்பில் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வினிதாவை போலீசார் தேடி வருகின்றனர். 

[…]

ஜெயகோபால்
தமிழ்நாடு

உயிரைக் குடித்த பேனர் ஜெயகோபால் சிறையிலடைப்பு

சென்னையில் பேனர் விழுந்து, விபத்தில் சிக்கி, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேலும் 4 பேரை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்துள்ளனர். 

பள்ளிக்கரணையில் கடந்த 12ஆம் தேதி சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து, விபத்தில் சிக்கி சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதுதொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவிலும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பேனர் வைத்த ஜெயகோபால் மீதும், பேனருக்கு இரும்புச் சட்டம் வழங்கிய அவரது உறவினர் மேகநாதன் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் கையில் எடுத்ததால், விசாரணை தீவிரம் அடைந்தது. ஜெயகோபாலும், மேகநானும் தலைமறைவாகி விட்டதால் அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

அச்சத்தில், இருவரது நண்பர்களும் உறவினர்களும் கூட தலைமறைவாகி இருந்தனர். அதில் ஒருவரான ஆப்ரகாம் என்பவரின் செல்போன் சிக்னலை, ஆராய்ந்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள சொகுசு விடுதியில் ஜெயகோபால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், நேற்று அவரைக் கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்ட அவரிடம் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுபிரிவு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் ஜெயகோபால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க, நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதை அடுத்து, ஜெயகோபால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே பேனர் அமைக்க உதவிய ஊழியர்கள் 4 பேர் பள்ளிக்கரணை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடி கட்டுதல், பேனர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட பழநி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த ஆகிய 4 பேரை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

[…]

லஞ்சம் வாங்கிய அரசு பெண் அதிகாரி
தமிழ்நாடு

திருமண நிதியுதவி பெற லஞ்சம் வாங்கிய அரசு பெண் அதிகாரி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருமண நிதியுதவி பெற அரசு பெண் அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அங்கநாதவலசை கமேட்டேரி வட்டத்தை சேர்ந்த குமரேசனுக்கு திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிய நிலையில் தமிழக அரசின் திருமண நிதியுதவிக்காக கந்திலி ஒன்றிய திருமண திட்ட விரிவாக்க அலுவலர் ராமக்காவிடம் மனு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக இழுத்தடித்த வண்ணம்  காலம் தள்ளிய ராமக்கா கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரேசனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரிடம் திருமண நிதியுதவி சான்றிதழ் தர  ராமக்கா லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து குமரேசன் 3 ஆயிரத்து500ருபாய் பணத்தை ராமக்காவிடம் கொடுத்ததை  ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து சமுக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

[…]

 வடகிழக்கு பருவமழை
தமிழ்நாடு

வருகிறது வடகிழக்கு பருவமழை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கும் என்றும், இயல்பான அளவுக்கு மழை பொழிவு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பொழிவு இருந்தது என்றார்.

கடந்த ஜூன் ஒன்று முதல் இன்று வரையிலான கால கட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சராசரியாக 38 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாக கூறிய அவர், இந்த காலகட்டத்திற்கான இயல்பு மழை அளவு 33 செ.மீட்டர் என்றார்.

இயல்பை விட 16 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதே காலகட்டத்தில் சென்னையின் இயல்பு மழை அளவு 42 செ.மீட்டர் என்ற அவர், 59 செ.மீ அளவுக்கு மழை பொழிந்துள்ளது என்றும், இது இயல்பை விட 39 சதவிகிதம் அதிகம் என்றும் கூறினார். அதிலும் நடப்பு மாத த்தில் தமிழகம் அதிக அளவு மழை பெற்றுள்ளதாக பாலசந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிக அளவாக 59 சதவிகம் கூடுதல் மழை பொழிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்குமென அவர் கூறினார்.

அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர். சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகிற 1-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக்கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் நடைபெற்றது.

அரசின் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் ஆலோசனை நடத்தினார். வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்தும் அதனை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் மற்றும் ரயில்வே, போக்குவரத்து, மின்சாரம், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

[…]

முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால்
தமிழ்நாடு

சுபஸ்ரீ விவகாரம்: முன்னாள் கவுன்சிலர் கைது

சென்னையில் பேனர் விழுந்ததால் நேரிட்ட விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் தேடப்பட்ட முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், கிருஷ்ணகிரி அருகே கைது செய்யப்பட்டார். 

சென்னை அருகே பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் கடந்த 12ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது பேனர் விழுந்தது. இதையடுத்து கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியது.

இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தை கையில் எடுத்த உயர் நீதிமன்றம், விசாரணையை நேர்மையாக நடத்தவும், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையறிந்த ஜெயகோபால் குடும்பத்தினரோடு தலைமறைவானார்.

அவரை தனிப்படை அமைத்து சென்னை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள சொகுசு விடுதியில் ஜெயகோபால் குடும்பத்தினருடன் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் சென்னையில் இருந்து தனிப்படை போலீஸார், தேன்கனிக்கோட்டை விரைந்து சென்று அவரை கைது செய்தனர். இதையடுத்து தேன்கனிக்கோட்டையில் இருந்து ஜெயகோபாலை சென்னைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்னொரு நபரான ஜெயகோபாலின் உறவினர் மேகநாதன் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இதையடுத்து அவரை தேடும் பணியில் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

[…]

நீர்மூழ்கி கப்பல்
தமிழ்நாடு

இந்திய கடற்படைக்கு நவீன நீர்மூழ்கி கப்பல்..!

கடலுக்குள் இருந்தும், மேற்பரப்புக்கு வந்தும் எதிரிகளின் கப்பல்களை ஏவுகணையை வீசி தாக்கும் திறன் கொண்ட நவீன நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் நாளை இணைக்கப்படுகிறது.

இந்திய பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வகையில் கடற்படையின் வலுவை அதிகரிக்கும் வகையில் புதிய நவீன நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் நாளை இணைக்கப்பட உள்ளது. ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களை இந்திய கடற்படையில் சேர்க்க தீட்டப்பட்ட திட்டத்தின் படி பிரான்ஸ் நாட்டின் மாசாகான் டோக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

25,700 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்த த்தின் படி மொத்தம் 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதில் முதல் கப்பலான ஐ.என்.எஸ். கல்வாரி கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

இதே போன்று மற்றொரு கப்பலான ஐ.என்.எஸ். காந்தேரி மும்பையில் நாளை நடைபெறும் விழாவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று கப்பலை இந்திய கடற்படையில் இணைத்து வைக்க உள்ளார். 

புதிதாக கட்டப்பட்டுள்ள ஐ.என்.எஸ். காந்தேரி கப்பல், உலகில் உள்ள மிகச்சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இணையான வலிமைக்கொண்டது. இந்த நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் இருந்தபடியும், கடலின் மேற்பரப்புக்கு வந்தும் எதிரிகளின் கப்பல்கள் மீது ஏவுகணையை வீசி தாக்கும் திறன் கொண்டது. அனைத்து விதமான சூழலிலும், காலங்களிலும் இயங்கும் தன்மை கொண்டது.

டீசல் மற்றும் பேட்டரி மூலம் இயங்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் கடலுக்கு அடியில் மணிக்கு 37 கிலோமீட்டர் வேகத்திலும், மேற்பரப்பில் 20 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும் வல்லமை கொண்டது. கப்பலில் உள்ள 6 பீரங்கிகள் மூலம் அடுத்தடுத்த ஏவுகணைகளையும், நீரடி வெடிகுண்டுகளையும் ஒரே நேரத்தில் ஏவி எதிரிகளை திணறடிக்கும் திறன் கொண்டது.

12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் திறன் கொண்ட காந்தேரி கப்பல் கடற்பரப்பில் 1615 டன் எடையும், கடலுக்கு அடியில் 1775 டன் எடையும் கொண்டிருக்கும். 67.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் நான்கு டீசல் என்ஜின்களையும், 360 பேட்டரி செல்களையும் கொண்டிருக்கும். கடலுக்கு அடியில் 350 மீட்டர் ஆழத்தில் மூழ்கியபடியே தொடர்ந்து 50 நாட்கள் இடைவிடாது பயணிக்கும் வல்லமை கொண்ட இந்த கப்பலில் 8 அதிகாரிகளும் 35 மாலுமிகளும் பணியாற்ற உள்ளனர்.

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், நீரடி கண்ணி வெடிகுண்டுகளை கொண்டிருக்கும் இந்த கப்பல், எதிரி நாட்டு ரேடார்களுக்கு சிக்காமல் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடற் போருக்கு மட்டுமின்றி, கடல் சார்ந்த கண்காணிப்பு, உளவு பணிகளிலும் இந்த கப்பல் ஈடுபடுத்தப்படும். மேலும் எதிரி கப்பல்களை தகர்க்கும் வகையில் நீரடி கண்ணி வெடிகளை பொறுத்தும் வல்லமை கொண்டது. 

13 நீர்மூழ்கி கப்பல்களை கொண்டுள்ள இந்திய கடற்படையில், மேலும் நான்கு நீர் மூழ்கி கப்பல்கள் வருகிற 2022 முதல் 2023 ஆம் ஆண்டுகளுக்குள் அடுத்தடுத்து இணைக்கப்பட உள்ளன. மேலும் காந்தாரி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் அதே நாளில் புதிய போர்க்கப்பலின் வெள்ளோட்டமும் நடைபெற உள்ளது.

[…]

அதிமுக நிர்வாகி
தமிழ்நாடு

முதலமைச்சரை வழியனுப்ப, துப்பாக்கியுடன் வந்த அதிமுக நிர்வாகி

முதலமைச்சரை வழியனுப்ப, சென்னை விமான நிலையத்திற்கு துப்பாக்கியுடன் வந்த அதிமுக நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். முன்னதாக, அவரை வழியனுப்ப அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் சென்னை விமான நிலையம் வந்திருந்தனர்.

விமான நிலையத்திற்குள் அவர்களை அனுமதிப்பதற்கு முன்னர், அதிகாரிகள் வழக்கம்போல் அனைவரையும் சோதனை செய்தனர். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் என்பவரை சோதனையிட்டபோது, அவர் துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

துப்பாக்கி வைத்திருப்பதை அவரே முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காவல்துறை அதிகாரிகள் எஸ்3 மீனம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரனை நடத்தினர். அப்பொழுது துப்பாக்கி வைத்துக் கொள்ள தமக்கு உரிமமும், துப்பாக்கி பயன்பாட்டிற்கு உரிய ஆவணங்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் ஆவணங்கள் எதையும் காட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் இருந்தாலும், முதலமைச்சரை பார்க்க வரும்போது, அதை எடுத்து வர வேண்டிய அவசியம் என்ன என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்மந்தப்பட்ட நபரான ஜீவானந்தம் உரிய ஆவணங்களையும், சான்றுகளையும் சமர்ப்பித்த பிறகே, எச்சரித்து அனுப்புவதா அல்லது நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து போலீசார் முடிவு செய்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

[…]

காதலனை தேடும் காதல் மனைவி
தமிழ்நாடு

பலாத்கார காதலனை தேடும் காதல் மனைவி..! பெங்களூர் டூ புதுக்கோட்டை

பெங்களூரில் பலாத்கார வழக்கில் இருந்து தப்பிக்க காதலித்த பெண்ணை திருமணம் செய்த புதுக்கோட்டை இளைஞர் ஒருவர், அந்த பெண்னை தவிக்கவிட்டு தப்பி ஓடிவந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

திருவண்ணமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் செலின். சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனம் ஒன்றில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்துவந்த இவரிடம் அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மஜூவாடியை சேர்ந்த அருண் என்பவர் நட்பாக பழகி வந்துள்ளார். செலின் இங்கிருந்து பெங்களூருவில் உள்ள கிளைக்கு மாற்றப்பட்ட பின்னர் செல்போன் மூலமாக பேசி பழகி வந்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு முதல் நண்பர்களாகவே பழகி வந்த செலினிடம், அருண் கடந்த ஜனவரி மாதம் காதலை தெரிவித்துள்ளார் . நீண்ட நாட்களாக நல்ல நண்பராக பழகி வந்ததால் காதலுக்கு செலின் சம்மதித்துள்ளார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 17 ந்தேதி பெங்களூருக்கு சென்று காதலி செலினை சந்தித்த அருண் திருமணம் தொடர்பாக பேசி திரும்பி உள்ளான்.

அதே போல மீண்டும் 31 ந்தேதி பெங்களூருக்கு சென்ற அருண் அங்கு தான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று செலினை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது நண்பர் மணி உடந்தையாக இருந்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் செலினை சமாதானப்படுத்திய அருண், திருமண ஏற்பாடுகளை செய்வதாக கூறி சென்னை வந்துள்ளார். நாட்களை இழுத்தடித்துக் கொண்டே சென்ற அருண் ஒரு கட்டத்தில் செலின் மீதான காதலை பிரேக் அப் செய்வதாக கூறி தொடர்பை துண்டிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, செலின் பெங்களூரு காவல்துறையில் அருண் மீது பலாத்கார புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் அருண் மற்றும் அவருக்கு உடந்தயாக இருந்த மணி ஆகியோர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து காதலி செலினை திருமணம் செய்வதாக அருண் ஒப்புக் கொண்டுள்ளார்.

பின்னர் பெண் வீட்டார் புடை சூழ கோவிலில் வைத்து செலினை திருமணமும் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 6ந்தேதி அவர்கள் தங்கள் திருமணத்தை கலசப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவும் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் பெங்களூரில் மனைவியுடன் குடித்தனம் நடத்தி வந்த அருண், வேலைக்கு செல்லாமல் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்துள்ளார். ஒரு நாள் அருண் தான் மனைவியுடன் தனிமையில் இருக்கும் வீடியோ ஒன்றை தனது மெயிலில் நண்பருக்கு அனுப்பிவைத்திருப்பதை கண்டு அதிர்ந்து போன செலின் இது குறித்து கேட்டு தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில் செலின் வேலைக்கு சென்று விட்ட பின்னர் வீட்டில் இருந்து புறப்பட்ட அருண், புதுக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தனது கணவரை தேடி பெங்களூருவில் இருந்து புதுக்கோட்டைக்கு புறப்பட்டார் செலின். மஜூவாடி சென்று மாமியார் வீட்டில் விசாரித்த போது அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தன்னிடம் தகராறு செய்து விட்டு தாய்வீட்டில் இருக்கும் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று செலின் புகார் அளித்தார். இதையடுத்து கணவர் அருண் அங்கிருந்தும் தலைமறைவானதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு புதுப்பெண் செலின் காத்திருக்க அருணின் பெற்றோரோ கலக்கத்தில் உள்ளனர்.

காதலி மீது முழுமையான அன்பு இல்லாமல் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று உடலை மட்டும் தேடும் ஆண்களின் காதல் வலையில் பெண்கள் விழுந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று..!

[…]

 மின்சாரம்
தமிழ்நாடு

துணி உலரவைத்தபோது மின்சாரம் பாய்ந்து தாய், மகன் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, துணி உலரவைத்தபோது,கொடிக் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அங்கலக்குறிச்சி அடுத்த கோபால்பதியை சேர்ந்த விவசாயி ரவிக்குமார் என்பவர், நேற்று மாலை வீட்டின் முன் அமைக்கப்பட்டுள்ள இரும்பு மேற்கூரை பகுதியில் உள்ள கம்பியில் ஈர துணியை காய வைக்க சென்றுள்ளார்.

அப்போது, மின்கம்பத்திலிருந்து வீட்டுக்கு சப்ளையாகும் மின்ஒயர் அறுந்து இரும்பு மேற்கூரை மீது விழுந்துள்ளது. இதனை அறியாது ரவிக்குமார், மேற்கூரையை ஒட்டி கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் ஈர துணியை காய வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது தாயார் பாக்கியலட்சுமி அவரை காப்பாற்ற முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் மின்சாரம் அவர் மீது பாயவே, இருவரும் உதவிக்கேட்டு அலறியுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த ரவிக்குமாரின் மனைவி பூங்கொடி மற்றும் மகன் ரஞ்சித் ஆகியோர் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து 4 பேரும் அலறி துடித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தை சேர்ந்த சில விவசாயிகள், சாமர்த்தியமாக அவர்களை மீட்டு, கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே ரவிக்குமார் மற்றும் அவரது தாயார் பாக்கியலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். ரவிக்குமாரின் மனைவி மற்றும் அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், மின்சாரம் தாக்கி ஒட்டுமொத்த குடும்பமே பாதிக்கப்பட்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

[…]