பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
இந்தியா

சூடான் தீ விபத்து - தமிழர்களின் நிலை குறித்து அறிய பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் காணாமல் போன தமிழர்கள் விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.  

சூடான் நாட்டில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில், சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழர்கள் காணாமல் போனதாக கூறப்படும் விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழர்கள் காணாமல் போனதாக கூறப்படும் விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும். மேலும் அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் காணாமல் போன தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

[…]

சபரிமலை அய்யப்பன் கோவில் - செல்போன் மூலம் சன்னிதான பகுதியில் படம் எடுக்க அனுமதி கிடையாது
இந்தியா

சபரிமலை சன்னிதானத்தில் செல்போனில் படம் எடுக்க தடை

சபரிமலை சன்னிதான பகுதியில் செல்போனில் படம் எடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த சமயத்தில் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள், ஏதாவது அசம்பாவிதத்தை ஏற்படுத்தலாம் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

மேலும் கோவிலுக்கு தீவிரவாத மிரட்டலும் அவ்வப்போது வருவது உண்டு. அப்போது கோவில் முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்படும். இந்தநிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் மூலம் எடுக்கப்பட்ட படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், சபரிமலை கோவில் சன்னிதானம் பகுதியில் செல்போன் மூலம் எடுக்கப்பட்ட படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால் 18-ம் படிக்கு மேல் பகுதிகளில் செல்போனில் படம் எடுப்பதற்கு முற்றிலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில், சன்னிதான பகுதியில் செல்போனில் படம் எடுக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, செல்போன் மூலம் சன்னிதான பகுதியில் படம் எடுக்க அனுமதி கிடையாது என எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய டிஜிட்டல் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. 

[…]

திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலையானார்.
இந்தியா

106 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் திகாரில் இருந்து விடுதலையானார், ப.சிதம்பரம்

 

ஐஎன்எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.  2 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான இருநபர்கள் ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

மேலும், நீதிமன்ற அனுமதியின்றி ப.சிதம்பரம்  வெளிநாடு செல்லக்கூடாது. தன் மீதான வழக்கு தொடர்பாக பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. வழக்கின் சாட்சிகளை மிரட்டவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியை சென்னை மற்றும் சில மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்நிலையில், இன்றிரவு திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலையானார். சிறை வாசலில் காத்திருந்த அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ப.சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு காரில் அழைத்து சென்றனர்.
 

 

[…]

இளைஞர்
இந்தியா

பெங்களூரில் 6 பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர்

பெங்களூர் அல்சூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 6 இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தமிழக இளைஞர் கைது செய்யப்பட்டான்.

பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள பெரிய மால்களுக்கு  தனியாக வரும் அழகான  பெண்களிடம் பேச்சுக் கொடுத்து, தான் எம்எல்ஏவின் மகன் என்று அறிமுகம் செய்து கொள்வான் என்று கூறப்படுகிறது.

மால்கள், நட்சத்திர ஓட்டல்கள் என பல இடங்களுக்கு பெண்களை அழைத்துச் சென்று, தான் ஒரு பணக்காரன் நம்ப வைத்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

கார்த்திக் ரெட்டி மற்றும் கிரன் ரெட்டி என்று  மாற்றிக் கொண்டு  பெண்களை ஏமாற்றி வந்த ஜஹாங்கீர் என்ற அந்த நபரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சென்னை மற்றும் பெங்களூரில் இவன் பெயரில் பாலியல் பலாத்கார வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. 

[…]

விபத்து
இந்தியா

மேம்பாலத்தில் சென்ற கார் கீழே விழுந்ததில் சாலையில் நடந்துசென்ற பெண் உயிரிழப்பு

ஐதராபாத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த விபத்தில் சாலையில் சென்ற ஒருவர் உயிரிழந்தார்.

ராய்துர்க்கம் பகுதியில் உள்ள இந்த மேம்பாலத்தில், அதிவேகமாக சென்ற கார், வளைவில் திரும்பும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பறந்துசென்று கீழே விழுந்தது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில், பாலத்தின் கீழே நடந்துசென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். இந்த மேம்பாலத்தில் 40 கிலோமீட்டர் வேகத்தில்தான் செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில் அதையும் மீறி, 104 கிலோமீட்டர் வேகத்தில் கார் சென்றதே விபத்துக்கான காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

[…]

மோடி
தமிழ்நாடு

பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்

நாடாளுமன்றத்தில், கேள்வி நேரத்தின்போது சில அமைச்சர்கள் பங்கேற்காததால், பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று நடந்த கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது சில அமைச்சர்கள் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள பிரதமர் மோடி, நாடாளுமன்ற கூட்டத்தில் அமைச்சர்கள் தவறாது கலந்துகொள்ளவேண்டும் எனவும், குறிப்பாக கேள்வி நேரத்தில் நிச்சயம் பங்கேற்கவேண்டும் என கூறியதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

[…]

இந்தியா
இந்தியா

இந்தியா மீது நடவடிக்கையா? அமெரிக்கா திடீர் முடிவு..!

ரஷ்யாவிடமிருந்து, எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை பெறுவதற்காக, இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து, எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை கொள்முதல் செய்வதற்கு, அந்நாட்டுடன் பிரதமர் நரேந்திர மோடி அரசு, கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார்.

அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கையையும் மீறி, 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பு, இந்தியா வந்தடையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்ற சூழலில், அந்த ஒப்பந்தம் குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை, தங்கள் எதிர்ப்பை மீறி, இந்தியா பெறுவதற்காக, அதன்மீது, பொருளாதார தடை விதிக்கப்படாது எனக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க, எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படாதபோது, அதுகுறித்த பேச்சிற்கு இடமில்லை என்றார்.

இந்தியா தனது பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துதில் எந்த தவறு இல்லை என்றாலும், ஒருபுறத்தில் ஆயுதங்களை கொடுத்துவிட்டு, மறுபுறத்தில் ரஷ்யா உளவு பார்க்கத்துடிக்கும் என்றும், எனவே, அதில், இந்தியா மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரி கூறியுள்ளார். எஸ்-400 ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியுள்ள துருக்கி விவகாரத்தில் இருந்து, இந்தியா முற்றிலும் மாறுபடுவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா போன்று, அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை மீறி, ரஷ்ய நாட்டிடம் இருந்து, எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்பை துருக்கி வாங்கியது. இதனையடுத்து, துருக்கிக்கு வழங்கவிருந்த அதிநவீன போர்விமானங்களில் ஒன்றான, F-35 ரக போர்விமானத்தை வழங்க முடியாது என, அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

[…]

வருமானவரித்துறை
இந்தியா

ஐ.டி ரெய்டு: அதிகாரிகளுக்கு பயந்து சாலையில் வீசப்பட்ட பணக்கட்டுகள்.. அள்ளிச் சென்ற பொதுமக்கள்..

மேற்கு வங்கத்தில் தனியார் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க ஊழியர்கள் பணக்கட்டுக்களை சாலையில் விசியெறிந்தனர்.

கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் சாலையில் ஹாக் மெர்கன்டைல் என்ற தனியாருக்குச் சொந்தமான ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் ஐடி ரெய்டில் சிக்காமல் இருக்க 100, 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் தாள்களை 6வது மாடியில் இருந்து வீசியெறிந்தனர்.

கட்டுக் கட்டாகவும், கொத்துக் கொத்தாகவும் வந்து விழுந்த பணத்தைக் கண்ட சாலையில் சென்ற பொதுமக்கள் அதனை அள்ளிச் சென்றனர். இதில் சில பணக்கட்டுகள் அலுவலகம் இருந்த வளாகத்திற்குள்ளேயே விழுந்தன

இதனை அங்கிருந்த செக்யூரிட்டிகள் உட்பட பலரும் அள்ளி தங்களது பாக்கெட்டுகளில் திணித்து கொண்டனர். ஆனால் எவ்வளவு பணம் வீசப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

வருமானவரித்துறை சோதனையால் ரோட்டில் சென்ற பாதசாரிகளுக்கு ஜாக்பாட் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

[…]

ஊசி
இந்தியா

உலகில் முதன்முறையாக ஆண் கருத்தடை ஊசி இந்தியாவில் கண்டுபிடிப்பு

உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்திருக்கிறது.

13 ஆண்டுகள் பலன் தரும் இந்த ஆண்களுக்கான கருத்தடை ஊசி, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

மூன்று கட்டங்களாக, 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 97.3 விழுக்காடு அளவிற்கு, வெற்றிக்கரமான முடிவு கிடைத்திருப்பதோடு, இந்த ஆண் கருத்தடை ஊசியால் எந்த பக்க விளைவும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக, இதனை கண்டறிந்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஆண்களுக்கான கருத்தடை ஊசி குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ஈடுபட்டிருந்தாலும், அது ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. இதேபோன்றதொரு, ஆண் கருத்தடை ஊசியை பிரிட்டனும் உருவாக்கியபோது, கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் அத்திட்டத்தை, அந்நாடு நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

[…]

ஊசி
இந்தியா

உலகில் முதன்முறையாக ஆண் கருத்தடை ஊசி இந்தியாவில் கண்டுபிடிப்பு

உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்திருக்கிறது.

13 ஆண்டுகள் பலன் தரும் இந்த ஆண்களுக்கான கருத்தடை ஊசி, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

மூன்று கட்டங்களாக, 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 97.3 விழுக்காடு அளவிற்கு, வெற்றிக்கரமான முடிவு கிடைத்திருப்பதோடு, இந்த ஆண் கருத்தடை ஊசியால் எந்த பக்க விளைவும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக, இதனை கண்டறிந்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஆண்களுக்கான கருத்தடை ஊசி குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ஈடுபட்டிருந்தாலும், அது ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. இதேபோன்றதொரு, ஆண் கருத்தடை ஊசியை பிரிட்டனும் உருவாக்கியபோது, கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் அத்திட்டத்தை, அந்நாடு நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

[…]

எஸ்.ஏ.போப்டே
இந்தியா

அயராத உழைப்பால் உச்சம் தொட்ட தலைமை நீதிபதி S.A.போப்டே..!

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே இன்று பதவியேற்றுள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். போப்டே வரும் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி ஓய்வுபெறும் வரை, அடுத்து வரும் 18 மாதங்கள் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

வழக்கறிஞர் பாரம்பரியம்:

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சரத் அரவிந்த் போப்டே, பாரம்பரியம் மிக்க வழக்கறிஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 1956-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தார்.

இவரது தாத்தா, தந்தை மற்றும் மூத்த சகோதரர் உள்ளிட்டோரும் வழக்கறிஞர்கள் ஆவர். போப்டேவின் தந்தை அரவிந்த் போப்டே புகழ் பெற்ற மிக மூத்த வழக்கறிஞர் ஆவார். இவர் மகாராஷ்டிரா மாநில வக்கீல் ஜெனரலாக இருந்தார்.

போப்டேவின் மூத்த சகோதரர் மறைந்த வினோத் அரவிந்த் போப்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், அரசியலமைப்பு நிபுணராகவும் இருந்தார்.

சிறப்பான பணியால் உயர்ந்தவர்:

இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சரத் அரவிந்த் போப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ மற்றும் எல்.எல்.பி பட்டங்களை பெற்றுள்ளார். 1978-ம் ஆண்டு மராட்டிய மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டார்.

பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் சிறப்பாக பணிபுரிந்தார். தொடர்ந்து கடந்த 2000-ம் ஆண்டில், மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகப் பொறுப்பேற்ற அவர், பின்னர் 2012ம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

தீர்ப்பளித்த முக்கிய வழக்குகள்:

2013-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி வகித்து வருகிறார். ஆதார், தனிநபர் ரகசியம், சுற்றுச்சூழல், மத உணர்வு தொடர்பான முக்கிய வழக்குகள் பலவற்றில் தீர்ப்பு வழங்கியுள்ள போப்டே, அண்மையில் அயோத்தி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்விலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

[…]

குளிர்காலக் கூட்டத் தொடர்
இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது...

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் குளிர் காலக்கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. 20 அமர்வுகளைக் கொண்ட இந்த தொடர் அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்நாட்டு உற்பத்தி வரியைக் குறைக்கும் அவசர சட்டமும், இ-சிகரெட்களின் விற்பனை தயாரிப்புக்கு தடை விதிக்கும் அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு மாற்றான மசோதாக்கள் இந்த தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த தொடரில், ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து, காஷ்மீர் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு, பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை, குடியுரிமை சட்ட மசோதாவை நிறைவேற்றும் மத்திய அரசின் முயற்சி உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முதன் முறையாக இந்த தொடரில் பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனா எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.

முன்னதாக, நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வேலைவாய்ப்பின்மை உள்பட அனைத்துப் பிரச்சினைகளும் விவாதிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், சிறிய வேறுபாடுகளால் கூட்டணிக் கட்சிகள் விலகக் கூடாது என்று வலியுறுத்தினார். ஒரு பெரிய குடும்பத்தைப் போல் ஒற்றுமையாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்கள் மகத்தான வெற்றியை தேர்தலில் அளித்துள்ளதால், அந்த வெற்றிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

[…]

சீருடையை
இந்தியா

புதிய சீருடையில் புதுச்சேரி போக்குவரத்து போலீசார்

புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சீருடையை அணிந்து போக்குவரத்து போலீசார் புத்துணர்ச்சியுடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

யூனியன் பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில், அம்மாநிலங்களில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு புதிய சீருடையை அம்மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்தவரிசையில், புதுச்சேரியில் கடந்த 10ம் தேதி புதிய சீருடையை முதலமைச்சர் நாராயணசாமி அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, புதுச்சேரி போக்குவரத்து போலீசார் புதிய சீருடையில், தத்தமது பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

[…]

சபரிமலை
இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், அங்கு தரிசனத்திற்கு வந்த 10 பெண்கள்,  பம்பையில்  கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு அளித்தது. இதை மறுஆய்வு செய்யக் கோரிய வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

அதேசமயம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு அவர்கள் எந்த தடையும் விதிக்கவில்லை. இந்நிலையில் 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

ஆன்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தரிசனத்திற்காக முன்பதிவு செய்து உள்ளனர். பெண்கள் வழிபாட்டுரிமை ஆர்வலரான திருப்தி தேசாயும் சபரிமலை வர உள்ளதாக அறிவித்து உள்ளார். இந்நிலையில், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை வந்தால் இந்த முறை பாதுகாப்பு வழங்குவது இல்லை என்ற முடிவை கேரள அரசு எடுத்துள்ளது.

சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் அவர்களை நிலக்கல்லிலேயே போலீசார் தடுத்து நிறுத்த முடிவு செய்து உள்ளனர். இதற்காக நிலக்கல்லில் போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் வழிபடுவதற்காக ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து வந்த 10 பெண்களை, கேரள போலீசார் பம்பையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

[…]

ஜாமின்
இந்தியா

ப.சிதம்பரம் ஜாமின் மனு தள்ளுபடி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் ஜாமின் மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமின் அளித்தால் சமூகத்திற்கு தவறான முன் உதாரணமாகி விடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐயும் அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி அமலாக்கதுறையும் ப. சிதம்பரத்தை கைது செய்தது.

சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் ஜாமின் அளித்திருந்த நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை நிராகரித்த நீதிபதி சுரேஷ் கைட், குற்றத்தில் சிதம்பரத்திற்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது என்று குறிப்பிட்டார். சிதம்பரத்தை ஜாமினில் விடுவித்தால் சமூகத்திற்கு தவறான தகவல் அளித்தது போல் ஆகி விடும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். 

[…]

ரஃபேல் ரக போர் விமானம்
இந்தியா

ரஃபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி..!

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரிய சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், ஒப்பந்தத்தில் முறைகேடுகள்  நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் அமர்வு  ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் மனுக்களை தாக்கல் செய்தனர். ரஃபேல் தொடர்பாக ஊடகங்களில் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் மறு ஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறையிடப்பட்டது.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10-ந் தேதி ஒத்திவைத்தனர். 6 மாதங்களுக்கு பின்னர் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ரஃபேல் மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என கூறியுள்ள நீதிபதிகள், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டனர். இதன் மூலம், ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள்  நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை  நிலைநாட்டப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். முடிவெடுப்பதில் மத்திய அரசு வெளிப்படைத் தன்மையை பின்பற்றுவதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, ரஃபேல் விவகாரத்தில் உண்மை நிலைநாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, அரசியல் காரணங்களுக்காக சர்ச்சைகளை உருவாக்குவது, தேசத்தின் நலன்களை பின்னுக்கு தள்ளுவதும் தவறு என கூறியுள்ளார். சர்ச்சைகளுக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரபேல் விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாஜக கருத்து தெரிவித்துள்ளது. உண்மைக்கு இடையூறுகள் இருக்கும் எனவும் ஆனால் தோற்கடிக்கப்படாது எனவும் கூறியுள்ள பாஜக, மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி  இது எனவும் தெரிவித்துள்ளது.

[…]

ஆதார் அட்டை
இந்தியா

ஆதார் அட்டையில் முகவரி மாற்றத்தில் திருத்தம் செய்யலாம்

ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதனால் வீடு மாற்றுவோரும் வேறு மாநிலங்களில் குடியேறியவர்களும் பயன் அடைவார்கள். தற்போதைய புதிய முகவரியைக் கொடுத்து ஆதார் எண்ணை மட்டும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுய விளக்கம் ஒன்றுடன் புதிய முகவரியுடன் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுவோர் மற்றும் வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி செல்வோர் பல லட்சம் பேர் இதனால் பயன்பெறுவார்கள். இத்திருத்தம் காரணமாக நிரந்தர விலாசம் தற்போதைய பணியிட விலாசம் என்று இருமுகவரிகளை பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.

புதிய இடத்தில் வங்கிக் கணக்கு போன்றவற்றை தொடங்கவும் இந்த திருத்தம் பேருதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

[…]

கள்ளநோட்டுகள்
இந்தியா

ரூ.100 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல்

தெலங்கானாவில் சிக்கிய கள்ளநோட்டு கும்பலிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

கம்மம் மாவட்டம் சத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதர் என்பவன் தலைமையிலான கும்பல், 80 லட்சம் ரூபாய் கொடுத்தால், அதற்கு பதிலாக ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்துள்ளது.

ஒரு கோடி ரூபாய்க்கு உண்மையான ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறிவிட்டு, பணக்கட்டுகளுக்கு மேலேயும் கீழேயும் மட்டும் உண்மையான ரூபாய் நோட்டுகளை வைத்து இடையில் கள்ள நோட்டுகள் மற்றும் வெற்று காகிதங்களை வைத்து கொடுத்து மோசடி செய்துள்ளது. ஏமாற்றப்பட்டவர்கள் யாரும் காவல்துறையினரை நாடாத நிலையில் ஒருவர் மட்டும் புகார் செய்திருக்கிறார்.

அவரிடம் தகவல்களை பெற்ற அம்மாநில போலீசார் மாதர் என்பவனையும், அவனது கூட்டாளிகள் ஆறு பேரையும் கைது செய்தனர். விசாரணை நடத்திய பொழுது அவர்கள் கள்ளநோட்டுகளை அச்சடித்து புகழகத்தில் விட்டு வந்ததும் தெரிய வந்தது. கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்த வீட்டில் இருந்து 7 கோடி ரூபாய் அளவிற்கு கள்ளநோட்டுகள் முதலில் கைப்பற்றப்பட்டன.

கள்ளநோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்தப்படும் கணினி உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மன்சூரு அடுத்த மர்லபாடு கிராமத்தில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், பழைய 500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்தன.

கள்ளநோட்டு கும்பலுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது ? எங்கெல்லம் கள்ள நோட்டுகள் புகழக்கத்தில் விடப்பட்ட என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

[…]

மின்சாரக் கம்பி
இந்தியா

ரயில் செல்லும் மின் இணைப்பைப் பிடித்த இளைஞர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரயில் செல்லும் மின்சாரக் கம்பியைப் பிடித்துத் தொங்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

குவாலியர் மாவட்டத்தில் உள்ள தப்ரா ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில்கள் செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பியை பிடிக்க எத்தனித்தார்.

இதனைக் கண்ட ரயில்நிலைய ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு மின்இணைப்பைத் துண்டித்தனர். பின்னர் மற்றொரு ரயில் என்ஜின் மூலம் சென்ற ரயில்வே போலீசார் மின் கம்பியில் தொங்கிய இளைஞரைப் பத்திரமாக மீட்டனர்.

அவர் யார்? மனநலம் பாதிக்கப்பட்டவரா என விசாரணை நடந்து வருகிறது.

[…]

மின்சாரக் கம்பி
இந்தியா

ரயில் செல்லும் மின் இணைப்பைப் பிடித்த இளைஞர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரயில் செல்லும் மின்சாரக் கம்பியைப் பிடித்துத் தொங்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

குவாலியர் மாவட்டத்தில் உள்ள தப்ரா ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில்கள் செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பியை பிடிக்க எத்தனித்தார்.

இதனைக் கண்ட ரயில்நிலைய ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு மின்இணைப்பைத் துண்டித்தனர். பின்னர் மற்றொரு ரயில் என்ஜின் மூலம் சென்ற ரயில்வே போலீசார் மின் கம்பியில் தொங்கிய இளைஞரைப் பத்திரமாக மீட்டனர்.

அவர் யார்? மனநலம் பாதிக்கப்பட்டவரா என விசாரணை நடந்து வருகிறது.

[…]

புயல்
இந்தியா

புல் புல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்வு

மேற்கு வங்கம் அருகே கரையை கடந்த புல் புல் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

புயல் கரையைக் கடந்த போது ஏற்பட்ட சூறாவளி மற்றும் கனமழையால் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கும் வயல்களுக்கும் கடும் சேதம் ஏற்பட்டது. மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் சாயந்தன.

பெரும்பாலான உயிர்ச்சேதங்கள் மரங்கள் சாய்ந்ததால் தான் என்று கூறப்படுகிறது. மேற்குவங்கத்தில் 10 பேர் பலியான நிலையில் வங்காள தேசத்திலும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5 பேரை காணவில்லை.

இதனிடையே புயல் சேதங்களைப் பார்வையிட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மம்தா பானர்ஜி மீட்பு நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தும் படி உத்தரவிட்டார்.

இதனிடையே மம்தாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி மேற்குவங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருப்பதாக  உறுதியளித்துள்ளார்.

[…]

இந்தியா
இந்தியா

"10 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருமாறும்"

இந்தியா, அடுத்த பத்து, பதினைந்து ஆண்டுகளில், 10 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக திகழும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

தளவாட உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும், டெஃப்-கனெக்ட்(Def-Connect) என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை டெல்லியில் தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், இதனைக் கூறியிருக்கிறார்.

வருகிற 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக உயர்த்த பிரதமர் இலக்கு நிர்ணயித்திருப்பதை ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.

ஆனால், தமது கணிப்பின்படி, அடுத்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில், 10 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்புக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என உறுதிபட நம்புவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருவதாகவும், இதனால், வருகிற 2025ஆம் ஆண்டுக்குள், பாதுகாப்புத்துறை உற்பத்தித்துறையை, 2 ஆயிரத்து 600 கோடி டாலர்கள் மதிப்புடையதாக மாற்றும் இலக்கு எட்டப்பட்டும் என்றும், ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

[…]

முஸ்லீம்
இந்தியா

நீதிமன்றத் தீர்ப்பு குறித்த ஓவைசியின் கருத்தால் கடும் சர்ச்சை..

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெறக் கோரி மேல்முறையீடு தேவையில்லை என்று அனைத்திந்திய முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

வழக்கில் ஒரு தரப்பாக வாதிட்ட சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் தீர்ப்பை ஏற்பதாகவும் தெரிவித்துள்ளது. தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை என்றாலும் மறுசீராய்வு மனு அவசியமா என்பது குறித்து வாரியம் முடிவு செய்யும் என்று அதன் வழக்கறிஞர் ஜிலானி தெரிவித்துள்ளார்.

இதனிடையே இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்ய இருப்பதாக முஸ்லீம் தனிச்சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பிரான ஓவைசி, உச்சநீதிமன்றம் தவறிழைக்காத ஒன்று அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்து நீதித்துறையை அவமதிப்பதாகும் என்று பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்

[…]

மோடி
இந்தியா

கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சீக்கியமதத் தலைவர்களில் ஒருவரான குருனானக் தனது எஞ்சிய நாட்களை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக அங்கு கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்ல இந்தியாவின் தேராபாபா நானக்கில் இருந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருத்வாராவுக்கு மக்கள் எளிதில் செல்லும் வகையில், 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. குருனானக்கின் 550-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 500 யாத்திரிகர்கள் கர்தார்பூருக்கு பயணம் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்திய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, பிரதமர் மோடி சந்தித்தார். சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் விழாவில் கலந்தகொண்டனர்.

[…]

அயோத்தி
இந்தியா

அயோத்தி தீர்ப்பு -முழுவிவரம்

நீதிபதிகள் வருகை

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றத்தின் அறைக்கு நீதிபதிகள் வருகை

தீர்ப்பு வாசிப்பு

அயோத்தி வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் வாசித்து வருகின்றனர்

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பின் முக்கிய அம்சத்தை வாசித்து வருகிறார்

அயோத்தி தீர்ப்பு

ஷியா வாரியத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பு 

அயோத்தி தீர்ப்பு தொடர்பாக 5 நீதிபதிகளுக்கு இடையே வேறுபாடு இல்லை

1.அயோத்தி நிலத்திற்கு உரிமை கோரி ஷியா வாரியத்தின் மனு தள்ளுபடி

2. வரலாறு, மதம், சட்டம் என பலவற்றை கடந்து அயோத்தி வழக்கில் உண்மை பயணித்துள்ளது - தலைமை நீதிபதி

3.தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வெளியாக 30 நிமிடங்கள் வரை ஆகும் என எதிர்பார்ப்பு

காலை 10.40 :

4.பாபர் மசூதி மிர் பாக்கி என்பவரால் கட்டப்பட்டுள்ளது - ரஞ்சன் கோகாய்

இறை நம்பிக்கைக்குள் செல்வது நீதிமன்றத்திற்கு தேவையற்றது என கருதுகிறோம் - ரஞ்சன் கோகாய்

5.பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம் - ரஞ்சன் கோகாய்

6.பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கான துல்லியமான ஆதாரம் இல்லை - தலைமை நீதிபதி

காலை 10.42:

நிலத்திற்கு உரிமை கோரிய நிர்மோஹி அஹோராவின் மனுவும் நிராகரிப்பு 

இந்திய தொல்லியல் துறை கொடுத்துள்ள ஆதாரங்கள் ஆராயப்பட்டன - தலைமை நீதிபதி

காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது - உச்சநீதிமன்றம்

12வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் இருந்ததை இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது - உச்சநீதிமன்றம்

12 மற்றும் 16ம் நூற்றாண்டுக்கு இடையே அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன இருந்தது என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை

12வது நூற்றாண்டில் இருந்ததாக கூறும் கோவிலின் அமைப்பு குறித்து தொல்லியல் துறை சரியான விளக்கங்கள் அளிக்கவில்லை

சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோரும் வழக்கிற்கு தீர்வு காண முடியும்

ராமர் தொடர்பான இந்துக்களின் நம்பிக்கை விவாதம் மற்றும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டது

அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் மிக உயரிய நம்பிக்கை

ராமர் அயோத்தியில் பிறந்தார் என்கிற இந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்திற்கு உட்படுத்த முடியாது

கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு உரிமையாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாது

மசூதிக்கு கீழ் இருந்ததாக கூறப்படும் கட்டிடம் இஸ்லாமிய முறையிலான கட்டிடம் இல்லை என்று தொல்லியல் துறை கூறுகிறது - நீதிபதிகள்

சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கும் ஆதாரம் உள்ளது, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதற்கும் ஆதாரம் உள்ளது

மசூதி கட்டுவதற்காக கோவில் இடிக்கப்பட்டது என்று தொல்லியல் துறை கூறவில்லை 

வெறும் கட்டுமானம் இருக்கிறது என்பதற்காக அந்த இடத்திற்கு உரிமை கோர முடியாது

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே அயோத்தியில் ராமர் மற்றும் சீதாவை இந்துக்கள் வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது

சர்ச்சைக்குரிய நிலத்தின் முற்றத்தை இந்துக்கள் தங்கள் வசம் வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன

சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ஒட்டு மொத்தமாக சன்னி வஃபு வாரியம் உரிமை கோர முடியாது

சர்ச்சைக்குரிய நிலத்தின் மையப் பகுதியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது

பாபர் மசூதி இஸ்லாமிய முறையிலானது இல்லை என்கிற வாதம் நிராகரிப்பு

இஸ்லாமிய முறைகளின்படியே பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது

1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம்

நிலத்தின் உள்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியுள்ளனர் - ஆனால் அதற்கு உரிமை கொண்டாட ஆதாரங்கள் இல்லை

நிலத்தின் வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தியுள்ளனர் - அந்த நிலம் இந்துக்களுக்கு உரிமையானது என்பதற்கு ஆதாரம் உள்ளது

எந்த மதமாக இருந்தாலும் அவர்களின் வழிபாட்டு உரிமை சமமாகவே மதிக்கப்பட வேண்டும்

காலை 11.08:

முஸ்லீம்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு

முஸ்லீம்கள் மசூதி கட்டிக் கொள்ள மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்

காலை 11.20:

நிலத்திற்கு உரிமை கோரும் ராம்லல்லாவின் மனு மட்டுமே ஏற்க கூடியது

நிலத்தை மூன்றாக பிரித்து வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவு செல்லாது

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் ராம்லல்லா என்கிற அமைப்பிற்கே சொந்தம்

சன்னி வாரியத்திற்கு அவர்கள் ஏற்கும் வகையில் 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும்

அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கான உரிமை மத்திய அரசிடம் இருக்க வேண்டும்

நிலத்தை பராமரிப்பது தொடர்பாக மத்திய அரசு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும்

நிலத்திற்கு உரிமை கோரும் சன்னி வஃபு வாரியத்தால் போதுமான ஆதாரங்களை வழங்க முடியவில்லை

 

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்க வேண்டும்

அயோத்தி ராமஜென்மபூமி பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ரானஜென்மபூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க உத்தரவு

ராமஜென்மபூமியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை 3 மாதத்திற்குள் உருவாக்க வேண்டும்

பாபர் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க உத்தரவு

அயோத்தியில் 2.77 ஏக்கர் நிலத்தை ராமஜென்மபூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவு

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

1. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி

2. பாபர் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க உத்தரவு

3. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்திற்குள் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும்

4. மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ள உத்தரவு

5) சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாராவின் மனுக்கள் தள்ளுபடி

6) கோவில் தரப்பிற்கு நிலத்தின் உரிமை வழங்கப்பட்டது, மசூதி தரப்பிற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிடப்பட்டது

7) சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய ராம்லல்லா அமைப்பின் மனுவை ஏற்று தீர்ப்பு

8) ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அமைக்க வேண்டிய அறக்கட்டளையில் நிர்மோஹி அகாராவுக்கு பிரதிநிதித்துவம் வழங்கலாம் 

[…]

அயோத்தி
இந்தியா

அயோத்தி - நாளை தீர்ப்பு

அயோத்தி - நாளை தீர்ப்பு

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு
நாளை தீர்ப்பு வழங்குகிறது

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளதை ஒட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

உத்தர பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் - கொண்டாட்டங்கள் மற்றும் துக்கம் கடைபிடிக்கக் கூடாது என போலீசார் உத்தரவு

[…]

சித்தூர்
இந்தியா

சித்தூரில் கோர விபத்து

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையில் சென்ற வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 12 பேர் பலியாகினர்.

சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையத்தில் உள்ள காட் ரோடு சாலையில் தண்ணீர் கேன்களுடன் கண்டெய்னர் லாரி சென்றது.

அப்போது பிரேக் கட்டுப்பாட்டை இழந்ததால், லாரி தறிகெட்டு வேகமாக ஓடியது. சாலையில் சென்ற ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மீது லாரி மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஆட்டோவில் இருந்த 6 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் பலியாகினர்.

மேலும் 4 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு, சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[…]

பாஜக
இந்தியா

மாட்டுக்கறி உண்போர், நாய்க்கறியையும் உண்ணவேண்டும் - மே.வ., பாஜக தலைவர்

பசும்பாலில் தங்கம் உள்ளதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

அம்மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ், மாட்டுக்கறி உண்பவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

மாட்டுக்கறியை உண்ணும் அறிவுஜீவிகள், நாய்க்கறியையும் உண்ண ஏன் முன்வரக்கூடாது என கேள்வி எழுப்பிய அவர் தாயைப்போல கருதப்படும் பசுக்களை இறைச்சியாக உண்பது மிகப்பெரிய குற்றம் எனவும் தெரிவித்தார். இந்திய பசுமாடுகளின் பாலில் தங்கம் கலந்திருப்பதால்தான் பால் லேசான மஞ்சள் நிறத்தில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய பசுக்கள் தங்களுக்கு தாய் போன்றது என்றும் ஆனால் வெளிநாட்டு பசுக்கள் அத்தை போன்றது என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்தானது சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

[…]

கொலை
இந்தியா

தெலுங்கானாவில் பெண் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து உயிரோடு எரித்துக் கொலை

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி அருகே பெண் வட்டாட்சியர் ஒருவர் அவரது அலுவலத்தில் வைத்தே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்துல்லாபூர் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தவர் விஜயாரெட்டி.

கடந்த சில நாட்களாக நிலப் பிரச்சினை தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்றும் அலுவலகத்திற்கு வந்து விஜயா ரெட்டியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் வட்டாட்சியர் விஜயா உடல் முழுவதும் தீப்பற்றி எரிய வெளியே ஓடிவந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்த நபரும் தீக்காயங்களுடன் வெளியே ஓடிவந்து அருகிலிருந்த காவல்நிலையம் சென்று சரணடைந்தார். அந்த நபர் விஜயா ரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் விஜயாரெட்டி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிலம் தொடர்பான பிரச்சனையை தீர்த்துவைக்க விஜயா ரெட்டி கையூட்டு கேட்டதாகக் கூறப்படும் நிலையில், சரணடைந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

[…]

அயோத்தி
இந்தியா

அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு போபாலில் 144 தடை உத்தரவு

அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கில், மிக விரைவிலேயே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதற்றமான பகுதியாக அறியப்படும் போபாலில் அடுத்த இரு மாதங்கள் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் தருண் பிதோர் ஆணையிட்டுள்ளார்.

அதன்படி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பொது இடங்களுக்கு யாரும் செல்லக்கூடாது எனவும், மீறினால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பு உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டு அம்மாநில போலீசார் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

[…]

இந்தியா
இந்தியா

இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதாரம்-நிதி தொடர்பான கூட்டம்

டெல்லியில் நடைபெற்ற ஏழாவது இந்திய அமெரிக்க பொருளாதாரம் மற்றும் நிதிக் கூட்டுறவு மாநாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பரஸ்பர நட்பின் அடிப்படையில் முக்கியப் பிரச்சினைகள் குறித்தும், வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்தியாவில் முதலீடு செய்துள்ள மற்றும் செய்யவிருக்கும் நிறுவனங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அமெரிக்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை விவரித்த அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்டீவன் நூச்சின், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கடன் , தீவிரவாத செயல்களுக்கு நிதியை பயன்படுத்தவிடாமல் தடுத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டதாக ஸ்டீவன் தெரிவித்துள்ளார்.

[…]

ஏஞ்சலா
இந்தியா

ஜெர்மனி பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றனர்.

இந்தியா வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாபெரும் நாடான இந்தியாவின் பன்முகத்தன்மையை மிகவும் மதிப்பதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் அப்போது குறிப்பிட்டார். இந்தியாவும்-ஜெர்மனியும் நெருக்கமான உறவைப் பேணுவதாகவும் அவர் கூறினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட வரவேற்பைத் தொடர்ந்து, ராஜ்காட் சென்ற ஏஞ்சலா மெர்க்கல், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மூன்று நாள் அரசு முறைப்பயணமாக தமது அமைச்சர் குழுவுடன் டெல்லி வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இன்று பிரதமர் மோடியுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து இந்தியா ஜெர்மனி இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், ஏஞ்சலா மெர்க்கலுடன் வந்திருந்த ஜெர்மன் குழுவினர் பங்கேற்றனர். இதேபோல, பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு தலைவர்கள் முன்னிலையில், இந்தியா-ஜெர்மனி இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

[…]

அயோத்தி
இந்தியா

அயோத்தி தீர்ப்பை ஏற்று அமைதி காக்க வேண்டும் -ஆர்.எஸ்.எஸ்

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் இரண்டு வாரங்களில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில்,அனைத்துத் தரப்பினரும் தீர்ப்பை ஏற்று அமைதி காக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் அமைதியையும் ஒத்திசைவையும் குலைக்க வேண்டாம் என ட்விட்டர் பதிவு மூலம்வேண்டுகோள் விடுத்துள்ள ஆர்.எஸ்.எஸ்., திறந்த மனத்துடன் நீதிமன்றத்தின் முடிவை ஏற்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அயோத்தி தீர்ப்பை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மன்கி பாத் உரையில் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதை அந்த அமைப்பு வழிமொழிந்துள்ளது. தீர்ப்பையொட்டி, நவம்பர் மாதத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆர்.எஸ்.எஸ். ரத்து செய்துள்ளது.

இதனிடையே, டெல்லியில் நேற்று நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாட்டில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. செயல்தலைவர் ஜே.பி.நட்டா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

[…]

நிர்மலா சீதாராமன்
இந்தியா

125 ரூபாய் மதிப்பிலான நாணயம்- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்

டெல்லியில் பரமஹம்ச யோகானந்தாவின் நினைவாக 125 ரூபாய் மதிப்பிலான நாணயம் வெளியிடப்பட்டு உள்ளது.

நாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு தியானம் மற்றும் கிரியா யோகாவை அறிமுகப்படுத்திய குருவாக அறியப்படுபவர் பரமஹம்ச யோகானந்தா.  கடந்த 1893 ஆம் ஆண்டு பிறந்த அவரது 125வது பிறந்த தினம் 2018ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

அவரது நினைவாக 125 ரூபாய் மதிப்புள்ள நாணயம் ஒன்றை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அனுராக் தாகூர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

[…]

ராம்நாத்
இந்தியா

நிலைகுலைந்து விழுந்த பெண் பாதுகாவலர் - நலம் விசாரித்த குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவின்போது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்த பெண் காவலருக்கு உதவி செய்வதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் ஆகியோர் மேடையில் இருந்து இறங்கி சென்றனர்.

சமூக பொறுப்புள்ள தனியார் நிறுவனங்களுக்காக நாடு தழுவிய அளவில் புதிய விருது ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இந்த ஆண்டுக்கான முதல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விருதுகள் வழங்கிய பின்னர் நிறைவாக தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் பாதுகாவலர் திடீரென்று நிலை தடுமாறி சாய்ந்து கீழே விழுந்தார்.

இதை மேடையின் மீது இருந்தவாறு கவனித்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கீழே இறங்கி சென்று அந்த பெண் காவலரை சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த காட்சியை கண்டு விழா அரங்கத்தில் இருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

[…]

மோடி
இந்தியா

2 நாள் அரசுமுறைப் பயணமாக சவுதி சென்றார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக சவுதி சென்றடைந்தார். சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியாவுக்கு சென்றார். கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ரியாத் மாகாண ஆளுநர் பைசல் பின் பந்தர் அல் சவுத் வரவேற்றார்.

அங்கு தங்கி இருக்கும் அவர், ரியாத்தில் நடை பெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3 வது அமர்வில் கலந்து கொள்கிறார். சவுதியில் தங்கி இருக்கும் அவர் ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்ற அமர்வில் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து அவர் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சாத்தையும் சந்தித்து பேசுகிறார்.

[…]

மோடி
இந்தியா

சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்துக்காக, பிரார்த்தனை செய்வதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, பிரதமர் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில், துணிச்சலும், வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

சுஜித்தைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தாம் விரிவாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார். சுஜித்தைப் பாதுகாக்க எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்

[…]

மோடி
இந்தியா

ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார் பிரதமர் மோடி.....

ராணுவம்தான் தமது குடும்பம் எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி தமது குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட ஜம்மு காஷ்மீருக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் நாட்டைக் காக்கும் வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ள பிரதமர் மோடி, நேற்றுஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதிக்கு சென்றார். அங்கு வீரர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளியைக் கொண்டாடிய பிரதமர் மோடி ரஜோரியில் வீரர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். 

தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடுவது இந்தியர்களின் மரபு என்று கூறிய மோடி தாமும் தமது குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாட இங்கு வந்திருப்பதாக கூறினார் . ராணுவ வீரர்கள் தாம் தமது குடும்பத்தினர் என பிரதமர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கால மாற்றத்துக்கு ஏற்றபடி ராணுவ வீரர்கள் நவீனமயமாக இருக்க வேண்டும்.

ராணுவத் தளவாடங்கள் நவீனமானவையாக இருக்க வேண்டும். நமது பயிற்சிகள் சர்வதேச தரத்தில் அமைய வேண்டும் என்று குறிப்பிட்ட மோடி நமது ராணுவீரர்களின் முகத்தில் சோர்வை தாம் காண விரும்பவில்லை என்றார். 

நாட்டுக்கு பல்வேறு எல்லைப் பகுதிகள் உள்ள போதும் ரஜோரி எல்லை தனித்துவமானது என்று மோடி கூறினார். போர், அத்துமீறல்கள், தீவிரவாத ஊடுருவல்கள் போன்ற எந்த ஒரு பிரச்சினை நேரிட்டாலும் இந்தப் பகுதி வீரர்கள்தாம் அதனை முதன் முதலாக எதிர்கொள்கின்றனர் என்று மோடி கூறினார்.

இந்தப் பகுதி தோல்வியையே சந்திக்காத வீர நிலம் என்றும் மோடி பாராட்டு தெரிவித்தார்.இது யாராலும் வெல்ல முடியாத பகுதியாக இருப்பதாக குறிப்பிட்ட மோடி அங்குள்ள வீரர்களுடனும் தீபாவளியைக் கொண்டாடினார்.

பத்தான் கோட்டில் வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி முதன்முறையாக தாம் பிரதமராக பொறுப்பேற்ற போது வீரர்களை சந்தித்ததை நினைவுகூர்ந்தார்.

ஆயுதப்படை வீரர்களுடன் பேசிய போது, தேசிய அளவில் போர் நினைவுச் சின்னம் இல்லை என்ற தகவலால் மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெரிவித்தார். இப்போது போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்றத்தைப் பார்ப்பதை விட அதிக அளவில் மக்கள் போர் நினைவுச் சின்னத்தை காண வருவதாகவும் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பின்னர் டெல்லி திரும்பும் வழியில், பத்தான்கோட் விமான தளத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள தாக்குதல் திறன் படைத்த அபேச்சி ஹெலிகாப்டர்களை பிரதமர் பார்வையிட்டார்.

[…]

மனோகர் லால் கட்டார்
இந்தியா

ஹரியானா முதல்வராக மீண்டும் கட்டார் நாளை பதவியேற்பு

ஹரியானா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், மனோகர் லால் கட்டார் 2வது முறையாக நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார்.துணை முதலமைச்சர் பதவி ஜனநாயக ஜனதாக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 40 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக முதலில் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது.

31 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் 10 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ள ஜனநாயக ஜனதா கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதனிடையே திடீர் திருப்பமாக ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, ஜேஜேபியின் ஆதரவும் பாஜகவுக்கு கிடைத்தது. இதையடுத்து ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க இருப்பதாகவும், அக்கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் அமித்ஷா அறிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி 40 எம்.எல்.ஏக்களை கொண்டிருக்கும் பாஜகவுக்கு, 10 ஜேஜேபி எம்.எல்.ஏக்கள், 7 சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் சேர்த்து மொத்தமாக 57 உறுப்பினர்களின் பலம் உள்ளது.

ஹரியானாவில் 2வது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், சண்டிகரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டமன்றக் கட்சித் தலைவராக மனோகர் லால் கட்டார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மனோகர் லால் கட்டார் மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா ஆகியோர் ஆளுநர் சத்தியதேவ் நரேன் ஆர்யாவை அவரது மாளிகையில் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனோகர் லால் கட்டார், நாளை பிற்பகல் 2.15 மணியளவில் ஆளுநர் மாளிகையில் தாம் முதலமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெறும் எனவும் துஷ்யந்த் சிங் சவுதாலா துணை முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தெரிவித்தார்.

[…]

மோடி
இந்தியா

2 நாள் பயணமாக சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வரும் 29 ஆம் தேதி 2 நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு செல்கிறார்.

சவுதி மன்னரின் அழைப்பை ஏற்று செல்லும் பிரதமர், ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3-வது அமர்வில் கலந்து கொள்கிறார். இதையடுத்து அவர் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசரை சந்தித்து பேச இருக்கிறார்.

இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

[…]

இந்தியா
இந்தியா

தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்

தொழில் தொடங்க உகந்த நாடுகளுக்கான உலக வங்கியின் தரவரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறியுள்ள இந்தியா, 63ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 

2014ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற போது தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 190 நாடுகளில் 142ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. 2017ஆம் ஆண்டில் 130 ஆவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா, 2018ல் 100ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

2019ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 77ஆவது இடத்தை இந்தியா பிடித்தது. இந்த நிலையில், 2020ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் 14 இடங்கள் முன்னேறியுள்ள இந்தியா 63 ஆவது இடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்குவதற்காக சிறப்பாக செயல்படும் நாடுகள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா முதல் 10 இடங்களில் உள்ளது. இது போன்ற வெற்றியை கடந்த 20 ஆண்டுகளில் மிகச் சில நாடுகளே பெற்றிருப்பதாகவும், அவை மக்கள் தொகை வாரியாக சிறிய நாடுகள் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தால், அந்நிய முதலீடு ஈர்ப்பு, உற்பத்தி துறை ஊக்குவிப்பு மட்டும் அல்லாமல், போட்டித் திறன் அதிகரித்திருப்பதாகவும் உலக வங்கி கூறியுள்ளது. இன்னும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் முதல் 50 இடங்களை இந்தியா பிடிக்க வாய்ப்பு இருப்பதாக உலக வங்கி கணித்துள்ளது.

தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்குவதற்காக சிறப்பாக செயல்படும் நாடுகளின் பட்டியலில், சவுதி அரேபியா, ஜோர்டான், டோகோ, பஹ்ரைன், தஜிகிஸ்தான், பாகிஸ்தான், குவைத், சீனா, நைஜீரியா ஆகிய நாடுகளும் உள்ளன.

[…]

மகாராஷ்டிரா
இந்தியா

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக கூட்டணி

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியை தக்க வைக்கிறது. 

288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேபோல் தேசியவாத காங்கிரசுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே, மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகேப் தோரட், முன்னாள் முதலமைச்சர்களான பிரிதிவிராஜ் சவான், அசோக் சவான், தேசியவாத காங்கிரசின் அஜித்பவார் ஆகிய நட்சத்திர வேட்பாளர்கள் உள்பட 3 ஆயிரத்து 237 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக - சிவசேனா கூட்டணி 160 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 90 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் 44 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 51 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. இதர கட்சிகள் 21 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக சிவசேனா கூட்டணி 170க்கும் அதிகமான இடங்களைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீண்டும் அந்தக் கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக அமையும் அரசின் அமைச்சரவையில் பாஜகவுக்கு இணையாக 50 சதவீத இலாகாக்களை கோர சிவசேனா திட்டமிட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை பெற முடியாத சூழல் உள்ளது.

இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் (Sanjay Raut),தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்ததும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸுடன் புதிய அரசின் அமைச்சரவையில் ஏற்கெனவே ஒப்பு கொள்ளப்பட்டபடி சிவசேனாவுக்கு 50 சதவீத இலாகாக்களை அளிக்க வேண்டுமென கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்துவார் என்று  தெரிவித்தார்.

மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை சரிபாதியாக பிரித்து, இருகட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை வகிப்பது குறித்து உத்தவ் தாக்கரே வலியுறுத்த இருப்பதாக சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்தன.

[…]

மூதாட்டி
இந்தியா

வாக்களித்தோம்... வீடு எங்கே? - சித்தராமையாவிடம் மூதாட்டி வாக்குவாதம்

வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவிடம், தங்குவதற்கு வீடு கேட்டு, மூதாட்டி வாக்குவாதம் செய்த காட்சி வெளியாகியுள்ளது.

கர்நாடகாவின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 5,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பதாமி சுற்றுவட்டாரப் பகுதிகளை சித்தராமையா பார்வையிட்ட போது, மூதாட்டி ஒருவர் சித்தராமையாவிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

தங்களுக்கு வாக்களித்தால் வீடு தருவதாகச் சொன்னீர்களே? நாங்கள் ஓட்டு போட்டு விட்டோம், ஆனால் வீடு எங்கே எனக் கேட்டு வாக்குவாதம் செய்தார். வீடு கொடுக்கப் போவது யார் என அவர் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.

[…]

இந்தியா
இந்தியா

கொலைகளும்.. புள்ளிவிவரமும்..

இந்தியாவில் கடந்த 54 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2017 ஆம் ஆண்டில் கொலைச் சம்பவங்கள் குறைந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

1957ஆம் ஆண்டில் லட்சத்திற்கு, 2.49 என்ற விகிதத்தில் கொலை நடந்ததாகவும், உள்நோக்கம் அற்ற கொலைகளும் அதில் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு கொலை விகிதம் அதிகரித்த வண்ணம் இருந்ததாகவும், 1963ஆம் ஆண்டில் 2.34 ஆக சரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1992ஆம் ஆண்டில் லட்சத்திற்கு 5.15 என்ற கணக்கில் கொலை நடந்ததாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அந்த ஆண்டில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 12 ஆயிரத்து 287 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அதற்கு அடுத்த இடங்களில், பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2013 தொடங்கி, லட்சத்துக்கு 3 என்ற விகிதத்திற்கு கீழ் கொலைகள் குறைந்து, 2017ஆம் ஆண்டில் 2.49ஆக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

கங்குலி
இந்தியா

கிரிக்கெட் வாரியத் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்கிறார்.

ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்ததை அடுத்து, பிசிசிஐ செயல்பாடுகளை வெளிப்படையாக நடத்தவும், நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், முன்னாள் தலைமைத் தணிக்கை அதிகாரி வினோத் ராய், முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை டயானா எடுல்ஜி ஆகியோர் கொண்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் முடிந்த நிலையில், பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு கங்குலி மட்டுமே மனுத் தாக்கல் செய்ததால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

செயலாளர் பதவிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா, துணைத் தலைவர் பதவிக்கு உத்தரகாண்டின் மஹிம் வர்மா, பொருளாளர் பதவிக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் சகோதரர் அருண் துமல், இணைச் செயலர் பதவிக்கு கேரளத்தின் ஜெயேஷ் ஜார்ஜ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் கங்குலி பதவியேற்கிறார். அவர் பதவியில் இருக்கப் போகும் 10 மாதங்களில், நிர்வாகத்தை சீரமைப்பது, இரட்டை ஆதாய பதவி விவகாரம், முதல் தர கிரிக்கெட்டை செம்மைப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்.

[…]

அஸ்ஸாம்
இந்தியா

2 குழந்தைகளுக்கு மேல் இருப்போருக்கு அரசு வேலை இல்லை

அஸ்ஸாமில் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்போருக்கு அரசு வேலை கிடையாது என்று அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அஸ்ஸாம் மாநில அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த அஸ்ஸாம் அரசு தீர்மானித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிக்கு 2 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று புதிய மக்கள் தொகை கொள்கையை அஸ்ஸாம் அரசு சட்டமாக நிறைவேற்றியது. தற்போது அந்த கொள்கையை பின்பற்றாதோருக்கு அரசு வேலை இல்லை என்று முடிவு செய்துள்ளது.

[…]

கேரளா
இந்தியா

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில்  கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அங்கு உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடுகிறது.

தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் எர்ணாகுளம், பாலக்காடு, இடுக்கி, மலப்புரம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் கர்நாடக மாநிலத்திலும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட பெலகாவி, தார்வாத், கடாக் பகுதிகளிலும் சிக்மகளூர் மற்றும் ஷிவ்மோகா பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குடகு மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு பெய்து வரும் தொடர்மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தென்கிழக்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மகாராஷ்டிராவிலும் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாதர், சியோன், மாஹிம், காட்கோபர், தானேவின் சில பகுதிகள் மற்றும் நவிமும்பை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.

[…]

கல்கி
இந்தியா

கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு

கல்கி ஆசிரமதித்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவுபெற்றுள்ள நிலையில், 800 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பினாமி சொத்துகள், ஹவாலா பரிமாற்றம், கணக்கில் காட்டப்படாத 4 ஆயிரம் ஏக்கர் நிலம், வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ள கல்கி ஆசிரமத்தின் நிறுவனர் விஜயகுமார். இவர், தன்னை கல்கி அவதாரம் என அறிவித்துக் கொண்டு, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள், ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

கல்கி விஜயகுமார் மற்றும் அவரது மகன் கிருஷ்ணாவினால் "வெல்னஸ் குரூப்" என்ற பெயரில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்நிலையில், வரி ஏய்ப்பு புகாரில் வரதய்யபாளையம், ஹைதரபாத், பெங்களூர், சென்னை என கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 நாட்களாக சோதனை நடத்தினர்.

நேற்று இரவுடன் முடிவடைந்த இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரொக்கம் 44 கோடி ரூபாய், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 90 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் காட்டப்படாத 4 ஆயிரம் ஏக்கர் நிலம், துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் செய்யப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் முதலீடுகள், ஹவாலா பரிமாற்றங்கள், பினாமி சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

800 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்கி ஆசிரமம் தொடர்புடைய முக்கிய நபர்களான கிருஷ்ணாவும், பிரீத்தாவும் சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை என்பதோடு, ஆவணங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

[…]

மகாராஷ்டிரா
இந்தியா

மகாராஷ்டிரா, ஹரியானாவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில், கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் 5 புள்ளி 7 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியானாவில் 8 புள்ளி 7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மகாராஷ்டிராவில், மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக-சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் 3,237 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பை பெருநகரில் மட்டும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மும்பையில் வாக்குப்பதிவு டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில், காவல்துறையினர், மத்தியப் படையினர் என 3 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று, 90 தொகுதிகளை கொண்டுள்ள ஹரியானா மாநிலத்திலும், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியிருப்பதால், பலமுனை போட்டி உருவாகியிருக்கிறது. ஆயிரத்து 169 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகரும், சமூக ஆர்வலருமான ஆமீர் கான், மும்பையில் மேற்கு பந்தராவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார். இதுவரை இல்லாத அளவாக, அதிக எண்ணிக்கையில் வாக்குப்பதிவு சதவிகிதம் அமைந்திடும் வகையில், மகாராஷ்டிராவின் அனைத்து வாக்காளர்களும், மிகுந்த ஆர்வத்துடன் ஜனநாயக கடமையாற்ற முன்வர வேண்டும் என ஆமீர் கான் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, தனது மனைவியும், நடிகையுமான லாரா தத்தாவுடன் வந்து, மும்பையின் மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்களித்தார்.

ஹரியானா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில், புதிய வரவாக வந்திருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சி, இம்முறை வாக்குப்பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் செளதாலா மற்றும் அவரது குடும்பத்தினர், டிராக்டரில் மூலம் வந்து, சிர்சாவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில் வாக்களித்தனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தின் மாரத்வாடா (Marathwada) மண்டலத்திற்குட்பட்ட லத்தூர் (Latur) மாவட்டத்தின் பல பகுதிகளில், கனமழை பதிவாகி வரும் நிலையில், வாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொட்டும் மழைக்கிடையே, குடைபிடித்தபடி வரும் வாக்காளர்கள், தங்களது வாக்கினை பதிவு செய்து செல்கின்றனர். 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், நாக்பூர் மத்திய தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியொன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், தங்களது அடிப்படை பிரச்சினைகளை புரிந்து, அதனை தீர்த்து வைக்கும், மக்கள் பிரநிதிகளை, வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்,(Manohar Lal Khattar) கர்நால்(Karnal) நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். சைக்கிளில் வந்த ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்..

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், ஏற்கனவே, தோற்றுவிட்ட காங்கிரஸ் கட்சி, ஒருபோதும் வெற்றிபெறாது என்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாக்கினை பதிவு செய்தார். மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சென்ற புரோஹித் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். 

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ் (Devendra Fadnavis), மனைவி அம்ருதா(Amruta), தாயார் சரிதா(Sarita) ஆகியோருடன் சென்று, நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், தனது வாக்கினை பதிவு செய்தார்.

மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்-கின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக், மனைவியும், நடிகையுமான ஜெனிலியா டிசோசாவுடன் வந்து, லத்தூரில் உள்ள வாக்குச்சாவடியொன்றில் வாக்களித்தார்.  

"ஏக் தோ தீன்" பாடல் புகழ் நடிகை மாதூரி தீட்சித், மும்பையில் மேற்கு பந்த்ராவில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், வாக்காளர்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கினை பதிவு செய்தார். 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பியுமான சுப்ரியா சுலே, புனே அருகில் உள்ள பாராமதி (Baramati) நகரில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேல், தனது மனைவி வர்சாவுடன் சென்று, கோண்டியா (Gondia) நகரில், வாக்களித்தார்.

மும்பையின் கிழக்கு பந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தனது மனைவி ராஷ்மி (Rashmi), மகன்கள் ஆதித்யா மற்றும் தேஜாசுடன் (Aditya & Tejas) வந்து, வாக்கினை பதிவு செய்தார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்ரே, ஒர்லி (Worli) சட்டப்பேரவைத் தொகுதியில், போட்டியிடுகிறார்.

மும்பை மேற்கு பந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகன் அர்ஜூன் ஆகியோர் வாக்கினை பதிவு செய்தனர். பின்னர் பேசிய சச்சின் டெண்டுல்கர், வாக்காளர்கள் அனைவரும், தவறாது தங்கள் வாக்கினை பதிவு செய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மும்பை பெருநகரில் உள்ள வாக்குச்சாவடியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் பேசிய அவர், 93 வயதில், முன்னாள் ராணுவ வீரர் வாக்களிக்க வந்திருப்பது தன்னை மகிழ்வில் ஆழ்த்துவதாகவும், இவரே இன்றைய ஹீரோ என்றும் பாராட்டினார். பின்னர் அனைவருடனும் இணைந்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மும்பை மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியொன்றில், நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமா மாலினி, தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபகுதியில், பாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது மனைவி சுனிதாவுடன் வந்து, வாக்கினை பதிவு செய்தார். பிரபல பாலிவுட் நடிகை பிரித்தீ ஜிந்தாவும், தனது வாக்கினை பதிவு செய்திருக்கிறார். அமெரிக்க தொழில் அதிபரை மணந்து, பெரும்பாலும் லாஸ்ஏஞ்சலீஸ் நகரிலேயே வசிக்கும் பிரீத்தி ஜிந்தா, தற்போது, மும்பை வந்து வாக்களித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது மனைவி கெளரி கானுடன், மும்பையின் மேற்கு பந்த்ராவில் வாக்கினை பதிவு செய்தார். பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், மும்பை பெருநகரின், மேற்கு பந்தராவில் உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கினைப் பதிவு செய்தார். இதேபோன்று, மும்பையின் மேற்கு அந்தேரி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், பாலிவுட் நடிகர்களான அனில் கபூரும், ஹிருத்திக் ரோஷனும் தங்கள் வாக்கினை செலுத்தினர். நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான ஷபானா ஆஸ்மி, தனது கணவரும், ஹிந்தி திரைப்பட பாடலாசிரியருமான ஜாவேத் அக்தருடன் சென்று வாக்களித்தார்.

[…]

மோடி
இந்தியா

தமிழ்மொழி அழகானது - தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்...

தமிழ்மொழி அழகானது என்றும், தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின்போது, கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார்.

மாமல்லபுரம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட மோடி, கடல் அலைகளில் கால்நனைத்துக் கடலோடு உரையாடியதாக கடந்த 13ந் தேதி கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தார்.  இந்தி மொழியில் தாம் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டார். 

பிரதமரின் கவிதை வரிகளைப் பாராட்டி நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், இயற்கையை மதிப்பது கடவுளை மதிப்பதற்கு சமமானது என்றும், மாமல்லபுரம் தொடர்பாக எழுதிய கவிதைக்கு நன்றி என்றும் பதிவிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இயற்கையை மதிப்பது நமது கலாச்சாரத்தில் ஒன்று, மாமல்லபுரத்தின் அழகிய கடல் மற்றும் அங்கு நிலவிய அமைதியான சூழல் தமது எண்ணங்களை பிரதிபலிக்க மிகவும் உதவியாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் பாராட்டியதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, தமிழ்மொழி அழகானது- தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். உலகின் பழமையான மொழியின் கலாச்சாரத்தில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

[…]

கல்கி
இந்தியா

கல்கி பகவான் விஜயகுமார் மனைவியுடன் வெளிநாட்டிற்கு தப்பியுள்ளதாக தகவல்

கல்கி ஆசிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதையடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், கடந்த 16ஆம் தேதி முதல் சென்னை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்கி ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், 90 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பணம் மற்றும் தங்கம், வைரம் உள்ளிட்டவை பறிமுதல்செய்யப்பட்டன.

500 கோடி ரூபாய் அளவிலான சொத்துகள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கல்கி விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது பாஸ்போர்ட் வருமான வரித்துறையின் கையில் சிக்காததால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றலாமா என வருமானவரி துறையினர் ஆலோசித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

[…]

தேஜாஸ் எக்ஸ்பிரஸ்
இந்தியா

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சனிக்கிழமை பயணித்தவர்களுக்கு இழப்பீடு

தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்ததால், பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்தியாவின் முதல் தனியார் ரயில் என அழைக்கப்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ், கடந்த 4 ஆம் தேதி அன்று தனது பயணத்தைத் தொடங்கியது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ - டெல்லி இடையே இயக்கப்படும் அந்த ரயில், சனிக்கிழமை அன்று 2 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. லக்னோவில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய தேஜாஸ் ரயில், பராமரிப்புப் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால், 8.55 மணிக்குப் புறப்பட்டது.

இதேபோல் டெல்லியில் இருந்து 3.35 மணிக்குப் புறப்படுவதற்குப் பதில் 5.30 மணிக்குப் புறப்பட்டது. தாமதம் காரணமாக, இரு வழித்தடங்களிலும் பயணித்த 951 பயணிகளுக்கும் தலா 250 ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது.

இழப்பீட்டுத் தொகையை செல்போன் மூலம் பெறும் வகையில், லிங்க் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை தாமதம் ஆனதற்காக இழப்பீடு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

[…]

 ராகுல் காந்தி
இந்தியா

இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி

ஹரியானாவில், உள்ளூர் இளைஞர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரியானா மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களில் வருகிற 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று ஹரியானாவில் உள்ள மகேந்திரகர் என்ற இடத்தில் வாக்கு சேகரித்த அவர், தனது ஹெலிகாப்டரில் அங்கிருந்து டெல்லி திரும்பினார்.

அப்போது, மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் ரிவாரி என்ற இடத்தில் உள்ள கேஎல்பி கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்த ராகுல், அவர்களுடன் தானும் இணைந்து கிரிக்கெட் விளையாடினார்.

[…]

மஹிமா
இந்தியா

கேரளாவைச் சேர்ந்த மாணவி அபுதாபியில் உயிரிழப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் உயிரிழந்த இந்திய பள்ளி மாணவியின் உடல் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

கேரளாவைச் சேர்ந்த ஷாஜி சாக்கோ டேனியல் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வேலை பார்த்து வருகிறார். இவரது12 வயது மகள் மஹிமா சூசன் ஷாஜி என்பவர் அபுதாபியில் படித்து வந்தார். கடந்த சில வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மஹிமா கடந்த 15ம் தேதி தனது பிறந்தநாளில் உயிரிழந்தார்.

இந்நிலையில் மஹிமாவின் உடலை கேரளாவுக்கு கொண்டு செல்ல உதவி செய்யவேண்டும் என்று அவரது தந்தை ஷாஜி சாக்கோ அமீரக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மஹிமாவின் உடல் பதப்படுத்தப்பட்டு அங்கிருந்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

[…]

டிரம்ப்
இந்தியா

இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவை கொள்ளையடிப்பதாக டிரம்ப் ஆவேசம்

இந்தியாவையும் சீனாவையும் இன்னும் வளரும் நாடுகளாக கருதுவதா என உலக வர்த்தக கழகத்திற்கு கேள்வி எழுப்பியுள்ள அதிபர் டிரம்ப், இரு நாடுகளும் அமெரிக்காவை மோசடி செய்து கொள்ளையடிப்பதாக ஆவேசப்பட்டுள்ளார்.

உலக வர்த்தக கழகத்தின் வகைப்பாட்டின்படி இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் ஆகும். இந்த வகைப்பாட்டில் வருவதால், வளர்ந்த நாடுகளுடனான வர்த்தகத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நன்மைகள் உள்ளன.

இந்நிலையில், இந்தியாவையும் சீனாவையும் வளரும் நாடுகளாக கருதக்கூடாது என உலக வர்த்தக கழகத்திற்கு தமது நிர்வாகம் கடிதம் எழுதியிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவை கொள்ளையடிப்பதால் அவற்றை வளரும் நாடுகளாக தாங்கள் கருதவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா வரி விதிப்புகளை பல மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.

இதேபோல, இந்தியாவிற்கான சிறப்பு வர்த்தக அந்தஸ்தை ரத்து செய்த டிரம்ப், அமெரிக்க ஏற்றுமதிகள் மீது இந்தியா மிக அதிகமாக வரி விதிப்பதாக தொடர்ந்து குறைகூறி வருவது குறிப்பிடத்தக்கது.

[…]

அசாம்
இந்தியா

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - பயணிகள் நீரில் தத்தளிக்கும் அதிர்ச்சி காட்சிகள்

அசாம் மாநிலத்தில் 50 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததில், பயணிகள் நீரில் விழுந்து தத்தளிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. 

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் ஓடும் ஜியாபராலி ஆற்றில் சுமார் 50 பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி சென்றதால் பாரம் தாங்காமல் அந்த படகு ஆற்றில் கவிழ்ந்தது.

கரைக்கு சற்று தூரத்தில் படகு கவிழ்ந்ததால், நீச்சல் தெரிந்தவர்கள் நீந்திக் கரையேறினர். அதே சமயம் நீச்சல் தெரியாத சிலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். படகில் சென்றவர்கள் ஆற்றில் விழுந்து தத்தளிக்கும் வீடியோக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட பலர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். 

[…]

அசாம்
இந்தியா

ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - பயணிகள் நீரில் தத்தளிக்கும் அதிர்ச்சி காட்சிகள்

அசாம் மாநிலத்தில் 50 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததில், பயணிகள் நீரில் விழுந்து தத்தளிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. 

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் ஓடும் ஜியாபராலி ஆற்றில் சுமார் 50 பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி சென்றதால் பாரம் தாங்காமல் அந்த படகு ஆற்றில் கவிழ்ந்தது.

கரைக்கு சற்று தூரத்தில் படகு கவிழ்ந்ததால், நீச்சல் தெரிந்தவர்கள் நீந்திக் கரையேறினர். அதே சமயம் நீச்சல் தெரியாத சிலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். படகில் சென்றவர்கள் ஆற்றில் விழுந்து தத்தளிக்கும் வீடியோக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட பலர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். 

[…]

அயோத்தி
இந்தியா

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க முஸ்லீம் அமைப்பினர் முன்வந்துள்ளதாக தகவல்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க முஸ்லீம் அமைப்பினர் முன்வந்துள்ளதாகவும் அதற்குப் பதிலாக அப்பகுதியில் உள்ள இதர மசூதிகளை புதுப்பித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக சமரசப் பேச்சு நடத்த உச்சநீதிமன்றம் நியமித்த மத்தியஸ்த குழு தனது அறிக்கையை மூடி சீல் வைத்த உறைக்குள் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பாக  சமரசப் பேச்சு நடத்திய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூவர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையில் அயோத்தி வழக்கில் முக்கிய பிரதிநிதிகளான சன்னி வக்பு வாரியம், நிர்வானி அகாடா, நிர்மோயி அகாடா, ராம் ஜென்மபூமி புரந்தர் சமிதி மற்றும் சில இந்து அமைப்புகள் சமரசத்திற்கு தயாராக இருப்பதாக மத்தியஸ்தம் செய்த குழுவினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சர்ச்சைக்குரிய நிலத்தை அரசிடம் ஒப்படைக்க முஸ்லீம் அமைப்பினர் முன்வந்துள்ளதாகவும் அதற்குப் பதிலாக அயோத்தியில் உள்ள இதர மசூதிகளை புதுப்பித்து தர வேண்டும் என்றும் முஸ்லீம்கள் தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் அயோத்தி வழக்கின் இறுதி விசாரணை, முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

40 நாட்களாக நடைபெற்ற  விசாரணை நேற்று மாலை 4 நிறைவடைந்தது.இதையத்து ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

[…]

இந்திய
இந்தியா

வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தும் இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மலேசிய பிரதமர் மகதிர் முகமதுக்கு கண்டனம் தெரிவித்து, அந்நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை வர்த்தகர்கள் தவிர்த்துள்ளனர்.

அண்மையில் ஐ.நா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மலேசிய பிரதமர் மகதிர் முகமது, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது தவறு எனவும், காஷ்மீரை இந்தியா படையெடுத்து ஆக்கிரமித்து கொண்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். 

இந்தநிலையில் விவசாய பொருட்களை பெருமளவு ஏற்றுமதி செய்யும் மலேசியாவிடமிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை இந்திய வர்த்தகர்கள் தவிர்த்து வருகின்றனர். அதற்கு பதில் இந்தோனேஷியா மற்றும் உக்ரைன் நாடுகளிடமிருந்து வர்த்தகர்கள் பாமாயிலை இறக்குமதி செய்கின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெய்ப்பூரில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தின் தலைவர் பிபுல் சாட்டர்ஜி, அரசியல் ரீதியான கருத்துக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் இந்தியா இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது இதுவே முதன்முறை என கூறியுள்ளார். 

இதனிடையே, பாமாயில் இறக்குமதியை வியாபாரிகள் நிறுத்தியிருப்பது அவர்களின் தன்னிச்சை முடிவு என கூறியுள்ள மலேசிய பிரதமர் மகதிர், இந்திய அரசு தங்களது பொருட்களின் இறக்குமதியை புறக்கணித்தால் ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

[…]

சாமியார்
இந்தியா

பெண்ணின் தலைமுடியை பிடித்து சவுக்கால் விளாசிய சாமியார்

கர்நாடகாவில் பேய் விரட்டுவதாக கூறி, பெண் ஒருவரை சாமியார் சவுக்கால் அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம் கோலாறு பகுதியில் உள்ள பெண் ஒருவரை பேய் பிடித்து விட்டதாக கூறி அவரது குடும்பத்தினர் அங்குள்ள மாரிகாம்பா அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆக்ரோஷத்துடன் இருந்த பெண்ணை பார்த்த சாமியார் மல்லிகார்ஜூன் என்பவர், பெண்ணுக்கு மந்திரம் ஓதி பேய் ஓட்டுவதாக கூறி தனியறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அறையில் இருந்த சவுக்கை எடுத்த அவர், பெண்ணின் தலைமுடியை பிடித்து வைத்துக்கொண்டு, அவரை சரமாரியாக சவுக்கால் விளாசியுள்ளார்.

பெண் அலறியடித்தபடி துடித்தும், சாமியார் அதனை கண்டுகொள்ளாது, தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை காணும் சிலர் பெண்ணின் நிலையை கண்டு பரிதாபப்படுவதோடு, நிஜமாகவே பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டதா அல்லது சாமியார் வேண்டுமென்றே பெண்ணை தாக்குகிறாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

[…]

அயோத்தி
இந்தியா

அயோத்தி வழக்கின் விசாரணையை இன்றுடன் நிறைவு செய்கிறது உச்சநீதிமன்றம்

அயோத்தி ராமர் ஜென்ம பூமி தொடர்பான சர்ச்சைக்குரிய நிலம் குறித்த உச்சநீதிமந்றத்தின் தினசரி விசாரணை இன்றுடன் முடிவடைகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நேற்று இதனை அறிவித்தார். 

அயோத்தி வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பங்கிட்டு பிரித்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட14 மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இதுவரை 39 நாட்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இன்றுடன் விவாதங்களை முடிக்க உத்தரவிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராமர் கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டியது பாபர் செய்த வரலாற்றுத் தவறு என்று வாதிட்டார். இந்த தவறை திருத்த வேண்டிய நேரம் வந்து விட்டதாக இந்துக்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அயோத்தியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்த 55 மசூதிகள் இருப்பதாகவும் ராமர் பிறப்பிடம் ஒன்றுதான் என்றும் அதை இந்துக்களால் மாற்ற முடியாது என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இன்றைய விசாரணையில் இந்துக்கள் தரப்பில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தமது வாதங்களை நிறைவு செய்ய 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதே போன்று முஸ்லீம்கள் தரப்பு வழக்கறிஞருக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5 மணி வரை விவாதம் மற்றும் விசாரணை நீடித்த நிலையில், இன்றும் மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அனைத்துத் தரப்பினரும் தங்கள் வாதங்களை நிறைவு பெற்றபின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படும்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெறுவதால் அந்த நாளிலோ அதற்கு முன்போ உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

[…]

பிஎம்சி வங்கி
இந்தியா

பி.எம்.சி வங்கி முன்னாள் தலைவர் வர்யம் சிங் பற்றிய திடுக்கிடும் தகவல்

பி.எம்.சி வங்கி முறைகேட்டில் கைதான அந்த வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கியிருப்பது, விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட, பிஎம்சி வங்கியில் சுமார் 21 ஆயிரம் போலி கணக்குகள் மூலமாக 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான மும்பை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில், பி.எம்.சி வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங், அமிர்தசரசில், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர விடுதி ஒன்றை வாங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுதவிர, ஹரியானா, மற்றும் இமாச்சல் பிரதேசத்திலும், நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை, வர்யம் சிங் வாங்கி குவித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், துபாய்க்கு ஹவாலா முறையில் பணத்தை கொண்டு சென்று, அதனை மேத்தா என்பவர் பெயரில் மீண்டும் இந்தியாவில் முதலீடாக மாற்றியது பற்றி, பிஎம்சி வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குநர் ஜாய் தாமசிடம் விசாரணை நடைபெறுவதாக, மும்பை போலீசார் கூறியிருக்கின்றனர். 

[…]

மோடி
இந்தியா

பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர்.... இனி இந்திய விவசாயிகளுக்கே..!

டந்த 70 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர், இனிமேல் நமது விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்..

அரியானா மாநிலத்தில் வருகிற 21-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தின் சார்கிதாரி, குருசேத்திரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பேசிய அவர், அரியானா மாநில மக்களின் அன்பு தம்மை ஈர்த்து உள்ளது என்றார். மக்களவை தேர்தலில், அரியானாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றதை அவர் சுட்டிக்காட்டினார். 

இந்த ஆண்டில் அரியானா மாநிலத்தில் இரண்டு தீபாவளி கொண்டாடப்பட உள்ளது என்ற அவர், ஒன்று மண் விளக்குகளில் தீபம் ஏற்றுவது மற்றொரு தேர்தலில் பா.ஜ.க பெறும் வெற்றியை கொண்டாடுவது என்றார். 

அரியானா மாநில மல்யுத்த வீராங்கனையான பாட்டியா போகத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட டங்கல் திரைப்படத்தை பார்த்ததாக சீன அதிபர் ஜிங் பின் தம்மிடம் கூறியதாகவும், இந்திய மகளிரின் திறமையை மிகச்சிறப்பாக வெளிகாட்டி உள்ளதாகவும் அவர் பாராட்டியதாக பிரதமர் குறிப்பிட்டார். 

இந்தியாவுக்கு சொந்தமான ஆற்று நீர் கடந்த 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் வழியே வீணாகப் பாய்வதாக அவர் கூறினார். அரியானா மாநில விவசாயிகளுக்கு சொந்தமான அந்த தண்ணீர் இனி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆற்றின் நீரின் மீது அரியானா, ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என்ற அவர், இந்த தண்ணீரை பாகிஸ்தானுக்கு செல்ல விடாமல் தடுக்க, முந்தைய அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். ஆனால் அந்த தண்ணீர் இனிமேல் பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா அனுமதிக்காது என்றும் பிரதமர் தெரிவித்தார். தேர்தலில் வெற்றி, தோல்விகள் வரும் என்ற அவர், நாட்டின் பாதுகாப்பே எப்போதும் முக்கியம் என்றார்.

சிந்து மற்றும் 5 துணை ஆற்று நீரை பகிர்ந்து கொள்ள இந்தியாவும், பாகிஸ்தானும் 1960 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி பியாஸ், சட்லெஜ், ராவி ஆகிய மூன்று ஆற்று நீரை இந்தியாவும், சிந்து,ஜீலம், ஜீனாப் ஆகிய ஆறுகளின் நீரை பாகிஸ்தானும் பயன்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதில் இந்திய ஆறுகளில் உள்ள தண்ணீரை காஷ்மீர், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மூன்று திட்டங்களின் மூலம் கொண்டு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

[…]

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
இந்தியா

சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை பகிர்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரவிசங்கர் பிரசாத்

சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட அமலாக்க முகமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

கொள்கைகளை மதிக்கும் இந்தியாவில் குறிப்பிட்ட தவறான தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலம்  பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சட்ட அமலாக்க முகமை உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

பேஸ்புக், வாட்சப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் ஒரே நேரத்தில், ஒரே பகுதியில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் தவறாக திரிக்கப்பட்டு பரப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மிகப்பெரிய தரவுகளை கொண்ட இந்தியாவில் திரிக்கப்பட்ட அல்லது பரிமாறப்பட்ட தகவல்களை தனித்து கண்டறிவது சவாலான செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 

[…]

சிலிண்டர்
இந்தியா

உத்தர பிரதேசத்தில் சிலிண்டர் வெடித்து, வீடு இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

உத்தர பிரதேச மாநிலத்தில் சிலிண்டர் வெடித்து, வீடு இடிந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

அந்த மாநிலத்தின், மாவ் மாவட்டம், முகமதாபாத் அருகே உள்ள வாலித்பூரில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை சமையல் செய்துகொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.இதனால் 2 மாடிகளை கொண்ட அந்த வீட்டின் ஒரு பகுதி  இடிந்து விழுந்தது.

அந்த வீட்டில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 15 பேரில் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

[…]

அயோத்தி
இந்தியா

அயோத்தியில் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு 144 தடை உத்தரவு அமல்

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், டிசம்பர் 10ம் தேதி வரை அயோத்தியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் 6ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் டிசம்பர் 10ம் தேதி வரை அயோத்தியில் 144 தடையுத்தரவு ஆணையை அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமார் ஜா நேற்று வெளியிட்டுள்ளார்.

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் நியமித்த 3 பேர் கொண்ட சமரசக் குழுவின் முயற்சிக்குப் பலன் இல்லாதததால் ,5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினசரி விசாரணைக்கு ஏற்று விசாரித்துவருகிறது. வரும் 17ம் தேதிக்குள் அனைத்துத் தரப்பு வாதங்களையும் முடித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தசரா விடுமுறையை அடுத்து 38வது நாளாக உச்சநீதிமன்றத்தின் விசாரணை இன்று மீண்டும் தொடங்குகிறது. கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பங்கிட்டு பிரித்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முஸ்லீம் தரப்பு வாதத்தை 14ம் தேதி நிறைவு செய்யவும், அடுத்த இரண்டு நாட்களில் இந்து கட்சிகள் தங்கள் வாதத்தை நிறைவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருகிற 17ம் தேதி அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு செய்யப்பட்டு, தீர்ப்பு ஒத்தி வைக்கப்படும். அடுத்த மாதம் 17ம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஓய்வு பெறுவதற்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் அயோத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடையுத்தரவு டிசம்பர்10ம் தேதி வரை அமலுக்கு வந்துள்ளது.

[…]

மோடி
இந்தியா

எதிர்கட்சிகளுக்கு சவால் விடுத்த பிரதமர் மோடி..!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370ஆவது பிரிவை திரும்பக் கொண்டுவருவோம் என எதிர்க்கட்சிகளால் வாக்குறுதி அளிக்க முடியுமா என்று எதிர்க் கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். 

மஹாராஷ்டிராவில் வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி ஜல்கானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி முதல்முறையாக கலந்து கொண்டு பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது பேசிய மோடி, துணிச்சல் இருந்தால், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்க முடியுமா என்று எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு சவால் விடுத்தார். அதனை செய்ய வலிமை இருக்கிறதா, நாட்டு மக்கள் தான் அதனை அனுமதிப்பார்களா என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.

370வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும், அரசியல் செய்வதாகவும் பிரதமர் சாடினார்.

இந்த விவகாரத்தில் அவர்கள் அண்டை நாட்டின் மொழியில் பேசுகின்றனர் என்று பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் குற்றம்சாட்டினார். அதே போன்று முத்தலாக்கை மீண்டும் கொண்டு வர எதிர்க்கட்சிகளால் முடியுமா என்றும் பிரதமர் சவால் விடுத்தார்.

ஜம்மு காஷ்மீர் வெறும் நிலம் மட்டுமல்ல என்று குறிப்பிட்ட மோடி, அது இந்தியாவின் மகுடம் என்று தெரிவித்தார். 4 மாதங்களுக்குள் அங்கு இயல்பு நிலை திரும்பிவிடும் என்று அவர் உறுதி அளித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, புதிய வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்காக மக்களவை தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குகள், இந்தியாவிற்கு த உருவாக்கும் என்று கூறினார்.

5 ஆண்டு காலம் ஊழலற்ற ஆட்சியை முதலமைச்சர் பத்னாவிஸ் வழங்கியிருப்பதாக பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, விவசாயிகள், தொழில்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நம்பிக்கையைப் பெற்று இருப்பதாக கூறினார்.

பாஜக கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் பட்டியலிட்டார். பத்னாவிசை இரண்டாவது முறையாக முதலமைச்சராக்க மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.

[…]

இந்தியா
இந்தியா

விமானப் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க நடவடிக்கை - ஏர் இந்தியா

எண்ணெய் நிறுவனங்கள் வழங்கிய எரிபொருளுக்கான நிலுவைத் தொகை விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் பயணிகளுக்கு எந்த இடையூறும் இருக்காது என்றும் ஏர் இந்தியா நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் தங்களுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிலுவைத் தொகை செலுத்த வேண்டியிருப்பதாக இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.

அந்த நிறுவனங்கள் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கூட்டாக எழுதியுள்ள கடிதத்தில் நிலுவைத் தொகைகளை செலுத்தத் தவறினால் வரும் 18-ஆம் தேதிக்குப் பின் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 6 முக்கிய விமான நிலையங்களில் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்தன.

முக்கிய விமான நிலையங்களில் எரிபொருள் வினியோகம் நிறுத்தப்பட்டால் விமானப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்படும் என அஞ்சப்பட்ட நிலையில் விமானப் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தனானே குமார் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்த அவர், அவ்வாறு தீர்வை எட்ட முடியாத நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகளுக்கு ஏர் இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார். 

[…]

வழிப்பறி
இந்தியா

பிரதமர் மோடியின் சகோதரர் மகளின் கைப்பையை வழிப்பறி செய்தவன் கைது

டெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியின் சகோதரர் மகளின் கைப்பையை வழிப்பறி செய்தவனை போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடியின் சகோதரரான பிரகலத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி, அமிர்தரசில் இருந்து நேற்று காலை டெல்லி சென்றார்.

நேற்று காலை 7 மணி அளவில் ஆட்டோவில் சென்ற அவர், குஜராத்தி சமாஜ் பவன் என்ற இடத்தில் இறங்கிய போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள் கைப்பையை பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக தமயந்தி பென் மோடி போலீசில் புகார் அளித்தார். அந்தக் கைப்பையில் 50 ஆயிரம் ரூபாய் பணமும், 2 செல்போன்களும், விமான டிக்கெட்டுகளும் இருந்ததாக புகாரில் அவர் கூறி இருந்தார்.

டெல்லி முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநர் வீடுகள் அமைந்துள்ள இடத்திற்கு அருகே நடைபெற்ற இந்த வழிப்பறிச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆராய்ந்தனர். அதில் வழிப்பறி கொள்ளையர்களின் உருவங்கள் பதிவாகி இருந்தன. இதை அடுத்து தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், பிரதமரின் சகோதரர் மகளிடம் வழிப்பறி செய்தவர்களில் ஒருவனைக் கைது செய்தனர். தமயந்தி பென் மோடியிடம் பறித்த பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

[…]

வெடிகுண்டு
இந்தியா

சென்னை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி தெரிவித்த தகவலால் பரபரப்பு

லக்னோவில் இருந்து சென்னை புறப்பட வேண்டிய இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் எச்சரித்ததையடுத்து லக்னோ விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகள் சோதனையின் போது பியூஷ் வர்மா என்ற பயணியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது இரவு 7.25 மணிக்கு சென்னை செல்லும் இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அவர் கூறினார். இதனால் லக்னோ விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த விமானம் புறப்பட இருந்த நிலையில் நிறுத்தப்பட்டது.

பயணிகள் வெளியேற்றப்பட்டு விமானத்திலும் விமான நிலையத்திலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனைக்குப் பின் விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. வெடிகுண்டு இருப்பதாக எச்சரித்த பயணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[…]

வெடிகுண்டு
இந்தியா

சென்னை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி தெரிவித்த தகவலால் பரபரப்பு

லக்னோவில் இருந்து சென்னை புறப்பட வேண்டிய இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் எச்சரித்ததையடுத்து லக்னோ விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகள் சோதனையின் போது பியூஷ் வர்மா என்ற பயணியின் நடத்தையில் சந்தேகம் எழுந்ததையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது இரவு 7.25 மணிக்கு சென்னை செல்லும் இன்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அவர் கூறினார். இதனால் லக்னோ விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த விமானம் புறப்பட இருந்த நிலையில் நிறுத்தப்பட்டது.

பயணிகள் வெளியேற்றப்பட்டு விமானத்திலும் விமான நிலையத்திலும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனைக்குப் பின் விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. வெடிகுண்டு இருப்பதாக எச்சரித்த பயணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[…]

கவுதம் அதானி
இந்தியா

பணக்கார இந்தியர்களின் பட்டியலில் கவுதம் அதானி 8 இடங்கள் முன்னேறி 2வது இடத்தை பிடித்தார்

பணக்கார இந்தியர்கள் பட்டியலில் முதல் இடத்தை முகேஷ் அம்பானி தக்க வைத்துள்ள நிலையில் கவுதம் அதானி 8 இடங்கள் முன்னேறி 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

தி ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி 3 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களுடன் முதலிடத்தை 12 ஆவது ஆண்டாக தக்கவைத்துள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன் தொழிலதிபர் கவுதம் அதானி 2 ஆவது இடத்தில் உள்ளார்.

அசோக் லேலண்ட் உரிமையாளர்கள் இந்துஜா சகோதரர்கள் மூன்றாவது இடத்திலும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் பல்லோன்ஜி மிஸ்திரி நான்காவது இடத்திலும், கோட்டக் மஹிந்திரா வங்கியின் உதய் கோட்டக் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும் போர்ப்ஸ் ஆய்வுபடி தொழிலதிபர்களின் மொத்த சொத்து மதிப்பில் 8 சதவீதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பாக 14 பேரின் சொத்து மதிப்பில் 7 ஆயிரம் கோடி வரை சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பட்டியலில் இருந்து 9 பேர் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 2 ஆவது இடத்தில் இருந்த தொழிலதிபர் அஸிம் பிரேம்ஜி 17 ஆவது இடத்துக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

[…]

நிர்மலா சீதாராமன்
இந்தியா

வியாபாரிகளின் எதிர்பார்ப்புகளை ஜிஎஸ்டி பூர்த்தி செய்யவில்லை - அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தொழில் அதிபர்கள், தனியார் நிறுவனங்களின் தலைமைச் செயல் நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வியாபாரிகளின் எதிர்பார்ப்புகளை ஜிஎஸ்டி பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

புனேயில் நடைபெற்ற ஜிஎஸ்டி குறித்த முதல் ஆய்வுக் கட்டத்தில் பல்வேறு நிறுவனங்களின் அதிபர்கள், தொழில்முனைவோர், வியாபாரிகள் கலந்துக் கொண்டனர். ஜிஎஸ்டியால் ஏற்பட்ட சாதக பாதக அம்சங்கள் குறித்து நிதியமைச்சர் ஆய்வு செய்தார்.

நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் ஒருமித்த முடிவுடன், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை முதல் தேதியில் இருந்து ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வர்த்தகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அரசின் எண்ணம் தொடக்கத்தில் இருந்தே ஈடேறவில்லை எனவும், அதற்காக மன்னித்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதே நேரத்தில் இந்த சட்டத்தை கைவிட முடியாது என்று கூறிய நிர்மலா சீதாராமன், குறைகள் இருப்பினும் தொடர் ஆலோசனைகள் மூலம் அவற்றை களைய முயற்சி எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

[…]

நிர்மலா சீதாராமன்
இந்தியா

PMC வங்கி முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாகச் செயல்பட முடியாது

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாகச் செயல்பட முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி எச்.டி.ஐ.எல். நிறுவனத்துக்கு முறைகேடாக 4355 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் எச்.டி.ஐ.எல். நிறுவனத் தலைவர், அவரது மகன், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யபட்டனர். 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடிக்கையாளர்கள் அந்த வாங்கி ஏ.டி.எம்.களில் எடுக்க முடியாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது.

இந்நிலையில் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். அங்கு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தான் வாடிக்கையாளர்களின் அவதி குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பேசியிருப்பதாகத் தெரிவித்தார்.

பி.எம்.சி. வங்கியை கட்டுப்படுத்துவது ரிசர்வ் வங்கி தான் என்பதால் நிதியமைச்சகம் இதில் நேரடியாக செயல்பட முடியாது என்ற அவர், தொடர்புடையவர்கள் மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார். என்ன நடக்கிறது என ஆய்வு செய்ய தனது அமைச்சக செயலாளர்களை ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

[…]

நிர்மலா சீதாராமன்
இந்தியா

PMC வங்கி முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாகச் செயல்பட முடியாது

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாகச் செயல்பட முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி எச்.டி.ஐ.எல். நிறுவனத்துக்கு முறைகேடாக 4355 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் எச்.டி.ஐ.எல். நிறுவனத் தலைவர், அவரது மகன், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யபட்டனர். 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடிக்கையாளர்கள் அந்த வாங்கி ஏ.டி.எம்.களில் எடுக்க முடியாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது.

இந்நிலையில் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். அங்கு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தான் வாடிக்கையாளர்களின் அவதி குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பேசியிருப்பதாகத் தெரிவித்தார்.

பி.எம்.சி. வங்கியை கட்டுப்படுத்துவது ரிசர்வ் வங்கி தான் என்பதால் நிதியமைச்சகம் இதில் நேரடியாக செயல்பட முடியாது என்ற அவர், தொடர்புடையவர்கள் மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார். என்ன நடக்கிறது என ஆய்வு செய்ய தனது அமைச்சக செயலாளர்களை ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

[…]

கொலை
இந்தியா

ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் குடும்பமே கொலை..! கர்ப்பிணியின் கழுத்து அறுத்த கொடூரம்

மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி, அவரது கர்ப்பினி மனைவி மற்றும் 8 வயது மகன் உள்ளிட்ட குடும்பத்தினரை மர்ம கும்பல் ஒன்று கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்சிதாபாத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் 30 வயதான பிரகாஷ் பால், அந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்த பிரகாஷ் பாலுக்கு பியூட்டிபால் என்ற மனைவியும் 8 வயதில் ஒரு மகனும் இருந்தனர். மனைவி பியூட்டிபால் கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு 11 மணிக்கு பிரகாஷ் பால் கடைவீதிக்கு சென்று திரும்பி இருக்கிறார். இரவில் உறவினர் ஒருவருடம் பிரகாஷ் பால் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது சிலர் வீட்டுக்குள் புகுந்ததால், பிரகாஷ் பாலின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அதன் பின் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போனை தொடர்பு கொள்ள இயலாத நிலையில் வியாழக்கிழமை காலையில் பிரகாஷ் பால், அவரது கர்ப்பிணி மனைவி பியூட்டி பால் மற்றும் இவர்களது 8 வயது மகன் ஆகியோர் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாக கிடந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

3 பேரின் சடலத்தையும் மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது தனிப்பட்ட ஒரு அமைப்பின் சகிப்பு தன்மை இல்லாத கொடூர தாக்குதல் என்று பாஜகவினர் கொந்தளித்துள்ளனர். ஆனால் இந்த கொலையில் அரசியல் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்றும் கொள்ளையடிக்கும் திட்டத்தில் நடந்திருக்கலாம் என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் ? என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் காவட்ட காவல் கண்காணிப்பாளர் முகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் மேற்கு வங்க ஆளுனர் ஜகதீப்தாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் கடும் வலியை ஏற்ப்படுத்தி உள்ளதாகவும், ஒரு ஆசிரியர், அவரது கர்ப்பிணி மனைவி , அவரது 8 வயது மகன் என்று ஒரு குடும்பமே கொல்லப்பட்டிருப்பது கட்டுமிராண்டித்தனமானது என்றும் இதற்கு காரணமானவர்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி குடும்பமே கொல்லப்பட்ட இந்த கொடூர சம்பவம் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[…]

பிரக்யா
இந்தியா

தாய்லாந்தில் கார் விபத்தில் இந்திய பெண் பொறியாளர் பலி

தாய்லாந்தில் கார்விபத்தில் உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் பொறியாளரின் உடலை இந்தியா கொண்டு செல்ல அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. 

பிரக்யா பாலிவால் என்ற 30 வயதான பெண் மத்தியப் பிரதேசத்தில் பிறந்தவர். பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அந்நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்க தாய்லாந்து சென்ற அவர், கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் புகெட் நகரிலுள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பிரக்யாவின் தோழி அவருடைய குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து பிரக்யாவின் உடலை இந்தியா கொண்டு வர உதவும்படி பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து பிரக்யாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்திய தூதரகம் மூலம் பிரக்யாவின் உடலை இந்தியா கொண்டு செல்ல அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தும் தேவையான உதவிகளை செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார். 

[…]

சீனாவுக்கு எச்சரிக்கை
இந்தியா

சீன அதிபர் வருகையை ஒட்டி சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் பாகிஸ்தான் பேச்சைக் கேட்டு இதில் தலையிட வேண்டாம் என்றும் சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெய்ஜிங் சென்றதும், அங்கு சீன அதிபர் ஜி-ஜின்பிங்கை சந்தித்து பேச்சு நடத்திய போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதும் தங்கள் கவனத்திற்கு வந்திருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாடு சீனாவுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு வரும் நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து வேறு எந்த ஒரு நாடும் கருத்து கூற முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

[…]

ஜோலி
இந்தியா

சீரியல் கில்லர் ஜோலி யார் ? 6 பேர் கொலை பின்னணி


கேரளாவில், ஆண் நண்பர்களை சந்திக்க தடையாக இருந்த கணவன் உள்பட 6 பேரை, ஒவ்வொருவராக சூப் மற்றும் சாப்பாட்டில் சயனைடு கலந்து கொலை செய்த போலி பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். சொத்துக்கும், தவறான தொடர்புக்கும் ஆசைப்பட்டதால் சீரியல் கில்லரான விபரீத பெண் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியை சேர்ந்த ராய்தாமஸ் எனபவரது மனைவி ஜோலி..! இவர் என்.ஐ.டி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிவதாக கூறிவந்தார்.

கடந்த 2002 முதல் 2016 ஆண்டுக்கு உள்பட்ட 14 ஆண்டுகளில் ஜோலியின் கணவர் ராய்தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

கணவர் இறந்ததும் தான் காதலித்த ஷாஜி என்பவரை ஜோலி திருமணம் செய்து கொண்டார். கொல்லப்பட்டவர்களில் 2 வது கணவன் ஷாஜியின் மனைவி மற்றும் மகளும் அடங்குவர். இதன்பின்னர் குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் ஜோலி, தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார்.

அமெரிக்காவில் இருந்து ராய்தாமசின் அண்ணன் ரோஜோ சமீபத்தில் ஊருக்கு வந்தபோது குடும்ப சொத்துக்கள் அனைத்தும் ஜோலியின் பெயருக்கு உயில் எழுதப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தந்தை எழுதி கொடுத்த உயிலில் ஏற்பட்ட சந்தேகம், 6 பேரது மரணத்திலும் ஏற்பட்டது. ஆரோக்கியமாக இருந்தவர்கள் எப்படி அடுத்தடுத்து உயிரிழந்தனர் என்ற சந்தேகத்தால் வீட்டில் தண்ணீர் குடிக்க கூட பயமாக இருப்பதாகவும் தனது குடும்பத்தினர் 6 பேரின் சாவில் மர்மம் இருப்பாதாகவும் போலீசில் புகார் அளித்தார்.

கேரள காவல்துறையினரின் விசாரணையில் ஜோலி தனது கணவன் உள்பட 6 பேரையும் சாப்பாடு மற்றும் சூப்பில் சயனைடு கலந்து கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து ஜோலி அவருக்கு சயனைடு வாங்கிக் கொடுத்த உறவினர் மேத்யூ, நகைத் தொழிலாளி பிரஜூகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலைகளில் ஜோலியின் 2வது கணவன் ஷாஜி மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்த போது கோழிக்கோட்டில் உள்ள என்ஐடி பேராசிரியையாக பணிபுரிந்து வருவதாக ஜோலி கூறியது பொய் என்பது தெரியவந்தது.

ஜோலி தனது முதல் கணவன் ராய்தாமஸ், 2வது கணவன் ஷாஜூ உள்பட குடும்பத்தினர் அனைவரையும் என்ஐடியில் பணிபுரிந்து வருவதாகவே நம்பவைத்ததாக கூறப்படுகின்றது.

தான் பேராசிரியை என்பதை நம்ப வைக்கும் விதமாக ஜோலி தினமும் காலையில் வேலைக்கு செல்வதாக கூறி கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் என்.ஐ.டிக்கு சென்று வந்து நாடகமாடியதாக 2 வது கணவர் ஷாஜி தெரிவித்துள்ளார்.

ஜோலிக்கு ஆண் நண்பர்கள் அதிகம் என்றும் அவர்களுடனான எல்லை மீறிய தொடர்புக்கு குடும்பத்தினர் இடையூறாக இருப்பதாக நினைத்து முதலில் சூப்பில் சயனைடு கலந்து கணவர் ராய் தாமஸை கொலை செய்ததாகவும், அதன் பின்னர் மாமனாரையும், மாமியார் அன்னம்மாளையும் சாப்பாட்டில் சயனைடு கலந்து கொலை செய்து விட்டு , உயிரிழந்தவர்களின் முகத்தில் முத்தமிட்டு கதறி அழுது அவர்கள் இயற்கையாக உயிரிழந்தது போல நடித்து நம்ப வைத்துள்ளார் என்கின்றனர் காவல்துறையினர்.

கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலருடன் ஜோலிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதை அவரது செல்போன் எண் மூலம் கண்டறிந்த காவல்துறையினர் அவரது மாமனார் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதையும் கண்டுபிடித்தனர்.

ஜோலி , பலமுறை கருக்கலைப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளதால் அவர் பல ஆண்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது அம்பலமாகியுள்ளது. ஜோலிக்கு பெண்களை பிடிக்காது என்பதால் பலரை கொல்ல திட்டமிட்டதாகவும், கணவரின் மாமியார், 2 வது கணவரின் மனைவி, மகள் ஆகியோர் இலக்கானதாகவும், அதிர்ஷ்டவசமாக 5 க்கும் மேற்பட்ட பெண்கள் தப்பியதாகவும் கோழிக்கோடு காவல் கண்காணிப்பாளர் சைமன் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் இருந்து சடலங்களை தோண்டி எடுத்து வரும் காவல்துறையினர். உடல் கூறுகளை ஆய்வு செய்வதற்காக வெளி நாட்டிற்கு அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஜோலியின் இந்த தொடர் கொலை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தேகம் எழுப்பிய அவர்களது உறவினர் ஒருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். அவரது மரணத்துக்கும் ஜோலி தான் காரணமா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

கர்நாடகாவை கலக்கிய சயனைடு மல்லிகா போல கேரளாவில் பீதியை கிளப்பி விட்டிருகிறார் இந்த சயனைடு ஜோலி..!

[…]

 ராகுல் காந்தி
இந்தியா

கேள்விக்குறியாகும் காங்கிரஸ் எதிர்காலம்?

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, ராகுல் காந்தி விலகிச் சென்றதே, தங்களது மிகப்பெரிய பிரச்சினையாக மாறியிருப்பதாக, அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கவலை தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி அருதிபெரும்பான்மை வெற்றிப்பெற்றதோடு, காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 52 இடங்கள் மட்டுமே கிடைத்தன. தீவிர பரப்புரை மேற்கொண்டும் கிடைத்த படுதோல்வியால், அதற்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து, ராகுல் காந்தி விலகினார். சோனியா காந்தி இடைக்கால தலைவராகியிருக்கிறார்.

இந்நிலையில், காங்கிரசின் தற்போதைய நிலைமை குறித்து, அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மனந்திறந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி, தலைவர் இன்றி தள்ளாட்டத்தில் இருப்பதாக கவலை வெளியிட்டுள்ள சல்மான் குர்ஷித், தலைவர் பதவியிலிருந்து, ராகுல் காந்தி விலகிச் சென்றிருப்பதே, தங்கள் கட்சியின் பெரும் பிரச்சினையாக மாறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி குறித்து, முறையாக ஆலோசிக்கப்படவில்லை என்றும், சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

இதேபோக்கு, தொடர்ந்து, நீடிக்குமானால், காங்கிரஸ் கட்சி கடுமையான தள்ளாட்டத்திற்கு தள்ளப்படுவதோடு, வரவிருக்கும், மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவை தேர்தல்களில், கரையேறுவதற்கு வாய்ப்பு கிட்டாது என்றும் அங்கலாய்த்திருக்கிறார்.

[…]

மசாஜ் செய்யும் குரங்கு
இந்தியா

காவல் ஆய்வாளரின் தலையில் மசாஜ் செய்யும் குரங்கு

உத்திரபிரதேசத்தில் காவல் ஆய்வாளர் ஒருவரின் தலைக்கு, குரங்கு ஒன்று மசாஜ் செய்யும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எத்துறையில் பணியாற்றுவோருக்கும் மனஅழுத்தம் ஏற்படுவதுண்டு. குறிப்பாக காவல்துறையில் பணியாற்றுபவர்கள் வழக்கு தொடர்பான முக்கிய தடயங்களை கண்டுபிடிக்க மூளையை கசக்குவதால் எளிதில் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.

இந்தநிலையில், பிலிபிட் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஆய்வாளர் ஸ்ரீகாந்த் திவேதி என்பவர், மனஅழுத்தத்தை போக்க குரங்கு ஒன்றை தன்னுடன் வைத்து அவ்வப்போது தலைக்கு மசாஜ் செய்து கொள்வதாக கூறப்படுகிறது.

அண்மையில் அவர் அலுவலகத்தில் வழக்கு ஒன்றின் ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தபோது, அவரது தோள்பட்டையில் அமர்ந்தபடி குரங்கு ஒன்று அவருக்கு தலையில் மசாஜ் செய்து கொண்டிருந்தது.

தலையில் பேன் பார்ப்பது போல் இருந்த இந்த காட்சி, தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குரங்கு தன் மீது அமர்ந்திருந்தும், அதனை பொருட்படுத்தாது காவலர் இயல்பாக தனது பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

[…]

கர்பா நடனம்
இந்தியா

கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ராஜஸ்தானில் நவராத்திரியை முன்னிட்டு கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி தரையில் விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது. நவராத்திரி பண்டிகையையொட்டி கர்பா நடனம் ஆடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில், சிலர் கும்பலாக ஒன்றுகூடி, வட்டமாக வலம்வந்து உற்சாகமாக கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது அக்கூட்டத்தில் நடனம் ஆடிக்கொண்டிருந்த சூரத்தைச் சேர்ந்த ஜக்தீஷ் என்பவர், திடீரென மயங்கி தரையில் விழுந்தார்.

இதையடுத்து அவரை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

[…]

ரஃபேல் ரக போர் விமானம்
இந்தியா

முதலாவது ரஃபேல் போர் விமானத்தை இன்று வழங்குகிறது பிரான்ஸ் நிறுவனம்

பிரான்சில் தயாரான ரஃபேல் ரக போர் விமானம் இந்தியாவிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. பாரிஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஃபேல் விமானத்திற்கு ஆயுதபூஜை செய்து அதில் பயணிக்க உள்ளார். 

பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்திடம், அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரஃபேல் ரக போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தப்படி முதலாவது விமானம் தயாரிக்கப்பட்டு இந்திய விமானப்படையிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது.

இதனைப் பெற்றுக் கொள்வதற்காக பாரிஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அந்நாட்டு அதிபர் மெக்ரானை சந்தித்துப் பேசுகிறார். அங்கிருந்து துறைமுக நகரான போர்டோவிற்கு செல்லும் அவர் ரஃபேல் விமானத்தை முறைப்படி பெற்றுக் கொள்கிறார். இன்று தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், ரஃபேல் விமானத்துக்கு ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை செய்வார் என்றும், பின்னர் போர் விமானத்தில் பறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரான்ஸ் ராணுவ அமைச்சர், இந்திய விமானப்படைத் தளபதி பதோரியா, இரு நாட்டு விமானப்படை மற்றும் தஸ்ஸோ நிறுவன அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

ரஃபேல் ரக முதல் விமானம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டாலும், அடுத்த சில மாதங்களுக்கு பிரான்ஸிலேயே இருக்கும். அங்கு 24 விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். முதல் தொகுப்பில் வழங்கப்படும் 4 விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.

இரட்டை என்ஜின்கள் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல்,வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில் இருந்து பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானமாகும்.

இந்த விமானத்தில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளான ஸ்கால்ப் மற்றும் ஸ்டார்ம் ஷேடோ உள்ளிட்ட ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணைகள் நான்கு பிளஸ் பிளஸ் தலைமுறை ஏவுகணைகளாகும். குகைக்குள் பதுங்கியிருக்கும் எதிரிகளை அழிக்க கடினமான பாறையையும் ஊடுருவித் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த போர்க் கருவிகள், ஏவுகணைகளை பொருத்திப் பயன்படுத்த ஏற்றது என்பதால், இந்திய ராணுவத்துக்கு இவை பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளை இந்திய விமானப்படை ஏற்கெனவே உருவாக்கியுள்ளது. விமானிகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஃபிரான்சிடமிருந்து வாங்கப்படும் 36 ரஃபேல் விமானங்களில் 18 விமானங்கள் அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன.

வியூக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமானப் படை தளம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மீதமுள்ள 18 விமானங்கள் மேற்குவங்கத்தில் Hasimara விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன. இந்த இரு விமானப்படை தளங்களிலும் 400 கோடி ரூபாய் செலவில், ரஃபேல் போர் விமானங்களை நிறுத்திவைப்பதற்கான கட்டமைப்புகள், பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

[…]

6 பேரை தீர்த்துக் கட்டிய பெண்
இந்தியா

காதலனை மணப்பதற்காக கணவர் உள்பட 6 பேரை தீர்த்துக் கட்டிய பெண்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உணவில் சயனைடு கலந்து கொடுத்து கணவரையும், அவரது குடும்பத்தையும் 14 ஆண்டுகளில் அடுத்தடுத்து தீர்த்துக் கட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோழிக்கோடு மாவட்டம் கூடத்தை என்ற ஊரைச் சேர்ந்த அன்னம்மா என்பவர் 2002ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.
6 ஆண்டுகள் கழித்து அவரது கணவரான டாம் தாமஸ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவர்களது மகனான ராய் தாமஸ், அன்னம்மாவின் சகோதரர் மாத்தீவ், சிலி என்ற இளம்பெண், அவரது ஒரு வயது குழந்தை என மரணப் பட்டியல் நீண்டது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடந்த உயிரிழப்பால், குடும்பத்தினர் யாருக்கும் சந்தேகம் எழவில்லை.

ஆனால் ராய் தாமஸின் மனைவியான ஜாலி, சிலி என்ற பெண்ணின் கணவர் சாஜூவை மணந்து கொண்டதுடன், குடும்பச் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. குற்றப்பிரிவு போலீசாரை திணறடித்த இந்த வழக்கில் ஜாலியைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது திடுக்கிடும் தொடர் கொலைச் சம்பவத்தின் பின்னணி அம்பலமானது.

சாஜூவை மணந்து கொள்வதற்காகவும், குடும்ப சொத்துக்காகவும் இவ்வளவு கொலைகள் செய்ததை 47 வயதான ஜாலி ஒப்புக் கொண்டார். இதை அடுத்து அவரையும், சாஜூ உள்ளிட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அனைவருக்கும் உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்ததை ஜாலி ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள ஜாலியின் மகன் ரோமோ ராய், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உணவில் சயனைடு கலந்து கொடுத்து கணவரையும், அவரது குடும்பத்தையும் 14 ஆண்டுகளில் அடுத்தடுத்து தீர்த்துக் கட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோழிக்கோடு மாவட்டம் கூடத்தை என்ற ஊரைச் சேர்ந்த அன்னம்மா என்பவர் 2002ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.
6 ஆண்டுகள் கழித்து அவரது கணவரான டாம் தாமஸ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவர்களது மகனான ராய் தாமஸ், அன்னம்மாவின் சகோதரர் மாத்தீவ், சிலி என்ற இளம்பெண், அவரது ஒரு வயது குழந்தை என மரணப் பட்டியல் நீண்டது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடந்த உயிரிழப்பால், குடும்பத்தினர் யாருக்கும் சந்தேகம் எழவில்லை.

ஆனால் ராய் தாமஸின் மனைவியான ஜாலி, சிலி என்ற பெண்ணின் கணவர் சாஜூவை மணந்து கொண்டதுடன், குடும்பச் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதால், அவர் மீது சந்தேகம் எழுந்தது. குற்றப்பிரிவு போலீசாரை திணறடித்த இந்த வழக்கில் ஜாலியைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது திடுக்கிடும் தொடர் கொலைச் சம்பவத்தின் பின்னணி அம்பலமானது.

சாஜூவை மணந்து கொள்வதற்காகவும், குடும்ப சொத்துக்காகவும் இவ்வளவு கொலைகள் செய்ததை 47 வயதான ஜாலி ஒப்புக் கொண்டார். இதை அடுத்து அவரையும், சாஜூ உள்ளிட்ட இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அனைவருக்கும் உணவில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்ததை ஜாலி ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள ஜாலியின் மகன் ரோமோ ராய், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

[…]

4 பேர் சுட்டுக் கொலை
இந்தியா

பாஜக பிரமுகர் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் சுட்டுக் கொலை

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக பிரமுகர் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேரை மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் ரவீந்திர காராத். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த போது, மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ரவீந்திர காரத், அவரது சகோதரர் சுனில், மகன்கள் பிரேம்சாகர் மற்றும் ரோகித், மேலும் கசாரே என்பவர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக குற்றுயிரும், குலையுயிருமாக கிடந்தவர்களை மீட்ட காவல்துறையினர், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிய மூன்று பேரும், காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

[…]

முறைகேடு விவகாரம்
இந்தியா

பிஎம்சி வங்கியில் ரூ. 4,355 கோடி முறைகேடு விவகாரம் - ஹெச்டிஐஎல் நிறுவன தலைவருக்கு சொந்தமான விமானம் பறிமுதல்

பிஎம்சி வங்கி முறைகேடு தொடர்பாக ஹெச்டிஐஎல் நிறுவன தலைவருக்கு சொந்தமான விமானம் மற்றும் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட பிஎம்சி வங்கியில் சுமார் 21 ஆயிரம் போலி கணக்குகள் மூலமாக 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. பிஎம்சி வங்கி முறைகேட்டில் ஆதாயம் அடைந்ததாக கூறப்படும் ஹெச்டிஐஎல் கட்டுமான நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ராகேஷ் வதாவன் மற்றும் அவரது மகன் சரங் வதாவன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

மும்பையில் உள்ள ஹெச்டிஐஎல் நிறுவன தலைமை செயலகம் மற்றும் ராகேஷ் வதாவனுக்குச் சொந்தமான இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்று, உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில், ஹெச்டிஐஎல் நிறுவன தலைவர் ராகேஷ் வதாவனுக்கு சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட பாம்பார்டியர் சேலஞ்சர்- 300 ரக விமானம் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் உள்ளிட்ட 60 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் அமலாக்க துறையால் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹெச்டிஐஎல் நிறுவனத்துடன் தொடர்புடைய 18 நிறுவனங்கள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது.

[…]

ரூ.8 லட்சம் கொள்ளை
இந்தியா

சில நிமிடங்களில் அரங்கேறிய வங்கிக் கொள்ளைச் சமபவம்; ரூ.8 லட்சம் கொள்ளை

பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் வங்கிக் கொள்ளை தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

முசாஃபர்பூரின் கோபர்சஹி என்ற இடத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் திடீரென நுழைந்த முகமூடி அணிந்த 6 கொள்ளையர்கள் காவலாளியை சிறைப் பிடித்ததோடு அவரது துப்பாக்கியையும் பறித்தனர்.

அதனைத் தொடர்ந்து வங்கியின் கவுன்ட்டர்களில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டு தப்பியோடினர். அந்த நேரத்தில் வங்கியில் 10க்கும் மேற்பட்ட ஊழியர்களும், சில வாடிக்கையாளர்களும் இருந்தனர். மொத்தமாக 8 லட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.

கொள்ளையர்களில் சிறுவர்களும் இருந்ததாக அவர் கூறியுள்ள நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்

[…]

ஆசிரியர் சஸ்பெண்ட்
இந்தியா

மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறையில் புகைப்பிடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் புகைப்பிடிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மஹ்முதாபாத் நகரில் தொடக்கப் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் புகைபிடிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. வகுப்பறையில் இருந்த ஒருவரால் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் இணையதளத்தில் வெளியானதை அடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடியோவின் நம்பகத் தன்மையை தாங்கள் ஆய்வு செய்து வந்ததாகவும், நடந்த சம்பவம் உண்மையானது தான் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தொடர்புடைய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்

[…]

தங்க பிஸ்கட்கள்
இந்தியா

ரூ.1.84 கோடி வெளிநாட்டு தங்க பிஸ்கட்கள் கடத்தி வந்த விமான நிறுவன அதிகாரி

ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 1 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு தங்க பிஸ்கட்கள் வைத்திருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பிடிபட்டார். 

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணி ஒருவர் வெளிநாட்டு தங்க பிஸ்கட்களை கடத்தி வருவதாக  வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வெளிநாட்டு முனையத்திலிருந்து வெளியேற முயன்ற, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் சேவை பிரிவு அதிகாரியை, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவரது உடமைகளை சோதனையிட்டபோது, வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய 2 பாக்கெட்கள் இருந்தன. அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தபோது 4,891 கிராம் எடையிலான 42 தங்க பிஸ்கட்கள் இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது.

சுமார் 1 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரித்ததில், துபாயிலிருந்து விமானத்தில் வந்த பயணிகள் இருவர் அந்த தங்க பிஸ்கட்களை வழங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.

[…]

பாதி மொட்டை இளைஞர்
இந்தியா

இராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே..!! சோதனையில் சிக்கிய பாதி மொட்டை இளைஞர்

சூர்யா நடித்த அயன் திரைப்பட பாணியில் போலி முடி எனப்படும் விக்கிற்குள் ஒரு கிலோ தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்த நபர், கொச்சி விமான நிலையத்தில் பிடிபட்டார்.

சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக வெள்ளிக்கிழமை அன்று கொச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு இளைஞரின் தலை வித்தியாசமாகத் தென்படவே, அவரை அழைத்து விசாரித்த அதிகாரிகள், சோதனை செய்தனர்.

சோதனையில், அந்த இளைஞரின் விக்கிற்குள் ஒரு கிலோ தங்கக் கட்டி இருந்தது. தங்கக் கட்டியை மறைத்து வைப்பதற்கு ஏதுவாக, தலையின் நடுப்பகுதியில் அந்த இளைஞர் மொட்டை அடித்திருந்தார்.

அந்த இளைஞர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த நவ்சாத் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கிலோ தங்கக் கட்டியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்,

[…]

சென்னை
இந்தியா

அசுத்தமான ரயில் நிலையங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை..!!!

இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமாக உள்ள ரயில் நிலையங்களின் பட்டியலில் சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் முதலிடத்தையும், கிண்டி ரயில் நிலையம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.

இந்திய ரயில்வேத்துறை நாட்டிலேயே மிகவும் தூய்மையாக உள்ள பத்து ரயில் நிலையங்களின் பட்டியலையும், மிகவும் அசுத்தமாக உள்ள 10 ரயில் நிலையங்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது. ரயில்வேதுறை அமைச்சகம் தூய்மை இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. எனினும் தூய்மை என்பது சீராக இல்லை.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள 720 ரயில் நிலையங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி, தூய்மையான ரயில் நிலையங்களில் முதல் பத்து இடங்களை பிடித்த ரயில் நிலையங்களையும் மிகவும் அசுத்தமான பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள ரயில்நிலையங்களையும் ரயில்வே அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.

இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் முதலிடத்தையும் ஜோத்பூர் இரண்டாவது இடத்தையும் துர்காபுரா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்துமுறையே, அடுத்தடுத்த இடங்களை ஜம்முதாவி, காந்தி நகர், சூரத்கர், விஜயவாடா,உதய்பூர் நகரம், அஜ்மீர், ஹரித்வார் ஆகிய ரயில் நிலையங்கள் பிடித்துள்ளன. முதல்பத்து இடங்களில் ராஜஸ்தானில்மட்டும் 7 ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அசுத்தமாகக் காணப்படும் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தமிழக ரயில் நிலையங்களே 6 இடங்களைப் பெற்றுள்ளன.சென்னை பெருங்களத்தூர் முதலிடத்தையும், கிண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து முறையே, டெல்லி சடார் பஜார், மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டைச்சேர்ந்த வேளச்சேரி,கூடுவாஞ்சேரி.சிங்கப்பெருமாள் கோவில் ஆகியவையும் கேரள மாமிலம் ஒட்டப்பாலம், தமிழகத்தின் பழவந்தாங்கல், பீகாரைச் சேர்ந்த அராரியாகோர்ட், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குர்ஜா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

[…]

ஆர்கேஎஸ் பதாரியா
இந்தியா

காஷ்மீரில் நமது சொந்த ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு - ஆர்கேஎஸ் பதாரியா

இந்திய வான் பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டியடித்த போது, நமது சொந்த ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது மிகப்பெரிய தவறு என்று விமானப்படையின் புதிய தளபதி ஆர்கேஎஸ் பதாரியா கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய விமானப் படை எத்தகைய அவசர சூழ்நிலையிலும் எதிர்கொள்ளும் தயாரிப்போடு உள்ளது எனக் கூறினார். பாலக்கோடு தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை விமானப்படை ஓராண்டில் நிகழ்த்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, நமது எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காமில், தரையிலிருந்து பாய்ந்து சென்று விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையால் இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அது நமது பக்கத்தில் நடந்த மிகப்பெரிய தவறு என்றும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் பதாரியா கூறினார்.

தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமானப்படை தளபதி தெரிவித்தார். ஏற்கெனவே 2 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக, பாலக்கோடு தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளையும் விமானப்படை வெளியிட்டது. 

[…]

பிளாஸ்டிக் கழிவுகளாலான இருக்கைகள்
இந்தியா

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளாலான இருக்கைகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மும்பையிலுள்ள ரயில் நிலையத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வரும் ரயில்வே நிர்வாகம், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு ரயில்வே நிர்வாகம், பிஸ்லரி நிறுவனத்துடன் இணைந்து ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

சுமார் 15 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது சுமார் 109 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் முயற்சிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, பிஸ்லரி நிறுவனம் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன 3 இருக்கைகளை, மும்பை சர்ச் கேட் ரயில்நிலையத்தில் அமைத்துள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது சேகரிக்கப்பட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டுள்ள இந்த இருக்கைகள், ஒவ்வொன்றுக்கும் தலா 40 முதல் 50 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த இருக்கைகள் மிகவும் உறுதியானவை எனவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலில் சிறிய துண்டுகளாக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து உருக்கப்பட்டு, பின்னர் குளிர்விக்கப்படுகின்றன. தொடர்ந்து அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு, அட்டைகளாக தயாராகும் பிளாஸ்டிக் கழிவுகள் வேண்டிய அளவில் வெட்டி எடுக்கப்பட்டு, இருக்கைகளாக வடிவமைக்கப்படுகின்றன.

[…]

அரசு அதிகாரியை காலணியால் தாக்கிய பெண்
இந்தியா

அரசு அதிகாரியை காலணியால் தாக்கிய பெண்

மத்தியப் பிரதேசத்தில் அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் அரசு அதிகாரியை காலணியால் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், முறையாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி பெண்கள் சிலர் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளும் தவறான பயனாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி முறையிட்டனர்.

அவர்களின் குற்றச்சாட்டின் மீது பெரிதாக அக்கறை காட்டாத அரசு அதிகாரிகள் அங்கிருந்து செல்ல முற்படவே, வாக்குவாதத்தில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த பெண்ணொருவர் ஆத்திரமடைந்து அதிகாரியின் பின்னாலேயே சென்று காலணியால் அவரை தாக்கினார். இந்த சம்பவத்தால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பெண்ணொருவர் அரசு அதிகாரியை காலணியால் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

[…]

தம்பதி மேற்கொண்ட முயற்சி
இந்தியா

வீட்டு பணிப்பெண்ணின் பொருளாதார சுமையை போக்க தம்பதி மேற்கொண்ட முயற்சி

மும்பையில், வீட்டு பணிப்பெண்ணின் பொருளாதார சுமையை போக்க, சாலையோரம் சிற்றுண்டி கடை நடத்தி வரும் எம்.பி.ஏ பட்டதாரி தம்பதிக்கு வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.

காந்தி ஜெயந்தி தினத்தன்று, மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் உணவு தேடி சுற்றித்திரிந்த தீபாலி பாத்தியா என்ற இளம்பெண், கண்டிவாலி நிலையம் வெளியே சாலையோர சிற்றுண்டி கடையை பார்த்து அங்கு சென்றார்.

அங்கிருந்த போகா, உப்மா, பரந்தாஸ், இட்லி உள்ளிட்ட உணவுகளை ருசிபார்த்த அவர், கடையை நடத்திக்கொண்டிருந்த இளம் தம்பதிகளான அஷ்வினி ஷெனாய் ஷா மற்றும் அவரது கணவருடன் பேச்சுக்கொடுத்துள்ளார்.

கடை குறித்து பாத்தியா கேட்டபோது, அந்த தம்பதி தாங்கள் எம்.பி.ஏ பட்டதாரி என்றும், பக்கவாதத்தால் அவதிப்படும் தங்களது வீட்டு முதிய பணிப்பெண்ணுக்காக இந்த கடையை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த உணவுகளை பணிப்பெண்ணின் கணவர் தான் செய்து கொடுப்பதாகவும், அவர்களது பொருளாதார சுமையை குறைக்கவே இந்த கடையை காலை நேரம் மட்டும் நடத்துவதாகவும் கூறியுள்ளனர்.

இதைகேட்டு நெகிழ்ந்த பாத்தியா, எம்பிஏ தம்பதியின் இந்த செயலை ‘சூப்பர் ஹீரோ’ என பாராட்டி பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார். இதனை சுமார் 12,000 பேர் லைக் செய்திருந்த நிலையில், பலரும் தம்பதியின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

[…]

பெட்ரோல், டீசல் விலை
இந்தியா

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வு

ட்ட

பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்து மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒரு லிட்டர்  80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் குறைந்தபட்சமாக பெட்ரோல் ஒரு லிட்டர் 74 ரூபாய் 34 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இதே போல் சென்னை, கொல்கத்தா, நொய்டா, உள்ளி

அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. புதன்கிழமை தவிர்த்து தொடர்ந்து 10வது நாளாக விலை உயர்ந்துள்ளது.

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாயாகவும், டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 55 காசுகளாகவும் உள்ளது. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் 74 ரூபாய் 34 காசுகளாக அதிகரித்துள்ள நிலையில், டீசல் விலையில் மாற்றமின்றி 67 ரூபாய் 14 காசுகளாக உள்ளது.

சென்னையை பொறுத்த வரை ஒரு லிட்டர் பெட்ரோல் 77 ரூபாய் 28 காசுகளுக்கும், டீசல் 71 ரூபாய் 09 காசுகளுக்கும் விற்பனையாகிறது. நொய்டாவில் வியாழனன்று 75 ரூபாய் 66 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை வெள்ளிக்கிழமை 75 ரூபாய் 77 காசுகளாக அதிகரித்துள்ளது.

அதே போல் வியாழனன்று 67 ரூபாய் 46 காசுகளாக இருந்த டீசல் விலை, தற்போது 67 ரூபாய் 56 காசுகளாக உள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 77 ரூபாய் 03 காசுகளாகவும், டீசல் விலை 69 ரூபாய் 66 காசுகளாகவும் உள்ளது.

சவுதி அரேபியாவின் பிரதான எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களால், அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி 60 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டது. அதன் தாக்கத்தால் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலை அதிகரித்ததன் காரணமாகவே, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

[…]

பாதுகாப்பு
இந்தியா

இந்தியாவில் உள்ள இஸ்ரேலியர்கள், யூதர்களை தாக்கத் திட்டம்

இந்தியாவில் உள்ள யூதர்கள் மற்றும் இஸ்ரேல் நாட்டினர் மீது பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டு உளவு நிறுவனங்களிடம் இருந்த இதுகுறித்து தகவல்கள் வந்துள்ளதாக இந்திய உளவுத்துறை கூறியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு இஸ்ரேல் அரசு ஆதரவு தெரிவித்ததை அடுத்தே பயங்கரவாதிகள், தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.   

செப்டம்பர் முதல்  அக்டோபர் வரையிலான காலகட்டத்தில்  வருகிற 29-ஆம் தேதி முதல் அக்டோபர் 1 வரை யூதர்களின் புத்தாண்டும், அக்டோபர் 8,9 ஆகிய தேதிகளில் யோம் கிப்பூர் என்ற விழாவும்,அக்டோபர் 13 முதல் 22-ஆம் தேதி வரை சுகோட் என்ற விழாவும் யூதர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள யூதர்களும், இஸ்ரேல் நாட்டினரும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் இந்த நாட்களில் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம், யூதர்கள் நடத்தும் ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் யூதர்கள் அதிகம் கூடும் இடங்களில் அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தக் கூடுமென உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டினர் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

[…]

மத்திய அரசு
இந்தியா

மத்திய அரசின் "NEAT" என்ற புதிய திட்டம் அறிமுகம்

கல்வித் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசுடன் இணைந்து செயல்பட முன்வருமாறு தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கல்வியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் தனித்திறனை மேம்படுத்தும் நோக்கில் "NEAT" ( National Educational Alliance Technology )என்ற புதிய திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தொடங்கியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலமாக, கற்றல் மற்றும் கற்பித்தலில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தி சிறப்பான கல்வியை வழங்கி வரும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், NEAT திட்டத்தின் கீழ் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை (MHRD ) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ( AICTE ) உடன் இணைந்து செயல்பட முன்வருமாறு தனியார் கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

விருப்பம் உள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் www.aicte-india.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 20 வரை தங்கள் விருப்பத்தை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையதளத்தில் விருப்பத்தை பதிவு செய்தவுடன் விரிவான தகவல்கள் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

[…]

பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் எச்சரிக்கை..!!
இந்தியா

எல்லையை தாண்டினால் உடலில் உயிர் இருக்காது..!! பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் எச்சரிக்கை..!!

இந்திய எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 10 ஆம் தேதி நடந்த அஜ்பூர் சம்பவமே இதற்கு சாட்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து, இந்திய எல்லையில் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது, இந்தியாவை பழிதீர்க்கும் நோக்கில்  இரவு பகல் பாராமல் இந்திய இராணுவ துருப்புகள் மீது பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துவதும். எல்லைக்குள் நுழைந்து இந்தியாவை ரத்தக்களரி ஆக்கியே தீரவேண்டும் என  தீவிரவாதிகள் மறு பக்கம் துடிப்பதும்தான் இதற்கு காரணம். இப்படி, பாகிஸ்தான் இராணுவத்தின் அத்துமீறல்கள் ஒருபக்கம்,   தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் மறுபக்கம் என எல்லையில் கண்கொத்தி பாம்பாக இருந்து நாட்டை காத்து வருகிறது இந்திய ராணுவம். 

நாட்டை காக்கும் இந்த போராட்டத்தில் இந்திய வீரர்கள் பலர் தங்களின் இன்னுயிர்களை ஈந்துவருகின்றனர். அதே நேரத்தில் எதிரிநாட்டு படைக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து பாடம் புகட்டிவருகிறது.  இருந்தாலும் பாகிஸ்தானின் அத்துமீறல்கள், சண்டித்தனங்கள்  ஓய்ந்தபாடில்லை. இந் நிலையில் கடந்த 10 தேதி  எல்லைக்கோட்டுப்பகுதியில் திடீரென ஊடுருவ முயன்ற  இரண்டு பாகிஸ்தான் இராணுவ வீரர்களை இந்திய இராணவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.இந்திய எல்லைக்கோட்டில் உயிரிழந்த அவர்களின் உடல்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் வெள்ளைக்கொடியேந்தியபடி வந்து  கயிறிகட்டி இழுத்து சென்றனர். 

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தினரை இந்திய இராணுவம் அநியாயமாக சுட்டுக்கொன்றுவிட்டது என கூப்பாடு போட்டது பாகிஸ்தான்.  அதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது, அதில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பேர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே ஒப்பந்தத்தை கடைபிடித்து எல்லையில் அமைதியை நிலைநாட்டுமாறு பாகிஸ்தானிடம் இந்தியா பல முறை வலியுறுத்திவருகிறது.

ஆனால் அந்த ஒப்பந்தங்களை எல்லாம் மீறி  இதுவரை இந்தியாவின் மீது 2000க்கும் அதிகமான முறை  பாக் தாக்குதல் நடத்தி உள்ளது. என இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இதுவரை பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல்களால்  21 இந்திய இராணுவ வீரர்கள்  உயிரிழந்துள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எல்லை பகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் மட்டுமே இந்தியா ஈடுபடுவதாக வெளியுறவுத்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

[…]

பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு
இந்தியா

பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு - எப்போது விண்ணப்பிக்கலாம் ?

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12 ஆயிரத்து 75 ((12,075)) எழுத்தர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு மையம் வெளியிட்டுள்ளது. 

அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 17 பொதுத் துறை வங்கிகளுக்கு நாடு முழுவதும் உள்ள கிளைகளில் 12 ஆயிரத்து 75 எழுத்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆந்திரா வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, இந்தியன் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா போன்ற பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான எழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகம், மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள பொதுத்துறை வங்கி கிளைகளில் அதிகமான எண்ணிக்கையில் எழுத்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நாளை (செப். 17) முதல் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு வரும் டிசம்பர் மாதம் 7, 8, 14 மற்றும் 21 ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெயின் தேர்வு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி நடைபெறும் என்றும், இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், 13 மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எழுத்தர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அவரவர் மாநில மொழியிலேயோ, எந்த மாநிலத்தில் இருந்து விண்ணப்பிக்கிறார்களோ அந்த மாநில மொழியிலேயோ அல்லது இந்தி அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

[…]

திட்டமிடாத சந்திப்பு
இந்தியா

ஹூஸ்டனில் செப்.22ம் தேதி பிரதமர் மோடி -டிரம்ப் திட்டமிடாத சந்திப்பு

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது, 22ம் தேதி ஹூஸ்டனில் நடைபெறும் ஹவுடி மோடி என்ற நிகழ்ச்சியில் எதிர்பாராத விருந்தினராக அதிபர் டிரம்ப் பங்கேற்க இருப்பதை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி ஹர்ஷ் வரதன் சிருங்கலா, இரு தலைவர்களும் ஒரே மேடையில் சந்திக்க இருப்பது இருவரிடையே உள்ள நெருக்கமான தனிப்பட்ட நட்பையும் இருநாடுகளுக்கு இடையிலான இணக்கமான சூழலையும் வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.

தனித்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர், வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த எதிர்பாராத சந்திப்பு இருநாடுகளுக்கும் பலவித பயன்களை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

[…]

ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள்
இந்தியா

ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் 16 பேர் பணி நீக்கம்

ஒடிசா மாநிலத்தில் ஊழல் வழக்குகளில் ஈடுபட்டு தண்டனை பெற்ற 16 அதிகாரிகளை ஒரே நாளில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்

இதுகுறித்து ஒடிசா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றதையடுத்து ஒரு நாளில் மட்டும் 16 அரசு அதிகாரிகளை  பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

4 பொறியாளர்கள், 5 தலைமை ஆசிரியர்கள், 2 வருவாய் ஆய்வாளர்கள், 1 மருந்தாளர், அமீன், பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மற்றும் 2 எழுத்தர்கள் உட்பட 16 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின்னர் அரசு ஊழியர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு மாதத்தில் இதுபோன்று 37 அதிகாரிகள்  பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், 6 ஊழியர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுப்பணிகளில் இருப்போர் லஞ்சம் உள்ளிட்ட முறைகேடான காரியங்களில் ஈடுபடுவதை தடுக்க இத்தண்டனை ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

 மரக்கன்றுகள் நடும் பணியை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டு நட்டார்
இந்தியா

புதுச்சேரி பாகூர் ஏரியைச்சுற்றிலும மரக்கன்றுகள் நடும் பணியை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டு நட்டார்

புதுச்சேரியின் மிகப்பெரிய பாகூர் ஏரியைச்சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் பணியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பார்வையிட்டு மரக்கன்று நட்டார்.

புதுச்சேரியின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் பாகூர் ஏரியைச் சுற்றிலும் 3 புள்ளி 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தனது 234 வது வாராந்திர ஆய்வாக இன்று அவர் பாகூர் ஏரிக்கு வந்து மரக்கன்று நடும் பணியை பார்வையிட்டு மரக்கன்று நட்டார்.
breath

தொடர்ந்து மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருடன் பேரணியாக சென்று, பாகூர் ஏரி உருவாக காரணமான பங்காரி மற்றும் சிங்காரி ஆகியோருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

அப்போது இந்த ஏரி சுற்றுலா தளமாக மேம்படுத்தப்படும் என கிரண்பேடி தெரிவித்தார்.

நிகழ்ச்சியின்போது அவரது ஐ போன் மாயமானதால், ஒலிபெருக்கி மூலம் கண்டு பிடித்து தர கூறிய நிலையில் சிறிது நேரத்தில் உடைந்த நிலையில் போன் கண்டெடுக்கப்பட்டது.

[…]

இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்
இந்தியா

இந்திய ராணுவ நிலைகள், கிராமங்கள் மீது பாக். படையினர் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச்சில் எல்லைக் கட்டுப்பாடுகோடு பகுதியில் இருக்கும் இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாலகோட், மாங்கோட்  பகுதிகளில் காலை 10 மணியளவில் பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அங்குள்ள ராணுவ நிலைகளையும் கிராமங்களையும் குறிவைத்து சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசி தாக்கியதுடன், துப்பாக்கிகளாலும் சுட்டனர். இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக கடைசியாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தாக்குதலில் கிராம மக்கள் தரப்பில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று பூஞ்ச் காவல்துறை இணை ஆணையர் ராகுல் யாதவ் தெரிவித்துள்ளார்.

[…]

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார்
இந்தியா

முன்னாள் அமைச்சர் சிவக்குமார் பல கோடி ரூபாய் வரை முறையற்ற பரிவர்த்தனை செய்ததாக குற்றசாட்டு

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமாக 317 வங்கிக் கணக்குகள் இருப்பதாகவும், அவற்றின் மூலம் 200 கோடி ரூபாய் வரை முறையற்ற பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

டி.கே.சிவக்குமாருக்கு எதிரான பணமோசடி மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜரான சிவக்குமாரை, கடந்த 3ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை கைது செய்தது. அவரிடமும், அவரது மகள் ஐஸ்வர்யாவிடமும் வியாழக்கிழமை அன்று அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.

தந்தையுடன் சேர்ந்து சிங்கப்பூர் சென்ற போது ஹவாலா பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததா என்று அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை, டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

அதில், சிவக்குமாருக்கும், அவரது உறவினர்களுக்கும் சொந்தமாக 20 வங்கிகளில் 317 கணக்குகள் இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. 800 கோடி ரூபாய் அளவுக்கு பினாமி சொத்துகள் இருப்பதாகவும் 200 கோடி ரூபாய் அளவுக்கு முறையற்ற பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.

எனவே சிவக்குமாரை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அப்போது, சிவக்குமாரின் உடல்நலனைக் காரணம் காட்டி அமலாக்கத்துறையின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹார், சிவக்குமாரின் உடல்நலனை கவனித்துக் கொள்ள அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டதுடன், 5 நாள் காவலில் விசாரிக்கவும் அனுமதி அளித்தார்.

[…]

அவதிப்படும் சுற்றுலாப்பயணிகள்...
இந்தியா

ஆன்லைனில் புக் செய்துவிட்டு... அவதிப்படும் சுற்றுலாப்பயணிகள்...

மூணாறுக்கு உட்படாத பகுதிகளிலும் மூணாறு என பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகைகளை பார்த்து ஏமாறும் சுற்றுலாப்பயணிகள். ஆன்லைனில் முன்பதிவு செய்து, சுமார் ஐம்பது கிலோ மீட்டருக்கு அப்பால் தங்கி, அவதிக்குள்ளாவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தென்னகத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது மூணாறு. அழகிய மலைகளுக்கிடையே தேயிலை தோட்டங்களின் நடுவில் வெள்ளியை உருக்கி ஊற்றினால் போல் கொட்டும் நீர்வீழ்ச்சிகள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், வரையாடுகள், காட்டெருமைகள், காட்டு யானைகள் என வனமும், வனப்பும் சூழ்ந்த பகுதியை கண்டுகளிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

சுற்றுலாத்தலங்களுக்கு வந்தபின் தங்கும் விடுதிகளை தேடிய காலம் போய், தற்போது ஆன்லைனில் விடுதிகளை புக் செய்துவிட்டு வரும் சுற்றுலாப்பயணிகள்தான் அதிகம். மூணாறு அருகே குறைந்த விலையில், சொகுசான தங்கும் விடுதிகள் என பதிவிட்டுள்ளதைப்பார்த்து, அதன் உண்மை தன்மை குறித்து அறியாமல் சுற்றுலாப்பயணிகள் அறைகளைப் பதிவு செய்து விடுகின்றனர்.

ஆனால், சுற்றுலாத்தலத்திற்கு வந்தபின்புதான் தெரிகிறது மூணாறுக்கும், தாங்கள் பதிவு செய்துள்ள விடுதிக்கும் சுமார் 50 முதல் 60 கிலோ மீட்டர் தூரம் இருப்பது... அழகிய கோடைவாசஸ்தலத்தை கண்டுகளிக்க நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு, இது பெரும் ஏமாற்றததை தருவதுடன் மனஉளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது....

அழகழகான மூணாறின் புகைப்படங்களை தனியார் சொகுசு விடுதிகள் ஆன்லைனில் பதிவிட்டுள்ளதை பார்த்து ஏமாறும் சுற்றுலாப்பயணிகள், அந்த விடுதிகளிலேயே தங்க முன்பதிவு செய்து விடுகின்றனர். இதில், வருத்தம் என்னவென்றால் தங்கியிருக்கும் இடமே மூணாறு என நம்பி, ஒரிஜினல் மூணாறை பார்க்காமலேயே பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் திரும்பிச் சென்ற கதையும் உண்டு.

சில தனியார் சொகுசு விடுதிகள் செய்யும் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றப்படுவதுடன், மூணாறில் சுற்றுலாப்பயணிகளை நம்பியே வாழ்க்கை நடத்தி வரும் கால்டாக்சி ஓட்டுநர்கள், சிறு, குறு தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மூணாறுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் தங்கும் விடுதிகளுக்கு முன்பதிவு செய்யும் முன்பு, அதன் உண்மை தன்மை குறித்து ஆராய வேண்டும் என்றும் ஆராய தவறினால் பல கிலோ மீட்டர் கடந்து வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றப்படுவதுடன், பரிதவிப்பு மற்றும் பண விரயமுமே மிச்சம் என அப்பகுதியினர் எச்சரித்துள்ளனர்.

மூணாறு பகுதிக்கு உட்படாத குறிப்பிட்ட பகுதியின் பெயர்களை சிறிய எழுத்திலும், மூணாறை பெரிய எழுத்திலும் பொறித்துள்ள தனியார் விடுதிகள் மற்றும் கடைகள் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

[…]

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர்கள் போராட்டம்
இந்தியா

வேலைவாய்ப்பில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞர்கள் போராட்டம்

மேற்குவங்கத்தில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்களை போலீசார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டினர்.

மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதாகக் குற்றம்சாட்டி ஹவுராவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.

தடையை மீறி முன்னேறிச் சென்ற அவர்களை போலீசார் தடுப்புக்களை அமைத்து தடுத்து நிறுத்தினர். இருப்பினும் முன்னேறியதால், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களைக் கலைத்தனர். 

[…]

இந்திய பொருளாதார வளர்ச்சி
இந்தியா

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத மந்தநிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சி

நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஒழுங்குமுறை விதிகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் நீடிக்கும் பலவீன நிலைமை காரணமாகவே, இந்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட மந்தமாக இருப்பதாக ஐஎம்எஃப் கூறியுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில், பொருளாதார வளர்ச்சி 7 ஆண்டுகளில் இல்லாத மந்தநிலையை அடைந்து 5 சதவீதமாக இருந்தது.

முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தது. இதற்கு முன்னர் 2012-2013 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9 சதவீதமாக இருந்ததே, மிகவும் குறைவான பொருளாதார வளர்ச்சியாகும்.

உற்பத்தித் துறையிலும், வேளாண் உற்பத்தியிலும் ஏற்பட்ட சரிவே சமீபத்திய மந்தநிலைக்கு காரணம் என மத்திய புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத்துறை கூறியிருந்தது.

இந்நிலையில், சமீபத்திய இந்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட பலவீனமாக  இருப்பதாக ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச செலாவணி நிதியமும் கூறியுள்ளது.

புதிய புள்ளிவிவரங்கள் இனி வரப்பெறும் என்றாலும், சமீபத்திய மந்த நிலைக்கு என்ன காரணம் என்பதையும் ஐஎம்எஃப் விளக்கியுள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஎம்எஃப் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ்  நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஒழுங்குமுறை விதிகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, வங்கியல்லாத சில நிதி நிறுவனங்களில் நீடிக்கும் பலவீன நிலைமை காரணமாகவே, எதிர்பார்த்ததைவிட இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

நடப்பு நிதியாண்டுக்கான இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என முன்னர் ஐஎம்எஃப் கணித்திருந்தது.

ஆனால், உள்நாட்டு தேவை எதிர்பார்த்ததைவிட பலவீனமாக தோன்றுவதால், இந்த இரு நிதியாண்டுகளுக்குமான இந்திய பொருளாதார வளர்ச்சி விகித முன்கணிப்பை 0.3 சதவீதம் அளவுக்கு ஐஎம்எஃப் குறைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.2 சதவீதமாகவும் இருக்கும் என ஐஎம்ஃப் தெரிவித்துள்ளது.

[…]

இந்தியா கேட் சீரமைப்பு
இந்தியா

நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் சீரமைப்பு

டெல்லியில் உள்ள சிறப்பு மிக்க நாடாளுமன்ற கட்டட வளாகம், நார்த் பிளாக், சவுத் பிளாக், குடியரசுத் தலைவர் மாளிகை, ராஜபத், இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களை புதுப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆங்கிலேயர் காலங்களில் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டடத்தில் தற்போது துறைகள் அதிகரித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் இடப் பற்றாக்குறை, வாகன நிறுத்துமிடத்திற்கு நெரிசல் போன்ற பிரச்சினைகள் உள்ளன.இதையடுத்து நாடாளுமன்ற வளாக கட்டடத்தை மறுசீரமைக்க அல்லது புதிய கட்டடத்தை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தப் பணி அடுத்த ஆண்டு துவங்கி 2022ல்  உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை செயலக அலுவலகங்களுக்கான புதிய கட்டடம் 2024ல் முடிவடையும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணிகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செய்து வருகிறது.

புதிய கட்டடம் கட்டவும் தற்போதுள்ள கட்டடத்தை மறுசீரமைப்பு செய்யவும் சர்வதேச அளவிலான கட்டட வடிவமைப்பு நிறுவனங்களிடம் திட்ட அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்ட தொடரை புதிய கட்டடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

[…]

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு சோதனை
இந்தியா

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு சோதனை - 3500 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கின..!

நாடு முழுவதும் 336 இடங்களில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு சோதனைகளில் 3500 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

போலி இன்வாய்ஸ்கள் மூலம் ஏற்றுமதி செய்தது குறித்த புகார்கள் எழுந்ததை அடுத்து நடைபெற்ற அதிரடி சோதனையில் மேலும் 450 கோடி ரூபாய் அளவுக்கு வரி செலுத்திய தொகையை திரும்பப்பெறுவதற்கான போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரிசெலுத்தாமல் ஏய்ப்போரை கண்காணித்து வந்த அதிகாரிகள் நேற்று சென்னை உள்பட முக்கிய நகரங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். நுண்ணறிவுப் பிரிவு, வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 1200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

[…]

ப.சிதம்பரம்
இந்தியா

சிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவு

ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. கடந்த வியாழக்கிழைமையே ப.சிதம்பரம் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வளவு தாமதமாக ஜாமீன் கோரி, நீதிமன்றத்தை அணுகியிருப்பது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

வாரதி இறுதி நாட்கள், அதன் பிறகு விடுமுறை காரணமாக தாமதமாக நீதிமன்றத்தை அணுகியிருப்பதாக சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சிதம்பரம் தரப்பு திரும்பப் பெற்றது.

ஜாமீன் கோரிய வழக்கில், ஒரு வார காலத்திற்குள் சிபிஐ விசாரணை நிலையின் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

[…]

தெலுங்கு தேசம் முகாம்களில் மக்கள் தஞ்சம்
இந்தியா

ஒய்.எஸ்.ஆர் கட்சியினர் தாக்குவதாகக் கூறி தெலுங்கு தேசம் முகாம்களில் மக்கள் தஞ்சம்

ந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் தங்களைத் தாக்குவதாகக் கூறி தெலுங்கு தேசம் கட்சியின் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 65 பேரை போலீசார் அவரவர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நரசாபுரம், ஆத்மக்கூறு, குரஜாலா, பல்நாடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்துவதாகக் கூறி கடந்த நான்கு தினங்களாக தெலுங்கு தேச கட்சி சார்பில் அமைக்கப்பட்ட முகாமில் அவர்கள் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆத்மக்கூறு உள்ளிட்ட கிராமத்திற்கு செல்ல இருந்த நிலையில் அவரை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். இதற்கிடையே தெலுங்கு தேச கட்சி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 125 பேரும் போலீசார் பேச்சுவார்த்தை செய்து 65 பேரை போலீஸ் பாதுகாப்புடன் அவரவர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீதமுள்ளவர்களையும் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் சந்திரபாபு நாயுடு வரும் வரை தங்கள் ஊருக்கு செல்ல மாட்டோம் எனவும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என அவர்கள் கூறி முகாமில் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சுச்சரித்தா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குண்டூரில் பல்வேறு ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டவர்கள், போலீசார் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்ற அச்சத்தில் நாடகம் ஆடி வருவதாக கூறினார்.

தொடர்ந்து அமைதியாக உள்ள கிராமங்களில் வேண்டுமென்றே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக சந்திரபாபுநாயுடு அங்கு செல்ல இருந்ததால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் சுச்சரித்தா தெரிவித்தார்.

[…]

வங்கிக் கடன் மோசடி
இந்தியா

வங்கிக் கடன் மோசடி - இந்தியன் டெக்னோமாக் கம்பெனி சொத்துகள் பறிமுதல்

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்தியன் டெக்னோமாக் கம்பெனி என்ற நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு சொந்தமாக டெல்லியில் உள்ள வீடுகள், மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிறுவனம் வங்கியிடமிருந்து பெற்ற 6 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததால் இந்த சோதனை நடத்தப்பட்டது. இச் சோதனையின் போது 288 கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

[…]

 பிரதமர் மோடி
இந்தியா

இந்தியா-நேபாளம் இடையே, குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்கள்

இந்தியா-நேபாளம் இடையே, 69 கிலோமீட்டர் நீள குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு செல்லும் திட்டத்தை, நேபாள பிரதமருடன் இணைந்து, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், செலவைக் குறைத்து, பாதுகாப்பான முறையில் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு செல்வதற்காக, இந்தியா-நேபாளம் இடையே எல்லைப் பகுதியில் 69 கிலோமீட்டர் நீளத்திற்கு, 325 கோடி ரூபாய் செலவில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

1996ஆம் ஆண்டில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டாலும், 2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடி காத்மாண்டு சென்றபோதே, திட்டம் செயல்வடிவம் பெறத் தொடங்கியது. இந்த திட்டத்திற்கு, டெல்லியில் உள்ள ஹைதரபாத் இல்லத்தில் இருந்தபடி, பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் ஷர்மா ஒலியும் இணைந்து கடந்த ஆண்டில் அடிக்கல் நாட்டினர்.

பீகாரின் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள மோத்திஹரியில் இருந்து, பீகார் எல்லை அருகே அமைந்துள்ள, நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் உள்ள அம்லேக்-கஞ்ச் வரை பெட்ரோலியக் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இது, குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான, தெற்காசியாவின் முதல் திட்டமாகும்.

இதை பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் ஷர்மா ஒலியும் கூட்டாக தொடங்கி வைத்தனர். வீடியோ கான்பரன்ஸ் முறையில் இருவரும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். எரிசக்தித் துறை ஒத்துழைப்பிற்கான இந்த திட்டம், இந்தியா-நேபாளம் இடையேயான நெருக்கமான பிணைப்பிற்கு எடுத்துக்காட்டு என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பெட்ரோலியப் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவைக் குறைப்பதோடு, எரிசக்தி பாதுகாப்பையும் இந்த திட்டம் வழங்குவதாக அவர் கூறினார். நாடு கடந்து குழாய் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டுசெல்வதற்கான தெற்காசியாவின் முதல் திட்டம், எதிர்பார்த்த காலகட்டத்தைவிட பாதி நாட்களுக்கு முன்னரே முடிக்கப்பட்டு விட்டதாகவும், சாதனையாகக் குறிப்பிடும் வகையில் விரைந்து முடிக்கப்பட்டிருப்பதாகவும் மோடி கூறினார்.

நேபாள அரசின் ஒத்துழைப்பும், கூட்டு முயற்சியும் இன்றி இதை சாதித்திருக்க முடியாது என நேபாள பிரதமருக்கும், மோடி பாராட்டு தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு நிலநடுக்கத்திற்குப் பிறகு, நேபாளம் மேற்கொண்டு வரும் மறுகட்டுமான பணிகளில், நெருங்கிய நண்பன என்ற வகையில் இந்தியா உதவிக் கரம் நீட்டியிருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

[…]

இஸ்ரோ தகவல்
இந்தியா

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை - இஸ்ரோ

இஸ்ரோ தகவல்

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியவில்லை - இஸ்ரோ

நிலவில் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை - இஸ்ரோ

நிலவில் இருக்கும் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன - இஸ்ரோ

[…]

புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம்
இந்தியா

தெலங்கானாவின் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த தமிழிசை...!

தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற முதல் நாளிலேயே, அந்த மாநிலத்தில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தெலங்கானா மாநிலத்தில், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவையில், 12 பேர் இடம் பெற்று இருந்தனர். இந்நிலையில், ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றுக் கொண்ட நிலையில், அந்த மாநில அமைச்சரவையை, சந்திரசேகர ராவ் விரிவாக்கம் செய்தார். 

மாலை 4.30 மணியளவில் நடந்த நிகழ்ச்சியில், டி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவரும், சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி. ராமராவ், முதலமைச்சரின் மருமகனும், மூத்த டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ.வுமான டி.ஹரீஷ் ராவ், உள்ளிட்ட 6 பேருக்கு, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

[…]

பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தியா

பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்ற இளம்பெண்

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த 23 வயது இளம்பெண், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டத்தை சேர்ந்த அனுப்ரியா லக்ரா என்பவர் தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். விமானியாக வேண்டும் என்ற கனவால், இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்திய அனுப்ரியா, விமானிகளுக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்று கடந்த 2012ம் ஆண்டு புவனேஷ்வரில் உள்ள விமானிகளுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார்.

7 ஆண்டுகால பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ள அனுப்ரியா, தற்போது தனியார் விமான சேவை நிறுவனம் ஒன்றில், இணை விமானியாக பணியில் சேர்ந்துள்ளார். வெகுவிரையில் வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கவிருப்பதாகவும் அனுப்ரியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநில காவல்துறையில் ஹவில்தாராக பணிபுரியும் மரினியாஸ் லக்ராவின் மகளான அனுப்ரியா, விமானியாக வேண்டும் என்ற தனது கனவை எட்டிப்பிடித்ததோடு, பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதனிடையே சாதனை பெண்ணான அனுப்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் சாதனை படைத்துள்ள அனுப்ரியா பலருக்கும் சிறந்த எடுத்துக்காட்டு என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

[…]

லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாத இயக்கம்
இந்தியா

ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் குறி?

லஷ்கர் ஈ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள், சோபியான் வழியாக ஊடுருவி, ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்களின் முகாம்கள் மற்றும் இதர பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் மீது லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சம்பா மாவட்டத்தில் உள்ள பரி பிராமனா முகாம், ஜம்முவில் உள்ள சுஞ்வான், கலுசாக் ஆகிய ராணுவ முகாம்களை தீவிரவாதிகள் இலக்காக கொண்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோபியான் வழியாக ஊடுருவி ஜம்முவை அடைந்து பின்னர் தாக்குதல்களை மேற்கொள்வது தீவிரவாதிகளின் திட்டம் என்று உளவுத்துறை கூறியுள்ளது.

குல்மர்க்கில் கைது செய்யப்பட்ட இரு பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய கர்சார்பன் ஏவுதளத்தில் 50 தீவிரவாதிகள் காத்திருக்கும் தகவல் அம்பலமானது. மேலும் இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவுவச் செய்வதற்காக ஜோஹ்லி, பார்கி, நியூ பாத்லா  ஆகிய நிலைகளை, பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் தகவலும் உளவுததுறை தகவல்களால் உறுதி செய்யப்பட்டது.

இதுதவிர காஷ்மீரில் இயங்கி வரும் தீவிரவாதக் குழுக்களிடம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பகிர்ந்து கொண்ட தகவல்களை இந்தியா இடைமறித்துள்ளது. அந்த தகவல்கள் மூலம், காஷ்மீரில் உள்ள வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதுடன், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் திட்டம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தகவல்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இடைமறித்துக் கேட்டதாகவும், அப்போது, காஷ்மீரில் அமைதியைக் குலைக்க ஐ.எஸ்.ஐ. உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, எல்லையில் ராணுவத்தினர் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர். 

[…]

டெல்லியில் பட்டப்பகலில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் சங்கிலி பறிப்பு
இந்தியா

பட்டப்பகலில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

டெல்லியில் பட்டப்பகலில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

டெல்லி சாவ்லா (Chhawla area) பகுதியில் பெண் ஒருவர், பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். வெறிச்சோடியிருந்த தெருவில் குழந்தையின் கையை பிடித்தவாறு அந்த பெண் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் இருவர், அந்த பெண்ணை முன்னே செல்ல விட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். கொள்ளையர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், சிசிடிவிக் காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக தலைநகர் டெல்லியில் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

[…]

காஷ்மீர் நிலை குறித்து அஜித் தோவல் விளக்கம்
இந்தியா

எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கும் 230 தீவிரவாதிகள்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 230 தீவிரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அஜித் தோவல் காஷ்மீர் பகுதியில் தங்கி கள நிலவரத்தை அறிந்துவருகிறார்.

காஷ்மீரின் நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஜித் தோவல், ‘பெரும்பாலான காஷ்மீரிகள் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தீவிரவாதிகள் மூலம் பாகிஸ்தான் பிரச்னைகளை தூண்டிவிடாமல் இருப்பதற்காகத்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 370-வது என்பது சிறப்பு அந்தஸ்து. அது சிறப்பு பாகுபாடு.

[…]

கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில்
இந்தியா

கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் திடீர் ராஜினாமா

கர்நாடகத்தில் ஜனநாயகம் சமரசம் செய்யப்பட்டு விட்டதாக கூறி ஐ.ஏ.எஸ்.அதிகாரியான சசிகாந்த் செந்தில் தமது ராஜினாமாவை அரசுக்கு அளித்துள்ளார்.

தக்சின கன்னட துணை ஆணையராக பணிபுரிந்து வந்த அவர் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபரில் பதவியேற்றார்.அரசு அதிகாரியாக பணி புரிவது எனக்கு உடன்பாடாக தோன்றவில்லை, ஜனநாயக பன்முகத்தன்மை சமரசம்செய்யப்படுகிறது. வரும் நாட்கள் நமது ஜனநாயக அடிப்படைக்கே மிகப்பெரிய சவாலாக அமைய உள்ளன.

இந்நிலையில் நான் அரசுப் பணியில் இருந்து வெளியே இருக்க விரும்புகிறேன் என்று அவர் தமது ராஜினாமாவுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். இது கர்நாடக அதிகாரிகள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

[…]

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
இந்தியா

சிறையில் உறக்கமின்றி இரவைக் கழித்த ப.சிதம்பரம்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உறக்கமின்றி இரவைக் கழித்ததாக கூறப்படுகிறது.

கபில் சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட சிறந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் ப.சிதம்பரத்துக்கு சிறைவாசம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. சுமார் 600 முதல் 700 கைதிகளில் ஒருவராக திகாரில் சிறை எண் 9ல் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரும் நிலையில், அதனை அவர் சிறையில் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறையில் அவருக்கு தனி அறை, மரக்கட்டில், புத்தகம் படிக்க மேஜை நாற்காலி மேற்கத்திய கழிவறை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. சிறைக்குள் மூக்கு கண்ணாடி, மருந்துகள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர் இசட் பிரிவு பாதுகாப்பு பெற்றவர் என்பதால் அதே பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் முதல் நாளான நேற்று முன்தினம் இரவில்  சிறிதளவு ரொட்டி, பருப்பு கூட்டு, சோறு சாப்பிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து மரக்கட்டிலில் படுத்த அவர், தூக்கமின்றி இரவைக் கழித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று காலையில் எழுந்த அவர், டீ, கஞ்சி ஆகியவற்றை உட்கொண்டதாகவும் சிறை முற்றத்தில் சிறிதுநேரம் நடைப்பயிற்சி மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஆன்மீகப் புத்தகங்களையும் நாளேடுகளையும் படித்ததாகவும், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் சிறைக்கு வந்து அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

[…]

மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்த டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
இந்தியா

மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவச பயணம் - டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்த டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலவசத்தை செயல்படுத்தினால் மெட்ரோ நிர்வாகம் எப்படி லாபகரமானதாக இயங்கும் என்று உச்சநீதிமன்றம் கெஜ்ரிவால் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இழப்பை டெல்லி அரசு ஏற்கத்தயாரா என்றும் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.

டெல்லி பேருந்துகளிலும் மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் ஆம் ஆத்மி அரசுக்கு கடுமை காட்டியது.

மாநில அரசு என்ற வகையில் மெட்ரோவுக்கு இழப்பு ஏற்படாத வகையில்தான் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

[…]

38 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்
இந்தியா

நெல்லூர் அருகே 38 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்....

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

நெல்லூரில் பல இடங்களில் கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கள்ளநோட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் யகரலா அருகே 4 பேரை கைது செய்த தனிப்படையினர் 4 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 34 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள், கம்ப்யூட்டர், ஸ்கேனர், கலர் பிரின்டர் ,7 செல்போன்கள் , பேப்பர் கட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் கள்ள நோட்டுகளை நகரில் பல இடங்களில் புழக்கத்தில் விடுவதற்காக சிலர் முயற்சி செய்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நெல்லூர் மாவட்ட எஸ்பி ஐஸ்வர்யா ரஸ்தோகி கேட்டுக் கொண்டார்.

[…]

கண்கலங்கினார் இஸ்ரோ தலைவர் சிவன்
இந்தியா

கண்ணீர்விட்ட இஸ்ரோ தலைவர் ஆறுதல் கூறிய பிரதமர்

இஸ்ரோ நிறுவனத்தைப் பார்வையிட்டுப் புறப்பட்ட பிரதமர் மோடியிடம், இஸ்ரோ தலைவர் கண்கலங்கினார். பிரதமர் மோடி அவரைக் கட்டியணைத்து ஆறுதல் கூறினார்.

இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு வந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகளிடையே உரையாற்றினார். பின்னர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து அவர் புறப்பட்டார்.

அப்போது, பிரதமர் அருகே நின்றிருந்த இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். அவரை கட்டியணைத்த பிரதமர் மோடி தட்டிக் கொடுத்து தேற்றினார்.

[…]

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
இந்தியா

காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய சோனியா காந்தி ஆலோசனை

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலத்த தோல்வியை அடைந்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்த கட்சியின் மூத்த தலைவர்களும் கூட்டணிக்கட்சித் தலைவர்களும் செய்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கட்சியின் இடைக்காலத் தலைவராக மீண்டும் சோனியா காந்தியே பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. அஜய் மக்கான், ஜெய்பிரகாஷ் அகர்வால், யோகானந்த சாஸ்திரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனைக்கு உள்ளாகியுள்ளன.

[…]

புதிய மோட்டார் வாகனச் சட்டம்
இந்தியா

புதிய மோட்டார் வாகனச் சட்டம் - கோடிகளை தொடும் அபராத வசூல்

புதிய மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்து 5 நாட்களில் ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் மட்டும் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் 343 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 லட்சத்து 23 ஆயிரத்து 650 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் 4 ஆயிரத்து 83 வழக்குகள் அடிப்படையில் 88 லட்சத்து 90 ஆயிரத்து 107 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் உரிய பெர்மிட், உரிமம் மற்றும் பதிவு ஆவணங்கள் இல்லாததால் 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஹரியானா மாநிலம் குர்கானில் இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவர் ஹெல்மெட் அணியாததாலும், உரிய ஆவணங்கள் இல்லாததாலும் 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. புதிய சட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான 63 பிரிவுகளின் அடிப்படையில் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சட்டம் நடைமுறைக்கு வந்து முதல் நாளில் 3 பேர் அமர்ந்து செல்லுதல், சேதமடைந்த எண் பலகைகள் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக 39 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3121 வழக்குகளும், சண்டிகரில் 1499 வழக்குகளும் ஜார்க்கண்டில் 1400 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

[…]

வேலை வாய்ப்பின்மை !! 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் அதிர்ச்சி !!
இந்தியா

வரலாறு காணாத வேலை வாய்ப்பின்மை

இந்தியாவில்  வேலைவாய்ப்பின்மை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக உயர்ந்து இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார நிலைமை மந்தமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 5 சதவீதமாக குறைந்து இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாட்டின் வேலைவாய்ப்பின்மை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு மாதத்தில் இதன் விகிதம் 8.4 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது நகர்புறங்களில் 9.6 சதவீதமும், கிராமப்புறங்களில் 7.8 சதவீதமும் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 2016-ல் எடுக்கப்பட்ட ஆய்வை ஒப்பிடும்போது, 2 சதவீதம் வரை வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த  2014 தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி இருந்தார். ஆனால், இப்போதைய ஆய்வு அறிக்கையின்படி பார்த்தால் இருக்கிற வேலையும் பறிபோய் இருப்பதை காட்டுகிறது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழச்சிதான் வேலை வாய்ப்பின்மைக்கு முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

2017-18-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தொழிலாளர்கள் சக்தி தொடர்பான ஆய்வு அறிக்கையில் வேலைவாய்ப்பின்மை 6.1 ஆக இருந்தது. சர்வதேச அளவில் பல நாடுகளில்கூட 6.1 சதவீதம் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. அது, இயற்கையானதுதான்.

ஆனால், இப்போது கடந்த ஆய்வை ஒப்பிடும்போது வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இருப்பது பிரச்சினைக்குரியது. இந்தியாவில் அதிக தொழிலாளர் சக்தி உள்ளது. ஆனாலும், உற்பத்தி திறன் குறைவாக உள்ளது. குறைந்த சம்பளம் தான் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும் போதிய அளவுக்கு இல்லை. அதை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.

[…]

ரஷ்யாவில் பிரதமர் மோடி
இந்தியா

ஜப்பான், மலேசியா பிரதமர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் மற்றும் மலேசியப் பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புதின் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பாதுகாப்பு, விண்வெளி, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, அணு சக்தி தொடர்பு முனையங்கள், தொழில்துறை கூட்டு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.

விளாடிவோஸ்டக் நகரில் நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார மண்டல மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

[…]

பெண் குழந்தைகள்
இந்தியா

இந்தியாவில் ஒவ்வொரு பத்து நிமிடங்களிலும் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது என அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் ஒவ்வொரு பத்து நிமிடங்களிலும் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது என்று அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.  சர்வதேச காணாமல் போனோர் நேற்று அனுசரிக்கப்பட்ட சூழலில் இந்த செய்தித் தொகுப்பு அதன் பின்னணியை ஆராய்கிறது...

கள்ளம் கபடமற்றது குழந்தைகளின் அன்பு.அந்த அன்புக்கு பிரதிபலனாக மிகுந்த அன்போடு குழந்தைகளிடம் கொஞ்சிப் பேசும் மனிதர்களைக் கூட குழந்தையைக் கடத்த வந்தவர் என்று சந்தேகத்துடன் காணும் பெற்றோர் பொது இடத்தில் வைத்து தர்ம அடி கொடுக்கும் சம்பங்கள் அதிகரித்துள்ளன.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான் , மகாராஷ்ட்ரா, பீகார் ஆகிய மாநிலங்களில் சுமார் 100 பேர் குழந்தையை கடத்த வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். தீர விசாரிக்காமலும் சட்டத்தைத் தன் கையில் எடுத்து வன்முறையைத் தூண்டுவதும் குற்றமாகும்.

ஆனால் குழந்தைகள் கடத்தப்படுவது கொடூரமான உண்மைதான். இந்தியாவில் பத்து நிமிடத்திற்கு ஒரு குழந்தை வீதம் கடத்தப்படுவதாக தேசிய குற்ற ஆவண அமைப்பு தெரிவித்துள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி.

நடப்பாண்டில் இதுவரை மட்டும் 54 ஆயிரத்து 750 குழந்தைகள் காணாமல் போய் விட்டனர். இதில் பாதிப்பேரை மட்டும் தான் கண்டுபிடித்து மீட்க முடிந்துள்ளது. மற்ற குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பது போலீசாருக்கே தெரியவில்லை. இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 40 கோடியாகும்.

இதில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போவது வழக்கமாக உள்ளது. அரசு முழு மூச்சாக நடவடிக்கை எடுத்த போதும் காணாமல் போன குழந்தைகளின் ஒரு தடயமும் கிடைப்பதில்லை. இதில் குடும்ப உறவினர்களால் கடத்தப்படும் குழந்தைகள், அந்நியர்களால் கடத்தப்படும் குழந்தைகள், தாமாகவே வீட்டை விட்டு ஓடிப்போகும் குழந்தைகள் என வகைமைகள் உண்டு. குழந்தைத் தொழிலாளர்களாகவும் ஊனமாக்கப்பட்டு பிச்சைக்காரர்களாகவும் பல குழந்தைகள், யாருடைய பேரைசைக்காகவோ கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குழந்தைகள் காணாமல் போன இடம் முக்கியமானது.

போலீசார் தகவல் கிடைத்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்தால் குழந்தையை கடத்தப்படுவதில் இருந்து மீட்க முடியும். ஆனால் பல நேரங்களில் போலீசாரின் மெத்தனமும் அலட்சியமும்தான் குழந்தைகள் நிரந்தரமாக காணாமல் போய்விடுவதற்கான சூழலை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் பலர் போலீசாரை நம்பாமல் சமூக ஊடகங்களில் காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய பதிவுகளை போடுகின்றனர். கூட்டமான இடங்களில் குழந்தைகளை பெற்றோர் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தனியாக குழந்தைகளை கடைக்கு அனுப்பக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை பத்திரப்படுத்த நமக்கு ஈடு இணையில்லாத நமது செல்வங்களை பாதுகாப்பதில் முழுமையான விழிப்புணர்வு தேவை. ஏனென்றால் ஒரு முறை காணாமல் போய்விட்டால் அந்தக் குழந்தை திரும்பக் கிடைக்குமா என்ற கேள்வியுடன் கிடைக்காவிட்டால் அதன் எதிர்காலம் என்ன ஆகும் என்ற அச்சமும் பின்னிப் பிணைந்துள்ளது.

[…]

 எம்.பி. சுப்ரியா சுலே
இந்தியா

இளம்பெண் பலாத்காரம் - குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராட்டம்

மும்பையில் தனது பிறந்தநாளன்று கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண் ஒரு மாதத்துக்குப் பின் உயிரிழந்த நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

19 வயதான இளம்பெண், கடந்த ஜூலை மாதம் தனது 19-வது பிறந்தநாளுக்காக மும்பை வந்தார். அங்கு கேக் வெட்டிக் கொண்டாடிய இளம்பெண்ணை விருந்துக்கு வந்திருந்த 4 நண்பர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதை வீட்டில் கூறாமல் மறைத்த இளம்பெண், இரு வாரங்களுக்குப் பின் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரது உடலில் பல உள்காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட அப்பெண் திடீரென உயிரிழந்தார். இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்படும் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சுப்ரியா சுலே தலைமையில் இன்று போராட்டங்கள் நடைபெற்றன.

இளம்பெண்ணின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர  வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.  

[…]

 முகேஷ் அம்பானி
இந்தியா

இந்தியாவில் ரூ.6.95 கோடி காரை வாங்கிய முதல் நபர் முகேஷ் அம்பானி

உலகின் மிக ஆடம்பர காரான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை இந்தியாவில் வாங்கிய முதல் நபர் என்ற பெருமையை முகேஷ் அம்பானி பெற்றார்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் அடிப்படை மாடலுக்கான எக்ஸ் ஸோரூம் விலை 6 கோடியே 95 லட்சம் ரூபாய் ஆகும். இந்தியாவில் அந்த காரை வாங்கிய முதல் நபராக முகேஷ் அம்பானி இருக்கிறார்.

இந்த காரில் 5 பேர் அமந்து பயணிக்கலாம். இரட்டை டர்போசார்ஜர்களுடன் 6 புள்ளி 8 லிட்டர் V12 பெட்ரோல் எஞ்சின் கொண்ட இது, 8 ஸ்பீட் ஆட்டோமெடிக் டிரான்சிஸன் கொண்டது.

5 விநாடிகளில் மணிக்கு பூஜ்ஜியம் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் இந்த காரின் வரையறுக்கப்பட்ட வேகம் மணிக்கு 249 கிலோ மீட்டர் ஆகும். ஆஃப் ரோடு பயணங்களுக்கு ஏற்ப ஓட்டுநருக்கு உதவ 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பறவையின் பார்வையில் காட்சிகளை தெளிவாகக் காண முடியும். ஆஃப் ரோடு பட்டனை அழுத்தி டிரைவிங் மோடை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. பின் இருக்கைப் பயணிக்கான தனிச் சூழலை உருவாக்க கண்ணாடி மூலம் லக்கேஜ் பகுதி பிரிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிப்புற தட்ப வெப்பக் கட்டுப்பாடு, ஒலி வெளியேறாமலும் உட்புகாமலும் காக்கும் தன்மை ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் என ரோல்ஸ் ராய்ஸ் கூறியுள்ளது.

இந்தியாவில் முகேஷ் அம்பானி போல் லண்டனில் ரியூபன் சிங், துபாயில் அபினி சோஹன் ராய் மற்றும் அடிஃப் ரஹ்மான் ஆகிய இந்திய தொழிலதிபர்களும் இந்த காரை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

[…]

 முதலமைச்சர் நாரயணசாமி
இந்தியா

பிரதமரின் தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் புதுச்சேரியில் தொடக்கம்

புதுச்சேரியில் பிரதமரின் தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முதலமைச்சர் நாரயணசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை அருகிலுள்ள இந்திராகாந்தி அரசு தலைமை பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டையினையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை புதுச்சேரியில் தற்போது 1 லட்சத்து 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். 

விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

[…]

சானியா மிர்சா
இந்தியா

சானியாவை பி.டி.உஷா என குறிப்பிட்ட பேனர்

ஆந்திர பிரதேசத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனரில் சானியா மிர்சாவின் புகைப்படத்திற்கு கீழ் அவரது பெயருக்கு பதிலாக பி.டி.உஷா என குறிப்பிடப்பட்டிருந்தது.  ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு  தேசிய அளவில் விளையாட்டு துறையில் சாதனை படைத்த ஆந்திராவை சேர்ந்தவர்களை பாராட்டும் வகையில் அந்த மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ரொக்க பரிசு அறிவித்திருந்தார்.  ஒய்எஸ்ஆர் கிரீடா பிரோடாசஹாகலு என்ற பெயரில் தேசிய விளையாட்டு தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது இந்த ரொக்க பரிசு வழங்கப்பட்டது.  இதனிடையே இதற்காக வைக்கப்பட்ட பேனரில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் புகைப்படத்திற்கு கீழ், அரவது பெயர் பி.டி.உஷா என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பலரும் கேலி செய்தும், விமர்சித்தும் வருகின்றனர்.

[…]

தேசிய குடிமக்கள் பதிவேடு
இந்தியா

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு...

அசாமில் இறுதிசெய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் சட்டபூர்வ இந்தியக் குடிமக்களாக ஏற்கப்பட்டுள்ளனர். அசாமில் வசித்து வரும் 19 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்படாததால், அவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

ஒரு நாட்டின் சட்டபூர்வ குடிமக்களை உறுதிப்படுத்தவும், வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளங் கண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. அசாமை பொறுத்தவரை, வங்கதேச எல்லையில் அமைந்திருப்பதால், அந்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஏராளமானோர் குடியேறிவிடுகின்றனர்.

இந்நிலையில், அசாமில் வசிக்கும் சட்டபூர்வ இந்திய குடிமக்களை அடையாளம் காணவும், அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வந்த சட்ட விரோத குடியேறிகளை கண்டறிந்து அகற்றவும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு முதன் முதலில் 1951ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

1971ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதிக்குப் பிறகு, வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் நுழைந்தவர்களை கண்டறிவதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேசிய மக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக, விண்ணப்பங்கள் 2015ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தொடங்கி, அந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பெறப்பட்டன. 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில், 2 கோடியே 89 லட்சத்து 83 ஆயிரத்து 677 பேர் சேர்க்கப்பட்டனர்.

அப்போது 40 லட்சத்து 70 ஆயிரத்து 707 பேர் இடம்பெறவில்லை. கடந்த ஜூன் 26ஆம் தேதி இரண்டாவது முறையாக வரைவு பட்டியல் வெளியிடப்பட்டபோது, தகுதியற்றவர்கள் என மேலும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 462 பேர் நீக்கப்பட்டனர். ஆக, கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதியும், கடந்த ஜூன் 26ஆம் தேதியும் வரைவு பதிவேடு வெளியிடப்பட்டபோது, 41 லட்சத்து 10 ஆயிரத்து 169 பேர் இடம்பெறவில்லை.

அவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம்பெற்றிருப்பது, 1971ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாக்காளர் பட்டியல்களில் பெயர் இடம்பெற்றிருப்பது ஆகியவை சட்டபூர்வ ஆவணங்களாக ஏற்கப்பட்டன.

இந்த அடிப்படையில், குறைந்த பட்சம் 10 முதல் 12 லட்சம் பேரும், அதிகபட்சமாக 20 முதல் 22 லட்சம் பேரும் இறுதி பட்டியலில் இடம்பெறாமல் போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.இந்நிலையில், மொத்தம் ஆயிரத்து 220 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, 5 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று, இறுதி செய்யப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில், 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் சட்டபூர்வ இந்திய குடிமக்களாக இடம்பெற்றுள்ளனர். அசாமில் தற்போது வசிக்கும் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் இடம்பெறவில்லை. அசாமில் இன்று வெளியிடப்பட்டிருப்பது இறுதி செய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு என்றாலும், அதில் சேர்க்கப்படாத, 19 லட்சம் பேருக்கும் மேல்முறையீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா தெரிவித்துள்ளார்.

அசாமில் அமைக்கப்பட்டுள்ள, வெளிநாட்டவர் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் 120 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். ஏற்கெனவே 100 வெளிநாட்டவர் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அசாமில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஒரு வார காலத்திற்குள் மேலும் 200 மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட உள்ளன.

படிப்படியாக மொத்தம் 1000 தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவை மேல்முறையீடுகளை விசாரித்து, அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் தீர்ப்பளிக்கும். அதன் பிறகும் உயர்நீதிமன்றத்திற்கோ உச்சநீதிமன்றத்திற்கோ செல்வதற்கான சட்டபூர்வ வாய்ப்புகள் உள்ளன.

இந்த சட்டபூர்வ வாய்ப்புகள் முடியும் வரை, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் வெளிநாட்டவர்கள் என அறிவிக்கப்பட மாட்டார்கள். பதிவேடு விவரங்களை www.nrcassam.nic.in தெரிந்து கொள்ளலாம். பட்டியல் வெளியானவுடனே, ஒரே நேரத்தில் கோடிக் கணக்கானோர் பார்க்க முயன்றதால் அந்த இணைய தளம் செயலிழந்தது.

தங்களது பெயர்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளதா என்பதைப் பார்க்க, என்ஆர்சி சேவை மையங்களிலும் மக்கள் திரண்டனர். தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்படுவதை முன்னிட்டு, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, அசாமில் பாதுகாப்பிற்காக ஆயிரக் கணக்கான துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டனர்.

இதேபோல மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

[…]

பிரதமர் மோடி
இந்தியா

3 ஆண்டுகளில் 12 ,500 ஆயுஷ் சுகாதார மையங்கள் திறக்கப்படும் -பிரதமர் மோடி

நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 500 ஆயுஷ் சுகாதார மையங்கள் திறக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

யோகாவை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்படுவோருக்கு பிரதமரின் யோகா விருது 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.

அதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். மேலும் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அறிஞர்கள், மருத்துவர்களை சிறப்பிக்கும் வகையில் 12 சிறப்பு அஞ்சல் தலைகளையும் வெளியிட்டார். மேலும் அரியானா மாநிலத்தில் 10 ஆயுஷ் சுகாதார மையங்களையும் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பின்னர் விழாவில் பேசிய மோடி, பிட் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த மறுநாளே யோகா, ஆயுஷ் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பது பொருத்தமானதாக அமைந்திருப்பதாகவும், பிட் இந்தியா திட்டத்துக்கு யோகவும், ஆயுஷும் 2 தூண்கள் எனவும் குறிப்பிட்டார். மேலும் நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 500 ஆயுஷ் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை திறக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், அவற்றில் 4 ஆயிரம் மையங்கள் நடப்பாண்டிலேயே திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 75 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் மூலம் 16 ஆயிரம் மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறிய மோடி, சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மருத்துவ உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த உதவும் எனக் கூறினார்.

[…]

வெடிவிபத்து
இந்தியா

ரசாயன ஆலை வெடிவிபத்தில் 20 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் ஷிர்பூர் நகர் அருகே ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலைக்குள் 70க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஷிர்பூரை அடுத்த வகாடி என்ற கிராமத்தில் மகாராஷ்டிர தொழில் வளர்ச்சிக் கழக வளாகத்தில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடிச்சத்தம் கேட்டது அந்த நேரத்தில் தொழிற்சாலைக்குள் சுமார் 100 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வெடி விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதுமே கரும் புகைமண்டலம் பரவியுள்ளது.

வெடிச்சத்தத்தால் சுற்று வட்டார கிராமங்களில் கடும் அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து போலீசாரும் தீயணைப்பு படை வாகனங்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

இந்த வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் 70க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலைக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்றும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தொழிற்சாலையில் இருந்த சக்தி வாய்ந்த சிலிண்டர்கள் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

[…]

ஆனந்த் மகிந்திரா
இந்தியா

நாகா பெண் பட்டாலியன்களை பாராட்டிய ஆனந்த் மகிந்திரா.

நாகலாந்தில் பெண் பட்டாலியன்கள் சகதியில் சிக்கிய மகிந்திரா பொலிரோ காரை மீட்கும் காட்சிகளை அந்த கார் நிறுவனத்தின் குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

நாகாலாந்தைச் சேர்ந்த எம்எல்ஏவான ம்ஹோன்லுமோ கிகோன்  சகதியில் சிக்கிய மகேந்திரா பொலிரோ காரை நாகா பெண் பட்டாலியன்கள் மீட்கும் காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இது பழைய வீடியோவாக இருந்தாலும் சிலரால் பார்க்கப்பட வேண்டும் எனக் கூறி மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா, மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, அமித் ஷா, ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோரை டேக் செய்து இணைத்திருந்தார். '

இதுகுறித்து தனது டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா, பொலிரோ, சேற்றில் சிக்கியது எப்படி என தனக்குத் தெரியாது என்றும், அதை மீட்கும் அளவு உடல் வல்லமை கொண்ட பெண்கள் அங்கிருந்தது மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார். நாகா பெண்கள் பட்டாலியனை பணிக்கு எடுத்துக் கொள்ளும் அளவு தான் முட்டாள் அல்ல என்றும் கேலியாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே தலையணையை பயன்படுத்தி கட்டிலில் இருந்து சாதுர்யமாக இறங்கிய குழந்தைக்கு வேலை கொடுப்பதாக ஆனந்த் மகிந்திரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

[…]

பாஜக தலைவர்
இந்தியா

பாஜக தலைவர் மீது தாக்குதல்

மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள சாய் பெ சர்ச்சாவில் திலீப் கோஷ் தனது வழக்கமான நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சுற்றிவளைத்த சிலர், திலீப் கோஷை கண்மூடிதனமாக தாக்கியதாகவும் அதில் ஒருசிலர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் தன்னுடன் 2 பாஜக ஆதரவாளர்கள் காயமடைந்துள்ளதாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.

திலீப் கோஷ் தாக்கப்படுவது இது முதன் முறையல்ல. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு கிழக்கு மிட்னாப்பூரில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தாக்கியதில் அவர் காயமடைந்துள்ளார்.

இந்த தாக்குதலில் மேலும் 5 பேர் படுகாயமடைந்ததுடன் திலீப் கோஷ் காரும் சேதப்படுத்தப்பட்டது. இதே போல் 2017 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் கோர்கலாண்ட் ஜன்முக்தி மோர்ச்சாவில் பிமல் குரு எதிர்ப்பாளர்களால் திலீப் கோஷ் தாக்கப்பட்டார்.

[…]

பிரதமர் மோடி
இந்தியா

பிரதமர் மோடி சுற்றுப் பயணம்..!

ரஷ்யாவின் விளாடிவாஸ்டோக் நகரில், அந்நாட்டு அதிபர் புதினை பிரதமர் மோடி அடுத்தவாரத்தில் சந்தித்துப் பேசும்போது, 6 நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய ரஷ்யா முன்வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி வரும் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் ரஷ்யாவில் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா செல்லும் மோடி, விளாடிவாஸ்டோக்  நகரில், ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தை, இந்தியாவுடனான இருதரப்பு உறவில் புதிய அத்தியாயமாக அமையும் என ஏற்கெனவே ரஷ்யா குறிப்பிட்டிருந்தது.

பாதுகாப்பு, வர்த்தகம், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படும் என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்கொலாய் குடாஷேவ் தெரிவித்திருந்தார்.

கூடங்குளம் தவிர்த்து மேலும் 6 அணுஉலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக ரஷ்ய அரசு அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். எனவே, புதிதாக ரஷ்யா 6 அணுஉலைகளை அமைத்துத் தருவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்திய கடற்படையின் பிராஜெக்ட்-751 திட்டத்தின் கீழ், நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க ரஷ்யா முன்வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பிராஜெக்ட்-751 என்ற திட்டத்தின் கீழ், டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பங்கேற்று நீர்மூழ்கிகளை வழங்க, பிரான்சை சேர்ந்த நேவல் குரூப்  ரஷ்யாவின் ரோசோபோரோன்எக்ஸ்போர்ட் ஜெர்மனியின் திஸ்ஸன்கிரப் மெரைன் சிஸ்டம்ஸ், சுவீடனின் சாப் குரூப் ஆகியவை போட்டியில் உள்ளன. இந்நிலையில், இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டின்போது, நீர்மூழ்கிகளை வழங்க ரஷ்யா முன்வரும் என்றும், கொள்முதல் நடைமுறைகளை விரைவுபடுத்தும் வகையில், இந்திய-ரஷ்ய அரசுகளுக்கு இடையேயான நேரடி ஒப்பந்தத்தின் மூலம் 6 நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க ரஷ்யா முன்வரலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஐந்தாம் தலைமுறை சுஹோய் போர் விமானங்களான எஸ்யூ-57 ஜெட் விமானங்களை இந்தியாவுக்கு வழங்கவும் ரஷ்யா முன்வரலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும் அதுகுறித்து இறுதி முடிவுசெய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை, ரஷ்யாவுடன் இந்தியாவும் இணைந்து தயாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறி நிலவி வந்ததால் அந்த திட்டத்தை இந்தியா கடந்த ஆண்டு கைவிட்டது. இதனிடையே, ரஷ்யா ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரித்து ஏற்றுமதிக்கும் தயார் நிலையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[…]

பெண் விமானி
இந்தியா

இந்திய வீரர்களை மீட்ட பெண் விமானி

பாய்ந்து வந்த ஏவுகணைகள், தோட்டாக்களுக்கு மத்தியில்  கார்கில் போரில் காயமடைந்த இந்திய வீரர்களை ஹெலிகாப்டர் உதவியோடு மீட்ட இந்தியாவின் முதல் பெண் போர் விமானி குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.

1994-ம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாக சேர்ந்தவர் குஞ்சன் சக்சேனா. 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது, கண்ணில் பட்ட இந்திய போர் விமானங்களை நோக்கி பாகிஸ்தான் படையினர் தோட்டாக்களையும், ஏவுகணைகளையும் செலுத்திக் கொண்டிருந்த ஆபத்தான இடத்துக்கு பணிக்கு அனுப்பப்பட்டார். சக போர் விமானி வித்யா ராஜனுடன் ஆளுக்கு ஒரு சீட்டா ரக ஹெலிகாப்டரில் பதற்றமான பகுதிக்கு சென்ற குஞ்சன் சக்சேனா, தன்னை நோக்கி பாய்ந்து வரும் தோட்டாக்கள், ஏவுகணைகளை கண்டு அஞ்சாமல் உயிரைத் துச்சமெனக் கருதி துணிச்சலோடு ஹெலிகாப்டரை செலுத்தினார்.

அங்கு காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இந்திய வீரர்களை மீட்டுக் கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்தார். அவரது வீர தீர செயல்களை சித்தரிக்கும் வகையில் குஞ்சன் சக்ஸேனா ; த கார்கில் கேர்ள் என்ற படம் இந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் படத்துக்கான முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்திய வீரர்களின் உயிரைக் காத்த அந்தத் தருணம் விவரிக்க இயலாத பெருமிதத்தைத் தந்ததாக 2012-ல் அளித்த பேட்டியில் கூறியுள்ள குஞ்சன் சக்சேனா, தற்போது போர் விமானியாக விண்ணைத் தொடும் கனவோடு பல பெண்கள் இந்திய விமானப்படையில் நிரந்தரப் பணியில் சேர்ந்ததற்கு தான் முன்னோடியாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியிருந்தார். 

[…]

தெலங்கானா எக்ஸ்பிரஸ்
இந்தியா

ரயிலில் திடீர் தீவிபத்து

அரியானா மாநிலம், அசோதி-பலப்கர் ரயில் பாதையில் தெலங்கானா எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து புது டெல்லி செல்லும் தெலங்கானா எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை 7.43 மணியளவில் அரியானா மாநிலம், அசோதி-பலப்கர் ரயில் பாதையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது ரயிலின் 9ஆவது கோச்சின் சக்கரத்தில் இருந்து புகை மற்றும் நெருப்பு வந்ததால் அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அந்த கோச்சின் பிரேக் இணைப்பில் தீ ஏற்பட்டது தெரியவந்தது.

அந்த ரயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழித்தடத்தில் வந்து, செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

[…]

ஆளும்கட்சியினர் குற்றச்சாட்டு
இந்தியா

அமராவதி தலைநகராவதில் முறைகேடு

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் முந்தைய ஆட்சியின் போது நடைபெற்று வந்த, அமராவதியை தலைநகராக நிர்மாணிக்கும் பணிகள், ஜெகன் மோகன் முதலமைச்சரான பின்னர் முடங்கின.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் போட்சா சத்யநாராயணா, வெள்ள அபாய பகுதிக்குள் வருவதால் அமராவதி பாதுகாப்பான இடமில்லை எனக் கூறினார்.

மேலும் அங்கு நடைபெற்று வரும் பணிகளுக்கு இரட்டிப்பாக செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை முதலமைச்சர் ஜெகன் மோகன் தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல்கள் பரவின.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஒய்.எஸ்.சவுத்ரி, அமராவதியில் தான் தலைநகர் அமைய வேண்டும் என கூறினார்.

இந்நிலையில் அமராவதி தலைநகராவதில் மோசடிகள் நடைபெற்றிருப்பதாகவும், அதன் மூலம் பயன்பெறுவோரில் ஒருவராக ஒய்.எஸ்.சவுத்ரி இருக்கலாம் எனவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் அமராவதி தலைநகராவதை அறிந்து ஒய்.எஸ்.சவுத்ரி, அங்கு ஏராளமான நிலங்களை வாங்கி குவித்துள்ளதாகவும், தற்போது தலைநகர் மாற்றப்பட்டால் தனது லாபக்கணக்கு வீணாகிவிடும் என அவர் அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஒய்.எஸ்.சவுத்ரி, அவை அடிப்படை ஆதாரமற்றது எனக் கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒய்.எஸ்.சவுத்ரி, சமீபத்தில் தான் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[…]

வேர்வோல்ஃப் சிண்ட்ரோம்
இந்தியா

கலப்பட மருந்தால் பாதிப்பு

ஸ்பெயினின் மலாகாவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஃபார்மா-குய்மிகா சுர் எஸ்.எல். என்ற நிறுவனம் மருந்துக் கலப்பட சர்ச்சையில் சிக்கி உரிமத்தை இழந்துள்ளது.

ஒமர்ப்ரஸோல் என்ற ஜீரணகுறைப்பாட்டை சரி செய்யும் மாத்திரையில், மைனாக்ஸிடில் எனும் வழுக்கை, முடி வளர்ச்சிக் குறைபாட்டை சரிசெய்யும் மூலக்கூறை கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடந்த ஜூன் மாதத்தில் ஸ்பெயினில் கான்டபரியா, ஆண்டலூசியா உள்ளிட்ட நகரங்களில் 13 குழந்தைகளுக்கு வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் எனும் நோய் தாக்கியுள்ளது.

இந்த நோயால் உடலில், அபரிமிதமான ரோம வளர்ச்சி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் ஃபார்மா-குய்மிகா சுர் எஸ்.எல். நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு உரிமம், ஏற்றுமதி, இறக்குமதி உரிமம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

முதல் பேட்ஜில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் திரும்பப் பெறப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மேலும் 4 குழந்தைகளுக்கு வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்டலூசியா பகுதியில் 50 மருந்தகங்களில் 30 பேட்ஜ்கள் வரை மருந்து திரும்பப் பெறப்படாத நிலையில், மக்கள் எச்சரிக்கையோடு அந்த வகை மருந்துகளை பயன்படுத்துமாறு ஸ்பெயின் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

க்ரனடா ஹோய் என்ற நிறுவனத் தகவல்படி, அந்த மருந்துக்கு இந்தியாவிலும் ஒரு விநியோகஸ்தர் உள்ளதாகக் கூறப்படுகிறது.

[…]

 பிளாஸ்டிக் பொருள்
இந்தியா

ஒற்றை பயன்பாட்டு நெகிலிக்கு தடை

நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 6 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது சுதந்திர தின உரையில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தார். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்குள் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக பிளாஸ்டிக் பை, கப், பிளேட்டுகள், சிறிய பாட்டில்கள், ஸ்ட்ராக்கள், சில சிறிய பிளாஸ்டிக் சாஷேக்ககள் ஆகிய 6 பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இணைய வர்த்தக நிறுவனங்கள் பேக்கேஜிங்கிற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கச் சொல்லியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்கள்தான் கிட்டத்தக்க 40 சதவீத பிளாஸ்டிக் மாசுக்கு வித்திடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. விதிவிலக்காக ஒருசில பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும் என்றாலும் அவற்றை மறுசுழற்சி செய்வதை கட்டாயமாக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்படும். தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோர்க்கு முதல் 6 மாதம் எச்சரிக்கைக் கொடுக்கப்படும். பின்னர் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடை உத்தரவால் நாட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை பிளாஸ்டிக் மாசு குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முன்னரே, தமிழகம் உள்ளிட் சில மாநிலங்கள் தானாக முன் வந்து ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளில் 50 சதவீதம் கடலில் சென்று சேருவதாக கூறப்படுகிறது. அந்த பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் கடல் மீன்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வரும் 2021 ஆம் ஆண்டுக்குள்ளும் சீனாவின் முக்கிய நகரங்கள் 2025 ஆம் ஆண்டுக்குள்ளும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ளன.

[…]

பிரதமர் மோடி
இந்தியா

ஃபிட் இந்தியா இயக்கம்

ஆரோக்கிய வாழ்க்கைக்காக உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவற்றை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றும் நோக்கத்துடன் "ஃபிட் இந்தியா" இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா இயக்கத்தைப் போல, "ஃபிட் இந்தியா" இயக்கத்திற்கும் மக்கள் பேராதரவு தரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

"ஹாக்கி மந்திரவாதி" என போற்றப்பட்ட, மாபெரும் ஹாக்கி வீரரான தயான்சந்த், பிறந்த நாள் தேசிய விளையாட்டு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில், ஃபிட் இந்தியா இயக்கம் தொடங்கி வைக்கப்படும் என பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியுடன், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், விளையாட்டு, உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் தற்காப்பு கலைகள் மேடையில் நிகழ்த்திக் காட்டப்பட்டன. மாநிலங்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும், தூய்மை இந்தியா இயக்கத்தை போல, ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு அனைவரும் பேராதரவு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மாபெரும் விளையாட்டு வீரரான தயான்சந்த் பிறந்த நாளில் ஃபிட் இந்தியா இயக்கம் தொடங்கப்படுவதை சுட்டிக்காட்டிய மோடி, தன்னுடைய உடல் தகுதி, வலிமை, ஹாக்கி மட்டையின் மூலம் உலகை அதிசயிக்கச் செய்தவர் தயான்சந்த் என்று குறிப்பிட்டார்.  விளையாட்டும், உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்ட மோடி, ஃபிட் இந்தியா இயக்கம் என்பது விளையாட்டு என்பதையும்  தாண்டி நமது வாழ்க்கையின் முக்கியமான அங்கம் என தெரிவித்தார்.

தொழில்நுட்பங்களின் வரவினால் உடல்சார்ந்த செயல்பாடுகள் குறைந்துபோனதை சுட்டிக்காட்டிய பிரதமர், சில பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட, சாதாரண மனிதரின் வாழ்வின் உடல் உழைப்பு என்பது இயல்பானதாக இருந்தது என்றார். உடல்தகுதி என்பது நமது அன்றாட வாழ்வின் அங்ககமாக இருந்த நிலை மாறி, உடல்தகுதி என்பதன் மீது ஆர்வம் இல்லாமல் போய்விட்டதாக வேதனை தெரிவித்தார். நடை, அசைவு உள்ளிட்ட உடல்செயல்பாடுகளை காட்டும் ஆப்களும், கைகளில் அணிந்து கொள்ளும் ஃபிட்னஸ் பேண்டுகளும் இன்று பயன்பாட்டில் உள்ளன என்றாலும், அவற்றை முறையாக யாரும் கண்காணிப்பதில்லை என்றார். அடிக்கடி நடந்து செல்வது, சைக்கிளில் செல்வது என்றிருந்த நிலை மாறி, தொழில்நுட்பங்களின் வரவினால் உடல்செயல்பாடுகள் குறைந்துபோய்விட்ட என்றும் அவர் குறிப்பிட்டார். சர்க்கரை, உயர் ரத்தஅழுத்தம் போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறார்களுக்கு கூட சர்க்கரை நோய் இருப்பதை கேள்விப்பட முடிகிறது என்றும் பிரதமர் வேதனையோடு குறிப்பிட்டார்.

50, 60 வயதுக்குப் பிறகுதான் மாரடைப்பு வரக்கூடிய அபாயம் உண்டு என்று சொல்லும் நிலைபோய், 35, 40 வயதில்கூட இத்தகைய அபாயம் இருப்பது கவலைக்குரியது என்றும் அவர் கூறினார். வாழ்க்கை முறையின் ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்கள், இத்தகைய நோய்களுக்கு வித்திடுகின்றன என்றும், வாழ்க்கை முறையை ஒழுங்கமைப்பதன் மூலம் இந்த நிலையை மாற்றலாம் என்றும் மோடி அறிவுறுத்தினார். வாழ்க்கையில் முறையில் சிறிய மாற்றங்களை செய்வதன் மூலமே சில நோய்கள் வராமல் தடுத்துவிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய வளர்ச்சியில் உடல்நலத்திற்கும் பங்கு இருப்பதையும் பிரதமர் உதாரணங்களோடு சுட்டிக்காட்டினார். வெற்றிக்கு லிஃப்ட என ஏதும் இல்லை என்றும், படிகட்டுகள் வழியாகத்தான் ஏறிச் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டார். வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு, உடல்தகுதியும் ஆரோக்கியமும் அவசியம் என தெரிவித்த பிரதமர், நிறுவனங்களோ திரையுலகோ எதுவாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருப்பவரே சிகரம் தொடுபவராக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். 

ஆரோக்கிய வாழ்வையும், உடல் தகுதியையும் வாழ்வின் மந்திரமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். ஃபிட் இந்தியா இயக்கம் என்பது, உடற்பயிற்சியையும், விளையாட்டுகளையும் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. இளையவர்கள், முதியவர்கள், பெண்கள், சிறார்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஆர்வமூட்டக்கூடிய இயக்கம் என்றும் பிரதமர் கூறினார். பல்வேறு விளையாட்டு வீரர்கள், நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள், கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான கவுதம் காம்பீர் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார். 

விளையாட்டுத் துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 11 அமைச்சகங்கள், ஃபிட் இந்தியா இயக்கத்திற்காக இணைந்து செயல்பட உள்ளன. விளையாட்டு வீரர்கள், திரையுலகினர், தொழில்துறையினர் என பல தரப்பினரும் ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

[…]

திருடும் கும்பல்
இந்தியா

சில்லறையை சுண்டிவிட்டு திருடும் கும்பல்” இது வேற லெவல் திருட்டு

கோவையில் கூட்டாகப் பேருந்துகளில் ஏறி சில்லறைக் காசை சுண்டிவிட்டு பயணிகளின் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் கொள்ளையில் ஈடுபடும் கும்பலின் தலைவன் சிக்கியுள்ளான். அவனிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கோவை உக்கடம் பிரபு நகரைச் சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் அபினவ், தனது பட்டறையில் தயாரிக்கும் நகைகளை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.  கடந்த ஜூன் மாதம் தன்னிடம் வேலை செய்யும் 60 வயதான ரவிச்சந்திரனிடம் நகைகளைக் கொடுத்து சேலத்திலுள்ள நகைக்கடைகளுக்கு வழங்குமாறு கூறி அனுப்பிவைத்துள்ளார். அங்குள்ள நகைக்கடைகளுக்கு கொடுத்தது போக மீதமிருந்த 116 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு ரவிச்சந்திரன் கோவை திரும்பியுள்ளார். தனியார் பேருந்தில் வந்துகொண்டிருந்த ரவிச்சந்திரன் பீளமேடு அருகே வந்து பார்த்தபோது பையில் இருந்த நகைகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ரவிச்சந்திரன் பயணித்த தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நூதன திருட்டில் ஒரு கும்பல் ஈடுபட்டது அம்பலமானது. 5 பேர் கொண்ட அந்த கும்பல் பேருந்தில் ஏறி பெரியவருக்கு பக்கத்திலும் பின்னாலும் என அமர்ந்துள்ளது. அவர்களில் ஒருவன் ஒரு ரூபாய் நாணயத்தை பெரியவர் அமர்ந்திருக்கும் இருக்கை அருகே சுண்டிவிடுகிறான். பின்னர் அந்த நாணயத்தை கீழே தேடுவதுபோல் அவன் தேடிக்கொண்டிருக்க, ரவிச்சந்திரனை நெருக்கியவாறு அமர்ந்திருப்பவன், அவருக்குத் தெரியாமல் அவரது பையில் இருந்து நகைகளை எடுத்துக்கொள்கிறான்.

நகைகளை எடுத்துக்கொண்ட பின் மற்றவர்களை அவன் உசுப்பிவிட, 5 பேரும் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கிவிடுகின்றனர். இந்தக் காட்சிக்ளை அடிப்படையாக வைத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், முக்கிய குற்றவாளியும் கும்பலின் தலைவனுமான மலைச்சாமி என்பவனை கைது செய்தனர். அடுத்தடுத்து வீரபாண்டி, சீனிவாச பாண்டியன் ஆகியோர் கைதாகினர். மற்றவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். நகைகளை கட்டிகளாக மாற்றி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவந்தபோது போலீசாரிடம் மலைச்சாமி சிக்கியுள்ளான். மலைச்சாமியிடம் இருந்து ஒரு கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் மலைச்சாமி மீது பல்வேறு மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் அவன் ஏற்கனவே இருமுறை குண்டர் சட்டத்தில் கைதாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

சிசிடிவி காட்சியில் தென்படும் கொள்ளையர்கள் அத்தனை பேருமே பளீர் ஆடைகளுடன் யாரும் சந்தேகிக்க முடியாத வகையில் சாதாரண மனிதர்கள் போல் காட்சியளிக்கின்றனர். எனவே இன்றைய தேதியில் பேருந்துகளாகட்டும் ரயில்களாகட்டும் நகைகள், பணம், விலையுயர்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றுடன் பயணிப்பவர்கள் கூடுதல் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.  அதேசமயம் பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.

[…]

ப.சிதம்பரம்
இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய மேலும் ஒரு நாள் தடை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் ஒரு நாள் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டைப் பெற 2007 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை சிபிஐ கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

இதே வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்வதை தடுக்க கோரி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் ஒரு நாள் தடை விதித்து நேற்று உத்தரவிட்டு இருந்தது.

உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, அமலாக்கத்துறை கைது செய்வதை தடுப்பதற்காக, பாதிக்கப்பட்டவர் போன்று ப.சிதம்பரம் நாடகம் ஆடுவதாக குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அவர் வாதிட்டார். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை வரை அமலாக்ககத்துறை கைது செய்வதற்கு தடை விதித்த நீதிபதிகள், விசாணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர். 

[…]

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்தியா

தையல்காரரின் மகனுடன் எனது மகனும் ஐஐடியில் பயில இருப்பது மகிழ்ச்சி- கெஜ்ரிவால்

டெல்லி ஐஐடியில் தையல்காரர் ஒருவரின் மகனுடன் தனது மகனும் பயில இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற விஜய்குமார் என்ற மாணவனுக்கு டெல்லி ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், விஜய்குமாரின் தந்தை ஒரு தையல்காரர், அவரது தாய் இல்லத்தரசி என்றும், ஐஐடியில் விஜய்க்கு இடம் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் அம்பேத்கரின் கனவை டெல்லி அரசு நிறைவேற்றி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மற்றொரு பதிவில், தையல்காரரின் மகனான விஜய்யுடன் தனது மகனும் ஐஐடியில் பயில இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் நல்ல கல்வி கிடைக்காததால் ஏழையின் மகன் ஏழையாகவே இருக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும், நல்ல கல்வி மற்றும் பயிற்சியை அனைவருக்கும் அளிப்பதன் மூலம் ஏழைகளும், பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவேளையை டெல்லி அரசு குறைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

[…]

சல்மான்கான்
இந்தியா

ரயில்நிலையத்தில் பாடி பிரபலமானவருக்கு வீடு பரிசளிக்கும் சல்மான்கான்?

ரயில்நிலையத்தில் பாடல் பாடி இணையத்தில் வைரலாகி புகழ்பெற்ற ரனு மண்டலுக்கு சல்மான் கான் வீடு ஒன்றைப் பரிசளித்ததாகக் கூறப்படுவது உண்மையில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ரனகத் ரயில்நிலையத்தில் பாடல்களைப் பாடி வந்த பெண், லதா மங்கேஷ்கரின்  ஏக் பியார் க நக்மா ஹை பாடலை பாடும் காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பகிரப்படுகிறது. இதையடுத்து ஹிமேஷ் ரெசாமியாவின்  Happy, Hardy and Heer படத்தில் பாடும் வாய்ப்பைப் பெற்ற அவர், தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

நடிகர் சல்மான்கான் அவரது குரல்வளத்தை வெகுவாகப் பாராட்டியதாகவும் தபாங் 3 படத்தில் பாடும் வாய்ப்புடன் மும்பையில் 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு ஒன்றையும் அவருக்குப் பரிசாக வழங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை சல்மான்கானின் நெருங்கிய வட்டாரங்கள் மறுத்துள்ளன. 

[…]

மம்தா பானர்ஜி
இந்தியா

மம்தா பானர்ஜியின் பாதங்களை தொட்டு வணங்கும் ஐபிஎஸ் அதிகாரி?

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பாதங்களை, சீருடை அணிந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தொட்டு வணங்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள திகா எனும் பகுதியில் கடற்கரையோரம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மம்தா பானர்ஜி, அங்கு சிலருக்கு இனிப்புகள் வழங்கியுள்ளார். அப்போது மம்தாவை நோக்கிச் சென்ற அம்மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை ஐ.ஜியான ராஜிவ் மிஸ்ரா என்பவர், மம்தாவின் பாதங்களைத் தொட்டு வணங்கியதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவரும் நிலையில், இவ்விவகாரம்
விவாதமாகவும் மாறியுள்ளது.

[…]

ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தம்
இந்தியா

ராகுல் காந்தி கன்னத்தில் முத்தமிட்ட இளைஞர்

கேரள மாநிலம் வயநாட்டில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கன்னத்தில், இளைஞர் ஒருவர் முத்தமிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கேரளாவில் அண்மையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இந்த நிலையில் தனது மக்களவைத் தொகுதியான வயநாட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து மக்களை சந்தித்த அவர், காரில் அமர்ந்தவாறு ஆறுதல் தெரிவித்து கைக்குழுக்கினார்.

அப்போது ராகுல் காந்தியுடன் கைக்குழுக்கிய இளைஞர் ஒருவர், திடீரென அன்பு மிகுதியில் அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

[…]

நிர்மலா சீதாராமன் பேட்டி
இந்தியா

அதிகாரிகள் கெடுபிடியாக நடந்து கொள்ள வேண்டாம்...நிர்மலா சீதாராமன் பேட்டி

வரி வசூலிக்கும் அதிகாரிகள் கெடுபிடியாக நடந்து கொள்ள வேண்டாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவுறுத்தியுள்ளார். 2017-18ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,  ஜி.எஸ்.டி ஆர் 9 ஏ, ஜி.எஸ்.டி. ஆர் 9 சி, உள்ளிட்ட படிவங்களை நவம்பர் 30ம் தேதி வரை தாக்கல் செய்ய வணிகர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில், மத்திய மறைமுக வரிகள் வாரியம், சுங்கத்துறை, வருமான வரித்துறை, ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் அதிகாரிகளுடனும், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நிர்மலாசீதாராமன், தொழில்களே வேலைவாய்ப்புகளையும் நாட்டின் செல்வ வளத்தையும் உருவாக்குகின்றன என்பதால் தொழில் முனைவோரின் சூழ்நிலையை வரி வசூலிப்போர் எளிமைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

வரிவசூலிப்பு இலக்கு என்பது முக்கியமல்ல என முடிவு செய்யப்பட்டதாகவும், வரி வசூலிப்பு நடவடிக்கையின் போது, அதிகாரிகள் கெடுபிடி செய்யக் கூடாது என்றும், கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார். தொழில்துறையினர் தங்கள் தொழிலை எந்த கவலையும் இன்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஜி.எஸ்.டி. வரி குறைப்பு தொடர்பான ஒரு கேள்விக்கு அது தனது கையில் இல்லை என்றும் அதனை ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவு செய்ய முடியும் என்றும் நிர்மலாசீதாராமன் தெரிவித்தார்.

[…]

பிரதமர் நரேந்திர மோடி
இந்தியா

அருண் ஜேட்லி குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆறுதல்

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண்ஜேட்லி அணமையில் காலமானார். அவர் மரணம் அடைந்த போது பிரான்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இதனால் அவரால் அருண் ஜேட்லி உடலுக்கு நேரில் மரியாதை செலுத்த முடியவில்லை. இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு மோடி இன்று காலை டெல்லி திரும்பினார். இதனை அடுத்து அவர் அருண் ஜேட்லியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் அங்கிருந்த ஜேட்லியின் உருவப்படத்திற்கும் மோடி அஞ்சலி செலுத்தினார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனிருந்தார்.   

[…]

பி.வி.சிந்து
இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று இன்று நாடு திரும்பிய பி.வி. சிந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

சர்வதேச போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடிதந்த சிந்துவை சந்தித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ள பிரதமர் மோடி, சிந்துவின் வெற்றிகள் தொடரவும் வாழ்த்து தெரிவித்தார்..

தொடர்ந்து, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரிஜூஜூயைவும் பி.வி. சிந்து சந்தித்து வாழ்த்து பெற்றார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை தோற்கடித்து தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார். 

[…]

ஜி.எஸ்.டி
இந்தியா

ஜி.எஸ்.டி.கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதற்கான அவகாசம் வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி ஆர் 9 ஏ, ஜி.எஸ்.டி. ஆர் 9 சி, உள்ளிட்ட படிவங்களை நவம்பர் 30ம் தேதி வரை தாக்கல் செய்ய வணிகர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

[…]

தொழிலதிபர் சித்தார்த்
இந்தியா

தொழிலதிபர் சித்தார்த் மர்மச்சாவு...விலகியது மர்மம்

கர்நாடகாவில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சித்தார்த், நீரில் மூழ்கி இறந்துள்ளதாக தடயவியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காபிடே உரிமையாளரான அவர் கடந்த ஜூலை 29-ஆம் தேதி நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 2 நாள்களுக்குப்பின் அவரது உடல் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் அவரது மரணம் தொடர்பான தடயவியல் அறிக்கையில், நீரில் மூழ்கியதால் சித்தார்த்தின் நுரையீரலில் தண்ணீர் புகுந்து இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்கொலை, மர்மச்சாவு என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சித்தார்த் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கியதால், தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

[…]

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி
இந்தியா

இறப்பதற்கு முன் அருண் ஜேட்லி மக்களுக்கு கொடுத்த பரிசு

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பரிசு ஒன்றை வழங்கிச் சென்றுள்ளார்.

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, கடந்த 24ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் சூரிய சக்தியால் இயங்கும் 200 உயர் கோபுர மின் விளக்குகளை அமைக்க மாவட்ட ஆட்சியருக்கு அருண் ஜேட்லி பரிந்துரையை அனுப்பியுள்ளார்.

தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதற்காக நிதி ஒதுக்கிய அவர், ஆகஸ்ட் 17ம் தேதியே தனது பரிந்துரையை அனுப்பியதாக, பாஜக தலைவர்களுள் ஒருவரான ஹீரோ பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை ரேபரேலி மாவட்ட ஆட்சியர் நேஹா சர்மாவும் உறுதி செய்துள்ளார். மேலும் ஏற்கனவே உயர் கோபுர மின் விளக்குகள் தேவைப்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஊரக மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தீபாவளிக்கு முன்னதாகவே ரேபரேலிக்கு ஒளியூட்டும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தனது எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ரேபரேலியின் வளர்ச்சிக்கு செலவிட இருப்பதாக அருண் ஜேட்லி அறிவித்த போது, அவரது அறிவிப்பு காங்கிரசின் கோட்டையாக விளங்கும் ரேபரேலி தொகுதியை கைப்பற்றுவதற்கான நகர்வாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

[…]

காவல் நீட்டிப்பு
இந்தியா

ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு

ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

பசிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 30ந் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு

[…]

அதிமுகவினர்
இந்தியா

புதுச்சேரி பட்ஜெட் தாக்கலின் போது - அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர் ...

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அரசு அறிவித்த எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என புகார் கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது.

முன்னதாக சட்டப் பேரவைக்கு வந்த துணைநிலை ஆளுநருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். 
 அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்து மலர் கொத்து வழங்கி சட்டப்பேரவைக்கு அவரை அழைத்துச் சென்றார்.

அதையடுத்து ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசின் திட்டங்கள் குறித்து சட்டப் பேரவையில் உரையாற்றினார்.

அப்போது குறுக்கிட்ட அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன், கடந்த மூன்றாண்டுகளில் அவையில் அறிவிக்கப்பட்ட எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என புகார் கூறினார்.

இதையடுத்து அன்பழகன் அவையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டதையடுத்து மற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து முதல் நாள் கூட்டம் நிறைவுற்ற நிலையில், நாளை மீண்டும் அலுவல் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

[…]

பிரதமர் மோடி
இந்தியா

ஐநா.சபை பொதுச்செயலாளருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி 7 மாநாட்டின் இடையே பிரதமர் மோடி ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ கட்டாரஸை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஓரிரு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி ஐநா.பொதுச்செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் இக்கோரிக்கையை ஐ.நா.சபை நிராகரித்துவிட்டது.

சர்வதேச அளவில் சீனாவைத் தவிர எந்த ஒரு நாட்டின் ஆதரவுமின்றி பாகிஸ்தான் தனித்து விடப்பட்டுள்ள சூழலில் ஐநா.பொதுச்செயலாளரை மோடி சந்தித்துள்ளார்.

[…]

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்
இந்தியா

ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை செய்யப்படுகிறது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு உடனடியாக தடைபெற சிதம்பரம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், 21ந் தேதி இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதனிடையே, டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களைத் தொடர்ந்து, மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இன்று நடைபெறும் விசாரணையில், தன்னை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரிக்கப்படும்.

ப.சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்ட காவல் இன்றுடன் முடிவடைவதால், சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது காவலை நீட்டிக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

[…]

பிரதமர் மோடி
இந்தியா

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஜயத் விருது வழங்கப்பட்டது.

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஜயத் விருது வழங்கப்பட்டது.

காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் வலியுறுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் பெறுகிறது. 

பிரதமர் மோடி இரு நாட்டு நல்லுறவுக்கு மேற்கொண்ட பணிகளை போற்றும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆர்டர் ஆஃப் ஜயத் விருதை அறிவித்தது. இந்நிலையில் மூன்று நாடுகள் பயணத்தின் ஒரு கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இந்த விருதை பட்டத்து இளவரசரான முகமது பின் சயத் அல் நஹ்யான் வழங்கினார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் பல்வேறு நாடுகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் தோல்வியடைந்து வருகிறது.

இஸ்லாமிய நாடுகள் தங்களுக்கு ஆதரவளிக்க பாகிஸ்தான் வலியுறுத்தி வரும் நிலையில் இந்தியாவுடனான தங்கள் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் மோடிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரான முகமது பின் சயத் அல் நஹ்யானுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

[…]

டெக்கான் கிரானிக்கல் நாளிதழ் உரிமையாளர்
இந்தியா

டெக்கான் கிரானிக்கல் நாளிதழ் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை..

வங்கி கடன் மோசடி தொடர்பான வழக்கில், Deccan chronicle ஆங்கில நாளிதழின் உரிமையாளர் வெங்கட்ராம ரெட்டி மற்றும் விநாயகரெட்டியின் ஹைதரபாத் , டெல்லி இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியான சோதனைகளை மேற்கொண்டனர்.

அசையா சொத்துகள், டிஜிட்டல் ஆதாரங்கள், 5 லட்சம் ரூபாய்க்கான பழைய ரூபாய் நோட்டு கட்டுகள், இரண்டு சொகுசு கார்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடன் பெற்ற தொகை யாருக்கு திருப்பி விடப்பட்டது என்று டிஜிட்டல் ஆதாரங்களைக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

[…]

 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியா

வீட்டுக்கடன், தொழில் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தகவல்

வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழில் கடன் உள்ளிட்ட கடனுக்கான வட்டி விகிதங்களை குறைத்து, மாத தவணைகளை சுலபமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்திருக்கிறார். 

நாட்டின் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி வழங்கப்படும் என நிர்மலா அறிவித்திருக்கிறார். சி.எஸ்.ஆர் எனப்படும், கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதி அளிக்கும் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை கிடையாது என்றும், சிவில் சட்டப்படியே விளக்கம் கோரப்படும் என்றார்.

ரெப்போ வட்டி விகிதம், வங்கிகளின் வட்டி விகிதங்களோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன்மூலம், வங்கிகளே, அவர்கள் வழங்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைக்கலாம் என்றும் நிர்மலா கூறினார்.

இதன்மூலம், வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழில் கடன் ஆகியனவற்றின் மீதான வட்டி விகிதங்கள் குறைவதால், கடன்பெற்றவர்களின் மாதத்தவணை குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம், ஒருமுறைக்கு மேல், ஆதார் எண்களை கோரக் கூடாது என்றும், நிதி நிறுவனங்கள் ஆதாரை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் என்றும், நிர்மலா கூறியிருக்கிறார்.

வங்கிகள், ஒருமுறைக்கு மேல், வாடிக்கையாளரிடம் ஆதார் எண்ணை கோரக் கூடாது என்றும், நிதி நிறுவனங்கள் ஆதாரை ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும் என்றும், கடன்பெறுவோர், தமது விண்ணப்ப நிலையை, ஆன்லைன் மூலம் அறிய வழிவகை காணப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். 

[…]

ராகுல் காந்தி
இந்தியா

நாட்டின் பொருளாதார நிலைகுறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

டெல்லி : நாட்டின் பொருளாதார நிலை படுபாதாளத்துக்கு சென்று விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருவதை பல மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியை எச்சரித்தது என்று குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் கட்சி எச்சரித்ததை பாஜக அரசின் பொருளாதார ஆலோசர்களே தற்போது ஒப்புக் கொண்டதாகவும் ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.மேலும் தாங்கள் கூறிய தீர்வை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். 

[…]

கொள்ளையடித்த பெண்.
இந்தியா

வீடு புகுந்து மூதாட்டியிடம் கொள்ளையடித்த,பர்தா அணிந்து வந்த பெண்.

புதுச்சேரியில் பர்தா அணிந்து கொண்டு வீட்டிற்குள் புகுந்து மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துச் சென்ற அதே தெருவை சேர்ந்த பெண்ணை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

உருளையன்பேட்டை கோவிந்தசாலையை சேர்ந்தவர் மூதாட்டி கிளாரா. நேற்று இவரது வீட்டிற்குள் பர்தா அணிந்த படி புகுந்த பெண் ஒருவர், கிளாராவின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துச் சென்றார்.

அந்த பெண்ணை பிடிக்க முயன்ற போது சிறிய கத்தியால் வெட்டியதில் கிளாராவுக்கும், அவரது சகோதரி தேவிக்கும் லேசான வெட்டு காயங்கள் ஏற்பட்டன.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை பெரியகடை போலீசார் ஆய்வு செய்த போது, கிளாராவின் வீட்டிற்கு அருகாமையில் வசித்து வரும் மங்களேஸ்வரி என்ற பெண், சம்பவத்தன்று பர்தா அணிந்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றது பதிவாகி இருந்தது.

கைவரிசை காட்டியது அவர் தான் என்பதை உறுதி செய்து போலீசார் மங்களேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்று சவரன் செயினும் போலீசாரால் பறிமுதல் செயப்பட்டது. […]

 துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
இந்தியா

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறிய பா.சிதம்பரம் பற்றிய கார சாரமான கருத்து.

தலைமை பதவி என்பது பதவி கிடையாது, அது ஒரு பொறுப்பு என்றும், பெரிய பொறுப்புகளை வைத்துக் கொண்டு தனது சொந்த கணக்குளை தொடங்க கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த கிரண் பேடியிடம் ப.சிதம்பரம் கைது குறித்து கேட்டப் போது இவ்வாறு அவர் பதிலளித்தார்.

உரிய ஆவணங்களுடன் தான் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர் என்று தெரிவித்த கிரண் பேடி, புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் அன்றாட நடவடிக்கைளில் துணை நிலை ஆளுநர் தலையிட கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது குறித்து கேட்டதற்கு, வழக்கு விசாரணையில் உள்ளது. செப்டம்பர் 4ந்தேதி மனுதாரரிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது, முடிவு என்ன வருகின்றது என்பதை பொறுத்திருந்து பார்போம் என தெரிவித்தார். […]

கல்லூரியில் பேராசிரியருக்கு அடி உதை
இந்தியா

கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பேராசிரிய ர், பேராசிரியரை அடி பின்னி எடுத்த சக மாணவர்கள்.

தெலங்கானாவில், தேர்வறையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறி உதவிப் பேராசிரியரை மாணவர்கள் துரத்திச் சென்று பிடித்து சரமாரியாகத் தாக்கினர். தெலங்கானாவின் கரீம் நகர் மாவட்டம் திம்மாப்பூரில் உள்ளது ஸ்ரீசைதன்யா பொறியியல் கல்லூரி. அந்தக் கல்லூரியில் நேற்று துணைத் தேர்வுகள் நடந்தன. அப்போது கல்லூரி ஆய்வகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் வெங்கடேஷ் என்பவர், மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி சக மாணவிகளிடம் அந்த மாணவி கூறவே, இதை அறிந்து கொண்ட வெங்கடேஷ் தப்பிச் செல்ல எண்ணி ஓட்டம் பிடித்தார். ஆனால் மாணவர்கள் திரண்டு வெங்கடேஷை விரட்டிப் பிடித்தனர். பின்னர் சரமாரியாக அவரைத் தாக்கினர். உதவிப் பேராசிரியர் வெங்கடேசுக்கு எதிராக கல்லூரி நிர்வாகத்திடமும், காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து கரீம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

எடியூரப்பா
இந்தியா

வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் ரூ.50,000 கோடி அளவுக்கு சேதம் - எடியூரப்பா

கர்நாடகாவில் மழை வெள்ளத்துக்கு இதுவரை 48 பேர் பலியாகியுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்கு உடனடியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் கொடித்தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் வேகமாக நிரம்பின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் சிக்கி தற்போது வரை 48 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் 12 பேர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிகபட்சமாக பெலகவி மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 4 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெலகவியிலிருந்து மட்டும் சுமார் 4 லட்சத்து 8 ஆயிரத்து 322 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் சுமார் ஆயிரத்து 224 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 3 லட்சத்து 93 ஆயிரத்து 956 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழைவெள்ளத்தால் ஏராளமான கால்நடைகளோடு சேர்த்து 767 விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவில் வெள்ளப்பாதிப்புகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடியூரப்பாவுடன் சென்று விமானம் மூலம் பார்வையிட்டார். சனிக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிக பாதிப்புகளுக்கு உள்ளான பெலகவி மற்றும் பாகல்கோட் மாவட்டங்களை விமானம் மூலம் பார்வையிட்டார்.

இந்நிலையில் சிவமோகா மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் எடியூரப்பா, வெள்ளத்தால் மாநிலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் வருகிற 16ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் எடியூரப்பா கூறினார்.

இதனிடையே கர்நாடகாவின் கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் சிக்மங்களூர், ஹாசன், கொடகு, சிவமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு கேரளா, கர்நாடகா, கோவா, கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் படிப்படியாக மழை குறையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

பிரதமர் நரேந்திரமோடி
இந்தியா

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி உரை.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின், நாட்டு மக்களுக்கு முதன்முறையாக பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

சுமார் 40 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரை:
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. காஷ்மீர், லடாக் மக்கள் துயரத்தில் இருந்தனர். நீண்ட நாட்களாக இருந்த அவர்களது துயரம் தற்போது நீங்கி உள்ளது. காஷ்மீரில் புதிய சகாப்தம் துவங்கி உள்ளது. வல்லபாய் படேல், அம்பேத்கர், ஷியாம பிரசாத் முகர்ஜி ஆகியோர் இந்திய ஒற்றுமையில் உறுதியாக இருந்தனர். காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை. அமைதி நிலவுகிறது.

காஷ்மீரில் 370, 35ஏ சட்டப்பிரிவுகளால், வன்முறை, ஊழல், பயங்கரவாதம் தான் வளர்ந்தது. காஷ்மீர், ஜம்மு, லடாக் வளர்ச்சி தடைபட்டது. பயங்கரவாதத்தால் காஷ்மீரில் 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். காங்., சட்டங்களால் அங்கு ஒரு சாரார் மக்கள் மட்டுமே பயன் பெற்று வந்தனர். சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம் ஒன்றறை கோடி காஷ்மீர் மக்கள் பயன்பெற போகிறார்கள்.

காஷ்மீரில் இருந்த சட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருந்தன. 1947 க்கு பிறகு பிற மாநிங்களுக்கு உரிமைகள் கிடைத்தது. மற்ற மாநிலங்களை போல், காஷ்மீர் மக்களுக்கும் இனி சலுகைகள் கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும். குழந்தைகள், பெண்களுக்கு கல்வி, மருத்துவ வசதி, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கும். பட்டியலின, பழங்குடி மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். பிரதமரின் கல்வி உதவி தொகை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும். எரிவாயு மானியம், கல்விக்கான மானியம், வீட்டு வசதி மானியங்களை இனி காஷ்மீர் மக்களுக்கும் கிடைக்கும். இதுவரை காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும்.

தற்போது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில், காஷ்மீர், லடாக் உள்ளதால், இனி ஊழலின்றி சிறந்து விளங்கும். விமான நிலையம் உருவாக்கம், தரமான சாலை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். 3 மாதங்களுக்குள் காஷ்மீரில் நிர்வாகம் சீராகும். யூனியன் பிரதேசங்கள் என்பதே தற்காலிகமானதே. மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

ஆயிரக்கணக்கான காஷ்மீர் மக்களுக்கு மறுக்கப்பட்ட ஓட்டுரிமை வழங்கப்படும். தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் உருவாகும். காஷ்மீரில் விரைவில் தேர்தல், முழு பாதுகாப்புடன் நடத்தப்படும். காஷ்மீர், லடாக் உள்ளாட்சி தேர்தல்களில் உங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்கு அளிப்போம். கவர்னர் ஆட்சியில் காஷ்மீரில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அங்கு சென்ற போது, சாலை வசதிகள், மின்சார வசதிகள் மேம்பட்டிருந்ததை கண்டேன்.

பயங்கரவாதம், பிரிவினைவாதத்திலிருந்து காஷ்மீரை நாம் காப்பாற்ற வேண்டும். காஷ்மீரில் சாதாரண நிலை திரும்புவதால் இனி சினிமா படப்பிடிப்புகளை நடத்தலாம். ஹிந்தி, தமிழ், தெலுங்கு படத்தயாரிப்பாளர்கள் காஷ்மீரில் இனி படப்படிப்புகளை நடத்தலாம். காஷ்மீர், லடாக்கில் சுற்றுலா துறை மேம்படும். அங்கு தகவல் தொழில்நுட்பம், பிபிஓ சென்டர்களும் உருவாகும். காஷ்மீர் இளைஞர்கள் இந்தியாவின் பெயரை உலகளவில் உயர்த்துவார்கள். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.

காஷ்மீர் சால்வை, மூலிகை மருந்துகளை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முடியும். அந்த மூலிகையின் பயனை உலகமே அனுபவிக்க செய்வோம். காஷ்மீரில் இருந்து விளையாட்டு வீரர்கள் உருவாகி அவர்கள் விருதுகளை வெல்வார்கள். யூனியன் பிரதேசமானதும் லடாக்கை முன்னேற்றமடைய செய்வது மத்திய அரசின் பொறுப்பு. சோலார் மின் உற்பத்தியில் லடாக் தலைசிறந்த பகுதியாக மாறும். காஷ்மீர், லடாக்கின் எதிர்காலத்திற்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும். அவர்களுக்கு துணையாக 130 கோடி மக்கள் உள்ளனர். அவர்களின் உரிமையை யாரும் பறிக்க முடியாது. இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு அவர்களும் மாறி வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டில், மாற்றுக்கருத்து உள்ளோரை மதிக்கிறோம். ஆனால் தேச விரோத நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது. இனி காஷ்மிரிலும், லடாக்கிலும் பயங்கரவாதம் நெருங்கக்கூட முடியாது. காஷ்மீர் தான் இந்தியாவின் மகுடம்.

எல்லையில் உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை போற்றுவோம். ராணுவம், பாதுகாப்புப்படை மற்றும் போலீசார் அங்கு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். காஷ்மீர் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்கள். பக்ரீத் பண்டிகையை கொண்டாட அங்குள்ள மக்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது. காஷ்மீர், லடாக்கை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்; காஷ்மீரின் வாழ்வு சிறக்கும். அம்மக்களின் உரிமை நிலைநாட்டப்படும்; அது அவர்களுக்கு என்றென்றும் நிலைத்திருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். […]

மெகபூபா முப்தி
இந்தியா

பதவி விலகுமாறு எம்.பி.,க்களுக்கு மெகபூபா உத்தரவு

மக்கள் ஜனநாயக கட்சியின் இரண்டு ராஜ்யசபா எம்.பி.,க்களை பதவி விலக வேண்டும். இல்லையென்றால், கட்சியிலிருந்து நீக்க நேரிடும் என அக்கட்சி தலைவர் மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார்.

கைது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கான தீர்மானம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய தலைவர்களான ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர். மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கு ராஜ்யசபாவில் இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர். பதவிவிலகும்படி அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எச்சரிக்கை:
இது தொடர்பாக, முப்திக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், மெகபூபா, வீட்டில் இருந்து விருந்தினர் மாளிகையில் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார். அவர், தனது கட்சி எம்.பி.,க்களுக்கு பதவி விலக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மறுத்தால், கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மிர் முகமது பயாஸ் மற்றும் நஜீர் அகமது ஆகியோர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ளனர். காஷ்மீர் மசோதா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட உடனே, அதனை கிழித்தனர்.

பதவி விலகுவது தொடர்பாக பயாஸ் கூறுகையில், நாங்கள் பதவி விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இது குறித்து விவாதிக்க மேலிட தலைவர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். ஆனால், தொலைதொடர்பு சாதனங்கள் செயல்படாததால், யாருடனும் ஆலோசனை நடத்த முடியவில்லை. அவர்களுடன் பேசி எங்களது முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி ஆட்சி:
கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு, பாஜ., ஆதரவுடன் மெகபூபா முப்தி முதல்வராக பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், பா.ஜ., ஆதரவை விலக்கி கொண்டதால், மெகபூபா தனது பதவியை ராஜினாமா செய்தார். அது முதல் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

உள்துறை அமைச்சர் அமித்ஷா
இந்தியா

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ரத்து: அமித்ஷா

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கொண்ட 35 ஏ மற்றும் 370 என்ற அரசியல் சட்டமைப்பு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இவரது அறிவிப்பின்போது எதிர்கட்சியினர் பெரும் கோஷங்கள் எழுப்பினர். இதற்கான முடிவு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் காஷ்மீருக்கான 4 சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் மேலும் கூறினார்.ஜனாதிபதி கையொப்பம் இட்ட பின்னர் இது அமலுக்கு வரும். இந்த சட்டம் கொண்டு வருவதால் அனைத்து சிறப்பு அந்தஸ்தையும் காஷ்மீர் இழக்கிறது. மேலும் பார்லி.,யில் இயற்றும் சட்டங்களுக்கு காஷ்மீர் கட்டுப்பட வேண்டிய அவசியத்திற்கு வருகிறது. மாநிலத்திற்கான தனி சட்டம் இனி செல்லுபடியாகாது.

இவரது அறிவிப்பின் போது எதிர்கட்சி எம்பி.,க்கள் பலத்த எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.. […]

அமைச்சரவைக் கூட்டம்
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. காஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதுகுறித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு படைகள் குவிப்பு, அமர்நாத் யாத்திரை ரத்து, சுற்றுலாப் பயணிகள் வெளியேற உத்தரவு, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் வீட்டுக் காவலில் அடைப்பு, தலைநகர் ஸ்ரீநகரில் 144 தடையுத்தரவு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மொபைல் இண்டர்நெட் சேவை துண்டிப்பு என காஷ்மீர் விவகாரத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ மற்றும் 370ஆவது பிரிவுகளை நீக்குதல் அல்லது திருத்துதல், ஜம்மு-காஷ்மீரை ஜம்மு, காஷ்மீர், லடாக் என மூன்றாகப் பிரித்தல் போன்றவற்றிற்காக இந்த முன்னேற்பாடுகள் செய்யப்படுவதாக, காஷ்மீர் முழுவதும் ஊகத் தகவல்கள் பரவியுள்ளன.

அதேசமயம், எல்லைக்கு அப்பாலிருந்து தீவிரவாதச் செயல்கள் ஊக்குவிக்கப்படலாம் என்றும், தீவிரவாதிகள் ஊடுருவி சதிச்செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்டுள்ளதால் அதை முறியடிப்பதற்காகவுமே பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதற்கு அவசரம் இன்று அல்லது நாளைக்குள் கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும் என ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று கூறியிருந்தார். எதுவாக இருந்தாலும் ரகசியமாக செய்யப்படாது என்றும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்பதால் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முழுவதும் அமித்ஷா ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று காலை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவும் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. இதற்கிடையே, பிரதமரின் இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் கூடியதும் மாநிலங்களவையில் முற்பகல் 11 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறார். பின்னர் அவர் நண்பகல் 12 மணிக்கு மக்களவையிலும் பேச உள்ளார். இதில் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

பிரதமர் மோடி
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்...

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரிகளில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் படை பலம் அதிகரிக்கப்பட்டது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்த இந்த ஆலோசனையில், உள்துறை செயலர் ராஜிவ் கவ்பா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார், ரா அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் காஷ்மீர் தீவிரவாதிகள் ஊடுருவல், பாதுகாப்பு நிலவரம், அமர்நாத் யாத்ரீகர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் அமித் ஷா 3 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது. இதில் காஷ்மீர் தொடர்பான ஆலோசனைக்குப் பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

ராகுல் காந்தி
இந்தியா

ராகுலின் ராஜினாமாவை ஏற்காத காரிய கமிட்டி..

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க, காங்கிரஸ் காரியக் கமிட்டி அடுத்த வாரம் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதனை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்கனவே நிராகரித்துவிட்டது. இந்நிலையில், தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டதாகவும், புதிய தலைவரை காங்கிரஸ் காரிய கமிட்டி விரைவில் கூடி தேர்வுசெய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி நேற்று கூறினார். டுவிட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றிய குறிப்பில், காங்கிரஸ் தலைவர் என்ற வார்த்தைகளை ராகுல் காந்தி நீக்கியுள்ளார்.

இதனால், கட்சியின் இடைக்காலத் தலைவராக மூத்த உறுப்பினரான மோதிலால் வோரா செயல்படுவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மறுத்துள்ளனர். அடுத்த காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்று, ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்கும் வரை, தலைவராக அவரே நீடிப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கட்சிக்கு தற்போது நெருக்கடியான நேரம் என்று குறிப்பிட்டுள்ள பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், அனைவரும் ஒருங்கிணைந்து இதனை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், ஜிதின் பிரசாதா, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா உள்ளிட்ட தலைவர்களும், ராஜினாமா முடிவை ராகுல் காந்தி கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் காரிய கமிட்டியும், மூத்த தலைவர்களும் ஒருங்கிணைந்து ராகுலை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொள்வோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். […]

மும்பையில் மழை
இந்தியா

மும்பையில் 3 நாள்களாக கொட்டித் தீர்க்கும் மழை! 16 பேர் உயிரிழந்த சோகம்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இரண்டு வெவ்வேறு இடங்களில் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்துவருகிறது. இதன் காரணமாக, மும்பையில் பெரும்பாலன பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், வெள்ளத்தில் மிதக்கும் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில், அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் மழை நீரில் மூழ்கியுள்ளதால், மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மும்பையின் பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கல்யான் என்ற மற்றொரு இடத்திலும் கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. அந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், பால்கார் பகுதியில் 340 மி.மீட்டர் மழையும், தஹானு பகுதியில் 299 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பல பகுதியில் 200 மி.மீட்டருக்கு அதிகமாக மழை பதிவாகியுள்ளது. […]

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
இந்தியா

ஹைட்ரோ கார்பன்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தமிழக தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள், வேதாந்தா நிறுவனம் ஆகியவை இணைந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. இதை எதிர்த்து டெல்டா பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்டா விவசாயிகள் பிரச்சினை குறித்து இன்று ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அதில் பேசிய டி.ஆர்.பாலு, காவிரி டெல்டா விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாகவே கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். கதிராமங்கலம், நெடுவாசல் கிராமங்கள் வெயில், மழை என்று பாராமல் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் பெட்ரோலியத் துறை அமைச்சகத்துக்கு நேரடியாக ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். நீங்கள் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா முழுதும் எண்ணெய் இருக்கிறது என்று சகட்டுமேனிக்கு கிணறுகளைத் தோண்டுகிறீர்கள், குழாய்களை பதிக்கிறார்கள். இந்தத் திட்டத்தில் இறங்குவதற்கு முன் அந்த மண்ணை பற்றிய புள்ளி விவரங்கள் உங்களிடம் இருக்கிறதா? டெல்டாவின் நிதி தொடர்பான தரவுகள், டெல்டாவின் சமூக பொருளாதார தரவுகள் உங்களிடம் இருக்கிறதா?

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்கள் மக்களைத் திரட்டி மத்திய அரசை எதிர்த்து கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அரசு யார் மீதும் எதையும் திணிப்பதில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உங்கள் கேள்விகளுக்கு எங்களிடம் பதில்கள் இருக்கின்றன.

தமிழகத்தின் மூத்த தலைவர்களை அழைத்துக் கொண்டு வாருங்கள். இதுபற்றி பேசுவோம், விவாதிப்போம். அவர்களின் ஒப்புதலுடன் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். […]

மத்திய மந்திரி பஸ்வான்
இந்தியா

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஒரு ஆண்டுக்குள் அமல்படுத்த மாநில அரசுகளுக்கு கெடு - மத்திய மந்திரி பஸ்வான்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஒரு ஆண்டுக்குள் அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கெடு விதித்து இருப்பதாக மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுகிறார்கள்.

இந்த நிலையில் மத்திய உணவுத்துறை மந்திரி பஸ்வான் நேற்று முன்தினம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசுகையில், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாகவும், இந்த திட்டத்தின் மூலம் ஏழைகள் நாட்டின் எந்த மூலையிலும் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட் களை பெற முடியும் என்றும், இதனால் ஒரு குடும்பத்தினர் பல ரேஷன் கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்றும் கூறினார்.

மந்திரி பஸ்வான் நேற்று இந்த புதிய திட்டம் குறித்து டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, மராட்டியம், ராஜஸ்தான், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 10 மாநிலங்களில் பொது வினியோக திட்டங்களில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளும் வசதி உள்ளது. இன்னும் ஓர் ஆண்டுக்குள், அதாவது அடுத்த ஆண்டு ஜூன் 30-ந் தேதிக்குள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்துமாறு மாநிலங்களுக்கு கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வாங்க பி.ஓ.எஸ். கருவி பயன்படுத்தப்படுவதால், இந்த மாநிலங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை எளிதில் செயல்படுத்த முடியும். நாடு முழுவதும் உள்ள 89 சதவீத பயனாளிகளின் ஆதார் கார்டுகள், ரேஷன் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. 77 சதவீத ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ். கருவிகள் உள்ளன.

இதனால் இந்த புதிய திட்டத்தின் கீழ் பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தங்கள் ஆதார் கார்டுகளை காட்டி பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். தங்களுக்குரிய குறிப்பிட்ட ரேஷன் கடையில் மட்டும் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால்தான் ரேஷன் கார்டு தேவை.

இந்த புதிய திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புக்காக நாடு முழுவதும் இடம் பெயர்ந்து செல்லும் மக்கள்தான் அதிகம் பயன்பெறுவார்கள். ஒரு ரேஷன் கடையை மட்டுமே சார்ந்து இருக்க தேவை இல்லை. போலி ரேஷன் கார்டுகளும் ஒழிக்கப்படும். இவ்வாறு மந்திரி பஸ்வான் கூறினார். […]

அப்துல்லாகுட்டி பாஜகவில்
இந்தியா

காங்கிரசிலிருந்து நீக்கப்பட்ட அப்துல்லாகுட்டி பாஜகவில் இணைந்தார்..

சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து பதிவு வெளியிட்டதற்காக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் அப்துல்லாகுட்டி பாஜகவில் இணைந்துள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவு குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அப்துல்லாகுட்டி, மோடியின் சிறந்த செயல்பாடுகளே மக்களவை தேர்தலில் பாஜக பெற்ற வெற்றிக்கு காரணம் எனக் கூறியிருந்தார். அவரது கருத்தானது அம்மாநில அரசியலில் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் தன்னை அவர் தற்போது இணைத்துக்கொண்டுள்ளார். குஜராத் மாநில முதலமைச்சராக பணியாற்றிய மோடியை புகழ்ந்து பேசியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கடந்த 2009ஆம் ஆண்டு விலக்கப்பட்ட அப்துல்லாகுட்டி, அதன் பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. […]

விபத்தில் மரணம்
இந்தியா

உத்தரகாண்ட் அமைச்சரின் மகன் விபத்தில் மரணம்:

உத்தரகாண்ட் அமைச்சர் அரவிந்த் பாண்டேவின் மகன் அங்குர் பாண்டே இன்று அதிகாலை 3 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் பரேய்லி மாவட்டத்தில் உள்ள ஃபரிதாப்பூர் அருகே காரில் தனது நண்பர்களுடன் நண்பரின் திருமணத்துக்காகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் அவர்களது காரும் டிரக்கும் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அங்குர் உயிரிழந்தார். அவர்களுடன் பயணித்த நண்பர்கள் இருவரும் உயிரிழந்தனர். […]

சென்னை உள்பட 21
இந்தியா

இந்தியாவில் சென்னை உள்பட 21 நகரங்கள் நிலத்தடி நீர் இல்லாமல் 10 கோடி மக்கள் பாதிப்பு

நிதி ஆயோக் நடத்திய ஆய்வின்படி, தலைநகர் புதுடெல்லி மற்றும் பெங்களூரின் தகவல் தொழில்நுட்ப மையம் உட்பட 21 இந்திய நகரங்கள் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்படும் என கூறி உள்ளது .

மத்திய நீர் வளத்துக்கான நிலைக்குழுவின் 23-வது (2017-18) அறிக்கை, 2020-ல் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போய்விடும் என்றும், இதனால் 10 கோடி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சென்னை ஒரு மோசமான நெருக்கடியை சந்தித்து வருகிறது.

உலகிலுள்ள நாடுகளில் அதிகமாக நிலத்தடி நீரை இன்று உறிஞ்சும் நாடாக மாறியிருக்கிறது இந்தியா. தற்போது 2.1 கோடி கிணறுகள் மூலமாக ஓர் ஆண்டில் ஏறக்குறைய 253 கன கிலோ மீட்டர் (பிசிஎம்) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. அதாவது, ஓர் ஆண்டில் பயன்படுத்தக்கூடியதாக மதிப்பிட்டுள்ள மொத்த நிலத்தடி நீர் 411 பிசிஎம், இதில் 62%-த்துக்கும் மேலாகத் தற்போது உறிஞ்சப்படுகிறது.

தமிழகத்தில், ஓர் ஆண்டில் பயன்படுத்தக்கூடிய நிலத்தடி நீரின் அளவு 18.59 பிசிஎம், இவற்றில் 77%-த்துக்கும் மேலாகத் தற்போது பயன்படுத்தப்பட்டுவிட்டது. அதிகரிக்கும் நீர்த் தேவை நிலத்தடி நீரை அதிகமாகச் சுரண்டும் பெரிய மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. கணக்கிடப்பட்டுள்ள 32 தமிழக மாவட்டங்களில், 17 மாவட்டங்களில் நிலத்தடி நீர் 80%-த்துக்கும் மேலாகச் சுரண்டப்பட்டுவிட்டதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. இதற்கு மேல், இம்மாவட்டங்களில் நிலத்தடி நீரை உறிஞ்சுவது பெரிய பாதக விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான மழையைப் பெறுகிறது. நாட்டின் மத்திய நீர் ஆணையத்தின் கூற்றுப்படி, ஆண்டுக்கு 3,000 பில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது மற்றும் 4,000 பில்லியன் கன மீட்டர் மழையைப் பெறுகிறது.ஆனால் திறமையின்மை மற்றும் தவறான பயன்பாட்டால் அதிகப்படியான நீர் வீணடிக்கப்படுகிறது.

இந்தியாவின் வடமேற்கில் நிலைமை குறிப்பாக மோசமானது, இமயமலையில் எழும் பெரிய ஆறுகளால் பாசனம் செய்யப்படுகிறது.

1970 ஆம் ஆண்டு பசுமைப் புரட்சி தொடங்கிய பிறகு, வீரிய ரக விதைகள், ரசாயன உரங்களோடு நிலையான நீர்ப்பாசனமும் தேவைப்பட்டது. ஆழ்குழாய்க் கிணறு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அபரிமித வளர்ச்சியால், 1990-க்குப் பிறகு நிலத்தடி நீரின் உபயோகம் பன்மடங்காக அதிகரித்தது.

2000-01க்குப் பிறகு நிலத்தடி நீர்த் தேவை மேலும் அதிகரித்தது. இந்தக் காரணங்களால், 1960-61ல் 7.30 மில்லியன் ஹெக்டேர்களாக இருந்த நிலத்தடி நீர்ப்பாசனப் பரப்பளவு, 2016-17ல் 71 மில்லியன் ஹெக்டேர்களாக அதிகரித்துவிட்டது. அதாவது, மொத்த நீர்ப்பாசனப் பரப்பளவில் நிலத்தடி நீரின் பங்கு 29%-லிருந்து 68%-ஆக அதிகரித்துள்ளது.

தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்படி, 2000-01ல் மொத்தமாக 18.33 லட்சம் கிணறுகள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன, அவற்றில் 1.59 லட்சம் கிணறுகள் உபயோகத்துக்குப் பயன்படாமல் போய்விட்டன. அதிக அளவு நிலத்தடி நீரை இவை உறிஞ்சுவதால், குறைந்த ஆழமுடைய கிணறுகளில் நீர் வற்றி அவை பயனற்றுப் போய்விட்டன.

நிலத்தடி நீர் வாரியத்தின் புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 1,139 வட்டங்களில், 96 வட்டங்களில், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது.

இந்தியாவில் மொத்தமாகவுள்ள 6,584 வட்டங்களில், 32% வட்டங்களில் நிலத்தடி நீர்ச் சுரண்டல் அளவுக்கு அதிகமாக உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது போன்ற பகுதிகளில் சொட்டு நீர்ப்பாசனம் மூலமாகப் பயிர் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் நிலத்தடி நீர்த் தேவையைக் குறைக்க முடியும். விவசாயத்தில் மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும் நீர்த் தேவையைக் குறைக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். […]

காங்கிரஸ் தலைவர்
இந்தியா

காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர வலியுறுத்தி ராகுல்காந்தி வீட்டு முன் இளைஞரணி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்.

சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் உறுதியாக உள்ளேன், அதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என ராகுல்காந்தி கூறினார்.

ராகுல்காந்தி தலைவராக தொடர வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டிற்கு வெளியே இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி தனது ராஜினாமாவை திரும்பப் பெற்று, கட்சித் தலைவராக தொடருமாறு வலியுறுத்தினர். […]

ஆந்திர அரசியல் களம்
இந்தியா

சந்திரபாபுவுக்கு கட்டிய சொகுசு பங்களா இடித்து தரைமட்டம்.. ஜெகன்மோகன் அரசு அதிரடி நடவடிக்கை..

கிருஷ்ணா நதிக் கரையில் சந்திரபாபு நாயுடு அரசு கட்டிய 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா, ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவின் பேரில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு, 2017ஆம் ஆண்டில் கிருஷ்ணா நதிக்கரை ஓரம் அரசு செலவில் 5 கோடி ரூபாய் மதிப்பில் பிரஜா வேதிகா என்ற பங்களாவைக் கட்டினார்.

உண்டவல்லி என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள அந்தக் கட்டிடத்திற்கு அருகிலேயே சந்திரபாபு நாயுடுவின் மாளிகையும் உள்ளது. பிரஜா வேதிகாவை, அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக அவர் பயன்படுத்தி வந்தார். முக்கியக் கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளும் அங்கு தான் நடக்கும். ஆனால் பிரஜா வேதிகாவும், சந்திரபாபு நாயுடுவின் மாளிகையும், கிருஷ்ணா நதிக்கரையில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வந்தது.

தற்போது அக்கட்சி ஆட்சியைப் பிடித்து, ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராகியுள்ள நிலையில், பிரஜா வேதிகா உள்பட, கிருஷ்ணா நதிக்கரை ஓரம் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரஜா வேதிகாவில் நேற்று நடந்த மாவட்ட ஆட்சியர்கள் சந்திப்புக் கூட்டத்தின் போது இந்த அறிவிப்பை, ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார். அப்போது பேசிய அவர், பிரஜா வேதிகாவில் கூட்டம் நடப்பது இதுவே கடைசியாக இருக்கும் என்றும், புதன் கிழமை அதிகாலை இடித்து தரைமட்டமாக்கப்படும் என்றும் கூறினார்.

இதை அடுத்து, கண்ணாடிச் சுவர் மாளிகையை தரைமட்டமாக்கும் பணி அதிகாலை தொடங்கியது. கிருஷ்ணா நதிக்கரையில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் பங்களாவும் இடிக்கப்பட உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். முன்னதாக பிரஜா வேதிகா பங்களாவை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்குமாறு, அரசுக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்து இருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் அந்த பங்களாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்ட ஜெகன் மோகன் ரெட்டி, பிரஜா வேதிகாவை இடிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. […]

வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ராவேஷ்
இந்தியா

வெளிநாட்டு நிறுவனம் எங்கள் குடிமகன்கள் பற்றி பேசுவதற்கு உரிமை இல்லை...இந்திய வெளியுறவுத்துறை ஆவேசம்

எங்கள் நாட்டு மத சுதந்திரம் குறித்து கேள்வியெழுப்பவும், உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடவும் எந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், அரசுக்கும் உரிமையில்லை என அமெரிக்காவுக்கு இந்தியா காட்டமான பதில் அளித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை, 2018 ம் ஆண்டிற்கான சர்வதேச அளவிலான மத சுதந்திரம் என்ற பெயரில் ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள், மற்றும் அவர்களை சார்ந்த அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் அந்தஸ்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதக் கலவரங்கள், மத வெறியை ஊக்குவிக்கும் கொலைகள், தாக்குதல்கள் அரங்கேறி வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அடித்துக் கொல்லும் நிகழ்வுகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முஸ்லிம் பெயரில் இருக்கும் நகரங்கள், தெருக்கள் பெயர்களை மாற்றம் செய்து வரலாற்று இருட்டடிப்பு செய்வதாகவும் அமெரிக்க அறிக்கை விமர்சித்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் 18 தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மதபோதகர்களுக்கு எதிராக 300 முதல் 500 வரையிலான தாக்குதல்களை தொண்டு நிறுவன்கள் ஆவணப்படுத்தி இருப்பதை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை ஆவேசமாக பதிலளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ராவேஷ் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா வலிமையான சக்தி மிகுந்த ஜனநாயகத்தன்மையை கொண்டது. இங்கு அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் அரசால் பாதுகாக்கப்படுகின்றன. குறிப்பாக, சிறுபான்மையினரின் நலன்கள் அரசமைப்புச்சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது. மதச்சார்பின்மை கூறுகளால் இந்தியா பெருமைப்படுகிறது.

மிகப் பெரிய ஜனநாயகம் மற்றும் பன்மைவாத சமூகத்தை நீண்ட கால அர்பணிப்பின் மூலம் கொண்டுள்ளோம். இந்திய அரசியல் சாசனம், அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்கிறது. எந்த வெளிநாட்டு அரசும், எங்கள் நாட்டின் மத சுதந்திரம் குறித்தும், குடிமக்களின் உரிமைகள் குறித்தும் கேள்வியெழுப்ப தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் 25-ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்திய வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. […]

நிர்மலா சீதாராமன்
இந்தியா

ஊழல், பாலியல் தொல்லை புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் பணி நீக்கம் - நிர்மலா சீதாராமன்

ஊழல், முறைகேடு, பாலியல் தொல்லை உள்ளிட்ட புகாரின் காரணமாக வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேரை மத்திய அரசு அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 354 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து மே 30-ம் தேதி புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்றது. கடந்த முறை ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், இந்த முறை நிதியமைச்சராக பொறுப்பேற்றார். இந்திராகாந்திக்கு பிறகு பொறுப்பேற்ற முதல் பெண் நிதியமைச்சர் என்பதால் அவரது தலைமையில் நிதி அமைச்சகம் பல அதிரடி முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் நிதியமைச்சகத்தின் விதி எண் 56-இன் கீழ் மூத்த அதிகாரிகள் சிலருக்கு நிதி அமைச்சகம் சார்பில் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்திய வருவாய்த் துறையில் ஆணையர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர், இரு பெண் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கிய வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவரும் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகிள்ளார்.

மேலும் இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி பெரிய அளவில் ஊழல் செய்திருப்பதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போன்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 12 அதிகாரிகளை பணிநீக்கம் செய்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

வைரவியாபாரி ஜதின் மேத்தா
இந்தியா

ஏழாயிரம் கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவான வைரவியாபாரி

வங்கிகளில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துவிட்டு தலைமறைவான வைரவியாபாரி ஜதின் மேத்தா மீது, மேலும், 3 வழக்குகளை பதிவு செய்துள்ள சிபிஐ, கோயம்புத்தூர், அகமதாபாத் உட்பட அவரது நிறுவன இயக்குநர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 9 இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

இந்த வகையில், ஜதின் மேத்தா நிறுவனத்தின் முழுநேர இயக்குநர்களில் ஒருவரான, கோயம்புத்தூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ராமசாமி என்பவரின், கோயம்புத்தூர் இல்லத்தில், சிபிஐ சோதனை மேற்கொண்டிருக்கிறது. இதேபோல், மற்றொரு முழுநேர இயக்குநரான ரமேஷ் பரிக் என்பவரின், மும்பை இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது.

இதுதவிர, FPJD நிறுவனத்தின், மும்பை, மற்றும் அகமதாபாத் அலுவலகங்களிலும், சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. ஏற்கனவே, ஜதின் மேத்தா மீது, 14 வங்கிகளில், 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவரை இயக்குநராக சேர்த்து, 700 கோடி ரூபாய் மோசடி செய்தது உட்பட 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, ஜதின் மேத்தா மீது புதியதாக 3 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. […]

பஞ்சாப்பின் பதான்கோட் சிறப்பு நீதிமன்றம்
இந்தியா

ஜம்மு - கதுவா சிறுமி பாலியல் வன்முறை வழக்கில் இன்று தீர்ப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், பஞ்சாப்பின் பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில், நாடோடிப் பழங்குடியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜனவரியில் கடத்தப்பட்டு, கிராமத்தில் உள்ள கோவிலில் 4 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அந்த சிறுமியின் உடல் சிதைந்த நிலையில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கில் முக்கிய குற்றவாளியான, ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அலுவலர் சஞ்சி ராம் என்பவன், அவனது மகன் விஷால், கூட்டாளி ஆனந்த் தத்தா உள்ளிட்டோருக்கு ஆதரவாக, பாஜகவை சேர்ந்த 2 உள்ளூர் தலைவர்கள் ஊர்வலம் நடத்தியதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

சிறுமியின் தரப்பு வழக்கறிஞராக இருந்த தீபிகா ரஜவத்துக்கும் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 3ஆம் தேதி விசாரணை நிறைவுற்றது.

இன்று தீர்ப்பு வழங்கப்படுவதால் பதான்கோட் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. […]

 மம்தா
இந்தியா

அதிகாரம் இல்லாத நிதி ஆயோக்: மம்தா பானர்ஜி

அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் அமைப்பால் மாநிலங்களுக்கு எந்த வகையிலும் உதவ முடியாது என மேற்குவங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு, மம்தா கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், அடுத்த வாரம் டில்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள போவதில்லை. மத்திய அரசிடம் தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது. நிதி அதிகாரம் எதுவும் இல்லாத நிதி ஆயோக் அமைப்பால் மாநிலங்களுக்கு எந்த வகையிலும் உதவ முடியாது.

நிதி ஆயோக் அமைப்பிற்கு நிதி அதிகாரங்களை வழங்க வேண்டும். மாநில அரசுகளின் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அதிகாரம் வழங்க வேண்டும். எந்த அதிகாரமும் இல்லாத அமைப்பின் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதால் தனக்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு மம்தா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 15 ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவின் போது அனுப்பப்பட்ட அழைப்பை ஏற்க மறுத்த மம்தா, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. […]

அமித் ஷா
இந்தியா

அமித் ஷாவுக்கு ஒதுக்கப்படும் வாஜ்பாய் இருந்த வீடு

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மத்திய டெல்லியில் உள்ள கிருஷ்ணா மேனன் மார்க் பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் வாழ்ந்துவந்தார். 2004-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமாக இருந்தபோது அந்த வீட்டுக்குக் குடியேறினார். சுமார் 14 ஆண்டுகளாக வாஜ்பாய் அங்கு வாழ்ந்துவந்தார்.

வாஜ்பாய்க்கு 13 தான் அதிர்ஷ்டமான எண். ஆனால், அந்த வீட்டின் எண் 8 என இருந்தது. எட்டு, வாஜ்பாய்க்கு அதிர்ஷ்டமே இல்லாத எண். அதனால், அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தன் வீட்டு எண்ணை 6A என மாற்றிக்கொண்டார்.
தற்போது அந்த வீட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க-வின் தேசியத் தலைவருமான அமித் ஷா குடியேற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வாஜ்பாய் இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் அந்த வீட்டை காலிசெய்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர். சமீபத்தில் வாஜ்பாயின் வீட்டைப் பார்வையிட்ட அமித் ஷா, அங்குதான் வசிக்க வேண்டும் என விருப்பப்பட்டு, வீட்டில் சில மாற்றங்களைச் செய்யக் கூறியுள்ளார்.

அதன்படி, தற்போது அந்த வீட்டில் சில வேலைகள் நடந்துவருகின்றன. அவை முடிந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் அமித் ஷா தன் குடும்பத்துடன் கிருஷ்ணா மேனன் மார்க் பகுதிக்குச் செல்வார். அதை வீடு என்று சொல்வதைவிட பங்களா என்றே கூற வேண்டும். அங்குள்ள ஒவ்வொரு பொருளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாம். அங்குள்ள அறைகள், மரச் சாமான்கள், கழிவறைகூட பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாம். அந்த பங்களாவுக்குதான் அமித் ஷா செல்கிறார்.
வாஜ்பாயைத் தவிர வேறு சில தலைவர்களும் அந்த வீட்டில் வசித்துள்ளனர். வாஜ்பாய்க்கு முன்னதாக அங்கு தி.மு.க-வின் முரசொலி மாறன் தங்கியிருந்துள்ளார். 2003-ம் ஆண்டு அவர் இறந்த பிறகு வீடு காலி செய்யப்பட்டது. வாஜ்பாய் தன் வீட்டு எண்ணை மாற்றியதற்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

பி.வி. நரசிம்ம நாவ் பிரதமாக இருந்த காலத்தில், அவரது அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, மன்மோகன் சிங்கும் ஐந்து வருடங்கள் கிருஷ்ணா மேனன் மார்க் வீட்டில் வசித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். […]

குடியரசுத் தலைவர்
இந்தியா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி சந்திப்பு

16 ஆவது மக்களவையைக் கலைக்கவும், 17 ஆவது மக்களவையை ஏற்படுத்த பரிந்துரை செய்யவும் இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். […]

பாஜக கூட்டணி
இந்தியா

பாஜக கூட்டணி முன்னிலை!

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

குறிப்பாக வடமாநிலங்களில் அக்கட்சி அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தற்போது வரை பாஜக தலைமையிலான கூட்டணி 335 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் கூட்டணி 95 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் முன்னிலையில் உள்ளனர்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னடைவை சந்தித்துள்ளார்.

ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி 335 தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது.. […]

நிலநடுக்கம்
இந்தியா

அந்தமானில் காலையிலேயே கட்டிடங்களை குலுக்கிய நிலநடுக்கம்.

அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின.

அந்தமானில் இன்று காலை 6.09 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் அச்சமடைந்து தெருக்களுக்கு ஓடிச் சென்றனர்.

நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், சுனாமி ஏற்படும் அச்சம் இருப்பதாக பதற்றம் நிலவியது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

10 கி.மீ தூரத்திற்கு இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமானில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ஏப்ரல் 1ம் தேதி ஒரே நாளில் 20 முறை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

தீவிரவாதிகள் தாக்குதல்
இந்தியா

தீவிரவாதிகள் திடீர் தாக்குதல், எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் பலி.

அருணாச்சலபிரதேசத்தில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் என்.பி.பி. கட்சி எம்.எல்.ஏ. திரோங் அபோ உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் முடிவடைந்து நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் அருணாச்சலபிரதேசத்தில் இன்று தீவிரவாதிகள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் என்.பி.பி. கட்சி எம்.எல்.ஏ. திரோங் அபோ உட்பட 7 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் என்.எஸ்.சி.என். தீவிரவாத குழுவினர் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மேகாலயா மாநில முதல்வர் கன்ராட் சங்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அருணாசலப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு கோன்சா பகுதியில் போட்டியிட்டவர் திரோங் அபோ என்பதும், 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. […]

விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர்
இந்தியா

கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக விருந்து - ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா, டெல்லியில் நாளை இரவு விருந்தளிக்கிறார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கூட்டணி 100 முதல் 130 இடங்களுக்கு மட்டுமே வெற்றிபெறும் என்றும் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. ஒரேயொரு கருத்துக் கணிப்பு மட்டும் காங்கிரஸ் கூட்டணி அதிகபட்சமாக 165 இடங்களில் வெற்றிபெறும் என கூறியுள்ளது.
அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெறும் என்றே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக முகாமில் பெரும் உற்சாகம் காணப்படுகிறது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா டெல்லியில் நாளை இரவு விருந்தளிக்கிறார். மத்திய அமைச்சர்களும் இந்த விருந்தில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்க உள்ளார். இதற்காக நாளை காலை அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். முன்னதாக இன்று இரவு கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. விருந்தில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்படுகிறார். […]

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி
இந்தியா

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி... பேச்சுவார்த்தையைத் தொடங்கிய காங்கிரஸ்...

ராகுலை பிரதமராக முன்னிறுத்தினால், பிற கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதை காங்கிரஸும் உணர்ந்துள்ளது. வயதில் இளையவரான ராகுல் எடுக்கும் முயற்சிகளுக்கு தலைவர்கள் முட்டுக்கட்டை போடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையாலும் சோனியா காந்தியே அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காகவே மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் தேர்தல், மே 19 அன்றுடன் முடிவடைகிறது. மே 23 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்போம் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. ஆனால், பாஜக கூட்டணிக்கு 200-க்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் குழப்பமாகவே வெளிவந்துள்ளன. பாஜக மெஜாரிடிக்குக் குறைவாக எவ்வளவு இடங்களைப் பிடித்தாலும், அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்கும் வேலையில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.
அந்தப் பணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியே களமிறங்கியுள்ளார். உடல்நிலை பாதிப்பு, ராகுலுக்கு வழிவிடுவதற்காகவும் தீவிர அரசியலில் இருந்து சோனியா காந்தி விலகினார். தற்போது மோடி ஆட்சி மீண்டும் அமையக் கூடாது என்பதற்காக மீண்டும் அவர் களமிறங்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில்தான் மே 23 அன்று காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்துக்கு ராகுலை தவிர்த்து சோனியா சார்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
ராகுலை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தபோதும், அதை பிற எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவும் இல்லை. ராகுலை பிரதமராக முன்னிறுத்தினால், பிற கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதை காங்கிரஸும் உணர்ந்துள்ளது. வயதில் இளையவரான ராகுல் எடுக்கும் முயற்சிகளுக்கு தலைவர்கள் முட்டுக்கட்டை போடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையாலும் சோனியா காந்தியே அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு முறை ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்திதான் இருந்தார். சோனியா காந்தி மீது பல கட்சித் தலைவர்களும் மதிப்பு வைத்திருப்பதால், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒவ்வொரு எதிர்க்கட்சியுடனும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் சோனியா காந்தியின் ஆலோசனையில் பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதாதளத் தலைவருமான நவீன் பட்நாயக்குடன் காங்கிரஸ் மூத்த தலைவரும் ம.பி. முதல்வருமன கமல்நாத் பேசிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மு.க. ஸ்டாலினை தவிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அஹமது படேல் ஆகியோர் சந்திரசேகர ராவ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயாவதி, அகிலேஷ் ஆகியோருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தைககளைத் தொடங்கியிருப்பதாகவும் பேசப்படுகிறது. மம்தாவுடன் சந்திரபாபு நாயுடு பேசிவரும் நிலையில், மே 19-க்கு பிறகு சோனியா காந்தி பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தொடங்கியிருக்கும் வேளையில் சோனியா தீவிர அரசியலுக்குத் திரும்பியிருப்பதும் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. […]

மாயாவதி, அகிலேஷ்
india

பிரதமராக தகுதியானவர் மாயாவதி : அகிலேஷ்

மிகுந்த அரசியல் அனுபவம் உளள மாயாவதி பிரதமராக வர அனைத்து தகுதிகளும் உடையவர் என அகிலேஷ் கூறினார். லோக்சபா தேர்தலையொட்டி உ.பி. மாநிலத்தில் இரு பெரும் கட்சிகளான மாயாவதியின் பகுஜன் சமாஜ், முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதிகட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. சமாஜ்நவாதி கட்சியின் அகிலேஷ் நேற்று டி.வி. சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டி, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக உ.பி.யில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய லோக் தள் ஆகிய கட்சிகளை கொண்ட எங்கள் கூட்டணியில் இணைய காங். விரும்பியது.ஆனால் ராகுல் எங்கள் கூட்டணியை ஏற்க விரும்பவில்லை. அது எங்களுக்கு நல்லதாக அமைந்துவிட்டது. மே.23-ம் தேதிஓட்டு எண்ணிக்கைக்கு பின் மத்தியில் அரசியல் மாற்றம் ஏற்பட போகிறது. மாயாவதி மிகுந்த அரசியல் அனுபவமும் உள்ளவர். உ.பி.யில் பல முறை முதல்வராக இருந்து சிறந்த நிர்வாகத்தினை அளித்துள்ளார். அவர் பிரதமராக வர அனைத்து தகுதிகளும் உள்ளன என்றார். […]

மே 23 ஆம் தேதிக்குப் பின் மூன்றாவது அணி !
india

மே 23 ஆம் தேதிக்குப் பின் மூன்றாவது அணி !

இந்தியாவில் மே 23 ஆம் தேதி ரிசல்ட்டுக்குப் பிறகுதான் மூன்றாவது அணி அமையுமா ? என்பது குறித்து தெரிய வரும் என கூறி ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். தேர்தல் அறிவிக்கும் முன்பே திமுக – காங்கிரஸ் கட்சியிடையே அசைக்க முடியாத கூட்டணி உருவானது. தேர்தல் அறிவித்த பின்னர் அந்த கட்சிகளிடையே நல்ல ஒரு புரிதல் இருந்தது. தேர்தலுக்கு முன்பே கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பேசிய ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ராகுல் காந்திதான் பிரதமர் என முதன்முதலாக அறிவித்தார். அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த போதெல்லாம், ராகுல்தான் பிரதமர் என தொடர்ந்து சொல்லிவந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவ், காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைப்பது குறித்து எதிர்கட்சித் தலைவர்களிடையே பேசி வருகிறார். கடந்த வாரம் கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் போன்றோரை சந்தித்து இது தொடர்பாக பேசியிருக்கிறார், இதனிடையே நேற்று மாலை கேசிஆர் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். 1 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினார். ஆனால் நேற்று இது குறித்து இரு தரப்புமே பேட்டி அளிக்கவில்லை. ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கேசிஆருடனானா சந்திப்பு மரியாதை நிமித்தமானது என கூறினார். அவர் தமிழகத்தில் உள்ள கோவிகளுக்கு வழிபாடு நடத்த வந்தார். அப்படியே என்னையும் சந்தித்துப் பேசினார் என தெரிவித்தார். மூனறாவது அணி அமைய வாய்ப்புள்ளதா ? என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், மே 23 ஆம் தேதிக்குப் பிறகு தான் மூன்றாவது அணி அமையுமா என்பது குறித்து பேச முடியும் என தெரிவித்தார். இத்தனை நாளும் ராகுல்தான் பிரதமர் என்று சொல்லி வந்த ஸ்டாலின் தற்போது மூன்றாவது அணி குறித்து பேசியிருப்பது, காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. […]

India
India

ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு: பிரகாஷ் ஜவடேகர்

நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் மதியம் 2 மணி முதல் 5 மணி நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை தமிழக மாணவர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் எழுதினர். இந்த ஆண்டு நீட் தேர்வு எளிதாக இருந்ததாகவும் மாணவ […]