நித்யானந்தா
பொது செய்திகள்

நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை என புகார்

தலைமறைவாக உள்ள நித்யானந்தாவால் தமது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ள ஜனார்தன சர்மா, நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாவதாக புகார் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு சிறுவர்களை அடைத்து வைத்து குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தியதாக நித்யானந்தா ஆசிரம் மீது புகார் எழுந்தது. சிறுவர்களை வைத்து ஆசிரமத்திற்கு நிதி திரட்டியதாகவும், அப்போது சிறுவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் நித்யானந்தாவின் பெண் சீடர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தது உள்ளிட்ட புகார்களில் நித்யானந்தா மீதும் அகமதாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் தான் எங்கும் தப்பிச் செல்லவில்லை என்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு நித்யானந்தா விளக்கம் அளித்தார்.

இதனிடையே நித்யானந்தா ஆசிரமத்தில் அடைபட்டிருக்கும் தமது மகள்களை மீட்டுத் தரக்கோரி ஜனார்தன சர்மா என்பவர் புகார் அளித்திருந்தார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்தன சர்மா, பெங்களூரில் நித்யானந்தாவின் குருகுலத்தில் தமது மூன்று மகள்களையும் மகனையும் சேர்த்ததாகவும் தானும் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். நித்யானந்தாவுடன் சுற்றுப்பயணத்திற்கு தமது மகள்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறிய சர்மா, அதன்பின்னர் தமது மூத்த மகள் திரும்பவில்லை என புகார் தெரிவித்துள்ளார்

அவரை சந்திக்க அனுமதிக்காததால் போலீசில் புகார் அளித்ததாக தெரிவித்த ஜனார்தன சர்மா, ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தமது மகள்கள் கூறியதாக தெரிவித்துள்ளார். தமது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் ஜனார்தன சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

[…]

டிக்டாக்
பொது செய்திகள்

டிக்டாக் சகவாசம் சேலையை கிழித்தது..! வீதிக்கு வந்த பெண்கள்

மதுரையில் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டிக்டாக் ஒரு ஸ்வீட் பாய்சன்..! என்று பலமுறையை தலைபாடாக அடித்தாலும் கேட்காமல், டிக்டாக் மிகவும் பாதுகாப்பான பொழுதுபோக்கு செயலி என்று நம்பி வீடியோ பதிவிட்ட சில பெண்கள், தங்கள் குடும்பத்தினரை பிரிந்து அவமானத்துடன் வீதியில் தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த தோழிகளான மீனாட்சியும் கயலும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் தோன்றி தாயும் பிள்ளையுமாக நடிப்புத்திறமையை வெளிக்காட்டுவது வழக்கம்.

இருவருக்கும் திருமணமான நிலையில் டிக்டாக் செயலிக்கு அடிமையானதால் அவ்வப்போது ஆன்மீகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற வீடியோக்களையும் டிக்டாக் செயலியில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளியதாக கூறப்படுகிறது.

சல்லிக் காசுக்கு பிரயோசனமில்லாத லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மீனாட்சியும் கயலும் தங்களுடைய டிக்டாக் பிரைவேட் கணக்கில் பதிவிட்ட வீடியோக்களே, தங்களை சந்திசிரிக்க வைக்க போகிறது என்பதை உணரவில்லை.

இந்நிலையில், மீனாட்சிக்கு டிக்டாக் மூலம் தேனியைச் சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. அந்த பெண் ஒருபடி மேலே போய், லைக்கிற்காக தனது ஆண் நண்பருடன் செய்யும் காதல் சேட்டைகளை எல்லாம் டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் சுகந்திக்கும் மீனாட்சிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிக்டாக் செயலியில் நட்பை துண்டித்து கொண்டனர்.

மீனாட்சியுடனான நட்பு துண்டானதும் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது ஆண் நண்பர் செல்வா என்பவருடன் சேர்ந்து மீனாட்சி மற்றும் தோழி கயல் ஆகியோரின் டிக்டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் விலை மாதர்களாக சித்தரித்து டிக்டாக் செயலியில் பதிவிட்டதால் இருவரது குடும்பத்திலும் புயல்வீசத் தொடங்கியது. கயலின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் வீட்டைவிட்டு துரத்தியதால் தற்போது காப்பகத்தில் தவித்து வருகிறார்.

மீனாட்சி ஒத்தக்கடை காவல்நிலையத்திலும் , கயல் மதுரை மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ள நிலையில், தேனியைச் சேர்ந்த சுகந்தி மற்றும் மதுரை செல்வா ஆகியோர் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெற்ற சுகந்தியிடம் இரு செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், டிக்டாக், வாட்ஸ் ஆப், முகனூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒருவருடம் கருத்து பதிவிட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மதுரையில் செவிலியர் கல்லூரியில் பயின்றுவந்த மாணவி டிக்டாக்கில் பதிவிட்ட வீடியோக்களை தவறாக சித்தரித்து, வீடியோவாக பதிவிட்டதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த பூபதி என்பவரை ஒத்தக்கடை போலீசார் கைது செய்துள்ளனர்.

டிக்டாக் சகவாசத்தால் பலர் இங்கே நீதிமன்றத்திற்கும் வீட்டுக்கும் நடந்து கந்தலாகிக் கொண்டிருக்க, இது தெரியாமல் ஸ்மார்ட்போன் செயல் இழந்து விட்டதால், டிக்டாக்கில் இனி நடிக்க இயலாதே என்று நடிகையர் திலகம் ஒன்று கண்ணீர் வடித்து வீடியோ பதிவிடும் அற்புதமும் அதிசயமும் தமிழகத்தில் நிகழத்தான் செய்கின்றது..!

குடும்பப் பெண்கள் பலர் பொழுதுபோக்கு என்ற பெயரில் முழுநேர டிக்டாக் அடிமைகளாகி "லைக்"களுக்கு ஆசைப்பட்டு "லைஃப்"பை தொலைத்து வருகின்றனர் என்பதே கசப்பான உண்மை..!

[…]

தற்கொலை
பொது செய்திகள்

150 தோப்பு கரணம் மாணவி தற்கொலை..! அடாவடி ஆசிரியர் ஓட்டம்

தூத்துக்குடி விவிடி மேல்நிலைப் பள்ளியில் 150 தோப்புக்கரணம் போடவைத்து தண்டனை கொடுத்த ஆசிரியரின் கொடுமை தாங்காமல் 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அருகே விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி மரிய ஐஸ்வர்யா, இவர் இரு தினங்களுக்கு முன்பு உறவினர் இறந்ததால் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். இதனால் கடந்த சில தினங்களாகவே வகுப்பு ஆசிரியர் ஞானபிரகாசம் என்பவர் மாணவி ஐஸ்வர்யாவை குறிவைத்து கடுமையாக கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சனிக்கிழமை பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்ற நிலையில், மாணவி ஐஸ்வர்யா பள்ளிக்கு செல்ல பயந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆசிரியர் ஞானபிரகாசத்தின் டார்ச்சரால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதால், ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது மாணவிகள் அளித்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

மாணவியின் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால், முன்கூட்டியே சொல்லாமல் ஐஸ்வர்யா விடுப்பு எடுத்ததற்கு தண்டனையாக 150 தோப்புக் கரணம் போட வேண்டும் என்று ஐஸ்வர்யாவை நிர்பந்தித்துள்ளார் ஆசிரியர் ஞானபிரகாசம். அன்று அவரது வகுப்பு நேரம் முடியும் வரை தோப்பு கரணம் போட்ட ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை கூட ஆசிரியர் கண்டுகொள்ளாமல் எழுந்து சென்ற நிலையில், உடன் படிக்கின்ற மாணவிகள்தான் ஐஸ்வர்யாவின் மயக்கத்தை தெளியவைத்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து பருவத்தேர்வில் வகுப்பில் 2-வது மாணவியாக மதிப்பெண் பெற்ற ஐஸ்வர்யாவை தேர்வில் காப்பி அடித்ததாக குற்றஞ்சாட்டி வெயிலில் நிற்க வைத்து தண்டனை வழங்கி உள்ளார்.

அத்தோடு இல்லாமல் ஐஸ்வர்யாவை பார்த்தாலே அடாவடி சைக்கோ போல ஆசிரியர் ஞானபிரகாசம் நடந்து கொண்டுள்ளார். இதனால் சனிக்கிழமை அவர் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வகுப்புக்கு செல்லாமல் தனக்கு நேர்ந்த கொடுமைகளால் மனம் உடைந்து மாணவி ஐஸ்வர்யா உயிரை மாய்த்துக் கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஆசிரியர் ஞானபிரகாசத்தை காப்பாற்றுவதற்காக, அவரை பள்ளியில் இருந்து தப்பிக்க வைத்த தலைமை ஆசிரியை கனகரத்தினமணி, ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை என்று போலீசாரிடம் நாடகமாடினார்.

மாணவிகள், ஆசிரியர் ஞான பிரகாசத்தை பார்த்ததாக சொல்ல, வருகை பதிவேட்டிலும் ஆசிரியரின் கையெழுத்து இருந்ததால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து ஆசிரியரை ஒப்படைக்காமல் தலைமை ஆசிரியை மறைக்க முயற்சிப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த ஆசிரியர் ஞானபிரகாசத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் தலைமை ஆசிரியை கனகரத்தினமணியை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவான ஆசிரியர் ஞானபிரகாசத்தை வலைவீசி தேடிவருகின்றனர்.

அத்தோடில்லாமல் ஆசிரியர் ஞானபிரகாசத்தின் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாணவ- மாணவிகளுக்கு அன்பையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகள் சித்ரவதைக் கூடங்களாக மாறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

[…]

சரத்குமார்
பொது செய்திகள்

தான் மிகச் சிறந்த ஜோதிடர் இல்லை - சரத்குமார்

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தலை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வரவேற்றுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், 2021-ல் மக்கள் பெரிய அதிசயத்தை நிகழ்த்துவார்கள் என்று ரஜினி கூறியது குறித்து கேள்விக்கு, தான் மிகச் சிறந்த ஜோதிடர் இல்லை என பதிலளித்தார்.

[…]

கொலை
பொது செய்திகள்

ஜாமீனில் வந்த ரவுடி கொலை

கடலூர் மாவட்டம் வடலூரில் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ரவுடி, ஜாமீனில் வெளியே வந்ததும் வெட்டிக் கொலை செய்யப்பட்டான்.

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி முரளி என்பவன் கடந்த 2017 ஆண்டு கொலை செய்யபட்டான். இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு ரவுடி கும்பலான சுந்தர், அமரன் (எ) அமர்நாத் ஜெயகுமார் உள்பட 11 பேர் கைது செய்யபட்டனர்.

மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் சுந்தர், அமரன் ஆகியோர் மட்டும் 2வருடங்களாக மத்திய சிறையில் இருந்தனர். இந்த நிலையில் முரளி கொலை வழக்கு தொடர்பான விசாரணை நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி, குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

சுந்தர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதால், அவனால் வெளியே வர முடியவில்லை. அமரன் மட்டும் ஜாமீனில் வெளியே வந்தான். முரளியின் ஆதரவாளர்களால் அமரன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்து தனது உறவினர்கள் மூலம் காரில் தஞ்சாவூரில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு அமரன் சென்று கொண்டிருந்தான்.

அப்போது கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழி என்ற இடத்தில் டாஸ்மாக்கில் மது அருந்த சென்ற போது பின்புறமாக காரில் வந்த மர்ம கும்பல் அமரனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், முரளி கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக அவனது ஆதரவாளர்கள் விடுதலையான அன்றே அமரனை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பாக வடலூர் போலீசார், சரவணன், சதீஷ், பார்த்திபன் ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த மூவரும் எதிர்தரப்பைச் சேர்ந்த சுந்தரின் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. 

[…]

மாணவி
பொது செய்திகள்

தான் காதலித்த நபர் தனது காதலை ஏற்காததால் விபரீத முடிவெடுத்த மாணவி

கோவை பீளமேட்டில், தான் காதலித்த நபர் தனது காதலை ஏற்காததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி ஒருவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் அவர், அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரை, ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், அவரது காதலை மாணவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர், கல்லூரிக்கு அருகில் தான் தங்கியுள்ள விடுதி அருகே, திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.

அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், 90 சதவிகித தீக்காயங்களுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்

[…]

மாவோயிஸ்ட்
பொது செய்திகள்

கோவை ஆனைகட்டி அருகே மாவோயிஸ்ட் கைது

கோவை எல்லையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக், சத்தீஸ்கரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 76 பேரை தாக்கி கொலை செய்த கும்பலில் இடம்பெற்றிருந்த தீவிரவாதி என தகவல் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கரை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக், கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே வனப்பகுதியில் கடந்த 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தின் தாண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் 76 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய குழுவில் தீபக்கும் ஒருவர் என சத்தீஸ்கரை சேர்ந்த போலீஸ் தனிப் படை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீபக்கின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக நேற்று அவர்கள் அங்கு வந்திருந்தனர். நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசாரணைக்காக தீபக்கை சத்தீஸ்கர் கொண்டுசெல்லவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

[…]

ஆசிரியரை
பொது செய்திகள்

வண்டுமுருகன் பாணியில் சவால்...! சட்டையை கிழித்த சிறுத்தைகள்...! பத்திரிக்கை அதிபருக்கு அடி உதை

இந்து மத கடவுள்களை திருமாவளவன் விமர்சித்ததாக கூறி பேஸ்புக்கில் திருமாவளவனை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து பதிவிட்டதாக கூறி மாத இதழ் ஆசிரியரை , தேடிச்சென்று விடுதலை சிறுத்தை கட்சியினர் அடித்து உதைத்த சம்பவம் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அரங்கேறி உள்ளது.

சினிமா காமெடி காட்சி ஒன்றில் சவால் விட்டு ரவுடிகளை வரவழைத்து வடிவேலு தர்ம அடி வாங்குவது போன்ற சம்பவம் ராணிப்பேட்டையில் அரங்கேறி உள்ளது.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் கலைஞர் பாதை என்ற பெயரில் மாத இதழ் நடத்தி வருபவர் குணசேகரன். விடுதலை சிறுத்தை கட்சியினருடன் நட்பு பாராட்டிய குணசேகரன் அவர்களுடன் ஒன்றாக சாப்பிடுவது, விழாக்கள் மற்றும் பார்ட்டிகளிலும் பங்கேற்று வந்துள்ளார்.

அண்மையில் இந்து கோவில்கள் குறித்தும் இந்து கடவுள்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறி திருமாவளவனை, கலைஞர் பாதை குணசேகரன் தனது முக நூல் பக்கத்தில் விமர்சித்து படம் மற்றும் கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

நட்பாக இருந்து கொண்டே முகநூலில் விமர்சித்ததால் ஆத்திரம் அடைந்த, வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் செல்போன் மூலமாக குணசேகரனை மிரட்டியதாகவும் அதற்கு கலைஞர் பாதை குணசேகரன் , வண்டுமுருகன், வடிவேலு பட காமெடி போல நேரில் வர முடியுமா என எதிர் சவால் விடுத்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு ராணிப்பேட்டை சென்ற விசிகவினர், கலைஞர் பாதை குணசேகரனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்

கூட இருந்து கொண்டே எதிர்க்கருத்து பதிவிடுகிறாயா என்று சொல்லி சொல்லி தாக்கியுள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள். கலைஞர் பாதை முருகேசனை பாவப்பட்டு விடுவித்துள்ளனர். இந்த தாக்குதலில் குணசேகரனின் சட்டை கிழிந்ததோடு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விசிகவினர் மீது கலைஞர் பாதை குணசேகரன் புகார் அளித்த நிலையில்,
கலைஞர் பாதை குணசேகரன் மீது கடந்த 16 ந்தேதியே அவதூறு கருத்து பதிவிட்டதாக விசிகவினர் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கருத்தை, கருத்தால் எதிர்கொள்ளாமல் கொலைவெறி தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று கலைஞர் பாதை குணசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

[…]

தற்கொலை
பொது செய்திகள்

பாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணை தீவிரம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, டெல்லியில் இருந்து உயர் கல்வித்துறை செயலர் சென்னை வந்துள்ளார்.

கேரளத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் முதலாண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி திடீரென தற்கொலை செய்துக் கொண்டார். மாணவியின் மரணத்தை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தமது செல்போனில் தற்கொலைக்கு காரணம் சுதர்சன் பத்மனாபன் மற்றும் 2 பேராசிரியர்களே என பாத்திமா குறிப்பிட்டுள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மாணவியின் மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தக் கோரி மாணவியின் தந்தை அனுப்பிய புகாரையும் அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து மத்திய உயர் கல்வித்துறை செயலர் சுப்பிரமணியன் நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இன்று விசாரணை மேற்கொண்டு அவர் மாலையில் டெல்லி திரும்புகிறார்.

இதனிடையே சென்னையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்பிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையின் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, விசாரணை அதிகாரி மெகலீனா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 3 மணி நேரம் நீடித்த விசாரணைக்கு பின்னர், மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விசாரணையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து தகவல்களையும் தெரிவித்துவிட்டதாக கூறினார்.

தொடர்ந்து சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், புகார் மனு அளித்தார்.

இதனிடையே மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக, சம்பந்தப்பட்ட பேராசிரியர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். தற்கொலைக்கு முன்பான மாணவியின் செல்போன் பதிவில், பேராசிரியர்கள் சுதர்சன் பத்மாநாபன், ஹேமச்சந்திரன் காரா, மிலிந்த் பிராமே ஆகியோர் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

[…]

வழக்குப்பதிவு
பொது செய்திகள்

நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதருக்கு போலீசார் வலைவீச்சு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜை செய்ய வந்த பெண்ணை தாக்கிய தீட்சிதர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தைச் சேர்ந்த லதா என்பவர் நடராஜர் கோயில் வளாகத்திலுள்ள முக்குருணி விநாயகர் சன்னதிக்கு சென்றபோது, அர்ச்சனை  தொடர்பாக, அவருக்கும் தீட்சிதர் தர்ஷனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தீட்சிதர் தர்ஷன் தனது கன்னத்தில் அறைந்ததாகவும், அதனால் தான் கீழே விழுந்ததாகவும் சிதம்பரம் காவல்நிலையத்தில் லதா புகார் அளித்தார். இதையடுத்து, தீட்சிதர் மீது, பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள தீட்சிதரை போலீசார் தேடி வருகிறார்கள்.

[…]

வருமானவரித்துறை
பொது செய்திகள்

தொழிலதிபர் சிவசாமி வீட்டில் 2வது நாளாக வருமான வரி சோதனை... 32 கோடி ரூபாய் பறிமுதல்..!

கரூரில் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை தயாரிப்பு ஆலை அதிபர் வீட்டில், வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூரைச் சேர்ந்த சிவசாமி என்பவருக்கு சொந்தமான அந்த ஆலை, அலுவலகம் மற்றும் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது வீட்டில் துணி அடுக்கும் அலமாரியில், 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மதிப்பு, 32 கோடி ரூபாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

[…]

வங்கி
பொது செய்திகள்

இறந்த பெண்ணின் அக்கவுண்ட்டிலிருந்து ரூ.30 லட்சத்தை அபேஸ் செய்த பலே பேங்க் மேனேஜர்

திருச்சியில் இறந்துபோன பெண்ணின் கணக்கில் இருந்து 30 லட்ச ரூபாய் வரை திருடியதாகக் கூறப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் மற்றும் உதவி மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

டிவிஎஸ் டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த பி.எஸ்.என்.எல் ஊழியரான எமிலி சோழா கடந்த 2014ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

2018 வரை அவரது கணக்கில் இருந்த 30 லட்ச ரூபாயை யாரும் எடுக்க வராததால் வங்கியின் மேலாளர் ஷேக் முகம்மதுவும் உதவி மேலாளர் சின்னத்துரையும் போலி ஆவணங்களை தயாரித்து அந்தப் பணத்தை முறைகேடாக கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. வங்கி மண்டல மேலாளரின் ஆய்வில் இந்தத் மோசடி தெரியவந்ததை அடுத்து, அவர்கள் மீது போலிசில் புகாரளிக்கப்பட்டது.

[…]

கொலை
பொது செய்திகள்

19 சவரன் நகைக்காக பெண் கொடூர கொலை..?

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முல்லை நகரை சேர்ந்தவர் சந்திரனின் மனைவி, ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்த போது, கத்தியால் குத்தப்பட்டும் கம்பியால் அடித்தும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

அதன் பிறகு உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி எரிப்பதற்கான முயற்சி நடந்திருக்கிறது. அவர் அணிந்திருந்த 19 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

நகைக்காக ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு ஏதும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டு, வழக்கை திசை திருப்புவதற்காக நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதா ? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

[…]

விபத்து
பொது செய்திகள்

மூதாட்டி மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட காட்சி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே கார் மோதி மூதாட்டி ஒருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த விஜயராணி என்ற அந்த மூதாட்டி ராஜபாளையத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். வியாழக்கிழமை மதியம் கடைக்குச் செல்வதற்காக சாலையைக் கடந்த மூதாட்டி மீது அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

தூக்கி வீசப்பட்ட மூதாட்டியை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனை அழைத்துச் சென்றனர். அங்கு அவருககு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்லப்படுகிறது.

இதனிடையே விபத்திற்கு காரணமான கார் உரிமையாளருடன் மூதாட்டியின் உறவினர்கள் சமாதானமாக சென்றுவிட்டதாகவும் எனவே வழக்கு பதியப்படவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

[…]

தற்கொலை
பொது செய்தி

ஐஐடி மாணவி தற்கொலை... காவல் ஆணையர் நேரில் விசாரணை

சென்னை ஐஐடியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு  மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு பயின்று வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, கடந்த 9ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் இறுதிச் சடங்குக்கு பின்னர், அவரது செல்போனை ஆய்வு செய்த போது, தனது தற்கொலைக்கு இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மற்றுமொரு பதிவில் மேலும் 2 பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் தற்கொலைக்கு முந்தைய நாளான 8ம் தேதி பதிவிட்டிருந்தார்.

இதனை அடுத்து மாணவியின் செல்போன் தடவியல் துறைக்கு அனுப்பட்டு அந்த பதிவுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை ஐஐடி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற, இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 30 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே, மாணவியின் செல்போன் பதிவைக் குறிப்பிட்டு, பிரதமர் அலுவலகத்துக்கும் அவரது பெற்றோர் நடவடிக்கை கோரி கடிதம் எழுதியுள்ளனர். மாணவியின் பெற்றோர் தமிழக முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், நேரம் கிடைத்ததும் முதலமைச்சரை சந்தித்த பின்னர், தமிழக டிஜிபியிடம் எழுத்துப்பூர்வமாக புகாரளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், காவல் இணை ஆணையர் சுதாகர், மற்றும் மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் சென்னை ஐஐடிக்கு நேரில் சென்று ஒருமணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாணவியின் தற்கொலை வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாக தெரிவித்தார். 

[…]

கொலை
பொது செய்திகள்

கணவனே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை

சேலம் அருகே குடும்பத்தகாராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை, கணவனே கழுத்தறுத்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கங்காபுதூர் பகுதியை சேர்ந்த மோகனேஸ்வரி என்ற பெண்ணுக்கும், கோபி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

கோவையில் வசித்து வந்த தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதை அடுத்து, கணவனை பிரிந்த மோகனேஸ்வரி சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கி துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வந்த மோகனேஸ்வரியை மதுபோதையில் வழிமறித்த கணவன் கோபி, அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த வீராணம் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைத்து சேலம் மாநகர காவல் ஆணையர், உத்தரவிட்டுள்ளார்.

[…]

போராட்டம்
பொது செய்திகள்

கன்னியாகுமரியில் சிகிச்சைக்கு வந்த இளம் பெண் பலி-மருத்துவமனை மீது புகார்

கன்னியாகுமரி மேல்புறத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சையளிக்காததால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் நிலவியது போலீசார் குவிக்கப்பட்டனர்.

சாலமன் என்பவரின் மகளான 19வயது கல்லூரி மாணவி சைமா உடல் நலமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை சரியான சிகிச்சையளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மருத்துவமனையின் மீது கற்வீசி தாக்கியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். 

[…]

கொலை
பொது செய்திகள்

10 ஆண்களுடன் நட்பு.. பெண் எரித்து கொலை..! செல்போன் பேச்சால் விபரீதம்

தூத்துக்குடியில் 10 ஆண் நண்பர்களுடன் சுழற்சி முறையில் செல்போனில் பேசி நெருக்கமான நட்பில் இருந்த பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கவிதா. கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பெருமாள் கவிதாவை விவாகரத்து செய்ததாக கூறப்படுகின்றது.இந்த நிலையில் கவிதாவுக்கு தூத்துக்குடியை சேர்ந்த எட்வினுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கவிதாவை தூத்துக்குடிக்கு அழைத்து வந்த எட்வின், குமரன் நகரில் வீடு பார்த்து குடிவைத்தார். கவிதா முத்தையா புரத்தில் அக்கவுண்டன்ட் வேலைக்கு செல்ல எட்வின் ஐஸ் கம்பெனியில் வேலைக்கு சென்றார்.

கடந்த 8 ந்தேதி கவிதா மாயமானதாகக் கூறப்படுகின்றது. அவரை எட்வின் தேடி வந்த நிலையில் உடல் கருகிய நிலையில் கவிதா விவேகானந்தா நகரில் உள்ள ஒரு வீட்டில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கவிதா தனது 2 வது கணவர் எட்வினை பிரிந்து ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமியுடன் மூன்றாவதாக குடித்தனம் நடத்தி வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

கருப்பசாமியை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினான். கவிதா வேலை பார்த்த இடத்தில் பல ஆண் நண்பர்களுடன் நெருக்கமான நட்பை வைத்திருந்ததாகவும், அவர்களிடம் எல்லாம் தனது செல்போன் நம்பரை கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது. இவர்களில் அங்கு அடிக்கடி வந்து செல்லும் ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமியுடனும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகவல் அறிந்த எட்வின் கவிதாவை அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த 8ந்தேதி இரவு பணிக்கு சென்ற பின்னர் கருப்பசாமிக்கு போன் செய்த கவிதா, அவரை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். தன்னை காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டதால், கவிதாவை அழைத்துக் கொண்டு விவேகானந்தா நகரில் தனி வீடு பார்த்து குடிவைத்ததாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் இருவரும் அந்த வீட்டில் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்துள்ளனர், 10 ந்தேதி இரவு இருவரும் தனிமையில் இருந்த போது அடுத்தடுத்து கவிதாவுக்கு போன் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளன.

அப்போது 5 க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை எடுத்து கவிதா சிரித்து சிரித்து பேசியதை கண்டு ஆத்திரம் அடைந்த 3வது காதலன் கருப்பசாமி இவர்கள் எல்லாம் யார் என கேட்க, தனது தம்பி, அண்ணன், சித்தப்பா, பிரண்ட்ஸ் என்று புது புது விளக்கம் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ஒரு அழைப்பில் பேசியவருடன் சற்று நீண்ட நேரம் கவிதா மெல்லிய குரலில் உரையாடியதை கண்டு கடும் கோபம் அடைந்த கருப்பசாமி, அங்கு கிடந்த விறகு கட்டையை எடுத்து தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து ஆவேசமாக வெளியேறியதாக போலீசில் கருப்பசாமி வாக்கு மூலம் அளித்துள்ளார். அப்படி யென்றால் கவிதாவை தீவைத்து எரித்தது யார் ? என்று தெரியாமல் காவல்துறையினர் குழம்பி போயுள்ளனர்.

இதற்கிடையே கருப்பசாமி, கவிதாவை விவேகானந்தர் நகரில் வீடு பார்த்து குடிவைத்திருக்கும் தகவல் அறிந்து சென்ற எட்வின், கதவை திறந்த போது உள்ளே கருகிய நிலையில் கவிதா சடலமாக கிடந்ததாக போலீசில் தெரிவித்துள்ளார். கவிதாவை எரித்து கொலை செய்தது யார் ? என்பதை கண்டுபிடிக்க, கருப்பசாமி, எட்வின் ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 ஆண் நண்பர்களுடன் செல்போனில் கொஞ்சி கொஞ்சி பேசிவந்த கவிதா கொல்லப்பட்ட நிலையில் அவருடன் நேரம் காலமில்லாமல் செல்போனில் கொஞ்சிய காதல் மன்னன்களை பட்டியலிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் காவல்துறையினர்.

[…]

தற்கொலை
பொது செய்திகள்

விடுதி அறையில் சென்னை ஐ.ஐ.டி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கேரள மாநிலம் கொல்லம் அடுத்துள்ள கிளி கொல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா லதீப்(வயது 18). இவர், சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.ஏ. முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள சரவியூ விடுதியில் அறை எண் 349-ல் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு பாத்திமா லதீபுக்கு அவரது தாயார் சஜிதா லதீப் போன் செய்துள்ளார். ஆனால் பாத்திமா லதீப் போனை எடுக்கவில்லை. நேற்று காலையில் போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை.

 

இதனால் சந்தேகம் அடைந்த சஜிதா லதீப் தனது மகளின் தோழிகளுக்கு போன் செய்து, பாத்திமா லதீப் போன் எடுக்காத விவரத்தை கூறினார். இதையடுத்து தோழிகள் அவரது அறை கதவை தட்டினர். வெகு நேரமாகியும் அவர் கதவை திறக்காததால், விடுதி ஊழியர்களிடம் இது குறித்து தெரிவித்தனர்.

 

விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாத்திமா லதீப், நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்களும், அவரது தோழிகளும் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பாத்திமா லதீப் முதன்முறையாக தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வெளியே தங்கி இருப்பதாகவும், அதனால் அவர்களை நினைத்து தனிமையில் வாடி வந்ததாகவும் தெரிகிறது.கடந்த வாரம் நடந்த கல்லூரி வளாகத்தேர்வில் அவர் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகவும், சில நாட்களாக மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாகவும் தெரியவந்தது. இதன் காரணமாக தான் பாத்திமா லதீப் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


[…]

கொலை
பொது செய்திகள்

மூணாறு பண்ணை வீட்டில் கணவன் கொன்று புதைப்பு..! மனைவி மேலாளருடன் எஸ்கேப்..!

மூணாறு அருகே பண்ணை வீட்டில் கணவனை கொலை செய்து புதைத்து விட்டு, பண்ணை வீட்டு மேலாளருடன் தலைமறைவான பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். போலீசுக்கு வாட்ஸ் அப்பில் வாக்குமூலம் அனுப்பப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கேரள மாநிலம் சாந்தன்பாறையை அடுத்த புத்தடியில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கிச் செல்லும் மஸ்ரூம் ஹட்ஸ் என்ற பண்ணை வீடு உள்ளது. இங்கு உள்ள கால் நடைகளை கவனித்து வந்தவர் ரிஜோஸ், இவரது மனைவி லிஜி அங்கு தோட்டவேலைகளை கவனித்து வந்தார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 31ந்தேதி முதல் ரிஜோசை காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையில் தனது கணவர் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக லிஜி தெரிவித்துள்ளார். அந்த எண் குறித்து விசாரித்த போது அது பண்ணைவீட்டின் மேலாளர் வாசிம் என்பவரின் நண்பரது எண் என்றும், வாசிம் போன் செய்யக் கூறியதால் லிஜியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

இந்த நிலையில் காவல் துறையினரின் பிடி இறுகுவதை உணர்ந்த லிஜி கடந்த 4 ந்தேதி திடீரென மாயமானார். பண்ணை வீட்டின் மேலாளர் வாசிமும் மாயமானார். இதையடுத்து போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. மஸ்ரூம் ஹட்ஸ் பண்ணை வீட்டின் பூட்டை உடைந்தது உள்ளே புகுந்து காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சமீபத்தில் குழி தோண்டி மூடப்பட்ட பகுதியில் முளைத்திருந்த புற்கள் மீது மோப்ப நாய் படுத்துக் கொண்டது. இதையடுத்து ஜேசிபியை வரவழைத்து தோண்டிப்பார்த்தனர் காவல்துறையினர். அதில் அங்கு புதைக்கப்பட்டு இருந்த ரிஜோஸ் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்

இந்த கொலை தொடர்பாக மனைவி லிஜி, மேலாளர் வாசிம் ஆகியோரை தேடுவதாக காவல்துறையினர் அறிவித்த நிலையில் போலீசுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் வாசிம் தகவல் ஒன்றை அனுப்பி உள்ளான். அதில் ரிஜோஸை கொன்று புதைத்தது தான் மட்டுமே என்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்பது போல ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான்.

இந்த சம்பவ குறித்து விசாரித்த போது ரிஜோஸ் கொலை குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் போலீசுக்கு கிடைத்தது. பண்ணை வீட்டு மேலாளர் வாசிமுக்கும், ரிஜோஸின் மனைவி லிஜிக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. அடிக்கடி ரிஜோஸை டவுனுக்கு அனுப்பி விட்டு இருவரும் ஒன்றாக தனிமையை கழித்து வந்துள்ளனர். இருவரது எல்லைமீறிய தொடர்பு ரிஜோசுக்கு தெரிய வந்ததும், அவர் மனைவி லிஜியை கண்டித்துள்ளார்.

இதனால் இருவரும் தனியாக சந்தித்து கொள்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். 3 பெண் குழந்தைகள் இருப்பதை பற்றி சற்றும் சிந்திக்காத லிஜி காமம் கண்ணை மறைக்க காதலன் வாசிமுடன் சேர்ந்து கணவர் ரிஷோசை கொலை செய்ய திட்டம் வகுத்ததாக கூறப்படுகின்றது.

இரவில் மது அருந்தும் பழக்கம் கொண்ட வாசிம், சம்பவத்தன்று ரிஜோசுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதில் ரிஜோஷ் உயிரிழந்தை தொடர்ந்து. சடலத்தை ஒரு பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். காலையில் தோட்டத்தில் மாடு ஒன்று உயிரிழந்து விட்டதாக கூறி மாட்டை புதைக்க ஜேசிபியை வரவழைத்து குழி தோண்டி உள்ளனர்.

மூட்டையில் கட்டப்பட்டிருந்த ரிஜோஷின் சடலத்தை உயிரிழந்த மாட்டின் உடல் என்று குழிக்குள் போட்டு புதைத்ததாக கூறப்படுகின்றது. பின்னர் இருவரும் தங்களுக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லாதது போல காட்டிக் கொள்ள மாயமானதாக நாடகமாடியதாக கூறும் காவல்துறையினர், மாயமானவர் உயிரோடு இருப்பதாக சித்தரிப்பதற்கு நண்பரை அழைத்து போன் செய்ய கூறியதாகவும், லிஜியை காப்பாற்ற தனக்கு மட்டுமே கொலையில் தொடர்பு என்று வாசிம் வீடியோ வெளியிட்டுள்ளாதாகவும் தெரிவித்தனர்.

தலைமறைவான வாசிம் மற்றும் லிஜியை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர். தவறான உடல் சார்ந்த தேடலால் 3 பெண் குழந்தைகளின் வாழ்க்கை நிர்கதியாகும் விபரீதம் அரங்கேறி உள்ளது.

[…]

ஆசிரியர்
பொது செய்திகள்

மாணவிகளிடம் ஆசிரியர் ஆபாச விளையாட்டு..! வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளிடம் விபரீத ஆபாச விளையாட்டில் ஈடுபட்டு வருவதாக ஆசிரியர் மீது காவல் நிலையத்தில் மாணவிகள் சார்பில் நேரடியாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 37 வயதான சுரேஷ், இவர் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக உள்ளார்.

இப்பள்ளியில் 49 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் மாணவிகள் சிலரிடம் ஆசிரியர் சுரேஷ் ஆபாசமாக பேசுவதாக பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

புதன்கிழமை இரவு 10 மணிவரை அவரிடம் விசாரணை நடத்திய நாமகிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி உள்ளார். அங்கும் விசாரித்த போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்டதாக புகார் கூறிய மாணவிகளிடம் வட்டார கல்வி அலுவலர்கள் பிரபுகுமார், கணேசன் ஆகியோர் நேரடியாக விசாரணை நடத்தினர்.

நிர்வாண சிலைகளின் படத்தை மாணவிகளிடம் காட்டியதுடன், உடல் அங்கங்கள் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் ஆசிரியர் ஆபாசமாக கூறியதாக மாணவி ஒருவர் தெரிவித்த நிலையில், சில உடல் பாகங்களை அளவெடுத்து குறித்து வரவேண்டும் என மாணவிகளிடம் ஆசிரியர் சுரேஷ் தெரிவித்ததாக புகார் கூறப்படுகிறது.

மாணவிகளின் உடலைத் தொட்டு பேசுவதுடன், கண்ணியக் குறைவாகவும் ஆபாசமாகவும் அழைத்ததாக புகார் தெரிவித்த மாணவிகள் 8 பேரும், அவர் செய்த பாலியல் தொந்தரவுகளை கடிதமாகவே எழுதி வட்டார கல்வி அலுவரிடம் கொடுத்துள்ளனர். ஆனாலும் ஆசிரியர் சுரேஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இது குறித்து வட்டார கல்வி அலுவலர்களிடம் கேட்டபோது, மாணவிகள் கொடுத்த எழுத்துப்பூர்வ ஆவணங்களை மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமாரிடம் விசாரித்த போது, தகவல் தெரிந்ததும் வட்டார கல்வி அலுவர்களிடம் விசாரித்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுள்ளதாகவும், அறிக்கை வந்ததும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிலளித்தார்.

மாணவிகளின் புகார் குறித்து ஆசிரியர் சுரேஷிடம் விசாரித்தபோது, தான் காவல் நிலையத்தில் இருப்பதால் எதுவும் கூற இயலாது என்றும், அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுமாறும் கூறிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தார்.

ஆசிரியர் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்த பின்னரும், இதுவரை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காமல், சமரசம் செய்யும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

[…]

கைது
பொது செய்தி

பெண்ணாக பிறந்ததால் 15 நாள் ஆன குழந்தையை கொன்று புதைத்த தந்தை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பிறந்து 15 நாளேயான பெண் குழந்தையை கொன்று ஆற்றில் புதைத்ததாக தந்தை கைது செய்யப்பட்டார்.

திருக்கோவிலூர் அருகே உள்ள சுந்தரேசபுரத்தைச் சேர்ந்தவன் வரதராஜன். இவனது மனைவி சவுந்தர்யா. இவர்களுக்கு திருமணமாகி 15 மாதங்கள் ஆன நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் திடீர் என்று குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த சவுந்தர்யா உறவினர்களுடன் தேடியுள்ளார். அப்போது அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பள்ளம் ஒன்றில் சந்தேகப்பட்டு மண்ணை தோண்டிய போது, துணியால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலம் மீட்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணாக பிறந்ததால் வரதராஜன் ஏற்கனவே ஒரு முறை குழந்தையை கொல்லமுயன்றது தெரியவந்ததால் அவனைப்பிடித்து விசாரணை மேற்கொண்டபோது குழந்தையை கொன்று சடலத்தை புதைத்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வரதராஜனை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்தனர்.

[…]

கொலை
பொது செய்தி

தாயை கொன்றதாக ஒப்புக்கொண்ட இளைஞரிடம் விசாரணை

திருச்சியில் குடும்பத்தகராறில் தாயை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படும் இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணேசபுரத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரியான பிரகாஷூக்கும் வெண்ணிலா என்பவருக்கும் 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அவரது தாய் பாப்பாத்திக்கும் மனைவி வெண்ணிலாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனைவியை அவரது தந்தை வீட்டில் விட்டுவிட்டு நேற்றிரவு  திரும்பிய பிரகாஷூக்கும் தாய் பாப்பாத்திக்கும் இடையே இது தொடர்பாக வாக்கு வாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தகராறு முற்றியதில் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தாயை பிரகாஷ் அடித்ததாகவும் அதை தடுக்க முயன்ற தந்தை ஆறுமுகத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாலையில் சென்றுகொண்டிருந்த பிரகாஷிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் தாயை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

[…]

பிகில்
பொது செய்தி

18 புள்ளீங்கோ கைது... தொடரும் பிகில் சோகம்..!

பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி தராவிட்டால் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு மாவுக்கட்டு போடப்போவதாக மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர் பகிரங்க மன்னிப்பு கேட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் ரகளையில் ஈடுபட்டதாக 7 சிறுவர்கள் உள்பட மேலும் 18 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கொளத்தூர் கங்கா தியேட்டரில், கடந்த 25 ந்தேதி பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு மாவுக் கட்டு போடப்படும் என்று விஜய் ரசிகர் ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

பிகில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அந்த ரசிகர், மிரட்டல் விடுத்த தனது வீடியோ யூடியூப்பில் வெளியாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தனது தவறை உணர்ந்து பகிரங்க மன்னிப்புக் கேட்டு கெஞ்சி வீடியோ வெளியிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதேபோல, கிருஷ்ணகிரியில் பிகில் படத்தின் அதிகாலை 5 மணி காட்சியை, முன்கூட்டியே ஒரு மணிக்கே வெளியிடக் கோரி, விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கனவே 32 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை வைத்து மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதில் 7 சிறுவர்கள் உள்பட 18 விஜய் ரசிகர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், 7 சிறுவர்களும் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மீதமுள்ள 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சினிமாவுக்காக ரகளையில் ஈடுபட்ட தங்கள் பிள்ளைகள் கைது செய்து அழைத்து சென்ற காட்சியைக் கண்டு காவல் நிலைய வாசலில் பெற்றோர்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.

18 பேரும் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டதும், பெற்றோர் தங்கள் முகத்தை மூடியபடியே செல்லவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது வரை கிருஷ்ணகிரி பிகில் ரகளை தொடர்பாக கைது செய்யப்பட்ட ரசிகர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

[…]

சம்பவம்
பொது செய்தி

தோல் வியாதிக்கு விபரீத சிகிச்சை..! பரம்பரை வைத்தியர் மீது புகார்

திருப்பூரில் தோல் வியாதியால் அவதிப்பட்ட மாணவிக்கு, நாட்டு மருந்தால் சிகிச்சை அளிப்பதாக கூறி ரசாயண பொடியை கொடுத்த பாரம்பரிய மருத்துவரால், மாணவியின் தோல் வெந்து போன சம்பவம் அரங்கேறி உள்ளது.

சினிமாவில் போலி மருத்துவர்களால் நிகழும் பாதிப்புகளை காமெடியாக காட்சிபடுத்தினாலும், நிஜத்தில் இது போன்ற பாதிப்புகள் பாதிக்கப்படும் நபரை வீட்டுக்குள்ளேயே முடங்க வைத்து விடுகிறது.

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் நூல் கடை நடத்தி வருபவர் தனபால். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது 13 வயது மகளுக்கு சிறிது காலமாக தோல் நோய் பாதிப்பு இருந்துள்ளது. 9 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமிக்கு நீண்ட நாட்கள் மருத்துவம் பார்த்தும், நோய் சரியாக வில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தெரிந்தவர்கள் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த பரம்பரை வைத்தியர் மருகு மகேந்திரனை தொடர்பு கொண்டுள்ளனர். அடுத்தநாள் தனபால் வீட்டுக்கு சென்ற வைத்தியர் மருகு மகேந்திரன், சிறுமியின் பெற்றோரிடம், தாங்கள் குடும்பத்தினர் பல பரம்பரையாக சித்த வைத்தியம் பார்த்து வருவதாகவும், சிறுமியின் தோல்நோய் பாதிப்பிற்கு கொல்லிமலையிலிருந்து வைரம் போன்ற அரிதிலும் அரிதான மூலிகை மருந்து ஒன்றை கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

அத்தோடு விடாமல் தான் கொண்டு வந்த மூலிகை மருந்தை சிறுமி மீது தடவியதாகவும் கூறப்படுகிறது. இதனை நம்பிய பெற்றோர் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். அடுத்த சில நாட்களிலேயே சிறுமியில் தோல் தீ பட்டது போல வெந்து புண்ணாகி உள்ளது. உடலில் தீவிர பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமியின் பெற்றோர் ஆங்கில மருத்துவரிடம் சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். அப்போது மாணவி மீது தடவப்பட்டது அபூர்வ மூலிகை மருந்தல்ல, டைல்ஸ் கற்களுக்கு பூசப்படும் ரெட் ஆசிட் மருந்து என தெரியவந்தது. இதனால் சிறுமியின் தோல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்ய இயலாது எனவும் மருத்துவர் தெரிவித்தாக சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர், பரம்பரை வைத்தியர் என்று மோசடி செய்த மருகு மகேந்திரன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்திய மருத்துவ சட்டத்தின் கீழ் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருகு மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அந்த மூலிகை மருந்தில் காஸ்டிக் சோடா, திருநீர், துஜா,ரெட் ஆக்ஸிட் ஆகிவற்றின் கலவை என்று துண்டுச்சீட்டில் எழுதி கொடுத்தார் வைத்தியர் மருகு மகேந்திரன்.

இந்த புகார் தொடர்பாக செல்போன் வாயிலாக மருகு மகேந்திரனிடம் விசாரித்த போது, தலைமை காவலர் ஒருவரிடம் பணம் கொடுத்து சமரசமாக பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் தனது புகழை கெடுக்க சதி நடப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

மருத்துவம் தெரியாத இதுபோன்ற பரம்பரை வைத்தியர்களை நம்பிச்சென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்துள்ளது இந்த சம்பவம்.

[…]

சம்பவம்
பொது செய்தி

தோல் வியாதிக்கு விபரீத சிகிச்சை..! பரம்பரை வைத்தியர் மீது புகார்

திருப்பூரில் தோல் வியாதியால் அவதிப்பட்ட மாணவிக்கு, நாட்டு மருந்தால் சிகிச்சை அளிப்பதாக கூறி ரசாயண பொடியை கொடுத்த பாரம்பரிய மருத்துவரால், மாணவியின் தோல் வெந்து போன சம்பவம் அரங்கேறி உள்ளது.

சினிமாவில் போலி மருத்துவர்களால் நிகழும் பாதிப்புகளை காமெடியாக காட்சிபடுத்தினாலும், நிஜத்தில் இது போன்ற பாதிப்புகள் பாதிக்கப்படும் நபரை வீட்டுக்குள்ளேயே முடங்க வைத்து விடுகிறது.

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் நூல் கடை நடத்தி வருபவர் தனபால். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது 13 வயது மகளுக்கு சிறிது காலமாக தோல் நோய் பாதிப்பு இருந்துள்ளது. 9 ஆம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமிக்கு நீண்ட நாட்கள் மருத்துவம் பார்த்தும், நோய் சரியாக வில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தெரிந்தவர்கள் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த பரம்பரை வைத்தியர் மருகு மகேந்திரனை தொடர்பு கொண்டுள்ளனர். அடுத்தநாள் தனபால் வீட்டுக்கு சென்ற வைத்தியர் மருகு மகேந்திரன், சிறுமியின் பெற்றோரிடம், தாங்கள் குடும்பத்தினர் பல பரம்பரையாக சித்த வைத்தியம் பார்த்து வருவதாகவும், சிறுமியின் தோல்நோய் பாதிப்பிற்கு கொல்லிமலையிலிருந்து வைரம் போன்ற அரிதிலும் அரிதான மூலிகை மருந்து ஒன்றை கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

அத்தோடு விடாமல் தான் கொண்டு வந்த மூலிகை மருந்தை சிறுமி மீது தடவியதாகவும் கூறப்படுகிறது. இதனை நம்பிய பெற்றோர் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். அடுத்த சில நாட்களிலேயே சிறுமியில் தோல் தீ பட்டது போல வெந்து புண்ணாகி உள்ளது. உடலில் தீவிர பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமியின் பெற்றோர் ஆங்கில மருத்துவரிடம் சிறுமியை அழைத்து சென்றுள்ளனர். அப்போது மாணவி மீது தடவப்பட்டது அபூர்வ மூலிகை மருந்தல்ல, டைல்ஸ் கற்களுக்கு பூசப்படும் ரெட் ஆசிட் மருந்து என தெரியவந்தது. இதனால் சிறுமியின் தோல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்ய இயலாது எனவும் மருத்துவர் தெரிவித்தாக சிறுமியின் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர், பரம்பரை வைத்தியர் என்று மோசடி செய்த மருகு மகேந்திரன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்திய மருத்துவ சட்டத்தின் கீழ் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருகு மகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது அந்த மூலிகை மருந்தில் காஸ்டிக் சோடா, திருநீர், துஜா,ரெட் ஆக்ஸிட் ஆகிவற்றின் கலவை என்று துண்டுச்சீட்டில் எழுதி கொடுத்தார் வைத்தியர் மருகு மகேந்திரன்.

இந்த புகார் தொடர்பாக செல்போன் வாயிலாக மருகு மகேந்திரனிடம் விசாரித்த போது, தலைமை காவலர் ஒருவரிடம் பணம் கொடுத்து சமரசமாக பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் தனது புகழை கெடுக்க சதி நடப்பதாகவும் விளக்கம் அளித்தார்.

மருத்துவம் தெரியாத இதுபோன்ற பரம்பரை வைத்தியர்களை நம்பிச்சென்றால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்துள்ளது இந்த சம்பவம்.

[…]

விவாகரத்து
பொது செய்தி

விவாகரத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை அதிதி மேனன்

விவாகரத்து வழக்கு தொடர்பாக, குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்த நடிகை அதிதி மேனனை மதுரை குடும்ப நல நீதிமன்றம் கண்டித்துள்ளது.

நடிகர் அபி சரவணனுடன் காதல் திருமணம் செய்து, பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளால் விவாகரத்து கோரியிருக்கும் நடிகை அதிதி மேனன் கடந்த சில ஆண்டுகளாக விவகாரத்து வழக்கில் ஆஜராகாமல் போக்கு காட்டி வந்தார்.

இந்தநிலையில் இன்று அவர்களது வழக்கு மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வந்ததும் நடிகர் அபிசரவணன் மற்றும் நடிகை அதிதி மேனன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது,குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள இயலாது எனவும், வழக்கை உயர்நீதிமன்றம் மூலம் சந்திக்க உள்ளதாகவும் அதிதிமேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, கண்டிப்பாக கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கவுன்சிலிங்கில் அதிதிமேனன் கலந்து கொண்டார்.

[…]

தற்கொலை
பொது செய்தி

செல்லப்பிராணிக்காக இளம்பெண் தற்கொலை...!!

கோவை அருகே நாய் வளர்க்ககூடாது என தந்தை திட்டியதால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது 23 வயது மகள் கவிதா தனியார் பத்திர அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கவிதா வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கில் தொங்கினார்.

போலீசார் விசாரணையில் இவர் சீசர் என பெயரிட்டு செல்லமாக வளர்த்த நாய் குறைக்கும் சத்தம் இடையூறாக இருப்பதாக பக்கத்துவீட்டுக்காரர்கள் புகார் கூறியதாகவும், இதனால் தந்தை திட்டியதால் மனம் உடைந்த கவிதா கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

[…]

நெல்லை
பொது செய்தி

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள், கணவர் தன்னாசி கைது

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள், அவருடைய கணவர் தன்னாசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள வீட்டில் உமா மகேஸ்வரி, முருக சங்கரன், வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி கொலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து அருகிலுள்ள உணவகத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைப்பற்றி, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் மதுரையை சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் என்ற கார்த்திக் ராஜாவை ஜூலை 31ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சீனியம்மாள், அவரது கணவர் தன்னாசி ஆகியோரிடம் விசாரித்தபோது, உமாமகேஸ்வரி இருந்தால்  தனக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது என கருதி, அவரை கொலை செய்யக் கூறியதா,கத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

[…]

கன்னியாகுமரி
பொது செய்தி

தாய்க்காக ஒரு திருமணம்.. தனக்காக மறு திருமணம்..! செல்பிபுள்ள அதிரடி

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடில் தாயின் மிரட்டலுக்கு பயந்து 15 வயதில் முறைப்படி திருமணம் செய்து கொண்ட சிறுமி ஒருவர், 25 வயதான நிலையில், இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

2 குழந்தைகளுடன் முதல் கணவனும், நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசும் தவிக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டை சேர்ந்த ரமேஷ் என்ற சமையல் தொழிலாளிதான் 2 குழந்தைகளுடன் தவிக்கும் அப்பாவி கணவன்..!

தனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தான் துபாய்க்கு வேலைக்கு சென்ற நேரத்தில், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று அகில் என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டுகின்றார்.

தனக்கு 18 வயது கூட நிரம்பாத பெண்ணை பெயர் மாற்றி மோசடியாக திருமணம் செய்து விட்டதாக தெரிவிக்கும் ரமேஷ், தற்போது முதல் திருமணத்தை மறைத்து தனது மனைவி அகிலை பாதிரியார் முன்னிலையில் 2 வது திருமணம் செய்துள்ளதாகவும் இதனால் குழந்தைகள் தவிப்பதாகவும் போலீசில் புகார் தெரிவித்தார்.

இரு குழந்தைகளும் தனக்கும், ரமேஷ்குமாருக்கும், பிறந்தவை என்று ஒப்புக் கொண்ட பிரீத்தி, ஆவணப்படி ரமேஷ்குமார் திருமணம் செய்தது தனது தாயை என்று கூறி திடுக்கிட வைத்தார். மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக தனது தாய் ரமேஷ்குமாருடன் தன்னை அனுப்பி வைத்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

ரமேஷ்குமார் தினமும் சந்தேகப்பட்டு தன்னை அடித்து உதைத்ததாகவும், இரு குழந்தைகளையும் தன்னிடம் தர மறுத்து விரட்டிய பின்னர் காதலன் அகில் அடைக்கலம் தந்ததாகவும், ரமேஷ்குமார் தன்னை பற்றி முக நூலில் அவதூறு பரப்பியதால் காதலன் அகிலையே முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் பிரீத்தி விளக்கம் அளித்தார்.

காவல்துறையினரிடம் தனது சிறுவயது வாழ்க்கை குறித்தும் ரமேஷ்குமாருடனான வாழ்க்கை குறித்தும் விவரித்த பிரீத்தி, ஆவணப்படி ரமேஷ்குமாரின் மனைவி தான் அல்ல தனது தாய் தான் என்று கூறி திடுக்கிட வைத்தார்.

15 வயதுள்ள பெண்ணை திருமணம் செய்வதற்காக திருமண பதிவு சான்றிதழில் மணப்பெண்ணின் வயது சான்றுக்கு பதிலாக, மாமியாரின் வயது சான்றிதழை இணைத்து மோசடி செய்ததால், ரமேஷ்குமாரின் மனைவி யார் என்று முடிவுக்கு வர முடியாமல் போலீசாரும் தவித்து நிற்கின்றனர்..!

[…]

மீனவர்கள்
பொது செய்தி

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 38 மீனவர்கள் மாயம் - தேடும் பணி தீவிரம்

தூத்துக்குடி அருகே, கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற 38 மீனவர்கள் இன்னும் வீடு திரும்பாத நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்றுவருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தருவைக்குளம் பகுதியிலிருந்து சுமார் 400 மீனவர்கள், ஆழ்கடல் பகுதிக்கு  மீன்பிடிக்க சென்றனர். இதனிடையே, பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள், உடனடியாக கரை திரும்புமாறும், பாதுகாப்பான பகுதியில் ஒதுங்குமாறும் எச்சரிக்கப்பட்டதையடுத்து அதில் பல மீனவர்கள் கரைதிரும்பினர்.

ஆனால், அந்தோணி ஜெயபால், நிக்கோலஸ் ஜோசப், மிக்கேல் ஆரோக்கியராஜ், அந்தோணி சந்தனராஜ் ஆகியோருக்கு சொந்தமான நான்கு விசைப்படகுகளில்  கடந்த 17ஆம் தேதி சென்ற 38 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது.

மீனவர்களின் உறவினர்கள் அச்சமடைந்துள்ள நிலையில், கடலோர காவல் படையினர் ரோந்து கப்பல்கள் மூலம் மீனவர்களை தேடிவருகின்றனர். 38 பேரும் கச்சத்தீவு அருகே கரை ஒதுங்கி இருக்கலாம் என்ற கோணத்திலும் தேடுதல் பணி நடைபெறுகிறது.

[…]

முகிலன்
பொது செய்தி

காணாமல் போன நாட்களில் முகிலன் எங்கிருந்தார்?

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன நாட்களில் எங்கிருந்தார்?..என்ன செய்தார்?... என்பது குறித்து பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி மாயமான முகிலன் பற்றி விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், பெண் ஒருவரை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட முகிலன், ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணையின்போது, தன்னை யாரோ கடத்திச் சென்றதாக முகிலன் தரப்பில் கூறப்பட்டது. அதை மறுத்த அரசுத்தரப்பு, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக முகிலன் தலைமறைவானதாக தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து முகிலன் காணாமல் போன நாட்களில் எங்கிருந்தார் என்றும் என்ன செய்தார் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக முகிலன் விளக்கமளித்தால், ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

[…]

போக்குவரத்து உதவி ஆய்வாளர்
பொது செய்திகள்

பெண்ணுக்கு ஆபாச வீடியோ.. போக்குவரத்து எஸ்.ஐ அட்டகாசம்..!

வேலூரில் வாகனத் தணிக்கையின்போது பெண் ஒருவரை மிரட்டி செல்போன் எண்ணை வாங்கி இரவில் அவருக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியதாகக் கூறப்படும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

வேலூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ராஜமாணிக்கம். சில தினங்களுக்கு முன் வாகனத் தணிக்கையின்போது, இருசக்கர வாகனத்தில் தனது மகனுடன் வந்த பெண் ஒருவரிடம் வாகனத்தின் ஆவணங்களைக் கேட்டுள்ளார்.

ஆவணங்கள் சரியாக இருந்த நிலையில், வண்டியின் சைலன்சர் விதிமுறைகளுக்குப் புறம்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வழக்குபோடப் போவதாக மிரட்டியுள்ளாராம். பின்னர் அப்பெண்ணையும் அவரது மகனையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்த அவர், பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்துள்ளார்.

செல்போன் எண்ணை வாங்கியதில் இருந்து குட் நைட், குட் மார்னிங் என குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்த ராஜமாணிக்கம், வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவருக்கு ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது உறவினர்களிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள், பணியிலிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கத்தை முற்றுகையிட்டு கேள்விகளால் துளைத்து எடுத்தனர். முதலில் தான் அவ்வாறு வீடியோ அனுப்பவில்லை என மறுத்த உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம், வீடியோ ஆதாரத்தை காட்டியவுடன் அவர்களிடம் மன்னிப்புக் கோரினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கத்தை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

[…]

கொலை
பொது செய்தி

கர்ப்பிணி மனைவி கொலை - கோயபல்ஸ் வார்த்தையால் கம்பி எண்ணும் கணவன்


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நிறைமாத கர்ப்பிணி மனைவியை கணவனே கொலை செய்து விட்டு கண்ணீர் விட்டு கபட நாடகம் ஆடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வசந்த் நகரைச் சேர்ந்த தினேஷ்குமாருக்கும் சுஷ்மிதா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 9 மாத கர்ப்பிணியாக இருந்த சுஷ்மிதா நேற்று கவுண்டச்சிபட்டியில் உள்ள தனது கணவன் வீட்டிற்கு செல்லும் சாலை ஓரமாக உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தினேஷ்குமார் கதறி அழுதபடி  மனைவியை பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகள், மாயமானதால் நகைக்காக கொலை செய்திருக்கலாம் என போலீசிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்,  திடீர் திருப்பமாக இந்த சம்பவத்தில் சுஷ்மிதாவின் கணவரை கொலை செய்து நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது.  திருமணமாகி 2 குழந்தைகளுடன் இருந்த திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாண்டீஸ்வரி என்ற பெண்ணுடன் தினேஷ்குமாருக்கு தவறான தொடர்பு இருப்பது சுஷ்மிதாவுக்கு தெரிய வந்ததை அடுத்து கணவரை கண்டித்துள்ளார்.

இதற்கிடையில்  நமக்கு தான் இரண்டு குழந்தைகள் உள்ளதே மேலும் எதற்கு குழந்தை என்ற பாண்டீஸ்வரியின் அறிவுரையை ஏற்ற தினேஷ்குமார் சுஷ்மிதாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

வேலைக்கு செல்வது போல் சென்று விட்டு தனது மனைவியை மட்டும் தனியாக தோட்டத்துக்கு அழைத்து வந்த தினேஷ்குமாரிடம் மீண்டும் கள்ளத்தொடர்பு குறித்து கேட்டு சுஷ்மிதா தகராறு செய்துள்ளார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுஷ்மிதாவை பெல்ட்டால் கழுத்தை நெரித்து வெளிக்காயம் ஏற்படாத வகையில் கொலை செய்த தினேஷ்குமார், பின்னர் தன்னை காப்பாற்றிக் கொள்ள மனைவியின் கழுத்தில் இருந்த நகைளை மட்டும் எடுத்து தனது கள்ளகாதலியின் தாயார் வேலம்மாள் என்பவரின் வீட்டில் கொண்டு போய் வைத்துள்ளார். பின்னர் சுஷ்மிதாவை உறவினர்களுடன் சேர்ந்து அங்குமிங்குமாக தேடுவது போல் தினேஷ்குமார் நடித்துள்ளார். 

நகைக்காக கொலை நடந்திருந்தால் சுஷ்மிதாவின் காதில் அணிந்திருந்த தோடு, கொலுசு, செல்போன் ஆகியவற்றை கொள்ளையன் விட்டு சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதால் போலீசாருக்கு தினேஷ்குமார் மீது லேசான சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் தினேஷ்குமாரும் அடிக்கடி நகைக்காக மனைவியை கொலை செய்து விட்டனர் என்று கூறிய வார்த்தையால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை முறைப்படி கவனித்து விசாரித்த போது தான் கொலை செய்ததை தினேஷ்குமார் ஒப்புக் கொண்டார். 

இதனை அடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த  கள்ளக்காதலி பாண்டீஸ்வரி, அவரது தாய் வேலம்மாள், சகோதரர் பால்பாண்டி மற்றும் அவரது சகோதரி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதை கோயபல்ஸ் பாணி என்பார்கள். அதுபோல நகைக்காக கொலை செய்து விட்டனர் என்று திரும்ப திரும்ப தினேஷ்குமார் கூறிய பொய்யே அவரை போலீஸ் வலையில் சிக்க வைத்து விட்டது.  

 

[…]

கொலை
பொது செய்தி

மாமியாரை கொன்று புதைத்த மருமகள்..! காதல் திருமண எதிர்ப்பால் ஆத்திரம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மாமியாரை திருவிழா விருந்துக்கு அழைத்து சென்று தீர்த்துக்கட்டிய மருமகள் தாயுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைக்கு அடிமையான காதல் கணவனை வைத்து மேலும் இரு கொலைகள் செய்வதற்கு தைரியத்தை கொடுத்த சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த உத்தண்ட குமாரவலசு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணம்மா.இவரது மகள் பூங்கொடி. நாகேந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பூங்கொடி.

தற்போது கண்ணம்மா, நாகேந்திரன், பூங்கொடி ஆகிய 3 பேரும் மதுரை பைனான்சியர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து வீட்டில் புதைத்த வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பூங்கொடியும், அவளது தாய் கண்ணம்மாவும் சேர்ந்து 5 மாதங்களுக்கு முன்பு மேலும் ஒரு கொலையை செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நாகேந்திரன், பூங்கொடியை காதல் திருமணம் செய்தது அவரது தாய் ராஜாமணிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் மருமகள் பூங்கொடியை ராஜாமணி தடித்த வார்த்தைகளால் சுட்டதாக கூறப்படுகின்றது. காதல் திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக மாமியாரின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்ததாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து தனது தாய் கண்ணம்மாளிடம் பூங்கொடி அடிக்கடி வேதனை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் போதைக்கு அடிமையான காதல் கணவன் நாகேந்திரன் போதை மறுவாழ்வு சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு சென்றுவிட, தனது மாமியார் சொல்லும் வேலைகளை எல்லாம் இழுத்து போட்டு செய்வது போல நடித்த பூங்கொடி, தங்கள் ஊரில் திருவிழா என்று கூறி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாமியார் ராஜாமணியை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து மாமியார் ராஜாமணிக்கு மயக்க மருந்து கொடுத்த பூங்கொடி, தனது தாய் கண்ணம்மாவுடன் சேர்ந்து மாமியார் ராஜாமணியை கொலை செய்ததாகவும், பின்னர் ராஜாமணியின் சடலத்தை வீட்டு தோட்டத்தில் புதைத்து அதன் மீது செடி வைத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. பெங்களூரில் இருந்து சிகிச்சை முடிந்து திரும்பிய கணவன் நாகேந்திரனிடம் மாமியாரை காணவில்லை என்று பூங்கொடி நாடகமாடியுள்ளார்.

அவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தனது தாயை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கம்போல மாயமான வழக்கு தானே என்று கிடப்பில் போட்டுள்ளனர். இந்த நிலையில் தனது சொந்த அண்ணன் செல்வராஜ் அவரது மனைவி ஆகிய இருவரையும் இதே பாணியில் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்ததை கண்ணம்மா ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ராஜாமணியின் சடலத்தை தோண்டி எடுத்து ரசாயண பரிசோதனைக்கு அனுப்பும் பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். தனது மனைவி பூங்கொடியும் மாமியார் கண்ணம்மாளும் சேர்ந்து தாய் ராஜாமணியை கொலை செய்தது தனக்கு தெரியாது என்றும், இரட்டை கொலை சம்பவம் கூட எதிர்பாராதவிதமாக நடந்தது போல தான் அவர்கள் இருவரும் தன்னிடம் தெரிவித்ததாக நாகேந்திரன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

மாமியார் மருமகள் சண்டை என்பது வீட்டுக்கு வீடு உண்டென்றாலும், மாமியாரை கொன்று புதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

[…]

விழுப்புரம்
பொது செய்தி

போதையில் மிரட்டல்.. விஜய் ரசிகர்கள் கைது..!


மாவட்டம் செஞ்சி அருகே போலீசாருக்கு சவால் விடுத்து ஆபாசமாக பேசி போதையில் வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

போதையில் போலீசாரிடம் வம்பிழுத்து மாட்டிக் கொண்டு கதறும் சினிமா காமெடி காட்சி போன்ற சம்பவம் ஒன்று விழுப்புரத்தில் அரங்கேறி உள்ளது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த உமையன்புரம் கிராமத்தை சேர்ந்த வீரன் மற்றும் சரத்குமார் இருவரும் விஜய் ரசிகர்கள். இவர்கள் மூக்கு முட்ட குடித்து விட்டு, குடி போதையில் தமிழக காவல்துறையை ஆபாசமாக பேசி வீடியோ ஒன்றை முக நூலில் பதிவிட்டதாக கூறப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் நடிகர் அஜீத்குமாரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து பேசியதோடு தங்கள் பெயர் முகவரியை எல்லாம் தெள்ள தெளிவாக குறிபிட்டு முக நூலில் பரப்பிஉள்ளனர்.

இந்த மிரட்டல் வீடியோ வாட்ஸ் ஆப்பில் பரவ அஜீத்ரசிகர்கள் ஆத்திரம் அடைந்ததால் புதிய பிரச்சனைகள் ஏதும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு போதையில் உளறிய விஜய் ரசிகர்கள் இருவரையும் கொத்தாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர் போலீசார்.

போதை தெளிந்த நிலையில் போலீசாரின் சிறப்பு கவனிப்பால், தாங்கள் என்ன செய்தோம் என்பதே தங்களுக்கு தெரியவில்லை என்று அவர்கள் போலீசாரிடம் கெஞ்சியதாக கூறப்படுகின்றது.!

சமூகத்தில் மோதல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு முன் எச்சரிக்கையாக இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திரையில் ஹீரோ சவால் விடுத்தால் ரசிகர்கள் விசில் அடித்து கொண்டாடுவார்கள். நிஜத்தில் ரசிகர்கள் சவால் விடுத்து வீடியோ வெளியிட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக மாறி இருக்கின்றது இந்த சம்பவம்.

[…]

பெண்
பொது செய்தி

சாலையோரம் நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் சடலம் மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையோரம் நிறைமாத கர்ப்பிணி பெண் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேடசந்தூர் வசந்த நகரை சேர்ந்தவர் சுஷ்மிதா. நிறைமாத கர்ப்பிணியான இவர், நேற்று கவுண்டச்சிப்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,  இன்று காலை கவுண்டச்சிப்பட்டியில் சாலையோரம் கிடந்த சுஷ்மிதாவின் சடலம் மீட்கப்பட்டது. வயிற்றில் இருந்த சிசுவும் இறந்துவிட்டது.

அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி சங்கிலி காணாமல் போன நிலையில், அவரது செல்போன் மற்றும் பை ஆகியவை சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டன. சுஷ்மிதாவின் உடலில் எந்த காயங்களும் இல்லாததால், அவர் எப்படி உயிரிழந்தார் ? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[…]

கொலை
பொது செய்தி

தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்..!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இளம் பெண் குட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் கள்ளக் காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

பள்ளிபாளையத்தைச் சேர்ந்த செந்திலின் மனைவி ஷோபனா. இவர் திருச்செங்கோட்டில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் பணியாற்றினார். சில நாட்களுக்கு முன் மகனின் பிறந்தநாளுக்கு துணி வாங்கச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ஷோபனா வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ஒரு குட்டையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் அவர் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர் அணிந்திருந்த நகைகள் எதுவும் எடுக்கப்படாமல் அப்படியே இருந்ததால் நகைக்காக கொலை செய்யப்படவில்லை என தெரியவந்தது.

போலீசார் ஷோபானாவின் செல்ஃபோனுக்கு வந்த எண்களை ஆய்வு செய்தபோது திருச்செங்கோட்டை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் ஷோபனாவிடம் கடைசியாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது தெரியவந்துள்ளது.  

[…]

கொலை
பொது செய்தி

தன்னுடன் தொடர்பில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை கணவருடன் தீர்த்துக்கட்டிய பெண்

சென்னை கொளத்தூரில் தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த ஆட்டோ ஓட்டுநரை கணவருடன் சேர்ந்து தலை வேறு, உடல் வேறாக வெட்டி வீசிய பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொளத்தூரை அடுத்த லட்சுமிபுரம் பகுதியில் தாய், மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தவர் ஆட்டோ ஓட்டுநரான சுரேஷ். கடந்த 14ஆம் தேதி வழக்கம்போல் சவாரிக்குச் சென்ற சுரேஷை அதன் பிறகு காணவில்லை என அவரது தாயார் கலா கொரட்டூர் போலீசில் புகாரளித்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்து போலீசார் சுரேஷை தேடி வந்த நிலையில், வடபெரும்பாக்கம் அருகே புதர் ஒன்றில் இருந்து தலையில்லாத ஆண் ஒருவரின் உடலை மீட்டு செங்குன்றம் போலீசார் விசாரித்து வருவது தெரியவந்தது. கொரட்டூர் போலீசாரின் விசாரணையில் அது காணாமல் போன சுரேஷின் உடல் என்பது தெரியவந்தது.

விசாரணையில் சுரேஷுக்கு பாடியை அடுத்த கலைவாணர் நகரில் சாலையோர இட்லி கடை நடத்தி வந்த கார்த்திகா என்ற பெண்ணுடன் தவறான தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது.
காணாமல் போன அன்று கார்த்திகாவைத் தேடி அவரது வீட்டுக்குச் சென்ற சுரேஷுக்கும் அங்கு எதிர்பாராமல் வந்துவிட்ட கார்த்திகாவின் கணவர் ஜெயக்கொடிக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சூழலில் கணவருடன் சேர்ந்து கார்த்திகாவும் சுரேஷை தாக்கியதில் அவர் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து எதிர்வீட்டைச் சேர்ந்த ராஜா, சுந்தரகாண்டன் ஆகியோரது உதவியுடன் சுரேஷை ஒரு காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு செங்குன்றம் நோக்கிச் சென்றுள்ளனர்.

வடபெரும்பாக்கம் அருகே உள்ள புதர் ஒன்றில் வைத்து மயங்கிக்கிடந்த சுரேஷின் தலையை அறுத்து வீசியிருப்பதாக போலீசார் கூறுகின்றனர். இதனையடுத்து கார்த்திகா, அவரது கணவர் ஜெயக்கொடி, ராஜா, சுந்தரகாண்டன் ஆகியோரை கைது செய்தனர். சுரேஷின் உடலை கொலையான இடத்திலும் அவரது தலையை செங்குன்றம் அருகே உள்ள கால்வாயிலும் போலீசார் கண்டெடுத்தனர்.

[…]

 அனுமதி
பொது செய்திகள்

தீபாவளிக்கு முன் இரு நாட்கள் அதிகாலை 2.00 மணி வரை கடைகளை திறக்க அனுமதி

வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.

டெக்ஸ்டைல்ஸ் விற்பனையாளர் கூட்டமைப்பு சார்பிலான மனுவில் தீபாவளியை முன்னிட்டு  ஏராளமான வியாபாரிகள் வட்டிக்கு கடன் பெற்று, ஆடைகளை வாங்கி விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முந்தைய 25, 26-ஆம் தேதிகள் வெள்ளி, சனிக்கிழமைகள் என்பதால் கூலித்தொழிலாளர்கள், பிற மாவட்டங்களில் பணியாற்றுவோர், சுற்றுவட்டார மாவட்ட மக்கள் அவ்விரு நாட்களில் பொருட்கள், ஆடைகளை வாங்கிச் செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த இரு நாட்களில் இரவு முழுவதும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு பல வியாபாரிகள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி அதிகாலை 2 மணி வரை மட்டும் கடை நடத்திக் கொள்ள அனுமதி அளித்தார்.

அரசாணையில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு முறைகள், ஷிப்ட் முறையில்  பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்ற உத்தரவிட்ட அவர், காவல் துறையினரும் வரம்புகளை வகுத்துக்கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார். 

[…]

கொலை
பொது செய்திகள்

350 பேரிடம் ரூ. 100 கோடி மோசடி - கணவன், மனைவி கைது

சேலத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி 350 பேரிடம் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிவண்ணன் என்பவர் ஆர்.எம்.வி குரூப் ஆஃப் கம்பனீஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

தமது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப்பாக்கி தருவதாகவும் நீண்ட நாள் முதலீட்டுக்கு, 25 சதவீத வட்டி வழங்குவதாகவும் அறிவித்தார். ஊறுகாய், மசாலா பொருள், சமையல் எண்ணெய் வகைகள் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்ததாகக் கூறப்படும் மணிவண்ணன், பகுதி வாரியாக அவற்றின் வினியோக உரிமையையும் தருவதாக உறுதியளித்தார்.

அதிகளவில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு, வெளிநாடு சுற்றுலா, உயர் ரக கார் பரிசாக வழங்குவதாகவும் அறிவித்த மணிவண்ணனின் இந்த கவர்ச்சிகர அறிவிப்பை அவரது ஊழியர்கள், முகவர்கள் ஏராளமான மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

தனது நிறுவனம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த நட்சத்திர ஓட்டல்களில் கூட்டங்கள் நடத்தி, கண்ணைக் கவரும் விளம்பரங்களை வெளியிட்டு பலரை நம்பவைத்தார். இதன் காரணமாக முதலீடுகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. மனைவி இந்துமதி, சகோதரர்கள் ராம், லட்சுமணன், மாமனார் மாணிக்கம், மாமியார் சரஸ்வதி, அலுவலக ஊழியர் சரஸ்வதி உள்ளிட்டோரின் ஒத்துழைப்புடன் பண வசூல் ஜரூராக நடைபெற்றுள்ளது.

நடுத்தர மக்கள் முதல் சிறிய அளவிலான தொழிலதிபர்கள் வரை போட்ட பணம் நூறு கோடி ரூபாயை தாண்டிய நிலையில், மணிவண்ணன் அண்ட் கோ 2018ஆம் ஆண்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. பணத்தை இழந்தவர்களில் 4 பேர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று மோசடி கும்பல் தப்பித்து வந்துள்ளது. பணத்தை நேரடியாகக் கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் சிலருக்கு மோசடி கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மணிவண்ணன் மீதான புகார்கள் குவியத் தொடங்கிய நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மோசடி கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மணிவண்ணனையும் அவரது மனைவி இந்துமதியையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு லேப்டாப், 2 டேப் (( TAB)) கள், 13 செல்போன்கள், 2 சொகுசுக் கார்கள், 10 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மோசடி செய்த பணத்தில் மணிவண்ணன் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திட்டம் போட்டு திருடுபவர்கள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டே இருக்கும் நிலையில், மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.

[…]

கொலை
பொது செய்திகள்

பெண்ணை கொன்றுவிட்டு அவரது மளிகைக் கடைக்கு மர்மநபர் தீவைப்பு

கோவை மயிலேரிபாளையம் அருகே பெண்ணை கொலை செய்துவிட்டு அவரது கடைக்கு தீவைத்து தப்பியோடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால், தேவகி தம்பதி 3 ஆண்டுகளாக தொப்பம்பாளையம் சாலையில் மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்ததோடு அங்கேயே வசித்து வந்தனர்.

3 நாட்களுக்கு முன்பு ஜெயபால் சொந்த ஊர் சென்றிருந்த நிலையில் கடைக்குள் நுழைந்த மர்மநபர், தனியாக இருந்த தேவகியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு அவர் காதில் இருந்த நகையை பறித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தடயங்களை அழிக்கும்பொருட்டு தேவகியின் உடலைச் சுற்றி மிளகாய் பொடியை தூவி கடைக்கு தீவைத்து விட்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. கடை தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கடைக்குள் இறந்து கிடந்த தேவகி உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[…]

ஆடியோ
பொது செய்தி

காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக சப்- இன்ஸ்பெக்டர் மீது பெண் புகார்

நாகையில், இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி கருவை கலைத்து ஏமாற்றியதாக கூறப்படும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், நடந்த விசயங்களை வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலைசெய்துவிடுவேன் என கூறி, சம்பந்தப்பட்ட பெண்ணை மிரட்டுவதுபோன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், திட்டச்சேரியில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் விவேக் ரவிராஜுக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்த நிலையில், இருவரும் நெருக்கமானதால் அப்பெண் கர்ப்பமடைந்தார். இதிலிருந்து தப்பித்துக்கொள்ள எண்ணிய விவேக் ரவிராஜ், ஒருவருடம் கழித்து திருமணம் செய்துகொள்வதாக கூறியதுடன், சென்னைக்கு அழைத்து சென்று அப்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, தன்னிடம் பேசுவதை தவிர்த்து வந்ததால் சந்தேகமடைந்த அப்பெண், தன்னை திருமணம்செய்து கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் விவேக் ரவிராஜோ, திருமணம் செய்து கொள்ளமுடியாது எனக் கூறியதுடன் இச்சம்பவத்தை வெளியில் கூறினால் குடும்பத்துடன் கொன்று புதைத்துவிடுவேன் என கூறி அப்பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. இது தொடர்பாக நாகை மற்றும் சென்னை போலீசில் அப்பெண் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

[…]

கொலை
பொது செய்தி

குழந்தையைக் கொன்று தற்கொலை செய்த... மனநிலை பாதித்த பெண்..!

கோவையில் கணவரை இழந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண், தனது 5 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - லீலாவதி தம்பதி வேதவள்ளி தனது மகள் வேதவள்ளி, மகன் மாதவன், வேதவள்ளியின் 5 வயது மகள் கார்குழலியுடன் வசித்து வந்துள்ளனர். இக்குடும்பம் பெங்களூருவில் இருந்து இப்பகுதிக்கு வந்து 6 மாதங்கள் ஆவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு குழந்தை கார்குழலிக்கு உடல்நிலை சரியில்லை என ராமகிருஷ்ணன், லீலாவதி, மாதவன் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மாதவன் தலையில் அடிபட்டு ரத்தம் வந்துகொண்டிருந்ததைப் பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். வேதவள்ளி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். மாதவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் அடிப்படையில் வந்த போலீசார் விசாரணையில் இறங்கினர்.

இந்த நிலையில் காலை ராமகிருஷ்ணனின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்திருக்கிறது.

கதவை நெடுநேரம் தட்டியும் வேதவள்ளி திறக்காத நிலையில், ஜன்னலை உடைத்து பார்த்தபோது உள்ளே அவர் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் என்ன நடந்தது என்பது குறித்து ராமகிருஷ்ணனிடம் போலீசார் விசாரித்தனர். வேதவள்ளி அமெரிக்காவில் வசித்து வந்த நிலையில், திடீரென அவரது கணவர் இறந்துள்ளார்.

5 வயது மகள் கார்குழலியுடன் ஊர் திரும்பிய வேதவள்ளிக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக பெங்களூருவில் தங்கி சிகிச்சையும் எடுத்துவந்துள்ளதாகத் சொல்லப்படுகிறது- வேதவள்ளி, திடீர் திடீரென மூர்க்கம் கொண்டு பக்கத்தில் இருப்பவர்களை தாக்குவதோடு, அருகிலுள்ள பொருட்களையும் அடித்து நொறுக்குவார் என்று கூறப்படுகிறது.

எப்போதாவது ஒருமுறை அரங்கேறும் அதுபோன்ற தருணங்களில் வேதவள்ளியின் பெற்றோரும் அவரது தம்பி மாதவனும் சேர்ந்து போராடி அவரை கயிற்றால் கட்டிப்போடுவது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது.

வியாழக்கிழமை இரவு சாதாரணமான நிலையில் தூங்கச் சென்ற வேதவள்ளி, நள்ளிரவில் வழக்கம்போல் மூர்க்கமடைந்து அங்கிருந்த டிவி உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளார்.

அவரை தம்பி மாதவன் கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, இருசக்கர வாகனத்துக்கு காற்றடிக்கும் பம்ப்பைக் கொண்டு தாக்கியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தின்போது வேதவள்ளி குழந்தையின் கழுத்தில் காலை வைத்து மிதித்துள்ளார்.

மயக்க நிலையில் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை கார்குழலி வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக ராமகிருஷ்ணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

[…]

பிரியாணி
பொது செய்திகள்

திண்டுக்கல்லை கலக்கிய 5 பைசா பிரியாணி

பழைய ஐந்து பைசாவிற்கு திண்டுக்கல்லில் 1/2 பிளேட் பிரியாணி என அறிவிக்கப்பட்டதையடுத்து பழைய 5 பைசாக்களுடன் மக்கள் குவிந்தனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள முஜீப் பிரியாணி கடையில் உலக உணவு தினத்தை முன்னிட்டு பழைய 5 பைசாவை கொண்டுவரும் முதல் 100 பேருக்கு 1/2 பிளேட் கோழி பிரியாணி வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காலை முதலே கடை முன் பழைய 5 பைசாவுடன் மக்கள் குவியத் தொடங்கினர். அவர்களின் பெயர் மற்றும் செல்ஃபோன் எண்களை பெற்றுக்கொண்டு பிரியாணி, தயிர் வெங்காயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

கீழடியில் 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள், நாணயங்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ள நிலையில் வருங்கால சந்ததியினருக்கு நாம் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் நாணயங்களின் மதிப்பை விளக்கும் விழிப்புணர்வு முயற்சியாகவே 5 பைசா பிரியாணி வழங்கப்பட்டதாக கடை உரிமையாளர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்

[…]

பெண்
பொது செய்திகள்

பேருந்து படிக்கட்டு அருகில் பயணம் செய்ததால் வெளியே வீசப்பட்ட பெண்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பேருந்தின் படிக்கட்டு அருகில் பயணம் செய்த பெண் தூக்கி வீசப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

குமாரபாளையத்தை அடுத்த அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கோகிலா. ஈரோடு மாவட்டம் பெருந்துறை செல்ல அரசுப் பேருந்தில் ஏறிய அவர் இருக்கை கிடைக்காததால் படிக்கட்டு அருகே நின்றபடி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. கோட்டைமேடு என்ற இடத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் சர்வீஸ் சாலையில் மாற்றுப் பாதையில் பேருந்து வேகமாக திரும்பியது. அப்போது நிலைதடுமாறிய கோகிலா பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.

100 அடி தார்ச்சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட அவர், சாலையோர சாக்கடையில் விழுந்தார். இந்தக் காட்சிகள் ஒரு கார் விற்பனை மைய சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன. படுகாயமடைந்த கோகிலாவுக்கு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் நெடுஞ்சாலையில் செல்லும் வேகத்திலேயே சர்வீஸ் சாலை வளைவிலும் செல்வதால் விபத்து ஏற்படுவதாகக் கூறும் மக்கள் வேகத்தடை அமைக்கக் கோரியுள்ளனர்.

[…]

கொலை
பொது செய்தி

அண்ணனின் தவறான நடத்தை - தங்கையை பலிவாங்கிய பயங்கரம்..!

நாமக்கல்லில் தகாத உறவு விவகாரத்தில் ஒரு குடும்பத்தையே கொலை செய்ய நடந்த கொடூர முயற்சியில் அப்பாவி இளம் தம்பதியர் பரிதாபமாக உயிரிழந்தனர். அண்ணன் செய்த பாவம் தங்கையையும் அவரது கணவரையும் பலிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த விமல்ராஜ், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் அனிதாவின் பெற்றோருடன் சேந்தமங்கலம் ரயில்வே மேம்பாலம் அருகே வசித்து வந்துள்ளனர். இந்த ஜோடிக்கு 5 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

திங்கட்கிழமை இரவு அனிதாவின் தாய் கலாவதி வெளியே சென்றிருந்த நிலையில், அனிதா, விமல்ராஜ், அனிதாவின் தந்தை கருப்பசாமி உள்ளிட்டோர் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென உள்ளே நுழைந்த ஒரு கும்பல், மூன்று பேரையும் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் அனிதாவும் விமல்ராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட, கருப்பசாமி படுகாயமடைந்துள்ளார். 5 மாத பெண் குழந்தை அர்ஜிதாவை மட்டும் விட்டுவிட்டு அந்த கொடூர கும்பல் தப்பியோடியுள்ளது.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கருப்பசாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

உயிரிழந்த அனிதாவுக்கு அருண் என்ற பெயரில் அண்ணன் ஒருவன் இருக்கிறான். அருணும் நாமக்கல் ஏ.எஸ் பட்டியை சேர்ந்த நிக்கல்சன் என்பவனும் ஒன்றாக தொழில் செய்து வந்துள்ளனர்.

அந்த பழக்கத்தில் அருணை நிக்கல்சன் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல, நிக்கல்சனின் மனைவி ஷோபனாவுக்கும் அருணுக்கும் தவறான பழக்கமும் நெருக்கமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக அருணும் ஷோபனாவும் தலைமறைவாகியுள்ளனர்.

சில நாட்கள் கழித்து தலைமறைவாக இருந்த அருணுக்கும் நிக்கல்சனுக்கும் போனிலேயே பகை வளர்ந்து வந்துள்ளது. நாளுக்கு நாள் ஆத்திரம் அதிகமாக “என் குடும்பத்தை சீரழித்த உன்னை பழிவாங்க உன் குடும்பத்தையே கொலை செய்கிறேன்” என அருணிடம் நிக்கல்சன் கொக்கரித்ததாகக் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், தப்பியோடிய நிக்கல்சன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.

அண்ணன் செய்த தப்புக்கு எந்தப் பாவமும் அறியாத அப்பாவி தங்கையும் அவரது கணவரும் பலிவாங்கப்பட்டு, 5 மாத குழந்தை நிர்கதியாக்கப்பட்டிருக்கும் சம்பவம் நாமக்கல்லில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

[…]

வழிப்பறி
பொது செய்தி

கோவையில் 30 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையர்கள்

கோவை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களிடமிருந்து 30 லட்ச ரூபாய்  பணம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்... 

கோவை ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்த தர்ஷன் அசோக் என்பவர், திருப்பூரில் நிதி நிறுவனம் ஒன்றில் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். தனது நண்பரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராகுல் என்பவருடன் திருப்பூர் சென்று பணத்தை பெற்றுக் கொண்ட தர்ஷன், இரு சக்கர வாகனத்தில் கோவை திரும்பிக் கொண்டிருந்தார்.

இருவரும் கருமத்தம்பட்டி அருகே கனியூர் சுங்கச்சாவடி பகுதியில் வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் அவர்கள் மீது மோதியதில் இரண்டு வாகனங்களில் இருந்த 4 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அப்போது பின்னால் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் தர்ஷனிடம் இருந்த பணப்பையை பறிக்க முயன்றுள்ளனர். அவர் தர மறுக்கவே அவரது முதுகில் கத்தியால் குத்திய மர்ம நபர்கள் பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து காயமடைந்த தர்ஷன் அசோக், எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த சிவராஜ், தமிழரசன் ஆகியோர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த ராகுல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தர்ஷன் அசோக் தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் பத்திரத்தை எடுத்து வந்ததும், திருப்பூரிலுள்ள நிதி நிறுவனத்தில் முறையாக அடமானம் வைக்காமல் பத்திரத்தை கொடுத்து வாய்மொழி ஒப்பந்தத்தின் பேரில் கடன் பெற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து கருமத்தம்ப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது தற்செயலானதா, அல்லது திட்டமிட்ட சதியா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், அதில் வந்த சிவராஜ் மற்றும் தமிழரசனுக்கு கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மருத்துவமனையில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தர்ஷன் கடன் பெற்று வந்ததை அறிந்த நிதி நிறுவன ஊழியர்கள் யாரேனும் கொள்ளையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் திருப்பூரில் உள்ள நிதி நிறுவனத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

[…]

காவலர்
பொது செய்தி

குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை மடக்கிய போலீசார்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் குறித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் வேல்முருகன் என்பவரும், காவலர் சார்லஸ் என்பவரும் கஞ்சித்தொட்டி முனை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியை மடக்கினர். அனைத்து ஆவணங்களும் இருப்பதாக அவர்கள் கூறிய போது, இருசக்கர வாகனத்தில் இருவர் தான் வரவேண்டும் என்ற நிலையில், கூடுதலாக 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தது ஏன் என்று போலீசார் கேள்வி எழுப்பினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றியதால், அசல் ஆர்.சி. புத்தகத்தைக் காட்டுமாறு காவலர் சார்லஸ் கேட்கும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

[…]

டெங்குக்காய்ச்சலால்
பொது செய்தி

டெங்குக்காய்ச்சலால் 21 வயது இளம்பெண் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 21 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதாவுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் 6 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் தீவிரமடைந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சங்கீதா அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்தில் டெங்குக்காய்ச்சலால் 11 மாத குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் திருத்தணி சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து காய்ச்சல் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு  அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

[…]

கொலை
பொது செய்தி

பூவிருந்தவல்லி அருகே மனைவி கழுத்தையறுத்துக் கொன்ற கணவன்

சென்னை பூவிருந்தவல்லி அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், அப்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, காவல்நிலையத்தில் சரண் அடைந்தான்

காட்டுப்பாக்கம் அம்மன் நகரைச் சேர்ந்த 35 வயதான கிட்டப்பனுக்கு, 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளாக, கிட்டப்பனுக்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது..

இதனால் ஏற்பட்ட தகராறில், கடந்த 10 மாதங்களாக, தனது தாயாரின் வீட்டில், குழந்தைகளோடு, சுமதி வசித்து வந்தார். இதுதொடர்பான புகார், பூவிருந்தவில்லி காவல் நிலைய விசாரணையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை தனது வீட்டிற்கு சென்ற சுமதியை, அவரது கணவன் கிட்டப்பன், தலையில் சுத்தியாலால் அடித்தும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்துவிட்டு, தப்பியோடிவிட்டான்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூவிருந்தவல்லி காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தன்னை நம்பி வந்த மனைவியை படுகொலை செய்த கொலையாளி கிட்டப்பன், பூவிருந்தவல்லி காவல்நிலையத்தில் சரண் அடைந்தான். கொலை செய்யப்பட்ட சுமதிக்கு இரண்டு தங்கைகள் உள்ளனர். இவர்களில் ஒருவர், கணவனால் கொலை செய்யப்பட்டதுபோன்றே, தற்போது, சுமதியும், கணவனாலேயே கொல்லப்பட்டிருப்பது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

[…]

ஓட்டுனர்
பொது செய்தி

போதையில் தள்ளாடி கவிழ்ந்த ஆம்னி பேருந்து..! ஓட்டுனருக்கு அடி உதை

பெங்களூரில் இருந்து சேலம் சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுனர் ஒருவர் குடிபோதையில், பேருந்தை தாறுமாறாக ஓட்டியதால்,  சாலைத் தடுப்பில் மோதி, பேருந்து கவிழ்ந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. பயணிகளிடம் சிக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி விழுந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பெங்களூரில் இருந்து சேலத்திற்கு படுக்கை வசதி கொண்ட தனியார் நிறுவன ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பேருந்து தொப்பூர் டோல்கேட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது தாறுமாறாக ஓடியது.

பின்னால் சென்ற காரில் இருந்தவர்கள் இதனை செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். சாலைக்கும் சாலையோரத்துக்குமாக அந்த தனியார் பேருந்து மாறிமாறிச் சென்று வந்தது. பின்னால் சென்ற காரில் இருந்தவர்கள் ஹாரனை அழுத்தி ஒலி எழுப்பினர். பேருந்து ஓட்டுனரோ அதை காதுகொடுத்துக் கேட்காமல் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் ஓட்டுனர் முன்னால் சென்ற மற்றொரு தனியர் ஆம்னி பேருந்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது சாலையின் குறுக்கே இரும்பு பேரிகார்டை தட்டிக் கொண்டு தடுப்பில் மோதி பேருந்து அப்படியே கவிழ்ந்தது.

பேருந்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு முன்பக்க கண்ணாடி வழியாக வெளியேவந்தனர். பயணிகள் சிலர் ஓட்டுனரை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர்.

ஓட்டுனர் போதை மயக்கத்தில் ஆம்னி பேருந்தை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றால் ஒருவர்தான் பாதிக்கப்படுவார்.

ஆனால் பேருந்து ஓட்டுபவர் குடித்திருந்தால் ஒட்டு மொத்த பயணிகளின் உயிரும் பணயம் வைக்கப்படும் என்பதை உணர்ந்து, இதுபோன்ற குடிகார ஓட்டுனர்களை கண்டறிந்து போக்குவரத்து காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஓட்டுனர்களை பணியில் அமர்த்தும் பேருந்து நிறுவனங்களும் மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர் பயணிகள்.

[…]

பலாத்காரம்
பொது செய்தி

தங்கை உறவுமுறை கொண்ட சிறுமியை பலாத்காரம் செய்ததாக இரு இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

வேலூர் மாவட்டத்தில் தங்கை உறவுமுறை கொண்ட சிறுமியை பலாத்காரம் செய்ததாக இரு இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனியார் ஷு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி அந்தச் சிறுமி சென்னையில் உள்ள தனது தோழி பிறந்த நாளுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது ஆற்காடு பஸ் நிலையம் வந்த அவர், இரவு நேரம் என்பதால் ஊருக்கு செல்வதற்காக தனது பெரியப்பா மகன் குபேந்திரனை துணைக்கு வருமாறு போன் செய்து அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த குபேந்திரன், லாலாபேட்டை பகுதியில் ஹோட்டலில் சாப்பாடு வாங்கிக் கொண்டு அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளான். இருவரும் வசூர் பகுதியில் செல்லும்போது, குபேந்திரன் தனது சகோதர உறவுமுறையான அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த அப்பு என்ற ஹரி என்பவனை அழைத்துள்ளான்.

ஹரி வந்தது தொடர்பாக, அந்தச் சிறுமி குபேந்திரனிடம் கேட்டபோது, அந்தச் சிறுமியைத் தாக்கிய இருவரும், அவரைக் கட்டிப்போட்டு பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் நடந்த நிகழ்வு குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் பயந்து போன சிறுமி நடந்த சம்பவம் குறித்து அமைதியாக இருந்துள்ளார். இதனை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்த நினைத்த குபேந்திரன் மற்றும் ஹரி ஆகியோர் சிறுமியை பலாத்காரம் செய்த போது எடுத்த வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், மீண்டும் தங்களது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்து பயந்துபோன சிறுமி, தனக்கு நடந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து பொன்னை காவல் நிலையத்தில் சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணை செய்த பொன்னை போலீசார் குபேந்திரன், ஹரி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தங்கையை அண்ணன் உறவு முறையினரே பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

[…]

நித்தியானந்தா
பொது செய்திகள்

கனடா சிஷ்யைக்கு முகநூலில் முத்தம்..! நித்தி மீது பகீர் புகார்

நித்தியானந்தாவுக்கும் கனடா நாட்டு பெண் சிஷ்யைக்கும் நடக்கின்ற கருத்து மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முகநூல் மெசஞ்சரில் நித்தி தன்னிடம் காதலை வெளிப்படுத்தி முத்தமிட்டதாகக் கூறி, புதிய ஆதாரத்தை யூடியூப்பில் வெளியிட்டு உள்ளார். இதையடுத்து நித்தி தனது ஆதரவாளர்களை போருக்கு புறப்படும்படி கட்டளையிட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண சிறுவனாக திருவண்ணாமலையில் சுற்றி திரிந்த நித்தியானந்தா.... தற்போது ஏராளமான ஆண்- பெண் சிஷ்ய கோடிகளுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில், செல்வச்செழிப்புடன் பெங்களூர் அடுத்த பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். தமிழகத்தில் பல இடங்களிலும் அவரது அறக்கட்டளைக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன.

முதலில் பக்தர்களிடம் தன்னை நித்யானந்த பரமஹம்சர் என்று அறிமுகப்படுத்தி அருள்வாக்கு கூறிவந்த நித்தி, மீனாட்சி வேடம், முருகன் வேடம், சிவன் வேடம் என்று நடிகர்கள் போல நாளுக்கு ஒரு கெட்டப்பை மாற்றி வந்த நிலையில், சிகை அலங்கார நிபுணர் மூலம் தலையில் ஜடாமுடியை ஒட்டவைத்துக் கொண்டு தன்னையே கடவுள் பரமசிவன் என்றும், தாம் இருக்கும் இடமே கைலாசம் என்றும் யூடியூப்பில் அருளுரை நிகழ்த்தி வருகிறார்.

இந்த நிலையில் நித்தியிடம் சிஷ்யையாக இருந்து ருத்ரகன்னியாக துறவறம் ஏற்று நித்தியின் விபரீத ஆன்மீகப் பணிகளால் அதிருப்தி அடைந்து ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய சாரா லேண்ட்ரி என்ற கனடா நாட்டு பெண், யூடியூப்பில் நித்திக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் புகார்களையும் கூறி வருகிறார்.

அந்தவகையில் சதாசிவம் என்ற பெயரில் தன்னுடன் முகநூல் நட்பில் இணைந்த நித்தி, தன்னை காதலிப்பதாக கூறியதாகவும், தன்னை ஆசீர்வதிப்பதாக கூறி முத்த குறியீடுகளை பறக்கவிட்டதாகவும் சாரா லேண்ட்ரி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கனடா நாட்டு பெண்ணின் புகாருக்கு நித்தி, தனது பெண் சிஷ்யைகளை வைத்து சமூக வலைதளங்களில் பதில் கொடுத்து வருகிறார். அந்தவகையில் தனது பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு, இதனை பார்த்தாலே ஆசிரமத்தில் எந்த தொல்லையும் தங்களுக்கு இல்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று மா நித்தி பக்தி பிரியானந்தா என்ற பெண் சிஷ்யை கருத்து பதிவிட்டுள்ளார்.

ஆண்டாள் விவகாரத்தின் போது வைரமுத்துவை, வார்த்தைகளால் வறுத்தெடுத்த மா நித்தி நந்திதானந்தா என்ற சிஷ்யையும் தன் பங்கிற்கு சாராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். அனைத்திற்கும் உச்சகட்டமாக தனக்கு எதிராக புகார் கூறுபவர்களை ராட்சசன் மற்றும் ராட்சசி என்று கடுமையாக விமர்சிக்கும் நித்தி, தனது ஆதரவாளர்கள் அனைவரும் போருக்கு தயாராகும் படியும், யாரும் வராவிட்டால் தானே தன்னந்தனியாக போருக்கு செல்லப் போவதாகவும் அறைகூவல் விடுத்துள்ளார்.

நித்தி மற்றும் கனடா நாட்டு பெண் ஆகிய இருவருக்கும் இடையேயான யூடியூப் கருத்து யுத்தம் புகாராக காவல் நிலையத்தை சென்றடைந்தால் இன்னும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[…]

காமுக ஆசிரியர்
பொது செய்தி

காமுக ஆசிரியர் போக்சோவில் கைது..! அரசு பள்ளி அவலம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே அரசு பள்ளியில் மாணவிகளை தனியாக அழைத்துச்சென்று செல்போனில் ஆபாச வீடியோக்கள் காண்பித்த காமுக ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கல்வி அதிகாரிகளால் இடமாற்றம் செய்து காப்பாற்றப்பட்டவர் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த திருவோணத்தில் இருபாலர் பயிலும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த 30 வயதுள்ள சாரங்கபாணி, என்ற இளைஞர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

திருமணமாகாத இவர் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவ , மாணவிகளுக்கு பாடம் எடுத்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன், மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக பெற்றோர்கள் புகார் அளித்தனர். இருந்தும், சாரங்கபாணி மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் கல்வி அதிகாரிகள் சாரங்க பாணியை திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு அரசு பள்ளிக்கு மாற்றம் செய்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தனது செல்வாக்கை பயன் படுத்திய அந்த நபர், கல்வி அதிகாரிகள் சிலரை கவனித்து செவ்வாய்கிழமை மீண்டும் திருவோணம் பள்ளிக்கு இட மாறுதல் பெற்றுக் கொண்டு பணிக்கு திரும்பினார்.

இதை அறிந்து ஆத்திரம் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். கல்வி அதிகாரிகள் சமரசம் செய்தும் ஏற்கவில்லை, சம்பவ இடத்திற்கு வந்த திருவோணம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமதானம் செய்ய முயன்றனர். ஆனால் பொதுமக்களின் காவல் நிலைய முற்றுகை இரவு 10 மணிவரை நீடித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், ஆசிரியர் சாரங்கபாணி மாணவிகளை தனியாக அழைத்து செல்போனில் ஆபாச படத்தை காட்டி தொல்லை செய்ததாக பரபரப்பாக புகார் அளிக்க, ஆசிரியர் இடமாற்ற பின்னணியில் திருப்பம் ஏற்பட்டது.

மாணவியின் புகார் குறித்து விசாரித்த பட்டுக்கோட்டை மகளிர் கவல்துறையினர் காமுக ஆசிரியர் சாரங்கபாணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதை தொடர்ந்து, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கதுரை என்பவர் தனியாக புகார் ஒன்றை அளித்தார். அதில் ஆசிரியர் சாரங்கபாணியின் தவறான நடவடிக்கைகளை தட்டிக்கேட்டதால், தனக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததகாவும் கூறியிருந்தார். இந்த இரு புகார்களின் மீதும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பாலியல் புகாருக்குள்ளான ஒரு ஆசிரியருக்கு எந்த அடிப்படையில் மீண்டும் அதே பள்ளிக்கு இடம் மாற்றல் உத்தரவு வழங்கப்பட்டது ? என்றும் வசதிபடைத்த ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் இடைத்தரகர்களிடம் பணத்தை கொடுத்து இடமாற்றல் உத்தரவு பெற்றுச் செல்வதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் அரசு பள்ளிக்கு கல்வி கற்க வருபவர்கள் ஏழை மாணவிகள் தானே அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என்ற எண்ணத்தில் அத்துமீறும் அயோக்கிய ஆசிரியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்து சிறையில் தள்ள வேண்டும் என்பதே பெற்றோர்களின் ஆதங்கமாக உள்ளது.

[…]

முதியவர்
பொது செய்தி

பள்ளிக்கு 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த முதியவர்

தூத்துக்குடி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி பலரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.  

தூத்துக்குடி மாவட்டம் மேலகரந்தையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 310 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஒன்று முதல் 8ம் வகுப்புவரை மட்டுமே உள்ள அந்த பள்ளியில் படித்த மாணவர்கள், மேற்படிப்பை தொடர சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்ல வேண்டும்.

அதன் காரணமாக பெண் பிள்ளைகளை தொலை தூரத்திற்குக்கு படிக்க அனுப்ப தயக்கமடைந்த பெற்றோர் மற்றும் கிராமத்தினர் நடுநிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால்,போதிய இடம் வசதி இல்லாததால் பள்ளியை தரம் உயர்த்த முடியாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை அறிந்த சீனிவாசன் என்ற முதியவர், பள்ளிக்கு அருகே உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை தானமாக கொடுக்க முன்வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என தனது நிலத்தை தானமாக கொடுத்ததுடன், அதற்கான ஒப்புதல் கடிதத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்தாக கூறும் சீனிவாசன், விரைவில் நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தி மாணவர்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

போதிய நிலத்தை முதியவர் தானமாக கொடுத்துள்ளதால், மாணவர்களின் நலன் கருதி விரைவில் நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி கொடுக்க வேண்டும் என அப்பகுதி மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனமிருந்தால் மாற்றத்தையும் கொண்டுவரலாம், ஏற்றத்தையும் ஏற்படுத்தலாம் என்பதற்கு ஏற்ப கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக நிலத்தை தானமாக வழங்கிய முதிவர் சீனிவாசனின் இந்த சேவை பாராட்டக்கூடிய ஒன்று என பலரும் வரவேற்றுள்ளனர்.

[…]

 பிவி சிந்து
பொது செய்திகள்

சென்னையில் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிவி சிந்து

சமீபத்தில் நடந்து முடிந்த 25வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னைக்கு வருகை தந்த பிவி சிந்து எல்டாம்ஸ் சாலையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி சந்திப்பு குறித்த கேள்விக்கு இருவேறு சித்தாங்தங்கள் கொண்ட நாட்டு தலைவர்கள் சந்திப்பது வரவேற்க தக்கது என்று தெரிவித்தார். மேலும், சீன அதிபரின் வருகையை வெற்றிவிழாவாக கொண்டாடுவது நாட்டின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கமலைத் தொடர்ந்து பேசிய பிவி சிந்து, 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள பேட்மிட்டன் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருவதாகவும், அதில் தங்கம் வெல்வது தான் தனது இலக்கு என்றும் தெரிவித்தார்.

[…]

 தனியார் கல்லூரி மாணவர்கள்
பொது செய்திகள்

தனியார் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் மோதல்

சென்னை பல்லாவரத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள பிரபல தனியார் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு சட்டப் படிப்பு பயின்று வரும் கார்த்திக் தன்னை செல்வாக்கு மிகுந்தவர் போன்று காட்டிக் கொண்டு வலம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் கார்த்திக்கிற்கு கூடுதல் மரியாதை கொடுத்து வந்துள்ளனர்.

ஆனால் ஒரே வகுப்பில் பயின்று வரும் அஸ்வின் என்ற மாணவர் மட்டும் கார்த்திக்கை உதாசினப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்லூரியில் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் கல்லூரி முடிந்த பிறகு கல்வி வளாகத்தின் வெளியே இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முதலில் தாக்கப்பட்ட கார்த்திக் மறைந்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் அஸ்வினை சரமாரியாக பட்டாக்கத்தியால் வெட்டினார்.

இதில் அஸ்வினின் இரண்டு கை விரல்கள் துண்டாகின. அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல் சம்பவம் குறித்து பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[…]

 சீமான் ஆவேசம்
பொது செய்திகள்

முதுகுத் தோலை உரிப்பேன் சீமான் ஆவேசம்..!

மிழகத்தில் தனக்கு வாக்களித்த 18 லட்சம் பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் தமிங்கிலர்களை மரத்தில் கட்டிவைத்து, பச்சை மட்டையால் அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும் என்று சீமான் முழங்கி உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தங்கள் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மட்டுமே தமிழர்கள் என்றார்.

ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்களை , தமிங்கிலர்கள் என்று விமர்சித்த சீமான், அத்தகைய தமிழர்களை மரத்தில் கட்டிவைத்து பச்சை மட்டையால் அடித்து முதுகு தோலை உரிக்க போவதாக எச்சரித்தார். 60 வயது அப்பனை கிழவன் என்றும் 70 வயது நடிகனை தலைவன் என்றும் தமிழர்கள் கூறுவதாக நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்தார்.

தமிழில் பெயர் வைக்காத தமிழ் திரைப்பட இயக்குனர்களை கடுமையாக வருத்தெடுத்த சீமான், சினிமா பாடல் ஒன்றை பாடி அதில் குறிப்பிட்டிருந்த கட்டபொம்மன், ஊமைத்துரை, தேசிங்கு ராஜா போன்ற மன்னர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லாதவர்கள் என்றும் விமர்சித்தார்

கடந்த காலங்களில் நாம் தமிழர் கட்சி மேடைகளில் சீமானே ஆங்கிலம் கலந்த தமிழில் பேசியிருந்தது குறிப்பிடதக்கது.

[…]

கீழடி
பொது செய்தி

வரலாற்றை புரட்டிப் போடும் கீழடி.. தமிழர் நாகரிகத்தின் புதிய மைல் கல்!!

தமிழக தொல்லியல் துறையின் சார்பாக சிவகங்கை அருகே இருக்கும் கீழடியில் நான்காம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆய்வுகளின் முடிவை 'கீழடி வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம்' என்கிற தலைப்பில் தொகுப்பாக அமைச்சர் மாபா. பாண்டியராஜன் வெளியிட்டார்.

அந்த புத்தகத்தில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களின்படி தமிழர்களின் பண்பாடு சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் கிமு 6ம் நூற்றாண்டு முதல் கிபி முதல் நூற்றாண்டு வரை கீழடியை சுற்றியிருக்கும் பகுதிகள் சிறந்த பண்பாடு கொண்ட பகுதியாக விளங்கி இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கு தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்தத் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் பிராமி எழுத்துக்களில் குவிரன், ஆதன் என்கிற பெயர்களும் முழுமை பெறாத சில எழுத்துக்களுடன் கூடிய உடைந்த பானை ஓடுகளும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றையே மாற்ற கூடிய அளவிற்கு கீழடி அகழ்வாய்வு முடிவுகள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

[…]

அமைச்சர் ஜெயக்குமார்
பொது செய்தி

மொழி திணிப்புக் குறித்து தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என்றும் இதற்கு மாற்று கருத்து இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமை வழிச் சாலையில் அண்ணா மேலாண்மை நிலையத்தில் உள்ள அரங்கத்திற்கு அண்ணா அரங்கம் என பெயர் மாற்றும் நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஒரே நாடு ஒரே மொழி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் மொழி மக்களின் விருப்பம் என்றும் அதை திணிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

மொழியில் பெரும்பான்மை, சிறுப்பான்மை பார்க்கக் கூடாது என்று நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா பேசியதை மேற்கோள் காட்டிய ஜெயக்குமார், நாடு முழுவதும் காகம் இருப்பதால் அதை தேசிய பறவையாக அறிவிக்க முடியாது என்று கூறினார்.

மேலும் தமிழகத்துக்கென்று பிரத்யோக கொள்கை, கலச்சாரம் உள்ளது என்பதை பிரதமர் மோடி, அமித்ஷா அறிவார்கள் என்றும் அதனால் மொழி திணிப்புக் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

[…]

சேலத்தில் 88 லட்சம் ரூபாய் மோசடி
பொது செய்தி

மோசடி வழக்கில் கைதான மாநகராட்சி ஊழியர் மத்திய சிறையில் அடைப்பு

சேலத்தில் 88 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மாநகராட்சி ஊழியரும் அவரது சகோதரரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக கருங்கல்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்குமார் பணியாற்றி வந்தார். துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள பில் மற்றும் காசோலைகளில் திருத்தம் செய்து 88 லட்சம் ரூபாயை அவர் மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், அவரது தம்பி மோகன்குமாரும் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதனால் அவரையும் கைது செய்தனர்.

பின்னர் 2 பேரையும் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர். இதனிடையே, வெங்கடேஷ் குமாரை பணிநீக்கம் செய்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.

[…]

பழங்கால பொருட்களை சேகரித்த மாணவர்
பொது செய்தி

பழங்கால பொருட்களை சேகரித்த மாணவர் - முறையாக அகழாய்வு செய்ய கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கொற்கை மன்னர் கால கட்டிடங்கள் வெளியே தெரிந்த இடத்தில் உடைந்த பானை ஓடுகள், எலும்புகள் உள்ளிட்டவை கிடைத்துள்ள நிலையில், அங்கு முறையாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

உமரிக்காடு பகுதியில் வற்றிப்போன தாமிரபரணி ஆற்றில் பழங்கால அரண்மனை மண்டபம் வெளியே தெரிவதாக தகவல் வெளியானது. அது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னர்களின் அரண்மனையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், அப்பகுதிக்கு வரலாற்று ஆர்வலர்களும் தொல்லியல்துறை மாணவர்களும் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். அந்த வகையில் சிவகலையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவரான மாணிக்கம் என்பவர் அப்பகுதியை பார்வையிட்டார்.

பழங்கால மண்பாண்டங்களின் துண்டுகள், எலும்பால் செய்யப்பட்ட அக்கால ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய அவர், உமரிக்காடு பகுதியில் தொல்லியல் துறையினர் முறையான அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டால் கீழடியைப் போன்றே இங்கும் ஏராளமான வரலாற்றுப் பொக்கிஷங்களை கண்டறிய முடியும் என்றார்.

[…]

மம்தா பானர்ஜி
பொது செய்தி

அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி

செப்டம்பர் 14 ம் தேதியான இன்று இந்தி நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி, இந்தி பேசும் மக்களுக்கு மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”இந்தி திவாஸ் தினத்தை முன்னிட்டு இந்தி பேசும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். அனைத்து கலாச்சாரங்களையும் மொழிகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்றும், பல மொழிகளை கற்ற போதும், தாய்மொழியை ஒருபோதும் நாம் மறக்க கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தி நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், “ நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும், இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும். ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதன் மூலம் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

[…]

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் கூட்டம்
பொது செய்தி

செப்டம்பர் 16 - தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் கூட்டம்

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் வரும் 16-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. 

இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அப்போது உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

[…]

அதிவேகமாக சென்ற கார், நிலைதடுமாறி சாலையில் தலைகீழாக கவிழ்ந்ததில்  3 பேர் உயிரிழந்தனர்.
பொது செய்தி

அதிவேகமாக சென்ற கார், சாலையில் தலைகீழாக கவிழ்ந்ததில் 3 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அதிக அளவில் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக சென்ற கார், நிலைதடுமாறி சாலையில் தலைகீழாக கவிழ்ந்ததில்  3 பேர் உயிரிழந்தனர்.

ஆலங்குளம், மாரனேரி, பகுதிகளைச் சேர்ந்த பட்டாசு ஆலை தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு போர்ஸ் கார் ஒன்று சாத்தூரில் இருந்து சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. சுப்பிரமணியபுரம் அருகே வளைவில் திரும்பும் போது, அதிவேகமாக சென்றதால் சாலையிலேயே கார் உருண்டோடி கவிந்துள்ளது. இதில் குருசு முத்து என்ற பெண்ணும், துரைப்பாண்டி என்ற 16 வயது சிறுவனும் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர்.

மேலும் படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஓட்டுனர் கார்த்திக் ராஜா சாத்தூர்  மருத்துவமனையில்  உயிரிழந்தார். மேலும் நான்கு வயதுடைய இரு குழந்தைகள் உள்பட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக வெப்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 10 பேர் அமரக்கூடிய காரில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 15 பேரை ஏற்றியதுடன், அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. இது போன்ற விதி மீறலை தவிர்த்தால் விபத்தின்றி செல்லலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

[…]

 சைக்கிள் போட்டி
பொது செய்தி

அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி

தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த போட்டியை பனிமய மாதா பேராலயம் முன்பு, சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாணவர்களுக்கு பதினைந்து, பதினேழு, மற்றும் 20 கிலோ மீட்டர் தூரம் என 3 பிரிவாகவும், மாணவிகளுக்கு பத்து, பதினேழு மற்றும் 15 கிலோ மீட்டர் தூரம் என 3 பிரிவாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் கோவில்பட்டி, திருச்செந்தூர், திருவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி வெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

[…]

IBPS
பொது செய்திகள்

பொதுத்துறை வங்கிகளில் 12,000 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கானத் தேர்வுகளுக்கு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 9ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐபிபிஎஸ் :
இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, சின்டிகேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பரோடா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் பணியாற்ற வேண்டும் என்றால் ஐபிபிஎஸ் சார்பில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறவேண்டியது கட்டாயம். இந்த அமைப்பின் சார்பில் ஐபிபிஎஸ் கிளார்க் பணியிடங்களுக்கான விண்ணப்ப தேதிகளும், தேர்வு தேதிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

வங்கி கிளார்க் வேலை: 
தற்போது வங்கி தேர்வு வாரியம் சார்பில் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 1,379 இடங்களும், புதுச்சேரியில் 44, கேரளாவில் 349 இடங்களும் என மொத்தமாக நாடு முழுவதும் 12,074 இடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் மூலம் வரும் செப்டம்பர் 17 முதுல் அக்டோபர் 9 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல் நிலைத் தேர்வு:
இத்தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், முதல்நிலை தேர்வானது (ப்ரிலிமினரிதேர்வு) வரும் டிசம்பர் (2019) 7, 8, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வு (மெயின் தேர்வு) 2020, ஜனவரி 19 ஆம் தேதியும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வுக்கான நுழைவு அட்டை நவம்பரில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள்: 
முதன்மைத் தேர்வு வினாத்தாள் மதிப்பெண்கள் குறித்த விபரங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. பொது மற்றும் நிதித் துறையில் 50 மதிப்பெண்களும், பொது ஆங்கிலத்தில் 40 மதிப்பெண்கள், பகுத்தறிவு மற்றும் கணினி திறன் - 60 மதிப்பெண்கள், அளவு திறன் - 50 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கும், முதல் நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: 
விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே வரவேகப்படுகின்றன. மேலும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டிற்கும் சேர்த்து ஒரு முறை பதிவு செய்தாலே போதும். அதாவது விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுகளுக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டியதில்லை.

கல்வி மற்றும் வயது வரம்பு: 
விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கணினித் திறன் அவசியம். 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

முக்கியத் தேதிகள்: 
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் - 17 செப்டம்பர் 2019
 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 09 செப்டம்பர் 2019 (மாலை 5) 
தேர்வு பயிற்சி வழங்கும் காலம் - நவம்பர் 2019 
ஆன்லைன் தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்படும் நாள் - நவம்பர் 2019 
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள் - 7, 8,14 மற்றும் 21 டிசம்பர் 2019 
முதல்நிலைத் தேர்வு முடிவு - 2019 டிசம்பர் / 2020 ஜனவரி
 முதன்மைத் தேர்வு நுழைவுச் சீட்டு (ஆன்லைன் தேர்வு) - ஜனவரி 2020 
ஐபிபிஎஸ் முதன்மைத் தேர்வு தேதி - 19 ஜனவரி 2020

விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600 எஸ்.சி, எஸ்.டி மற்றும் இராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டவர்கள் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

முக்கியக் குறிப்புகள்:
ஐபிபிஎஸ் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் - jpeg பைல் 20 kb முதல் 50 kb வரை இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் கையொப்பம் - jpeg பைல் 10 kb முதல் 20 kb வரை இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் கட்டைவிரல் பதிவு - jpeg பைல் 20 kb முதல் 50 kb வரை கையால் எழுதப்பட்ட உறுதி வாக்குமூலத்தின் ஸ்கேன் நகல் - jpeg கோப்பில் 50 kb முதல் 100 kb வரை. 

இதுகுறித்தான மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ibps.in/ அல்லது https://www.ibps.in/crp-clerical-cadre-ix/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

[…]

ஜீவசமாதி அறிவிப்பும் - ஏமாந்துபோன மக்களும்
பொது செய்தி

ஜீவசமாதி அறிவிப்பும் - ஏமாந்துபோன மக்களும்

சிவகங்கை அருகே முதியவர் ஒருவர் தாம் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களையும் நூற்றுக்கணக்கான போலீசாரையும் ஒரே இரவில் ஒன்றுகூட வைத்து ஏமாற்றி அனுப்பிவைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சாமியார் ஜீவசமாதி அடைவதை பக்தி பரவசத்துடன் காண வந்த பக்தர்களும் ஏமாந்து திரும்பிய பரிதாப சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

நட்புக்காக திரைப்படத்தில் மலையை தூக்கப்போவதாக அறிவித்து, மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் ஒன்றுகூடியவுடன், மலையை தூக்கி வையுங்கள், நான் தூக்குகிறேன் என்பார் நடிகர் செந்தில்.. மக்கள் ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் திரும்பிச் செல்வர்.

இந்த சம்பவத்தைப் போன்றே சிவகங்கை அருகே ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்த இருளப்பனுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். தன்னை சிவபக்தர் என்று கூறிக்கொள்ளும் இருளப்பன், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து சிவாலயங்களை தரிசித்து வந்ததாகவும் கூறுகிறார்.

குடும்பத்தினரிடம் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போவது, பின்னர் திடீரென ஊர் திரும்பி, தன்னிடம் வருபவர்களுக்கு குறி சொல்வது, ஜாதகம் பார்ப்பது உள்ளிட்ட வேலைகளையும் இருளப்பன் பார்த்து வந்ததாக ஊர்மக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் தாம் ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்தார் இருளப்பன். வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்குள் ஜீவசமாதி அடையப்போவதாக அவர் அறிவித்தார்.

முதலில் இதனை யாரும் நம்பவோ, பெரிதாக எடுத்துக்கொள்ளவோ இல்லை. அதன் பின்னர் கடந்த 10 நாட்களாக தண்ணீர் மட்டுமே அருந்தி ஜீவசமாதி நிலைக்கு அவர் தயாராகி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து இருளப்பனை வணங்குவதும் அருள்வாக்கு பெற்றுச் செல்வதுமாக இருந்தனர். இருளப்பன் தேர்வு செய்த இடத்தில் பூஜைகள் செய்யப்பட்டு 10க்கு 10 அடி பள்ளமும் தோண்டப்பட்டது.

ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்த வியாழக்கிழமை இரவு, பாசாங்கரை கிராமம் அதுவரை பார்த்திராத ஒரு கூட்டத்தை பார்த்தது. நூறு, ஐநூறாகி, ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து குவியத் தொடங்கினர். நிலைமையை உணர்ந்த காவல்துறை அங்கு நூற்றுக்கணக்கான போலீசாரை குவித்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் இறங்கினர். ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருளப்பனை காணவந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் விநியோகம் நடந்தது. சிறிது நேரத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனும் அங்கு வந்து சேர்ந்தார்.

எல்லோருக்கும் நடுநாயகமாக அமர்ந்திருந்த இருளப்பனிடம் பக்தர்கள் வருவதும் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றுச் செல்வதுமாக இருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மருத்துவக் குழு இருளப்பனின் உடல்நிலையை பரிசோதித்த வண்ணம் இருந்தனர். தாம் கூறியதைக் கேட்டு இத்தனை பெரிய கூட்டம், இவ்வளவு போலீசார், மாவட்ட ஆட்சியர் உட்பட அத்தனை பேரும் வருவர் என்பதை எதிர்பார்க்காத இருளப்பன் பிரமித்துப் போனார்.

அந்த பிரமிப்பு அவரை விட்டு போவதற்கு முன்பே, ஜீவசமாதி அடையப்போவதாக அவர் குறித்துக் கொடுத்த நேரம் கடந்து கொண்டு இருந்தது. நேரம் காலை 5 மணியை கடந்து சென்ற நிலையில் இருளப்பனின் உடல்நிலையில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக ஐந்தே முக்கால் மணியளவில் தனது ஜீவசமாதி முடிவை இருளப்பன் ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு சாவகாசமாக அங்கேயே படுத்து உறங்கிவிட்டார். விடிய விடிய விழிகள் வலிக்க உறங்காமல் காத்திருந்த அத்தனை பேரும் இதனைக் கண்டு நொந்து ஏமாந்து சென்றனர். ஊர்மக்கள் கேள்வி கேட்பார்களே என பயந்து இருளப்பனின் மகன் கண்ணாயிரம் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இருளப்பனின் மனைவியோ, இவர் ஜீவசமாதி அடைவாருன்ற நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லை என்று கூறுகிறார் .

வாழ்வில் ஆசைகளை, சிற்றின்பங்களைத் துறந்து கடுமையான ஒழுக்கங்களையும் உயர்ந்த தவ நெறிமுறைகளையும் பின்பற்றி வருபவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படக்கூடிய விஷயம் இந்த ஜீவசமாதி. ஆனால் காசி, திருவண்ணாமலை போன்ற சிவஸ்தலங்களுக்குச் சென்றால் இருளப்பன் மாதிரியான ஆயிரக்கணக்கானவர்களை பார்க்கலாம்.

திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று, பின் சம்பாதிக்க சோம்பேறித்தனம் கொண்டு ஊர் ஊராகச் சுற்றி யாசகம் பெற்று உயிர் வளர்ப்பவர்களில் சிலர் சாமியார் என்ற முகமூடியை போட்டுக்கொள்கின்றனர். அத்தகையவர்களின் பின்னணியை ஆராயாமல், அவர்கள் என்ன சொன்னாலும் அப்படியே நம்புவது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்குச் சமம்..

[…]

பா.ஜ.க மாநில தலைவருக்கான தேர்தல் நவம்பரில் நடைபெறுகிறது
பொது செய்தி

பா.ஜ.க மாநில தலைவருக்கான தேர்தல் நவம்பரில் நடைபெறுகிறது - வானதி சீனிவாசன்

பா.ஜ.க.வின் தமிழக மாநில தலைவருக்கான தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்பே கூட மாநில தலைவர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மாநில தலைவர் இல்லை என்றாலும் கட்சி பணிகளில் எந்த சுணக்கமும் ஏற்படவில்லை என்றும், மாநில தலைவரை தேர்வு செய்யும் பட்டியலில் 15 பேர் இருப்பதாகவும் கூறினார்.

பொருளாதார பாதிப்பு காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொழில் அமைப்புகள் சொல்லவில்லை என்றும், பீதியை கிளப்பி விடுவதற்காக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.

[…]

மீனவர்கள் போராட்டம்
பொது செய்தி

கன்னியாகுமரியில் 15 கிராம மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் கேரள மீனவர்கள் தடையை மீறி இரட்டைமடி வலைகளைக் கொண்டு மீன்களை பிடிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த 15 கிராம மீனவர்கள் மீன்களை விற்காமல் போராட்டம் நடத்தினர்.

நீரோடி முதல் மேல் மிடாலம் வரை உள்ள கிராமங்களை சேர்ந்த விசைப்படகு மற்றும் கட்டுமர மீனவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள், இரட்டை மடி வலைகளை கொண்டும், மிகப்பெரிய மற்றும் அதிவேக படகுகளைக் கொண்டும் கேரள மீனவர்கள் மீன்களை பிடிப்பதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும், ஆதலால் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கேரள மீனவர்களின் படகுகளை நிறுத்த அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இடப்பற்றாக்குறை உருவாகி தங்களின் படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

அதேநேரத்தில், கேரளாவில் தமிழக படகுகள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், அங்கு செல்லும் தமிழக படகுகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினர்.

இந்த போராட்டத்தால் 2 கோடி ரூபாய் மதிப்புடைய மீன்களின் விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டது. அங்கு வந்த போலீஸார், அரசு அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனால் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு மீன் விற்பனையை மீனவர்கள் தொடர்ந்தனர்.

[…]

மீனவர்கள் போராட்டம்
பொது செய்தி

கன்னியாகுமரியில் 15 கிராம மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் கேரள மீனவர்கள் தடையை மீறி இரட்டைமடி வலைகளைக் கொண்டு மீன்களை பிடிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த 15 கிராம மீனவர்கள் மீன்களை விற்காமல் போராட்டம் நடத்தினர்.

நீரோடி முதல் மேல் மிடாலம் வரை உள்ள கிராமங்களை சேர்ந்த விசைப்படகு மற்றும் கட்டுமர மீனவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள், இரட்டை மடி வலைகளை கொண்டும், மிகப்பெரிய மற்றும் அதிவேக படகுகளைக் கொண்டும் கேரள மீனவர்கள் மீன்களை பிடிப்பதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும், ஆதலால் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கேரள மீனவர்களின் படகுகளை நிறுத்த அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இடப்பற்றாக்குறை உருவாகி தங்களின் படகுகளை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

அதேநேரத்தில், கேரளாவில் தமிழக படகுகள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், அங்கு செல்லும் தமிழக படகுகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினர்.

இந்த போராட்டத்தால் 2 கோடி ரூபாய் மதிப்புடைய மீன்களின் விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டது. அங்கு வந்த போலீஸார், அரசு அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனால் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு மீன் விற்பனையை மீனவர்கள் தொடர்ந்தனர்.

[…]

ஒரு நாள் தலைமை ஆசிரியை
பொது செய்தி

ஒரு நாள் தலைமை ஆசிரியையாக செயல்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி

மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாள் தலைமை ஆசிரியையாக செயல்பட்டுள்ளார்.

நாகமலை புதுக்கோட்டையில் கே.எம்.ஆர் இண்டர்நேஷனல் என்ற பெயரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு மாணவர்களின் திறமைகளை அடிப்படையாக கொண்டு ஒருநாள் தலைமையாசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக கலை, கல்வி, பண்பாடு, ஒழுக்கம், விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்கும் 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களில் இறுதியாக மூன்று மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, வாக்கெடுப்பு அடிப்படையில் ஸ்ருதிகா என்ற 8ஆம் வகுப்பு மாணவி, பள்ளியின் ஒரு நாள் தலைமை ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார்.

அவர் ஒரு நாள் முழுவதும் பள்ளியின் தலைமை ஆசிரியையாக செயல்பட்டார்.

இதன் மூலம் தலைமைத்துவமாக செயல்படுவது, சவாலான சூழலை எதிர்கொள்வது போன்ற திறன் பள்ளி மாணவர்களுக்கு மேம்படுத்தப்படுகிறது என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

[…]

எச்.ராஜா
பொது செய்தி

தமிழகத்தில் கல்லூரி நடத்தி ரூ.42 கோடி ஊழல் செய்த ஒருவர் கைதாவார் - எச்.ராஜா

பா.சிதம்பரம் மற்றும் கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை அடுத்து, தமிழகத்தில் கல்லூரி நடத்தி 42 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ள ஒருவரும் கைது செய்யப்படுவார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நகைக்கடனை அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் நிறுத்தப் போவதாக பொய்யான தகவல் பரவி வருவதாக கூறினார்.

நாட்டில் பொருளாதார பாதிப்பு ஏற்படவில்லை என்றும், பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி பிரதமர் மோடி நாட்டை கொண்டு செல்வதாகவும் எச்.ராஜா குறிப்பிட்டார்.

[…]

உண்ணாவிரதப் போராட்டம்
பொது செய்தி

நெல்லையில் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம்

நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நெல்லை டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

நேதாஜி போஸ் மார்க்கெட்டில் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள், பலசரக்கு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

இந்த மார்க்கெட்டை இடித்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய மார்க்கெட் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வியாபாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து தங்களுக்கு வேறு இடம் ஒதுக்கித் தரவும், புதிய மார்க்கெட் கட்டிய பிறகு பழைய வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கவும் கோரினர்.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டுள்ள வியாபாரிகள் மார்க்கெட்டுக்குள் உள்ளிருப்பு  மற்றும் உண்ணாவிரத போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

[…]

தீ விபத்து
பொது செய்தி

கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

மதுரையில் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. வடக்கு வெளிவீதியில் ஜகன்நாத் என்பவருக்குச் சொந்தமான ஏசியன் கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு கம்ப்யூட்டர்கள், லேப் டாப்கள் மற்றும் அதன் உதிரிப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் இந்தக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. எலக்ட்ரிக் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்ததால் கரும்புகை வெளியானது.

இதுகுறித்து தகவலறிந்ததும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 5 கோடி ரூபாய் அளவிற்கு பொருட்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது.

[…]

போலி மருந்துகள்
பொது செய்தி

போலி மருந்துகள்..!!!

போலி வைத்தியர்கள் அவ்வப்போது பிடிபடுவதுபோல, போலி மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் காய்ச்சல், வயிற்றுப்புண், கிருமித்தொற்று போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் மருந்துகளில் போலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் மருந்துகள், மாத்திரைகளை அரசு தர நிர்ணயம் செய்கிறது. இதற்கென மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் இயங்கி வருகின்றன. இந்த தரக்கட்டுப்பாட்டு வாரியங்களே சோதனையின் அடிப்படையில் ஒரு மருந்தின் தரத்தை உறுதி செய்கின்றன. பல போலி மருந்துகள் இதுபோன்ற சோதனையின்போதுதான் கண்டறியப்படுகிறது.

இந்த வழக்கத்தின்படி ஜூலை மாதத்தில் 988 மருந்துகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 970 மருந்துகளில் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், குடற்புழு நீக்கம், வாயு அமிலப் பிரச்சினை, கிருமித்தொற்று, வயிற்றுப் புண் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் 18 மருந்துகள் போலியாகவும் தரமற்றவையாகவும் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து தரமற்ற மருந்துகளை விற்பனை செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருந்து, மாத்திரைகளை வைத்தியர் அறிவுரை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது. ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தானே மருந்துக்கடைகளில் சென்று மருந்துகள் வாங்குவதையும் தவிர்க்கவும்.

[…]

 குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
பொது செய்தி

எதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி; குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதை கண்டித்து ராமநகர் மாவட்டத்தில் 2 நாட்கள் முழு அடைப்பு நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் கோடிஹள்ளி கிராமத்தில் வசிக்கும் அவரது தாயார் கவுரம்மாவை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நேரில் சந்தித்து பேசி தைரியம் கூறினார். அதன் பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்திவிட்டு அதன் பிறகு கைது செய்தது சரியல்ல. அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. மத்திய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க முயற்சி செய்கிறது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொடுத்து எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவினர் விலைக்கு வாங்குகிறார்கள். இந்த பேரத்தில் ஈடுபடுபவர்களின் வீடுகளில் விசாரணை அமைப்புகள் எந்த சோதனையும் நடத்துவது இல்லை. ஆனால் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் திட்டமிட்டு சோதனை செய்கிறார்கள். விசாரணை அமைப்புகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வது ஏன்?.

ஆட்சி அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல. காலச்சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். நாட்டில் வளர்ச்சி ஏற்படவில்லை. பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள் ளது. ஆனால் அதன் மீது மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சி தலைவர்களை ஒடுக்குவதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.

நாட்டு மக்கள் இதை பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காலமே பதில் சொல்லும். டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதால் அவரது தாயார் மிகுந்த வேதனையில் இருக்கிறார். அந்த வயதான பெண்மணி வடிக்கும் கண்ணீர், கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது எடியூரப்பா எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்க பேரம் பேசினார். அந்த ஆடியோ உரையாடலை நான் தான் வெளியிட்டேன். நான் நினைத்திருந்தால் விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி, எடியூரப்பாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். அதை நான் விரும்பவில்லை.

சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால், குமாரசாமி பழிவாங்கும் அரசியலை செய்கிறார் என்று குறை கூறி இருப்பார்கள். முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான தொழில் அதிபர் சித்தார்த், தான் எழுதிய கடிதத்தில், வருமான வரித்துறை மிகுந்த தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார். ஆனால் அதை அப்படியே மூடிமறைத்துவிட்டனர்.

இவ்வாறு குமாரசாமி கூறினார். 

[…]

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரவுடி ஒருவன் 6 பேர் கும்பலால் வெட்டிக் கொலை
பொது செய்தி

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரவுடி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரவுடி ஒருவன் 6 பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டான்.

பனங்காடியைச் சேர்ந்த ரவுடி ராஜசேகர், அப்பகுதியில் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீது காவல்நிலையங்களில் 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவரை வெட்டிக் கொன்ற வழக்கும் ஒன்றாகும். இந்நிலையில், தனது நண்பர் ஒருவருடன் ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு ராஜசேகர் இன்று திரும்பி வந்து கொண்டிருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே வந்தபோது, அவரை 6 பேர் கொண்ட கும்பல் சுற்றிவளைத்து சரமாரியாக ஆயுதங்களால் வெட்டியது.

இதில் தலை, முகம் உள்ளிட்டவற்றில் வெட்டுபட்டு சம்பவ இடத்திலேயே ராஜசேகர் பலியானார். இதையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை எதற்காக நடந்தது என்பது தெரியவில்லை. இரட்டை கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜசேகர், தனது சொந்த ஊரில் இருந்து வெளியேறி காளையார் கோயிலில் வசித்து வந்துள்ளார். இதனால் நீதிமன்றத்தில் ஆஜராக ராஜசேகர் வருவதை அறிந்து அவரை அக்கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. முன்விரோதம், பழிக்குப்பழி வாங்குதல் ஆகிய காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

[…]

பொதுப்பணித் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் 75 லட்சம் ரூபாய் மோசடி
பொது செய்தி

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.75 லட்சம் மோசடி

சேலத்தில் பொதுப்பணித் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் 75 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

அம்மாபேட்டை வித்யா நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கோபியை  சந்தித்து பொதுப்பணித்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். இதை நம்பிய கோபி மற்றும் அவரது நண்பர்கள்  12 பேர் 75 லட்சம் ரூபாயினை கார்த்திக்கிடம் கொடுத்து வேலை வாங்கி தருமாறு கூறினர்.

ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட கார்த்திக் அவர்களுக்கு வேலை எதுவும் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் கார்த்திக் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த  நீதிபதி இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சேலம் மாநகர காவல் துறை ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

இதன் பேரில்  சேலம் மாநகர மத்திய குற்றப்பிரவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.  

[…]

சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர்
பொது செய்தி

சரித்திரம் படைக்குமா? சந்திரயான் 2

நிலவின் இரு பள்ளங்களுக்கு இடையே உள்ள சமதளப் பரப்பில் சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர், நாளை அதிகாலை தரை இறக்கப்படுகிறது. இந்தியா நிகழ்த்தவுள்ள வரலாற்றுச் சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பார்ப்பதற்கு பிரதமர் நரேந்திரமோடி வரவுள்ளதால், பெங்களூருவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்த சந்திரயான் 1 திட்டத்தைத் தொடர்ந்து, ஜூலை 22ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவிய விண்கலம் தான் சந்திரயான் 2. 978 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 2- ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற மூன்று அமைப்புகளைக் கொண்டது. சந்திரயான் 2 விண்கலம், கடந்த மாதம் 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. கடந்த இரண்டாம் தேதி, சந்திரயான் 2 ஆர்பிட்டரில் இருந்து பிரக்யான் ஆய்வூர்தியுடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டரானது நிலவைச் சுற்றும் தொலைவு இரு முறை குறைக்கப்பட்டு, தற்போது நிலவில் இருந்து குறைந்தபட்சமாக 35 கிலோ மீட்டர், அதிகபட்சமாக 101 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. இந்த நிலையில், விக்ரம் லேண்டரை நிலவில் தரை இறக்கும் மிகவும் சவால் மிகுந்த செயல்பாட்டை நாளை அதிகாலை ஒன்றரை மணி தொடங்கி 2.30 மணிக்குள்ளாக இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. 

விக்ரம் லேண்டரின் திரவ எரிபொருள் எஞ்சின் 10 நிமிடங்களுக்கு இயக்கப்பட்டு நிலவுக்கும் - லேண்டருக்கும் இடையேயான தொலைவு 7.4 கிலோ மீட்டராகக் குறைக்கப்படும். 38 நொடிகளுக்குப் பிறகு நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் உள்ள தூரம் 5 கிலோ மீட்டராக குறைக்கப்படும். 89 நொடிகளுக்குப் பின், 400 மீட்டர் என்ற உயரத்தில் நிலவை லேண்டர் அணுகும். அதன் பிறகு 66 நொடிகளில் 100 மீட்டர் உயரத்தை விக்ரம் அடையும்.

தென் துருவத்திற்கு வடக்கே மான்சினஸ் சி - சிம்பிளியஸ் என் ஆகிய நிலவுப் பள்ளங்கள் இடையே உள்ள 500 சதுர மீட்டர் சமதளப் பரப்பு கொண்ட இரு இடங்களில் சரியான ஒன்றை விக்ரம் லேண்டர் தேர்வு செய்யும். இதை அடுத்து தரை இறக்கும் செயல்பாடு தொடங்கப்படும்.

வெற்றிகரமாக தரை இறக்கப்பட்ட பின்னர், காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள்ளாக விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ஆய்வூர்தி வெளியேற்றப்படும். அது நொடிக்கு ஒரு செண்டி மீட்டர் என்ற வேகத்தில் நிலவில் ஊர்ந்து கனிம வளங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும். நிலவில் ஒருநாள் என்பது பூமியுடன் ஒப்பிடுகையில் 14 நாட்களுக்குச் சமம். அந்த வகையில், 14 நாட்களுக்கு பிரக்யான் ஆய்வூர்தி தகவல்களைச் சேகரிக்கும். இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் ஆய்வூர்தியை தரை இறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

அது மட்டுமல்லாமல் தென் துருவத்திற்கு அருகே தரை இறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா படைக்கும். தென் துருவத்தில் உள்ள நிலவுப் பள்ளங்கள் சூரிய வெளிச்சம் படாமல் மறைவாக இருக்கும் காரணத்தால் அங்கு 100 மில்லியன் டன் தண்ணீர் இருக்கக் கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் சூரியக் குடும்பம் உருவானது எப்படி என்பதற்கான விடையும் தென் துருவ ஆராய்ச்சியில் கிடைக்கும் என்ற காரணத்தால் தான் தென் துருவத்திற்கு அருகே ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்தது.

சந்திரயான் 2 திட்டம், 90 விழுக்காடு முழுமை அடைந்துள்ள நிலையில், இன்னும் 10 விழுக்காடு வெற்றிபெறும் பட்சத்தில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையைப் படைக்கும். விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறக்கப்படும் செயல்பாட்டை, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து காண்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இன்று இரவு அங்கு செல்ல உள்ளார். ஆளுநர் மாளிகையில் தங்கும் மோடி, அங்கிருந்து புறப்பட்டு பெங்களூருவின் பீன்யா பகுதியில் உள்ள இஸ்ரோ செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையத்திற்குச் செல்கிறார்.

ஆளுநர் வஜூபாய் வாலா, முதலமைச்சர் எடியூரப்பாவும் பிரதமருடன் செல்ல உள்ளனர். இதை முன்னிட்டு இஸ்ரோ செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையத்தைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூரு நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சந்திரயான் 2 நிலவில் தரை இறக்கப்படும் நிகழ்வை பிரதமர் மோடியுடன் சேர்ந்து பார்ப்பதற்கான வாய்ப்பை 8 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இஸ்ரோ வழங்கியது. ஆகஸ்ட் மாதத்தில் நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற 60 மாணவர்களை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. அவர்கள் மோடியுடன் சேர்ந்து வரலாற்று நிகழ்வை கண்டு ரசிக்க உள்ளனர். 

[…]

 69 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
பொது செய்தி

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 69 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவானது விநாடிக்கு 69,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 35,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கபினி அணைக்கு விநாடிக்கு 24 ஆயிரத்து 321 கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணைக்கு விநாடிக்கு 44 ஆயிரத்து 727 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

84 அடியை மொத்த நீர்தேக்கும் உயரமாகக் கொண்ட கபினி அணை 83.4 அடியை எட்டியது. இதேபோல், 124.8 அடியை நீர்தேக்கும் உயரமாகக் கொண்ட கே.ஆர்.எஸ். அணை நிரம்பி விட்டது. இதன் காரணமாக, அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவானது நொடிக்கு 69,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து நொடிக்கு 20,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ்-சில் இருந்து நொடிக்கு 49,000 கன அடி நீரும் காவிரியில் திறக்கப்படுகிறது. 

[…]

 69 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
பொது செய்தி

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 69 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவானது விநாடிக்கு 69,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 35,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கபினி அணைக்கு விநாடிக்கு 24 ஆயிரத்து 321 கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணைக்கு விநாடிக்கு 44 ஆயிரத்து 727 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

84 அடியை மொத்த நீர்தேக்கும் உயரமாகக் கொண்ட கபினி அணை 83.4 அடியை எட்டியது. இதேபோல், 124.8 அடியை நீர்தேக்கும் உயரமாகக் கொண்ட கே.ஆர்.எஸ். அணை நிரம்பி விட்டது. இதன் காரணமாக, அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவானது நொடிக்கு 69,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினியில் இருந்து நொடிக்கு 20,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ்-சில் இருந்து நொடிக்கு 49,000 கன அடி நீரும் காவிரியில் திறக்கப்படுகிறது. 

[…]

மேட்டூர் அணை
பொது செய்தி

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு..!

நீர் வரத்து அதிகரிப்பு

 

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு - வினாடிக்கு 26 ஆயிரம் கன அடி நீர் வருகை

வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 26 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

நீர் வரத்து அதிகரிப்பால் விரைவில் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்பு.

[…]

கான்கிரீட் சாலை அமைப்பு பணி
பொது செய்தி

ஊரகப்பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்க ரூ.95 கோடி ஒதுக்கீடு

ஊரகப்பகுதிகளில் 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் சாலைகள் அமைக்க 95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஊரகப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு தெருக்கள் மற்றும் பாதைகளை கண்டறிந்து 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு 94 கோடியே 98 லட்சம் ரூபாயில் தரமான கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார். அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் தனித்துவிடப்பட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் பாலம், கழிவு நீர் செல்லும் வடிகால் வசதியுடன் கூடிய கான்கீரிட் சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கிராம பகுதிகளில் வாழும் மக்கள் மழைக்காலங்களில் பாதுகாப்புடன் வாழவும், விவசாயிகள் தங்கள் பயிர்களை கான்கிரீட் சாலைகளில் உலர வைக்கவும் முடியும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனடியாக தொடங்கவும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

[…]

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பொதுசெய்தி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம்

வரும் 28ந் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம்

28ந் தேதி காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன் புறப்படுகிறார்

செப்டம்பர் 1ந் தேதி இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு 2ந் தேதி அமெரிக்கா சென்றடைகிறார்

இந்தியா திரும்பும் வழியில் செப்டம்பர் 8ந் தேதி முதலமைச்சர் துபாய் செல்கிறார்

இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரக சுற்றுப்பயணங்களை நிறைவு செய்துவிட் செப்டம்பர் 10ந் தேதி சென்னை திரும்புகிறார்

[…]

கொலை
பொதுசெய்தி

சென்னை அருகே மகனின் படிப்பு செலவிற்காக பணம் கேட்ட மனைவி கத்தியால் குத்தி கொலை: கணவன் தப்பியோட்டம்

சென்னை நீலாங்கரையில் மகனின் படிப்பு செலவிற்காக பணம் கேட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்ற கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தனது தாயை, தந்தை கத்தியால் குத்தி கொலை செய்ததை நேரில் பார்த்த 5 வயது சிறுவன் அளித்த வாக்குமூலத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த நீலாங்கரை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு திருவண்ணாமலையை சேர்ந்த அகிலா என்ற பெண்ணுடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் ஆன புதிதில் வரதட்சணை கேட்டு மனைவியை தனசேகர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்ற அகிலா அங்கு வசித்து வந்தார். 

தனசேகர் அகிலா தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் நேற்று இரவு தனசேகர் வசிக்கும் வீட்டிற்கு வந்த அகிலா மகனின் படிப்பு செலவுக்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகன் கண் முன்னே அகிலாவை தனசேகர் கத்தியால் குத்தி கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் அகிலா உயிரிழந்துவிடவே தனசேகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து தகவலறிந்து அங்கு சென்ற நீலாங்கரை போலீசார் தாய் தனது கண்முன் பலியான சோகத்தில் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்த 5 வயது சிறுவனிடம் வாக்குமூலம் பெற்றனர். பின்னர் அதன் அடிப்படையிலும், அகிலாவின் சகோதரர் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரிலும் தப்பியோடிய தனசேகரை நீலாங்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

[…]

 வானிலை ஆய்வு மையம்
பொதுசெய்தி

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஒடிசா அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தாலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூரில் 6 செண்டி மீட்டர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 5 செண்டி மீட்டர், ஏற்காட்டில் 4 செண்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், வேலூர் காவேரி பாக்கம், நீலகிரி மாவட்டம் தேவாலா, ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆகிய இடங்களில் தலா 3 செண்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் சில பகுதிகளில் மாலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் காரணத்தால் தென் கிழக்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

[…]

சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி
பொதுசெய்தி

சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி,ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால்...

மத்திய பிரதேத்தின் பர்ஹான்பூர் பகுதியில் வசித்து வருபவர் கமலா பாய்.  இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.  இந்த நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

இதனால் அவரது கணவர் தொலைபேசி வழியே துணை செவிலியருக்கு அழைப்பு விடுத்து, எனது மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.  அதனால் உடனடியாக ஆம்புலன்சு ஒன்றை அனுப்பி வையுங்கள் என தகவல் தெரிவித்து உள்ளார்.

ஆனால் நெடுநேரம் ஆகியும் ஆம்புலன்சு வரவில்லை.  இதனால் அவர் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

எனினும், அந்த பெண்ணுக்கு வழியிலேயே பிரசவ வலி அதிகரித்தது.  அவருக்கு சாலையிலேயே பெண் குழந்தை ஒன்று பிறந்தது.  இதன்பின்பு ஷாபூர் சமூகநல மையத்திற்கு கமலா பாய் மற்றும் அவரது குழந்தை கொண்டு செல்லப்பட்டனர்.

[…]

சொத்து தகராறில் கொலை
பொதுசெய்தி

சொத்து தகராறில் சித்தப்பாவை கொடூரமாக கொலை செய்த நபர் பொது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சொத்து தகராறு காரணமாக சித்தாப்பாவை கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேடசந்தூர் அருகே கிழக்கு மாரம்பாடியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவர் தனது சகோதரர் தங்கராஜ் குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். லாரி ஓட்டுநரான அந்தோணி சாமிக்கு இரு மனைவிகள் உள்ளனர்.

தங்கராஜ் 20 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்ட நிலையில், நேற்றிரவு, அந்தோணி சாமிக்கும் - தங்கராஜ் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சண்டையைத் தொடர்ந்து அந்தோணி சாமி தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதிவேகத்தில் பின் தொடர்ந்த சரக்கு ஆட்டோ ஒன்று அந்தோணிசாமி மீது மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழவே, ஆட்டோவில் இருந்து இறங்கிய மர்மக்கும்பல், அந்தோணிசாமியை இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கியதுடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

தகவல் அறிந்து அங்கு சென்ற எரியோடு போலீசார் சடலத்தை மீட்டனர். அந்தோணி சாமியை கொலை செய்தது தங்கராஜின் மகன் செல்வக்குமார் தான் என்பதை உறுதி செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். செல்வக்குமாரையும் கொலைக்கு உடந்தையாக இருந்த நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். 

[…]

கொலை செய்யப்பட்டவர்
பொதுசெய்தி

ரவுடி தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் 6பேர் கைது,கள்ளத்தொடர்பால் ரவுடி கொலை...

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி தலை சிதைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளது. பெண்ணுக்காக நடந்த போட்டியில் ஒருவர் கை இழக்க, ரவுடி உயிரிழந்த பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை மடிப்பாக்கம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர்லால். சிதம்பரம் பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே மர்மகும்பலால் தலை சிதைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை, ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் தேடி வந்த நிலையில், பல்லடத்தைச் சேர்ந்த ரவுடி ஒத்தகை ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட கூலிப்படை கும்பல், ஒரத்த நாடு நீதிமன்றத்தில் சரண் அடைந்தது.

கொலை செய்யப்பட்ட சங்கர்லால் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்ததால், பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், ஆசை நாயகி என்ற ஒரு பெண்ணுக்காக ஏற்பட்ட மோதலில், சங்கர்லால் கொல்லப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

சிதம்பரம் பகுதியில் கூலிப்படையாக செயல்பட்டு வந்த சங்கர்லால், ராஜா இருவரும் கூட்டாளிகள். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஆசை நாயகி என்கிற அருணாவை காதலித்துள்ளனர். அந்த பெண் இருவரிடமும் நெருங்கிப் பழகியுள்ளார். இதில் ஆசைநாயகியை யார் ஆஸ்தான நாயகியாக்கிக் கொள்வது என்று இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ராஜாவின் கையை சங்கர்லால் வெட்டியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர், திருப்பூருக்கு தப்பிச்சென்ற ராஜா, பல்லடத்தில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஆசைநாயகியுடன் வாழ்ந்து வந்த ரவுடி சங்கர்லாலை பழிக்குப் பழிவாங்க ராஜா திட்டமிட்டதாகவும், ரவுடி சங்கர்லாலை ஒருவாரமாக நோட்டமிட்ட நிலையில், கடந்த திங்கட்கிழமை சங்கர்லாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் ஆசை நாயகி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது. இந்த தகவல் அறிந்து ஆவேசப்பட்ட ராஜா, மறுநாள் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே வைத்து, சங்கர்லாலை ,கூலிப்படையினருடன் சேர்ந்து தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் சரண் அடைந்த கூலிப்படைக் கும்பலை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். பெண் ஆசையால் ஏற்பட்ட போட்டியில் இந்த கொடூர கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளதால், இதில் சம்பந்தப்பட்ட பெண்ணையும் பிடித்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

[…]

மேட்டுர் அணை
பொதுசெய்தி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை எட்டிய நிலையில் தொடர்ந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில் பெருமளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில் மழை குறைந்த போதும் கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தற்போது மேட்டுர் அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் நீர்மட்டம் 117 அடியாகவும், நீர் இருப்பு 88 புள்ளி 795 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிநீரும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

[…]

 கனமழை
பொதுசெய்தி

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்கள் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

மேலும், வேலூர் தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் நீலகிரி தேனி திண்டுக்கல் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தலா 10 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால்அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]

வட தமிழகத்தில் மழை
பொது செய்தி

இன்னும் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்நது மழை பெய்து வருகிறது. வேலூரில் நேற்று முன்தினம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருச்சியில் 13 செ.மீ., மழையும், கிருஷ்ணிகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சேலம் வாழப்பாடியில் 8 செ.மீ., பெரம்பலூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இன்று மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம், துடியலூர், இடையர்பாளையம், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம், சாய்பாபா காலனி, டவுன்ஹால் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கில், ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். […]

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பொது செய்தி

மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பவில்லை...

மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு திருப்பி அனுப்பவில்லை என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.13 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு 19 திட்டப்பணிகளைத் திறந்துவைத்து, 11 ஆயிரத்து 571 பயனாளிகளுக்கு 18 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 565 கோடி ரூபாய் மதிப்பில் மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு 100 ஏரிகள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

2017-18 ஆண்டில் மத்திய அரசின் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக சில பத்திரிகையில் செய்தி வந்துள்ளதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அதுபோன்று எந்த நிதியையும் திருப்பி அனுப்பவில்லை என்று தெரிவித்தார்.

குறிப்பிட்ட காலத்தில் மத்திய அரசு நிதியை வழங்காததால் அந்த நிதி அடுத்த ஆண்டின் சேமிப்பாக கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என அவர் விளக்கம் அளித்தார். […]

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர்
பொது செய்தி

அத்திவரதரை இது வரை 3.45 லட்சம் பேர் தரிசித்துள்ளதாக தகவல்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை, நான்கு நாட்களில் சுமார் 3 லட்சத்து 45 பேர் தரிசனம் செய்துள்ளனர்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகிறனர்.

நான்காம் நாளான இன்று மட்டும் சுமார் 45 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 500 ரூபாய் கட்டணத்தில் சுமார் 1000 பேர் தரிசனம் செய்தனர்.
வருகிற 11 ஆம் தேதி வரை வரதராஜ பெருமாள் கோவிலில், வசந்த உற்சவம் நிகழ்வு நடைபெறுவதால், காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். […]

வைகோ
பொது செய்தி

மாநிலங்களவை தேர்தலுக்கான மதிமுக வேட்பாளராக வைகோ தேர்வு

மதிமுக உயர்மட்ட குழு கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோவை, மாநிலங்களவை எம்பி தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மதிமுகவின் உயர்நிலை மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை எழும்பூரிலுள்ள தாயகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வரும் 18ம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மதிமுக சார்பில், பொதுச்செயலாளர் வைகோவை, வேட்பாளராக முன்னிறுத்துவது என்றும், மதிமுகவுக்கு மாநிலங்களவை இடம் அளித்த, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. […]

பழனி முருகன்
பொது செய்திகள்

பழனி முருகன் கோவில் கடைகளை ஏலம் விட இடைக்காலத்தடை:

பழனி கோவில் வாடகை கடைகளின் உரிமையாளர்கள் சுரேஷ்பாபு, லட்சுமணன் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் எந்தவித முன்னறிவிப்பின்றி கடைகளை ஏலம்விட கோவில் நிர்வாகத்தினர் ஆயுத்தமாகி வருவதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு பின் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விட இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. […]

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
பொது செய்திகள்

ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு:

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும், மழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை மையம் கூறியுள்ளது.

வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் வேப்பூரில், 6 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசாகவும் பதிவாகிடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. […]

சென்னையில் வழிப்பறி
பொது செய்திகள்

சென்னையில் வழிப்பறி கொள்ளையன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் போலீஸ் அறிவிப்பு

சென்னையில் வழிப்பறி கொள்ளையர்கள் அதிகரித்து வரும் நிலையில், வழிப்பறி கொள்ளையன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 10 இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராகேஷ் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் சி.சி.டிவி கேமராக்களில் பதிவான மற்ற புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து அதில் உள்ள கொள்ளையனின் விவரங்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

மேலும் தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைத்திருக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்திருக்கின்றனர். இதை தொடர்ந்து சென்னை முழுவதும் சி.சி.டிவி கேமரா கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையிலும் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்நிலையில் கைது செய்யும் போது முக்கிய குற்றவாளியான ராகேஷ் தப்பித்து ஓட முயற்சி செய்ததாகவும், அப்போது தவறி கீழே விழுந்ததில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். […]

கார்த்திக் -  சவுமியா காதல் திருமணம்
பொது செய்தி

காதலனை கரம் பிடித்த கல்லூரி மாணவி ஈரோடு காவல் நிலையத்தில் தஞ்சம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). ஏ.சி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கார்த்திக் கோவை கோவில்மேட்டைச் சேர்ந்த சவுமியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். சவுமியா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் தங்கள் காதலில் உறுதியாக இருந்த கார்த்திக் – சவுமியா வீட்டை விட்டு வெளியேறி கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் கோவையில் இருந்து தப்பி வந்த காதல் ஜோடி ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து இரு வீட்டு பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு வீட்டு பெற்றோர்களும் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் கார்த்திக் பெற்றோர் தனது மகனின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். பின்னர் இறுதியில் சவுமியா தனது காதல் கணவர் கார்த்திக்குடன் புறப்பட்டு சென்றார். […]

தமிழ்நாடு மின் உற்பத்தி
பொது செய்தி

மின்வாரியத்திற்கு ரூ.7,000 கோடி இழப்பு?

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழத்திற்கு, 2017-2018ஆம் நிதியாண்டில், 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும், நஷ்டம் 78 விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும், கூறப்படுகிறது. மின்சார விற்பனை மற்றும் விநியோகத்தின் மூலமான விற்பனை வருவாய், 2016-17ஆம் நிதியாண்டை காட்டிலும், 2017-18ஆம் நிதியாண்டில் 277 கோடி ரூபாய் சரிந்துள்ளது. மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அறிமுகப்படுத்திய, முதல் 100 யூனிட்டுகள் மின்சாரத்திற்கு கட்டணமில்லை என்ற திட்டத்தின் மூலம், மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பு சற்று அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்ட நிதி ஒதுக்கீடு உயர்வு, ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் நிலக்கரி விலை, மின்பகிர்மான கழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு, முக்கிய காரணிகளாக இருப்பதாகவும், கூறப்படுகிறது. […]

தமிழக அரசு பள்ளி
செய்திகள்

தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு புதிய சீருடை அறிமுகம்

தமிழக அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு வரும் கல்வியாண்டு முதல் புதிய சீருடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு கரும்பச்சை நிற கால்சட்டையும், இளம் பச்சை நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு சந்தன நிற கால் சட்டையும் சந்தன நிற கட்டமிடப்பட்ட மேல் சட்டையும், மாணவியருக்கு கூடுதலக சந்தன நிற மேல் கோட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

சத்துணவு சாப்பிடும் 40 லட்சத்து 66 ஆயிரத்து 217 மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டு இலவச சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு ஏற்கனவே சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன. […]

தண்ணீர் வறட்சி
செய்திகள்

தண்ணீர் வறட்சியின் கோர முகம்...

தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு வருவது முதல்முறையல்ல பல தடவை தன்னுடைய தண்ணீர் பஞ்சமானது தன் முகத்தை வறட்சியாக காட்டி இருக்கிறது அதுவும் கோடைகாலமாக இருக்கும் இப்போது தனது முகத்தை உக்கிரமாக காட்டுகிறது தண்ணீர் பஞ்சம்.
வெயிலோடு சேர்த்து வறட்சியும் மக்களை வாட்டி எடுக்கிறது. அடிக்கும் அக்னி வெயிலுக்கு தண்ணீர் தேடி அலைகின்றனர் மக்கள். ஆனால் எவ்வளவு அலைந்தாலும் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதில்லை. அதிலும் மெட்ரோ சிட்டிகளான சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் நிலையை சொல்ல வேண்டியதில்லை. மக்கள் காலிக்குடங்களோடு தண்ணீர் வேட்டையை நடத்துகின்றன ஒரு சில மணி நேரமல்ல ஒரு நாள் முழுவதும். சில இடங்களில் லாரி தண்ணீர் ஒரு குடம் கூட கிடைக்கவில்லை என போராட்டம் வெடிக்கிறது. மாதம் மாதம் காய்கறிக்கு,மருந்துக்கு,பெட்ரோலுக்கு காசை ஒதுக்குவது போல தண்ணீருக்கும் மாதம் காசை ஒதுக்கி வைத்து வாங்கிவிடலாம் என முடிவெடுத்துவிட்டோம். அதன் விளைவுதான் பெரு நகரங்களில் மாதம் 5000-லிருந்து 7000-வரை தண்ணீர் வாங்க ஒவ்வொரு குடும்பங்களில் பட்ஜெட்டானது மாத மாதம் ஒதுக்கப்படுகிறது. காசு நம்மிடம் இருக்கிறது தண்ணீர் வாங்க முன்வந்துவிட்டோம் . ஆனால் நிலத்திடம் இருந்தால் தானே நமக்கு தண்ணீர் என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பினால் அதற்கு நம்மிடம் பதில் இருக்குமா என தெரியவில்லை. நிலத்தடி நீர் மட்டத்தை பற்றியே மறந்துவிட்டோம் பின் எப்படி நம்முடைய நிலத்தடி நீரைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். பருவ மழையும் பொய்துவிட்டது அதுதான் வறட்சிக்கு காரணம் என்ன நாம் தேர்தெடுத்த அரசியல் வாதிகள் ஒவ்வொரு முறையும் சொல்லி வருகிறார்கள். ஆமாம் பருவ மழை பொய்துதான் விட்டது ஆனால் மழை பெய்யும் போது அதிகமாக பெய்த மழையை அணைகளிலும், ஆறுகளிலும்,குளங்களிலும், கண்மாய்களிலும் ஏன் சேமிக்கவில்லை. காரணம் முறையாக தூர்வாரவில்லை தூர்வார ஒதுக்கிய பணத்தை இவர்கள் தூர்வாரிவிட்டார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட ஒரு சந்திப்பில், “தமிழகத்தில் பெய்ய வேண்டிய பருவமழை சரியான நேரத்திற்கு பெய்யாமல் போனதுதான் இந்த தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம். ஆனாலும் கோடை காலத்தில் தமிழக மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படகூடாது என்பதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இதை சரிசெய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் வறட்சியாக இருக்கும் இடங்களிலும் தண்ணீரானது மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுப்போக தேர்தலுக்கு முன்பே குடிநீர் தேவைகான நிதிகளை ஒதுக்கிவிட்டிருப்பதால் தண்ணீர் பிரச்சனைப் பற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை” என சொல்கிறார் முதல்வர்.முதல்வர் பழனிசாமி சொல்வது போல வறட்சியை தடுக்கும் பணிகள் துரிதமாக நடைபெறவில்லை இந்த துரித பணிகள் முடிவதற்குள் கோடைகாலம் முடிந்திருக்கலாம். ஆகவே அரசாங்கத்தை நம்பாமல் இனிவரும் காலங்களில் ‘ஒவ்வொரு அரிசியில் நம் பெயர் இருப்பதை ஒரு துளி நீரிலும் நம் பெயர்கள் இருப்பதாக நினைத்து’ நிலத்தடி நீரை பெருக்குவோம் தண்ணீர் வறட்சியை விரட்ட சிக்கனத்தை கையாள்வோம். […]

உழவாரப்பணி துவக்கவிழா
pothu seyithigal

தன்னார்வலர்களின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் சிலை இரண்டாம் ஆண்டு உழவாரப்பணி துவக்கவிழா

12-05-2019 ஞாயிறு அன்று மதுரை கம்மவர் நாயுடு மகாஜன சங்கம் மீட்டிங் ஹாலில், பாரத பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழு சார்பாக இரண்டாம் ஆண்டு உழவாரப்பணி துவக்கவிழா நடைபெற்றது. இவ் விழாவில் விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு தேவையான திட்டங்கள் முன்வைக்கப்பட்டது. இன்னும் சில தலைவர்களின் சிலைகளை பராமரிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. தன்னார்வலர்கள் பணிகள் மென்மேலும் வளர்ச்சியுறும் பொருட்டு,இவ்விழாவிற்கு வருகை புரிந்த உணர்வாளர்கள் தேவையான ஆதரவினை தர முன்வந்துள்ளனர். மேலும் பெருந்தலைவர் சிலைக்கு வருகைபுரிந்து மாலை அணிவித்து வணங்கிய இளம் சிறார்களுக்கு சிறு பரிசுகள் வழங்கப்பட்டது. பல மாவட்டங்களிலிருந்து காமராஜர் சிலையை பராமரிப்பவர்கள் இவ் விழாவிற்காக வருகை புரிந்து சிறப்பித்தார்கள். இவ்விழாவில் ஜனதா தள கட்சியின் பொதுச்செயலாளர் ஜான் மோசஸ், காமராஜர் யுவ கேந்திரா மாநில செயலாளர் நெல்லை ரவி குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர் மட்ட குழு - விஜய் மாரீஸ், தன்னார்வலர் மனோகர பாண்டியன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணை செயலாளர் மாலின் உட்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டி நாடார், ஆசைத்தம்பி, அசோக் குமார், விருதை வெற்றி, சிவலிங்கம், கார்த்திகேயன் மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர். […]

வைரல் வீடியோ
pothu seithigal

பனங்காட்டு மக்கள் கழகம் கட்சி தலைவர் சுபாஸ் பண்ணையாரின் வைரல் வீடியோ.

தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரைப்பட்டியிலுள்ள கோவில் திருவிழாவில் சிறுவர்களுடன் நடனம் ஆடும் பனங்காட்டு மக்கள் கழகம் கட்சி தலைவர் சுபாஸ் பண்ணையாரின் வைரல் வீடியோ. […]

மக்கள் நீதி மய்யம்
pothu seithigal

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பதிவை உடனே ரத்து பண்ணுங்க ! தேர்தல் கமிஷனிடம் பாஜக அதிரடி புகார்

தேர்தல் பிரசாரத்தில் மதவாதம் பற்றி பேசியதால் கமல்ஹாசன் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா புகார் மனு அளித்து உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் பேசினார். கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா இந்திய தலைமை தேர்தல் கமிஷனில் இது தொடர்பாக ஒரு புகார் மனு அளித்தார். அதில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே. மகாத்மா காந்தியை படுகொலை செய்த இந்து பயங்கரவாதி” என்று பேசி உள்ளார். அதிக அளவில் திரண்டிருந்த முஸ்லிம் மக்கள் முன்னிலையில் ஓட்டுக்காக வேண்டுமென்றே இவ்வாறு அவர் பேசி இருக்கிறார். இது 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 123 (3) கீழ் ஊழல் நடைமுறை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே, இந்திய அரசியல் அமைப்பின் 324-வது அட்டவணைப்படி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கு, கமல்ஹாசன் குறைந்தபட்சம் 5 நாட்களாவது தேர்தல் பிரசாரம் செய்யாமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு தமிழக பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் ஆர்.சவுந்திரராஜன் புகார் மனு அளித்து உள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய கமல்ஹாசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். […]

Podhu Seithigal
Podhu Seithigal

ஏன் வாக்களிக்க வேண்டும்? ; யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

வரலாற்றின் பக்கங்களில் யாருக்கும் அடங்கிப் போகாமல் கிளர்ந்து எழுந்த ஒரு இனம் ! இங்கு இருளில் மங்கிப்போன ஜனநாயகத்திற்கு ஒளியை ஏற்றும் திருவிழாவை தொடங்கியிருக்கிறது. […]