கிரிக்கெட்
விளையாட்டு

இரண்டாவது இன்னிங்சிலும் வங்க தேசம் தடுமாறுவதால் இந்தியாவிற்கு வெற்றிவாய்ப்பு...

கொல்கத்தா கிரிக்கெட் டெஸ்ட்டில் இரண்டாவது இன்னிங்ஸ்சிலும் வங்கதேச அணி ரன் எடுக்க திணறி வருவதால் இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றிபெறும் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியா வங்காளதேச அணிகளிடையே கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்காளதேச அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்னில் சுருண்டது.

இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். அகர்வால் 14 ரன்னிலும், ரோகித் சர்மா 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த புஜாராவும் கேப்டன் விராட் கோலியும் நிதானமாக விளையாடி அரைசதம் கடந்தனர்.

முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ரகானேவும் கோலியும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ரகானே 51 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் தனது 27வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி 136 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். இதையடுத்து, வங்காளதேச அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடியது. ஆனாலும் அந்த அணியின் ஆட்டக்கார ர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்த போதிலும் முஷ்பிகூர் ரகீம் மட்டும் தாக்குபிடித்து ஆடினார்.

இதனால் வங்கதேச அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் இந்திய அணி 89 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் கோலி

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.

கொல்கத்தாவில் பகலிரவாக நடைபெறும் டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாளான இன்று இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் என்ற நிலையில் முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. மறுமுனையில் ரஹானே 51 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், அரை சதத்துடன் களத்தில் இருந்த கோலி சிறப்பாக விளையாடி, 159 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும் அடங்கும். 

டெஸ்ட் போட்டிகளில் இது கோலியின் 27ஆவது சதம். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அணியின் கேப்டனாக 20 சதம் விளாசி, அதிக சதம் அடித்த கேப்டன் பட்டியலில் கோலி 2ஆவது இடத்தை பிடித்தார். இப்பட்டியலில் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஸ்மித் 25 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதேபோல், சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி 70 சதங்களுடன் 3ஆவது இடத்தில் உள்ளார். அப்பட்டியலில் சச்சின் 100 சதங்களுடன் முதலிடத்திலும், 71 சதங்களுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் 2ஆவது இடத்திலும் உள்ளனர்.

அதேநேரத்தில், இந்திய அணி தரப்பில் இளம்சிவப்பு நிற பந்தில் முதல் சதம் விளாசிய இந்திய வீரர் எனும் சாதனையும் கோலி வசமானது. சிறப்பாக விளையாடிய கோலி 136 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜடேஜா 12 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் களம்புகுந்த அஸ்வின் 9 ரன்னிலும், உமேஷ் யாதவ், இசாந்த் ஷர்மா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டும் ஆகி வெளியேறினர். இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா முதல் இன்னிங்ஷில் 347 ரன்களை எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவிக்கப்பட்டது. சாகா ஆட்டமிழக்காமல் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து வங்கதேச அணி களம் இறங்கி, தனது 2ஆவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

வங்கதேசம் 106 ரன்களில் சுருண்டது

கொல்கத்தாவில் தொடங்கியுள்ள பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் பந்து வீச்சை தாக்க பிடிக்க முடியாமல வங்கதேச அணி முதல் இன்னிங்ஷில் 106 ரன்களில் சுருண்டது. 

இந்திய அணி பங்கேற்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இப்போட்டியை வங்கதேச பிரதமர் சேக் ஹசினா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் மணி அடித்து  தொடங்கி வைத்தனர்.

டாஸ் வென்ற வங்கதேச அணி , பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஷை விளையாடிய வங்கதேச அணியின் விக்கெட்டுகள் சீட்டு கட்டுகள் போல மளமளவென்று சரிந்தன. தொடக்க ஆட்டக்காரர் சாத்மான் இஸ்லாம் 29 ரன்களும், நயிம் ஹாசன் 19 ரன்களும் சேர்த்து வெளியேறினர். லிடன் தாஸ் 24 ரன்களில் காயமடைந்து வெளியேறினார்.
4 வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். மேலும் 4 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் 106 ரன்களில் வங்கதேசம் சுருண்டது.

இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சம் இசாந்த் ஷர்மா, 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகம்மது சமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஷை தொடங்கி விளையாடி வருகிறது.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

இன்று முதல் பகலிரவு டெஸ்ட் - கொல்கத்தா பிங்க் நிறத்தில் கோலாகலம்

இந்தியா- வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி பங்கேற்கும் முதலாவது பகல்- இரவு போட்டி இதுவாகும்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அரசியல் பிரபலங்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் இப்போட்டியைக் காண வருகை தரவுள்ளனர்.

பிங் நிற பந்து பயன்படுத்தப்படவுள்ளதால், போட்டி நடக்கும் அரங்கம் மட்டுமல்லாது, கொல்கத்தாவின் சில முக்கிய இடங்களும்கூட பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிஜொலிக்கின்றன.

முதல் பகலிரவு ஆட்டம் என்பதால் இந்திய அணியைப் போலவே, இந்திய ரசிகர்கள் இடையேயும் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

[…]

இளவேனில்
விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம்

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன், மனுபாக்கர் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதி சுற்று போட்டிகள் சீனாவின் புதியான் நகரில் நடைபெற்று வருகின்றன. அதில் மகளிருக்கான 10 மீட்டர் ஜூனியர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில், 17 வயதான இந்திய வீராங்கனை மனு பாக்கர் தங்கம் வென்றார்.

அதுமட்டுமின்றி 244.7 புள்ளிகளை பெற்ற அவர், இளையோர் பிரிவில் உலக அளவில் புதிய சாதனையையும் படைத்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மனு பாக்கர், ஹீனா சித்துவுக்கு பிறகு 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் 2வது பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நடப்பாண்டில் உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.

இந்நிலையில் மனு பாக்கரை தொடர்ந்து மகளிருக்கான 10 மீட்டர் ரைபிள் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவனும் தங்கம் வென்றார். தான் பங்கேற்ற முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதனிடையே ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவிலும் இந்திய வீரர் திவ்யான்ஷ் சிங் பன்வார் 250.1 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இத்துடன் சேர்த்து உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

மேற்கிந்திய தீவுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்படுகிறது. அந்த அணி இந்தியாவில் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் டிசம்பர் 6ந் தேதி நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை அறிவிக்க தேர்வுக் குழுவினர் கொல்கத்தாவில் இன்று கூடுகின்றனர். ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த தொடர்களில் ரன்களைக் குவிக்கத் தவறிய ஷிகர் தவான் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காயமடைந்த ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஷ்குமார் ஆகியோர் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. தீபக் சாஹர் இந்த தொடரிலும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதனிடையே, தேர்வுக் குழு தலைவர் பிரசாத்தின் பதவிக்காலம் டிசம்பருடன் நிறைவடைவதால், அப்பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் தேர்வாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

[…]

கால்பந்து
விளையாட்டு

பிஃபா 2022 தகுதிச் சுற்று: இந்தியா தோல்வி

பிஃபா 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி தகுதிச் சுற்றின் ஒரு பகுதியாக மஸ்கட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஓமனிடம் தோல்வியுற்றது. தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஓமன் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதன் வீரா் அல் கஸானி இந்திய தற்காப்பு அரணின் மெத்தனப் போக்கை பயன்படுத்தி கோலடித்தாா்.

இந்த வெற்றி மூலம் 3 புள்ளிகளைப் பெற்றது ஓமன். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா இந்தியா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

அது கிரிக்கெட்டே அல்ல: உலகக் கோப்பை முடிவு குறித்து நியூஸி. கேப்டன் விமரிசனம்

2019 உலகக் கோப்பைப் போட்டி முடிவை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அதேபோல விநோதமான விதிமுறையால் ஏற்பட்ட தோல்வியை நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனாலும் இன்னமும் மறக்க முடியவில்லை. 

பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது. இரு அணிகளும் 50 ஓவர்கள் ஆடிமுடிந்த நிலையில் ஆட்டம் சமன் ஆனது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து.

எனினும் சூப்பர் ஓவர் வழியாக முடிவைக் கண்டடையாமல் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் ஐசிசியின் விதிமுறைக்குப் பலத்த கண்டனம் எழுந்தது. இதுபோன்ற தர்க்கம் இல்லாத விதிமுறைகளை மாற்றவேண்டும் என்றும் பல தரப்பிலிருந்தும் ஐசிசிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டியில் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவர் விதிமுறையை ஐசிசி நீக்கியுள்ளது. துபாயில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இதுதொடர்பாகப் புதிய விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூப்பர் ஓவரும் டை-யில் முடிவடைந்தால் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி பெறும் அணியைத் தேர்வு செய்யும் பழைய நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, உலகக் கோப்பைப் போட்டிகளில் சூப்பர் ஓவரும் டை-யில் முடிந்தால் முடிவு எட்டப்படும்வரை சூப்பர் ஓவர்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனால் இன்னமும் அந்த இறுதிப் போட்டியை மறக்க முடியவில்லை. அந்த முடிவை விமரிசித்து அவர் பேசியதாவது:

இதுபோல சூப்பர் ஓவரும் டை-யில் முடிவடையும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. இதுபோன்ற முடிவுகளை எப்படி எடுக்கிறார்கள் என அவ்வப்போது யோசிப்பேன். ஓர் அறையில் உட்கார்ந்துகொண்டு சில யோசனைகளைத் தெரிவித்து கடைசியில் இந்த முடிவை எடுத்துள்ளார்கள் என்றுதான் நினைப்பேன். ஆனால் சூப்பர் ஓவரும் டை ஆகி பவுண்டரி அடிப்படையில் வெற்றியாளரை நிர்ணயிப்பது என்பது அச்சமூட்டும் விஷயம். 

இது அந்த விதிமுறையில் உள்ள குறையை வெளிப்படுத்தியுள்ளது. அதுபோன்று இனி மீண்டும் நடக்காது. அந்த முடிவு என்பது கிரிக்கெட்டே அல்ல. அதை இரு அணிகளும் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதை ஏற்றுக்கொள்வது கடினம். எனினும் அந்த விதிமுறைகள் ஏற்கெனவே உள்ளன. 

அருமையான ஆட்டம் இது. நூற்றுக்கணக்கான ஆட்டங்கள் இருந்தாலும் இதுபோன்ற முடிவை யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். அது அப்படித்தான். விதிமுறைகள் அப்படித்தான் இருந்தன. அந்த விதிமுறை தற்போது மாற்றப்பட்டதில் ஆச்சர்யம் இல்லை என்று கூறியுள்ளார். 

[…]

ஒலிம்பிக்
விளையாட்டு

ஒலிம்பிக் மைதானத்தின் கட்டுமானப் பணி நிறைவு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான மைதானத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன.

டோக்கியோவில், அடுத்த ஆண்டு ஜுலை 24 முதல், ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக மைதானம் அமைக்கும்பணி, 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.

கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 60 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம், வரும் டிசம்பர் 21ம் தேதி திறக்கப்படுகிறது.

[…]

ஜேம்ஸ் பட்டின்ஸனை
விளையாட்டு

தரக்குறைவான செயல்பாடு: ஆஸி.பந்துவீச்சாளா் பட்டின்ஸன் சஸ்பெண்ட்

மைதானத்தில் தரக்குறைவாக நடந்து கொண்டமைக்காக ஆஸி. வேகப்பந்து வீச்சாளா் ஜேம்ஸ் பட்டின்ஸனை ஒரு டெஸ்ட் ஆட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக ஆஸி.-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடா் வரும் வியாழக்கிழமை பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்நிலையில் இதற்கான ஆஸ்திரேலிய அணியில் பட்டின்ஸன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற குயின்ஸ்லாந்து அணிக்கு எதிரான விக்டோரியா ஷெப்பில்ட் போட்டியில் எதிரணி வீரரை தரக்குறைவாக பட்டின்ஸன் நடத்தினாராம். கடந்த 18 மாதங்களில் பட்டின்ஸன் இவ்வாறு மோசமாக நடப்பது மூன்றாவது முறையாகும்.

இதனால் அவரை பாகிஸ்தானுடன் நடக்கவுள்ள முதல் டெஸ்ட் ஆட்டத்துக்கு சஸ்பெண்ட் செய்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

கேப்டன் டிம் பெயின் கூறுகையில்: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இருந்து இப்போது தான் எங்கள் அணி மக்கள் நம்பிக்கையை பெற்றுவருகிறது. அதற்குள் இவ்வாறு நடந்து பட்டின்ஸன் அணியை கைவிட்டு விட்டாா் என வேதனை தெரிவித்தாா்.

[…]

5 தங்கப் பதக்கம்
விளையாட்டு

ஆசிய யூத் குத்துச்சண்டை: இந்திய மகளிருக்கு 5 தங்கம்

ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிா் 5 தங்கப் பதக்கமும், ஆடவரணி 2 வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனா்.

மங்கோலிய தலைநகா் உலன்பட்டாரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் மகளிா் பிரிவில் நரோம் சானு 51 கிலோ, வின்கா 46 கிலோ, சனம்சா சானு 75 கிலோ, பூனம் 54 கிலோ, சுஷ்மா 81 கிலோ ஆகியோா் இறுதிச் சுற்றில் எதிராளிகளை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றனா்.

ஆடவா் பிரிவில் செலே சோய் 49 கிலோ, அங்கித் நா்வால் 60 கிலோ பிரிவுகளில் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

இப்போட்டியில் இந்திய அணி மொத்தம் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. அருந்ததி சௌதரி 69 கிலோ, கோமல்ப்ரீத் கௌா் 81 கிலோ, ஜாஸ்மின் 57 கிலோ, சதேந்தா் சிங் 91 கிலோ, அமான் 91 கிலோ பிளஸ் பிரிவுகளில் வெண்கலம் வென்றனா்.

[…]

ஜக்லிங்
விளையாட்டு

ஜக்லிங் போட்டியில் தொடர்ந்து 3-வது முறையாக கோப்பையை வென்ற மெலடி டான்செட்

பிரான்சை சேர்ந்த மெலடி டான்செட், ஜக்லிங் விளையாட்டில், தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை வென்றுள்ளார்.

ஜக்லிங் விளையாட்டில் முன்னனி வீராங்கனையாக விளங்கும் மெலடி டான்செட், மியாமியில் நடந்த 2019-ம் ஆண்டிற்கான ஜக்லிங் தொடரின் இறுதிபோட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜத் சர்மா விலகல்

டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜத் சர்மா ராஜினாமா செய்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளரான ராஜத் சர்மா, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நிர்வாகத்தில் தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை எனவும், பணிக்கு இடையூறாக பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டதால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் பணியைத் தொடரமுடியாது எனும் காரணத்தால் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

தோனியை முந்தி விராட்கோலி புதிய சாதனை

டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்றுத்தந்த இந்திய கேப்டன் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இந்தூரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இதன் மூலம் இந்திய அணிக்கு 10 முறை இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ள விராட் கோலி, அதிக முறை இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்றுத்தந்த இந்திய கேப்டன் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி 9 முறை இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுத் தந்ததே சாதனையாக இருந்த நிலையில், கோலி அதை முறியடித்துள்ளார். 

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி...

இந்தூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் 3ஆவது நாளான இன்று முதல் இன்னிங்சை 493 ரன்களில் இந்தியா டிக்ளேர் செய்தது. இதையடுத்து வங்கதேச அணி தனது 2ஆவது இன்னிங்சை விளையாடியது. ஆனால் ஆரம்பம் முதலே வங்கதேச வீரர்களால் இந்திய அணியினரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தபடி இருந்தன.

5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். வங்கதேச அணி தரப்பில் அதிகப்பட்சமாக முஸ்பிஹுர் ரஹிம் 64 ரன்களும், மெஹிடி ஹாசன் மிராஜ் 38 ரன்களும், லிதன் தாஸ் 35 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் 2ஆவது இன்னிங்சில் 213 ரன்களில் வங்கதேசம் சுருண்டது.

இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் முகம்மது சமி அதிகப்பட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அவருக்கு அடுத்து அஸ்வின் 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

[…]

மயங்க் அகர்வால்,
விளையாட்டு

மயங்க் அகர்வால் இரட்டை சதம்...

இந்தூரில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால், டெஸ்ட் அரங்கில் தனது 2ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

போட்டியின் 2ம் நாளான இன்று இந்தியா தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடியது. புஜாரா அரைசதம் அடித்த நிலையில் 54 ரன்களில் வெளியேறினார். கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

பின்னர்சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால், இரட்டை சதத்தை கடந்து 243 ரன்னில் அவுட் ஆனார். ரஹானே 86 ரன்களிலும், சாஹா 12 ரன்களிலும் வெளியேறினர்.

ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. ஜடேஜா 60 ரன்னுடனும், யாதவ் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

இந்தியா அசுர வேகம் - சுருண்டது வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், வங்கதேச அணி 150 ரன்களில் சுருண்டது. 

இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக சாத்மன் இஸ்லாமும், இம்ருள் கயசும் களமிறங்கினர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அவர்கள் இருவரும் தலா 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அந்த அணியின் கேப்டன் மொனுமில் ஹக்யூ, பொறுப்பை உணர்ந்து நிதானமாக ஆடினார். மறுமுனையில் ஆடிக் கொண்டிருந்த முகமது மிதுனை, முகமது சமி அவுட்டாக்கினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய முஸ்பிகுர் ரகீம், கேப்டனுடன் சேர்ந்து பொறுமையாக ஆடினார். இந்த ஜோடி ஓரளவு ரன் சேர்த்த நிலையில், கேப்டன் மொனுமிலை அஸ்வின் வெளியேற்றினார். 43 ரன்கள் எடுத்த போது ரகீமும் ஆட்டமிழக்கவே, பின் வரிசை வீரர்கள் வரிசையாக அவுட்டாகி நடையைக் கட்டினர்.

இறுதியில் வங்கதேச அணி 150 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் மொனுமில்லின் விக்கெட்டைக் கைப்பற்றிய அஸ்வின், சொந்த மண்ணில் விரைவாக 250 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரனுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

இந்தியா- வங்கதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்..

இந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று தொடங்குகிறது.

கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணியின் விராட் கோலி, புஜாரா, ரஹானே, மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி உள்ளிட்டோர் தங்கள் திறமையைக் காட்டி வருகின்றனர்.

வங்கதேச அணியில் தமிம் இக்பால், ஷகிப் அல்-ஹசன் ஆகியோர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. டி20 முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது வங்கதேச அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தாலும், டெஸ்ட் போட்டியில் அவர்கள் தாக்குப்பிடிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரு அணிகள் இடையே நடைபெற்ற 6 டெஸ்ட் தொடர்களில் 5 முறை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஒரு முறை டிரா ஆகியுள்ளது. இரு அணிகளும் 9 டெஸ்டில் மோதியதில் 7-ல் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 2 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் இந்தியா, இந்த தொடரை முழுமையாகக் கைப்பற்றி நம்பர் 1 அந்தஸ்தை மேலும் வலுவாக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[…]

கால்பந்து
விளையாட்டு

இந்திய குடிசை வாழ் குழந்தைகளின் கால்பந்து கனவை நனவாக்கும் பிஃபா

இந்தியாவின் குடிசை வாழ் குழந்தைகளின் கால்பந்து கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) பவுண்டேஷன்.

விளையாட்டுகளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது கால்பந்து ஆகும். 200-க்கு மேற்பட்ட நாடுகளில் விரும்பி ஆடப்படுவதாகவும் கால்பந்துள்ளது. ஜாம்பவான்கள் பீலே, மாரடோனா, ரொனால்டோ, மெஸ்ஸி உள்ளிட்டோா் தங்கள் சிறப்பான ஆட்டத்தால் பிரசித்தி பெற்று விளங்குகின்றனா்.

முக்கியமான உலகக் கோப்பை போட்டிகள் உள்பட கால்பந்தின் அனைத்து அம்சங்களை தீா்மானித்து வருகிறது பிஃபா. உலகம் முழுவதும் கால்பந்து தனது சிறகை விரிக்க தேவையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் பிரபலப்படுத்த முயற்சி:

இந்தியாவில் தேசிய விளையாட்டான ஹாக்கியைக் காட்டிலும், கிரிக்கெட்டையே அதிகளவில் ரசிக்கின்றனா். சா்வதேச கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்களில் நிரம்பி வழியும் பாா்வையாளா் கூட்டமே இதற்கு உதாரணமாகும். எனினும் தற்போது கால்பந்தும் இந்தியாவில் வேரூன்றி வருகிறது. ஐ லீக், இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்ட பின் கால்பந்து மைதானங்களுக்கும் ரசிகா்கள் வருகை அதிகரித்துள்ளது.

ஸ்லம் சாக்கா் திட்டம்:

இந்தியாவில் சிறுவா், சிறுமியா் மத்தியில் கால்பந்தை பிரபலப்படுத்தவும், கொண்டு செல்லும் வகையிலும் ஸ்லம் சாக்கல் திட்டத்தை பிஃபா பவுண்டேஷன் செயல்படுத்தி வருகிறது. ஒடுக்கப்பட்ட, ஏழ்மை நிலையில் உள்ள குடிசை வாழ் சிறுவா், சிறுமியா் மத்தியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சிறுவா், சிறுமியருக்கு முதன்முதலில் கால்பந்தை உதைக்கச் செய்வதின் மூலம் சமூக முன்னேற்றம், அணி கட்டமைப்பு, ஒழுக்கம் போன்றவை வளா்க்கப்படுகிறது. இதன் மூலம் 70, 000 சிறுவா், சிறுமியா் பயன்பெற்று வருகின்றனா்.

இதன் மூலம் வார இறுதி நாள்களில் முழுமையான கால்பந்து பயிற்சி முகாம்கள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடா்பான செயலரங்கம், சமூக முன்னேற்ற நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

குறிப்பாக ஆதரவற்றோா், வீடிழந்தவா்கள், போதைப் பழக்கத்தில் இருந்து மீட்கப்பட்டோா், குடிசை வாழ் குழந்தைகள் ஆகியோா் இதில் பங்கேற்றுள்ளனா். மேலும் சிறுமிகள், காது கேளாத மாற்றுத் திறனாளிகள் போன்றவா்களுக்கும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த சிறப்பான திட்டத்தின் செயல்பாட்டுக்காக பிஃபா சிறப்பு விருதும் கிடைத்துள்ளது. வாழ்க்கையை மாற்றும் வலிமை கால்பந்துக்கு உள்ளது. இதில் உரிய பயிற்சி பெறும் சிறுவா், சிறுமியா் எதிா்கால மாநில, தேசிய கால்பந்து அணிகளில் இடம் பெற்று ஆடும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

இதே போல் கனவு காணுங்கள் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 10,000 போ் பயிற்சி பெறுகின்றனா். விளையாட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட இளம் வீரா்கள் வாழ்க்கையை மாற்றுகிறது இந்த திட்டம். இதில் கால்பந்து பயிற்சி, முடிவுகளை எடுத்தல், பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது, தகவல் தொடா்பை சிறப்பாக மேற்கொள்வது, பலமான நலமான உறவுகளை பேணுதல் போன்றவை இதில் கற்பிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

[…]

உலக காா் பந்தய சாம்பியன்
விளையாட்டு

உலக காா் பந்தயம்: கௌரவ் கில் பங்கேற்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள எப்ஐஏ உலக காா் பந்தய சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றில் இந்தியாவின் நம்பா் ஒன் வீரா் கௌரவ் கில் கலந்து கொள்கிறாா்.

அா்ஜுன விருது பெற்றவரும், மூன்று ஏபிஆா்சி காா் பந்தய சாம்பியனுமான கில் கடந்த ஆண்டும் உலக காா்பந்தய போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டாா். ஜே.கே டயா்ஸ் அணியைச் சோ்ந்த கில் மற்றும் சக வீரா் மெக்னீல் கிளேன் துருக்கியில் நடைபெற்ற போட்டியில் முதல் 5 இடங்களுக்குள் நுழைய தீவிர முயற்சி மேற்கொண்டனா். எனினும் காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறால், இறுதி 5 கி.மீ தூரத்தை அடைய முடியாமல் போனது.

இந்நிலையில் நவம்பா் 14 முதல் 17 வரை ஆஸி.யில் நடைபெறும் பந்தயத்தில் கலந்து கொள்கிறாா். இதுதொடா்பாக கில் கூறியதாவது:

நியூ சௌத்வேல்ஸ் பகுதியில் கடந்த சில நாள்களாக சிறப்பாக சோதனை ஓட்ட பயிற்சியை மேற்கொண்டேன். காரின் வடிவமைப்பில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய காா் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. இந்த பந்தயத்தில் சிறப்பாக செயல்படுவேன் என நம்பிக்கை தெரிவித்தாா்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

அணியின் வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - ரோகித் புகழாரம்

இந்திய அணி வீரர்கள் நேற்றையை போட்டியை போலவே சிறப்பாக விளையாடி வந்தால், அது கேப்டன் கோலிக்கும், அணி தேர்வாளர்களுக்கும் தலைவலியாக அமைந்து விடும் என ரோகித் சர்மா நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 3வது மற்றும் இறுதி 20 ஓவர் போட்டியில், 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. தீபக் சாஹர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிவம் துபே 3 விக்கெட்டுகளும், சாஹல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்நிலையில் நேற்றைய ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் தான் காரணம் எனக் கூறினார்.

அதேபோல் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்களும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்த ரோகித், தாங்கள் இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தால் அது அணியை தேர்வு செய்பவர்களுக்கு சிரமமாக அமைந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

மூன்றாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி - தீபக் சாஹர் ஹாட்ரிக்... 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாக்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. ராகுல் 52 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 62 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து ஆடிய வங்கதேச அணியின் முகமது நெய்ம் 81 ரன்களைக் குவித்தார். மிதுன் 27 ரன்கள் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.

அபாரமாக பந்துவீசிய சஹார் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதலாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் அவர் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இறுதியில் 144 ரன்களுக்கு வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதன்மூலம் 3போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

[…]

கைது
விளையாட்டு

கேபிஎல் சூதாட்ட வழக்கில் சர்வதேச தரகர் கைது

கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சூதாட்ட வழக்கில் சர்வதேச தரகர் சயாம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்று கர்நாடகாவில் கேபிஎல் எனப்படும் 20ஓவர்கள் கொண்ட கர்நாடக பிரீமியர் லீக் தொடர் 2009ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கேபிஎல் தொடரின் இறுதி போட்டியில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியை வீழ்த்தி, ஹூப்ளி டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதையடுத்து, பல்லாரி டஸ்கர்ஸ் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த  அணியின் கேப்டன் சிஎம் கௌதம் மற்றும் கிரிக்கெட் வீரர் அபர்காசி  கைது செய்யப்பட்டனர். தற்போது, இந்த வழக்கு தொடர்பாக, சர்வதேச அளவில் சூதாட்ட தரகராக செயல்பட்ட சயாம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

[…]

கிரிக்கெட் டெஸ்ட் போட்டி
விளையாட்டு

இந்தியா-வங்கதேசம் இடையே இன்று 3வது டி20 கிரிக்கெட் போட்டி.. தொடரை வெல்லப் போவது யார்?

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இறுதி மற்றும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.

அதுபோல வங்கதேச அணியும் தொடரை கைப்பற்றுவதற்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம். இதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

ராஜஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக்!

இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் உள்ள தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்தில் இன்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தும்பாவில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய முரளி விஜய்யும் ஜெகதீசனும் நன்கு விளையாடினார்கள். விஜய் 35 ரன்களும் ஜெகதீசன் 34 ரன்களும் எடுத்தார்கள். 3-வது வீரராகக் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல ஸ்கோரைப் பெற்றுத் தந்தார். தமிழக அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. 

[…]

துப்பாக்கி சுடும் போட்டி
விளையாட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதல்:சிங்கி யாதவ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஆசிய துப்பாக்கி சுடும் போட்டி மகளிா் 25 மீ. பிஸ்டல் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட சிங்கி யாதவ் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றாா்.

50 மீ. மகளிா் ரைபிள் பிரிவில் அஞ்சும் மொட்கில், தேஜஸ்வினி, காஜல், ஆகியோா் அடங்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

ஆடவா் 50 மீ. ரைபிள் பிரிவில் சுபாங்கா் பிரம்னிக், தருண் யாதவ், சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோா் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

சிங்கி யாதவ் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் 116 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தையே பெற்றாலும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாா். 25 மீ. பிஸ்டல் பிரிவில் ஏற்கெனவே ராணி சா்னோபட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

தகுதிச் சுற்றில் அபாரமாக செயல்பட்ட சிங்கியால், அதை இறுதிச் சுற்றில் கடைபிடிக்க இயலவில்லை.

ஜூனியா் மகளிா் 10 மீ. ஏா் பிஸ்டல் பிரிவில் பிரியா ராகவ், ஈஷா, ஆயுஷி ஆகியோா் தங்கம் வென்றனா். ஜூனியா் ஆடவா் டிராப் பிரிவில் விவான் கபூா்-பௌனீஷ் மெந்திரட்டா முறையே தங்கம், வெள்ளி வென்றனா்.

[…]

ரக்பி
விளையாட்டு

ரக்பி உலகக் கோப்பையை வென்று நாடுதிரும்பிய தெ.ஆ., அணிக்கு உற்சாக வரவேற்பு

ரக்பி உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய தென் ஆப்பிரிக்க அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜப்பானில் நடைபெற்ற ரக்பி உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.

சொந்த ஊர் திரும்பிய தென்னாப்பிரிக்க அணிக்கு, அந்நாட்டு மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெற்றிக் கோப்பையை ஏந்தியபடி பேருந்தின் மீது அமர்ந்து வந்த அணியினரை ஏராளமானோர் திரண்டு வாழ்த்தினர்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

வங்கதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி... இந்திய அணி அபார வெற்றி..!

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்தது.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா- சிகர் தவான் கூட்டணி வலுவான துவக்கம் தந்தது.

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அடித்து வான வேடிக்கை காட்டிய அவர், 43 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில், 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி, இலக்கை எட்டியது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இறுதிப்போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

இரவு டெஸ்ட் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கும் தோனி

இந்தியா - வங்கதேச அணிகள் இடையே இரவு, பகலாக நடைபெறவுள்ள கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், மகேந்திரசிங் தோனி வர்ணனையாளராக செயல்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. பகல் இரவாக போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதால், வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்போட்டியை ருசிகரமாக்கும் பொருட்டு, முன்னாள் கேப்டன்களை அழைத்து வர்ணனை செய்ய வைக்க ஒளிபரப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ அனுமதி கொடுத்து விட்டால், தோனியை வர்ணனையாளராக காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

[…]

சச்சின்
விளையாட்டு

4 இன்னிங்ஸ் கொண்டதாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியை மாற்ற வேண்டும்...

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை 4 இன்னிங்கிஸ் கொண்ட போட்டியாக நடத்தலாம் என இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் புதுமையான ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.

டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்யும் அணி  25 ஓவர்கள் ஆடிவிட்டு, எதிரணிக்கு 25 ஓவர்கள் பந்துவீச வேண்டும் என்றும், அதன் பின்பு முதல் இன்னிங்சில் எந்த நிலையில் முடிவடைந்ததோ, அதே நிலையில் இருந்து டாஸ் ஜெயித்த அணி இரண்டாவது இன்னிங்கஸை விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒருவேளை முதலில் பேட் செய்யும் அணி 25 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்துவிட்டால், இரண்டாவதாக விளையாடும் அணி தொடர்ச்சியாக 50 ஓவர்களை விளையாடலாம் எனவும் தெரிவித்தார்.

தற்போதுள்ள நடைமுறைகள் களத்தில் விளையாடும் இரு அணிக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதில்லை என்று தெரிவித்த சச்சின், இரு இன்னிங்ஸ் கொண்டு விளையாடும் போது அந்த நிலை மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

[…]

ஐபிஎல்
விளையாட்டு

ஐபிஎல்லில் நோ-பாலைக் கண்காணிக்க தனி நடுவர்

ஐபிஎல்லில் நோ பாலைக் கண்காணிக்க பிரத்யேகமாக ஒரு தனி நடுவரை நியமிக்க ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுவருகிறது. ஐபிஎல் போட்டிகளில், பிரதான நடுவர்கள் சில நேரங்களில் நோ பாலை சரியாக கண்டறிந்து தெரிவிப்பதில் கோட்டைவிட்டு விடுவதுண்டு.

இதனால் பல போட்டிகளின் முடிவுகள் தலைகீழாக மாறிய வரலாறுகளும் உண்டு. இந்நிலையில் இதற்கு முடிவு கட்ட எண்ணியுள்ள ஐபிஎல் நிர்வாகம் நோபாலைக் கண்காணிப்பதற்காக மட்டும் பிரத்யேகமாக ஒரு தனி நடுவரை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடுவர் மூன்றாவது நடுவராகவோ நான்காவது நடுவராகவோ கருதப்படமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஐபிஎல் தொடரில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

[…]

யுவராஜ்
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியில் தோனி நீடிப்பாரா..? யுவராஜ் சிங் பதில்

இந்திய கிரிக்கெட் அணியில் மகேந்திர சிங் தோனி நீடிப்பாரா என்ற கேள்விக்கு, அதனை நமது மிகச்சிறந்த தேர்வுக்குழுவினரிடம் தான் கேட்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பின், தற்காலிக ஓய்வில் இருக்கும் தோனி, தொடர்ந்து கிரிக்கெட்டில் நீடிப்பாரா, அல்லது ஓய்வுபெறுவாரா என்ற கேள்விகள் இறக்கைகட்டி பறக்கின்றன.

இந்தச்சூழலில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் சிங், தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

செய்தியாளர்களாகிய தாங்கள், நமது மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தேர்வாளர்களிடம்தான் இதுபற்றி கேட்க வேண்டும் என யுவராஜ் சிங் கூறியிருக்கிறார். நமது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவுக்கு, நல்ல தேர்வாளர்கள் தேவைப்படுவதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது சிக்கலான வேலை என்றாலும், நவீனத்துவ கிரிக்கெட் குறித்து அவர்களது யோசனை கேள்விக்குறிதான் என்றும் யுவராஜ் சிங் கூறியிருக்கிறார்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

வரலாற்றை மாற்றியது வங்கதேசம்..!

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லியில் நேற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் இந்திய வீரர்கள் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தனர். அதிகபட்சமாக ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்தார்.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணியின் மொகமது நயீம், சவுமியா சர்க்கார் ஆகியோர் விறுவிறுவென ரன்களை சேர்த்தனர். ரஹிம் அதிரடியாக விளையாடி 60 ரன்களைக் குவித்தார். 19.3 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 9 ரன்களில் ஆட்டமிழந்த ரோகித் சர்மா 20 ஓவர் போட்டிகளில் 2,452 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிராக டி20 போட்டியில், இதுவரை மோதிய 8 ஆட்டங்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்று இருந்தது. இந்நிலையில், நேற்றைய வெற்றியின் மூலம் இந்திய அணியின் வெற்றி நடைக்கு வங்கதேச அணி முற்று புள்ளி வைத்தது. 

[…]

கார்பந்தயம்
விளையாட்டு

உலக சாம்பியன் பட்டத்தை 6வது முறையாக கைப்பற்றி பிரிட்டன் கார்பந்தய வீரர் ஹாமில்டன் அசத்தல்

பார்முலா ஒன் உலக சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் 6வது முறையாக கைப்பற்றியுள்ளார்.

20 போட்டிகளைக் கொண்ட நடப்பு சீசனில் 19வது பார்முலா ஒன் கார்பந்தயம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் நேற்று நடைபெற்றது. முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்று அதிவேகத்தில் ஒருவரையொருவர் முந்திச் சென்றனர்.

308 கிலோ மீட்டர் வெற்றி இலக்கை எட்ட, மெர்சிடஸ் அணியின் ஹாமில்டனுக்கும், போட்டசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில் பின்லாந்து வீரரான போட்டஸ் ஒரு மணி 33 நிமிடம் 55 வினாடிகளில் முதலிடத்தில் வந்து சாம்பியன் பட்டத்தை வென்றார். ஹாமில்டன் இரண்டாம் இடத்தையும், வெர்ஸ்ட்டாப்பன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

நடப்பு சீசனில் அதிக புள்ளிகளைப் பெற்ற ஹாமில்டனுக்கு உலக சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டத்தை ஆறாவது முறையாக அவர் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

[…]

சைக்கிள்
விளையாட்டு

மோட்டார் சைக்கிள் கிரான்ட்ப்ரீக்ஸ் போட்டி: ஸ்பெயின் வீரர் வெற்றி

மலேசியாவில் நடைபெற்ற கிரான்ட்ப்ரீக்ஸ் மோட்டார் சைக்கிள் போட்டியில், ஸ்பெயின் வீரர் மேவரிக் வினாலஸ், சகநாட்டு வீரரும் உலக சாம்பியனுமான மார்க் மார்க்யுசை 3 விநாடிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதலாவதாக வந்தார்.

செபாங்கில் நடைபெற்ற இப்போட்டியில் மேவரிக்குக்கும், மார்க் மார்க்யுசுக்கும் இடையே போட்டி நிலவியது. முடிவில் அவரை 3 விநாடிகள் வித்தியாசத்தில் முந்தி, மேவரிக் முதலாவதாக வந்தார்.

மோட்டோ 2 போட்டியில், தென்னாப்பிரிக்காவின் பிராட் பின்டர் முதலாவதாக வந்தார். ஸ்பெயின் வீரரும், மார்க்யுஸ் சகோதரருமான அலெக்ஸ் 2ஆவதாக வந்தார். இதன்மூலம் மோட்டோ 2 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தனதாக்கினார்.

மோட்டோ 3 போட்டியில், இத்தாலியின் லோரன்ஜோ போர்டா முதலாவதாக வந்தார். 6ஆவது சுற்றில் அர்ஜென்டினாவின் கேப்ரியல் முன்னணியில் இருந்தபோது அவரது மோட்டார் சைக்கிளும், ஜப்பானின் தட்சுகி சுஜுகியின் மோட்டார் சைக்கிளும் விபத்தில் சிக்கின.

பின்னர் வந்த ஸ்பெயினின் அலோன்ஸோவின் மோட்டார் சைக்கிளும் விபத்தில் சிக்கியது.

[…]

கிரிக்கெட் டெஸ்ட் போட்டி
விளையாட்டு

இந்தியா-வங்கதேசம் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இரு அணிகளும் பங்கேற்கும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன. இதில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

வலைபயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால், ரோஹித் ஷர்மா இப்போட்டியில் விளையாடுவாரா என சந்தேகம் நிலவிய நிலையில், அவர் குணமடைந்து விட்டதாகவும் போட்டியில் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிராக இதுவரை 8 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி, அவை அனைத்திலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொடரும் முனைப்பில் இந்திய அணி இன்று களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[…]

ஒலிம்பிக்
விளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவுக்கு வெற்றி

ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான முதல்சுற்று ஆட்டத்தில் இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. குர்ஜித் 2 கோல்களும், லிலிமா, ஷர்மிளா, நவநீத் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

மற்றொரு போட்டியில் இந்திய ஆடவர் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணியை வெற்றிகொண்டது. மன்தீப் 2 கோல்களும், ஹர்மன்பிரீத், சுனில் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து எதிரணியை திணறடித்தனர்.

இதே அணிகள் பங்கேற்கும் இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணி வெற்றிபெற்றால், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

[…]

செஸ்
விளையாட்டு

இந்திய செஸ் வீரா்களுக்குசிறப்பு பயிற்சி முகாம்

இந்திய செஸ் வீரா்களுக்கு முன்னாள் உலக சாம்பியன் விளாடிமீா் கிராம்னிக் வரும் டிசம்பா் மாதம் ஸ்பெயினில் சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளாா்.

ஏற்கெனவே இந்திய கிராண்ட் மாஸ்டா்கள் பிரக்ஞானந்தா, டி.குகேஷ், ரவ்னக் சத்வானி, பி.இனியன், பிரீது குப்தா, சா்வதேச மாஸ்டா் லியோன் மென்டோன்கா உள்ளிட்ட 6 பேருக்கு ஜெனிவாவில் முதன்முறையாக பயிற்சி அளித்தாா் கிராம்னிக். விபத்தில் காயமடைந்த கிராண்ட் மாஸ்டா் அா்ஜுன் எரிகாசியும், ஸ்பெயின் முகாமில் கலந்து கொள்கிறாா்.

மைக்ரோசென்ஸ் நிறுவனம் சாா்பில் பல்வேறு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவா்களுக்கு பாராட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன் மேலாண் இயக்குநா் கைலாசநாதன் கூறுகையில்: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சென்னையிலும் இதே போன்ற சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதிலும் கிராம்னிக், விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் சில முன்னணி வீரா்கள் பங்கேற்று இந்திய வீரா்களுக்கு பயிற்சி அளிப்பா் என்றாா்.

விளாடிமீா் கிராம்னிக்கிடம் பெற்ற பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது. 18 வயதுக்குட்பட்டோா் உலகப் போட்டியை வெல்லவும் உதவியது என பிரக்ஞானந்தா உள்ளிட்டோா் தெரிவித்தனா்.

[…]

ஒலிம்பிக்
விளையாட்டு

இன்று ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச் சுற்று ஆட்டம் தொடக்கம்:பலமான அமெரிக்காவுடன் மகளிரணி மோதல்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான ஹாக்கி தகுதிச் சுற்று ஆட்டம் புவனேசுவரத்தில் வெள்ளி, சனி ஆகிய 2 நாள்கள் நடைபெறுகின்றன. இந்திய மகளிா் அணி பலம் வாய்ந்த அமெரிக்காவுடனும், ஆடவா் அணி வலுகுறைந்த ரஷியாவுடனும் மோதுகின்றன.

டோக்கியோவில் வரும் 2020-இல் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. கண்டங்கள் அளவில் நடைபெற்ற போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் நேரடியாக ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுகின்றன. இந்திய அணி கடந்த 2018 ஜகாா்த்தா ஆசியப் போட்டியில் தோல்வியடைந்ததால், நேரடி தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் மீண்டும் தகுதி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதன் தொடா்ச்சியாக ஆடவா், மகளிா் அணிகள் தலா 2 ஆட்டங்களில் ஆட வேண்டும். அதில் அதிக சராசரி அடிப்படையில் வெல்லும் அணி, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

அமெரிக்காவுடன் மகளிா் அணி மோதல்:

இந்திய மகளிா் அணி வலுவான அமெரிக்க அணியுடன் மோதுகிறது. இரு அணிகளும் மோதியதில் அமெரிக்காவே பெரும்பாலான ஆட்டங்களில் வென்றுள்ளது. எனினும் தற்போது கேப்டன் ராணி ராம்பால் தலைமையிலான மகளிா் அணி பலம் வாய்ந்ததாக உருவாகி உள்ளது. ராணி, டிராக்பிளிக்கா் குா்ஜித் கௌா், பாா்வா்ட் லால்ரேமிசியாமி, கோல்கீப்பா் சவீதா ஆகியோா் அபார பாா்மில் உள்ளனா்.

உள்ளூா் ரசிகா்கள் மத்தியில் ஆடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.

பயிற்சியாளா் மாரிஜின், கேப்டன் ராணி கூறியதாவது: அமெரிக்காவுடன் நடைபெறவுள்ள ஆட்டத்தை நம்பிக்கையுடன் எதிா்கொள்வோம். இந்த 2 ஆட்டங்களுக்காக தான் ஆண்டு முழுவதும் தீவிர பயிற்சி பெற்றோம். தகுதிச் சுற்றுக்கு சிறப்பாக தயாராகி உள்ளோம். முதல் நோக்கம் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவதாகும்.

ரஷியாவுடன் ஆடவா் அணி மோதல்:

உலகின் 5-ஆவது நிலையில் உள்ள இந்தியா, 22-ஆம் நிலையில் உள்ள ரஷியாவுடன் மோதுகிறது. எளிதாக இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெல்லும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எனினும் பயிற்சியாளா் கிரஹாம் ரீட் இந்த ஆட்டத்தை எளிதாக கருதவில்லை எனக் கூறியுள்ளாா். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் தற்காப்பு அபாரமாக உள்ளது. சுரேந்தா் குமாா், ஹா்மன்ப்ரீத் சிங், டிராக் பிளிக்கா் ரூபிந்தா் பால் சிங், லக்ரா ஆகியோா் வலு சோ்க்கின்றனா். மீட்பில்டில் கேப்டன் மன்ப்ரீத் சிங், ஹாா்திக் சிங், நீலகண்ட சா்மா, விவேக்சாகா் பிரசாத், பாா்வா்ட்கள் மந்தீப் சிங், அக்ஷதீப் சிங், சுனில், ரமண்தீப் சிங், லலித்குமாா், சிம்ரஞ்சித் சிங் ஆகியோா் எதிரணிக்கு சவால் தருவா்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

இந்திய அணியுடன் விளையாடவிருக்கும் வங்கதேச அணி வீரர்கள் டெல்லி வந்தடைந்தனர்

இந்திய அணியுடன் விளையாடவிருக்கும் வங்கதேச அணி நேற்று டெல்லி வந்து சேர்ந்தது. மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடுகின்றன.

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் வருகிற 3-ந்தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மக்முதுல்லா ரியாத் தலைமையிலான 15 பேர் கொண்ட வங்கதேச அணி வீரர்கள் நேற்று டெல்லி வந்தடைந்தனர்.

ஷகிப் அல்-ஹசன் இல்லாததை பின்னடைவாக நினைக்காமல் கூடுதல் உத்வேகத்துடன் விளையாடப் போவதாக ரியாத் தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிரான தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்றாலும், ஒருங்கிணைந்து விளையாடப் போவதாக அவர் மேலும் கூறினார்.

[…]

ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டி
விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியில் கொல்கத்தா வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்துப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் 6-வது ஐ.எஸ்.எல். தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. டெல்லி நேரு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தின் முதல் பாதியில் சென்னை, கொல்கத்தா இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.

48வது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் டேவிட் வில்லியம்ஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இது ஐ.எஸ்.எல். தொடர்களில் அடிக்கப்பட்ட ஆயிரமாவது கோலாகும்.

அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

பிங் நிற பந்தில் விளையாட உள்ள இந்தியா, வங்கதேச அணிகள்

கொல்கத்தாவில் நடைபெறும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பகல் - இரவு போட்டியாக நடத்துவதற்கு வங்கதேச கிரிக்கெட் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவம்பர் 12ம் தேதி நடைபெறும் டெஸ்ட் போட்டியை பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக நடத்துவதற்கு வங்கதேச கிரிக்கெட் சங்கத்திடம் பிசிசிஐ சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.

பிசிசிஐயின் பரிந்துரை கடிதத்தை பெற்றுக்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணி, போட்டிக்கு குறைவான நாட்களே உள்ளதால், பிங்க் நிற பந்தில் வங்கதேச வீரர்கள் பயிற்சி பெற போதிய கால அவகாசம் கிடைக்காது என்று கருதி, அது குறித்து வங்கதேச வீரர்களுடன் ஆலோசித்து வந்தது.

இந்த நிலையில் இந்தியாவுடன் பகல் - இரவு டெஸ்ட் போட்டி விளையாடுவதற்கு வங்கதேச கிரிக்கெட் சங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

மேட்ச் பிக்சிங் புகாரில் சகிப் அல் ஹசன் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை

இந்தியா -வங்கதேசம் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் சகிப் அல் ஹசனுக்கு மேட்ச் பிக்சிங் புகாரில் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

2018ஆம் ஆண்டு இலங்கை, ஜிம்பாப்வே உடனான முத்தரப்பு தொடரின் போதும், அந்த ஆண்டு நடந்த ஐபிஎல்லின் போதும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட வலியுறுத்தி தரகர்கள் சிலர் சகிப் அல் ஹசனை அணுகியதாக எழுந்த விவகாரத்தை ஐசிசி விசாரணை செய்து வந்தது.

இந்நிலையில், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்றாலும் கூட, தரகர்கள் யாரேனும் இதுபோல அணுகினால் அதை ஐசிசிக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறையில் உள்ள விதிமுறைகளை சகிப் அல் ஹசன் பின்பற்றவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.

இதனால் சகிப் அல் ஹசன் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓராண்டு இடை நீக்கம் செய்யப்படுவதாகவும், மொத்தம் இரண்டு ஆண்டுகள் அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் தடைவிதித்துள்ளது.

[…]

கிரிக்கெட் டெஸ்ட் போட்டி
விளையாட்டு

ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி: அனில் கும்ப்ளே பெருமிதம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் 1 இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரையும் முழுமையாக வென்றது இந்தியா. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகள் பட்டியலில் 240 புள்ளிகளுடன் இந்தியா எட்ட முடியாத முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளது. 5 டெஸ்ட் ஆட்டங்களில் 240 புள்ளிகளை குவித்துள்ளது இந்தியா. நியூஸிலாந்து, இலங்கை அணிகள் 60 புள்ளிகளுடன் 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளன. அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக வங்கதேசத்துடன் 2 டெஸ்ட் தொடரில் ஆடுகிறது இந்தியா.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முன்னணியில் இருப்பது குறித்து முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே ஒரு பேட்டியில் கூறியதாவது:

கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தும் என்றே நம்புகிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு நான் பயிற்சியாளராக இருந்தபோதே இந்த அணியால் கிரிக்கெட் உலகை ஆள முடியும் என்று தெரிவித்திருந்தேன். அதைத்தான் தற்போது இந்திய அணி செய்துள்ளது. அணியில் விளையாடும் 11 வீரர்கள் மட்டுமல்லாமல், இதர வீரர்களும் மிகவும் திறமையானவர்களாக உள்ளார்கள். யார் அணிக்குள் உள்ளே வந்தாலும் சிறப்பாக விளையாடுகிறார்கள். ஷபாஸ் நதீமின் அறிமுகத்தைப் பாருங்கள். கடைசி நேரத்தில் கிடைத்த வாய்ப்பில் அணிக்காக அருமையாகப் பங்காற்றியுள்ளார். கூடுதலாக உள்ள வீரர்களிடமிருந்து இதுதான் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இது அணிக்கு மிகவும் நல்லது. அதனால் தான் இந்த அணி உள்ளூரில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் ஆதிக்கம் செலுத்தும் என நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

[…]

கிரிக்கெட் டெஸ்ட் போட்டி
விளையாட்டு

அதிகரித்துள்ள காற்று மாசு: தில்லி டி20 ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா?

தில்லி மக்கள் எதிா்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னையாக காற்று மாசு உள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடித்ததால் தில்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையில் தில்லியில் இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டி20 ஆட்டம் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

எனினும் வரும் ஞாயிறன்று தில்லியில் டி20 ஆட்டம் நிச்சயம் நடைபெறும் என்று பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிசிசிஐ சார்பில் பேசிய நிர்வாக அதிகாரி கூறியதாவது: தில்லி டி20-யை மாற்றும் திட்டம் எதுவும் கிடையாது. தீபாவளி சமயத்தில் தில்லியில் காற்றுமாசு அதிகரித்திருந்தாலும் அடுத்தச் சில நாள்களில் நிலைமை மாறும் என நம்பிக்கையாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

அடுத்த மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 3 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது.  

தில்லி மக்கள் எதிா்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னையாக காற்று மாசு உள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடித்ததால் தில்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையில் தில்லியில் இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டி20 ஆட்டம் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

எனினும் வரும் ஞாயிறன்று தில்லியில் டி20 ஆட்டம் நிச்சயம் நடைபெறும் என்று பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிசிசிஐ சார்பில் பேசிய நிர்வாக அதிகாரி கூறியதாவது: தில்லி டி20-யை மாற்றும் திட்டம் எதுவும் கிடையாது. தீபாவளி சமயத்தில் தில்லியில் காற்றுமாசு அதிகரித்திருந்தாலும் அடுத்தச் சில நாள்களில் நிலைமை மாறும் என நம்பிக்கையாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

அடுத்த மாதம், இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் வங்கதேச அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 3 அன்று தொடங்கி நவம்பர் 10 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவுபெறுகிறது.  

 

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

சிறார்களுக்கு கிரிக்கெட் அகாடமியை தொடங்கினார் ரோஹித் ஷர்மா

 

இந்திய கிரிக்கெட் அணி அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, சிறார்களுக்காக கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம், புனேவில் அவர் தனது கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறார்களுடன் கலந்துரையாடிய அவர், அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ஷர்மாவிடம், வங்கதேச அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஷர்மா, அணி வீரர்கள் தற்போதுதான் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 31ம் தேதி வீரர்கள் அனைவரும் சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்றில் 252 ரன்கள் எடுத்த தமிழக அணி

தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற கர்நாடக அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முரளி விஜய் ரன் எடுக்காமலும் அஸ்வின் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்துள்ளார்கள். ஆனால் அபினவ் முகுந்தின் அபார ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது தமிழக அணி. 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. ஆனால் அடுத்தப் பாதி தமிழக அணிக்குச் சாதகமாக அமையவில்லை. அபினவ் முகுந்த் 85 ரன்களிலும் பாபா அபரஜித் 66 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு தமிழக அணியால் அதிக ரன்களை எடுக்க முடியவில்லை. பதிலாக, தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால் பின்னடைவு ஏற்பட்டது.

விஜய் சங்கர் 38, ஷாருக் கான் 27 ரன்களும் எடுத்து ஓரளவு உதவினாலும் தமிழக அணியால் பெரிய ஸ்கோரை எட்டமுடியாமல் போனது. ஒரு கட்டத்தில் தமிழக அணி, 38-வது ஓவரின்போது 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இதனால் தமிழக அணி 300 ரன்களைத் தொட முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 66 ரன்களில் பாபா அபரஜித் ரன் அவுட் ஆனதால் அது பெரிய சிக்கலாக அமைந்தது. கடைசியில் தமிழக அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் மிதுன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தார். கர்நாடக அணித் தரப்பில் மிதுன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

அபுதாபி டி10 கிரிக்கெட்டில் யுவராஜ் சிங்

அபுதாபியில் நடைபெறவுள்ள டி10 கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் பங்கேற்று விளையாடவுள்ளார்.
மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக அவர் விளையாடுகிறார். நவம்பர் 14-ஆம் தேதி டி10 கிரிக்கெட் அபுதாபியில் நடைபெறவுள்ளது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்புதல் அளித்தது.
2007 டி20 உலகக் கோப்பை தொடர், 2011 உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றில் யுவராஜ் சிங் இந்திய அணியில் முக்கியப் பங்கு வகித்தார். இரு தொடரிலும் இந்தியா சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் சிங் ஓய்வு பெற்ற போது, வெளிநாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.
10 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்றார் யுவராஜ்.

[…]

கங்குலி
விளையாட்டு

தோனி ஓய்வு எப்போது? - BCCI தலைவர் கங்குலி கருத்து

பி.சி.சி.ஐ.,யில் ஊழலுக்கு இடமில்லை என அதன் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலி தெரிவித்துள்ளார்.

ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் வெடித்த சூதாட்ட சர்ச்சை காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க வினோத் ராய் தலைமையில் கிரிக்கெட் நிர்வாகக்குழு அமைக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் உள்ள மாநில கிரிக்கெட் சங்கங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. புதிய விதிகளின் படி அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பி.சி.சி.ஐ., தலைவராக, இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பி.சி.சி.ஐ.,யின் 39வது தலைவராக கங்குலி முறைப்படி பதவி ஏற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நம்பகத்தன்மையில் சமரசம் கிடையாது என்றார். இந்திய அணியை வழிநடத்தியது போல, பி.சி.சி.ஐ.,யை சிறப்பாக நிர்வகிப்பேன் என்று அவர் குறிப்பிட்டார்.

தோனியின் எதிர்காலம் குறித்து இதுவரை அவரிடம் பேசவில்லை என்று கூறிய கங்கலி, சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற்று விட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

3வது டெஸ்ட் போட்டியை காண வந்த கேப்டன் கூல்

ராஞ்சியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண வந்த தோனியின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்டில் உள்ள ராஞ்சியில் இந்திய - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தை பார்பதற்காக ஜே.எஸ்.சி.ஏ  மைதானத்திற்கு தனது நிசான் ஜோங்கா எஸ்.யூ.வி காரில்  தோனி வந்திருந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

வீரர்களின் அறையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதீமுடன் பேசிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் வீரர்கள் அறையில் தோனியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற உலககோப்பை போட்டிக்கு பின்பு விடுப்பில் இருந்த வரும் தோனி நேற்று திடீரென மைதானத்திற்கு வந்தது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்க்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களில் சுருண்டது.

335 ரன்கள் பின் தங்கிய நிலையில் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி நேற்று 133 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், இன்னிங்க்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று,தொடரையும் 3க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் நாயகன் விருதை ரோகித்சர்மா தட்டி சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் புள்ளிகளின் பட்டியலில் 240 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது. 60 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2வது இடத்தில் உள்ளது.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா வீழ்ந்தது.. இந்தியா அசத்தல் சாதனை..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3க்கு0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்தது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் தொடரின் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்திருந்த போது, இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா இரட்டை சதமும், ரகானே சதமும் விளாசினர்.

பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவின் அசுர பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 162 ரன்களில் சுருண்டது. 335 ரன்கள் பின் தங்கி அந்த அணி பாலோ ஆன் ஆகவே, இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. முகமது சமி, உமேஷ் யாதவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், தென்னாப்பிரிக்காவின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

தியூனிஸ் டி ப்ரூயின், டேன் பைட், லிண்டே போன்ற பின்வரிசை வீரர்கள் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்தனர். நேற்று மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. இன்று போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் நோர்ஜே, லிண்டே ஆகியோர் ஆட்டமிழக்கவே தென்னாப்பிரிக்கா அணி 133 ரன்களில் சுருண்டது.

அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட் வீழ்த்தினார். உமேஷ் யாதவ், நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம், இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. மேலும் 3க்கு0 என்ற கணக்கில், டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றி சாதனை படைத்தது.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

ராஞ்சி கிரிக்கெட் டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் இந்திய அணி..!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ராஞ்சியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.

தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் முதல் இன்னிங்க்சில் அந்த அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோஆன் ஆனது.

இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணி நேற்று ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. ஷமி, உமேஷ் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் எதிரணி வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினர்.

போட்டி முடிய 2 நாட்கள் உள்ள நிலையில், இந்திய அணி பெற இன்னும் 2 விக்கெட் மட்டுமே எடுக்க வேண்டும் என்பதால், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்யும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. 

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

இந்தியா- வங்கதேசம் போட்டித் தொடருக்கு சிக்கல்

வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கும், அந்நாட்டு வீரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால், இந்தியாவுக்கு எதிரான  போட்டித் தொடரில் அவ்வணி பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

வங்கதேச பிரிமீயர் லீக்கில் விளையாடும் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஒரு லெக் ஸ்பின்னரை அணியில் வைத்திருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய நிபந்தனைகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளதால் அந்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் கிரிக்கெட் வாரியத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், தங்களது 11 அம்ச கோரிக்கைகளை கிரிக்கெட் வாரியம் சரிசெய்ய முயற்சிக்கவில்லை என்றால் தாங்கள் போட்டிகளை புறக்கணிக்கவுள்ளதாக வங்கதேச டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இதனால், அடுத்த மாதம் இந்தியாவுக்கு எதிராக அந்த அணி விளையாடவுள்ள டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பௌலர்கள் அசத்தல்..! தெ.ஆ., ஃபாலோ ஆன்

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களில் சுருண்டது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்திருந்த போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அணித் தலைவர் விராட் கோலி அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசினார். ரகானே சதம் அடித்தார்.

பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்திலும் அந்த அணி தடுமாறியது. ஜுபைர் ஹம்சா மட்டும் பொறுமையுடன் ஆடி அரை சதம் கடந்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. பவுமா, லிண்டே ஆகியோர் ஓரளவு ரன் சேர்த்தனர். இறுதியில் அந்த அணி 162 ரன்களில் ஆல் அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது சமி, நதீம், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 335 ரன்கள் பின் தங்கிய தென்னாப்பிரிக்கா அணி பாலோ ஆன் ஆனது. இதை அடுத்து இரண்டாவது இன்னிங்சை அந்த அணி விளையாடி வருகிறது. 

[…]

மிஸ் வீல்சேர் அழகி போட்டி
விளையாட்டு

மிஸ் வீல்சேர் அழகி போட்டியில் பார்வையாளர்களை கவர்ந்த போட்டியாளர்கள்

உடல் ஊனமுற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மெக்சிகோவில் நடைபெற்ற மிஸ் வீல்சேர் அழகி போட்டியில் பங்கேற்ற பெண்கள் நடனமாடி அசத்தினர்.

மெக்சிகோவில் உள்ள வெராகுரூஸ் மாநிலத்தின் கோட்ஸ்கோல்கோஸ் (Coatzcoalcos) நகரில் உடல் ஊனமுற்ற பெண்களுக்கான மிஸ் வீல்சேர்அழகி போட்டி முதன் முதலாக நடத்தப்பட்டது.

அதில் பங்கேற்ற பெண்கள் வீல்சேரில் அமர்ந்தபடி பாரம்பரிய மற்றும் நவீன உடைகள் அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இதில் அழகி பட்டம் வென்ற கரென் ரோஸ் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மிஸ் வீல்சேர் உலக அழகி போட்டியில் மெக்சிகோ சார்பில் பங்கேற்க உள்ளார்.

[…]

ரோகித் சர்மா, இரட்டை சதம்
விளையாட்டு

ரோகித் சர்மா இரட்டை சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, இரட்டை சதம் விளாசினார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணியின் தொடக்கம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. மயங்க் அகர்வால், புஜாரா, கேப்டன் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ரகானேவும், ரோகித் சர்மாவும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் ரகானே சதம் அடித்தார்.

115 ரன்கள் எடுத்து ரகானே அவுட்டான நிலையில், ரவீந்திர ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். அதிரடி காட்டிய ரோகித் சர்மா, 249 பந்துகளில் தனது முதலாவது இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

212 ரன்கள் எடுத்திருந்த போது அவர் ஆட்டமிழந்தார். பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி, இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 370 ரன்கள் எடுத்திருந்தது.

[…]

புரோ கபடிப் போட்டி
விளையாட்டு

புரோ கபடிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன்

புரோ கபடிப் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த தொடரில் 12 அணிகள் இடம்பெற்று பல்வேறு இடங்களில் விளையாடி வந்தன. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும், தபாங் டெல்லி அணியும் மோதின. விறுவிறுப்பான இந்தப் போட்டியின் முதல்பாதியில் இரு அணிகளும் 17-17 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தன.

இதனால் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியது. டெல்லி அணியின் நவீன்குமார் கடுமையாகப் போராடி 18 புள்ளிகள் எடுத்தும், அந்த அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. இறுதியில் 39-34 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பெங்கால் அணிக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.

[…]

கிரிக்கெட் டெஸ்ட் போட்டி
விளையாட்டு

தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்யில் ரோகித் சதம் அடித்து அசத்தல்

ராஞ்சியில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் இடையேயான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்தார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. மயங்க் அகர்வால் 10 ரன்னிலும், புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலியும் 12 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து 4ஆவது விக்கெட்டுக்கு ரோஹித் ஷர்மாவும், ரஹானேவும் கைகோர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்தனர். அதிரடியாக விளையாடிய ரோஹித் 130 பந்துகளில் சதம் விளாசினார்.

இந்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தின் 6ஆவது சதமாகும். மேலும் இத்தொடரில் அவரது 3ஆவது சதமாகும்.

இப்போட்டியில் அடித்த சிக்சர்களுடன் சேர்த்து ஒரே டெஸ்ட் தொடரில் 17 சிக்சர்களை ரோஹித் விளாசினார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்களை விளாசியவர் என்ற உலக சாதனையை படைத்தார். கவாஸ்கருக்கு அடுத்து டெஸ்ட் தொடரில் 3 சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

ஸ்கோர் 224ஆக இருந்தபோது மோசமான வெளிச்சத்தால் போட்டி நிறுத்தப்பட்டது. நிலைமை சீராகாததால் முதல்நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. அப்போது ரோஹித் 117 ரன்னுடனும், ரஹானே 83 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

[…]

கிரிக்கெட் டெஸ்ட் போட்டி
விளையாட்டு

ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட்...

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, அடுத்து புனேவில் நடந்த 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியதுடன் தொடரையும் கைப்பற்றியது.

முதல் டெஸ்டில் மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஆகியோரும், இரண்டாவது டெஸ்டில் கோலியும் அபாரமாக விளையாடினர். அஸ்வின், ஷமி, ஜடேஜா, உமேஷ் ஆகியோரின் பந்துவீச்சும் எதிரணியைத் திணறடித்து வருகிறது. இந் நிலையில், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று காலை தொடங்குகிறது.

அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் இருப்பதால் ஹாட்ரிக் வெற்றியுடன் தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே சமயம் ஆறுதல் வெற்றி அல்லது குறைந்தபட்சம் டிரா செய்ய தென் ஆப்ரிக்க அணியும் வரிந்துகட்ட வாய்ப்புள்ளது.

ஸ்டெயின், அம்லா, டி வில்லியர்ஸ் போன்ற வீரர்கள் இல்லாதது அந்த அணிக்கு வெற்றிடமாக கருதப்படுகிறது. டீன் எல்கர், டி காக், பவுமா, டு பிளெசிஸ் ஆகியோர் கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

[…]

சர்பராஸ் அகமது
விளையாட்டு

பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் சர்பராஸ் அகமது நீக்கம்

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி, 20 ஓவர் அணி கேப்டன் பதவிகளிலிருந்து சர்பராஸ் அகமது  திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் விரைவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். ஒருநாள், டெஸ்ட், 20 ஓவர் அணிகளுக்கு சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்தார். இந்நிலையில் சர்பராஸுக்கு பதிலாக பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு அஸார் அலியும், 20 ஓவர் அணிக்கு பாபர் ஆஸமும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணி 2020ம் ஆண்டு ஜூலை மாதம்தான் அடுத்த ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. ஆதலால் ஒருநாள் அணி கேப்டன் குறித்து முடிவு செய்யப்படவில்லை. சர்பராஸ் அகமது தலைமையில் பாகிஸ்தான் 2017ம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

20 ஓவர் போட்டி ரேங்கிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் வந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் படுதோல்வியை சந்தித்தது. சர்பராஸ் அகமது மோசமான பார்மில் உள்ளார். இதையடுத்து இந்நடவடிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்திருப்பதாக தெரிகிறது.

[…]

கங்குலி
விளையாட்டு

பாகிஸ்தானுடன் மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டி?

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே மீண்டும் போட்டிகள் நடத்துவதற்கு இரண்டு நாடுகளின் அரசுகளும் அனுமதியளிக்க வேண்டியது அவசியம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கங்குலி, வரும் 23ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி, பாகிஸ்தானில் கடந்த 2004ம் ஆண்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கங்குலியிடம், இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் எப்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும்தான் இதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்றார். பிரதமர் மோடியிடமும், இம்ரான் கானிடமும்தான் இக்கேள்வியை கேட்க வேண்டும் என்றும் கங்குலி பதிலளித்தார்.

[…]

கபடி
விளையாட்டு

புரோ கபடிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு பெங்கால் வாரியர்ஸ் முன்னேற்றம்

புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு பெங்கால் வாரியர்ஸ் அணி முன்னேறியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த தொடரில் 12 அணிகள் இடம்பெற்று பல்வேறு இடங்களில் விளையாடி வந்தன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோதின.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதின.

தொடக்கத்தில் இருந்தே பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் அந்த அணி முதல் பாதியில் 18-12 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் யு மும்பா அணி வீரர்கள் கடுமையாகப் போராடிய போதும், இறுதியில் 37-35 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் அணி த்ரில் வெற்றி பெற்றது. வரும் சனிக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் தபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

ஐ.சி.சி. முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு

கூடுதலாக கிரிக்கெட் தொடர்களை நடத்த ஐ.சி.சி.எடுத்துள்ள முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி.யின் ஆலோசனை கூட்டம் துபாயில் 6 நாட்கள் நடந்தது. இதில், கூடுதலாக தொடர்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி அடுத்த 8 ஆண்டு காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.சி. தொடர் நடைபெறும். இரண்டு 50 ஓவர் உலக கோப்பை, நான்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டி இவற்றுடன் கூடுதலாக மேலும் இரு ஐ.சி.சி. தொடர்களை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உலக அளவிலான போட்டியை நடத்தும் போது டி.வி. ஒளிபரப்பு உரிமம் மூலம் ஐ.சி.சி.க்கு பெரும் வருவாய் கிடைக்கும். அதை இந்திய கிரிக்கெட் வாரியம் பகிர்ந்து தான் பெற முடியும். ஆனால் இரு நாட்டு தொடர் என்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நிறைய வருமானம் கிடைக்கும்.

இதனால் “ஐ.சி.சி.யின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பி.சி.சி.ஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் புதிய தலைவரே இறுதி முடிவை எடுப்பார்’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல்அதிகாரி ராகுல் ஜோரி ஐ.சி.சி.க்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

[…]

சாம்பியன்ஷிப்
விளையாட்டு

பார்முலா இ சாம்பியன்ஷிப் கார் பந்தயத்துக்கு முந்தைய சோதனை ஓட்டம்

பார்முலா இ சாம்பியன்ஷிப் கார் பந்தயத்துக்கு முந்தைய சோதனை ஓட்டம் ஸ்பெயின் நாட்டின் வலென்சியாவில் நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கான கார்பந்தய தொடரின் ரேஸ் ஒன் போட்டிகள் சவுதி அரேபியாவின் திரியா நகரத்தில் நவம்பவர் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த சீசனில் டிஏஜி ஹியூயர் போர்ஷே எஃப்இ((TAG Heuer Porsche FE)) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூ((Mercedes-Benz EQ)) உள்ளிட்ட கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் போட்டிக்கு முந்தைய சோதனை ஓட்டத்தில் என்விஷன் விர்ஜின் ரேசிங்கின் சாம் போர் 1: 15.570 என்ற வேகத்தில் சீறிபாய்ந்து முதலிடத்தை பிடித்தார்.

பி.எம்.டபிள்யூ ஐ ஆண்ட்ரெட்டி மோட்டார்ஸ்போர்ட்டின் மேக்ஸ் குந்தர், டி.எஸ். டெச்சீட்டாவின் அன்டோனியோ பெலிக்ஸ் டா கோஸ்டா முறையே அடுத்தடுத்த 2 இடங்களை கைப்பற்றினர். நடப்பு சாம்பியன் ஜீன்-எரிக் வெர்க்னே 5 ஆவது இடத்தை பிடித்தார்.

[…]

ஐஆர்சிடிசி
வர்த்தகம்

முதல் நாளிலேயே ஐஆர்சிடிசி பங்கு விலை 127 சதவீதம் அதிகரிப்பு

ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகள் விலை, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி, ரயில் டிக்கெட் விற்பனை, குடிநீர் கேன் விற்பனை, கேட்டரிங் போன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.

மத்திய அரசின் நிதி திரட்டும் நடவடிக்கையின் கீழ், 650 கோடி ரூபாய்க்கு அந்த நிறுவனத்தின் 13 சதவீத பங்குகள் விற்கப்பட்டன. ஒரு பங்கு விலை 320 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பங்குகளை வாங்க முதலீட்டாளர்களிடம் இருந்து 112 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்தன. 

முதலீட்டாளர்களிடம் அமோக வரவேற்பு இருந்ததால் பட்டியலிடப்படும் நாளிலேயே பங்கு விலை கணிசமாக உயரும் என்று நிபுணர்கள் கணித்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று பங்குச்சந்தையில் ஐஆர்சிடிசி பங்குகள் பட்டியலிடப்பட்டன.  வர்த்தக நேர முடிவில் பங்கு விலை 127 சதவீதம் உயர்ந்து 727 ரூபாயாக அதிகரித்தது.

[…]

கங்குலி
விளையாட்டு

பிசிசிஐ மீதான தவறான பிம்பத்தைச் சரிசெய்ய சிறப்பான வாய்ப்பு - கங்குலி

பிசிசிஐ மீதுள்ள தவறான பிம்பத்தை மாற்றுவதற்கு தனக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருப்பதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ மீதான ஊழல் புகார்கள் காரணமாக, அதை நிர்வகிக்க உச்சநீதிமன்றம் குழு அமைத்தது. அந்தக் குழு தான், கடந்த 33 மாதங்களாக பிசிசிஐயின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், அக்டோபர் 23ஆம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் என நிர்வாகக் குழு அறிவித்தது. அதற்கான பணிகள் கடந்த மே மாதமே தொடங்கின.

ஒவ்வொரு மாநிலங்களின் கிரிக்கெட் சங்கங்களும் வேட்பாளர்களை முன்மொழிந்தன. அவர்களில், பெரும்பாலானோர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியை, பிசிசிஐ தலைவராக்குவதற்கு ஆதரவு அளித்தனர்.

மும்பையில் நேற்று நடந்த கூட்டத்தில் பிசிசிஐயின் அடுத்த தலைவராக சவுரவ் கங்குலி ஒருமனதாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. 

இதை அடுத்து, இன்று அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் பிசிசிஐயின் அடுத்த தலைவர் கங்குலி தான் என்பது உறுதியாகியுள்ள போதும் 23ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, கடந்த 3 ஆண்டுகளாக பிசிசிஐயின் நிலைமை சிறப்பாக இல்லை என்றும், அதை மாற்றி அமைக்க தனக்கு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

உள்ளூர் கிரிக்கெட்டுக்கு நிதி ஒதுக்கி அதை மேம்படுத்துவது தான் தமது முதல் பணி என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஒரு போதும் ஆசைப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட கங்குலி, இன்னும் சில மாதங்களில் அனைத்தையும் சரிசெய்து, பிசிசிஐயை இயல்பு நிலைக்கு கொண்டு வரப் போவதாக உறுதி அளித்துள்ளார். 

[…]

கிரிக்கெட் டெஸ்ட் போட்டி
விளையாட்டு

தொடரைக் கைப்பற்றியது இந்தியா..!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றியது.

புனேவில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து, டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 275 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

326 ரன்கள் பின் தங்கிய தென்னாப்பிரிக்கா அணி பாலோ ஆன் ஆனது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள், இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறினர்.

இறுதியில் 189 ரன்களில் தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட்டானது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2க்கு0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

[…]

மஞ்சுராணி
விளையாட்டு

உலக பெண்கள் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணிக்கு வெள்ளி...

உலக பெண்கள் குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சுராணி தோல்வி அடைந்ததால் வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.

ரஷ்யாவில் நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவு போட்டியில் அந்நாட்டு வீராங்கனையான ஏகடெரினா பால்ட்சிவாவை, ஹரியானாவை சேரந்த மஞ்சுராணி எதிர்கொண்டார். இப்போட்டியில் ஒன்றுக்கு 4 என்ற புள்ளிக் கணக்கில் மஞ்சுராணி தோல்வியடைந்தார்.

உலக குத்துச்சண்டை தொடரில் 6 முறை சாம்பியன்பட்டம் வென்ற மேரிகோமுக்குப் பின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையை மஞ்சுராணி பெற்றுள்ளார்.

[…]

சாதனை
விளையாட்டு

ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்து வரலாறு படைத்தது இந்தியா

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்து, டிக்ளேர் ஆனது. கேப்டன் விராட் கோலி இரட்டை சதமும், தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதமும் அடித்தனர்.

பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முகமது சமி மற்றும் உமேஷ் யாதவின் அபார பந்துவீச்சில், தென்னாப்பிரிக்காவின் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் பாப் டூ பிளெஸ்ஸிஸ் நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் அவுட்டானதைத் தொடர்ந்து மஹாராஜ் மற்றும் பிலாண்டர் ((philander)) ஆகியோர் பொறுப்புடன் ஆடி, தென்னாப்பிரிக்காவை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர். மகாராஜ் அரைசதம் கடந்தார்.

இறுதியில் அந்த அணி 275 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 326 ரன்கள் பின் தங்கிய தென்னாப்பிரிக்கா அணி பாலோ ஆன் ஆனது.

போட்டியின் நான்காவது நாளான இன்று, தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆனால் இந்த இன்னிங்சிலும் இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 189 ரன்களில் தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட்டானது.

இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2க்கு0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 

இந்த வெற்றியானது, இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து பெற்ற பதினோறாவது வெற்றி ஆகும். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் உலகச் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. இதில் 9 வெற்றியை விராட் கோலி தலைமையிலும், 2 வெற்றியை மகேந்திரசிங் தோனி தலைமையிலும் இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி 2 முறை, தொடர்ந்து 10 டெஸ்ட் போட்டிகளை சொந்த மண்ணில் வென்றிருந்ததே வரலாற்றுச் சாதனையாக இருந்தது. 

[…]

கிரிக்கெட் டெஸ்ட் போட்டி
விளையாட்டு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் விளாசி அசத்தல்.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. புனேவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரண்டாம் நாளான நேற்று 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்தது.

கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இரட்டை சதங்களை அடித்துள்ள சச்சின், ஷேவாக் ஆகியோரின் சாதனைகளை முறியடித்த கோலி 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

ஜடேஜா 91 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. கோலி 254 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி வீரர்கள் எல்கர் 6 ரன்னிலும், மார்கிராம் ரன் எதுவும் எடுக்காமலும், பவுமா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 36 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள நிலையில் மூன்றாம் நாளாக இன்றைய ஆட்டம் நடைபெறுகிறது.

[…]

கிரிக்கெட் டெஸ்ட் போட்டி
விளையாட்டு

முதல்நாள் ஆட்டத்தில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதை அடுத்து ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.

கடந்த ஆட்டத்தில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்திய ரோகித் சர்மா இந்த போட்டியில் 14 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இதை அடுத்து, மயங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். அரை சதம் கடந்த புஜாரா, ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அவருடன் சேர்ந்து பொறுமையாக ஆடிய மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார்.

108 ரன்கள் எடுத்திருந்த அவரையும் ரபாடா அவுட்டாக்கினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்தது. விராட் கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று இரு அணிகளுக்கு இடையே 2வது நாள் ஆட்டம் நடக்கிறது. 

[…]

மயங்க் அகர்வால்
விளையாட்டு

சதம் அடித்த அகர்வால்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் விளாசினார். 

தென்னாப்பிரிக்கா அணி உடனான ஃபிரீடம் கோப்பைக் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதை அடுத்து ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் ரோகித், மயங்க் ஜோடி அசத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக 14 ரன்னில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். இதை அடுத்து, மயங்க் அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். அரை சதம் கடந்த புஜாரா, ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அவருடன் சேர்ந்து பொறுமையாக ஆடிய மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். 108 ரன்கள் எடுத்திருந்த அவரையும் ரபாடா அவுட்டாக்கினார்.

[…]

மேரி கோம்
விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப்பில் மேரி கோம் புதிய சாதனை

உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற முதல் குத்துச் சண்டை வீராங்னை என்ற பெருமையை மேரி கோம் பெற்றுள்ளார்.

11-வது பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷ்யாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இதன் 51 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதிப் போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் கொலம்பிய வீராங்கனை இங்க்ரிட் வலென்சியாவும் மோதினார். இதில் மேரி கோம் அபாரமாக விளையாடி கொலம்பியா வீராங்கனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

முன்னதாக, 6 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கத்தை கையில் வைத்திருக்கும் மேரி கோம், அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் எட்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை மேரி கோம் பெற்றுள்ளார். அதேபோல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 51 கிலோ எடைப்பிரிவில் மேரி கோம் பெரும் முதல் பதக்கம் இதுவாகும்.

[…]

நிர்மலா ஷியோரன்
விளையாட்டு

தடகள வீராங்கனை நிர்மலா 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் கலந்துக் கொள்ள தடை

இந்திய தடகள வீராங்கனை நிர்மலா ஷியோரன் ஊக்க மருந்து உட்கொண்டது நிரூபிக்கப்பட்டதால், நான்கு ஆண்டுகளுக்கு தடகளப் போட்டிகளில் கலந்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு ஜூன் 29ம் தேதிக்கு தேதியிட்டு இந்த 4 ஆண்டுக்கால தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஊக்கமருந்து உட்கொள்வது தொடர்பாக கண்காணித்து வரும் அதலடிக் இன்டகிரிட்டி யூனிட் எனும் அமைப்பு 2017ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டியில் நிர்மலா ஊக்கமருந்துகளை உட்கொண்டதாக தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

24 வயதான நிர்மலா ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் மற்றொரு ரிலே பந்தயத்திலும் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார். ஊக்கமருந்து சோதனையை அடுத்து அவர் வென்ற இரண்டு பதக்கங்களும் பறிக்கப்பட்டுள்ளன.

[…]

கிரிக்கெட் டெஸ்ட் போட்டி
விளையாட்டு

இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்குகிறது.

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த டெஸ்டில் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் கூட்டணியின் அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். கேப்டன் கோலி, புஜாரா, ரஹானே, ஹனுமா விகாரி என இந்தியா வலுவான பேட்டிங் வரிசையுடன் உள்ளது. முகமது ஷமி, அஸ்வின் பந்துவீச்சு எதிரணிக்கு சவாலாக இருக்க வாய்ப்புள்ளது.

டூ பிளெஸ்ஸிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி முதல் டெஸ்டை பறிகொடுத்ததால் இதில் நிச்சயம் பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கலாம்...

[…]

 ஹர்திக் பாண்ட்யா
விளையாட்டு

அறுவை சிகிச்சை முடிந்து வீடியோ வெளியிட்ட ஹர்திக் பாண்ட்யா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, தனது அறுவை சிகிச்சைக்கு பிறகு நடப்பது போன்ற வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா உடனான டி-20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்கா உடனான தொடரில் இருந்து தற்காலிகமாக விலகினார்.

காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவிற்கு, முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த ஹர்திக் பாண்ட்யா, தனது நண்பரின் உதவியுடன் நடப்பது போன்ற வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது எனவும் குணமடைவதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

[…]

கிரிகெட் வீரர் எம்.எஸ்.தோனி
விளையாட்டு

பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய தோனி

கிரிகெட் வீரர் எம்.எஸ்.தோனி, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

மும்பையின் ஜுகு பகுதியில் அமைந்துள்ள ஜாம்நாபாய் நர்சி விளையாட்டு மைதானத்தில் பாலிவுட் திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி நடைபெற்றது.

அதில் விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்களும் பங்கேற்று கால்பந்து விளையாடினர். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இடைக்கால ஓய்வில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும், கால்பந்தாட்டம் மீதான தனது ஆர்வத்தின் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்று விளையாடினார்.

மேலும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்டோரும் தோனியுடன் இணைந்து கால்பந்து விளையாடினர்.

முன்னதாக பிரபலங்கள் அனைவரும் இணைந்து பயிற்சிகளிலும் ஈடுபட்டனர். பிரபலங்கள் பச்சை வண்ண உடையிலும், எதிரணியினர் ஆரஞ்சு வண்ண உடையணிந்தும் போட்டியிட்டனர். போட்டி முடிந்தவுடன் பிரபலங்களுடன் மற்ற வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

[…]

கிரிகெட் வீரர் எம்.எஸ்.தோனி
விளையாட்டு

பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய தோனி

கிரிகெட் வீரர் எம்.எஸ்.தோனி, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

மும்பையின் ஜுகு பகுதியில் அமைந்துள்ள ஜாம்நாபாய் நர்சி விளையாட்டு மைதானத்தில் பாலிவுட் திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி நடைபெற்றது.

அதில் விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்களும் பங்கேற்று கால்பந்து விளையாடினர். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இடைக்கால ஓய்வில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும், கால்பந்தாட்டம் மீதான தனது ஆர்வத்தின் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்று விளையாடினார்.

மேலும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்டோரும் தோனியுடன் இணைந்து கால்பந்து விளையாடினர்.

முன்னதாக பிரபலங்கள் அனைவரும் இணைந்து பயிற்சிகளிலும் ஈடுபட்டனர். பிரபலங்கள் பச்சை வண்ண உடையிலும், எதிரணியினர் ஆரஞ்சு வண்ண உடையணிந்தும் போட்டியிட்டனர். போட்டி முடிந்தவுடன் பிரபலங்களுடன் மற்ற வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

[…]

கிரிகெட் வீரர் எம்.எஸ்.தோனி
விளையாட்டு

பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய தோனி

கிரிகெட் வீரர் எம்.எஸ்.தோனி, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

மும்பையின் ஜுகு பகுதியில் அமைந்துள்ள ஜாம்நாபாய் நர்சி விளையாட்டு மைதானத்தில் பாலிவுட் திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி நடைபெற்றது.

அதில் விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்களும் பங்கேற்று கால்பந்து விளையாடினர். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இடைக்கால ஓய்வில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும், கால்பந்தாட்டம் மீதான தனது ஆர்வத்தின் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்று விளையாடினார்.

மேலும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்டோரும் தோனியுடன் இணைந்து கால்பந்து விளையாடினர்.

முன்னதாக பிரபலங்கள் அனைவரும் இணைந்து பயிற்சிகளிலும் ஈடுபட்டனர். பிரபலங்கள் பச்சை வண்ண உடையிலும், எதிரணியினர் ஆரஞ்சு வண்ண உடையணிந்தும் போட்டியிட்டனர். போட்டி முடிந்தவுடன் பிரபலங்களுடன் மற்ற வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

[…]

கிரிகெட் வீரர் எம்.எஸ்.தோனி
விளையாட்டு

பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய தோனி

கிரிகெட் வீரர் எம்.எஸ்.தோனி, பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

மும்பையின் ஜுகு பகுதியில் அமைந்துள்ள ஜாம்நாபாய் நர்சி விளையாட்டு மைதானத்தில் பாலிவுட் திரைப்பட மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கால்பந்து போட்டி நடைபெற்றது.

அதில் விளையாட்டு துறை சார்ந்த பிரபலங்களும் பங்கேற்று கால்பந்து விளையாடினர். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இடைக்கால ஓய்வில் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும், கால்பந்தாட்டம் மீதான தனது ஆர்வத்தின் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்று விளையாடினார்.

மேலும் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உள்ளிட்டோரும் தோனியுடன் இணைந்து கால்பந்து விளையாடினர்.

முன்னதாக பிரபலங்கள் அனைவரும் இணைந்து பயிற்சிகளிலும் ஈடுபட்டனர். பிரபலங்கள் பச்சை வண்ண உடையிலும், எதிரணியினர் ஆரஞ்சு வண்ண உடையணிந்தும் போட்டியிட்டனர். போட்டி முடிந்தவுடன் பிரபலங்களுடன் மற்ற வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

[…]

சானியா மிர்சாவின் சகோதரி
விளையாட்டு

கிரிக்கெட் வீரரை மணக்கவிருக்கும் சானியா மிர்சாவின் சகோதரி

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் சகோதரி ஆனம் மிர்சா, இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டனான அசாருதீனின் மகனை திருமணம் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது.

சானியாவின் சகோதரியும் ஃபேசன் ஸ்டைலிஸ்ட்டுமான ஆனம் மிர்சா, அசாருதீனின் மகனும் கிரிக்கெட் வீரருமான ஆசாத்தை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில மாதங்களாகவே அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், சானியா மிர்சாவே இத்தகவலை தற்போது உறுதி செய்துள்ளார்.

அந்த வகையில், இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், இருவருக்கும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[…]

இந்திய அணி அபார வெற்றி
விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி.. இந்திய அணி அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் ஆனது. மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார். ரோகித் சர்மா சதம் அடித்தார்.
பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்களில் ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக அஸ்வின், 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது. இந்த இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதம் அடித்து சாதனை படைத்தார்.

பின் தங்கிய ரன்களையும் சேர்த்து, 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது. இந்திய அணி வீரர்களின் அபார பந்துவீச்சில் திணறிய அந்த அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. முத்துசாமி, டேன் பீட் ஆகியோர் மட்டும் நிதானமாக ஆடி, அணியின் தோல்வியை சற்று நேரம் தள்ளி போட்டனர். இறுதியில் அந்த அணி 191 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதன் மூலம், 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்த இன்னிங்சில் தியூனிஸ் டி ப்ரூயின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் டெஸ்டில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றி அஸ்வின் சாதனை படைத்தார்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரனைப் போலவே, 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அவரது உலக சாதனையை அஸ்வின் சமன் செய்தார்.

[…]

அஸ்வின் அசத்தல்
விளையாட்டு

முரளிதரனின் சாதனை சமன் - அஸ்வின் அசத்தல்

கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இலங்கை சுழற்பந்துவீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்தார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் ஆனது.

பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்களில் ஆட்டமிழந்தது. தமிழக வீரர் அஸ்வின், 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்த போது, டிக்ளேர் செய்யப்பட்டது. இரு இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதம் அடித்து சாதனை படைத்தார்.

பின் தங்கிய ரன்களையும் சேர்த்து, 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. காலை 10 மணி நிலவரப்படி, அந்த அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 

இந்த இன்னிங்சில் தியூனிஸ் டி ப்ரூயின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் டெஸ்டில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றி அஸ்வின் சாதனை படைத்தார்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரனைப் போலவே, 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அவரது சாதனையை அஸ்வின் சமன் செய்தார்.

[…]

கிரிக்கெட் டெஸ்ட் போட்டி
விளையாட்டு

இந்தியா 323 ரன்களுக்கு டிக்ளேர்..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்து டிக்ளேர் ஆனது. இந்த இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்திருந்த போது டிக்ளேர் செய்யப்பட்டது. தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். ரோகித் சர்மா சதம் அடித்தார். 

இதை அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 431 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரரான டீன் எல்கர் மற்றும் குயிண்டன் டீ காக் ஆகியோர் சதம் அடித்தனர்.

இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 71 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய மயங்க் அகர்வால் 7 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இதை அடுத்து ரோகித் சர்மாவுடன், செட்டீஸ்வர் புஜாரா ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா அவ்வப்போது அதிரடி காட்டி சிக்சர்களை பறக்க விட்டார். 81 ரன்னில் புஜாரா அவுட்டாகவே, ரவீந்திர ஜடேஜா களம் கண்டார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 133 பந்துகளில் சதம் அடித்தார்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே இரு சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

ரோகித் சர்மா 127 ரன்களிலும், ஜடேஜா 40 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் விராட் கோலியும், ரகானேவும் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி 31 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த போது அணியை டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்தது.

395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா, ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா எல்கர் விக்கெட்டை வீழ்த்தினார். 

[…]

டெஸ்ட் போட்டி
விளையாட்டு

3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்க அணி

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்திருந்தது.

3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் என்ற நிலையில், தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 2 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய பவுமா, மேலும் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து எல்கருடன் (Elgar) டூ பிளசிஸ் (Du plessis) ஜோடி சேர்ந்து, நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்கோர் அதிகரித்தது.

சிறப்பாக விளையாடிய டூ பிளசிஸ் அரைசதம் அடித்த நிலையில், 55 ரன்களில் அஸ்வின் வீசிய பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து எல்கருடன் டி ஹாக் (De kock) இணைந்தார். இதனிடையே சதமடித்த எல்கர், 160 ரன்களில் ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து டி ஹாக்கும் சதமடித்து 111 ரன்களில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

3ம் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்திருந்தது. முத்துசாமி 12 ரன்களுடனும், மகராஜ் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

தனது 200ஆவது விக்கெட்டை கைப்பற்றி ஜடேஜா சாதனை படைத்தார். 27ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை சாய்த்து அஸ்வின் சாதனை படைத்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணியை காட்டிலும் தென்னாப்பிரிக்க அணி 117 ரன்கள் பின்தங்கியுள்ளது. அந்த அணியிடம் இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.

[…]

வீரர் மகேந்திர சிங் தோனி
விளையாட்டு

கிரிக்கெட் போட்டிகளை தோனி தவிர்த்து வருவதற்கு இது தான் காரணமா?

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி, தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இந்திய துணை ராணுவத்தில் பணியாற்றும் பொருட்டு அணியிலிருந்து இரண்டு மாத கால தற்காலிக ஓய்வை கேட்டுப்பெற்றார்.

இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டித் தொடர்களில் தோனி பங்கேற்கவில்லை. இதனிடையே தனது இரண்டு மாத கால ஓய்வை மேலும் இரு மாதங்கள் அவர் நீட்டித்துள்ளதாகவும் அதனால் நவம்பர் மாதம் வரை அவர் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கமாட்டார் எனவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த ஓய்வு நீட்டிப்பு குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது. அதாவது, ஐபிஎல்லின்போது முதுகு பகுதியிலும், உலக கோப்பை தொடரின்போது மணிக்கட்டிலும் தோனிக்கு ஏற்பட்ட காயமானது இன்னும் முழுமையாக குணமாகவில்லை எனவும்,அதனாலேயே போட்டிகளில் பங்கேற்க அவர் தயக்கம் காட்டிவருவதாகவும் கூறப்படுகிறது.

[…]

நடிகர் மாதவன் மகன் வேதாந்த்
விளையாட்டு

நடிகர் மாதவனின் மகன் சர்வதேச போட்டியில் வெள்ளி வென்றார்

நடிகர் மாதவன் தன் மகன் வேதாந்த் ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது பெருமிதமளிப்பதாகக் கூறியுள்ளார்.

நடிகர் மாதவன்-சரிதா தம்பதியின் 14 வயது மகன் வேதாந்த். இவர் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஏற்கெனவே தேசிய அளவில் 100 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் தங்கம் வென்ற வேதாந்த், கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதே பிரிவில் வெண்கலம் வென்றார்.

இந்த வெற்றிகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் மாதவன் தற்போது, இந்தியா சார்பில் சர்வதேச அரங்கில் பிரதிநிதியாகப் பங்கேற்று இந்தியத் தாய்க்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருப்பதாக தன் மகன் குறித்து பெருமையாகப் பதிவிட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2-ம் குழு நீச்சல் போட்டியில் 4 x 100 மீட்டர் ரிலேவில் ஃப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் வேதாந்த், உத்கார்ஷ் பாட்டீஸ், சாஹில் லஸ்கர், ஷோவான் கங்குலி ஆகிய 4 பேர் இந்தியா சார்பில் பங்கேற்றனர்.

தாய்லாந்து குழு முதலிடம் பிடித்த நிலையில் 2-ம் இடம் பிடித்த வேதாந்தின் குழு வெள்ளி வென்றது. ஜப்பான் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த மாதவன் பணிவோடும், பெருமிதத்தோடும் பகிர்ந்துள்ளார். 

[…]

பாகிஸ்தானை வித்தியாசமான முறையில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற தினம்.
விளையாட்டு

வரலாற்றில் இன்று.. மறக்கவே முடியாத போட்டி அது.. பாகிஸ்தான் அணியை வெட்கப்பட்டு தலைகுனிய வைத்த இந்திய வீரர்கள்

செப்டம்பர் 14 - இன்றைய தினம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத முக்கியமான தினம். பாகிஸ்தானை வித்தியாசமான முறையில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற தினம்.

தோனி கேப்டனான புதிதில் 2007ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. செப்டம்பர் 14ல்(இதேநாள்) இந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 141 ரன்கள் எடுத்தது. 142 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க விக்கெட்டுகள் விழுந்துவிட, மிஸ்பா உல் ஹக் மட்டும் கடைசி வரை நின்றார். பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. நெருக்கடியான அந்த ஓவரை ஸ்ரீசாந்த் வீசினார். 

முதல் பந்தில் யாசிர் அராஃபத் சிங்கிள் தட்ட, பேட்டிங் முனைக்கு சென்ற மிஸ்பா உல் ஹக் அடுத்த மூன்று பந்துகளில் 10 ரன்களை சேர்த்தார். அதனால் கடைசி 2 பந்தில் பாகிஸ்தானின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை. இப்படியொரு இக்கட்டான சூழலில், ஐந்தாவது பந்தில் மிஸ்பா ரன் எடுக்கவில்லை. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட, அதையும் ஸ்ரீசாந்த் அருமையாக வீசினார். அந்த பந்தில் ஒரு ரன் ஓட முயன்ற மிஸ்பா, ரன் அவுட்டானார். அதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. 

இதையடுத்து ஒவ்வொரு அணியிலிருந்தும் 5 வீரர்கள் பவுலிங் போட அழைக்கப்பட்டனர். அதில் எந்த அணியின் வீரர்கள் அதிகமாக ஸ்டம்பில் அடித்து போல்டு செய்கிறார்களோ அந்த அணி வெற்றி பெறுவதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கு இரு அணி கேப்டன்களும் ஒப்புதல் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து முதல் பந்தை வீசிய இந்திய வீரர் சேவாக் துல்லியமாக போல்டு செய்தார். அதேநேரத்தில் பாகிஸ்தான் வீரர் யாசிர் அராஃபத் போல்டு செய்ய தவறினார். அடுத்ததாக சுழல் மன்னன் ஹர்பஜன் சிங், அருமையாக ஸ்டம்பை தாக்கினார். பாகிஸ்தான் தரப்பில் உமர் குல்லும் ஸ்டம்பை மிஸ் செய்தார். மூன்றாவதாக உத்தப்பாவும் துல்லியமாக ஸ்டம்பில் போட்டு போல்டு செய்ய, பாகிஸ்தானின் அஃப்ரிடியும் போல்டு செய்ய தவறினார். 

இந்திய அணியின் மூன்று வீரர்களும் கிளீன் போல்டு செய்தனர். பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட ஸ்டம்பை தாக்கவில்லை. எனவே அதனடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் வெற்றியை தீர்மானிக்க கடைபிடிக்கப்பட்ட புதிய முறை இது. இப்படியொரு வித்தியாசமான முறையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற தினம் இன்று. இந்த உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியிலும், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, முதல் டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

[…]

இறுதிப்போட்டியில் இந்தியா
விளையாட்டு

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்:இறுதிப்போட்டியில் இந்தியா

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையுடன் மோத இருந்தது. பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. லீக் சுற்றில் முதலிடம் பிடித்ததன் அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை (சனிக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.

[…]

மேரி கோம்
விளையாட்டு

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பெயர் “பத்ம விபூஷன்” விருதுக்கு பரிந்துரை

ஆறு முறை உலகச்சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பெயரை நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலை உள்துறை அமைச்சகத்தின் பத்ம விருதுகள் கமிட்டியினருக்கு, விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. 9 பேர் கொண்ட அந்த பட்டியலில் முதல்முறையாக அனைவரும் பெண்களாகவே இடம்பெற்றுள்ளனர். 2006ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், 2013ம் ஆண்டில் பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ள மேரி கோம், தற்போது பத்ம விபூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இந்த விருதை மேரி கோம் பெற்றால், நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷனை பெறும் 4வது விளையாட்டு வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதற்கு முன்னதாக 2007ம் ஆண்டில் செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், 2008ம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மலையேற்ற வீரர் சர் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் பத்ம விபூஷன் விருதை பெற்றுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், 2015ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்ற பி.வி.சிந்துவின் பெயரும் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பி.வி.சிந்து டென்னிஸ் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்த பட்டியலில் கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் உள்ளிட்ட மேலும் 8 வீராங்கனைகளின் பெயர்கள் பத்மஸ்ரீ விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

[…]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஃபேல் நடால்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் நடாலுடன், ரஷ்ய வீரர் மெட்வதேவ் மோதினார்.

நான்கு மணி 50 நிமிடம் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் இரு வீரர்களும் சமபலத்துடன் விளையாடினர். இருவரும் தலா 2 செட்களை வென்ற 5வது செட்டை நடால் கடுமையாகப் போராடி கைப்பற்றினார். இறுதியில் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.

நடாலுக்கு வெற்றிக் கோப்பையுடன் 3.85 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. அவருடன் மோதிய மெட்வதேவ் 1.9 மில்லியன் டாலர் பரிசுத்தொகையைப் பெற்றார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 19வது முறையாக நடால் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

[…]

மலிங்கா
விளையாட்டு

4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய மலிங்கா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 5 ஹாட்டிரிக் விக்கெட்களை எடுத்து வசிம் அக்ரமின் சாதனையை லசித் மலிங்கா முறியடித்தார். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டி கண்டியில் நடைபெற்றது.

இதில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது, 3வது ஓவரை இலங்கையின் மூத்த பந்துவீச்சாளர் லசித் மலிங்கா வீசினார். அந்த ஓவரில் 3வது பந்தில் இருந்து கோலின் முன்ரோ, ஹமிஷ் ருதர்ஃபோர்ட், கோலின் டி கிராண்டஹோம் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் விக்கெட்களை அடுத்தடுத்து மலிங்கா வீழ்த்தினார். இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், டி20யில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழத்தியிருந்தார்.

தற்போது மலிங்கா இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். மேலும் டி20 போட்டிகளில் 100 விக்கெட்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் மலிங்கா பெற்றுள்ளார். இதே போல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 5 ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் மலிங்கா பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் வசிம் அக்ரம் சர்வதேச போட்டிகளில் 4 முறை ஹாட்டிரிக் விக்கெட்களை எடுத்திருந்தார். தற்போது மலிங்கா இதனை முறியடித்துள்ளார்.

[…]

ரோகித் சர்மா
விளையாட்டு

ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட வேண்டும்- கங்குலி வலியுறுத்தல்

டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடாத கே.எல்.ராகுலுக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவை களமிறக்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடருக்கு பின்பு இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடியது.

இதில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதில் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இந்த தொடருக்கு முன்பே கே.ராகுலுக்கு பதிலாக ரோகித் சர்மாவை டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என கூறியிருந்த முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி, தற்போதும் அதே கருத்தை தான் முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா டெஸ்டிலும் சிறப்பாக விளையாட காத்திருப்பதாக கூறிய கங்குலி மிடில் ஆர்டரில் விஹாரி மற்றும் ரஹானே சிறப்பாக உள்ளதால் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் களமிறக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

[…]

asss
விளையாட்டு

அமெரிக்க ஓபன்: 100வது வெற்றியை பதிவு செய்த செரினா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100வது வெற்றியை பதிவு செய்த செரினா வில்லியம்ஸ், அரையிறுதிக்கு முன்னேறினார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மற்றும் சீனாவின் குவாங் வாங் ஆகியோர் மோதினர்.

44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரினா வில்லியம்ஸ் 6க்கும் 1, 6க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் குவாங் வாங்-கை வீழ்த்தினார்.

இதன் மூலம் அமெரிக்க ஓபன் தொடரில் தனது 100வது வெற்றியை பதிவு செய்திருக்கும் செரினா, நடப்பு தொடரில் அரையிறுதிக்கும் முன்னேறினார். இதற்கு முன்னர் அமெரிக்க முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான கிரிஸ் எவெர்ட் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தார்.

இதுகுறித்து பேசிய செரினா, இந்த சாதனையை படைப்பேன் என்று எப்போதும் நினைத்ததில்லை எனவும், இது சிறப்பான ஒன்று என்றும் கூறினார். அரையிறுதியில் தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருக்கும் உக்ரைன் வீராங்கனை எலீனா விடோலினாவை 8ஆவது இடத்தில் உள்ள செரினா எதிர்கொள்ள உள்ளார். 

[…]

செரினா வில்லியம்ஸ்
விளையாட்டு

அமெரிக்க ஓபன்: 100வது வெற்றியை பதிவு செய்த செரினா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100வது வெற்றியை பதிவு செய்த செரினா வில்லியம்ஸ், அரையிறுதிக்கு முன்னேறினார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மற்றும் சீனாவின் குவாங் வாங் ஆகியோர் மோதினர்.

44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரினா வில்லியம்ஸ் 6க்கும் 1, 6க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் குவாங் வாங்-கை வீழ்த்தினார்.

இதன் மூலம் அமெரிக்க ஓபன் தொடரில் தனது 100வது வெற்றியை பதிவு செய்திருக்கும் செரினா, நடப்பு தொடரில் அரையிறுதிக்கும் முன்னேறினார். இதற்கு முன்னர் அமெரிக்க முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான கிரிஸ் எவெர்ட் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தார்.

இதுகுறித்து பேசிய செரினா, இந்த சாதனையை படைப்பேன் என்று எப்போதும் நினைத்ததில்லை எனவும், இது சிறப்பான ஒன்று என்றும் கூறினார். அரையிறுதியில் தரவரிசையில் 5ஆவது இடத்தில் இருக்கும் உக்ரைன் வீராங்கனை எலீனா விடோலினாவை 8ஆவது இடத்தில் உள்ள செரினா எதிர்கொள்ள உள்ளார். 

[…]

2-வது டெஸ்ட்
விளையாட்டு

மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்- இந்தியா நிதான ஆட்டம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்டில் முதலாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
மயங்க் அகர்வால் நிதானமாக ஆடி 55 ரன்கள் சேர்த்தார்.

ரஹானே 24 ரன்கள் சேர்த்தார். கேப்டன் விராட் கோலி 76 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் சேர்த்திருந்தது. ரிஷப்பந்த் 27 ரன்களுடனும், விஹாரி 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

[…]

அபிஷேக் வர்மா
உலகம்

உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் 72 நாடுகளை சேர்ந்த 541 வீரர்கள் பங்கேற்றுள்ள உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 26ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா 244.2 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். மேலும் மற்றொரு இந்திய வீரரான சவுரப் சவுத்ரி 221.9 புள்ளிகளுடன் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.

துருக்கியை சேர்ந்த இஸ்மாயில் கெலஸ் 243.1 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கம் வென்றார். முன்னதாக ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கத்துடன் இந்தியா இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளது.

[…]

எம்.எஸ்.தோனி
விளையாட்டு

தோனி, ஜஸ்பிரீத் பும்ரா அணியில் சேர்க்கப்படவில்லை

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் தோனி மற்றும் பும்ரா ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

இந்த தொடர் அடுத்த மாதம் 15ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதலில் நடக்கவிருக்கும் 3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிக்கர் தவான், ஷரேயஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹர், கலில் அகமது, தீபக் சஹர் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளார். இந்த தொடரில் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலில் மூத்த வீரர் எம்.எஸ்.தோனி பெயரும் சேர்க்கப்படவில்லை. 

[…]

உலக பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து.
விளையாட்டு

டெல்லி திரும்பிய உலக பேட்மிண்டன் சாம்பியன் சிந்துவுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு...

உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி. சிந்து டெல்லி திரும்பினார்.

அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.25வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்விட்சர்லாந்தில் உள்ள பாசெல் நகரில் நடைபெற்றது.

இதில் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நஜோமி ஓகுஹராவுடன் மோதிய பி.வி.சிந்து தொடக்கம் முதலே வெற்றிகளைக் குவிக்கலானார். இறுதியாக 21-க்கு 7 , 21க்கு7 என இரு சுற்றுகளிலும் வாகை சூடிய சிந்து 38 நிமிடங்களில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பி,வி.சிந்து இந்தியராக இருப்பதால் பெருமைப்படுவதாக தெரிவித்தார். மேலும் பல பதக்கங்களை வெல்வேன் என்றும் பி.வி.சிந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

ஆஸி.யுடன் 3வது டெஸ்ட் ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து வெற்றி

 ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், பென் ஸ்டோக்சின் அதிரடி ஆட்டத்தால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 1-1 என சமநிலை ஏற்படுதியது. ஹெடிங்லி மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா179 ரன் எடுத்த நிலையில், இங்கிலாந்து 67 ரன்னுக்கு சுருண்டது. இதைத் தொடர்ந்து, 112 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 246 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.இதையடுத்து, 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 7, ராய் 8, டென்லி 50 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் 75 ரன், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ரூட் மேற்கொண்டு 2 ரன் மட்டுமே சேர்த்து (77 ரன், 205 பந்து, 7 பவுண்டரி) லயன் சுழலில் வார்னர் வசம் பிடிபட்டார். அடுத்து ஸ்டோக்சுடன் பேர்ஸ்டோ இணைந்தார். இருவரும் 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 86 ரன் சேர்த்தனர். பேர்ஸ்டோ 36 ரன் எடுத்து (68 பந்து, 4 பவுண்டரி) வெளியேற, அடுத்து வந்த பட்லர், வோக்ஸ் இருவரும் தலா 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினர்.ஜோப்ரா ஆர்ச்சர் 15 ரன்னில் வெளியேற, ஸ்டூவர்ட் பிராடு டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இங்கிலாந்து அணி 286 ரன்னுக்கு 9 விக்கெட் இழந்து திணறியதால் ஆஸ்திரேலியா நிச்சயம் வெற்றி பெறும் என்றே அனைவரும் முடிவுக்கு வந்தனர்.ஆனால், ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் அதிரடியாக விளையாடி சதம் அடித்த பென் ஸ்டோக்ஸ் விடுவதாக இல்லை. கடைசி விக்கெட்டுக்கு ஜாக் லீச் கட்டை போட, சிக்சராக விளாசித் தள்ளிய ஸ்டோக்ஸ் ‘அதிர்ச்சி வெற்றி’யை வசப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார். இங்கிலாந்து அணி 125.4 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 362 ரன் எடுத்து நம்ப முடியாத வகையில் வெற்றி பெற, ஆஸி. வீரர்கள் களத்தில் ஸ்தம்பித்து நின்றனர்.

ஸ்டோக்ஸ் 135 ரன் (330 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்), லீச் 1 ரன்னுடன் (17 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 4, லயன் 2, கம்மின்ஸ், பேட்டின்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 4வது டெஸ்ட் மான்செஸ்டரில் செப்டம்பர் 4ம் தேதி தொடங்குகிறது.

[…]

பி.வி.சிந்து
விளையாட்டு

பி.வி.சிந்து நாட்டிற்குப் பெருமை தேடித் தந்திருப்பதாக குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து...

உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்தது. 45 நாடுகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

இதன் இறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனையான நோசோமி ஓகுஹாராவை பி.வி.சிந்து எதிர்கொண்டார். 38 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21க்கு 7, 21க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று அசத்தினார்.

போட்டியில் வெற்றி பெற்ற பிவி சிந்துவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 2017, 2018ம் ஆண்டுகளிலும் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு வந்த போதிலும் இந்த முறை சாம்பியன் பட்டத்தை சிந்து கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய சிந்து, இந்த பதக்கத்தை பிறந்தநாள் கொண்டாடும் தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

சிந்துவின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் என்றும், அவரின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி கோடிக் கணக்கானவர்களை கவர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பி.வி சிந்துவால் மீண்டும் இந்தியா பெருமையடைகிறது என்று பாராட்டியுள்ள பிரதமர் மோடி, இளம்தலைமுறையினருக்கு பி.வி சிந்துவின் வெற்றி முன்னுதாரணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்களும் சிந்துவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் என சிந்துவுக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஆண்டிகுவாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 222 ரன்களிலேயே ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. ரஹானே 102 ரன்களும், விஹாரி 93 ரன்களும் எடுத்தனர்.

419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவு அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 100 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

பும்ரா ஏழே ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த் 3 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்து மேற்கிந்திய தீவு அணியை திணறடித்தனர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

[…]

 ரவீந்திர ஜடேஜா
விளையாட்டு

சிறப்பான ஆட்டத்தால் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டேன்- ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டதாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

ஆண்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி இக்கட்டான நிலையில் இருந்த போது, களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, சிறப்பாக விளையாடி இஷாந்த் சர்மாவோடு நிலையான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதோடு 58 ரன்களையும் குவித்தார்.

இந்த போட்டியில் ரவிசந்திரன் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டதையடுத்து பலரும் அதனை விமர்சித்து வந்த நிலையில், இதுகுறித்து பேசிய ஜடேஜா, தன்னை முக்கியமான வீரராக கருதி, தன்மீது அணியின் கேப்டன் விராட் கோலி நம்பிக்கை வைத்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

மேலும், கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அதிர்ஷ்டவசமாக தனது ஆட்டம் சிறப்பாகவே அமைந்ததாகவும் ஜடேஜா கூறினார்.

[…]

கிரிக்கெட்
விளையாட்டு

முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாற்றம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் நேற்று ஆன்டிகுவாவில் தொடங்கியது. மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. டாஸ்’ வென்ற மேற்கிந்திய தீவின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் இந்தியாவின் முதல் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் இருவரும் கவனமாக ஆடியும் விக்கெட் இழப்பதை தவிர்க்க முடியவில்லை.

68புள்ளி 5 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோச் 3 விக்கெட்களையும், கேப்ரியல் 2 விக்கெட்களையும், ரோஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்களையும் எடுத்துள்ளனர்.

[…]

டி20 போட்டி
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா..!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 67 ரன்கள் எடுத்தார். ஷிகர் தவான் 23 ரன்களும், கோலி 28 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ரோமேன் பவல் 54 ரன்கள் எடுத்தார். 15.3 ஓவரில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் சேர்த்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் லேசாக மழை பெய்யத் தொடங்கியதால், டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் 107 சிக்சர்கள் விளாசிய வீரர் எனும் சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா படைத்துள்ளார். 105 சிக்சர்களை அடித்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் இப்பட்டியலில் இரண்டாவது இடத்திலுள்ளார். […]

இந்திய அணி
விளையாட்டு

அரையிறுதியில் எந்த அணியுடன் இந்தியா மோதும்?

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் எந்த அணியுடன் மோதும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. 4ஆவது இடத்தை மற்ற அணிகளை விட அதிக ரன்ரேட் வைத்திருக்கும் நியூசிலாந்து அணி பிடித்து அரையிறுதிக்குள் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மேலும் தலா ஒரு லீக் போட்டியில் விளையாட உள்ளன. லீக் போட்டிகளின் முடிவில் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தால், அரையிறுதிக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளலாம்.

மாறாக இரண்டாவது இடத்தில் இந்திய அணி நீடிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. […]

மேற்கிந்தியத் தீவு
விளையாட்டு

மேற்கிந்தியத் தீவுகளுடன் இன்று மோதல் - இந்தியாவின் வெற்றி தொடருமா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.

காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியுள்ள நிலையில், லோகேஷ் ராகுல், விஜய் சங்கர் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்தியா தரப்பில் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

அதே நேரத்தில், மேற்கிந்திய தீவு தரப்பில் கெயில், ஹோப், பிராத்வெயிட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். காட்ரெல், ரோச் ஆகியோரின் பந்துவீச்சு அந்த அணிக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரையிறுதிக்கு முன்னேற எஞ்சியுள்ள 4 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற வேண்டிய நிலையில், இந்திய அணி பொறுப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கலாம். […]

பிரையன் லாராவுக்கு திடீர் நெஞ்சுவலி
விளையாட்டு செய்திகள்

பிரையன் லாராவுக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து காலத்திலும் சிறந்த வீரர்களாக திகழ்பவர்களில் முக்கியமானவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா. சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக கிரிக்கெட் உலகில் மதிக்கப்படக்கூடிய வீரர். தனது விக்கெட்டை வீழ்த்த எதிரணி பவுலர்களை அதிகமாக உழைக்க வைக்கக்கூடியவர். அவ்வளவு எளிதாக தனது விக்கெட்டை கொடுத்துவிட மாட்டார்.

90-ம் ஆண்டிலிருந்து 2007-ம் ஆண்டுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடிய லாரா, 22 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை குவித்த வீரராக லாரா திகழ்கிறார். லாரா ஒரு இன்னிங்ஸில் அடித்த 400 ரன்களை இதுவரை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை. அதேபோல முதல்தர கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 501 ரன்களை குவித்து ஆட்டமிழக்கவில்லை. இவ்வாறு பல சாதனைகளை சொந்தக்காரராக திகழ்பவர்.

இந்நிலையில், உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்த அவர், அதன் பின் இந்தியாவுக்கு வருகை தந்தார். மும்பையில் தங்கியிருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையின் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விரைவில் அவரது உடல்நலன் குறித்து அறிக்கை வெளியாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

உலகக் கோப்பை கிரிக்கெட்
விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

கடைசி ஓவரில் முகமது ஷமியின் ஹாட்ரிக் விக்கெட் மூலம், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. சவுத்தாம்டனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

விராட் கோலி 67 ரன்களும், கேதர் ஜாதவ் 52 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது.

225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். முகமது நபி ஓரளவு தாக்குப்பிடித்து 52 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், முகமது ஷமி அபாரமாக பந்துவீசி கடைசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 49.5 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ச்சியாக 4 வெற்றிகளுடன் 9 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. […]

யுவராஜ் சிங்
விளையாட்டு

கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது – யுவராஜ் சிங் உருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியில் 2000-ல் கென்யாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் அறிமுகமானார். இவர் இதுவரை இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 14 சதம், 52 அரைசதங்களுடன் 8071 ரன்கள் எடுத்துள்ளார்.

குறிப்பாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார். 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் தனது பேட்டிங், பவுலிங், பீல்டிங் என பன்முகத்திறமையையும் வெளிப்படுத்திய யுவராஜ், இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக யுவராஜ் சிங் இன்று அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 25 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன். கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது, துவண்டு விழுந்தால் எப்படி எழுந்து ஓட வேண்டும் என போதித்தது.

இந்திய அணிக்காக 400 போட்டிகளுக்கு மேல் விளையாடியது என் அதிர்ஷ்டம். 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றதைவிட வேறென்ன வேண்டும். நான் மிகவும் மோசமாக விளையாடியது 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தேன். அப்போதே என் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை உணர்ந்தேன் என கூறினார். […]

பாகிஸ்தான் - இலங்கை அணி
விளையாட்டு

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இன்று பலபரீட்சை

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன

இங்கிலாந்தின் பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் (Bristol county ground) இன்று 3இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாடி உள்ளது.
அதில் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் மோசமாக தோல்வியடைந்த பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிப் பெற்றது.
11 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து வந்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துககு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் இன்றைய போட்டியில் உத்வேகத்தோடு களமிறங்கும்.

இலங்கை அணியும் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கை, அடுத்ததாக நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிப் பெற்றிருந்தது.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதிய 7 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியே வெற்றிப்பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியில் வரலாற்றை மாற்றும் முயற்சியோடு இலங்கை அணி விளையாடும்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் போது மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. […]

ரபெல் நடால், பெடரர்
விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் - ரபெல் நடால், பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 6-1 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் […]

கிரிக்கெட் வர்ணனையாளர்கள்
விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட்டை வர்ணனை செய்யும் பிரபலங்கள்

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் 10 அணிகள் களமிறங்கி பலப்பரிட்சை செய்ய உள்ளன. இதற்காக இந்திய அணி 23ம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. `
உலக கோப் […]