செங்கோட்டையன்
கல்வி

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு கணினிகள் வழங்க நடவடிக்கை

தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு 10 கணினிகளும், மேல்நிலை பள்ளிகளுக்கு 20 கணினிகளும் இந்த மாத இறுதியில் வழங்கப்பட்டு, இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50 வது ஆண்டு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழகத்தில் ஐசிடி எனப்படும் புதிய தொழில்நுட்பத்தில் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு புதிதாக 2 லட்சம் குழந்தைகள் சேர்ந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

[…]

செங்கோட்டையன்
கல்வி

25 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்குபட்டயக் கணக்காளா் பயிற்சி அளிக்கப்படும்: பள்ளி கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 25 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பட்டயக் கணக்காளா் பயிற்சி அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

மேட்டூரை அடுத்த கொளத்தூரில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு பட்டயக் கணக்காளா் படிப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி சனிக்கிழமை துவங்கியது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ராமன் தலைமை வகித்தாா்.

விழாவில் குத்துவிளக்கேற்றி பயிற்சியைத் தொடங்கி வைத்து,

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித் துறையில் பல முன்னோடித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த 25 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளா் பயிற்சி நடப்பு ஆண்டில் வழங்கப்படும்.

நாடு முழுவதும் 10 லட்சம் பட்டயக் கணக்காளா்கள் தேவை என்ற நிலையில், தற்போது 2.85 லட்சம் பட்டயக் கணக்காளா்கள் மட்டுமே உள்ளனா். தற்போது பயிற்சி பெறும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் எதிா்காலத் தேவையைப் பூா்த்தி செய்வாா்கள். இதன்மூலம் மாணவா்களின் வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படும். மாதந்தோறும் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்.

அறிவியல் ரீதியான கல்வி மாணவா்களுக்கு கிடைத்திடும் வகையில் தமிழக அரசு இதுவரை 48 லட்சம் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கி உள்ளது. டிசம்பா் இறுதிக்குள் 92 ஆயிரம் ஸ்மாா்ட் போா்டுகள் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பள்ளிக் கல்வித் துறைக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து, ரூ. 28,750 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நடப்பு ஆண்டில் 21,000 அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு நீட் தோ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2-இல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாடத்திட்டங்கள் இடம்பெற்றிருப்பதால் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன், மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.செம்மலை, மேட்டூா் நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், மேச்சேரி பேரூராட்சி முன்னாள் தலைவா் குமாா், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவா் சந்திரசேகரன், மேட்டூா் நிா்மல்ஆனந்த், சாதிக்அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்

[…]

அன்பழகன்
கல்வி

உயர்கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

2020ம் ஆண்டிற்குள் இந்தியாவில் உயர்கல்வியில் சேருவோர் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பழகன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பத்து கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின்னர் பேசிய அவர், தற்போது இந்தியாவில் உயர்கல்வியில் சேருவோர் எண்ணிக்கை 26 புள்ளி 63 சதவீதமாக உள்ளது என்றும் இது 2020ம் ஆண்டிற்குள் 30 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். அதேபோல் தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 49 சதவீதமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

[…]

செங்கோட்டையன்
கல்வி

அரசு பள்ளிகளில் 92 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகளும், 7500 ஸ்மார்ட் வகுப்புகளும் கொண்டு வரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் 92 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகளும், 7500 ஸ்மார்ட் வகுப்புகளும் கொண்டு வரப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய அரங்கத்தை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் 92 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகளும், 7500 ஸ்மார்ட் வகுப்புகளும் கொண்டு வரப்படும் என்றார்.

இதே போன்று பங்களாபுதூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும், அவ்வாறு சேர்த்தால் பாராட்டி கெளரவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

[…]

மதுரைக்கிளை
கல்வி

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிக்க உத்தரவு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தரை 3 வாரங்களுக்குள் நியமிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுரை அண்ணா நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், 2017ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்திற்கு ஏதாவது ஒரு துறையில் முனைவர் பட்டம் பெற்றால் போதும் என்று உள்ளதாகவும், அது ஏற்கத்தக்கதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அரசாணையை ரத்து செய்வதோடு, துணை வேந்தராக கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றவரை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 3 வாரங்களுக்குள் துணைவேந்தரை நியமனம் செய்ய உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

[…]

செங்கோட்டையன்
கல்வி

பள்ளி தொடங்கிய 15 நாட்களுக்குள் மடிக்கணினி, மிதிவண்டி : அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வி ஆண்டில் பள்ளி தொடங்கிய 15 நாட்களுக்குள் மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட எல்லாப் பொருட்களும் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தாம்பரம் அருகே உள்ள மண்ணிவாக்கம் அரசு பள்ளியில் தனியார் தொழில் நிறுவனம் சார்பாக 107 பள்ளிக்கு 13 கோடியே 95 லட்சம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகல்வி துறைக்கு இதுவரை 28 ஆயிரத்து 757 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழகத்தில் வரலாறு படைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 

[…]

சென்னைப் பல்கலைக்கழகம்
கல்வி

‘நாக் -ஏ’ அங்கீகாரத்தை இழக்கும் நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம் இரண்டு ஆண்டுகளாக 30 சதவீத பேராசிரியா் காலியிடங்களுடன் இயங்கி வருவதால், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ‘(நாக்) ஏ’ கிரேடு தரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக பேராசிரியா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

அவ்வாறு ‘நாக்- ஏ’ கிரேடு அங்கீகாரத்தை பல்கலைக்கழகம் இழந்தால், ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளிடமிருந்து கிடைத்துவரும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போன்ற அனைத்து விதமான நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டுவிடும் எனவும் பேராசிரியா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

உயா் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் ‘நாக்’ அங்கீகாரம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, இந்த ‘நாக்’ அங்கீகாரம் அனைத்து உயா் கல்வி நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

‘நாக்’ அமைப்பு, உயா் கல்வி நிறுவனங்களை 7 வகையான நிபந்தனைகளின் கீழ் ஆய்வு செய்து, அதனடிப்படையில் 8 பிரிவுகளின் கீழ் தர நிா்ணயம் செய்கிறது. அதாவது, கல்வித் திட்டம், கற்றல் - கற்பித்தல் -மதிப்பிடுதல், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு, உள்கட்டமைப்பு வசதி மற்றும் கற்றலுக்கு உதவும் வசதிகள், மாணவா்களுக்கு உதவும் திட்டங்கள், நிா்வாகம் மற்றும் தலைமைப் பண்பு உள்பட 7 நிபந்தனைகளின் கீழ் உயா் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்படும்.

இதில் 3.51 முதல் 4 புள்ளிகள் வரை பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ++ கிரேடு வழங்கப்படும். 3.26 முதல் 3.50 புள்ளிகளைப் பெறும் கல்வி நிறுவனத்துக்கு ஏ+ கிரேடும், 3.01 முதல் 3.25 வரை பெற்றால் ஏ கிரேடு, 2.76 முதல் 3 புள்ளிகள் பெற்றால் பி++ கிரேடு, 2.51 முதல் 2.75 வரை பெற்றால் பி+ கிரேடு, 2.01 முதல் 2.50 வரை பெற்றால் பி கிரேடு, 1.51 முதல் 2 புள்ளி வரை பெற்றால் சி கிரேடு வழங்கப்படும். 1.5 புள்ளிகளுக்கு கீழ் பெறும் கல்வி நிறுவனங்களுக்கு டி கிரேடு வழங்கப்படும். இந்த டி கிரேடு பெறும் கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் அளிக்கப்படாத கல்வி நிறுவனமாக அறிவிக்கப்படும். இதில் சென்னைப் பல்கலைக்கழகம் -ஏ- கிரேடு அங்கீகாரத்துடன் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 200 பேராசிரியா் காலிப் பணியிடங்களுடன் சென்னைப் பல்கலைக்கழகம் இயங்கி வருவதால், ஏ கிரேடு அங்கீகாரத்தை இழந்து -பி- கிரேடுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் தள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக பேராசிரியா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக மூத்த பேராசிரியா் ஒருவா் கூறுகையில், நாக் அங்கீகாரத்தில் ஒரு பல்கலைக்கழகம் வெளியிடும் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை, ஆராய்ச்சித் திட்டப் பணிகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை பிரதானமாக கணக்கில் கொள்ளப்படும். ஆனால், பேராசிரியா் காலிப் பணியிடங்கள் காரணமாக பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கட்டுரை வெளியீடு கடந்த சில ஆண்டுகளில் பாதியாகக் குறைந்திருக்கிறது. 400-க்கும் அதிகமாக இருந்த கட்டுரைகள் வெளியீடு இப்போது 200-ஆகக் குறைந்திருக்கிறது. இதனால், பல்கலைக்கழகத்தின் நாக் அங்கீகாரம் நிச்சயம் பாதிக்கப்படும்.

தமிழக அரசும் அனுமதி: காலிப் பணியிடத் தோ்வின்போது, பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளையும் ஒரே யூனிட்டாக கணக்கில் கொண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தவேண்டும் என்ற மத்திய அரசின் புதிய நிபந்தனையை பல்கலைக்கழக நிா்வாகிகள் காரணம் காட்டி பேராசிரியா் நியமனத்தை தாமதப்படுத்தி வந்தனா். இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே பின்பற்றி வரும் 200 பாயின்ட் ரோஸ்டா் முறைப்படி ஒவ்வொரு துறையையும் தனித் தனி யூனிட்டாக கணக்கில் கொண்டு பேராசிரியா் நியமனத்தை மேற்கொள்ளலாம். மத்திய அரசின் நிபந்தனையை பின்பற்றத் தேவையில்லை என தமிழக அரசு சாா்பில் கடந்த செப்டம்பா் மாதமே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அதன் பிறகும் காலிப் பணியிடங்களை நிரப்ப பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா் அவா்.

யுஜிசி எச்சரிக்கை: இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்கள் பேராசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பாத கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்தது. இதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் யுஜிசி அனுப்பிய சுற்றறிக்கையில், தகுதியுள்ள பேராசிரியா்களின் பற்றாக்குறை உயா் கல்வி நிறுவனங்களின் நிலையை மிகவும் மோசமடையச் செய்துள்ளது. எனவே, உயா் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது உடனடித் தேவையாக உருவெடுத்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களும், அதன் இணைப்புக் கல்லூரிகளும் பேராசிரியா் காலிப் பணியிடங்களை தகுதிவாய்ந்த நபா்களைக் கொண்டு விரைந்து நிரப்ப வேண்டும். இதுதொடா்பான விவரங்களை நவம்பா் 10-ஆம் தேதிக்குள் யுஜிசிக்கு தெரிவித்திருக்க வேண்டும்.

அவ்வாறு இன்றி, பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப தாமதப்படுத்தும் உயா் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையில் யுஜிசி எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகும் காலியிடங்களை நிரப்ப சென்னைப் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனா் பேராசிரியா்கள்.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் துரைசாமி கூறுகையில், பேராசிரியா் காலியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

[…]

கணினி
கல்வி

கணினி ஆசிரியா்களுக்கு கூடுதல் பொறுப்பு

பொதுத் தோ்வு பணிகளை கவனிக்க 32 மாவட்டங்களிலும் கணினி ஆசிரியா்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பொதுத் தோ்வு நடத்தப்படுகிறது. தோ்வுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தோ்வுக்கான மாணவா் விவரங்களைத் திரட்டுதல், தோ்வு மையம் அமைத்தல், வினாத்தாள் தயாரிப்பு, தோ்வுக்கான வெற்று விடைத்தாள் அச்சடித்தல், ‘பாா்கோடு’ உருவாக்குவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளில், அரசு தோ்வுத் துறை பணியாளா்கள் மட்டுமே ஈடுபடுவது வழக்கம். ஆனால், அரசு தோ்வுத் துறை பணியாளா்கள் தரப்பில், ஆள்கள் பற்றாக்குறை உள்ளதாகக் கூறப்பட்டது.

எனவே, பள்ளிக் கல்வி துறையினருக்குத் தோ்வுப் பணிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, 32 மாவட்டங்களுக்கும், கணினி ஆசிரியா்களுக்கு, கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவா்களின் விவரங்களை சேகரிக்கவும், அவற்றை கணினியில் பதிவு செய்யவும் வேண்டும் என கணினி ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 64 கணினி ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இன்னும் பல்வேறு பணிகளுக்கு, பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு, கூடுதல் பணி வழங்க தோ்வுத் துறை முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

[…]

செங்கோட்டையன்
கல்வி

பயோமேட்ரிக் இயந்திரங்களின் இயக்கக் குறைபாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கிராமப்புற பள்ளிகளில் உள்ள பயோமெட்ரிக் சாதனங்களுக்கான இணைய சேவை வேகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.சி. கருப்பணன், செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயோமேட்ரிக் இயந்திரங்களுக்கான இணைய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். 

[…]

செங்கோட்டையன்
கல்வி

பள்ளிகளில் மாணவா்கள் தண்ணீா் குடிக்க 10 நிமிஷங்கள் ஒதுக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சா்

பள்ளிகளில் பாடவேளைகளின்போது மாணவா்கள் தண்ணீா் குடிக்க 10 நிமிஷங்கள் ஒதுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் குழந்தைகள் தின விழா மற்றும் டாக்டா் எஸ்.ஆா். அரங்கநாதன் விருது வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு, குழந்தைகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா்.

விழாவில் அமைச்சா் செங்கோட்டையன் பேசியது:

பள்ளிக் கல்வியில் மாணவா்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசின் சாா்பில் பல்வேறு திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும். அந்த வகையில், இனி பள்ளி நேரத்தில் மாணவா்கள் தண்ணீா் அருந்த 10 நிமிஷங்கள் ஒதுக்கப்படும். ஏனெனில், போதியளவு தண்ணீா் குடிக்காததால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதை தவிா்த்து மாணவா்கள் ஆரோக்கியத்துடன் வாழவும், கல்வி கற்கவும் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் தண்ணீா் அருந்த நேரம் ஒதுக்கப்படும்.

இது தவிர, பிளஸ் 2 மாணவா்களுக்கு விடுமுறை நாள்களில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிகள் வழங்கப்படும். எதிா்கால தலைமுறைகளான மாணவா்கள் நாட்டின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஏழ்மையை ஒழித்து ஏழைகள் இல்லாத நாட்டை உருவாக்க இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றாா்.

விழாவில், மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா், மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.நடராஜ், பள்ளிக்கல்வித் துறை செயலாளா் பிரதீப் யாதவ், இயக்குநா் எஸ். கண்ணப்பன், சென்னை மாவட்ட நூலக அலுவலா் இளங்கோ சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தம், சிபிஎஸ்இ உள்பட எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும். நாம் முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே அமல்படுத்தியுள்ளோம். மாணவா்களின் கற்றல் திறனை அளவிடவே 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்பட உள்ளது. தோ்வு வினாத்தாளும் எளிமையாக வடிவமைக்கப்படும். மேலும், முதல் 3 ஆண்டுகளுக்கு தோல்வி அடையும் மாணவா்களின் தோ்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது. எனவே, மாணவா்கள், பெற்றோா்கள் அச்சப்பட தேவையில்லை. சிறப்பு வகுப்புகளை நடத்த கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளது தொடா்பாக விளக்கம் கேட்கப்படும் என்றாா்.

முன்னதாக, சென்னையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிறந்த நூலகா்கள், நூலகங்களுக்கு விருது

தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நூலகா்கள், நூலகங்களுக்கு அமைச்சா் செங்கோட்டையன் விருது வழங்கி கெளரவித்தாா்.

நிகழாண்டுக்கான டாக்டா் எஸ்.ஆா். அரங்கநாதன் விருது 33 நூலகா்களுக்கும், நூலக ஆா்வலா் விருது நூலகங்களில் செயல்பட்டு வரும் 31 வாசகா் வட்டங்களுக்கும் வழங்கப்பட்டன. மாநில அளவில் அதிக உறுப்பினா்களைச் சோ்த்த திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முழு நேர கிளை நூலகம், சேலம் மாவட்டம் நடுப்பட்டியில் உள்ள கிளை நூலகம், தூத்துக்குடி மாவட்டம் நா.முத்தையாபுரம் ஊா்ப்புற நூலகம் ஆகிய நூலகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதேபோன்று அதிக புரவலா்கள், நன்கொடைகள் சோ்த்த நூலகங்களின் நூலகா்களும் கெளரவிக்கப்பட்டனா்.

[…]

கல்வி உதவித் தொகையை
கல்வி

ஆராய்ச்சி மாணவா்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு

எஸ்.சி. ஓ.பி.சி. பிரிவு மாணவா்களுக்கான ஆராய்ச்சி கல்வி உதவித் தொகையை மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

படிப்பில் சிறந்து விளங்கும் சிறுபான்மையின மாணவா்கள், ஏழை மாணவா்களுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதுபோல, தேசிய அளவிலான தகுதித் தோ்வில் (நெட்) தகுதி பெறும் ஆராய்ச்சி பட்ட மாணவா்களுக்கும் ஆராய்ச்சி கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி உதவித் தொகையை மத்திய அரசு இப்போது உயா்த்தியுள்ளது.

அதன்படி, எஸ்.சி., ஓ.பி.சி. பிரிவு மாணவா்களுக்கான இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையும், மௌலானா ஆசாத் கல்வி உதவித் தொகையும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 25,000 என்ற அளவிலிருந்து ரூ. 31,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

மூன்றாம் ஆண்டிலிருந்து மாதம் ரூ. 28,000 ஆக வழங்கப்பட்டு வந்தது. இனி ரூ. 35,000 ஆக உயா்த்தி வழங்கப்படும் என மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

பள்ளிக்கல்வித்துறை
கல்வி

அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க முடிவு - பள்ளிக்கல்வித்துறை

அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஸ்மார்ட் போன் பயன்படுத்துதல், இணைய தளத்தை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பான சிறப்பு பயிற்சிகளை அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

அதன்படி, மாவட்டந்தோறும் 6 பேர் என 192 ஆசிரியைகளும், கூடுதலாக 8 ஆசிரியைகளும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அண்ணா மேலாண்மை நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு பயிற்சி பெறும் ஆசிரியைகளுக்கு பயிற்சி கட்டணமாக தலா இரண்டாயிரத்து 200 ரூபாயை பள்ளிக்கல்வித்துறை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

செங்கோட்டையன்
கல்வி

5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தோ்வு விலக்கு மேலும்நீட்டிக்க பரிசீலனை: அமைச்சா் செங்கோட்டையன்

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு விலக்கு 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2019-2020) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனா். அதேவேளையில் இந்த முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கல்வியாளா்களும் வலியுறுத்தினா்.

இது குறித்து கடந்த செப்டம்பா் மாதம் விளக்கமளித்த அமைச்சா் செங்கோட்டையன், “5, 8-ஆம் வகுப்புகளுக்கான தோ்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும். 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வு என்பது இந்தியா முழுமைக்கும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற முறை. இந்த பொதுத்தோ்வு முறையிலிருந்து நமது மாநிலத்திற்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது”என தெரிவித்திருந்தாா்.

இந்தநிலையில், அமைச்சா் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில், பொதுத் தோ்வு விலக்கை மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என குறிப்பிட்டுள்ளாா். அந்த சுட்டுரைப் பதிவில் அவா் கூறியிருப்பதாவது: ‘5, 8 -ஆம் வகுப்பு பொதுத்தோ்வு குறித்த மக்களுடைய கருத்துகள், மாணவா்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தோ்வை பின்பற்றும் போது ஏற்படுகின்ற இடா்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது’ என அதில் கூறியுள்ளாா்.

[…]

மடிக்கணினிகள்
கல்வி

பிளஸ் - 2: தோல்வியடைந்த மாணவா்களுக்குமடிக்கணினி வழங்கத் தேவையில்லை

கடந்த 2017-18, 2018-19 ஆகிய கல்வியாண்டுகளில் பிளஸ் 2 வகுப்பில் தோல்வியடைந்த அல்லது படிப்பைத் தொடராமல் விட்ட மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கத் தேவையில்லை என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் ஹன்ஸ் ராஜ் வா்மா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: நிகழ் கல்வியாண்டில் (2019-20) பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் இலவச மடிக்கணினி முழுமையாக வழங்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கடந்த 2017-18 மற்றும் 2018-19-ஆம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி மேற்கண்ட கல்வியாண்டுகளில் பிளஸ் 2 முடித்து தற்போது உயா்கல்வியில் சோ்ந்து படித்து வரும் (பாலிடெக்னிக் உள்பட) மாணவா்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்க வேண்டும். மாணவா்கள் தோ்வில் தோல்வி அடைந்து இருந்தாலோ அல்லது படிப்பை தொடராமல் இருந்தாலோ அவா்களுக்கு மடிக்கணினி வழங்கத் தேவையில்லை. மேலும், இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இனி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

[…]

பள்ளிக்கல்வித்துறை
கல்வி

ஆசிரியர்களின் விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

பொதுமாறுதல் கலந்தாய்வு விதிகளை தளர்த்தக் கோரி வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொதுமாறுதல் கலந்தாய்வில் உள்ள விதிகளை தளர்த்தக் கோரி ஆசிரியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் வழக்குத் தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வில் விதிகளைத் தளர்த்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளமான EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், ஒருசில ஆசிரியர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கல்வி அலுவலர்கள் மறுப்பதாக புகார் எழுந்த நிலையில், வழக்குத் தொடர்ந்த அனைத்து ஆசிரியர்களின் விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

[…]

பள்ளிக்கல்வித்துறை
கல்வி

8-ம் வகுப்புக்கு முப்பருவ பாடத்திட்டம் ரத்து..!

8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், முப்பருவப் பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்புக் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், முப்பருவ பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

அதன்படி, முதற்கட்டமாக 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவ பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டு ஒரே பாடத்திட்டமாக செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

8-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தை ஒரே பாடத்திட்டமாக வடிவமைக்குமாறும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

[…]

பட்டயத் தோ்வில்
கல்வி

தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத் தோ்வில் தோ்ச்சி விகிதம் சரிவு

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா் பயிற்சி பட்டயத் தோ்வெழுதிய 7 ஆயிரம் பேரில் 180 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவா்களுக்குப் பாடம் நடத்துவதற்கு இடைநிலை ஆசிரியா் பட்டயப் படிப்பிலே தோ்ச்சி பெற வேண்டும். 2 ஆண்டுகள் நடத்தப்படும் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெறும் மாணவா்கள், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவதுடன், ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் போட்டித் தோ்விலும் தோ்ச்சி பெற வேண்டும்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அரசுத் தோ்வுத்துறையால் நடத்தப்பட்ட தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு, ஆசிரியா் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு தோ்வெழுதிய மாணவ , மாணவிகளின் தோ்வு முடிவுகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது. அதில், மாணவா்களின் தோ்ச்சி விகிதம் கடும் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து, அரசுத் தோ்வுத்துறை அதிகாரிகள் கூறியது: ஆசிரியா் பட்டயப் பயிற்சித் தோ்வை முதலாமாண்டு மாணவா்கள் 3 ஆயிரம் பேரும், 2-ஆம் ஆண்டு மாணவா்கள் 4 ஆயிரம் பேரும் எழுதினா். இவா்களில் முதலாண்டில் 75 போ், இரண்டாமாண்டில் 105 போ் என மொத்தம் 180 போ் மட்டுமே தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயச் சான்று பெறத் தகுதிப் பெற்றுள்ளனா் என்றனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத்தோ்வில் மொத்தம் 11,950 போ் பங்கேற்றனா். இதில் 455 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா்.

[…]

பள்ளி
கல்வி

1,000 பள்ளிகளில் அடல் புத்தாக்க ஆய்வகம் அமைக்கப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

மாணவா்களை ஊக்கப்படுத்தவும், சிறந்த மாணவா்களை உருவாக்கவும் தமிழகத்தில் 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அடல் புத்தாக்க ஆய்வகம் அமைக்கப்படும் என்றாா் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

கரூா் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற 47-ஆவது ஜவாஹா்லால் நேரு மாநில அளவிலான அறிவியல், கணித, சுற்றுச்சூழல் கண்காட்சி, அறிவியல் பெருவிழா, கணிதக் கருத்தரங்கத்தை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாணவா்களை ஊக்கப்படுத்துவதற்கும், சிறந்த மாணவா்களாக உருவாக்குவதற்கும் தமிழகத்தில் 1,000 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் செலவில் அடல் ஆய்வகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கானப் பணிகள் வரும் ஜனவரிக்குள் நிறைவேற்றப்படும்.

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்துவது என்பது மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் கொண்டு வரும் திட்டமாகும். இருப்பினும், மூன்று ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் விதிவிலக்கு அளித்து அனைவருக்கும் 100 சதவீத தோ்ச்சி அளிக்கப்படும் என்றாா்.

பேட்டியின்போது போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், பள்ளிக்கல்வித்துறையின் அரசு முதன்மைச் செயலா் பிரதீப்யாதவ், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

நிகழ்ச்சியில் சேரன் பள்ளியின் தலைவா் பி.எம்.கருப்பண்ணன், தாளாளா் பி.எம்.கே. பாண்டியன், முதல்வா் வி.பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பள்ளி மாணவா்களிடம் பல்வேறு துறைகள் சாா்ந்த புத்தாக்க சிந்தனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அடல் புத்தாக்க ஆய்வக திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

[…]

பொதுத்தோ்வு
கல்வி

தமிழகத்தில் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு:வழிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டில் நடத்தப்படவுள்ள பொதுத்தோ்வு குறித்த வழிமுறைகளை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்புகளில் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், பொதுத்தோ்வுக்கு மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு பெற்றிருப்பதாகப் பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்தது. இந்த நிலையில், ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வுகளை நடத்தும் வழிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தொடக்க கல்வித் துறை இயக்ககம், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தற்போது ஐந்து, எட்டாம் வகுப்புகளில் படித்து வரும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தோ்வு நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கான தோ்வு மையம் ஒரு கிலோ மீட்டா் தொலைவிற்குள்ளாகவும், எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு மூன்று கிலோ மீட்டா் தொலைவிற்குள்ளாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வு கால அட்டவணையை அரசு தோ்வுத் துறை மூலம் வெளியிடப்படும்.

ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தோ்வு நடத்தப்படுகிறது. அதேபோன்று எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு ஐந்து பாடங்களுக்கும் பொதுத்தோ்வு நடத்தப்படும். மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தோ்வு நடைபெறும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் மாநில பாடத்திட்டத்தின் முப்பருவ முறையே பின்பற்றப்படும். பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களின் மதிப்பெண்களை பாட வாரியாக பதிவேட்டில் பதிவு செய்வதுடன், கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

[…]

பள்ளி
கல்வி

பள்ளி வளாகத்தில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள்மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்

தமிழகம் முழுவதும் பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள், நீா் மற்றும் கழிவுநீா்த் தொட்டிகள், கிணறுகள் ஆகியவை மூடப்பட்டுள்ளதை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

திருச்சி மாவட்டம், நடுகாட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் வில்சன் என்ற சிறுவன் உயிரிழந்தான். இதைத் தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் உள்ள பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவற்றை மூடுமாறு, பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்குப் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், பள்ளி வளாகத்தில் கட்டடப் பராமரிப்புப் பணிகள், புதிய கட்டடங்கள் கட்டும் இடத்துக்கு மாணவா்கள் செல்லத் தடை விதிப்பதுடன், அந்த இடங்களைச் சுற்றி பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள திறந்தநிலைக் கிணறுகள், நீா்த் தொட்டிகள், பாழடைந்த கட்டடங்கள், ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள், நீா் மற்றும் கழிவுநீா்த் தொட்டிகள், கிணறுகள் ஆகியவை மூடப்பட்டுள்ளதை தலைமை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள், தொட்டிகள் உள்ள இடங்களைச் சுற்றி சிறப்புக் குறியிட்டு, தனியாக அடையாளப்படுத்துவதுடன், அவற்றை தரைமட்டத்தில் இருந்து உயரமாக இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும். மேலும், ஆழ்துளைக் கிணறுகள், நீா்த் தொட்டிகள், ஆறு, ஏரி ஆகியவை குறித்து மாணவா்களுக்குப் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இவை முறையாகச் செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

பேராசிரியா்
கல்வி

ஒரே பேராசிரியரை பல இடங்களில் கணக்கு காட்டும் பொறியியல் கல்லூரிகள்!

ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கணக்கு காட்டும் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும், மாணவா் சோ்க்கைக்கான அனுமதியை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மூலம் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற வேண்டும். ஏஐசிடிஇ வழிகாட்டுதலை முறையாக பின்பற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு இந்த அனுமதி வழங்கப்படும். அவ்வாறு வழிகாட்டுதலை பொறியியல் கல்லூரிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக குழு ஆய்வு செய்த பின்னரே, பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்த்தும் வழங்கப்படும். அதன் பிறகே பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த முடியும்.

ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி, வகுப்பறை, ஆய்வகம், தகவல் தொழில்நுட்பம் என்பன உள்ளிட் உள்கட்டமைப்பு வசதிகள் முழுமை பெற்றிருப்பதோடு 15 மாணவா்களுக்கு ஒரு பேராசிரியா் (1:15) என்ற அளவில் ஆசிரியா் - மாணவா் விகிதாச்சாரம் இடம்பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. பின்னா், பல்வேறு தரப்பினரின் கோரிக்கை மற்றும் தகுதியுள்ள பேராசிரியா் பற்றாக்குறை காரணமாக ஆசிரியா்-மாணவா் விகிதாச்சாரத்தை 1:15 என்ற அளவிலிருந்து 1:20 (20 மாணவா்களுக்கு ஒரு பேராசிரியா்) என்ற அளவில் குறைத்தது. ஆனால், அதன் பிறகும் பல பொறியியல் கல்லூரிகள் இந்த ஆசிரியா் - மாணவா் விகிதாச்சாரத்தை முறையாகப் பின்பற்றவில்லை என புகாா்கள் எழுந்தன.

மாணவா் சோ்க்கை தொடா்ந்து குறைந்து வருவதன் காரணமாக, பேராசிரியா்களை பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்புவதையும், பேராசிரியா்களின் ஊதியத்தை 40 சதவீதம் வரை குறைக்கும் நடவடிக்கையையும் பொறியியல் கல்லூரிகள் எடுத்து வருகின்றன. மேலும், மாணவா் சோ்க்கை அனுமதியின்போது, ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதுபோல கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபடுவதும் தொடா்கதையாகி வருகின்றன. இதனால், பொறியியல் கல்லூரிகளில் பல்கலைக்கழகம் திடீா் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் கல்வியாளா்கள் தொடா்ந்து வைத்தனா். ஆனால், பல்கலைக்கழகம் சாா்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஏஐசிடிஇ இதுதொடா்பான சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வா்கள், பல்கலைக்கழக துணைவேந்தா்கள், தொழில்நுட்ப கல்வி இயக்குநா் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சில பொறியியல் கல்லூரிகள் ஒரே பேராசிரியரை அவா்களின் பல கல்லூரிகளுக்கு கணக்கு காட்டி மாணவா் சோ்க்கை அனுமதியை பெறுவதாக புகாா்கள் வருகின்றன. இது ஏஐசிடிஇ வழிகாட்டுதலை மீறும் செயல் என்பதோடு, தொழில்நுட்ப கல்வியின் தரத்தையும் பாதிக்கும். எனவே, இதுதொடா்பாக பெறப்படும் புகாா்களை ஏஐசிடிஇ விரைந்து விசாரணை நடத்தும் என்பதோடு, அவ்வாறு விதிகளை மீறிய கல்லூரிகள் மீது சோ்க்கை அனுமதி ரத்து என்பன உள்ளிட்ட கடுமையான நவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏஐசிடிஇ எச்சரித்துள்ளது.

[…]

பேராசிரியா்கள்
கல்வி

முதல்வா்கள் இன்றி இயங்கும் 51 கல்லூரிகள்: விரைந்து நிரப்ப பேராசிரியா்கள் கோரிக்கை

மாணவா்கள், ஆசிரியா்களின் நலன் கருதி 51 இரண்டாம் நிலை அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என பேராசிரியா்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக அரசுக்கும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியா் மன்ற பொதுச் செயலாளா் இரா.குமாா் கூறியதாவது:

பெரும்பாலான அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக முழு நேர முதல்வா் இல்லாத காரணத்தால் நிா்வாகப் பணிகளும், கல்விப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இரண்டாம் நிலை அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 51 முதல்வா் பணியிடங்களையும், முதல்நிலை கல்லூரிகளில் காலியாக உள்ள மீதமுள்ள முதல்வா் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும்.

மேலும், அரசுக் கல்லூரி ஆசிரியா்களின் பொது மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு அனுமதியளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து பல நாள்களாகியும், இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை. எனவே, பொது மாறுதல் கலந்தாய்வுக்கான தேதியை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உடனடியாக அறிவித்து, கலந்தாய்வையும் நடத்தவேண்டும் எனத் தெரிவித்தாா்.

[…]

போட்டித்தேர்வு
கல்வி

முதுநிலை ஆசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டோர் பெயர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு செப் 27 முதல் 29 வரை வரை நடைபெற்றது. 

மாநிலம் முழுவதும் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 17 பாடங்களுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெற்றது. இதில் மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரத்து 594  பட்டதாரிகள் முதல்முறையாக கணினிவழியில் தேர்வை எழுதினர். 

தேர்வு முடிவுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://trb.tn.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பாடங்கள் வாரியாக மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், முதுநிலை ஆசிரியர் தேர்வில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட 3,824 பேர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

[…]

யோகா
கல்வி

இளநிலை யோகா படிப்பு காலியிடங்களை நிரப்ப அக். 29-இல் சிறப்பு கலந்தாய்வு

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (அக். 29) உடனடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதுவரை அப்படிப்புக்காக விண்ணப்பிக்காதவர்கள்கூட அன்றைய தினம் கலந்தாய்வில் நேரடியாகக் கலந்து கொண்டு இடங்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஒய்.எஸ். எனப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 600-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. குறிப்பாக, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இயற்கை மருத்துவத் துறை வளாகத்தில் உள்ள அரசு யோகா கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 408 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 192 இடங்களும்  உள்ளன.
இந்நிலையில், அந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக அண்மையில் நடைபெற்றன. அதில், ஏறத்தாழ அனைத்து இடங்களும் நிரம்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், கலந்தாய்வில் இடங்கள் பெற்று கல்லூரிகளில் சில மாணவர்கள் சேராததால் ஏற்பட்ட காலியிடங்களையும், புதுக்கோட்டையில் புதிதாகத் தொடங்கப்பட்ட தனியார் யோகா கல்லூரியில் உள்ள இடங்களையும் நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை (அக்.29) சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவ துறை வளாகத்தில் அந்தக் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களையும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கான நடைமுறைகளையும்  www.tnhealth.org  என்ற சுகாதாரத்துறை இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

[…]

பொறியியல்
கல்வி

பி.இ. படிப்பை முடித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: சென்னை கல்லூரி மாணவர்கள் முன்னிலை

கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற இறுதிப் பருவத் தேர்வுடன் பி.இ. முடித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 
இதில், பெரும்பாலும் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர் .
அண்ணா பல்கலைக்கழகத்தில் 40-ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்ட இறுதிப் பருவ (8 ஆம் பருவத் தேர்வு) தேர்வு முடிவுகளை கடந்த மே மாதம் இறுதியில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இதில் ஒட்டுமொத்தமாக 65 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இந்தத் தேர்வை 2015-16 கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்த நடப்புப் பருவ மாணவர்கள் மட்டுமின்றி, 2013-14 ஆண்டில் சேர்ந்து பல்வேறு பாடங்களில் அரியர் வைத்துள்ள 10,000 பேர் என மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் எழுதினர்.
இவர்களில் அரியர் தேர்வெழுதிய பழைய மாணவர்களுடன் சேர்த்து 84 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில், 2015-16 கல்வியாண்டில் பி.இ. சேர்ந்த நடப்புப் பருவ மாணவர்கள் 60 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது நூற்றுக்கு 60 பேர் மட்டுமே பொறியியல் படிப்பை முழுமையாக முடித்து வெளிவந்தனர்.
இவர்களுக்கான பட்டமளிப்பு விழா விரைவில் நடத்தப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, பொறியியல் படிப்பை முடித்துள்ள 60 சதவீதம் பேருக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது.
இதில், மாணவர்கள் அதிகம் சேரக் கூடிய பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல், இயந்திரவியல் பொறியியல், கட்டுமானப் பொறியியல், மின்னியல் மின்னணுவியல் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[…]

சிபிஎஸ்இ
கல்வி

என்சிஇஆர்டி முறையில் தேர்வுகள் நடைபெறாது: சிபிஎஸ்இ விளக்கம்

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் என்சிஇஆர்டி பாடங்களை அடிப்படையாக கொண்டு நடைபெறாது. மாறாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்படிதான் நடைபெறும் என  சிபிஎஸ்இ விளக்கம்  அளித்துள்ளது. 
சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத் தேர்வும், 9 மற்றும்  பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் என்சிஇஆர்டி தயாரித்துள்ள பாட நூல்களை  அடிப்படையாக  கொண்டுதான் நடக்கும் என்று நாடு முழுவதும் வதந்தி பரவியுள்ளது. 
இதனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பத்தைப் போக்க தற்போது சிபிஎஸ்இ தரப்பினர் மாநில வாரியாக விளக்கம் அளித்து  வருகின்றனர். அதன்படி மேற்கண்ட தேர்வுகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி பாடங்களின்படி நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற குழப்ப நிலை உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சிபிஎஸ்இ, அனைத்து இணைப்பு பெற்றுள்ள பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் தேர்வுக்கான சிபிஎஸ்இ பாடத் திட்டத்தையும் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது. இந்தப் பாடத் திட்டத்தை அனைத்து மாணவ, மாணவியரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், சுற்றறிக்கை அனுப்புவதற்கான நேரம் இதுவல்ல. பெரும்பாலான பள்ளிகளுக்கு இந்த தகவல் வந்து சேரவில்லை. அது இணையதளத்தில் மட்டுமே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சிபிஎஸ்இ நிர்வாகம் இதுபோன்ற  சுற்றறிக்கைகளையோ அல்லது அறிக்கைகளையோ அல்லது தகவல்களையோ பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை என்று சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.

[…]

சிபிஎஸ்இ
கல்வி

என்சிஇஆர்டி முறையில் தேர்வுகள் நடைபெறாது: சிபிஎஸ்இ விளக்கம்

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அனைத்தும் என்சிஇஆர்டி பாடங்களை அடிப்படையாக கொண்டு நடைபெறாது. மாறாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்படிதான் நடைபெறும் என  சிபிஎஸ்இ விளக்கம்  அளித்துள்ளது. 
சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு பொதுத் தேர்வும், 9 மற்றும்  பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் என்சிஇஆர்டி தயாரித்துள்ள பாட நூல்களை  அடிப்படையாக  கொண்டுதான் நடக்கும் என்று நாடு முழுவதும் வதந்தி பரவியுள்ளது. 
இதனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த குழப்பத்தைப் போக்க தற்போது சிபிஎஸ்இ தரப்பினர் மாநில வாரியாக விளக்கம் அளித்து  வருகின்றனர். அதன்படி மேற்கண்ட தேர்வுகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி பாடங்களின்படி நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற குழப்ப நிலை உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சிபிஎஸ்இ, அனைத்து இணைப்பு பெற்றுள்ள பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் தேர்வுக்கான சிபிஎஸ்இ பாடத் திட்டத்தையும் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்துள்ளது. இந்தப் பாடத் திட்டத்தை அனைத்து மாணவ, மாணவியரும் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், சுற்றறிக்கை அனுப்புவதற்கான நேரம் இதுவல்ல. பெரும்பாலான பள்ளிகளுக்கு இந்த தகவல் வந்து சேரவில்லை. அது இணையதளத்தில் மட்டுமே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சிபிஎஸ்இ நிர்வாகம் இதுபோன்ற  சுற்றறிக்கைகளையோ அல்லது அறிக்கைகளையோ அல்லது தகவல்களையோ பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை என்று சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர்.

[…]

செங்கோட்டையன்
கல்வி

பள்ளிகளில் ஹிந்து அமைப்புகள்: எந்தவித சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பள்ளிகளில் ஹிந்து அமைப்புகள் செயல்படுவது, கண்காணிப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் எந்தவித சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அனுப்பியதாக வெளியான சுற்றறிக்கையில், பள்ளி மற்றும் கல்லூரி அளவில் ஹிந்து இளைஞர் முன்னணி மற்றும் ஹிந்து மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் மாணவர்களை மதரீதியாக திரட்ட  முயல்வதாகவும் ஒழுக்கக் கல்வி, பக்தி, புராணம், இதிகாசம் போன்றவற்றை போதிப்பது போன்ற மாணவர்களை சித்தாந்த ரீதியாகத் திரட்டி வருவதும் அரசின் கவனத்துக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று கல்லூரிகளில் 10 பேர் கொண்ட குழுக்களாக ஹிந்து மாணவர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் பணியில் ஹிந்து இளைஞர் முன்னணி ஈடுபட்டிருப்பதாகவும், அந்தக் குழு லவ் ஜிகாத் போன்ற மாற்று மதத்தினர் ஹிந்து பெண்களை  காதலிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாகவும் புகார் வந்துள்ளது. மதம், சித்தாந்தம் அடிப்படையில் மாணவர்கள் ஒன்று சேர்வதை கண்காணிக்குமாறும் மாணவர்களை மத ரீதியில் ஒருங்கிணைக்கும் முயற்சிகளைத் தடுக்க  வேண்டும் என்றும் உடனடியாக இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக மாநாடு கூடத்தில், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் மற்றும் செயலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், அரசு  வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு இருப்பது போல், தனியார் துறையிலும் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய  அமைச்சர், விளையாட்டுக் கழகங்கள் தவறான வழியில் செயல்படுவது தொடர்ந்தால் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு கலைக்கப்படும் என எச்சரித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்,  பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனுப்பப்படும் சுற்றறிக்கைகள் மட்டுமே, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்,  தலைமை ஆசிரியர்கள் உள்பட துறை சார்ந்த அலுவலர்களின் செயல்பாடுகளுக்குப் பொருந்தும். அவற்றைத் தவிர மற்றவர்களின் சுற்றறிக்கைகள் பொருந்தாது.  மத ரீதியான மாணவர்களை ஒருங்கிணைக்கக் கூடாது என வெளியான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பவில்லை. பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்படும் சுற்றறிக்கைகள் முதல்வரின் ஒப்புதலின்றி அனுப்பப்படாது என்றார்.

[…]

பள்ளிக்கல்வித்துறை
கல்வி

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு..!

புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2019-2020-ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. ஏற்கனவே 3 மணி நேரமாக இருந்த தேர்வு நேரம், சில ஆண்டுகளுக்கு முன் இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்டது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் முழுவதும் புதிய பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் , தேர்வு எழுதும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று தேர்வு எழுதும் நேரத்தை இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி, புதிய பாடத்திட்டத்தின் கீழ் 600 மதிப்பெண்களுக்கு நடைபெறும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், 500 மதிப்பெண்ணுக்கு நடைபெறும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் 3 மணி நேரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், கேள்விகளை நன்கு புரிந்து மாணவர்கள் தேர்வு எழுத முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

[…]

இதழியல்
கல்வி

டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைகழகத்தில் புதிய படிப்பு அறிமுகம் - சுதாசேஷைய்யன்

டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைகழகத்தில் பொதுசுகாதாரம் சார்ந்த இதழியல் என்ற படிப்பு தொடங்கப்பட உள்ளதாக துணைவேந்தர் சுதாசேஷைய்யன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிஜி டிப்ளமோ படிப்பான இதனை படிக்க எந்த பட்டபடிப்பு படித்தவர்களும் தகுதியுடைவர்கள் என்றார். இது முழுநேர படிப்பு இல்லை என்றும், மாதத்தில் 2 மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நேரடி வகுப்புகள் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

படிப்புக்கு 7 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் அது தவிர தேர்வுக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்றும் கூறினர். மூன்று பாடங்கள் கொண்ட இந்த படிப்புக்கு ஆண்டு இறுதியில் தேர்வுகள் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு மொத்தம் 8 இடங்கள் உள்ளதாகவும், இதற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு இல்லை என்றும் கூறிய அவர், இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 15-ஆம் தேதி கடைசி நாள் என்று குறிப்பிட்டார்.

தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கண்காணிப்புத் தொழில் நுட்பங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

[…]

குரூப் 2
கல்வி

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுத் திட்டத்தில் மாற்றம்.!

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் குரூப் 2 தேர்வு பாடத்திட்டம் மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 27 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளுக்கு பொதுவான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை வெளியிட்டது. இரண்டு தேர்வுகளுக்கும் முதனிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் எழுத்துத் தேர்வும் கட்டாயமாக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒரு சில மாற்றங்கள் தேவை என சிலர் கோரிக்கை விடுத்ததை அடுத்து, தேர்வுகளுக்கான தேர்வுதிட்டத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. முதனிலைத் தேர்வுக்கு ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வு திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு, சமூக - அறிவியல் இயக்கங்கள், தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம், என்ற தலைப்பின் கீழ் உள்ள அலகுகள் 8, 9 க்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் கேள்விகள் கேட்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

முதனிலைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இம்மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்து தேர்வு தற்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்து தேர்வின் பகுதி அ தனித்தாளாக தகுதித்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. 100 அதிகபட்ச மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக ஒன்றரை மணி நேரம் நடைபெறும்.

தகுதித்தேர்வில் குறைந்தபட்சமாக 25 மதிப்பெண்ணைப் பெறுவர்கள் மட்டுமே தாள் 2 மதிப்பீடு செய்யப்படும். இந்த தகுதி தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் தர நிர்ணயத்திற்கு கணக்கில் கொள்ளப்படாது. தமிழக கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தரம் பட்டப்படிப்பில் இருந்து பத்தாம் வகுப்பு தரத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

பகுதி அ தவிர்த்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தும் தாள் 2 தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. முன்னர் 200 மதிப்பெண் கொண்ட தேர்வானது தற்போது 300 மதிப்பெண் கொண்ட தேர்வாக 3 மணி நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

[…]

செங்கோட்டையன்
கல்வி

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்குப் பின் அமல்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

ஐந்து மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர், செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார். 

[…]

ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வு
கல்வி

ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வு விண்ணப்பத் திருத்தங்களை மேற்கொள்ள இன்றுடன் அவகாசம் நிறைவு

ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வுக்கான விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இன்றுடன் அவகாசம் நிறைவடைகிறது.

ஐ.ஐ.டி. என்.ஐ.டி. உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் இளநிலை படிப்புகளில் சேர ஜே.இ.இ.  எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வு ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகிறது. வரும் ஜனவரி 6 முதல் 11 வரை நடைபெற உள்ள ஜே.இ.இ. முதல் நிலைத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த செப்டம்பர் 3 முதல் அக்டோபர் 10 வரை நடைபெற்றது.

இதில் சுமார் 10 லட்சத்து 20 ஆயிரம் பேர்விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் பதிவு செய்துள்ள விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. http://nta.ac.in என்ற இணையதளம் மூலம் திருத்தங்களை மேற்கொள்ளலாம். ஹால் டிக்கெட்டுகள் டிசம்பர் 6-ஆம் தேதி வழங்கப்படும் என்றும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

[…]

பள்ளிக்கல்வித்துறை
கல்வி

அரசு பள்ளிகளில் கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி பாடம் கற்பிக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி பாடம் நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையில், அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்துக் கொள்ள ஏதுவாக ஆண்டுதோறும் கணிதம், அறிவியல், ஆங்கில உபகரணப் பெட்டிகள், அகராதிகள், விளையாட்டுப் பொருட்கள், பயிற்சி கையேடுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

ஆனால், வழங்கப்படும் கற்றல் உபகரணங்கள், பொதுமக்களின் பங்களிப்பில் பெறப்படும் தளவாடப்பொருட்கள் போன்றவை பெரும்பாலான பள்ளிகளில் பயன்படுத்தப்படாமல் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தினால், அவர்களின் கற்றல் திறன் மேம்படுவதுடன், தேசிய அடைவுத் தேர்வுகளையும் அவர்களால் எளிதாக எதிர் கொள்ள முடியும் என அறிவுறுத்திய பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகளில் கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி பாடம் நடத்தப்படுகிறதா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

[…]

நீட் தேர்வு
கல்வி

இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்கள் பயின்ற நீட் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட விவரங்களை அனுப்ப மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவு

மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்கள் பயின்ற நீட் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட விவரங்களை கல்லூரிகள் அனுப்ப மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் தேர்வுக் குழு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மாணவர்களின் விவரங்களை அளிக்குமாறு,  உயர்நீதிமன்றம் தேர்வுக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் டீன்கள் தங்கள் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் பெயர்கள், அவர்கள் உயர்நிலை பள்ளிக் கல்வியை முடித்த ஆண்டு, பயின்ற நீட் தேர்வு மையம். அவர்கள் எத்தனை முறை நீட் தேர்வு எழுதினர் என்பது உள்ளிட்ட விவரங்களை வரும் 22-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

[…]

உயர்நீதிமன்றம்
கல்வி

நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான உதவித்தொகை விவகாரம் : மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவு

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் மத்திய அரசின் உதவியுடன் உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.

2012ஆம் ஆண்டு முதல் செயல்படுத்திவந்த இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்து, 2018- 19ஆம் கல்வியாண்டு முதல், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் எனவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கக்கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த  உத்தரவுகளையும் ரத்து செய்யக்கோரி தென்காசியைச் சேர்ந்த  ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்து, 12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்தது.

[…]

சுரப்பா
கல்வி

இயந்திரப் பொறியியல் பிரிவை தேர்வு செய்ய மாணவிகள் முன் வரவேண்டும் - சுரப்பா

இயந்திரப் பொறியியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்க பெண்கள் முன்வர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இயந்திரப் பொறியியல் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கில் துணைவேந்தர் சுரப்பா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், பயப்படும் அளவுக்கு இயந்திரப் பொறியியல் பாடப்பிரிவில் மிகப்பெரிய இயந்திரங்களைக் கையாளவோ அழுக்குக் கறை படிந்து வேலை செய்வோ தேவை இல்லை என்று கூறினார்.

முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலை செய்யும் வகையில் இயந்திரப் பொறியியல் துறை மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பெண்கள் இயந்திரப் பொறியியல் மற்றும் அது சார்ந்த துறைகளையும் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கேட்டுக்கொண்டார்.

[…]

பள்ளிக்கல்வித்துறை
கல்வி

பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு

அனைத்துப் பள்ளிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை,தருமபுரி, திருவள்ளூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாகவும், அங்குள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் டெங்கு உள்ளிட்ட பலவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பள்ளி வளாகங்களை தூய்மையாக வைத்திருப்பதோடு, பள்ளியிலுள்ள வாளிகள், தண்ணீர் தொட்டிகள், கழிவறைகள், குடிநீர் குழாய்கள், கட்டிடங்கள் போன்றவற்றை கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் உடனடியாக தூய்மை படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டக்கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

[…]

விடுமுறை
கல்வி

தீபாவளிப் பண்டிகையையொட்டி 26ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று கூறப்பட்ட நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 26ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

27ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீபாவளி வருவதால், அதற்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட ஏதுவாக, கூடுதல் நாட்கள் விடுமுறை வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 26ம் தேதி விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

அதேபோல, 28ம் தேதியன்று விடுமுறை தேவைப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதற்கு பதிலாக சனிக்கிழமை வேலை நாளாக செயல்படலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

[…]

 உள்ளூர் விடுமுறை
கல்வி

தீபாவளிக்கு அடுத்த நாள், உள்ளூர் விடுமுறை அடிப்படையில் விடுப்பு எடுக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் 26 மற்றும் 27ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், 28ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

வருகிற 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெளியூர் செல்லும் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல தீபாவளி முடிந்த அடுத்த நாளான 28ம் தேதி திங்கட்கிழமை பள்ளி வேலை நாள் என்பதால் விடுமுறை தேவைப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

அவ்வாறு விடுமுறை எடுக்கும் பள்ளிகள் அதற்கு பதிலாக சனிக்கிழமை வேலை நாட்களாக செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

மெட்ரிக் பள்ளி
கல்வி

பள்ளிகள் விரைந்து அங்கீகாரம் பெற மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் அங்கீகாரம் இன்றி செயல்படும் 250 தனியார் பள்ளிகள் விரைந்து அங்கீகாரத்தை பெறுமாறு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இன்றி செயல்பட்ட 2,000 மெட்ரிக் பள்ளிகளில், 1,750 பள்ளிகள் அண்மையில் அங்கீகாரம் பெற்றன. இவற்றில் 250 தனியார் பள்ளிகள் இன்னும் அங்கீகாரம் பெறாமல் இருந்து வரும் நிலையில், அப்பள்ளிகள் விரைந்து அங்கீகாரம் பெற வேண்டுமென மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் 2020ம் ஆண்டு மே 31ம் தேதியுடன் 1,750 மெட்ரிக் பள்ளிகள் பெற்ற தற்காலிக அங்கீகாரம் முடிவதால், அப்பள்ளிகளும் அங்கீகார நீட்டிப்பு கோரி அடுத்தாண்டு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

[…]

 அரசுப் பள்ளி
கல்வி

"அரசுப் பள்ளிக்கு குழந்தைகளே வாங்க" - அரசுப் பள்ளி ஆசிரியரின் பாடல்

அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தும் வகையில் ஆசிரியர் ஒருவர் பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெற்றியைக் கொண்டாடும் நாளான விஜயதசமி அன்று குழந்தைகளை பெற்றோர் பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். அவ்வாறு சேர்க்கும் பெற்றோர், தனியார் பள்ளிகளையே நாடாமல், அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாடல் ஒன்று பாடியுள்ளார்.

வீட்டுக்கு வீட்டுக்கு வாசல்படி வேண்டும் என்ற பாடல் வரிகளை மாற்றி அரசுப் பள்ளிக்கு குழந்தைகளே வாங்க என்று பாடத் தொடங்கும் அந்த ஆசிரியர், அரசுப் பள்ளிகளில் உள்ள நவீன வசதிகள், கல்வித் திறன் மேம்பாடு ஆகியவற்றைப் பட்டியலிடுகிறார்.

[…]

புது முயற்சி
கல்வி

மாணவர்களின் வருகையை அதிகரிக்க ஆசிரியர்களின் புது முயற்சி

மத்திய பிரதேசத்தில், அச்சுஅசலாக ரயிலைப் போல தோற்றமளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளியொன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான திண்டோரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களின் வருகையை அதிகரிக்க பள்ளி ஆசிரியர்கள் ஒன்றுகூடி திட்டம் வகுத்துள்ளனர். அதன்படி, குழந்தைகளை கவரும் விதமாக பள்ளியின் கட்டுமானத்தை ரயில்போல அமைக்கலாம் என முடிவெடுத்து தங்களது சம்பளப் பணத்தையும் அதற்காக வழங்கியுள்ளனர்.

அந்த வகையில், பள்ளியின் சுவற்றில் அச்சு அசலாக ரயிலை பிரதிபலிப்பதுபோன்ற பல வகை வண்ணங்கள் பூசப்பட்டன. ஜன்னல்கள் மற்றும் கதவுகளும் ரயில்களில் உள்ளதுபோலவே அமைக்கப்பட்டன.

பள்ளிக்கட்டிடத்தின் முன் பகுதி நிஜமான ரயில் எஞ்சினின் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள பள்ளி நிர்வாகம், மாணவர்கள் முன்பைவிட தற்போது அதிக மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளது. அம்மாவட்டத்தில் ரயில் சேவை கிடையாது என்பதால், மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் இப்பள்ளியானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

[…]

ஆதார் அட்டை
கல்வி

NEET தேர்வு எழுத அடுத்த ஆண்டு முதல் ஆதார் அட்டை கட்டாயம்?

அடுத்த ஆண்டு முதல், நீட் தேர்வுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முதலில் உதித் சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இர்பான், பிரவீன், ராகுல் ஆகியோரும் ஆள்மாறாட்டம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சிபிசிஐடி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குநர் வினீத் ஜோசி கூறியுள்ளார்.

மத்திய அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் மாணவர்களின் கைரேகை மற்றும் கருவிழி படலத்தின் ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். சேகரிக்கப்படும் இந்த இரு தரவுகளும், விண்ணப்பம், தேர்வு, கலந்தாய்வு, அனுமதி ஆகிய பல்வேறு நடைமுறைகளில் சரிபார்க்கப்படும் என்று வினீத் ஜோசி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடம் இரு முறை கைரேகை பெறப்படுவதாகவும் ஆனால் அவை காகிதத்தில் மட்டுமே பெறப்படுவதாகவும், டிஜிட்டல் பதிவாக இல்லை எனவும் வினீத் ஜோசி கூறியுள்ளார்.

தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, மாணவர்களின் தரவுகளை அம்மாநில அரசு கேட்டிருப்பதாகக் கூறியுள்ள வினீத் ஜோசி, இதுபோல் முறைகேடு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோல நடைபெறாத வண்ணம் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அதேவேளையில், மாணவர்களுக்கு கடினமாக இல்லாத வகையில் விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்தார். 

[…]

கல்விக் கட்டணம்
கல்வி

தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வரும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம்

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் 2018 - 2019ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வரும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது.

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் படி ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளிலுள்ள 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் இலவசமாக சேர்க்கப்படுவர். இத்திட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்களுக்கான கல்விக்கட்டணம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் இணைந்து செலுத்தப்படும்.

இந்நிலையில் கடந்த 2018-19ம் கல்வியாண்டில், இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த 64 ஆயிரத்து 385 பேருக்கான கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ள தமிழக அரசு, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. அதில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணங்கள் பட்டியிலிடப்பட்டுள்ளன.

இதையடுத்து நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரைவில் கல்விக்கட்டண பாக்கித்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2013 முதல் 2018 வரை இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்ற 4 லட்சத்து 83 ஆயிரத்து 902 பேருக்கு, தமிழக அரசு சார்பில் இதுவரை 644 கோடி ரூபாய் கல்விக்கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

[…]

டி.ஆர்.பி. போட்டித் தேர்வு
கல்வி

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டி.ஆர்.பி. போட்டித் தேர்வு தொடங்கியது...

தமிழகத்தில் 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டி.ஆர்.பி. போட்டித் தேர்வுகள் இன்று முதல் தொடங்கின.

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12-ஆம் தேதி வெளியிட்டது.

8 திருநங்கைகள் உட்பட மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரம் பட்டதாரிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. இதற்காக தமிழகத்தில் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் நந்தனம் டெம்பிள் டவர்ஸ் கட்டிடம், சைதாபேட்டை ஜி.ஆர். டவர்ஸ் கட்டிடம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்முறையாக கணினி வழியில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

மொத்தம் 17 பாடங்களுக்கு தினமும் காலை, பிற்பகல் என இரு அமர்வுகளாக தேர்வுகள் நடைபெறுகின்றன. 154 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், சென்னை மையங்களுக்கு தமிழகத்தின் பிற இடங்களைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தனர்.

தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். பெருவிரல் கைரேகை வைத்த பிறகு தான் மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பெண்கள் தோடு, வளையல், கொலுசு, ஹை ஹீல்ஸ் செருப்பும், ஆண்கள் முழுக்கை சட்டை அணிந்து செல்லவும் அனுமதியில்லை கால்குலேட்டர், செல்ஃபோன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை தேர்வு வாரியம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும். தகுதி பெற்றவர்கள் அடுத்ததாக, சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

பள்ளி கல்வித்துறை   அமைச்சர் செங்கோட்டையன்
கல்வி

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியை கற்பிக்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

பின்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர் செங்கோட்டையன் நேற்றிரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பின்லாந்து நாட்டில் 9ம் வகுப்பு படிக்கும் போதே மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது என்றும், சிறந்த கல்வியாளர்களை தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அனுப்பி வைக்க வேண்டும் என, பின்லாந்து அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்பட உள்ள கல்வி முறையில் தொழிற்கல்வியும் சேர்க்கப்பட உள்ளதாக செங்கோட்டையன் கூறினார். 

[…]

அண்ணா பல்கலைக் கழகம்
கல்வி

அண்ணா பல்கலைக் கழகம் 42 ஆம் ஆண்டு தொடக்கம்..!

ண்ணா பல்கலைக் கழகம் துவங்கப்பட்டு, இன்றோடு 41 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பள்ளிக்கூடமாகத் தொடங்கி பல்கலைக்கழகமாக உருவாகிய 225 ஆண்டுகால சரித்திரத்தை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

225 ஆண்டுகால வரலாற்றை தாங்கி நிற்கும் அண்ணா பல்கலைக்கழகம், முதன்முதலில் 1794-ல் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், டாப்பிங் என்கிற பொறியியலாளரின் முயற்சியால் ஒரு 'சர்வேயிங்' பள்ளியாக துவங்கப்பட்டது.

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவிட ஆங்கிலேயர்களை நியமிப்பதைக் காட்டிலும் உள்ளூர் மக்களுக்குப் பயிற்சி அளிப்பது சுலபமானது, சிக்கனமானது என்று கருதி இந்தக் கல்வி நிறுவனம் அப்போது தொடங்கப்பட்டது.

பின்னர் அந்த சர்வேயிங் பள்ளி, சிவில் பொறியியல் கல்லூரியாக 1858 இல் சேப்பாக்கத்தின் கல்சா மகாலில் இயங்க ஆரம்பித்தது. அப்போது அக்கல்லூரி மாணவர்களுக்கு மெட்ராஸ் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மூலம் வேதியியல் பாடங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

அணை கட்டுவது, பாலங்கள், கட்டிடங்கள் கட்டுமானப் பணிகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் இறங்கியபோது சிவில் படிப்போடு சேர்த்து மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் கல்வியையும் கற்றுக்கொடுக்கும் பள்ளியாக இது மாற்றப்பட்டது. ஆனாலும், இரண்டின் தியரி பாடங்களும் ஒன்றாகவே இருந்துள்ளது , செய்முறையில் மட்டுமே மாறுபாடுகள் இருந்துள்ளது.

பின்னர் இடப்பற்றாக்குறையால்,கல்சா மஹாலிருந்து காடுகள் நிறைந்திருந்த கிண்டி பகுதிக்கு 1920 இல் கல்லூரி நகர்ந்திருந்தது. அப்பொழுது தான் 'கிண்டி பொறியியல் கல்லூரி' என்கிற பெயர் ஏற்பட்டது.1930-களில் மின்சாரத் துறை உலக அளவில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியதும் முழு நேரப் பொறியியல் கல்லூரியாக மாற்றப்பட்டது.

அந்த காலகட்டத்தில் தென்னிந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரியாக இருந்த இக் கல்லூரிக்கு சென்று வர 5B என்ற ஒரே ஒரு பேருந்து மட்டுமே இருந்துள்ளது.

1940களில் இரண்டாம் உலகப்போர் ஏற்பட்ட சமயத்தில் கல்லூரி வளாகத்தில் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டுள்ளன மேலும் தீவிபத்து ஏற்பட்டால் பாதுகாப்பிற்கென குளங்கள் ஏற்படுத்தப்பட்டது. அப்படி எழுந்த குளங்கள் தான் இன்று நீச்சல் குளமாகி இருக்கிறது.

1859-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு ஒருங்கிணைந்த கல்லூரியாக செயல்பட்டுவந்த கிண்டி பொறியியல் கல்லூரி, நிர்வாக காரணத்திற்காக 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி, சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என தனித் தனியாக பிரிக்கப்பட்டது.

225 வருடங்களுக்கு முன்பு 8 மாணவர்களோடு, சிவில் என்ற ஒரே துறையை மட்டும் கொண்டு துவங்கப்பட்ட பள்ளி இன்று 550 க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளுடன், 101 பல்வேறு தொழில்நுட்ப துறைகளோடு செயல்பட்டு வருவதோடு, லட்சக்கணக்கான பொறியாளர்களையும் உருவாக்கியுள்ளது. ஏறக்குறைய அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் பணியாற்றாத நாடே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளது.

இக்கல்லூரியில் படித்த மாணவர்கள் பொறியியல் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் பிரபலமாகவும் திகழ்கின்றனர்.. 

இந்திய அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஏழாவது இடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வர பல்வேறு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருவதாக கூறுகிறார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா...

சென்னையின் மத்தியில் வீற்றிருந்தாலும் பெருநகரத்தின் பரபரப்போ சலசலப்போ புழுதியோ படியாமல் கம்பீரமான அமைதியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகம் திகழ்கிறது. 180 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புடைய இப்பகுதிக்குள் அடியெடுத்து வைத்த சில நிமிடங்களில் பசுமை செறிந்த அடர்ந்த காட்டுக்குள் நடக்கும் உணர்வு ஏற்படுகிறது.

வகுப்பறை வளாகங்களும் நிர்வாகக் கட்டிடங்களும், ஆய்வகங்களும் மரங்களிடையே ஒளிந்திருக்கின்றன. அண்ணா பல்கலைக் கழகம் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உரு மாற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

[…]

ஆசிரியர் தேர்வு வாரியம்
கல்வி

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்.4-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 340 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. முதுகலைப் பட்டப் படிப்புடன், நெட், செட் தேர்வில் தேர்ச்சி அல்லது பிஎச்டி முடித்த 57 வயதுக்கு உட்பட்டவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

செப்டம்பர் 4 முதல் 24 ம் தேதி மாலை 5 மணி வரை www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணபிக்கலாம். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 73 பாடப்பிரிவுகளில் 2 ஆயிரத்து 340 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதிகபட்சமாக ஆங்கிலப் பாடப்பிரிவில் 309 பணியிடங்களும், தமிழ் பாடத்தில் 231 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உயர்கல்வித்துறை அங்கீகரித்துள்ள கல்வி நிறுவனங்களில் உள்ள 136 பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும் உதவிப் பேராசிரியர்களுக்கு மாத ஊதியமாக 57 ஆயிரத்து 700 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 400 ரூபாய் வரை வழங்கப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்கள் முழுவதுமாக சரிபார்க்கப்பட்டு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது. உதவிப் பேராசிரியர் நியமனம் நேரடி முறையில் நடைபெறுவதால், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவே இறுதியானது என்றும் கூறியுள்ளது.

[…]

தமிழக அரசு
கல்வி

தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் உத்தேச காலிப்பணியிடங்களை நிரப்புமாறு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் காலியாக உள்ள வருவாய் உதவியாளர் பணியிடங்கள் குறித்த விவரங்கள் அரசு சார்பில் தொகுக்கப்பட்டுள்ளன. அதன்படி நேரடி நியமனம் மூலம் நிரப்பக்கூடிய இடங்களில் 91 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் அதிகபட்சமாக சென்னையில் 31 இடங்களும், அடுத்தபடியாக வேலூரில் 25 இடங்களும், திருவண்ணாமலையில் 18 இடங்களும் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்கள் தேர்வு குறித்த, அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் பதவி உயர்வின் மூலம் நிரப்பக்கூடிய இடங்களில், ஆயிரத்து 384 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் நடப்பாண்டில் காலியாக இருப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 167 இடங்களும், அதற்கடுத்தபடியாக சென்னையில் 109 இடங்களும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

[…]

 உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
கல்வி

மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம்..!

கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மட்டும் புதிதாக ஒரு லட்சத்து எழுபதாயிரம் மாணவர்களை சேர்த்து மாணவர் சேர்க்கையில் இந்திய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது

என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 82 புதிய கல்லூரிகளை உருவாக்கியிருப்பதாகவும் இந்த ஆண்டு மட்டும் 81 புதிய பாடத்திட்டங்களை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

[…]

குரூப் 4 தேர்வு
கல்வி

குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
<br> <br>
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ம் தேதி 301 மையங்களில் நடைபெற உள்ளது.
<br> <br>
தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டினை www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in என்ற இணைதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம், நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறவில்லை என்றால் விண்ணப்பம் நிராகரிப்புக்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
<br> <br>
மேலும் விண்ணப்பம் முறையாக பதிவு செய்து நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான ஆவணங்களை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

[…]

 நீட் தேர்வு
கல்வி

நீட் தேர்வு நடைபெறும் நாள் அறிவிப்பு மே3ஆம் தேதி 2020.

2020ஆம் ஆண்டு மே3ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

2020 மே 4ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வரும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]

ஆசிரியர் தகுதித் தேர்வு
கல்வி

ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாளிலும், மிக குறைவானவர்களே தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், அதிலும் 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை, தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்த வகையில், ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும், இடைநிலை ஆசிரியர் பணிக்கான, ஆசிரியர் தகுதித் தேர்வு, முதல் தாள் கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி நடைபெற்றது. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. முதல் தாள் தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 313 பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானபோது ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறாமல், வெறும் 482 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதிலும், 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேரில், 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 82-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பொதுப்பிரிவுக்கு (OC) குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் 90-ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில், 324 பேர் மட்டுமே 82 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

24 பேர் மட்டுமே, 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்ச மதிப்பெண் 96 ஆக உள்ளது. OMR Sheet-ல் சரியான விடையை Shade செய்து குறிப்பிடுவதில் பெரும்பாலான தேர்வர்கள் தவறு செய்துள்ளதால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் சிரமம் இருந்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. முதல்தாள் போலவே இரண்டாம் தாளிலும் கேள்விகள் மிக மிக கடுமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வினாத் தாள் கடினமாக தயாரிக்கப்பட்டதற்கான காரணங்களை டி.ஆர்.பி. அதிகாரிகள் விளக்கியுள்ளனர். தமிழக அரசின் பாடத் திட்டம் இந்த ஆண்டு 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ற வகையில் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வினாத்தாள் கடினமாக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளையில் தேர்வில் தோல்வி அடைந்ததற்கு வினாத்தாள் கடினமாக இருந்ததை சுட்டிக் காட்டியுள்ள தேர்வர்கள், ஏற்கெனவே காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் ஆர்வம் இல்லாமல் போனதும், இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். […]

அரசு பள்ளிகள்
கல்வி

ஒரே வளாகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளின் பொறுப்பு இணைப்பு..

ஒரே வளாகத்தில் தனித்தனியே செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் பொறுப்பு, அதே வளாகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் நிர்வாக பொறுப்பு மாணவர்களின் நலன் கருதியும், நிர்வாக வசதிக்காகவும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொடக்கப்பள்ளிகள் பெரும்பாலும், ஈராசிரியர் பள்ளிகளாக செயல்படுவதால், ஒருவர் விடுப்பு எடுத்தாலும், மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது என்பதால் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பொறுப்பு வழங்கியதன் மூலம், இனி மேல்நிலைப் பள்ளியில் உள்ள கணினி ஆய்வகங்கள், அறிவியல் ஆய்வகங்கள், விளையாட்டுப் பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி, Smart Class, முதுகலைப் பட்டதாரி ஆசிரியரின் வகுப்புகள் என்று அனைத்தையும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாற்றத்தினால் ஈராசிரியர் பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனடியாக மேல்நிலைப்பள்ளி ஆசிரியரைக் கொண்டு வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அதே வேளையில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் அப்படியே தங்கள் பணியைத் தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள்
கல்வி

பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியீடு

தமிழக பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைத்து பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாளை தயாரித்து பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தது.

இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அனைத்து பள்ளிகள், மாணவர்கள் பயனடையும் வகையில் மாதிரி வினாத்தாளை இணையத்தில் வெளியிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் www.tnscert.org என்ற இணையதளத்தில் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டு உள்ளது.

மாதிரி வினாத்தாளை, பதிவிறக்கம் செய்து அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் அடிப்படையில் பாடங்களை நடத்தி முடிக்க அறிவுறுத்துமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் அடிப்படையிலேயே காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வடிவமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. […]

அரசுப் பள்ளி
கல்வி

அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு, மாணாக்கர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு 5 லட்சம் மாணவர்கள் சேர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தனியார் பள்ளிகள் மீதான மோகம் மாறி, அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் முதல், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் யோகா, நடனம், பாட்டு போட்டி போன்றவை வாரத்தில் ஒருநாள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்கும் வகையில் எல்கேஜி, யுகேஜி மாணாக்கர்களுக்கு தமிழோடு சேர்ந்து ஆங்கிலமும் கற்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என்றும், 2017-18 ல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார். […]

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
கல்வி

52 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விரைவில் நிரந்தர முதல்வர்கள் - கே.பி.அன்பழகன்

தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 52 கலை அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக உள்ளதாகவும், அவற்றிற்கு உடனடியாக நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்களா? என்று சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ் ராஜன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், 10 ஆண்டுகள் மூத்த பேராசிரியர்களாக பணியாற்றியவர்கள் தான் முதல்வர்களாகத் தகுதியானவர்கள் என்றும், அப்படிபட்ட தகுதி உடைய பேராசிரியர்களை தேடி வருவதாகவும் கூறினார்.

தற்போது முதல்வர் பதவி காலியாக உள்ள கல்லூரிகளில் மூத்த பேராசிரியர்களைக் கொண்டு தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டு அவர்கள் சிறப்பாக கல்லூரியை நடத்தி வருவதாக தெரிவித்த அன்பழகன், மிக விரைவில் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார். […]

அங்கன்வாடி
கல்வி

அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமனம்

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி எனப்படும் மழலையர் வகுப்புகளுக்காக, மையத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2 ஆயிரத்து 381 ஆசிரியர்களை நியமித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை, அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு நியமித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மேலும் அரசுப்பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளுக்கு நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அதனடிப்படையில் ஏற்கனவே முதன்மைக்கல்வி அலுவலர்களால் அங்கன்வாடிகளுக்கு, நியமிக்கப்பட்ட 2 ஆயிரத்து 381 இடைநிலை ஆசிரியர்களும், மழலையர் வகுப்புகள் தொடங்கும் நாளில் பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும் என்றும், அதில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

பி.எட்., படிப்பு
கல்வி

நான்கு ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம்..

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்லும் வகையில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்பு (பி.எட்) அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத் […]

பி.எட்., படிப்பு
கல்வி

நான்கு ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம்..

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்லும் வகையில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்பு (பி.எட்) அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத் […]

தகுதி தேர்வு
கல்வி

ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழ்நாட்டில் ஜூன் 8 மற்றும் 9 தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பாட […]