ஸ்ருதி
சினிமா

புதிய சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவில் ஸ்ருதி ஹாசன்

சென்னை ஆவடியில் புதிதாக உதயமான பல்பொருள் அங்காடியின் திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட நடிகை ஸ்ருதி ஹாசன் ரசிகர்களின் தள்ளுமுள்ளு காரணமாக நிகழ்ச்சியின் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த அவர் காரை விட்டு இறங்கியதுமே கைகளில் செல்போன்களுடன் செல்பி எடுக்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டனர். பௌன்சர்களின் உதவியுடன் கூட்டத்தை கடந்து சென்ற அவர், ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கை ஏற்றியும் கடைத்திறப்பு விழாவில் பங்கேற்றார். ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்ட நெரிசல் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டதால் நடிகை ஸ்ருதிஹாசன் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

[…]

தலைவி
சினிமா

ஜெயலலிதாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் தலைவி படத்தின் முதல் தோற்றம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சித்தரிக்கும் தலைவி படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். பச்சை கலர் புடவை, மேல் கோட்டுடன் ஜெயலலிதாவைப் போலவே காட்சியளிக்கும் கங்கனா ரனாவத் வெண்ணிற ஆடையில் நடனமாடிய ஜெயலலிதாவைப் போல உடைகள் அணிந்து நடனமாடுவதும் அவர் உருவம் மிகப்பெரிய கட் அவுட்டாக வைக்கப்படுவது போன்ற காட்சிகளும்  டீசரில் இடம்பெற்றுள்ளன. இயக்குனர் விஜய் இயக்கத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 26ம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

[…]

நடிகர் விஜய் மெழுகுச் சிலை
சினிமா

நடிகர் விஜய்க்கு மெழுகு சிலை

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பேவாட்ச்சின் மாயாபுரி மெழுகு அருங்காட்சியகத்தில் தற்போது புதிதாக நடிகர் விஜய் மெழுகுச் சிலை வைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்லி சாப்ளின், அப்துல் கலாம், மைக்கேல் ஜாக்சன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ரவீந்திரநாத் தாகூர், மதர் தெரசா போன்றோரின் மெழுகுச்சிலைகள் ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

விஜய்யின் ஆளுயர மெழுகு சிலையைக் கண்டு ரசிக்க அவரது ரசிகர்கள் திரளாக வருகின்றனர்.

[…]

தர்பார்
சினிமா

என் வாழ்க்கையில் மிகச் சிறந்த டப்பிங் இது! தலைவருடன் டப்பிங் முடித்த இயக்குனர் முருகதாஸ் நெகிழ்ச்சி!

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.

ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.

தர்பார் படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். ஜனவரி 9 அன்று தர்பார் வெளியாகவுள்ளது. இதனால் இந்தப் படம் பொங்கல் விடுமுறை தினங்களால் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டரில் நெகிழ்ச்சியான பதிவொன்றை எழுதியுள்ளார். தனது வாழ்நாளில் மிகச் சிறந்த டப்பிங் செஷன் இதுதான்,  தலைவர் தர்பார் டப்பிங் முடிந்தது என்று ரஜினியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

[…]

ராதாரவி
சினிமா

ராதாரவி மீதான புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ?

தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கத் தலைவர் ராதாரவி மீதான புகாரின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொழிற்சங்க பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரவு செலவு கணக்குகளை முறையாக பராமரிக்காத சங்கத்தின் தலைவர் ராதாரவி மற்றும் செயலாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சங்கத்தின் உறுப்பினர்கள் மயிலை குமார், காளிதாஸ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சங்கத் தலைவர் ராதாரவிக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்றுமாறு தொழிற்சங்க பதிவாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர்  26-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.இந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

[…]

ரஜினிகாந்த்
சினிமா

கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு Icon of Golden Jubilee விருது

நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி ((icon of golden jubilee)) விருது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டுள்ளது. 

கோவா மாநிலம் பனாஜியில் 50ஆவது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது. இந்தியா, ரஷியா ஒருங்கிணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமை வகித்தார். விழாவை நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழா ஆண்டு என்பதால், திரைப்படத் துறைக்கு முக்கிய பங்களிப்பு செய்த கலைஞர்களை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி, கவுரவ விருதான ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருதுக்கு ((icon of golden jubilee)) ரஜினிகாந் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ரஜினிக்கு விருது வழங்குவதற்கான காரணத்தை விளக்கி ஒரு காட்சித் தொகுப்பு திரையிடப்பட்டது.

இதனை தொடர்ந்து மேடை ஏறிய ரஜினிக்கு, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் இணைந்து விருதை வழங்கினர்.

இதன்பின்னர் விழாவில் பேசிய ரஜினிகாந்த், விருது அளித்து கவுரவித்த மத்திய அரசுக்கு நன்றி கூறினார். மேலும், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கும், தம்மை வாழவைத்த தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.

[…]

வருமானவரித்துறை
சினிமா

தெலுங்கு திரையுலக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் வீடுகளில் ஐ.டி ரெய்டு

ஹைதாராபாத் மற்றும் சென்னையில் தெலுங்கு நடிகர்கள், தயாரிப்பாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் காலை 6 மணி முதல் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது.

பாகுபலி புகழ் நடிகர் ராணாவின் தந்தையும், சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ் பாபுவின், ஜூப்லி ஹில்ஸ் வீடு, அலுவலகம், மற்றும் பிலிம் நகரில் உள்ள ராமாநாயுடு ஸ்டூடியோ, கெஸ்ட் ஹவுசில் சோதனை தொடர்கிறது.

சுரேஷ் பாபுவின் சகோதரரும் முன்னணி நடிகருமான வெங்கடேசின் மணிகொண்டா இல்லத்திலும், நடிகர் மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும், சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, சென்னை தியாகராயநகரில், தெலுங்கு நடிகர் வெங்கடேசுக்கு சொந்தமான ராமாநாயுடு அறக்கட்டளை அலுவலகத்தில் காலை 9 மணி முதல் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று, கொத்தவால் சாவடியில் உள்ள இவர்களுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது.

[…]

ரஜினிகாந்த்
சினிமா

நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இப்படத்திற்கான தனது டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் அண்மையில் முடித்துள்ள நிலையில், வருகிற ஜனவரி மாதம் 9ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை கணக்கில்கொண்டு ரிலீஸ் தேதி முடிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

[…]

கமலஹாசன்
சினிமா

நடிகர் கமலஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

ஓடிஸா பல்கலைக்கழகத்தால் கமலஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் இன்று வழங்கப்பட்டது.

புவனேசுவரத்தில் உள்ள செஞ்சூரியன் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் பழங்குடியினர் மற்றும் திருந்திவாழும் நக்ஸலைட்டுகளுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குகிறது.

இப்பல்கலைக்கழகம் சார்பில் கமலஹாசனுக்கு இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு, கமலஹாசனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

முன்னதாக, ராஜ்கமல் வண்ணத்து பூச்சி தோட்டத்துக்கு கமலஹாசன் சென்றார். அங்கு மாணவர்களுக்கு பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் பயிற்சி விவரத்தை கேட்டறிந்தார்

[…]

ஞானவேல்ராஜா
சினிமா

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்..!

வரி ஏய்ப்பு வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக ஞானவேல் ராஜா மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமானவரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து, கேள்விகளை கேட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் நடைமுறைக்காக ஞானவேல்ராஜா ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் பலமுறை வாய்ப்பளித்தும் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை நவம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

[…]

ரஜினிகாந்த்
சினிமா

நாளை அதிசயம் நிகழலாம்.. கமல் விழாவில் ரஜினி பேச்சு..!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி குறித்து பேசியுள்ள நடிகர் ரஜினிகாந்த், நாளை அதியசங்கள் நிகழலாம் என்று தெரிவித்துள்ளார். 

கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர் கமல் என புகழாரம் சூட்டினார்.

களத்தூர் கண்ணம்மாவில் அவரைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் மாறவில்லை என்று மேலும் தெரிவித்தார். நடிகர், இயக்குநர், பாடகர் என பல பரிமாணம் எடுத்தவர் என்றும், 10 வேடங்களில் நடித்ததால் அவர் உலகநாயகன் எனவும் ரஜினி குறிப்பிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் குறிப்பிட்டு பேசிய ரஜினிகாந்த், இதுபோன்ற அதிசயம் நாளையும் நடைபெறும் என்றார்.

கமலுடன் 43 ஆண்டுகளாகக் காப்பாற்றிய நட்பை எஞ்சிய காலங்களிலும் காப்பாற்றுவோம் என்ற ரஜினி, கொள்கைகள், சித்தாந்தங்களில் மாற்றம் இருந்தாலும் இருவருக்கும் உள்ள நட்பு மாறாது என்று தெரிவித்தார். முன்னதாக, அங்கு நடைபெற்ற இளையராஜா இசை நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்

இந்நிகழ்ச்சியில் நடிகர்- நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த, கமல் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

[…]

ஸ்ரீரெட்டி
சினிமா

Me Too இயக்கத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவில்லை - ஸ்ரீரெட்டி

மீடூ இயக்கத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சினிமாவில் மீண்டும் நடிக்க விரும்புவதால் தமிழ் திரையுலகினர் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதேபோல், தவறுகள் செய்துள்ள தன்னை மன்னித்துவிடும்படி கேட்டுக் கொண்ட ஸ்ரீரெட்டி, திரையுலகில் பெண்களை தவறாக பயன்படுத்துவதால் தான் தெலுங்கு திரையுலகினர் மீது புகார் அளித்ததாக குறிப்பிட்டார்.  

[…]

சங்கத்தமிழன்
சினிமா

சங்கடத்தில் சங்கத்தமிழன்..!

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று 3-வது முறையாக அறிவிக்கப்பட்ட சங்கத்தமிழன் படம் இந்த முறையும் வெளியாகாததால் பழம்பெரும் படதயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்சன்ஸ் பங்குதாரர்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கோடிகளை கொடுக்காமல் கைவிரித்ததால் நிகழ்ந்த சங்கடம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி ராமாராவ் என மூன்று முதல் அமைச்சர்களின் திரைப்படங்கள், ரஜினியின் உழைப்பாளி, அஜீத்தின் வீரம், விஜய்யின் பைரவா உள்ளிட்ட 3 தலைமுறை முன்னணி நடிகர்களின் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களைத் தயாரித்த பழம்பெரும் படதயாரிப்பு நிறுவனம் நாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் ..! நாகிரெட்டிக்கு பின்னர் வெங்கட்ராம ரெட்டியும், பாரதி ரெட்டியும் பங்குதாரர்களாக இருந்து தொடர்ந்து படங்களைத் தயாரித்துவந்தனர்.

தற்போது இந்த படத் தயாரிப்பு நிறுவனத்தை பாரதிரெட்டி நிர்வகித்து வருகிறார். இந்த நிறுவனம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து சங்கத்தமிழன் என்ற படத்தை ஆரம்பித்தது முதல் தொடர் சோதனைகளை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கமான சம்பளத்தை விட அதிகமாக சம்பளம் பேசப்பட்ட நிலையில், குறிப்பிட்ட நாட்களில் விஜய் சேதுபதி நடித்துக் கொடுக்காமல் இழுத்தடித்ததால் நிர்ணயித்த அளவை காட்டிலும், படத்தின் பட்ஜெட் எகிறியதாக கூறப்படுகின்றது.

கடந்த சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட சங்கத்தமிழன், படப்பிடிப்பே முடிவடையாததால் தள்ளிப்போனது. ஒரு வழியாக படம் தயாரானதும் லிப்ரா புரொடக்சன்ஸ் சந்திரசேகரன் என்பவர், தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை 11 கோடி ரூபாய்க்கு விலை பேசி 3 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்துப் பெற்றுள்ளார். அதனை ஏரியாவாரியாக பிரித்து விற்று 8 கோடி ரூபாய் வரை பணம் பார்த்த அவர், படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாகவும் அறிவித்தார். போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் படம் தள்ளிப் போனது.

அதே நேரத்தில் தயாரிப்பாளர் பாரதி ரெட்டிக்கு கொடுக்க வேண்டிய 8 கோடி ரூபாயை கொடுக்காமல் இழுத்தடித்து வந்த லிப்ரா சந்திர சேகரன். பட வெளியீட்டுக்கு முன்பாக தருவதாக கூறியுள்ளார். இறுதி கட்டத்தில் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கைவிரித்ததால், பணத்தை கொடுத்து விட்டு படத்தை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் லிப்ரா சந்திர சேகரன் மீது புகார் அளிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தொடர்ந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இழுத்துக் கொண்டே போனதால் சங்கத்தமிழன் வெள்ளிக்கிழமை வெளியாகவில்லை. இதற்கு தீர்வு கிடைக்காது என்பது போல விஜய் சேதுபதியே விரக்தியில் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இறுதியில் லிப்ரா சந்திர சேகரன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பணத்தில் 60 சதவீதம் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், படத்தின் வசூலில் கிடைக்கும் கூடுதல் வருவாயை முழுமையாக தயாரிப்பாளர் மட்டுமே எடுத்துக் கொள்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் படத்தை வெளியிட விஜயா புரொடக்சன்ஸ் அனுமதி அளித்தது.

இதற்கிடையே அஜீத்தின் வீரம் படம் வெளியானபோது அதற்கு அரசின் வரி விலக்கு கிடைக்காததால், வசூலை வாரிக்குவித்த தயாரிப்பு நிறுவனம் அரசுக்கு செலுத்திய ஒன்றே கால் கோடி ரூபாய் வரித்தொகையை தாங்களே தருவதாக, சேலம் விநியோகஸ்தர்களுக்கு உறுதி அளித்ததாக கூறப்படுகின்றது.

அந்த தொகையை இதுவரை வழங்காததால் அவர்கள் ஒரு பக்கம் சங்கத்தமிழனுக்கு தடை போட, அந்த தொகையில் 40 லட்சம் ரூபாய் வரை கொடுப்பதாக பேசி அந்த பிரச்சனையையும் முடித்து வைத்துள்ளனர்.

அதோடில்லாமல் லிப்ரா சந்திர சேகரன் நெல்லை விநியோகஸ்தர் ஒருவருக்கு முந்தைய படத்திற்கு 15 லட்சம் ரூபாய் பாக்கி வைத்ததால் சங்கத்தமிழன் படத்தை நெல்லையில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளனர். அதனையும் தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினர்கள் பேசி தீர்த்து வைத்துள்ளனர்.

இதையடுத்து தடைகளை மட்டுமல்ல பலரது சங்கடங்களையும் கடந்து ஒரு வழியாக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் சங்கத்தமிழன் வெளியாகி உள்ளது. பலகோடி சொத்துக்கள் கைவசம் உள்ள பழம்பெரும் நிறுவனத்துக்கே இத்தனை சிக்கல், சிரமம் என்றால் தமிழ் திரை உலகில் வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் நிலை அந்தோ பரிதாபம் தான்..!

இதனிடையே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள லிப்ரா புரொடெக்ஷன்ஸ் நிர்வாகத்தினர், பல தடைகளையும், அவமானங்களையும் கடந்து 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சங்கத்தமிழன் படத்தை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான பதிலும் உண்மையும் தெரிந்தும் எதையும் வெளியில் சொல்லாமல் விஜயா புரொடக்சன்ஸுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியுள்ளதாக லிப்ரா சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

[…]

தீபிகா
சினிமா

சீக்கியர்களின் பொற்கோயிலில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் வழிபாடு

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோயிலில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனேயும், அவரது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங்கும் இன்று வழிபாடு நடத்தினர்.

இருவரும் தங்களது முதலாம் ஆண்டு திருமண தினத்தை நேற்று கொண்டாடினர். இதையொட்டி திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் நேற்று வழிபாடு நடத்தினர்.

பின்னர் அமிருதசரஸ் வந்த 2 பேரும் பொற்கோயிலில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடத்தினர். 

[…]

விஜய்சேதுபதி
சினிமா

நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது

நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் வழங்கினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அதில் தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகர் விஜய்சேதுபதி, சந்தானம், கவிஞர் யுகபாரதி, பின்னணி பாடகி ஜானகி ஆகியோர் விருதை பெறுவதற்கு வர முடியவில்லை.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் கவிஞர் யுகபாரதிக்கு கலைமாமணி விருதை வழங்கினார்.

நடிகர் சந்தானம் சார்பில் அவரது மேலாளரும், பின்னணி பாடகி ஜானகி சார்பாக அவரது மகனும் கலைமாமணி விருதை பெற்றுக் கொண்டனர்.

[…]

தீபிகா
சினிமா

நடிகை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதியினர் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.


நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் தீபிகா - ரன்வீர் தம்பதியினர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வந்த ரன்வீர் சிங், தீபிகா ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

[…]

சுசித்ரா
சினிமா

பாடகி சுசித்ரா மீட்பு.. குடும்பத்தினரைக் கண்டு அச்சம்?

காணாமல் போனதாகக் கூறப்பட்ட பின்னணி பாடகி சுசித்ரா, சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து மீட்கப்பட்டார்.

சுச்சி லீக்ஸ் என்ற பெயரில், சினிமா பிரபலங்களின் அந்தரங்கங்கள் வெளியானது. இதன் பின்னணியில் சுசித்ரா இருபபதாக அப்போது பேசப்பட்டது. ஆனால் அதனை சுசித்ரா மறுத்தார்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையைத் தொடர்ந்து, சுசித்ராவின் கணவரான, யாரடி நீ மோகினி பட நடிகர் கார்த்திக் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து சென்று விட்டார். இதை அடுத்து அடையாறில் உள்ள வீட்டில் சுசித்ரா தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் ,கடந்த நான்கு நாட்களாக சுசித்ராவைக் காணவில்லை என்று, அவரது சகோதரியான சுனிதா ராமதுரை என்பவர், அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போன் எண்ணை வைத்து சுசித்ராவைத் தேடி வந்தனர். அவரது செல்போன் எண்ணின் இருப்பிடம் தியாகராய நகரில் உள்ள விடுதியைக் காட்டியது.

அந்த இடத்திற்குச் சென்ற போலீசார் சுசித்ராவை மீட்டனர். அப்போது தனது சகோதரியை பார்த்து சுசித்ரா பலமாக சத்தமிட்டதாகக் கூறப்படுகிறது. தனது குடும்பம் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் வெளி உலகிற்கு காட்ட முயற்சிப்பதாகவும், தன்னை ஏதாவது செய்து விடுவார்கள் என்று சுசித்ரா போலீசிடம் அச்சம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை அடுத்து அவரை மீட்ட போலீசார், அவரது விருப்பப்படி கீழ்பாக்கத்தில் உள்ள மன நல மருத்துவமனை ஒன்றில் சுசித்ராவை அனுமதித்தனர்.

[…]

ஷ்ருதி ஹாசன்
சினிமா

முதன்முதலில் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்த தருணம்: ஸ்ருதி ஹாசன்

ஷ்ருதி ஹாசன், தெலுங்கு நடிகையும் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகளுமான லஷ்மி மஞ்சுவுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவரது வாழ்வின் அழகிய தருணங்கள் சிலவற்றைப் பற்றிப் பகிர்ந்திருந்தார். ஷ்ருதியின் பதில்கள் பெரும்பாலும் நேர்மையானவையாகவே இருந்தன

ரிலேஷன்ஷிப் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில்;

ஒரே ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தது நிஜம். ஆனால், அது முறிந்து விட்டதே என்ற கவலை எல்லாம் எனக்கு இல்லை. நடந்தது அனைத்தும் மகிழ்வான தருணங்களே. அதனால் வருத்தங்கள் ஏதும் இல்லை. காதலுக்கு என்று தனியாகச் செலவழிக்க என்னிடம் நேரமில்லாதது தான் குறை. இப்போது உழைக்க வேண்டிய தருணம். எனவே அதில் கவனம் செலுத்துகிறேன். அப்படியும் சில நேரங்களில் எனக்குள் தனிமையாக உணர்வேன் நான். அப்போது தோன்றும்.. ஒரே நேரத்தில் 7, 8 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். படங்கள் அனைத்தும் வெற்றிப்படங்களாகவும் இருக்கின்றன. அதற்காக விருதுகள் கிடைக்கின்றன. ஆனாலும், ஏன் ஏதோ ஒரு ஏமாற்ற உணர்வில் இருக்கிறேன் என்று யோசித்துப் பார்ப்பேன்.

ஆண்கள் காரணமா? என்றால் நிச்சயமாக இல்லை. Boys are Stupid! (வேடிக்கையாகச் சொல்லி விட்டு சிரிக்கிறார்). அப்படி எதுவும் இல்லை.  பிறகு வேறென்ன என்று யோசிக்கும் போது..  அப்போது தான் தெரிகிறது நான் இசையை எவ்வளவு தூரம் மிஸ் பண்ணுகிறேன் என்று. எனவே கமிட்டான வேலைகளை முடித்து விட்டு இசைக்கு என்று பிரத்யேகமாக நேரம் ஒதுக்குகிறேன். அதனால் தான் இடையில் எங்கே ஷ்ருதியைக் காணோம் என்று இங்கே தேடும் அளவுக்கு இடைவெளியாகி விடுகிறது. அதனால் பரவாயில்லை. மக்களை எண்டர்டெயின் செய்வது எனக்குப் பிடிக்கும் என்றாலும் இசை தான் என் ஆதர்ஷம் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். என்கிறார்

சரி அதை விடுங்கள், முதன்முதலில் ஒரு பையனைப் பார்த்ததும் மனம் மக்ழ்ச்சியில் துள்ளி வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறந்த தருணம் என்று ஒன்று எல்லோருக்கும் வாய்த்திருக்கும். உங்களுக்கு அப்படி முதன் முதலாக எப்போது நேர்ந்தது என்று நினைவிருக்கிறதா? 

என்ற கேள்விக்கு ஷ்ருதி அளித்த பதில்;

அப்படியான நினைவுகள் என்றால் எதைச் சொல்வது. கிண்டர் கார்ட்டன் அனுபவத்தைத் தான் சொல்ல வேண்டும். அப்போது வகுப்பில் புதிதாக ஒரு மாணவன் வந்து சேர்ந்திருந்தான். அவன் ஒரு அமெரிக்கன். பளீர் வெள்ளை நிறத்தில்... நீலக் கண்களுடன் வித்தியாசமாக இருந்த அவனைக் கண்டதும் எனக்கு மிகப் பிடித்து விட்டது. வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்த தருணம் என்றால் அதைத்தான் குறிப்பிட வேண்டும். அம்மா... அது எனக்கு வேணும்! என்கிற மாதிரியான உணர்வு.

[…]

லதா
சினிமா

பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சுவாசக்கோளாறு காரணமாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ((BREACH CANDY HOSPITAL)) அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும், முன்பிருந்த நிலையைவிட சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

[…]

லதா
சினிமா

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் உடல்நிலை கவலைக்கிடம்

மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலிவுட் திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறு வயது தொடங்கி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் லதா மங்கேஸ்கர். மும்பையில் தனது குடும்பத்தாருடன் வசித்து வரும் 90 வயதான இவருக்கு நேற்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் உடனடியாக பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

[…]

மம்முட்டி
சினிமா

பினராயி விஜயனின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மம்முட்டி

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனின் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து வரும் நிலையில், பினராயி விஜயனுடன் மம்முட்டி இருக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

பினராயி விஜயனின் வாழ்க்கையை தழுவி மம்முட்டி நடிப்பில் ’ஒன்’ என்ற திரைப்படம் மலையாளத்தில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் காட்சி ஒன்று கேரளா சட்டப்பேரவையில் அண்மையில் படமாக்கப்பட்டது.

ஷூட்டிங்கில் பங்கேற்ற மம்முட்டி அருகில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்துக்கு சென்று பினராயி விஜயனை சந்தித்து பேசியுள்ளார். இந்த படத்தை பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, அதனை மம்முட்டியின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

[…]

கமல்ஹாசன்
சினிமா

விஜய் சேதுபதி நடித்து சர்ச்சையான விளம்பரம் குறித்து கமல்ஹாசன் கருத்து!

கோலிவுட்டில் படிப்படியாக தனது வெற்றிக் கொடியை கட்டியவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமல்லாமல் ரஜினிகாந்த், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு வில்லனாகவும் நடித்து வருபவர். அண்மையில் நடிகர் சூரியின் புதிய உணவகத்துக்கு சென்று அவரை வாழ்த்தி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பணம் சம்பாதிக்கத்தான் நடிக்க வந்தேன் என்று நேர்மையாக பல பேட்டிகளில் சொல்லியுள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் சமூக விஷயங்களிலும் ஆர்வலராக இருந்து வரும் விஜய் சேதுபதி, சமீபத்தில் மண்டி எனும் ஆன்லைன் வர்த்தக விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் சிறு குறு வியாபாரிகடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

கடைக்குச் சென்று பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டால் பலசரக்கு வியாபாரம் செய்பவர்கள் பாதிப்படைவார்கள். சிறுகச் சிறுக மளிகை வியாபாரம் முற்றிலும் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும் என்று வியாபாரிகள் கடுமையாக இந்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 'தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் பேரமைப்பு' சார்பாக கடந்த வாரம் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் தற்போது சில வியாபாரிகள் விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை செய்துள்ளனர். மண்டி விளம்பரத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி உடனடியாக விலகவில்லை என்றால் அவர் எப்படி தங்களுடைய தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறாரோ, அதே போல் வியாபாரிகளும் ஒன்றிணைந்து அவருடைய தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப் போவதாக கூறினர். மேலும் வணிகர்கள் சங்க பேரமைப்பைச் சேர்ந்த அருணாசல மூர்த்தி ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பது, ‘தமிழ்நாட்டில் 21 லட்சத்திறகும் மேலான சிறு குறு வணிகர்கள் இருக்கின்றோம். மக்களுடன் பயணிக்கும் நாங்கள், அவர்களிடம் எங்களுடைய நிலையை எடுத்து சொல்வோம். விஜய் சேதுபதி எங்களுக்கு துரோகம் இழைக்கிறார். எங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிறார் என்று கூறுவோம். இனியும் அவர் செவி சாய்க்கவில்லை என்றால் 11-ம் தேதி பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்டப் போராட்டத்தை அறிவிப்போம். மேலும் விஜய் சேதுபதியின் படங்களை நாங்கள் அனைவரும் புறக்கணிப்போம்.’ என்று கூறினார்.

இந்த பிரச்னை குறித்து அண்மையில் நடிகர் கமலிடம் கேட்டபோது, 'சில விளம்பரத்தில் நடிக்கும் போது அதன் பாதிப்பை உணராமல் நடிப்பதால் ஏற்படும் விளைவிது. இதில் அவர் நடித்திருக் கூடாது’ என்று தெரிவித்திருந்தார்.

[…]

நயன்தாரா
சினிமா

குவியும் பட வாய்ப்புக்களால் திருமணத்தைத் தள்ளிப் போட்ட நயன்தாரா!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றி பெற்ற நடிகைகளுள் முதன்மையானவர் நயன்தாரா. பதினைந்து ஆண்டுகளாக கோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கிறார். ஹீரோவுக்கு அதிக வயதானாலும் அவரை கல்லூரி மாணவனாக நடிக்க வைத்த படங்கள் பல உள்ளன. சிவாஜி முதல் விஜய் வரை இதில் அடங்குவர்.

இந்நிலையில் 34 வயதில் கல்லூரி மாணவியாக கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தளவுக்கு ஃபிட்டாகவும் தனது அழகைப் பராமரிப்பதில் ஆர்வத்துடன் இருப்பவர். கதாநாயகன் இல்லாமலேயே தனித்து ஒரு படத்தை வெற்றிகரமாக்க முடியும் என்பதை நிரூபத்தவர். அறம் திரைப்படத்திலும் பெண் மையத் திரைப்படத்தின் சிறப்பை உணர்த்தினார்.

சொந்த வாழ்க்கையிலும் பல பிரச்னைகள், உறவு முறிதல்களைக் கடந்து வந்தவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனுடனான அவரது காதல் வாழ்க்கை நிறைவாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், இந்த இணையர் திருப்பதி சென்று வழிபட்டனர். அப்போது நிருபர்கள் திருமணத்தைப் பற்றி கேட்ட போது புன்னகைத்து மழுப்பி விட்டார் லேடி சூப்பர் ஸ்டார்.

அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் 2020-ம் ஆண்டு நடக்கும் என்று நினைத்தனர். ஆனால் தற்போது இயக்குனர் மிலிந்த் ராவின் 'நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நானும் ரௌடிதான், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர்கள் முன்னர் நடித்துள்ளனர். எல்.கே.ஜி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி கதை எழுதி இயக்குநராகவும் களம் இறங்கியிருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்'. இயக்குநர் என்.ஜே சரவணனுடன் சேர்ந்து இப்படத்தை இயக்குகிறார் ஆர்.ஜே.பாலாஜி.

இந்தப் படத்தின் கதைக்கு நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை அணுகிய போது, கதை பிடித்துவிட நயன் கமிட் ஆனார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தபடி உள்ளதால், தனக்குப் பிடித்த கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் 2020-ம் ஆண்டில் திருமணம் இருக்காது என்றே நயன் வட்டாரம் கூறுகிறது.

[…]

குட்டி ராதிகா.
சினிமா

மீண்டும் குட்டி ராதிகா!

இயற்கை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பரவலாகக் கவனம் பெற்றவர் குட்டி ராதிகா. 2006-ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், தற்போது 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் "தமயந்தி' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் திரும்புகிறார். இப்படத்தை நவரசன் எழுதி இயக்குகிறார். 

படம் குறித்து இயக்குநர் பேசும் போது... தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது. ஹிந்தி, மலையாளம் மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது. "அருந்ததி', "பாகமதி' ஆகிய படங்கள் போன்ற ஹாரர் திரில்லர் படம் தமயந்தி. இதில் நடிக்க முதலில் அனுஷ்காவை தொடர்புகொண்டேன்.

அவருக்குத் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தாலும் மற்ற படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் நடிக்கமுடியவில்லை. எனது இரண்டாவது தேர்வு குட்டி ராதிகா. அவரும் இரண்டு கன்னடப் படங்களில் பிஸியாக இருந்தார். இருப்பினும் ஒருமுறை கதையைக் கேளுங்கள் என்று கூறி அவரிடம் விவரித்தேன். கேட்டபின் தான் நடிப்பதாக உடனே சம்மதித்தார். இரண்டு காலக் கட்டங்களில் நடக்கும் இக்கதை ஹைதராபாத், பெங்களுரூ உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதியில் படத்தை வெளியிட இருக்கிறோம்'' என்றார். 

[…]

பானிபட்
சினிமா

பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர விருந்து! ‘பானிபட்’ திரைப்பட டிரைலர்!

சாதனை இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர், பல்வேறு சிறப்பான படைப்புகளை நமக்கு கடந்த காலத்தில் வழங்கியிருந்தாலும், மீண்டும் அத்தகைய ஒரு பிரம்மாண்டமான, கம்பீரமான படைப்பை நம் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார். சஞ்சய் தத், கிரிதி சாணன், அர்ஜுன் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வெளியாகவிருக்கும் அதிரடி திரைப்படமான ‘பானிபட்’ வெளியீட்டு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த டிரைலர் வெளியீட்டுக்கு முன்னதாக, ஊடகவியலாலர்களுக்கென ஒரு நட்பு ரீதியிலான சிறப்பு சந்திப்பை அவர் மும்பையில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பில்,டிரைலரின் சிறப்பு பிரீவ்யூ காட்சி திரையிடப்பட்ட நிலையில், டிரைலர் ஊடகவியலாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது.

திரைப்பட குழுவினர் இத்தகைய பாராட்டுகளுக்கிடையே, மூன்று நடிகர்களும் இடம்பெற்ற ஒரு புதிய டிஜிட்டல் போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். டிரைலர் மராட்டிய சாம்ராஜ்யத்தின் காவியக் கதையை விவரிப்பதாக அமைந்திருந்தது. அருமையான பின்னணி இசை, அழகிய பின்னணிகாட்சிகள், ஆடம்பரமான கலை பங்களிப்புகள் என அனைத்தும் ஒரே புள்ளியில் இணைந்து, ரசிப்போர் கண்களுக்கு விருந்தாகிறது. இந்த படத்தில் அர்ஜுன் ஒரு போர் வீரனாகவும், சஞ்சய் தத் வில்லனாகவும், நடித்திருக்க, கிரிதியின் அழகும் அழகிய கதாபாத்திரமும் படத்திற்கு மெருகூட்டுகிறது. 


இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர் பேசுகையில், ‘ஊடகவியலாளர்களின் பின்னூட்டத்தை கேட்டு, பானிபட் திரைப்படக்குழு மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறது.  டிரைலர் வெளியீட்டுக்கு முன்னரே, அவர்களுக்காக ஒரு சிறப்பு டிரைலர் திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அது மிகவும் நேர்மறையான பின்னூட்டத்தை வழங்கியிருக்கிறது. ரசிகர்ளுக்கும் இந்த டிரைலர் பிடிக்கும் என திடமாக நம்புகிறோம். அவர்களது எதிர்பார்ப்புகளை முடிந்த வரையில் நிறைவேற்றியிருப்பதாகவும் நம்புகிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் சுனிதா கோவரிகர், “பானிபட் டிரைலருக்கு கிடைத்த வரவேற்ப் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்த டிரைலரும், திரைப்படமும் பிடிக்கும் என நம்புகிறோம். இத்திரைப்பட குழுவினர் ஒவ்வொருவரும் கடின உழைப்பை தந்திருக்கிறார்கள். இப்படத்தின் வெற்றி அவர்களை பெருமகிழ்ச்சி அடையச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.’

ஷிபசிஷ் சர்கார், குழு தலைமை செயல் அதிகாரி - ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் பேசும் போது, ‘இயக்குனர் அஷுதோஷ் மற்றும் அவரது பெரும் இலக்கியப் படைப்பான ‘பானிபட்’ திரைப்படத்துடனும் இணைந்திருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இத்திரைப்படம் இவ்வுலக வரலாற்றின் மாபெரும் போரை நம் கண்முன் நிறுத்தும். டிரைலர் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், திரைப்படத்திற்கும் அனைத்து தரப்பினரும் ஏகோபித்த வரவேற்பை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.’

ரோஹித் ஷெலட்கர், நிறுவனர், விஷன் வர்ல்ட் பிலிம்ஸ், ‘வரலாறும் திரைப்படங்களும் எனக்கு மிகவும் பிடித்த உணர்வுப்பூர்வமாக விஷயங்கள். அந்த இரண்டையும் இணைக்கும் வகையில் அமைந்த இத்திரைப்படம் எனக்கு கிடைத்த மகத்தானதொரு வாய்ப்பு. மராட்டிய சமுதாயத்தை சார்ந்தவனாகிய நான், மராட்டிய புராணக்கதைகளை, அதன் நாயகர்களை அதிகம் விரும்புகிறவன். ‘ஜோதா அக்பர்’, ‘ஸ்வதேஷ்’, ‘லகான்’ உள்ளிட்ட பெரும் காவிய படங்களைத் தந்த மதிப்பிற்குரிய இயக்குனர் அஷுதோஷ் கோவரிகர் உடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றுவதென்பது எனது மாபெரும் கனவு நனவானயே காட்டுகிறது’ என்றார்.  

1761 ஆம் ஆண்டு பின்னணியில் அமைக்கப்பட்ட ‘பானிபட்’ திரைப்படத்தின் கதைகளம் மராட்டிய சாம்ராஜ்யத்தைப் பற்றியது. அச்சமயம் மராட்டிய சாம்ராஜ்யம் தனது உச்சநிலையை எட்டி இருந்தது. ஒரு படையெடுப்பாளரின் கவனத்தை ஈர்க்காத வரையில், இந்துஸ்தான் மீதான அவர்களின் பிடிப்பும், அவர்களை சவாலுக்கு அழைப்பதற்கு யாருமற்ற நிலையும் நீடித்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தான், படையெடுத்து வருகின்ற ஆப்கானிஸ்தான் மன்னர் அஹ்மத் ஷா அப்தாலியின் (சஞ்சய் தத்) படைகளை விரட்டும் பொருட்டு, மராட்டிய இராணுவ தளபதி சதாஷிவ் ராவ் பாவு (அர்ஜுன் கபூர்) வடதிசை நோக்கி தனது படைகளுடன் ஆப்கானிஸ்தான் படைகளை எதிர்த்து ஓரு அவசரப் போர் பயணத்தை துவக்கி, தனது படைகளை வழிநடத்துகிறார்.  

‘ஏஜிபிபிஎல்’ சார்பாக சுனிதா கோவரிகர், ‘விஷன் வேர்ல்டு பிலிம்ஸ்’ சார்பாக ரோஹித் ஷெலட்கருடன் இணைந்து இப்பத்தை தயாரிக்க, அசுதோஷ் கோவரிகர் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி உலகெங்கும் திரையிடப்பட தயாராக இருக்கிறது.

[…]

அமலாபால்
சினிமா

கவர்ச்சி படம் வெளியிட்ட அமலாபால்

மைனா, வேட்டை, தலைவா, வேலை இல்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபல கதாநாயகியான அமலாபால் ஆடை படத்தில் உடைகள் அணியாமல் நிர்வாணமாக துணிச்சலாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

ஆடை  படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவித்தது.ஆடை படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. அமலாபால் வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்திடம் பேசி வருகின்றனர். 

தற்போது அமலாபால் நடித்துள்ள ‘அதோ அந்த பறவைப்போல’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளது. முந்தைய ஆடை படம் நிர்வாண காட்சிகளால் ‘ஏ’ சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ‘அதோ அந்த பறவைப்போல’ திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. இந்த நிலையில் அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூக்கள் நிரம்பிய குளியல் தொட்டியில் ஜாக்கெட் அணியாமல் முதுகை காட்டியபடி இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

[…]

விஜய் - விஜய் சேதுபதி
சினிமா

விஜய் - விஜய் சேதுபதி படத்தில் இணைந்த இன்னொரு நடிகை!

விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையுமான விஜே ரம்யா இணைந்துள்ளார்.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியானது. 

தளபதி 64 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசை - அனிருத். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. விஜய்யின் 64-வது படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள். 

இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையுமான விஜே ரம்யா நடிக்கிறார். இத்தகவலை ரம்யாவும் உறுதி செய்துள்ளார். தில்லியில் கடந்த 20 நாள்களாக நடந்த படப்பிடிப்பில் ரம்யா கலந்துகொண்டுள்ளார். தில்லியில் படப்பிடிப்பு முடிந்த பிறகு அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது. 

[…]

அமிதாப்
சினிமா

நடிகர் அமிதாப்பச்சன் திரையுலகில் 50வது ஆண்டை எட்டினார்

நடிகர் அமிதாப் பச்சன் திரையுலகில் 50 வது ஆண்டை எட்டியுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

சமூக வலைதளங்களில் பல்வேறு நட்சத்திரங்களும் முக்கியப் பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமிதாப்புடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை எண்ணி பெருமைப்படுவதாக இளம் நட்சத்திரங்கள் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

தமது 50 ஆண்டுகால திரையுலகில் 190 திரைப்படங்கள், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அமிதாப்பின் சாதனை இன்று வரையிலும் தொடர்கிறது.

கடந்த 2015ம் ஆண்டில் அமிதாப்புக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.அண்மையில் திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதும் அமிதாப்புக்கு அறிவிக்கப்பட்டது.

[…]

கமல்ஹாசன்
சினிமா

சினிமாவை கமல் மறக்கமாட்டார் - ரஜினி

சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இயக்குனர் பாலச்சந்தர் சிலையை, ரஜினியும் கமலும் இணைந்து திறந்து வைத்தனர்.

சென்னை ஆழ்வார் பேட்டையில், ராஜ்கமல் இன்டர்நேஷனல் திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டிடத்தின் முகப்பு பகுதியில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 60 கிலோ எடை, 2 அடி உயரம் கொண்ட இந்த வெண்கல சிலையை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து திறத்து வைத்தனர். கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிகுமார், சந்தானபாரதி, நடிகர்கள் நாசர், ரமேஷ் அரவிந்த், ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் மற்றும் பாலச்சந்தர் குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, அரசியலுக்கு வந்த பிறகும் தாய்வீடான சினிமாவை கமல் மறக்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது என குறிப்பிட்டார். அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ஹே ராம் உள்ளிட்ட கமல் படங்களை புகழ்ந்து பேசினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய கமல்ஹாசன், சினிமா அலுவலகத்திற்கு தாம் வரும் போது பாலச்சந்தர் தன்னை கண்காணிப்பது போல் இருக்கட்டும் என்பதற்காகவே அவருக்கு சிலை வைத்திருப்பதாக குறிப்பிட்டார். ராஜ்கமல் நிறுவனத்தின் 50வது படம், மிக பிரமாண்ட படம் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சினிமாவில் தொடக்க காலத்திலிருந்தே தமக்கும் ரஜினிக்கும் நீடிக்கும் நட்புறவை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், மத்திய அரசு 43 ஆண்டுகள் தாமதமாக ரஜினிக்கு ஐகான் விருது கொடுத்திருப்பதாகக் கூறினார்.

[…]

நயன்தாரா
சினிமா

10 வருடங்களாகப் பேட்டி தராதது ஏன்?: நயன்தாரா பேட்டி

10 வருடங்களுக்குப் பிறகு பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார் நயன்தாரா. வோக் ஆங்கிலப் பத்திரிகைக்கு நயன்தாரா அளித்த பேட்டியில், தான் இத்தனை வருடங்களாகப் பேட்டியளிக்காததற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் நான் அளிக்கும் முதல் பேட்டி இது. நான் என்ன நினைக்கிறேன் என உலகம் அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை. நான் மிகவும் தனிப்பட்ட மனிதர். கூட்டம் எனக்கு சரிவராது. பேட்டிகளில் நான் சொன்னது பலமுறை தவறாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. என்னால் இதைக் கையாள முடியவில்லை. என் வேலை நடிப்பது தான். படம் தான் பேசவேண்டும் என்று கூறியுள்ளார். 

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நயன்தாரா நடித்தாலும் சில சமயங்களில் கதாநாயகனைப் போற்றிப் புகழும் படங்களிலும் நடிக்கிறார். ஏன் என்கிற கேள்விக்கு நயன்தாரா அளித்த பதில் - சிலசமயங்களில் உங்களுக்கு வேறு வழி கிடையாது. எத்தனை முறை தான் நடிக்க முடியாது எனக் கூறமுடியும் என்றார்.

[…]

விஜய் சேதுபதி
சினிமா

மண்டி ஆப் விளம்பரத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வலியுறுத்தல்

மண்டி செயலி தொடர்பான விளம்பரத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலக வலியுறுத்தி சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வணிகர்கள் கைது செய்யப்பட்டனர்.

பலசரக்கு விற்பனை சார்ந்த அனைத்து வியாபாரிகளையும் உள்ளடக்கி அவர்களுக்குள் பொருட்களை விற்றுக் கொள்ளவும், வாங்கிக் கொள்ளவும் வழிவகுக்கும் மண்டி செயலியால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே இந்தச் செயலி தொடர்பான விளம்பரத்தில் இருந்து விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆழ்வார்திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட வணிகர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

[…]

மீரா மிதுன்
சினிமா

ஓட்டல் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு

சென்னை எழும்பூர் நட்சத்திர ஓட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், காவல்துறையினரை கடுமையாக விமர்சித்தது குறித்து கேட்ட விடுதி ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகையும், மாடலுமான அழகி மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சேத்துப்பேட்டில் வசிக்கும் மாடல் அழகியான மீரா மிதுன் மீது கொலை சதி, கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ஜோ மைக்கேல் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதை அடுத்து மும்பைக்கு சென்ற மீரா மிதுன் அண்மையில் சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினரை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

செய்தியாளர் சந்திப்பு நிறைவடைந்த பின்னர், அதிகாரிகளை ஒருமையில் விமர்சித்துப் பேசியது தொடர்பாக அந்த நட்சத்திர விடுதியின் ஊழியரான அருண் என்பவர், மீரா மிதுனிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

தங்களது விடுதியில் செய்தியாளர் சந்திப்பு என்று ஹால் புக் செய்துவிட்டு போலீஸ் அதிகாரிகளை விமர்சித்து எப்படி பேசலாம் என்று அருண் விளக்கம் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது அந்த ஊழியருக்கு மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுத்ததாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது கொலை மிரட்டல், அதிகாரிகளை அசிங்கமாக திட்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

[…]

சீமான்
சினிமா

பாஜகவுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் ரஜினிக்கு விருது - சீமான்

பாஜகவுக்கு வேண்டப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பேசிய அவர், பாரதிராஜா, இளையராஜா, கமல் போன்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்றார்.

[…]

கமல்ஹாசன்
சினிமா

மத்திய அரசு விருது: ரஜினிக்கு கமல் வாழ்த்து

மத்திய அரசின் சிறப்பு விருது பெறும் நடிகா் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

திரைப்படத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகா் ரஜினிக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. கோவாவில் நடைபெறும் சா்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

சிறப்பு விருது பெறும் ரஜினிக்கு திரையுலகினா், அரசியல் கட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

கமல் வாழ்த்து: மத்தியப் பிரதேசம் மாநிலம், குவாலியரில் சங்கா் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடித்து வரும் கமல் தொலைபேசி வாயிலாக ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

[…]

கவித்ரன்
சினிமா

மாவு கட்டுக்கு பயந்து ஊர் ஊராக ஓடுகிறேன்..! மோசடி நடிகர் கதறல்

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, கல்லூரி மாணவரிடம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதாகி, ஜாமீனில் வந்துள்ள நடிகர் கவித்ரன் மீது, மேலும் ஒருவர் புகார் அளித்துள்ள நிலையில், தலைமறைவான அவர், ஊர் ஊராக ஓடுவதாக முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக படித்துக்கொண்டே படங்களில் நடித்து வந்தவர் கவித்ரன். இவரை கதாநாயகனாக வைத்து "நம்ம கத" என்ற பெயரில் படம் தயாரித்த வட்டச் செயலாளரான இவரது தந்தை எஸ்.எஸ். கண்ணன், சினிமா சான்ஸ் தருவதாகக் கூறி, பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்பட்டது.

எஸ்.எஸ். கண்ணனால், மூர்த்தி என்ற மாணவர் படிப்பை பாதியில் நிறுத்தி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் மோசடி செய்து விட்டு மிரட்டிய எஸ்.எஸ். கண்ணன், நடிகர் கவித்ரன் , நிகவித்ரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எஸ்.எஸ். கண்ணன், கவித்ரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நிகவித்ரன் தலைமறைவானார். 5 நாட்கள் சிறைவாசத்திற்கு பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். கண்ணனிடம் பணம் கொடுத்த மேலும் சிலர் வீட்டுக்கு சென்று பணத்தை திருப்பிக் கேட்டபோது மிரட்டியதாக கூறப்படுகிறது.

அத்தோடு இல்லாமல் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த அற்புதராஜ் என்பவரை தலையில் வெட்டியதாகவும் கண்ணன் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து இரு வழக்குகளிலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க வட்டச் செயலாளர் கண்ணன், நடிகர் கவித்ரன், சகோதரர் நிகவித்ரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

இந்த நிலையில், மோசடி வழக்கில் கைதான தனது தந்தையை தியாகி என்றும், சென்னையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை முன்னேற்றியதே தனது தந்தை தான் என்பது போலவும், தற்போது இரு வழக்குகள் இருப்பதால் போலீசுக்கு பயந்து ஓடிக்கொண்டிருப்பதாகவும், நடிகர் கவித்ரன் தனது முக நூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

ஒருவரை இவரது தந்தை வெட்டினால் 10 தையல் இருந்திருக்குமாம், தர்போது அவருக்கு 5 தையல் தான் போடப்பட்டுள்ளது என்பதால் தனது தந்தை வெட்டவில்லை என்று விளக்கம் அளிக்கிறார் மோசடி புகாருக்குள்ளான நடிகர் கவித்ரன்.

இந்த இரு வழக்குகளிலும் சிக்கினால், போலீசார் தங்களைப் பிடித்து கை, கால்களை முறித்து மாவுக் கட்டு போட்டுவிடுவார்களே என்ற அச்சத்தில் தான் ஓடி ஒளிந்து கொண்டிருப்பதாகவும், வீடியோவில் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கவித்ரன்.

தந்தை கண்ணன் மற்றும் இரு மகன்களையும் பிடித்து விசாரித்து புகார் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் போலீஸ் மீது குற்றஞ்சாட்டி முகநூலில் வீடியோ வெளியிடுவது தற்போது ஃபேஷனாகி வருகின்றது என்கின்றனர்.

[…]

மீராமிதுன்
சினிமா

போலீசுக்கு சவால் விடும் போலி மாடல் மீராமிதுன்..! அரசியலிலும் குதிக்க போகிராறாம்

தமிழக காவல்துறையினரிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் யார் மீது வேண்டுமானாலும் எப்.ஐ.ஆர் பதிவு செய்வார்கள் என்றும், தான் நடத்திய அழகி போட்டியை நிறுத்தியதாக போலீசாரை ஒறுமையில் கடுமையாக விமர்சித்தும் அழகி பட்டம் பறிக்கப்பட்ட மீராமிதுன் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் ஆனதை மறைத்து மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பங்கேற்று பட்டம் பெற்றவர் மீராமிதுன். அவரது மோசடி வெளிச்சத்திற்கு வந்ததால் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது. இதனால் போலியான மாடல் என்று விமர்சிக்கப்பட்ட மீராமிதுன் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் மும்பையில் பதுங்கி இருந்தார்.

சென்னை திரும்பிய அவர், தன் மீது இரு வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.தமிழக போலீசாரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்

தமிழகத்தில் தனக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதால் முப்பைக்கு சென்று விட்டதாக கூறினார் மீரா மிதுன். தான் நடத்திய அழகி போட்டியை இரண்டு போலீசார் பணம் வாங்கிக் கொண்டு தடுத்து நிறுத்தியதால் பிரச்சனையில் சிக்கியதாக கூறி ஒருமையில் விமர்சித்தார்

அரசியலில் குதிக்கப்போவதாக தெரிவித்துள்ள மீராமிதுன், தான் எடுத்து வைக்க போகும் அடுத்த ஸ்டெப்பால் பல போலீசார் வேலை காலியாக போவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

மீரா மிதுன் மீது இரண்டு முறை வழக்கு பதிவு செய்யப்பட்டும், காவல்துறையினர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்ட நிலையில் போலீசாருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், சவால் விடுக்கும் விதமாகவும் மீரா மிதுன் பேசியிருப்பது குறிப்பிடதக்கது.

[…]

ரஜினிகாந்த்
சினிமா

ரஜினிகாந்துக்கு "Icon of Golden Jubilee of IFFI 2019" விருது

கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்த் அளித்த சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி ஆஃப் ஐஃபா 2019((ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019)) என்ற விருது வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

சினிமா நட்சத்திரம் ரஜினிகாந்துக்கு இந்த விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நவம்பர் 20 முதல் 28 தேதி வரை கோவாவில் நடைபெறவுள்ள 50 ஆம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது ரஜினிக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள், சினிமா ஆர்வலர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விழாவில் பாலிவுட் முன்னணி நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் பிரெஞ்ச் நடிகை இசபெல்லா ஹூபெர்ட்டுக்கு வெளிநாட்டு கலைஞர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.

கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50 ஆண்டு கொண்டாட்டத்தில் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விருதுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த், இந்த மதிப்பு மிக்க கவுரவத்தை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

[…]

ஷாருக்கானின்
சினிமா

நடிகர் ஷாருக்கான் 54வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டனர்.

இரவில் லேசாக மழை தூறிய போதும் ரசிகர்கள் பெருந்திரளாக அவர் வீட்டு முன் காத்திருந்தனர்.ரசிகர்களை சந்திக்க வீட்டின் பால்கனியில் தோன்றிய ஷாருக்கான் தமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவரை செல்போனில் படம் எடுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர்.

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடிகர் ஷாருக்கானுக்கு சமூக ஊடகங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர்.

[…]

விஜய் சேதுபதி
சினிமா

விஜய் சேதுபதி - மேகா ஆகாஷ் நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர்

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. 

விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கும் இப்படத்துக்கு இசை - நிவாஸ் கே. பிரசன்னா, ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் அமலா பால் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அமலா பால் இந்தப் படத்திலிருந்து விலகி விட்டதால் அந்தக் கதாபாத்திரத்துக்கு மேகா ஆகாஷ் தேர்வானார். இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார். 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற தலைப்பை விஜய் சேதுபதி தான் தேர்வு செய்தார். இந்தப் படத்தின் கதைக்கு அது மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோஹந்த். 

[…]

கீதாஞ்சலி
சினிமா

பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி மறைவு

20-ஆம் நூற்றாண்டில் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகையாக இருந்தவரும், பழம்பெரும் நடிகையுமான கீதாஞ்சலி (72) புதன்கிழமை இரவு காலமானாா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த கீதாஞ்சலி, கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றி காணப்பட்டாா். இந்நிலையில், அவருக்கு புதன்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனால், அவரை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு குடும்பத்தினா் கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிா் பிரிந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ஆந்திரத்தில் கடந்த 1947-ஆம் ஆண்டு பிறந்த இவா், தெலுங்கில் வெளியான ‘சீதாராம கல்யாணம்’ திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈா்த்தாா். அதன் பின்னா் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் அவா் நடித்துள்ளாா். தமிழில் ‘அன்னமிட்ட கை’, ‘தாயின் மடியில்’, ‘கங்கா கௌரி’ உள்ளிட்ட படங்களில் அவா் நடித்துள்ளாா்.

கீதாஞ்சலியின் மறைவுக்கு தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘சீதாராம கல்யாணம்’ திரைப்படத்தில் கீதாஞ்சலி நடித்த சீதை கதாப்பாத்திரம் அனைவராலும் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

இதனிடையே, கீதாஞ்சலியின் மறைவுக்கு தெலுங்கு திரைப்பட சங்கம் மற்றும் பிரபல தெலுங்கு நடிகா், நடிகைகள் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

[…]

பூஜாகுமார்
சினிமா

சிபிராஜுடன் இணையவிருக்கும் ‘கமல்’ நாயகி!

விஸ்வரூபம் 1 & 2, மற்றும் உத்தமவில்லன் திரைப்படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்தவர் நடிகை பூஜாகுமார். இவர் 90 பல காலம் முன்பே தமிழ் திரைப்படங்களில் நாயகியாக அறிமுகமாகியிருந்த போதும் ரசிகர்களிடையே பரவலான அறிமுகம் பெற்றது கமலின் விஸ்வரூபம் திரைப்படத்தில் முகம் காட்டிய பின்பே. கமலுடன் நடித்த பின்னரும் பெரிதாக இவரைத் தமிழ்த்திரைப்படங்களில் காண முடிந்ததில்லை. நடிகர் பிரபுவுக்கு இணையாக ‘மீன் குழம்பும் மண் பானையும்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தற்போது நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படமொன்றில் குறிப்பிடத்தக்க வேடமொன்றில் நடிக்க ஒப்பந்தமாயிருப்பதாகத் தகவல். இதைப் பற்றி படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான ஜி தனஞ்ஜெயன் கூறுகையில்.. தயாரிப்பில் இருக்கும் ‘கபடதாரி’ திரைப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரம் நடிகை பூஜா குமாருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், கதைப்படி அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய திருப்புமுனைக்கு காரணமாக அமையும் படி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சிபிராஜ், நந்திதா நாயக, நாயகியாக நடிக்கவிருக்கும் கபடதாரி ஒரு ஆக்‌ஷன் திரில்லர் வகைத்திரைப்படம். 

படத்தின் இயக்கநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

இசையமைப்பு சிமோன் கிங்.

இத்திரைப்படத்தில் சிபிராஜ், நந்திதா, பூஜாகுமார் தவிர நாசர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் உண்டு என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

நடிகை பூஜாகுமார், தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த காலங்களில் அமெரிக்கத் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

[…]

சமந்தா
சினிமா

வெப் சீரியலில் நடிக்கும் சமந்தா

தமிழில் வெளியான "96' படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்து வரும் சமந்தா அக்னினேனி, இனி கிளாமர் பாத்திரங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளதால், வெப் சீரியலில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் மனோஜ் பாஜ்பாயி, பிரியாமணி ஆகியோர் நடித்து ஒளிப்பரப்பாகி வரும் 10 பகுதிகளை கொண்ட "தி பேமிலிமேன்' என்ற வெப்சீரியலின் இரண்டாவது பகுதியில் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க சமந்தா ஒப்புக் கொண்டுள்ளாராம்.

[…]

ஷ்ருதி
சினிமா

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள ஷ்ருதி ஹாசன்!

தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு முன்பே தெலுங்குப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷ்ருதி ஹாசன். அவ்வப்போது தொடர்ந்து தெலுங்குப் படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் புதிய தெலுங்குப் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷ்ருதி ஹாசன். 

ரவி தேஜாவின் 66-வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஷ்ருதி. இதன்மூலம் ஆறு வருடங்களுக்குப் பிறகு ரவி தேஜாவின் படத்தில் அவர் மீண்டும் நடிக்கிறார். கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்தப் படத்தில் ரவி தேஜா, காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். 

ஒரு வருட இடைவெளைக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் ஷ்ருதி ஹாசன். 2018-ல் அவர் நடித்த எந்தப் படமும் வெளியாகவில்லை. தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். 

[…]

பிகில்
சினிமா

“பிகில்” டிக்கெட் பிரச்சனை - தியேட்டருக்குள்ளேயே அடிதடி

புதுச்சேரியில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் டிக்கெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையில் தியேட்டருக்குள்ளேயே ரசிகர்கள் சிலர் மோதிக்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

புதுச்சேரியில் 14 திரை அரங்குகளில் நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த 25 ம் தேதி வெளியிடப்பட்டது. அன்றே சில திரையரங்குகளில் பிளாக்கில் டிக்கெட் விற்றதாக 2 ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் காமராஜ் சாலையில் உள்ள தியேட்டரில் ரசிகர்கள் படம் பார்க்கும் ஆவலில் சுவரை தாவி குதித்தும், முண்டியடித்தும் வந்ததால் போலீசார் இலேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை இரவு கோரிமேடு செல்லும் சாலையில் உள்ள முருகா தியேட்டர் கவுண்டரில் டிக்கெட் வாங்கும் போது விஜய் ரசிகர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிக தொகை கொண்ட டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்றுத் தீர்ந்துவிட, 75 ரூபாய் டிக்கெட் வாங்க இந்த போட்டி, வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளியில் துவங்கிய இந்த வாக்குவாதம் படம் ஓடிக்கொண்டிருந்தபோது தியேட்டருக்குள் மோதலாக மாறியது. ரசிகர்களில் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட செல்போன் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதில் காயமடைந்தவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவருக்கு மண்டை உடைந்து தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது. சம்பவம் தொடர்பாக தன்வந்திரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

[…]

ராகவா லாரன்ஸ்
சினிமா

சுஜித்தின் பெற்றோருக்கு ராகவா லாரன்ஸ் கோரிக்கை!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை சுஜித், 80 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தான். மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆரோக்கியதாஸின் இரண்டரை வயது குழந்தை சுஜித், பராமரிப்பின்றி திறந்தவெளியில் இருந்த சுமார் 350 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். 27 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்க மேற்கொண்ட முயற்சிகள், ஆழ்துளைக் கிணற்றின் விட்டத்தின் அளவு குறுகியதாக இருந்ததால் தோல்வியடைந்தன. சனிக்கிழமை அதிகாலை  70 அடி ஆழத்துக்கும் கீழே குழந்தை சுஜித் சென்றுவிட்டான். இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் சுஜித் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு சுஜித்தின் உடல் இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. 

நடிகர் ராகவா லாரன்ஸ், சுஜித்தின் பெற்றோருக்குக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவில் அவர் கூறியதாவது:

குழந்தை சுஜித்தின் மரணத்தால் இன்று அக்டோபர் 29, எனது பிறந்தநாளைக் கொண்டாட மனம் வரவில்லை. ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கிவிட்டுச் சென்றுவிட்டான் சுஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது. இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்குச் சொல்ல விரும்புவது... சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்தப் பிள்ளைக்கு சுஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். அதன்மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

[…]

ஜான்வி
சினிமா

தென்னிந்திய மொழியிலும் நடிக்க இப்போதைக்கு விரும்பவில்லை: ஜான்வி

ஸ்ரீதேவி, போனிகபூரின் மகள் ஜான்வி கபூர். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின் ஹிந்தியில்  கதாநாயகியாக  அறிமுகம் ஆனார்.  இதைத் தொடர்ந்து ஹிந்தியில் அவர்  3 படங்களில் நடித்து வருகிறார். அவர் தமிழ் அல்லது தெலுங்கில் நடிப்பார் என பேச்சு எழுந்தது.  தென்னிந்தியாவைச் சேர்ந்த பல இயக்குநர்கள் அவரை அணுகி கதை சொல்லி வந்தனர். போனிகபூர் தமிழ், தெலுங்கு படங்களைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அஜித் நடிப்பில் "வலிமை' படத்தை அவர் தயாரிக்கிறார்.

"பிங்க்' ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் அவர் தயாரிக்க உள்ளார். இந்த இரு படங்களில் ஒன்றில் ஜான்வி நடிப்பார் என பேசப்பட்டது. ஆனால் இது பற்றிய முடிவை ஜான்வியிடமே விட்டு விட்டதாக போனிகபூர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ""விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க ஆசை'' என ஜான்வி சொல்லியிருந்தார். இதனால் அவர் தெலுங்கில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில், ""தமிழ் உள்பட எந்தத் தென்னிந்திய மொழியிலும் இப்போதைக்கு நடிக்க விரும்பவில்லை'' என ஜான்வி தெரிவித்துள்ளார்.

[…]

பிகில்
சினிமா

பிகில் படத்தின் முதல் நாள் வசூல்!

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. பிகில் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் கால அளவு 2 மணி நேரம் 58 நிமிடம் 59 நொடி. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் பிகில் படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 25 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று, சிறப்புக் காட்சி உள்பட தமிழகம் முழுக்க அரங்கு நிறைந்த காட்சிகளாக பிகில் படம் ஓடியதால் இந்த அபாரமான வசூலை அடைந்துள்ளது. திங்கள் வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் முதல் நான்கு நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

[…]

லிவிங்ஸ்டன்
சினிமா

வருகிறது சுந்தர புருஷன் 2

லிவிங்ஸ்டன் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற படம் - சுந்தர புருஷன். 1996-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது.

இந்தப் படத்தில், கதை எழுதி இயக்குவதோடு கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார் லிவிங்ஸ்டன். சுந்தர புருஷன் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் இருக்காது. 50 வயது ஆண், தன் வயதை விடவும் பாதி வயது கொண்ட பெண்ணைத் திருமணம் செய்யும் கதை தான் 2-ம் பாகமாக வரும். ரசிகர்கள் சிரித்து மகிழும்படி படம் இருக்கும் என்று பேட்டியளித்துள்ளார் லிவிங்ஸ்டன். சுந்தர புருஷன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் தொடங்கவுள்ளது. 

[…]

நுங்கம்பாக்கம்
சினிமா

"நுங்கம்பாக்கம்" திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

"நுங்கம்பாக்கம்" திரைப்படத்திற்கு தடை கோரி, சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமாரின் தந்தை தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து, மென்பொறியாளர் ஸ்வாதி கடந்த 2016ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், செங்கோட்டையை சேர்ந்த பொறியியல் மாணவர் ராம்குமார் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அங்கு மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களை மையமாக வைத்து, இயக்குனர் ரமேஷ் என்பவர் எடுத்துள்ள "நுங்கம்பாக்கம்" திரைப்படத்திற்கு தடை கோரி, ராம்குமாரின் தந்தை பரமசிவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தன் மகனின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இப்படத்தை வெளியிட்டால் விசாரணை பாதிக்கும் என அவர் முறையிட்டிருந்தார். இந்த மனுவை நீதிபதி ராஜா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ராம்குமாரின் மரணம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருவதால் இந்த வழக்கில், நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

[…]

நுங்கம்பாக்கம்
சினிமா

"நுங்கம்பாக்கம்" திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

"நுங்கம்பாக்கம்" திரைப்படத்திற்கு தடை கோரி, சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமாரின் தந்தை தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து, மென்பொறியாளர் ஸ்வாதி கடந்த 2016ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், செங்கோட்டையை சேர்ந்த பொறியியல் மாணவர் ராம்குமார் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அங்கு மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களை மையமாக வைத்து, இயக்குனர் ரமேஷ் என்பவர் எடுத்துள்ள "நுங்கம்பாக்கம்" திரைப்படத்திற்கு தடை கோரி, ராம்குமாரின் தந்தை பரமசிவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தன் மகனின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இப்படத்தை வெளியிட்டால் விசாரணை பாதிக்கும் என அவர் முறையிட்டிருந்தார். இந்த மனுவை நீதிபதி ராஜா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ராம்குமாரின் மரணம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருவதால் இந்த வழக்கில், நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

[…]

பிகில்
சினிமா

தமிழக அரசு அனுமதி அளித்ததால் திரையிடப்பட்டது பிகில் படத்தின் சிறப்பு காட்சி

பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளித்ததையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு படம் வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகமாக திரையரங்குகளில் திரண்டனர்.

தீபாவளிக்கு இந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மிகுந்த பொருட்செலவுடன் தயாரிக்கப்பட்ட இப்படத்தின்  சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை.

கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்பதாகவும் புகார்கள் எழுந்த நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் மூலம் சிறப்புக் காட்சிக்கு அனுமதியளிக்குமாறு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று ஒருநாள் மட்டும் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதியளித்துள்ளார்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கூடுதலான கட்டணம் வசூலித்திருந்தால் அதனை ரசிகர்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

நிபந்தனைகளை ஏற்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்ததையடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு பல்வேறு திரையரங்குகளில் பிகில் படத்தின் முதல் காட்சி வெளியானது.

இதனால் ரசிகர்கள் பெரும் திரளாக அதிகாலை 1 மணி முதல் திரையரங்குகளில் திரண்டனர்.பட்டாசுகளை வெடித்தும் ஆடிப்பாடியும் அவர்கள் கொண்டாடினர். இன்று பிகில், கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியானது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்திற்கு ரசிகர் மன்றம் சார்பாக போலி டிக்கெட் விற்பனை செய்ததால் அங்குள்ள இரு திரையரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

இதனை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலி டிக்கெட் விற்பனை குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் ரசிகர் மன்றத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக டிக்கெட் அடித்த கும்பலை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகேயுள்ள 3 திரையரங்குகளில், பிகில் படம் பார்க்க அதிகாலையில் குவிந்த ரசிகர்கள், படம் வெளியிட தாமதமானதாக கூறி, ஆத்திரமடைந்தனர். இதையடுத்து, சாலையில் வைக்கப்பட்டிருந்த போலீசாரின் தடுப்பு வேலிகள் மற்றும் கடைகளின் பேனர்கள் உள்ளிட்டவற்றை சாலையில் போட்டு உடைத்தனர். இதனால் கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியான ரவுண்டானா பகுதி, போர்க்களம் போல மாறியது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

[…]

முனியம்மா
சினிமா

பரவை முனியம்மாவின் கோரிக்கை நிறைவேறுமா?!

பரவை முனியம்மாவைத் தெரியாதவர்கள் யார்? ‘தூள்’ திரைப்படத்தில் ‘சிங்கம் போல நடந்து வரான் செல்லப் பேராண்டி’ பாடலைப் பாடி தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் பரவை . நாட்டுப்புற இசைப் பாடகியான இவர், ஊர் ஊராகச் சென்று திருவிழாக்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர். அதுவே அவருக்குத் தொழிலாகவும் இருந்த வந்த நிலையில் தான், இயக்குனர் தரணியின் கண்களில் பட்டு திரையுலகில் நுழைந்தார். தூள், ஏய் படங்களில் நாயக், நாயகிகளின் பாட்டியாக நடித்து தூள் கிளப்பவும் செய்தார்.

தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் சமையல் நிகழ்ச்சியொன்றிலும் தொடர்ந்து இடம்பெற்று கிராமத்துச் சமையல் செய்து காட்டிக் கொண்டிருந்தார். 

மதுரைப் பக்கம் ‘பரவை’ கிராமத்தைச் சேர்ந்தவரான முனியம்மா, தற்போது உடல்நலக் குறைவால் அவதிப் பட்டு வருகிறார். வயோதிகத்தின் காரணமான இந்த உடல்நலக்குறைவால் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகி வரும் பரவை முனியம்மா, தன் காலத்திற்குப் பிறகு மாற்றுத்திறனாளியான தனது மகன் என்ன செய்வார்? அவரது வாழ்க்கை என்னவாகுமோ? என்ற கவலைக்கு ஆளாகியுள்ளார். அது குறித்த கடும் மன உளைச்சலில் இருக்கும் பரவை முனியம்மா தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே, பரவை முனியம்மாவின் கஷ்ட ஜீவனத்தை அறிந்து அவருக்கு அவரது நாட்டுப்புறப் பாடல் சேவையைக் கருத்தில் கொண்டு ரூ 6 லட்சம் நிரந்தர வைப்பு நிதியாகவும், மாதம் தோறும் ரூ 6000 உதவித் தொகையாகவும் கிடைக்குமாறு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

அந்த உதவித் தொகை இதுநாள் வரை சரியாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது தனக்கு உடல்நலக் குறைவு அதிகமாகி விட்டபடியால், தன் காலத்திற்குப் பிறகும் அந்தத் தொகையை மாற்றுத்திறனாளியான தனது மகனுக்கு தமிழக அரசு வழங்கினால் தன்னுடைய மனக்கவலை அகலும் எனக் கூறியுள்ளார் பரவை முனியம்மா.

பரவை முனியம்மாவின் கோரிக்க நியாயமானதாக இருக்கலாம். ஆனால், இது குறித்து தமிழக அரசு சார்பில் பதிலொன்றும் இதுவரை தெரிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
 

 

[…]

ஷில்பா
சினிமா

தாவூத் கூட்டாளிகளிடமிருந்து ரூ.100 கோடி கடன் வாங்கிய ஷில்பா ஷெட்டி?

தாவூத் இப்ராகிமின் நிறுவனத்திடமிருந்து நடிகை ஷில்பா ஷெட்டியும் அவர் கணவர் ராஜ் குந்தராவும் 100 கோடி ரூபாய் வட்டியில்லாத கடன் பெற்றதாக கூறப்படும் விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் சிக்கியுள்ள RKW முன்னாள் இயக்குனர் ரஞ்சித் பிந்த்ரா மற்றும் மற்றொரு இயக்குனரான பாபா தேவன் என்ற தீரஜ் வாத்வான் ஆகியோருடன் ஷில்பா ஷெட்டி  இயக்குனராக இருந்த essential hospitality என்ற நிறுவனம் தொடர்பில் இருந்துள்ளது. தீரஜ் அப்போது ஷில்பா ஷெட்டிக்கு வட்டியில்லாமல் 100 கோடி ரூபாய் கடன் தந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி ஆங்கில ஊடகங்களால் வெளியிடப்பட்டதால் பெரும் பரபரப்பு உருவானது. ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா 2011ம் ஆண்டு விமான நிலையம் அருகில் இருந்த ஒரு சொத்தை ஆர்கே டபிள்யு நிறுவனத்திற்கு விற்றதாகவும் அந்த நிறுவனம் தாவூத்துடன் தொடர்புடைய நிறுவனமா என்பது தெரியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார். தாங்கள் யாரிடமும் கடன் வாங்கவில்லை என்றும் ராஜ் குந்தரா தெரிவித்துள்ளார்

[…]

பிகில்
சினிமா

பிகில் டிக்கெட் இலவசம்..! ரசிகர்களுக்கு சத்திய சோதனை

வீட்டில் சாப்பாட்டில் சிறு கல் கிடந்தாலே கொந்தளிக்கும் இவர்கள், நடிகர் விஜய்யின் பிகில் படம் நன்றாக ஓடி, 200 கோடி ரூபாய்க்கு படத்தை விற்றுள்ள ஏழை தயாரிப்பாளர் இன்னும் பல கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சோற்றை தரையில் கொட்டி சாப்பிட்டு நேர்த்தி கடன் செய்கின்றனர்.

நடிகர் விஜய் மீது வெறித்தனமான அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் விஜய் படத்தில் சொல்லும் கருத்தை பின்பற்றி வருவது வழக்கம். அதனால் தான் சர்க்கார் படத்தில் இலவசத்துக்கு எதிராக விஜய் திரையில் இலவச டிவி, மிக்ஸி கிடைண்டர் மின்விசிறியை தீயில் போட்டு எரித்து செய்த ஒரு விரல் புரட்சியை, வீட்டில் இருந்த இலவச பொருட்களை தூக்கி வந்து தரையில் வீசி செய்து காட்டினர்.

டிக்டாக்கில் தளபதியின் ரசிகர்கள் இலவசத்துக்கு எதிரானவர்கள் என்று பகிரங்கப்படுத்தி வந்த நிலையில் தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில் படத்தின் டிக்கெட்டையே இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ள சில தனியார் நிறுவனங்களால் விஜய் ரசிகர்களுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது

முதல் நாள் பிகில் படத்திற்கு திரையரங்குகளில் ஒரு டிக்கெட் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விலை வைத்து விற்கும் நிலையில் 1500 ரூபாய்க்கு ஜவுளி வாங்கினால் பிகில் டிக்கெட் இலவசம், மொபைல் ரீசார்ஜ் செய்தால் பிகில் டிக்கெட் இலவசம், 2000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கினால் 2 பிகில் டிக்கெட் என்று பல்வேறு நிருவனங்கள் பிகில் டிக்கெட்டையே இலவசமாக வழங்க தயாராகியுள்ள நிலையில் இலவசத்துக்கு எதிரான விஜய் ரசிகர்கள் அதனை பெற்றுக் கொள்வார்களா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இலவச அறிவிப்புகள் விஜய்யின் கொள்கை மீது பற்றுள்ள ரசிகர்களுக்கு சத்திய சோதனையாக அமைந்துள்ளது.

இதற்கிடையே பிகில், கைதி என எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ள நிலையில் களியக்காவிளையில் விஜய் ரசிகர் மன்றத்தினர் திரையரங்குகளில் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு ஒரு டிக்கெட் 300 ரூபாய்க்கு பேரம் பேசி விற்று வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இங்கு மட்டும் அல்ல தமிழகத்தில் பெரும்பாலான திரையரங்குகளில் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் கட்டணம் வசூலித்து சிறப்பு காட்சி வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயாராகி வருகின்றனர். கூடுதல் விலை கொடுத்து வாங்குவதற்கு சில விஜய் ரசிகர்களும் தயாராகவே உள்ளனர்.

அந்தவகையில் பிகில் தீபாவளி சிறப்பு காட்சிக்கு சில நிபந்தனைகளோடு அனுமதி கிடைத்து விடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மழை பெய்தால் வெள்ளம் வருவதும், திரையரங்கு உரிமையாளர்கள் பண்டிகை நாட்களில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பதும் சகஜம் என்பதே கசப்பான உண்மை..!

[…]

பிகில்
சினிமா

பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் தீபாவளி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், விதியை மீறி ஒளிபரப்பினால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்  ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து கேட்டதற்கு, தீபாவளிக்கு திரையரங்குகளில் எந்த திரைபடத்துக்கும் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், அதை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடுவது மற்றும் அதற்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது என்றும் கூறினார்.

அதேபோல், அரசு அனுமதி அளிக்காத நேரத்தில், திரையரங்குகளில் காட்சி ஒளிபரப்பு செய்தால் சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்தார்.

பிகில் படக் கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிகில் கதை தன்னுடையது எனக் கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் செல்வா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், கதைக்கு காப்புரிமை கோரினார். அதை நீதிமன்றம் ஏற்காததால், வழக்கை திரும்பப் பெற்றார். 

காப்புரிமை தொடர்பாக மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக கூடாது என அந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், காப்புரிமை மீறல் தொடர்பாக மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கேட்டு செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். 

விளம்பரம் மற்றும் பணம் பறிப்பதற்காகவே கடைசி நேரத்தில் செல்வா வழக்கு தொடர்ந்ததாக பட நிறுவனம் மற்றும் அட்லி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிகில் படக் கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக செல்வாவுக்கு அனுமதி வழங்கினார்.

[…]

அமிதாப்
சினிமா

ரசிகர்களை பார்க்க முடியாததற்கு மன்னிப்பு கோரினார் அமிதாப் பச்சன்

கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நடிகர் அமிதாப் பச்சன், தனது வீட்டின் முன்பு கூடியிருக்கும் ரசிகர்களை காண வெளியே வர முடியாததற்காக ட்விட்டரில் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் பச்சன், கடந்த 15ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மும்பையிலுள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் வழக்கமான மருத்துவப் பரிசோதனை எனக் கூறப்பட்ட நிலையில், 4 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் 18ம் தேதி வீடு திரும்பினார். இதனிடையே அமிதாப் பச்சனின் உடல்நலன் குறித்து தெரிந்து கொள்வதற்காக அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அவரது வீட்டின் முன்பு கூடியிருந்தனர்.

அதன் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வருவதால் தன்னால் வெளியே வந்து ரசிகர்களை பார்க்க முடியவில்லை எனவும், அதற்காக தான் மன்னிப்பு கேட்டுக கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

[…]

ரஜினிகாந்த்
சினிமா

கஜா புயலில் வீடு இழந்த 10 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்..!

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு, மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்.

கஜா புயலால் முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கோடியக்கரையில் நான்கு வீடுகளும் தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும், தலா ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டன.

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, நாகை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த பயனாளிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் சாவியை ஒப்படைத்தார்.

[…]

அமிதாப்
சினிமா

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் அமிதாப் பச்சன்

மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அமிதாப் பச்சன் நான்கு நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் நேற்று இரவு வீடு திரும்பினார்.

கல்லீரல் பாதிப்பால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 15ம் தேதி அமிதாப் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

நேற்றிரவு அவர் வீடு திரும்பினார். அமிதாப்பின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் பூரண குணமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

[…]

தீபாவளி
சினிமா

கைதி - பிகிலுக்கு 24 மணி நேர சிறப்பு காட்சி..! முதல் முறையாக அனுமதி ?

தீபாவளியை முன்னிட்டு, கைதி மற்றும் பிகில் படங்களை 24 மணி நேரமும் திரையிட சிறப்பு அனுமதி கேட்டு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தீபாவளி வெளியீட்டில் இருந்து சங்கத்தமிழன் பின்வாங்கி இருக்கும் நிலையில், தீபாவளிக்கு முன்னதாக வெள்ளிக்கிழமை 25 ந்தேதி நடிகர் விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய இரு படங்களும் வெளியாக உள்ளன.

பிகில் படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் என்று சிலர் வதந்தி பரப்பிவரும் நிலையில் தமிழக திரைஉலக வரலாற்றில் முதல் முறையாக பிகில் மற்றும் கைதி ஆகிய இரு படங்களுக்கும் 24 மணி நேர தொடர் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

இதற்காக அரசின் அனுமதி கேட்டு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தனியாகவும் , படத்தின் தயாரிப்பாளர்கள் தனியாகவும் கோரிக்கை மனுவை அரசின் பார்வைக்கு அனுப்பி உள்ளனர்.

தற்போது தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தினாலும் பட வெளியீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பாக 24 மணி நேர தொடர் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கிடைத்துவிடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மால்களில் உள்ள திரையரங்குகளுக்கு மட்டும் 24 மணி நேர காட்சிக்கான சிறப்பு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் திரையரங்குகளில் கால நேரமில்லாமல் விஜய் ரசிகர்களின் பிகில் சத்தம் காதை கிழிக்கும் என்பதில் ஐயமில்லை..!

[…]

கமல்ஹாசன்
சினிமா

திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கமலுக்கு சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து

நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் கடந்த நிலையில் சென்னையில் உள்ள மறைந்த சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து கொடுக்கப்பட்டது.

1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் தனது 60 ஆண்டு கால பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் வேளையில், சென்னை தி.நகரில் உள்ள சிவாஜிகணேசன் இல்லத்திற்கு கமல்ஹாசன் சென்றுள்ளார்.

அங்கு நடிகர் பிரபு சார்பில் கமல்ஹாசனுக்கு மதிய விருந்து  அளிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

[…]

அமிதாப்
சினிமா

3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன்

உடல்நிலை சரியில்லாத காராணத்தினால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், தொடர்ந்து மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

கல்லீரல் பிரச்சனையால் நீண்ட நாட்களாக  பாதிக்கப்பட்டு வந்த அமிதாப்பச்சன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனை தான் என்று அவர் தரப்பில் கூறப்பட்டாலும், கல்லீரல் பாதிப்பு காரணமாக அமிதாப்பச்சனுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட வடநாட்டுப் பெண்களுக்கான கர்வா சவுத் பண்டிகைக்காக தனது ரசிகர்களுக்கு  அமிதாப்பச்சன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 

[…]

அசுரன்
சினிமா

அசுரன் வெறும் படம் மட்டுமல்ல பாடம் - மு.க.ஸ்டாலின் பாராட்டு

தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படம், வெறும் படம் மட்டுமல்ல பாடம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலை ஒட்டி, மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அவர் பார்த்து ரசித்தார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடி சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என அசுரன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறனுக்கும், படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுசுக்கும் பாராட்டுகள் என மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். 

[…]

மீராமிதுனின்
சினிமா

பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன ? புலம்பும் மீரா மிதூன்

பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன ? என்று டுவிட்டரில் தொடர் வீடியோ வெளியிட்டு ரகளை செய்து வரும் மீரா மிதுன், அந்த நிகழ்ச்சியை நடத்திய சேனலுக்கு சவால் விடுத்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மிஸ் சவுத் இந்தியா அழகிப் போட்டியில் திருமணமான தகவலை மறைத்து பட்டம் வென்றதால் அழகி பட்டம் பறிக்கப்பட்டவர் மீராமிதுன்..! இவர் தன்னை ஒரு மாடல் என கூறிக் கொண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய 100 நாட்கள் ஒரே வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்த வீட்டுக்குள் வைத்து சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று அவதூறாக குற்றஞ்சாட்டியதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அங்கிருந்து வெளியே வந்த மீராமிதுன், சேரனைப் பற்றி அவதூறு பரப்ப ஏற்பாடு செய்தது அம்பலமானதால் அந்த நபரை கொலை செய்ய மீரா மிதுன் திட்டமிட்ட ஆடியோ வெளியானது.

இதையடுத்து தலைமறைவான மீராமிதுன் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று மும்பையில் பதுங்கி இருந்து தினந்தோறும் விதவிதமாக வீடியோ வெளியிட்டு வருகின்றார்.

அந்தவகையில் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன ? என்பது குறித்து மீண்டும் சேரனை கடுமையாக விமர்சித்துள்ளார் மீரா மிதுன்

அதே போல பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சிக்கு சவால் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு வம்புக்கு இழுத்துள்ளார் மீரா மிதுன்

மீராமிதுனின் சவாலுக்கு பிக்பாஸ் நடத்தும் தொலைக்காட்சி என்ன பதில் சொல்லபோகிறது என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.

[…]

Michele Pfeiffer
சினிமா

Mistress of Evil திரைப்படத்தின் சுவாரஸ்ய காட்சிகளை புகழ்ந்த ஹாலிவுட் நடிகை

உலகளவில் வெளியாகவுள்ள மேலிபிசியன்ட்: மிஸ்ட்ரஸ் ஆப் ஈவில் திரைப்படத்தின் சுவாரஸ்ய காட்சிகளை ஹாலிவுட் நடிகை Michele Pfeiffer புகழ்ந்துள்ளார்.

ஹாலிவுட் ஆக் ஷன் நடிகை ஏஞ்சலினா ஜோலி நடிப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘Malificient’ என்ற ஹாலிவுட் டார்க் பேன்டஸி அட்வென்சர் திரைப்படம் பெரும் வசூலை குவித்தது. இதில் தேவதைகளின் இளவரசி அரோராவின் காட் மதராக ஏஞ்சலினா நடித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ‘மேலிபிசியன்ட்: மிஸ்ட்ரஸ் ஆப் ஈவில்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டு, உலக முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் ராணி வேடத்தில் நடித்துள்ள நடிகை Michele Pfeiffer , தான் நடித்த இரவு விருந்து காட்சி மிகவும் நீளமானதாகவும் மற்றும் நகைச்சுவையுடனும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

[…]

பிகில்
சினிமா

பிகில் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கில் ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு இயக்குநர் அட்லீக்கு உத்தரவு

பிகில் திரைப்படம் தொடர்பான ஆவணங்களை இயக்குநர் அட்லீயும், தயாரிப்பு நிறுவனமும் நாளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 செல்வா என்பவர் தாக்கல் செய்த மனுவில், பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும், 256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், ஆனால் தற்போது தன்னுடைய கதையை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே பிகில் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு, படத்தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநர் அட்லீக்கும் உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தார்.

[…]

 இர்பான் பதானும், ஹர்பஜன் சிங்கும்
சினிமா

தமிழ் சினிமாவில் களம் காணும் இர்பான் பதான், ஹர்பஜன் சிங்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதானும், ஹர்பஜன் சிங்கும் தமிழ் சினிமாவில் களம் காணவுள்ளனர்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக நடிகர் விக்ரமை வைத்து புதிய படம் இயக்கவுள்ளார்.

அதில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான இர்பான் பதான், முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதுதொடர்பாக இர்பான் பதானும், அஜய் ஞானமுத்துவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதேபோல், முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடிக்க உள்ளார்.

கார்த்திக் யோகி இயக்கும் டிக்கிலோனா என்ற படத்தில் நடிப்பதற்கு ஹர்பஜன் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இர்பான் பதானும், ஹர்பஜன் சிங்கும் ஐ.பி.எல்.லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர்கள் ஆவர்.

[…]

ரஜினிகாந்த்
சினிமா

இமயமலைக்கு புறப்பட்டார் ரஜினி..!!

நடிகர் ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் ஆசிரமம் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தர்பார் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் ரஜினிகாந்த், இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அடுத்த படத்தின் படப்பிடிற்கு முன்னதாக தன்னை புத்துணர்ச்சி அடையச் செய்யும்விதமாகவும் ஆன்மிகப்பயணமாகவும் ரஜினி இமயலை சென்றதாக கூறப்படுகிறது.

இமயமலை செல்லும் வழியில் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் ரஜினி தியானம் செய்வது வழக்கம். இதற்காக அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த ரஜினியை அங்கிருந்த ரசிகர்கள் சந்தித்து புகைப்பம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

[…]

ரிஹானா
சினிமா

504 பக்கங்களுக்கு தமது சுயசரிதையை எழுதி வெளியிட்டார் பாப் பாடகி ரிஹானா

உலகின் முன்னணி பாப் பாடகியான ரிஹானா தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டார். இதன் மூலம் எழுத்தாளர் என்ற இன்னொரு திறமைக்கும் அவர் புகழ் பெற்றுள்ளார்.

504 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் சுமார் 7 கிலோ எடை கொண்டது. ரசிகர்களுடன் உள்ள ஏராளமான நினைவுகளை இதில் தொகுத்திருப்பதாக ரிஹானா கூறுகிறார். நியுயார்க்கில் மன்ஹாட்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த காலத்தில் தமது தொழில் ரீதியான வளர்ச்சி இதில் பதிவாகியிருப்பதாக கூறினார்.

ரிஹானாவின் சிறுபிராயம் முதல் தற்போதைய உச்சம்வரை காலத்தை பதிவு செய்யும் வகையில் பல அரிய புகைப்படங்களின் தொகுப்பாகவும் இந்த புத்தகம் உள்ளது.இந்த புத்தகம் தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக ரிஹானா கூறினார்.

[…]

அமிதாப்
சினிமா

நடிகர் அமிதாப் பச்சனுக்கு இன்று 77 வது பிறந்தநாள்

பாலிவுட்டின் மெகா ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் இன்று தமது 77வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அமிதாப்பின் திரையுலக வரலாற்றை குறிக்கும் ஒரு செய்தித் தொகுப்பை இப்போது காணலாம்.....

1969ம் ஆண்டில் அமிதாப் பச்சனின் திரையுலகப் பிரவேசம் மாற்று சினிமாவில் தொடங்கி, ராஜேஷ்கன்னாவுக்கு அடுத்து இரண்டாவது நாயகனாக ஆனந்த் போன்ற படங்களால் புடம் போடப்பட்டு, மைய சினிமாவின் மிகப்பெரிய கமர்ஷியல் நாயகனாக அவரை மாற்றியது. zanzeer படத்திலிருந்து அமிதாப்புக்கு அந்த திருப்புமுனை ஏற்பட்டது.

தொடர்ந்து சலீம்-ஜாவேத் திரைக்கதையாளர்களின் மிகச்சிறந்த கதைகள், மன்மோகன்தேசாய், பிரகாஷ் மெஹ்ரா, யஷ் சோப்ரா போன்ற முக்கிய இயக்குனர்களுடன் அமிதாப் இணைந்து பணியாற்றிய போது ஏராளமான அற்புதமான பொழுதுபோக்கு படங்கள் கிடைத்தன. அவை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தன.

SHOLAY, கபீ கபீ , அமர் அக்பர் அந்தோனி போன்ற திரைப்படங்கள் அமிதாப் பச்சனின் உயரத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றன.

நடிகை ஜெயா பச்சனை மணந்துள்ள அமிதாப்புக்கு அபிஷேக் என்ற மகனும், ஸ்வேதா என்ற மகளும் உள்ளனர். அபிசேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை மணந்ததும் உலகம் அறிந்ததுதான்.

குடும்பத்தினருடன் ஆழமான பிணைப்புகளைக் கொண்ட அமிதாப் பச்சன் திரையுலகில் இன்றும் மெகா ஸ்டாராக நீடித்திருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் விவசாயிகளின் கடன் அடைப்பது போன்ற சமூகப் பணிகளிலும் அமிதாப் பெரும் மதிப்பை சம்பாதித்துள்ளார்.

இன்று 77 வயதாகும் அமிதாப்பின் படங்கள் இன்னும் நூறு ஆண்டுகளுக்குக்கூட ரசிகர்களுக்கு சலிப்பை தராது என்பது நிச்சயம். காரணம் கதாபாத்திரத்தை மிஞ்சிவிட்ட அமிதாப்பின் அபாரமான நடிப்பு. இந்த திறமை அபூர்வமானது. அண்மையில் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.

[…]

நடிகர் விஜய்
சினிமா

ரசிகனை தொட்டதால் கை கழுவினாரா விஜய் ? இயக்குனர் Vs ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து பிரபல இயக்குனர் ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிர், மிருகம், சிந்துசமவெளி என்று சர்ச்சைகளுக்குரிய தமிழ் படங்களை இயக்கியவர் இயக்குனர் சாமி. இவர் டிவிட்டரில், நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து வெளியிட்ட வீடியோ ஒன்றுதான் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களிடம் பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கின்றது

இந்த நிலையில் இயக்குனர் சாமியின் வீடியோவை அஜித் ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு வேகமாக பகிர, இதனை கண்டு கொதிப்படைந்த விஜய் ரசிகர்கள் இயக்குனர் சாமி மற்றும் அஜீத் ரசிகர்களுக்கு எதிராக கருத்து பதிவிட்டு டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

அண்மையில் விமான நிலையம் சென்ற நடிகர் விஜய், ரசிகர்களின் அன்பு தொல்லையை தவிர்க்க முகத்தை மூடியபடி சென்றதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நடிகர் அஜித்தோ ரசிகர்களுடன் அமைதியாக நின்று செல்பி எடுத்து சென்றதை சுட்டிக்காட்டி இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளால் மோதிக் கொள்கின்றனர்.

நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சினிமா ரசிகர்களுக்கோ, தங்கள் அபிமான நடிகர்களுக்காக மோதிக் கொள்வதே ஒரே பொழுது போக்காக உள்ளது.

[…]

நடிகை ரேவதி
சினிமா

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசதுரோக வழக்கு ரத்து

இயக்குனர்கள் ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், அபர்ணா சென், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை பீகார் காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர்.

கால்நடை வியாபாரிகள், தலித்துகள், திருட்டு, குழந்தை கடத்தல் என சந்தேகத்திற்கு ஆளான நபர்கள், தனியாக சிக்கினால் அவர்களை கும்பல் கும்பலாக கூடி மூர்க்கத்தனமாக தாக்குவதும், உயிரிழப்புக்கு காரணமாக இருப்பதும் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருகிறது.

சட்டம் ஒழுங்கு மீறல் பிரச்சினையாக கருதப்பட்டாலும், திட்டமிட்டே அந்நிய சக்திகளாலும் சமூக விஷமிகளாலும் இந்த கலாசாரம் இந்தியாவுக்குள் பரவி வருவதாக ஆர்.எஸ்.எஸ் கருத்து தெரிவித்துள்ளது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி பிரதமர் மோடிக்கு 49 கலைஞர்கள் கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தனர்.

உயரிய விருதுகளைப் பெற்ற திரைப்பட இயக்குனர்கள் அடூர் கோபாலகிருஷ்ணன், அபர்ணா சென், மணிரத்னம், மதுர் பண்டார்கர், அனுராக் காஷ்யாப், நடிகைகள் ரேவதி, வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர். இந்நிலையில் பீகாரில் மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் சதார் காவல்நிலையத்தில் 49 பேர் மீது போலீசார் தேசதுரோக வழக்குப் பதிவு செய்தனர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.

இதே போன்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் உள்ளிட்டோரும் பிரதமருக்கு கடிதம் எழுதினர். தங்கள் மீது தொடரப்பட்ட வழக்குக்கு காரணமாக இருந்த அறிக்கை உண்மையானதென்றால் அரசியல் சாசனத்தையே சந்தேகப்பட நேரிடும் என்று இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 49 பேர் மீதான வழக்கை ரத்து செய்துள்ள பீகார் போலீசார், போதிய ஆதாரங்களில்லாமல் தவறான தகவல்களின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பொய் புகார் அளித்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

[…]

நடிகர் சிம்பு
சினிமா

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்...

படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக நடிகர் சிம்பு மீது  தயாரிப்பாளர் சங்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். 

முப்டி என்ற கன்னடத் திரைப்படத்தை, அதே இயக்குநர் நார்தனை வைத்து தமிழில் மறுஆக்கம் செய்ய ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முடிவு செய்தார். இப்படத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிப்பதாகக் கூறப்பட்டது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரியிடம் ஞானவேல் ராஜா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் சிம்பு ஒப்புக் கொண்ட படி, படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஒரு மாதம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்பு பின்னர் வெளிநாடு சென்றதால் தொடர்ந்து படபிடிப்பினை நடத்த இயலாமல் போனதாகவும் இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல்ரஜா சார்பில் தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரி சேகரிடம் புகார் அளிக்கபட்டுள்ளது.

தற்போது சிம்புவின் கால் ஷீட்டுக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. எனவே நடிகர் சிம்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிம்பு ஏற்கெனவே மாநாடு திரைப்படத்திற்கு முறையாக கால்சீட் கொடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அந்தப் படத்தைக் கைவிடுவதாக அறிவித்த நிலையில், தற்போது மேலும் ஒரு புகார் எழுந்திருப்பது சிம்புவுக்கு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது.

[…]

 3 படங்கள்
சினிமா

பிகில் - கைதி - சங்கத்தமிழன்..! தீபாவளி ரேஸில் 3 படங்கள்

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும், வருகிற தீபாவளி தினத்தன்று , பிகில், கைதி, சங்கத்தமிழன் ஆகிய 3 படங்கள் வெளியாக உள்ளதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

நடிகர் விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், பிகில் படம் எந்த ஒரு சிக்கலையும் எதிர் கொள்ளப் போவதில்லை என்றும், திட்டமிட்டப்படி தீபாவளிக்கு திரைக்கு வரும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார். இந்த முறை தீபாவளிக்கு பிகில் மட்டுமல்லாமல், கார்த்தி நடிக்கும் கைதி, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்களும் வெளியாவதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்றார். அதே நேரத்தில் இந்த மூன்று படங்களுமே தீபாவளிக்கு முன் கூட்டியே அதாவது வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்யின் பைரவா, மெர்சல், சர்கார் ஆகிய 3 படங்களும் எந்த ஒரு போட்டி படங்களும் இன்றி தன்னந்தனியாக திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த நிலையில், பிகில் படத்தின் வசூல் குறையும் என்றும், ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினம் என்ற நிலையில் சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை பள்ளி வேலை நாட்கள் என்பதால் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கருதும் திரையரங்கு உரிமையாளர்கள், 3 படங்கள் வருவதால் 2 அல்லது 3 வாரங்களுக்காவது திரையரங்குகளில் கூட்டம் சேரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

[…]

செயலாளர் விஷால்
சினிமா

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ்..

நடிகர் சங்கத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் அக்டோபர் 15ம் தேதி எண்ணப்படவுள்ள நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2018ம் ஆண்டு நிறைவடைந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படாமல் உள்ளதுடன், அது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதனால், தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படாமல் இருப்பதால், நிறை, குறைகள் மற்றும் புகார்கள் எதுவும் தெரிவிக்க முடியவில்லை என அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள எம்.ஆர்.பி.சந்தனம், சித்திரலோக ஆகியோர் பதிவுத்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், செயலாளர் நாசர் ஆகியோருக்கு பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பதிவுத்துறை சார்பாக அக்டோர் 5ம் தேதி நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், தென்னிந்திய நடிகர் சங்க செயல்பாடுகளை கவனிக்க ஏன் சிறப்பு அதிகாரியை நியமிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பிய பதிவுத்துறை அதிகாரி, இது தொடர்பாக நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், செயலாளர் விஷால் ஆகியோர் 30 நாட்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளார்.

[…]

நடிகர் ரஜினிகாந்த்
சினிமா

திரைப்படக் கதாசிரியர் கலைஞானத்திற்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்

திரைப்படக் கதாசிரியர் கலைஞானத்திற்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த், அந்த வீட்டில் குத்துவிளக்கேற்றி வைத்தார். பைரவி திரைப்படத்தின் மூலம் தனி கதாநாயகனாக ரஜினிகாந்தை அறிமுகம் செய்து வைத்தவர் கதாசிரியர் கலைஞானம்.

அவருக்கு அண்மையில் பாரதிராஜா கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கலைஞானத்திற்கு சொந்தமாக வீடு இல்லை என்பதை அறிந்து உடனடியாக வாங்கிக் கொடுப்பதாக உறுதி அளித்தார்.

அதற்கு மறுநாளே, வீட்டை வாங்குவதற்கான தொகைக்கான காசோலையில் கையெழுத்திட்ட பின்னர்தான் தர்பார் படப்பிடிப்புக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் விருகம்பாக்கம் வெங்கடேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 1,320 சதுரடியில் உள்ள வீடு கலைஞானத்திற்குச் சொந்தமாகியுள்ளது. மூன்று படுக்கை அறைகள் மற்றும் கார் நிறுத்துமிடம் வசதியுடன் அந்த வீடு அமைந்துள்ளது.

இன்று அந்த வீட்டிற்குச் சென்ற ரஜினிகாந்தை, கலைஞானம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் வீட்டில் குத்துவிளக்கேற்றி வைத்த ரஜினிகாந்த், கலைஞானத்தின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார். இனிப்பு சாப்பிட்ட படி வீட்டைச் சுற்றிப்பார்த்த ரஜினி, வீடு தெய்வீகமாக உள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

[…]

நடிகர் ரஜினிகாந்த்
சினிமா

திரைப்படக் கதாசிரியர் கலைஞானத்திற்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்

திரைப்படக் கதாசிரியர் கலைஞானத்திற்கு வீடு வாங்கிக் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த், அந்த வீட்டில் குத்துவிளக்கேற்றி வைத்தார். பைரவி திரைப்படத்தின் மூலம் தனி கதாநாயகனாக ரஜினிகாந்தை அறிமுகம் செய்து வைத்தவர் கதாசிரியர் கலைஞானம்.

அவருக்கு அண்மையில் பாரதிராஜா கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கலைஞானத்திற்கு சொந்தமாக வீடு இல்லை என்பதை அறிந்து உடனடியாக வாங்கிக் கொடுப்பதாக உறுதி அளித்தார்.

அதற்கு மறுநாளே, வீட்டை வாங்குவதற்கான தொகைக்கான காசோலையில் கையெழுத்திட்ட பின்னர்தான் தர்பார் படப்பிடிப்புக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் விருகம்பாக்கம் வெங்கடேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் 1,320 சதுரடியில் உள்ள வீடு கலைஞானத்திற்குச் சொந்தமாகியுள்ளது. மூன்று படுக்கை அறைகள் மற்றும் கார் நிறுத்துமிடம் வசதியுடன் அந்த வீடு அமைந்துள்ளது.

இன்று அந்த வீட்டிற்குச் சென்ற ரஜினிகாந்தை, கலைஞானம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பின்னர் வீட்டில் குத்துவிளக்கேற்றி வைத்த ரஜினிகாந்த், கலைஞானத்தின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினார். இனிப்பு சாப்பிட்ட படி வீட்டைச் சுற்றிப்பார்த்த ரஜினி, வீடு தெய்வீகமாக உள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார்.

[…]

நடிகர் கிருஷ்ணமூர்த்தி
சினிமா

நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்

நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி, மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 55. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்தார். விஜயகாந்தின் தவசி திரைப்படத்தில் வடிவேலுவுடன் சேர்ந்து இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் மிகவும் பிரபலம்.

ஐயா, வேலு, எல்லாம் அவன் செயல், ஆகிய திரைப்படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தி நடித்த காட்சிகள் என்றும் மறக்க முடியாதவை. நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல் பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தில் குணசித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்களை ஈர்த்தார் கிருஷ்ணமூர்த்தி.

ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், படப்பிடிப்புக்காக குமுளி சென்றிருந்த போது இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் இன்று மாலை சென்னை கொண்டு வரப்படுகிறது. மறைந்த கிருஷ்ணமூர்த்திக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

[…]

நடிகை கங்கணா ரணாவத்
சினிமா

தலைவி படத்திற்காக தயாராகும் நடிகை கங்கணா ரணாவத்

தலைவி படத்திற்காக நடிகை கங்கணா ரணாவத் பரதநாட்டிய பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் தலைவி படத்தில் கங்கணாரணாவத் நடிக்கிறார்.

திரைத்துறையிலும், அரசியலிலும் முத்திரை பதித்த ஜெயலலிதாவின் வேடத்தில் கங்கணா நடிப்பதால், இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படம் தமிழில் தலைவி என்ற பெயரிலும், தெலுங்கில் ஜெயா என்ற பெயரிலும் உருவாக்கப்படுகிறது.

இப்படத்திற்காக கங்கணா தன்னை முழு அளவில் தயார்படுத்தி வருகிறார். நடன ஆசிரியை ஒருவருடன் இணைந்து நடன பயிற்சி மேற்கொள்வது போன்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. பல்வேறு விதமான நடன அசைவுகளுடன் கங்கணா அந்த புகைப்படங்களில் காட்சி அளிக்கிறார்.

[…]

நடிகர் அஜித்
சினிமா

துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு பயிற்சி பெற டெல்லி சென்ற அஜித்

தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்கும் வகையில் நடிகர் அஜித், டெல்லியில் பயிற்சி பெற்றார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பின்னர் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்திற்காக இளமையான தோற்றத்திற்கு அஜித் மாறிய புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. நடிப்பு மட்டும் அல்லாது, ஆளில்லா விமானங்கள் தயாரிப்பு, துப்பாக்கிச் சுடுதல், புகைப்படம் எடுப்பது, கார் பந்தயத்தில் ஈடுபடுவது போன்ற திறமைகளையும் பெற்றவர் அஜித். அண்மையில் கோவையில் நடந்த மாநில ரைபிள் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் கலந்து கொண்டார்.

அதில் நன்றாக விளையாடியதால் சென்னை ரைஃபிள்: கிளப் சார்பில் 25 மீட்டர் பிரிவில் கலந்து கொண்டார். அந்தப் போட்டியில் அவர் பெற்ற புள்ளிகள் தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் வெளியாகின. இந்த நிலையில் தற்போது மீண்டும் துப்பாக்கி சுடுதலில் தீவிரமாக செயல்பட தொடங்கி உள்ளார். இந்த முறை தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டிக்கு அஜித் தயாராகி வருகிறார்.

இதற்காக டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்ச் மையத்தில் பயிற்சி எடுத்தார்.

ஒரு வார பயிற்சியை முடித்து விட்டு அஜித் சென்னை திரும்பியுள்ளார். எனவே விரைவில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் அஜித் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது.

[…]

ஆன்லைன் டிக்கெட்
சினிமா

தீபாவளிக்கு ஆன்லைன் டிக்கெட்?அடுத்தகட்ட ஆலோசனைக்குப்பின் முடிவு

தீபாவளிக்குள் ஆன்லைன் டிக்கெட் கொண்டுவரப்படுமா என்பது குறித்து மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் கலந்து பேசியுள்ளதாகவும், அடுத்த கட்ட ஆலோனையின் முடிவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் டிக்கெட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தினால் திரைத்துறையினருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும், அரசுக்கும் பயன்தரும் என இயக்குனர் ஆர்.கே.செல்வமணியும் தெரிவித்துள்ளார். சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஆர்.கே.செல்வமணி அம்மா திரைப்பட படப்பிடிப்புத் தள அடிக்கல் நாட்டு விழாவிற்காக முதலமைச்சர் பழனிசாமியிடம் தேதி கேட்டுள்ளதாகவும், தேதி உறுதியானவுடன் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அம்மா படப்பிடிப்பு தளத்திற்கான பணிகளை ஜனவரி 31ம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பணிகளை விரைந்து முடித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி திரைப்படத்தளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

[…]

நடிகர் ரஜினிகாந்த்
சினிமா

தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது : நடிகர் ரஜினிகாந்த்

தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 18ந் தேதி தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை சென்றார். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்றிரவு விமானத்தில் சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது என்றார்.

மேலும் அவரிடம் டிசம்பர் மாதம் கட்சி தொடங்குவது பற்றியும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு பதில் எதுவும் கூறாமல் காரில் ஏறி சென்றார்.

[…]

கமல்ஹாசன்
சினிமா

நண்பராக சிரஞ்சீவியின் அறிவுரையை கேட்டுக்கொள்கிறேன் - கமல்

சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்த சிகரம் தொட்ட முதல் தலைமுறை விருதுகள் நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன்.  சுபஸ்ரீ வழக்கில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டது சந்தோஷப்படுவதை விட நிம்மதி தருவதாகவும், நீதி தாமதமாக கிடைத்துள்ளது என்றும் கூறினார்.

கமல் ரஜினியின் அரசியல் வருகை குறித்த சிரஞ்சீவி கருத்துக்கு பதில் அளித்த கமல், வெற்றியை விட பயிற்சியும், முனைப்பும் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்தது என்றும், நண்பராக அவரின் அறிவுரை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினர்.

உத்தம வில்லன் பட விவகார பிரச்னையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு. உத்தமவில்லன் படத்திற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.

எங்களுக்கு சம்பந்தம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் தான் என்றும்  அவர்களிடம்தான் இந்த விவகாரம் குறித்து கேட்க வேண்டும்  என்றும் கமல் விளக்கம் அளித்தார். 

[…]

நடிகர் ஜெயம் ரவி
சினிமா

நடிகர் ஜெயம் ரவியின் மேலாளர் மீது மோசடிப் புகார் திரும்பப் பெறப்பட்டது

பாதுகாப்பு ஊழியர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பள பாக்கியை தராமல் மோசடி செய்ததாக ஜெயம் ரவியின் மேலாளர் மீது காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில், டாப் கார்டு இன்டர்நேஷனல் செக்யூரிட்டி டவர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து நந்தனத்தில் உள்ள நடிகர் ஜெயம் ரவியின் அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருவர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு பணி செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவர்கள் இருவரையும் திடீரென நடிகர் ஜெயம் ரவி வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் 4 மாதங்களாகியும் அவர்களுக்கான சம்பள பாக்கியை தரவில்லை என செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் ஜெயம் ரவி தரப்பில் சமரசம் பேசப்பட்டு சம்பள பாக்கியை கொடுத்துவிடுவதாக உறுதியளிக்கப்பட்டதன் பேரில் புகார் திரும்பப் பெறப்பட்டது.

[…]

நடிகர் சிவக்குமார்
சினிமா

கடவுள் மற்றும் மதம் தொடர்பாக நடிகர் சிவக்குமார் பேசிய வீடியோ

கடவுள் மற்றும் மதம் தொடர்பாக நடிகர் சிவக்குமார் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளி மாநிலத்தில் படப்பிடிப்புக்கு சென்றபோது அங்குள்ள தர்காவுக்குச் சென்ற வீடியோ வெளியானதையடுத்து அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது,  அந்தப் படம் திப்பு சுல்தான் தொடர்புடைய கதையைக் கொண்டது என்ற தகவலை அடுத்து அங்கு போராட்டம் நடைபெற்றது.

இதையடுத்து  படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

நடிகர் சிவக்குமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி ஆகியோர் இந்து மதத்திற்கு எதிராக செயல்படுவது போல் சமூக வலைதளங்களில் செய்திகள் வரத் தொடங்கியதையடுத்து அதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் சிவக்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

[…]

நடிகர் சிரஞ்சீவி
சினிமா

அரசியல் வேண்டாம் என ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி வேண்டுகோள்

அரசியலை விட்டு ரஜினியும் கமலும் விலகியிருக்க வேண்டும் என்று நடிகர் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிறப்பான வரவேற்பை பெறும் என்று தாம் நம்பியதாகவும் ஆனால் அது நடக்கவில்லை என்றும் சிரஞ்சீவி தெரிவித்தார்.

மிகவும் நுண்ணுணர்வு மிக்க மனிதர்களுக்கு அரசியல் ஏற்ற இடமல்ல என்றும் இன்றைய அரசியல் பண பலம் சார்ந்தது என்றும் சிரஞ்சீவி கூறியுள்ளார்.

பிரபல தமிழ் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ரஜினியும் கமலும் தன்னைப் போலவும் பவன் கல்யாண் போலவும் தோல்வியை சந்திக்க மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக கூறிய சிரஞ்சீவி, அரசியலில் நீடித்து மக்களுக்கு சேவையாற்ற நிறைய தோல்விகளையும் அவமானங்களையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.

[…]

நயன்தாரா
சினிமா

நயன்தாராவுக்கும் மாணவர்களுக்கும் என்னப்பா பிரச்சனை ? ஆண்டு விழா கூத்து

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா மேடையில் நடிகை திரிஷா, நயன்தாரா, பிரியாவாரியர் உள்ளிட்ட நடிகைகளை மாணவர்கள் இரட்டை அர்த்த வசனத்தில் விமர்சித்ததால் விழாவுக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டனர்.

விழாவின் ஒரு பகுதியாக, தமிழ் சினிமா நடிகைகளை கலாய்க்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை மாணவர்கள் நடத்தி காட்டினர். முதலில் நடிகை திரிஷாவின் வயது குறித்து விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து நடிகை நயன்தாராவின் காதல் குறித்து இரட்டை அர்த்த வசனத்தில் விமர்சிப்பதை ரசித்த மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். பிரியாவாரியரை முகவும் மோசமான அர்த்தத்தில் விமர்சித்தனர்.

மருத்துவ மாணவர்களின் இந்த இரட்டை அர்த்த விமர்சனத்தை கேட்டு, விழாவுக்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர். நடிகைகள் மீதான இந்த விமர்சனம் குறித்து அறிந்த தமிழ் திரை உலகினரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

[…]

ஐங்கரன் கருணாமூர்த்தி
சினிமா

ஐங்கரன் கருணா மூர்த்தி மீது புகார்..!

திரைப்பட தயாரிப்பில் 120 கோடி ரூபாய் வரை மோசடியும், 60 கோடி ரூபாய் வரை இழப்பும் ஏற்படுத்தியதாக ஐங்கரன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் உரிமையாளர் கருணா மூர்த்தி மீது காவல்துறையிடம் லைகா நிறுவனம் புகார் அளித்துள்ளது.  

தமிழ் திரைப்பட உலகில் பல முன்னணி கதாநாயகர்களை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாரித்த நிறுவனம் லைகா. இந்த நிறுவனத்தின் ஆலோசகராக இலங்கை தமிழரான கருணா மூர்த்தி செயல்பட்டார்.

லைகா நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட கருணாமூர்த்தி மீது அந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில் லைகா ஆலோசகராக கடந்த 2013ம் ஆண்டு முதல் இருந்து வந்த கருணாமூர்த்தி, தன்னிச்சையாக செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், படத் தயாரிப்பு, நிதி நிர்வாகங்களில் தலையிட்டு பண மோசடி செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

லைகா தயாரிப்பில் விஜய் நடித்த கத்தி மற்றும் கோலமாவு கோகிலா போன்ற படங்களின் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை போன்றவற்றை அனுமதியில்லாமல் தனது ஐங்கரன் நிறுவனம் மூலம் விற்று 90 கோடி ரூபாய் கையாடல் செய்திருப்பதாகவும் புகாரில் லைகா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை கருணாமூர்த்தி தன்னிச்சையாக செயல்பட்டு தயாரித்து பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும், அவ்வாறே கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் - 2 படத்தை அனுமதியில்லாமல் தயாரித்து பெரும் இழப்பை ஏற்படுத்தியதால் அந்த படத்தின் தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறாக 120 கோடி ரூபாய் வரை பல்வேறு வகையில் கையாடலும், 60 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பும் ஏற்படுத்திய கருணாமூர்த்தி மீதும், உடந்தையாக இருந்த ஊழியர் பானு என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் லைகா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்த புகார் குறித்து ஐங்கரன் கருணாமூர்த்தி தரப்பில் விளக்கம் கேட்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

[…]

 நடிகர் விஜய்
சினிமா

ரஜினி வழியில் விஜய் அரசியல் கண்ணாமூச்சி..! தயாரிப்பாளர்கள் கவலை

தயாரிப்பாளர் பணத்தில் நடக்கின்ற சினிமா ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசை குறை கூறியதால், ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

பிகில் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்துகள் குறித்து பேசிய தயாரிப்பாளர் ராஜன், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தங்கள் அரசியல் ஆசையை தனியாக செய்தியாளர் சந்திப்பு வைத்து தெரிவிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் பணத்தில் நடக்கின்ற சினிமா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசுவது சரியாக இருக்காது என்று தெரிவித்தார்.

சினிமா விழாக்களில் ரஜினி 20 ஆண்டுகளாக அரசியல் பேசி வருவதாகவும் அதே பாணியில் விஜய் அந்த வேலையை செய்து வருவதாகவம் ராஜன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

தீபாவளிக்கு முன்னதாக தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் வசூலை வாரிக்குவிக்கலாம் என்ற கனவில் மிதந்த தயாரிப்பாளர்கள் இரு தலைகொள்ளியாக தவித்து வருகின்றனர். 

[…]

 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

370 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

109 கோடி ரூபாய் மதிப்பிலான 370 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து பேருந்துகள் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் துவக்கி வைத்த 370 பேருந்துகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர் கோட்டத்துக்கு 104 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 65 பேருந்துகளும், சேலம் கோட்டத்திற்கு 57 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்திற்கு 41 பேருந்துகளும், மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 30 பேருந்துகளும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டத்துக்கு 27 பேருந்துகளும், திருநெல்வேலி கோட்டத்திற்கு 26 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 20 பேருந்துகளும் வழங்கப்பட்டன.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் 1,314 கோடி ரூபாய் செலவில் 4,381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று 370 பேருந்துகளை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இதனடிப்படையில் இதுவரை 4,751 புதிய பேருந்துகள் 1,423 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

[…]

புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்
சினிமா

வைரலாகும் புகைப்படம்: புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்?

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்கிறார். மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இது அஜித்குமாரின் 60-வது படமாக தயாராகிறது. இந்த படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார்.

முந்தைய படங்களில் இருந்த இளநரை தலைமுடியையும் கருப்பாக்கி இருக்கிறார். அதிரடி சண்டை கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. படத்தில் கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தய காட்சிகள் இடம் பெறும் என்று போனிகபூர் கூறியுள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது.

இந்த நிலையில் படத்தில் அஜித்குமார் தோற்றம் என்ற அறிவிப்போடு போலீஸ் அதிகாரி சீருடையில் அவர் பைக்கில் செல்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைராகி வருகிறது. இதுதான் அஜித்குமாரின் வேடமா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. அது ரசிகர்கள் உருவாக்கிய புகைப்படம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியதாகவும், அவருக்கு கால்ஷீட் இல்லை என்பதால் பிரபல இந்தி நடிகையை அணுகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தில் அஜித்குமார் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடிப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. வில்லன் வேடத்தில் நடிக்க இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் ஆகியோரிடம் பேசி வருகிறார்கள்.

[…]

பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுத்த அழைப்பை நிராகரித்த ரஜினிகாந்த்
சினிமா

பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுத்த அழைப்பை நிராகரித்த ரஜினிகாந்த்... வேகமெடுக்கிறது புதுக்கட்சி பணிகள்...

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி  வருகின்றனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அப்போது தான் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டு, 1½ ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும்,  ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்காமல் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு மவுனத்தையே பரிசாக தந்தார்.

அவ்வப்போது, மத்திய அரசுக்கு ஆதரவாக சில கருத்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்து வந்ததால் அவர் கட்சியை தொடங்கினாலும், பா.ஜ.க.வுடன் இணைந்தே செயல்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. சமீபத்தில் சென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில், தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து  காலியான தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு உருவானது. டெல்லி பா.ஜ.க. மேலிடமும் இதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது.  ரஜினிகாந்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

தன்னை தொடர்பு கொண்ட பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளிடம், தான் இப்போது ‘தர்பார்’ படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதாகவும், தன்னுடைய ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று தனிக்கட்சி தொடங்கவே விரும்புவதாகவும் தன்நிலையை அவர் தெளிவுபடுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஒப்புக் கொண்டு இருக்கும் படங்களை பிப்ரவரி மார்ச் மாதத்திற்குள் முடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டு உள்ளார்.

ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு (2020) தை மாதத்திற்கு பிறகு தனிக்கட்சியை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சியை பதிவு செய்யும் பணிகளை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ பொங்கல் தினத்தில் வெளியாகிறது. அதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க இருந்தாலும், தர்பார் பட வெளியீட்டுக்கு பிறகு முழுநேர அரசியலில் ரஜினிகாந்த் இறங்க உள்ளார்.

2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை அவர் எதிர்கொள்ள இருக்கிறார். இந்த தேர்தலை நட்பு ரீதியாக பா.ஜ.க.வுடன் இணைந்தே அவர் சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என ஒட்டு மொத்தமாக 2 லட்சம் நிர்வாகிகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ரஜினியின் உத்தரவின் பேரில் சட்டமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரமானது. அதன்படி பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்து விட்டன.

அதிமுக மற்றும் திமுகவில் இருக்கும் சில மூத்த தலைவர்களும் ரஜினியுடன் கைகோர்க்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ராசியான ராகவேந்திரா மண்டபத்தையே ரஜினிகாந்த் கட்சி அலுவலகமாக மாற்ற திட்டமிட்டு உள்ளார்.

[…]

 நடிகை ஸ்ரீதேவி
சினிமா

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை

சிங்கப்பூரில் உள்ள ‘மேடம் துசாட்ஸ்’ மெழுகு அருங்காட்சியகம் வெளிநாட்டினரை கவரும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு விளையாட்டு, அரசியல், சினிமா துறைகளில் உலக புகழ் பெற்றவர்களின் மெழுகு சிலைகள் உள்ளன.

மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத், ஒபாமா, சச்சின் தெண்டுல்கர், ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷாருக்கான், கஜோல், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

நிஜத்தில் இருப்பதுபோல் இந்த சிலைகளை வடிவமைத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் மெழுகு சிலைகள் அருகில் நின்று படம் எடுத்து மகிழ்கிறார்கள். இந்த அருங்காட்சியகத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 20 கலைஞர்கள் 5 மாதங்களாக சிலையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தற்போது பணிகள் நிறைவடைந்து ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை அங்கு நிறுவி உள்ளனர். அதை பார்த்தவர்கள் அச்சு அசல் ஸ்ரீதேவி போல இருப்பதாக பாராட்டுகிறார்கள். மெழுகு சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

போனிகபூர் கூறும்போது, “மறைவுக்கு பிறகு ஸ்ரீதேவிக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார். இந்திய பட உலகில் கனவு கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவி கடந்த வருடம் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டல் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்து போனார்.

[…]

சிம்பு சீமான்
சினிமா

சிம்பு விவகாரத்துக்கு சீமான் பஞ்சாயத்து..!

தமிழ் திரை உலகில் ரஜினி, விஜய்க்கு அடுத்த இடத்திற்கு சிம்பு தான் வருவார் என்றும் அவரிடம் உள்ள ஒரே குறை படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராதது மட்டுமே என்று  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு உள்ளார். 
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரஜினி இன்னும் 4 படங்கள் தான் நடிப்பார், என்றும் இனி என் தம்பி விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்று உலகமே சொல்கிறது என்றார்

அதே போல முன்பு சூப்பர் ஸ்டாராக சீமானால் முன்னிருந்தப்பட்ட சிம்பு, தற்போது தயாரிப்பாளர்களிடம் வம்பு செய்வது குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு, சிம்புவிடம் இது குறித்து பேசியதாகவும், செல்லமாக வளர்ந்த பிள்ளை என்பதால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வர இயலவில்லை என்று சிம்பு தெரிவித்ததாகவும், தான் சிம்புவை கண்டித்ததாகவும் சீமான் தெரிவித்தார்

அத்தோடு இல்லாமல் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திடீர் என ஆதரித்து பேசிய சீமான், சமூக வலைதளங்களில் மீம்ஸ் மற்றும் பிறரை விமர்சித்து கருத்து பதிவிடுபவர்களையும் கடுமையாக விமர்சித்தார்

அவ்வப்போது இது போல சீமான் தெரிவிக்கும் கருத்துக்கள் சிம்பு போன்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் என்கின்றனர் அவரது ரசிகர்கள், அதே நேரத்தில் சீமானின் கருத்துக்கு சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் எதிர்ப்புக்குரல் கொடுத்துள்ளார்

சிம்பு மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்பதே அவரை நேசிக்கும் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

[…]

அஜீத் பாடல்
சினிமா

அஜீத் பாடலை மெச்சிய அமைச்சர்..! தாமரைக்கு பாராட்டு

நடிகர் அஜீத்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் மூலமாக, வழக்கொழிந்த தமிழ் சொற்களை பாடலாசிரியர் தாமரை மீட்டெடுத்துள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டியுள்ளார்

சென்னை எத்திராஜ் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் அகராதி விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலில் , பாடலாசிரியர் தாமரை வழக்கொழிந்த தமிழ் சொற்களை மீட்டெடுத்து பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது என்றார்

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில் பொன்னான கையால் நீவவா... என்ற பழைய சொல்லை பயன்படுத்தி இருந்த பாடலாசிரியர் தாமரை, வசீகரா , கலாபக்காதலன் போன்ற பழைய தமிழ் சொற்களையும் மீட்டு எடுத்து உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்

கெத்து என்பது சுத்தமான தமிழ் சொல் என்றும் வச்சி செய்வதாக கூறுவதும் தமிழ் சொல் தான் என்றும் சான்றளித்தார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அதே நேரத்தில் தாங்களும் பாடல் எழுதுவோம் என்ற ரீதியில் வினோத சொற்களை பயன்படுத்தி தமிழ் பாடல்களுக்கு பால் ஊற்றும் வேலைகளையும் சில சினிமா கவிஞர்கள் சத்தமில்லாமல் செய்து வருவதும் தொடரத்தான் செய்கிறது..!

[…]

கவிஞர் வைரமுத்து
சினிமா

தமிழ் ஆட்சி மொழியாக உதிக்க வேண்டும்

நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக உதிக்கும் நாளே தமிழர்களின் கனவு நிறைவேறும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடந்த வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய கணிப்பொறி தலைமுறையினரும் தமிழை ஏன் கற்க வேண்டும், பாதுகாக்க வேண்டும்? என்பதற்கான விடையை தமிழாற்றுப்படை நூலில் தந்திருப்பதாகவும், தமிழாற்றுப்படை புத்தகத்தை எழுத எடுத்துக்கொண்ட 4 ஆண்டுகாலத்தில் திரைத்துறை வாய்ப்புகளை தவிர்த்து வந்ததாகவும் கூறினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, வடநாட்டு பண்பாடுதான் கலாச்சாரம் என சொல்பவர்களுக்கு மத்தியில் தமிழ்மொழி இல்லையென்றால் இந்திய நாடே கிடையாது என்பதை நாடாளுமன்றத்தில் உரக்க பேசுங்கள் என நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனை கேட்டுக்கொண்டார்.

மேலும், இனிவரும் காலங்களில் தமிழில் பெயர் சூட்ட வேண்டுகோள் விடுத்த வைரமுத்து, தமிழ்பெயர் தெரியவில்லையென்றால் எந்தநேரமும் தன்னை அழைக்கலாம் என கூறினார்.

[…]

ஷோபா சொல்கிறார்..!
கல்வி

ரஜினிக்கு அடுத்து விஜய் தான் சூப்பர்ஸ்டார்..!

தமிழ் திரை உலகில் தியாகராஜபாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினிக்கு அடுத்து விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய்யுடன் ஒரே வீட்டில் வசித்துவரும் அவரது தாய் ஷோபா கைப்பட கடிதம் எழுதி மகன் விஜய்யிடம் கொடுத்து பிகில் படத்திற்கு வித்தியாசமான முறையில் விளம்பரம் வெளியிட்டுள்ளார்

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள பிகில் படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. 

இந்த நிலையில் நடிகர் விஜய்யுடன் நீலாங்கரை கடற்கரை பங்களாவில் வசித்து வரும் அவரது தாய் ஷோபா சந்திரசேகர், தனது மகன் விஜய்யை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதி அவருக்கு பரிசளித்துள்ளதாக விஜய் தரப்பில் செய்தியாளர்களுக்கு கடிதத்தின் நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனது மகன் விஜய்யை கோடான கோடி தாய்மார்கள் தளபதியாய் கொண்டாடி கொண்டிருப்பதாகவும், இந்த ஆனந்தத்தையும் உணர்வுகளையும் எந்த காகிதத்தில் வடிப்பது என்று குறிப்பிட்டுள்ள ஷோபா, விஜய்யின் ஆரம்ப கால ஏற்ற இறக்கங்களையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

கோடி கோடியாய் பொருள் இருந்தும், ரசிகர்களின் பெரு வெள்ளத்தில் விஜய் உதிர்க்கும் புன்னகையை விவரிக்க வார்த்தைகளை கடன் வாங்குவதாக ஆனந்தம் தெரிவித்துள்ள ஷோபா, தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ராமச்சந்திரன், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக விஜய்யை கொண்டாட உலகமே காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தனது மகன் நடிக்கும் பிகில் படத்தை குறிப்பிட்டுள்ள ஷோபா, தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்..! என்று குறிப்பிட்டு அந்த இரு பக்க கடிதத்தை முடித்திருக்கிறார்.

பெற்றோர் துணையுடன் திரை உலகிற்குள் நுழைந்தாலும், 25 ஆண்டுகளாக மேலாக கடுமையான உழைப்பால் தமிழ் திரை உலகில் முன்னுக்கு வந்தவர் நடிகர் விஜய் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

அதே நேரத்தில் தன் மகன் விஜய்யை பாராட்ட வேண்டும் என்றால் ஒரே வீட்டில் வசிக்கும் ஷோபா சந்திரசேகர் நேரில் அழைத்து பாராட்டி இருக்கலாமே ? அதைவிடுத்து நீண்ட கடிதம் எதற்காக ? அந்த கடிதத்தை செய்தியாளர்களுக்கு அனுப்பி வைத்தது ஏன் ? என்ற கேள்விகள் செய்தியாளர்கள் மத்தியில் எழுந்த நிலையில்.. பிகில் படத்தின் விளம்பர வெளிச்சத்திற்காக , தன் மகன் விஜய்யை சான்றோன் என்று சான்றளித்திருக்கிறார் ஷோபா சந்திர சேகர்..! என்று சுருக்கமாக முடித்துக் கொண்டனர் திரைஉலகினர்..! 

[…]

நடிகர் சிம்பு
சினிமா

சிம்புவுக்கு எதிராக சீவப்படும் கொம்பு..! யங் சூப்பர் ஸ்டார் சோதனைகள்

டிகர் சிம்புவின் கால்சீட்டுக்காக கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்ததாக தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் சிம்பு என்று இயக்குனர் சீமான் அறிவித்து 8 மாதம் கடந்த நிலையில் அவரை வைத்து படம் தயாரிக்கலாம் என்று தைரியமாக முடிவெடுத்த 5 தயாரிப்பாளர்கள் கோடிகளை கொட்டிக் கொடுத்து விட்டு தவித்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.

டிரிபிள் ஏ படத்தின் முதலாவது பாகத்தில் 20 கோடி ரூபாயை இழந்த மைக்கேல் ராயப்பன், 2 வது பாகத்திலாவது ஏதாவது தேரும் என்று காத்திருந்து நொந்து போயிருக்கிறார்.

பலரும் எச்சரித்த நிலையில் நாம எப்பவுமே உஷார் என்ற ரீதியில் சிம்புவிடம் 2 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை கொடுத்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுக்கு சிம்பு காட்டிய படம் இன்னும் முடியவில்லை என்றால், சிம்பு நம்ம பையன் என்று அண்ணன் என்ற உரிமையோடு 2 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கொடுத்து வெங்கட்பிரபு கூட்டணியில் மாஸ் ஆக மாநாடு நடத்த திட்டமிட்ட சுரேஷ் காமாட்சிக்கு படப்பிடிப்பு தொடங்கவே இல்லை..!

இதற்கு பள்ளி மாணவர் போல சனி ஞாயிறு லீவு கேட்டு அடம் பிடித்து படத்தின் தொடங்கவிழாவுக்கே மூடுவிழா நடத்திய சிம்புவின் வம்புதான் காரணம் என்று சொல்லப்படுகின்றது.

ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், யாருக்கோ போட்டியாக சிம்புவை மீண்டும் நிலை நிறுத்த அவசரப்பட்டு ஒரு கோடியை அள்ளிக்கொடுக்க , பதிலுக்கு சிம்பு கால்சீட்டை கிள்ளி கூட கொடுக்கவில்லை என்பது தனிக்கதை என்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் வரிசை கட்டி மாத கணக்கில் காத்திருக்க விபரம் தெரியாமல் கொரில்லா பட தயாரிப்பாளர் அதிகபட்சமாக சிம்புவுக்கு, 3 கோடி ரூபாயை முன்பணமாக கொடுத்துவிட்டு பாதிக்கப்பட்டோர் சங்கத்தில் புதிதாக இணைந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் சிம்புவுக்கு எதிராக தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த ஆலோசனை குழு உறுப்பினர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார், சிம்பு தரப்பில் பேசி பார்த்ததாக கூறப்படுகின்றது. தற்போது பாங்காக்கில் ஓய்வில் இருக்கும் சிம்பு தனது வீட்டில் இருந்து பதில் வரும் என சுட்டிக்காட்ட, வீடு தேடிச்சென்ற தயாரிப்பாளர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

எப்போதும் சிம்புவுக்காக குரல் கொடுக்கும் தந்தை டி.ராஜேந்தர் கூட இந்த முறை பாராமுகமாய் இருந்து விட்டதாக தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதையடுத்து வட்டிக்கு பணம் வாங்கி சிம்புவிடம் கொடுத்துவிட்டு படம் தொடங்காமல் வட்டிகட்டி நொந்து போன தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து சென்னை காவல் ஆணையரிடம் சிம்பு மீது பணம் மோசடி புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..!

இது தொடர்பாக சிம்பு தரப்பில் விளக்கம் பெற அவரது தந்தை டி ராஜேந்தரை தொடர்பு கொண்டோம் சிம்புவை போலவே அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை..!

[…]

தமிழழகன்.
சினிமா

அஜீத் ரசிகர் எரித்துக் கொலை..! திருச்சி திகில்

திருச்சி அருகே, நேர்கொண்டபார்வை படத்திற்கு சிறப்பு காட்சிக்கு செல்வதாக கூறிவிட்டுச்சென்ற அஜித் ரசிகர் மாயமான நிலையில், நண்பர்களால் அவர் எரித்துக் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி செங்குளம் பகுதியை சேர்ந்தவர் அஜீத் ரசிகரான தமிழழகன். இவர் கடந்த 7 தேதி நள்ளிரவு, நேர்கொண்ட பார்வை படத்துக்கு பேனர் வைத்து விட்டு நண்பர்களுடன் அதிகாலை காட்சி பார்த்து விட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். அதன் பின்னர் தமிழழகன் வீடு திரும்பவில்லை.

அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் தந்தை சண்முக நாதன் பல இடங்களில் தேடியும் தமிழழகனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் மறு நாள் மதியம் 2 மணி அளவில் தமிழழகனின் செல்போன் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டிருந்தது.

அதனை தொடர்பு கொண்ட போது யாரும் எடுக்க வில்லை, அதே போல சிறிது நேரம் கழித்து அந்த போனில் இருந்து சண்முக நாதனுக்கு அழைப்பு வந்துள்ளது. கவனக்குறைவாக சண்முகநாதன் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

தமிழழகனை பல இடங்களில் தொடர்ந்து தேடிவந்த நிலையில் கடந்தவாரம் அரியமங்கலம் பகுதியில் தமிழழகன் ஓட்டிச்சென்ற இரு சக்கரவாகனம் அனாதையாக நின்றது. இதையடுத்து தனது மகனை காணவில்லை என்று சண்முக நாதன் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தமிழழகனின் செல்போன் எண்ணை வைத்து சம்பவத்தன்று அவரிடம் காக்கா கார்த்திக் என்பவர் கடைசியாக பேசி இருப்பதை கண்டறிந்தனர். அவரிடம் விசாரித்த போது, திரைப்படம் பார்க்க செல்வதற்கு முன்பாக தான் 6 வருடத்திற்கு முன்பு வசித்த அரியமங்கலம் கணேசபுரத்திற்கு சென்று பழைய நண்பர்களான காக்கா கார்த்திக், மணிகண்டன், ஆட்டோ ஜெகன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து மது அருந்தியபோது பெண் விவகாரம் தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து தமிழழகனை அடித்து தாக்கியதில் அவர் பரிதாபமாக இறந்து போனதாக கூறப்படுகின்றது. இதையடுத்து தமிழழகனின் சடலத்தை ஜெகன் ஆட்டோவில் எடுத்துச்சென்று பயன்பாடின்றி கிடக்கும் கணேசபுரம் சுடுகாட்டில் தீவைத்து எரித்து சாம்பலாக்கி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கொலையாளிகள் 3 பேரும் என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பதை சொல்லாமல் பெண் விவகாரம் என்று மட்டும் கூறிவருவதால், கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

[…]

நடிகர் விஷால்
சினிமா

கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்

வரி செலுத்தாத விவகாரத்தில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். சென்னை வடபழனியில், நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி எனும் நிறுவனம் இயங்கி வருகிறது.

இங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில், பிடித்தம் செய்ப்பட்ட வரியை, வருமான வரித்துறைக்கு நடிகர் விஷால் முறையாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதில் அளிக்காததால் வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடந்த 2 ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியது. விஷாலுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜரான நிலையில், விஷாலுக்கு நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு வருமான வரித்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், விஷாலுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். விஷால் தரப்பு வழக்கறிஞர் ஆங்கிலத்தில் வாதிட்டதால் குறுக்கிட்ட நீதிபதி, அவரை தமிழில் வாதிடுமாறு வலியுறுத்தினார்

[…]

நடிகர் விஷால்
சினிமா

கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்

வரி செலுத்தாத விவகாரத்தில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். சென்னை வடபழனியில், நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி எனும் நிறுவனம் இயங்கி வருகிறது.

இங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில், பிடித்தம் செய்ப்பட்ட வரியை, வருமான வரித்துறைக்கு நடிகர் விஷால் முறையாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதில் அளிக்காததால் வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடந்த 2 ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியது. விஷாலுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜரான நிலையில், விஷாலுக்கு நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு வருமான வரித்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், விஷாலுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். விஷால் தரப்பு வழக்கறிஞர் ஆங்கிலத்தில் வாதிட்டதால் குறுக்கிட்ட நீதிபதி, அவரை தமிழில் வாதிடுமாறு வலியுறுத்தினார்.

[…]

மீரா மிதுன்
சினிமா

மீரா மிதுன் கொலைகார பாஸா ? அதிர்ச்சி ஆடியோ...

இயக்குனர் சேரன் மீது பொய்யான பாலியல் புகார் தெரிவித்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்ட மாடல் அழகி மீரா மிதுன் மீது, இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை கொலை செய்ய மீரா மிதுன் திட்டமிட்டதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது

சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கெலுக்கும், அழகி பட்டம் பறிக்கப்பட்ட மாடல் அழகி மீரா மிதுனுக்கும் இடையே அழகி போட்டி, பேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் மீராமிதுன் மீது சக மாடல்கள் கொடுத்த பண மோசடி புகார்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட, பிக் பாஸுக்குள் நுழைந்து அகில உலக பேமஸ் ஆகிவிடலாம் என்று நினைத்த மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிற்குள் செய்த சேட்டைகளால் பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

அனைத்துக்கும் உச்சமாக கேமராவால் சூழப்பட்டா பிக் பாஸ் வீட்டிற்குள் நாட்டாமை வேடம் கட்டிய இயக்குனர் சேரன் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்தார் என்று பச்சையாக பொய் புகார் தெரிவித்ததால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதூன். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேவந்த அடுத்த நொடி சேரனுக்கு எதிராக யூடியூப்பில் அவதூறு கருத்து வெளியிட மீரா பேரம் பேசுவதாக கூறப்படும் ஆடியோ வெளியானது

இந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் ஜோ மைக்கேல் அம்பலப்படுத்தியதாக சந்தேகித்த மீராமிதுன், ஜோ மைக்கேலை கொலை செய்ய தனது ஆண் நண்பர்களுடன் திட்டம் வகுத்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பான ஆதாரம் கிடைத்ததாக ஜோ மைக்கேல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் மீராமிதூன் மீது கொலை சதி, மிரட்டல் விடுத்தல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜோ மைக்கேலை கொலை செய்ய மீரா மிதூன் திட்டமிட்டதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகி உள்ளது

நாட்டில் ஆயிரம் பிரச்சனை இருக்கிறபோது, இது வெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கடந்து சென்று விடலாம் என்று தோன்றினாலும், பெண் என்பதை மட்டுமே ஆயுதமாக கொண்டு பொய்யான பாலியல் புகார் தெரிவிப்பது, சக தொழில் போட்டியாளரை கொலை செய்ய திட்டமிடும், அளவுக்கு செல்கிறார் என்றால், பெண்ணினத்துக்கு அவப்பெயர் பெற்று தரும் வகையில் இவரை போன்ற வெகு சில கிரிமினல்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி..! என்கிறார் புகார் அளித்த ஜோமைக்கேல்..!

இது தொடர்பாக மீரா மிதுனிடம் விளக்கம் கேட்டபோது, அவர் பின்னர் விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

[…]

 நடிகை  மீரா சோப்ரா
சினிமா

ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவில் புழுக்கள் - மீரா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரும், நடிகையுமான மீரா சோப்ரா, ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்ததாக கூறி இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து இன்ஸ்டகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள டபுள் ட்ரீ எனும் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு தான் உணவருந்தச் சென்றதாகவும், அப்போது தனக்கு வழங்கப்பட்ட உணவில் உயிருடன் புழுக்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

உணவில் புழுக்கள் நெளிந்தபடி இருந்ததால், தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ள அவர், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

[…]

இந்தியன்-2
சினிமா

சமூக வலைத்தளத்தில் கமலின் இந்தியன்-2 கதை கசிந்ததா?

கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இந்தியன்-2 என்ற பெயரில் ஷங்கர் இயக்கி வருகிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் வருகிறார். சித்தார்த், ரகுல்பிரித் சிங், பிரியா பவானிசங்கர், வித்யூத் ஜமால் ஆகியோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் இந்தியன்-2 படத்தின் கதை கசிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.

சமூக ஆர்வலரான சித்தார்த், மனைவி ரகுல் பிரீத்சிங்குடன் வசிக்கிறார். சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்துகிறார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அவர் யூடியூப் சேனலில் அரசியல்வாதிகள் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார். அவருக்கு மிரட்டல்கள் வருகின்றன. வெளிநாட்டில் இருக்கும் வயதான கமல்ஹாசன் அந்த யூடியூப் சேனலை பார்த்து கொதிக்கிறார்.

ஊழல் அரசியல்வாதிகளை களையெடுக்கும் நோக்கோடு விமானம் ஏறி சென்னைக்கு வருகிறார். இறந்துபோன மனைவியின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு சித்தார்த்தை சந்திக்கிறார். அவரிடம் இருந்து ஊழல் செய்து சொத்து குவித்த அரசியல்வாதிகள் பட்டியலை பெறுகிறார்.

பின்னர் வர்ம கலையால் ஒவ்வொருவராக அழிக்கிறார். அவருக்கு சித்தார்த்தும் வர்ம கலை பற்றி ஆராய்ச்சி செய்யும் காஜல் அகர்வாலும் உதவி செய்கிறார்கள். அரசியல்வாதில் வர்மகலையால் கொல்லப்படுவதை பார்த்து போலீசார் அதிர்கிறார்கள். கமலை பிடிக்க வலை விரிக்கிறார்கள். அவர் சிக்கினாரா? என்பது கிளைமாக்ஸ்.

இந்த கதை வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆனாலும் இது இந்தியன்-2 கதைதானா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

[…]

நடிகை இலியானா
சினிமா

காதலனை பிரிந்தார் நடிகை இலியானா?

தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூவ் நீபோனும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள் என்றும் கூறப்பட்டது.

இருவரும் நெருக்கமாக படம் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வந்தனர். இலியானா படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு ஆண்ட்ரூவ் தவறாமல் வந்து விடுவார். இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்தி பரவியது. 

 

இலியானாவின்  கவர்ச்சி புகைப்படங்கள் பெரும்பாலானவை ஆண்ட்ரூவால் கிளிக் செய்யப்பட்டவையாகும். மேலும் இலியானா அடிக்கடி தனது தலைப்புகள் மூலம் அவரை 'கணவன்' என்று குறிப்பிட்டு வந்தார்.

 

இந்த நிலையில்  இருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும், சந்தித்து கொள்வதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் இலியானா மற்றும் ஆண்ட்ரூவின் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பார்த்தால்,  அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பின்தொடரவில்லை, மேலும் புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர்.

 

முன்னதாக ரெய்டு படத்தின்  டிரெய்லர் வெளியீட்டின் போது, இலியானா திருமணமானவரா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது;-

 

 "வெளிப்படையாக என்ன கருத்து தெரிவிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. தொழில் ரீதியாக, நான் நன்றாகவே இருக்கிறேன். தனிப்பட்ட முறையில், நான் நன்றாகவே இருக்கிறேன். நன்றி. 

 

இதற்கு எந்தக் கருத்தும் கூற வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கையை நான் வைத்திருக்கிறேன். அது மிகவும் தனிப்பட்டது. இதைப்பற்றி அதிகம் பேச நான் விரும்பவில்லை, ஆனால் உலகம்  இதைத்தான் அதிகம் பேசுகிறது" என கூறினார்.

 

இது குறித்து ஐ.ஏ.என்.எசுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஒரு உறவு அல்லது காதல் என்ன என்பது பற்றி எனக்கு வேறுபட்ட கருத்து இருந்தது. அதைப்பற்றி நான் விசித்திரமான கற்பனையில் இருந்தேன். ஆனால் அது மிகவும் வித்தியாசமானது.

 

சில சூழ்நிலைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் உங்களுக்கு நிறைய மரியாதை கிடைக்க  வேண்டும் என கூறினார்.

[…]

இயக்குனர் கே. பாக்யராஜ்.
சினிமா

கஞ்சாவிலிருந்து மீண்டதால் தான் இயக்குநர் ஆனேன் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட நடிகர் ...!

தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட இயக்குனர் கே.பாக்யராஜ், கஞ்சா அடிமையாக இருந்ததாகவும், போதை மரத்தில் தனக்கு ஞானம் கிடைத்ததாகவும் 42 வருடங்கள் கழித்து உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

மனைவி குண்டாக இருந்தால் கணவன் சின்னவீடு வைத்துக் கொள்ளலாம் என்றும், அதனால் என்ன மாதிரியான விபரீதங்கள் வரும் என்பதையும் தனது திரைக்கதை யுக்தியால் தமிழ் திரை ரசிகர்களின் மூளைக்குள் திணித்து வெற்றி கண்டவர் இயக்குனர் கே. பாக்யராஜ்.

பல வெற்றிப் படங்களை தமிழ் திரை உலகிற்கு தந்த இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ், தான் ஒரு கஞ்சா அடிமையாக இருந்ததாக, திரை உலகிற்கு வந்து 42 ஆண்டுகள் கடந்து முதன்முதலாக பொது மேடையில் ஒப்புக் கொண்டுள்ளார். சென்னை வடபழனியில் நடந்த கோலா என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அதே மேடையில் பேசிய ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்குவார் தங்கம் , கஞ்சா விற்பவர்களின் தலையை அறுக்க வேண்டும் என்று பேசி எதிர்ப்புத் தெரிவித்தார்.

சமீபகாலமாக கஞ்சா போதையில் சிக்குண்ட நபர்கள் செய்யும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் கஞ்சா பழக்கத்தில் இருந்து விடுபட்டால் தான் போதை இளைஞர்கள் வாழ்வில் முன்னேற முடியும் என்பதற்கு கே.பாக்யராஜ் தான் வாழும் உதாரணம்..!

[…]

நடிகர் விஷால்-அனிஷா
சினிமா

நடிகர் விஷால்-அனிஷா திருமணம் இல்லை பட உலகில் பரபரப்பு

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு தலைவரானார். விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். விஜய் தேவரகொண்டாவுடன் பெல்லி சூப்லு மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். விஷால்- அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி ஐதராபாத்தில் நடந்தது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். அக்டோபர் மாதம் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர். நடிகர் சங்க கட்டிடத்தில் தனது திருமணம் நடக்கும் என்று விஷால் கூறிவந்தார். இந்த நிலையில் விஷால்-அனிஷா திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டதாக தெலுங்கு இணையதளங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமண நிச்சயதார்த்த படங்களை அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்து இருந்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென்று நீக்கிவிட்டார். அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதை வைத்து திருமணம் நின்று போனதாக தகவல்கள் பரவி உள்ளன.
இதுகுறித்து விளக்கம் கேட்க விஷாலை தொடர்பு கொண்டபோது அவரது போன் ‘சுவிட்ச் ஆப்’பில் இருந்தது. விஷால் குடும்பத்தினரும் இதுகுறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. விஷாலுக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, “திருமணம் நின்று போனதாக வெளியான தகவல் உண்மையானதாக இருக்காது என்றே நம்புகிறோம். சமீபத்தில் கூட இருவரும் சந்தித்து பேசிக்கொண்டனர்” என்றனர்.

[…]

 நடிகை யாஷிகா ஆனந்த்
சினிமா

அரசியலுக்கு வர விரும்பும் பிக்பாஸ் நாயகி ..

யோகிபாபு, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள படம் ஜாம்பி. புவன் நல்லான் இயக்கி உள்ளார். எம்.வசந்த், வி.முத்துக்குமார், பாலா அன்பு ஆகியோர் தயாரித்துள்ளனர். படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது யாஷிகா ஆனந்த் கூறியதாவது:-

“ஜாம்பி படத்தில் மருத்துவ மாணவியாக வருகிறேன். நகைச்சுவை அம்சம் உள்ள படம். யோகிபாபு, சுதாகர், கோபி என்று நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர். எனக்கு இது முக்கிய படம். நான் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறேன். இதனால் படத்திலும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து இருக்கிறேன்.

ரசிகர்களுக்கு கவர்ச்சி பிடிக்கிறது. இந்த படத்திலும் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக ஆடி இருக்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு என்னை துணிச்சலான பெண்ணாக பார்க்கிறார்கள். தற்போது ஆரவ் மற்றும் மகத் படங்களில் நடிக்கிறேன். சினிமாவில் மற்ற நடிகைகளை நான் போட்டியாக பார்க்கவில்லை. எனக்கு நானேதான் போட்டி. நான் நிச்சயம் ஒரு நாள் அரசியலுக்கு வருவேன். பெண் உரிமைக்கான விழிப்புணர்வில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அஜித்குமார், சூர்யா ஆகியோருடன் நடிக்க ஆர்வம் உள்ளது. எனக்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். எனது பிறந்த நாளில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கினார்கள்.” இவ்வாறு யாஷிகா ஆனந்த் கூறினார்.

[…]

நடிகைக்கு  உதவிய நாயகன்.
சினிமா

96 பட நாயகிக்கு உதவிய மக்கள் செல்வன் என்ன உதவி அது ?

இன்றைய காலகட்டத்தில் வெளியாகிய படங்களில் 90-ஸ் கிட்ஸ்களின் அபிமான படங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது 96 படம் தான்.

விஜய்சேதுபதிக்கும் சரி, த்ரிஷாவுக்கும் சரி திருப்புமுனையாக இருந்த படம் என்றே சொல்லலாம். இந்த படத்தில் தான் விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். அந்த படத்தில் இருந்து தொடங்கிய அவர்களது நட்பு இன்றும் தொடர்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்சேதுபதி த்ரிஷாவுக்கு ஒரு உதவி செய்துள்ளார். அது என்னவென்றால், அவரது டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா நடித்த கர்ஜனை படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார். […]

நடிகர் ரஜினிகாந்த்
சினிமா

தர்பார் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ம் தேதி வெளிவரும்- ரஜினிகாந்த்

தர்பார் படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மும்பையில் சினிமா படப்படிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த் நேற்றிரவு 11 மணிக்கு விமானம் முலம் சென்னை வந்தார்.

விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது ரசிகர்கள் குளங்களை தூர் வருவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். தர்பார் படம் நல்ல முறையில் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி 14ந்தேதி படம் வெளிவரும் என்றும் கூறினார். […]

சாக்‌ஷி கவின்
சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்சிக்கு மலர்ந்த காதல்!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் சாக்சி அகர்வாலுக்கு கவினுடன் காதல் மலர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா, விஜய்குமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ் மற்றும் ரேஷ்மா ஆகிய 15 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.

அவர்களை தொடர்ந்து கடந்த 25-ம் தேதி 16-வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் பிக் பாஸ் இல்லத்திற்குள் சென்றுள்ளார்.

பத்து நாட்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சண்டைகள் மட்டுமின்றி காதல் காட்சிகளும் அரங்கேறி வருகின்றது.

அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் புரோமோவில் சாக்‌ஷிக்கு கவின் மீது உள்ள அன்பை ஷெரினிடம் தெரிவித்துள்ளார்.
இந்த அன்பு பிற்காலத்தில் காதலாகக் கூட மாறலாம் என்றும் ஷெரினிடம் சாக்சி அந்த புரோமோவில் தெரிவித்துள்ளார். […]

பிக்பாஸ் சீசன் 3
சினிமா

பிக்பாஸ் சீசன் 3 : எலிமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்த ஏழு பேர்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. வரும் வாரங்களில் இன்னும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சனைகள், மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் நேற்றில் இருந்து, நாமினேஷன் படலம் துவங்கியது. போட்டியாளர்கள் 16 பேரும், வனிதா மற்றும் மோகன் வைத்தியாவை தவிர, மற்ற பிரபலங்களில் இருவரை காரணத்தோடு நாமினேட் செய்யலாம் என பிக்பாஸ் அறிவித்தது.

அதன் படி, ஒவ்வொரு போட்டியாளராக காரணத்தை கூறி நாமினேட் செய்தனர். முதலில் பிக்பாஸ் அறைக்கு சென்ற மதுமிதா: கவின் - பாத்திமா பாபு ஆகியோர் பெயரை நாமினேட் செய்தார். அபிராமி: மதுமிதா - மீராமிதுன் ஆகிய இருவரை நாமினேட் செய்தார். சாக்சி: மதுமிதா - மீராமிதுனையும், கவின்: மீராமிதுன் - மதுமிதா பெயரையே நாமினேட் செய்தார். ஷெரின்: மீராமிதுன் - மதுமிதா பெயரை கூறினார். இவரை தொடர்ந்து, மீரா மிதுன்: அபிராமி - சாக்சி பெயரை நாமினேட் செய்தார். சாண்டி: மதுமிதா - சேரன் ஆகியோரையும், வனிதா: மீராமிதுன் - சேரன், பெயரையும் கூறினார். தர்ஷன்: சாக்சி - மீராமிதுன் பெயரை நாமினேட் செய்தார். லாஸ்லியா: மீராமிதுன் - சரவணன் பெயரையும், ரேஷ்மா: மதுமிதா - பாத்திமாபாபு பெயரையும் கூறினார். இவர்களை தொடர்ந்து சேரன்: லாஸ்லியா - தர்ஷன் பெயரையும், முகன்: மீராமிதுன் - சேரன் பெயரையும், மோகன் வைத்யா: சேரன் - பாத்திமாபாபு ஆகியோர் பெயரை நாமினேட் செய்துள்ளனர்.

இவர்களில், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டவர்கள் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பிடிப்பார்கள்.

அந்த வகையில் நேற்று நடந்த நாமினேஷனில் கவின், சாக்சி, சரவணன், பாத்திமா பாபு, சேரன், மீராமிதுன் மற்றும் மதுமிதா ஆகிய ஏழுபேர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இவர்களை மக்கள் தங்களுடைய ஓட்டுகள் மூலம் காப்பாற்ற முடியும் என்பது அனைவரும் அறிந்தது தான். அடுத்த வாரம் மக்களின் ஆதரவோடு யார் பிக்பாஸ் வீட்டில் இருக்க போகிறார். யார் வெளியேற போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், […]

மீரா மிதுன்
சினிமா

வந்த முதல் நாளே கச்சேரியை ஆரம்பித்த மீரா மிதுன்

கடந்த இரண்டு தினங்களாக, பிக்பாஸ் வீட்டில் எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியாக சென்றது. செண்டிமெண்ட், காதல், பாடல், ஆட்டம் என, கொஞ்சம் குஷியாக இருந்தனர் போட்டியாளர்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு நேற்றைய தினம், 16 ஆவது போட்டியாளராக என்ட்ரி கொடுத்தவர், பிரபல மாடலும், நடிகையுமான மீரா மிதுன்.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாளே... பிரச்னையை ஆரம்பித்து, ரணகளம் செய்துள்ளார். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. "இதில் மீரா மற்றும் அபிராமி ஆகிய இருவருமே, மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் என்பதால், இதற்கு முன் உள்ள கருத்து வேறுபாட்டை மனதில் வைத்து இந்த சண்டை உருவாகிறது என தெரிகிறது.

மீரா மிதுன், அபிராமியை பார்த்து நான் பேச வேண்டானா, என்னிடம் உன் சேட்டையை காட்டாதே என கூறுகிறார். இதற்கு அபிராமி என்கிட்ட பேசாதே என கூறிவிட்டு அங்கிருந்து சென்கிறார். இதற்கு அவர் பைத்தியம் என்பது போல், சைகை செய்கிறார் மீரா.

பின் மீரா பிக்பாஸ் வீட்டின் கேப்டன், வனிதாவுடன் வருகிறார். வனிதா எடுத்ததுமே மீரா உன்னை கத்தினா மட்டும், உனக்கு கண்டிப்பா வரும் என கோபமாக, அபிராமிக்காக வரிந்து கட்டி சண்டை போடுகிறார். பின் உன் பர்சனல் வெஞ்சன்ஸ் வைத்து கொண்டு இப்போ சண்டை போடுகிறது ரொம்ப தவறு என கூறுகிறார்.

மீரா, வனிதாவை பார்த்து அமைதியா இருங்க என கூறி, இப்படி பேசினால் உங்களுக்கு தான் பிபி வரும் என கூற, இதற்கு மிகவும் கோபமாக வனிதா, அதெல்லாம் எனக்கு வராது, இத்தனை வருஷத்துல வராததது, இப்போ வராது என கூறி, இருவரும் காரம் சாரமாக மோதி கொண்டதால், பிக்பாஸ் வீட்டில் சலசலப்பு ஏற்பட்டது. […]

மீரா மிதுன்
சினிமா

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளராக நுழைந்த சர்ச்சை நடிகை மீரா மிதுன்.

மோசடி விவகாரத்தில் சிக்கிய சர்ச்சை நாயகி மீரா மிதுன் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

கடந்த 2016- ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் பெற்றவர் தமிழ்செல்வி என்கிற மீரா மிதுன். இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் மீது எழுந்த மோசடி புகார் காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டத்தை திரும்ப பெறுவதாகவும், அவருக்கு பதிலாக இரண்டாம் இடம் பிடித்த சனம் பிரசாத் என்ற நடிகைக்கு மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் மிஸ் சவுத் இந்தியா தயாரிப்பாளர் அஜித் ரவி விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 23-ம் தேதி பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கியது. கமல் தொகுப்பாளராக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா, காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமான சாக்‌ஷி அகர்வால், நடிகை மதுமிதாவும் பிக் பாஸ் போட்டியாளராக அறிவிக்கப்பட்டனர். நேற்று மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராகச் சென்றார்.

அதனை தொடர்ந்து, கவின், அபிராமி, நடிகர் சரவணன், நடிகை வனிதா, இயக்கனரும், நடிகருமான சேரன், நடிகை ஷெரின், மோகன் வைத்யா, நடன இயக்குநர் சாண்டி, தர்ஷன், மலேசிய தமிழரும், பாடகருமான முகென் ராவ், ரேஷ்மா உள்ளிட்ட 15 போட்டியாளர்களும் கடந்த ஞாயிறு அன்று பிக் பாஸ் இல்லத்திற்குள் சென்றனர்.
இந்நிலையில் நேற்று 16-வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் பிக் பாஸ் இல்லத்திற்குள் சென்றுள்ளார். […]

பிக் பாஸ் - 3 போட்டியாளர்
சினிமா

பிக் பாஸ் - 3 போட்டியாளர் இவர்கள் தான்!

பிக்பாஸ் வீட்டின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு களமிறங்கி உள்ளார். செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரைகளில் இவர் நடித்து பிரபலமானவர்.

2-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் லொஸ்லியா சென்றுள்ளார். இலங்கையைச் சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து உள்ளார்.

3-வது போட்டியாளராக காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால் இடம் பெற்றுள்ளார். விஸ்வாசம் படத்திலும் மருத்துவராக நடித்துள்ளார்.

4வது போட்டியாளராக நடிகை மதுமிதா பங்கேற்றுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மதுமிதா. அந்தப் படத்தை அடுத்து மிரட்டல், அட்டக்கத்தி, கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துவரும் மதுமிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முதல் ஆண் போட்டியாளராக கவின் பங்கேற்றுள்ளார். திருச்சியை சேர்ந்த இவர் சின்னத்திரை நடிகராக பிரபலமானவர். கனா கானும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் 3வது சீசனில் 6வது போட்டியாளராக அபிராமி களமிறங்கி உள்ளார். பிரபல மாடலான இவர் பல விளம்பரங்களில் நடித்து உள்ளார். அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

7வது போட்டியாளராக நடிகர் சரவணன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். தமிழ் சினிமாவில் 20 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பருத்தி வீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

8வது போட்டியாளராக நடிகை வனிதா பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் இவர். தமிழில் சந்திரலேகா, மாணிக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

9வது போட்டியாளராக இயக்கனரும், நடிகருமான சேரன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். பாரதிகண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன் இறுதியாக திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

10வது போட்டியாளராக நடிகை ஷெரின் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். தொடர்ந்து விசில், நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சமீபகாலமாக படங்களில் நடிக்க வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார்.

11வது போட்டியாளராக மோகன் வைத்யா பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளார். கடந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற ஆனந்த் வைத்தியநாதன் போல் இந்த முறை பாடகரும், நடிகருமான மோகன் வைத்யா பங்கேற்க உள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக வருகைதந்துள்ள போட்டியாளர் நடன இயக்குநர் சாண்டி.

பிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக வருகை தந்துள்ள போட்டியாளர் ஸ்ரீலங்காவை சேர்ந்த தர்ஷன்.

பிக்பாஸ் வீட்டிற்குள் அடுத்த போட்டியாளர் மலேசியாவைச் சேர்ந்த பாடகர் முகென் ராவ் வருகை தந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள பதினைந்தாவது போட்டியாளர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரேஷ்மா பசுபுலேட்டி. வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தின் புஷ்பா என்ற கேரக்டரின் மூலம் பிரபலமானவர்.. […]

நடிகர் சங்க தேர்தல்
சினிமா

நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது..!

சென்னை புனித எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதில் நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிகர்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 1604 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த வாக்குப்பதிவுகள் பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்படுகிறது. […]

ரன்வீர்சிங் - தீபிகா
சினிமா

83 படத்தில் ரன்வீர்சிங்குடன் இணைகிறார் தீபிகா படுகோன்

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையப்படுத்தி உருவாக்கப்படும் 83 என்ற படத்தில் கபில்தேவ் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்க இருக்கிறார். கபீர்கான் இயக்கும் அந்த படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர்சிங் நடித்து வரும் நிலையில், தற்போது அவரது மனைவி தீபிகாவும் இணைந்துள்ளார். தனது மனைவி கையில் கிரிக்கெட் பேட்டை கொடுத்தால் என்ன நடக்கும் என்பதைக் காட்ட வேடிக்கையான வீடியோவையும் ரன்வீர்சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி 83 படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பின் ரன்வீர்சிங் - தீபிகா இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும். […]

பாக்யராஜ் தலைமையில் புதிய அணி
சினிமா

நடிகர் சங்கத்தேர்தலில் விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையில் புதிய அணி

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையிலான அணியினர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

2019- 2022 -ம் ஆண்டிற்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தற்போது நடிகர் சங்க நிர்வாகிகளாக இருந்து வரும் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்திக் உள்ளிட்ட அதே நிர்வாகிகள் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாண்டவர் அணியினரை எதிர்த்து கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியாக நடிகர்கள், நாடக நடிகர்கள் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜும், பொது செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணை தலைவர் பதவிகளுக்கு குட்டி பத்மினி மற்றும் உதயா, செயற் குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு பூர்ணிமா பாக்யராஜ், பாண்டியராஜன், சங்கீதா, நடிகர்கள் விமல், சாம் மற்றும் பரத் உள்ளிட்ட 24 பேர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். […]

பிரியா பவானி  சங்கர்
சினிமா

போலி ட்விட்டர் பக்கம்... சிக்கித் தவிக்கும் பிரியா பவானி சங்கர்..

எல்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தனது பெயரில் ட்விட்டரில் போலி அக்கவுண்ட் வைத்துள்ளவருக்கு பதிலளித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றார் பிரியா பவானி சங்கர்.

தற்போது சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து இன்னும் பிரபலமாகியுள்ளார். மேயாத மான படம் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். எல்.ஜே.சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
பிரியா பவானி சங்கர் பெயரில் ட்விட்டரில் பல போலி அக்கவுண்ட்கள் இருக்கின்றன. அதிலிருந்து சில தகவல்கள் பகிரப்பட்டு அவருடைய பெயரை கெடுப்பது போல் சில விஷயங்கள் செய்து வரப்படுகிறது.

தற்போது இதேபோல் அவரது பெயரில் உள்ள அக்கவுண்ட் ஒன்றில் இருந்து, ‘மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்துள்ளது என்று நம்புகிறேன். உங்களது பாராட்டுகளுக்கு நன்றி என்று’ பதிவு செய்யப்பட்டுள்ளது. […]

ஐஸ்வர்யா ராய்
சினிமா

கான்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்

72வது கான்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக தமது மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் நாட்டின் ரிவேரியா நகருக்கு வந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். 45 வயதாகும் ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளாக இத்திரைப்பட விழாவுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்போது ஐஸ்வர்யா ராய் அணிந்து வரும் ஆடைகள் புதிய மாடல்களில் இருப்பது வழக்கம். இந்த ஆண்டு தமது மகளுடன் பங்கேற்கும் ஐஸ்வர்யா ராய் என்ன ஆடை அணிந்து விழாவில் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கேற்ப தங்க நிறத்தால் ஆன, கழுத்தில் பிஷ் கட் கொண்ட மெட்டாலிக் கவுன் அணிந்து சிவப்புக் கம்பள வரவேற்புக்கு வந்தார் ஐஸ்வர்யா ராய்..அருகில் கைப்பிடித்து வந்த அவர் மகள் ஆராத்யாவும் கண்கவரும் ஆடையில் காட்சியளித்தார்.

ஏற்கனவே நடிகைகள் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கங்கணா ரணாவத், இலியானா, ஹூமா குரேஷி, டயானா பென்ட்டி, ஹீனா கான் உள்ளிட்டோர் சிவப்புக் கம்பளத்தில் தங்கள் வனப்பை ஆடைகளில் வெளிப்படுத்தியுள்ளனர். […]

கீர்த்தி சுரேஷ்
சினிமா

நீங்க எதை வைத்து கலாய்க்கிறீர்களோ அது தான் கீர்த்தி வெற்றியின் ரகசியமாம்!

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் பிரபலமாக உள்ளார். போனி கபூர் தயாரிக்கும் பாலிவுட் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் அவரின் தொழில் ரகசியம் குறித்து அவரே தெரிவித்துள்ளார்.
பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி. சில, பல நேரங்களில் படத்தில் அவரின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமே இருக்காது. சும்மா வந்து சிரித்து, காதலித்துவிட்டு செல்வார். இது என்ன இந்த கீர்த்தியின் கதாபாத்திரம் டம்மியா என்று ரசிகர்கள் கேட்டது உண்டு.
பார்க்கும் நமக்கே கீர்த்தியின் கதாபாத்திரத்திற்கு வெயிட் இல்லை என்பது தெரியும் போது படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் அவருக்கு தெரியாமல் இருக்குமா?. அவர் தனது கதாபாத்திரத்தை விட கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறாராம். நல்ல கதை உள்ள படத்தில் நடித்தாலே போதும் என்ற கொள்கை வைத்துள்ளார் கீர்த்தி.
கீர்த்தி நடித்த படங்கள் வெற்றி பெற்றாலும் அவை அதன் ஹீரோக்களுக்காகத் தான் ஓடின என்று கூறப்படும். யாருக்காக படம் ஓடினால் என்ன படம் ஓடுகிறது அல்லவா, அது போதும் என்பது தான் கீர்த்தியின் வெற்றியின் ரகசியமாம்.
தன் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும் என்று கீர்த்தி எதிர்பார்ப்பது இல்லையாம். கதாபாத்திரம் வெயிட்டாக இருந்து கதை நன்றாக இல்லை என்றால் படம் ஓடாது என்று நம்புகிறார் கீர்த்தி. அவர் சொல்வதும் சரி தானே. […]

ரகுல் ப்ரீத் சிங்
Cinema

கவர்ச்சியில் ரணகளம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!

அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக ரவுண்டு கட்டி வலம் வந்துக்கொண்டிருக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங் 2009 இல் தெலுங்கில் வெளியான ‘கில்லி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது தமிழ் தெலுங்கு ,மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார். ஒல்லியான உடலமைப்பை வைத்துள்ள அவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதயும் வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது படுமோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. […]

Cinema
Cinema

SK-16ல் சிவகார்த்திகேயனின் ஜோடி இவங்க தான்! லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

எஸ்.கே.16 படத்தின் கதாநாயகி குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை சன் பிச்சர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படத் […]