ஆப்பிள்
வர்த்தகம்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியது

அமெரிக்காவின் முன்னனி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தனது ஐ-போன் மாடல் செல்போன்களை உற்பத்தி செய்யும் பணியை தொடங்கி விட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாம் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட ஐ-போன் எக்ஸ்.ஆர். மாடல் போனை பெற்றதாகவும், அதில் கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டது, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டது என்று பதிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தனது உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் விரிவுபடுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த பதிவில் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

[…]

பங்குச்சந்தை
வர்த்தகம்

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வெளிநாட்டு முதலீடு...

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நடப்பு மாதத்தில் இந்திய சந்தைகளில் 17 ஆயிரத்து 722 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.

நவம்பர் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நிறுவனங்களின் பங்குகளில் 17 ஆயிரத்து 547 கோடி ரூபாயும், கடன் பத்திரங்களில் 175 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களை ஒப்பிடும் போது நவம்பர் மாதத்தில் அதிக தொகையை முதலீடு செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் 6557 கோடி ரூபாயும் அக்டோபர் மாதத்தில் 16 ஆயிரத்து 464 கோடி ரூபாயும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய பங்குச்சந்தை தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடனே இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் ஜிடிபி டேட்டா, எதிர்மறையாகவே இருக்கும் என்பதும் அதற்கு காரணமாக கூறப்படுகிறது.

[…]

அமேசான்
வர்த்தகம்

பென்டகன் முடிவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் அமேசான் நிறுவனம் வழக்கு

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் சுமார் 71 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, மைக்ரோசாப்ட்டுக்கு அளிக்கும் முடிவை எதிர்த்து அமேசான் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனை டிஜிட்டல் நவீன மயமாக்கும் நடவடிக்கை தொடர்பான ஒப்பந்தத்துக்கு அமேசானும், மைக்ரோசாப்ட்டும் விண்ணப்பித்திருந்தன.

அந்த ஒப்பந்தம் அமேசானுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென மைக்ரோசாப்ட்டுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் அமேசான் வழக்குத் தொடுத்துள்ளது.

[…]

ஏர்டெல்
வர்த்தகம்

காஷ்மீரில் 30 லட்சம் சந்தாதாரர்களை இழந்த ஏர்டெல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மட்டும், சுமார் 30 லட்சம் சந்தாதாரர்களை பார்தி ஏர்டெல் நிறுவனம் இழந்திருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது பிரிவு அதிரடியாக நீக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. அப்போது, காஷ்மீரில், தொலைத்தொடர்பு சேவைகள், இணைய சேவைகள் முடக்கப்பட்டு, முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

இவ்வாறான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் சந்தாதரர்களை, பார்தி ஏர்டெல் நிறுவனம் இழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நிகழ் நிதியாண்டின், செப்டம்பர் மாதத்தோடு முடிந்த இரண்டாவது காலாண்டு அறிக்கையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

[…]

தொலைத்தொடர்பு
வர்த்தகம்

டெலிகாம் நிறுவனங்களுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகைய விடுவிக்க தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் வலியுறுத்தல்

நாட்டில் செல்போன் சேவையை வழங்கும், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி.யின் கீழ் பெறப்பட்டு திருப்பித் தரவேண்டிய 36 ஆயிரம் கோடி ரூபாய் ஐ.டீ.சி((ITC)) நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு, மத்திய நிதியமைச்சகத்தை, தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 18 ஆயிரம் கோடி ரூபாயும், பார்தி ஏர்டெல்லுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாயும், வோடபோன்-ஐடியாவுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாயும் என நிலுவைத் தொகை விடுவிக்கப்பட வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகை 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிலுவைத் தொகையை செலுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளித்தது.

இதனைத் தொடர்ந்து, நிலுவைத் தொகை 36 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க தொலைத்தொடர்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை டெலிகாம் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி நிவாரணத்தை அளிப்பதாக மாறியுள்ளது.

[…]

ஸ்பெக்ட்ரம்
வர்த்தகம்

ஸ்பெக்ட்ரம் நிலுவைத் தொகை -அவகாசம் தந்த மத்திய அரசு

இந்தியாவில், செல்போன் சேவையை வழங்கும் நிறுவனங்கள், ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த, மத்திய அரசு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளித்திருக்கிறது. 

செல்போன் நிறுவனங்களுக்கு, AGR எனப்படும் சரிசெய்யப்படும் தோராய வருவாய் அடிப்படையில், லைசென்ஸ் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் நிர்ணயம் செய்கிறது.

இந்த ஏஜிஆர் கணக்கீடு தொடர்பான வழக்கில், அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள், 92 ஆயிரத்து 642 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை, மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இதனால், திகைத்துப்போன ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்கள், மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தன.. இதை பரிசீலித்த மத்திய அரசு, செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய, 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான ஸ்பெக்டரம் உரிமத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளது.

இதற்கான ஒப்புதல், கேபினட் கூட்டத்தில் வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம், வோடபோன்-ஐடியா செலுத்த வேண்டிய 23,920 கோடி ரூபாய், ஏர்டெல் செலுத்த வேண்டிய 11,746 கோடி ரூபாய், ரிலையன்ஸ் ஜியோ செலுத்த வேண்டிய 6,670 கோடி ரூபாய் ஆகியவற்றை, உடனடியாக விடுவிப்பதில் இருந்து சற்று அவகாசம் கிடைத்திருக்கிறது.

விருப்பப்பட்டால், செல்போன் நிறுவனங்கள், தவணை முறையிலும், தங்கள் நிலுவைத் தொகையை செலுத்தவும், மத்திய அரசு வாய்ப்பளித்திருக்கிறது. இருப்பினும், அடுத்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின்போது, தற்போதுள்ள அலைக்கற்றை நிலுவைத் தொகைக்கான வட்டி வசூலிக்கப்படும் என மத்திய அரசு கூறியிருக்கிறது.

[…]

வாகன விற்பனை உயர்வு
வர்த்தகம்

கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு வாகன விற்பனை உயர்வு

நாட்டில், கடந்த அக்டோபர் மாதம், புதிய வாகனங்களின் பதிவு, 4 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருப்பதாக, ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பான அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதம், தீபாவளி, நவராத்திரி, தசாரா பண்டிகைகளையொட்டி, புதிய வாகன விற்பனை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில், 16 லட்சத்து 38 ஆயிரத்து 832 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு, 4 விழுக்காடு அதிகரித்து, 17 லட்சத்து 9 ஆயிரத்து 610 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

மேலும், வாகன விற்பனை உயர, கார் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அறிவித்த கவர்ச்சிகரமான சலுகைகளும் ஒரு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

[…]

பங்குச்சந்தை
வர்த்தகம்

இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்

தொடங்கியது முதலே உயர்வுடன் வர்த்தமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தைகள், உயர்வுடனேயே புதன்கிழமை வர்த்தகத்தை நிறைவு செய்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 40 ஆயிரத்து 700 புள்ளிகளை அடைந்து புதிய உச்சத்தை எட்டி வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 652 புள்ளிகளாக நிறைவடைந்தது.

தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், 59 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 999 புள்ளிகளாக முடிவடைந்தது. மும்பை பங்கு சந்தையில் சன் பார்மா, இண்டஸ் இண்ட், எஸ் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி மற்றும் எல் அண்ட் டி நிறுவன பங்குகள், 5 புள்ளி 73 சதவீதம் வரை உயர்ந்தன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 4 சதவீதம் உயர்ந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பங்கின் விலை ஆயிரத்து 571 ரூபாய் அளவுக்கு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.

[…]

அனுராக்
வர்த்தகம்

இந்தியா 5 சதவீத பொருளாதார சுணக்க நிலையை சந்திக்கவில்லை: மத்திய அரசு

இந்தியா 5 சதவீத பொருளாதார சுணக்க நிலையை சந்திக்கவில்லை என மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் 5 சதவீத பொருளாதார சுணக்க நிலை என்பது கிடையாது. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளா்ச்சி கண்டு வருகிறது.

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான், வங்கிகள் இணைப்பு, தொழில்நிறுவனங்களுக்கான வரிச் சலுகை உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசைப் பொருத்தவரையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலா் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

[…]

உருக்கு
வர்த்தகம்

இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி 34% சரிவு

இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி கடந்த 2018-19 நிதியாண்டில் 33.9 சதவீதம் குறைந்து போனது.

இதுகுறித்து மத்திய உருக்குத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் திங்கள்கிழமை கூறியது:

விற்பனைக்கு தயாரான நிலையில் உள்ள உருக்குப் பொருள்களின் ஏற்றுமதி கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் 63.6 லட்சம் டன்னாக இருந்தது. இதற்கு முந்தைய 2017-18 நிதி ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உருக்கு ஏற்றுமதியான 96.2 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் இது 33.9 சதவீதம் குறைவாகும்.

ஏற்றுமதி குறைந்து போன அதேவேளையில், உள்நாட்டில் அதன் உற்பத்தி 10.31 கோடி டன்னிலிருந்து 7.6 சதவீதம் அதிகரித்து 11.09 கோடி டன்னாக இருந்தது என்றாா் அவா்.

உருக்கு பயன்பாடு: இந்தியாவில் கடந்த 2010-ஆம் ஆண்டில் 1.2 கிலோவாக காணப்பட்ட தனிநபா் உருக்கு பயன்பாடு 2019-ஆம் ஆண்டில் 2.5 கிலோவாக 100 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளதாக இந்திய உருக்கு மேம்பாட்டு கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்டிஏ) தெரிவித்துள்ளது.

[…]

கொசுவலை
வர்த்தகம்

அழியும் நிலையில்... கரூர் கொசுவலை தொழில்

அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கரூரில் உற்பத்தியாகும் பாரம்பரிய கொசுவலைத் தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வருமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் உற்பத்தியாளர்கள்.

உலகளவில் கரூர் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி தொழிலுக்கு அடுத்தபடியாக மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித் தரக் கூடியாக இருந்து வந்தது பாரம்பரிய கொசுவலை உற்பத்தி தொழில். நாடு முழுவதும் ஆண்டுக்கு ரூ.40 கோடி வரை கரூரில் கொசு வலை மூலம் வர்த்தகம் நடைபெற்று வந்தது. 

பாலி எத்திலின் என்றழைக்கப்படும் பிளாஸ்டிக் குருணை மூலம் உற்பத்தி செய்யப்படும் இந்தக் கொசுவலைகள் நாட்டின் மேற்குவங்கம், உத்தரபிரதேசம், குஜராத், பிகார், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களுக்கு அதிகளவிலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யா போன்ற கடுமையான காய்ச்சல்களை உருவாக்கும் கொசுக்கள் கடிப்பதை தடுக்கும் வகையில் நேர்த்தியாக உற்பத்தி செய்யக்கூடிய வகையாக கரூர் கொசுவலைகள் இருப்பதால் மற்ற நாடுகளின் கொசுவலைகளைவிட கரூர் கொசுவலைக்கு என்றுமே தனியொரு இடமுண்டு. மேலும், தோட்டக்கலைத் துறையில், விதைப் பண்ணைகளில் சூரிய ஒளியைத் தடுக்கும் வகையிலும், பட்டுப்பூச்சி வளர்ப்பு போன்ற பயன்பாட்டில்இவற்றின்பங்கு மகத்தானது.

இவற்றைத்தவிர, மெடிக்கல் பேக்கிங் பயன்பாட்டிலும் உள்ளது. கரூர் மாவட்டத்தில் மட்டும் இந்தத் தொழிலில் நேரிடையாக சுமார் 20,000 பேரும், மறைமுகமாக சுமார் 15,000 பேருக்கும் பணி வாய்ப்பைக் கொடுத்த இந்தத் தொழில் தற்போது அடியோடு முடங்கிப்போயுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாகப் புறக்கணித்து வருவது, ஜிஎஸ்டி வரி விதிப்பு, மாநில அரசின் விலையில்லா கொசுவலை வழங்கும் திட்டத்தில் கைவிட்டது, தரமற்ற கொசுவலையில் முன்னணியில் வகிக்கும் வங்கதேச கொசு வலைகள் எல்லைப்புறமாக கள்ளச்சந்தையில் ஊடுருவது உள்ளிட்ட காரணங்களால், கரூரில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய கொசுவலைகளின் உற்பத்தி முடங்கி, அதனை நம்பியிருந்த தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலுக்கும் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர். 

இதுதொடர்பாக பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் கே.கருணாநிதி கூறியது: மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியில் மேக்இன் இந்தியா திட்டத்தில் சிறு, குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றனர். ஆனால் சிறு, குறு தொழில் பட்டியலில் உள்ள பாரம்பரியகொசுவலை உற்பத்திக்கு முன்பு ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது கிடையாது. மூலப்பொருளான பாலிஎத்திலினுக்கு மட்டும் 12 சதவீதம் வரி செலுத்தி வந்தோம். ஆனால், இப்போது வரியையும் செலுத்தச் சொல்கிறார்கள். ஆனால் (ரீபண்ட்) திருப்பித்தரும் தொகையானது 2018-இல் தான் பெரும்பாலனோருக்கு கிடைத்தது. இன்னும் சிலருக்கு கிடைக்கவில்லை. இதேபோல, அடர்ந்த வனப்பகுதியில் எல்லையை காத்து வரும் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கும் மத்திய அரசு ஒப்பந்தப் புள்ளிகள் பெற்று அதிக அளவில் கொசுவலைகளை வாங்கும். 

அதாவது, 2,000 பேல்கள் முதல் 3,000 பேல்கள் வரை ராணுவத்துக்கு மட்டும் விநியோகம் செய்வோம். இதன்மூலம், ரூ.5 கோடி வரை வர்த்தகம் கிடைத்து வந்தது. அதுவும் கடந்த 2012-ஆண்டுக்குப் பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனிடையே வங்கதேசத்தில் உற்பத்தியாகும் தரமற்ற கொசுவலைகள் நம்நாட்டிற்குள் கள்ளத்தனமாக ஊடுருவி வருகின்றன. சில அதிகாரிகள் உடந்தையுடன் சட்ட விரோதமாக கொசுவலைகளை நம் நாட்டிற்குள் கொண்டுவந்துவிடுகிறார்கள். இங்கு கள்ளச்சந்தையில் மிகவும் குறைந்த விலையில் விற்கிறார்கள். 

நம் பாரம்பரிய கொசுவலைகள் கிலோ ரூ.200-க்கு விற்கும் நிலையில், கள்ளச்சந்தை பொருள் ரூ.70-க்கு விற்பதால் நம் நாட்டுத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்த கொசுவலைகள் தேக்கமடைந்து வருகின்றன. முன்பு இருந்ததுபோல, ஜிஎஸ்டி இல்லாத நிலையை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். வங்கதேசத்திலிருந்து மறைமுகமாக நம்நாட்டிற்குள் ஊடுருவும் கொசுவலைகளை தடுத்து நிறுத்தி, உரிய வரிவிதிப்பை அந்த கொசுவலைகளுக்கு அமல்படுத்த வேண்டும்.

அழிந்துவரும் சிறு, குறு தொழில்கள் பட்டியலில் கொசுவலை உற்பத்தி நிறுவனங்களும் இணைந்துவிடாமல் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

[…]

பில்கேட்ஸ்
வர்த்தகம்

இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட வாய்ப்பு - பில்கேட்ஸ் கணிப்பு

அடுத்த பத்தாண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளதாக உலக பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவனர்களுள் ஒருவருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

தனது அறக்கட்டளையின் பணிகளை மதிப்பாய்வு செய்யும் விதமாக பில்கேட்ஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய உயரத்தை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள ஆதார் சேவையை வெகுவாக பாராட்டியுள்ள அவர், நிதி சேவை மற்றும் மருந்தியல் துறையில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

[…]

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வர்த்தகம்

மார்ச் மாதத்திற்குள் Air India, பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு விற்பனை - நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகியவற்றின் பங்குகள் வரும் மார்ச் மாதத்திற்குள் விற்பனை செய்யப்பட்டு விடும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளித்து ஒரு லட்சம் கோடி  ரூபாயை திரட்டுவதற்காக பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி ஒன்றில், பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய அரசு தேவையான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கூறினார்.

நடப்பு நிதி ஆண்டில் ஜி.எஸ்டி வரி வசூலில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வங்கிகள் மூலமாக 1. 8 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டதும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

[…]

ரிலையன்ஸ்
வர்த்தகம்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் இயக்குனர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து, அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்.

கடுமையான கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு, கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் மட்டும் 30 ஆயிரத்து 142 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி மணிகண்டன் அப்பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார்.

இந்நிலையில் அந்நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி, சாயா விரானி, ரைனா கரானி உட்பட 5 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

[…]

பில்கேட்ஸ்
வர்த்தகம்

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் மீண்டும் முதலிடம்

மைக்ரோசாப்ட் நிறுவன இணை நிறுவனர் பில் கேட்ஸ், 7 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளுடன், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அப்பட்டியலில், பில்கேட்ஸ் முதலிடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் (jeff bezos) 7 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர்.

image

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகன், கணினி சேவை தொடர்பான ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட்டிடம் அளிக்க அக்டோபர் மாதம் முடிவெடுத்தது. அன்று முதல் அந்நிறுவன பங்குகள் மதிப்பு 4 சதவீதம் உயர்ந்தன.

அதேநேரத்தில் அமேசான் பங்குகள் மதிப்பு 2 சதவீதம் சரிந்தன. இதுவே உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை பிடிக்க காரணமாக கூறப்படுகிறது.

[…]

வோடபோன்
வர்த்தகம்

வோடபோன்- ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் தடுமாற்றம்...

மூன்றே மாதங்களில் 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வோடபோன் நிறுவனமும், 23 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்திருப்பதாக ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளன.

புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தன.

இதையடுத்து ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்களிடம், ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், அந்நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தனர்.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் AGR எனப்படும் அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட ஆண்டு மொத்த வருவாய் கணக்கீட்டில் தொலைத் தொடர்புச் சேவை அல்லாத வர்த்தகங்களின் வருவாயையும் சேர்த்துக் கணக்கிட வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், உரிமத்தொகை, அலைக்கற்றைக் கட்டணம் ஆகியவை அரசுக்குச் செலுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் ஐடியா-வோடபோன் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் 50 ஆயிரத்து 921 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அண்மைக் காலத்தில் எந்தவொரு இந்தியத் தொழில் நிறுவனம் ஒரே காலாண்டில் இத்தகைய இழப்பை சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன.

மற்றொரு தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், நிதி நிலைகளில் எதிர்மறைத் தாக்கம் ஏற்பட்டதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

முதன்மைத் தொகை, வட்டி, அபராதத் தொகை, அபராதத்தின் மீதான வட்டி என 28 ஆயிரத்து 450 கோடி ரூபாய் அந்நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

[…]

வர்த்தகத்துறை
வர்த்தகம்

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுறுமா?

பரஸ்பரம் இறக்குமதி வரிகளை குறைப்பது தொடர்பாக, அமெரிக்காவோடு, உள்ளார்ந்த ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக, சீனா தெரிவித்திருக்கிறது.

உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும், போட்டிப்போட்டுக் கொண்டு, பரஸ்பரம் இறக்குமதி வரிகளை உயர்த்தியதால், இருநாடுகளிடையே வர்த்தகப் போர் மூண்டது. இதனால், இருநாடுகளின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், பெரும் இழப்புகள் ஏற்பட்டன.

இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சீன வர்த்தகத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் காவோ ஃபெங்((Gao Feng)), முதற்கட்டமாக, பரஸ்பரம் விதித்துள்ள கூடுதல் வரிகளை திரும்ப பெறுவது பற்றி பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும், அமெரிக்காவும், சீனாவும் இணைந்து, இறக்குமதி வரிகளை, யாருக்கும் பாதகமின்றி நிர்ணயிப்பதுத் தொடர்பாக, உள்ளார்ந்த பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருவதாகவும், சீன வர்த்தகத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். 

[…]

வோடஃபோன்
வர்த்தகம்

வோடஃபோன் ஐடியா திவால் ஆகும் நிலை?

மத்திய அரசு உதவி செய்யத் தவறினால், வோடஃபோன் ஐடியா நிறுவனம் திவால் ஆகும் நிலை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆதித்யா பிர்லா குழுமமும், இங்கிலாந்தின் வோடஃபோன் குழுமமும் இணைந்த கூட்டு முதலீட்டு நிறுவனம் வோடஃபோன் ஐடியா.

இந்நிறுவனத்திற்கு 99 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது. கடந்த ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்தது. மேலும் புதிய வருவாய் பங்கீட்டுக் கொள்கையின்படி, வோடஃபோன் ஐடியா நிறுவனம் 39 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக முதலீடுகள் செலுத்தப்பட்டால்தான் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என கூறப்படுகிறது.

ஆனால் ஆதித்யா பிர்லா நிறுவனம் புதிதாக முதலீட்டை செலுத்த தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, 39 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்துவதில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில், மத்திய அரசு புதிய வருவாய் பங்கீட்டுக் கொள்கையை மாற்றியமைக்க தவறினால் வோடஃபோன் ஐடியா நிறுவனம் திவால் ஆகும் நிலை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

[…]

தங்க ஈடிஎஃப்
வர்த்தகம்

தங்க ஈடிஎஃப் திட்டங்களிலிருந்து முதலீடுகள் வெளியேற்றம்

முதலீட்டாளா்கள் லாப நோக்கு கருதி தங்க ஈடிஎஃப் திட்டங்களிலிருந்து கடந்த அக்டோபரில் ரூ.31 கோடியை விலக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் தொடா்ச்சியாக தங்க ஈடிஎஃப் தொடா்புடைய திட்டங்கள் ரூ.200 கோடி வரையிலான முதலீட்டை ஈா்த்தன. இந்த நிலையில், அக்டோபரில் முதலீட்டாளா்கள் அத்தகைய திட்டங்களிலிருந்து ரூ.31.45 கோடியை விலக்கி கொண்டுள்ளனா். தங்கத்தின் விலை உச்சத்தில் காணப்படுவதால் லாப நோக்கு கருதி இந்த முடிவை அவா்கள் மேற்கொண்டனா்.

கடந்தாண்டு நவம்பரில் தங்க ஈடிஎஃப் திட்டங்கள் ரூ.10 கோடி முதலீட்டை ஈா்த்தன. அதன்பின்னா் அத்தகைய திட்டங்களுக்கு முதலீட்டாளா்களிடம் வரவேற்பில்லாமல் இருந்தது. இந்த நிலையில், நடப்பாண்டில் ஆகஸ்டில்தான் முதல் முறையாக அத்தகைய திட்டங்கள் ரூ.145.29 கோடி முதலீட்டை ஈா்த்தன. இது, செப்டம்பரில் ரூ.44.11 கோடியாக இருந்தது.

நடப்பாண்டு செப்டம்பரில் ரூ.5,613 கோடியாக காணப்பட்ட தங்க நிதியங்கள் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு அக்டோபரில் ரூ.5,652 கோடியாக அதிகரித்தது என்று அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

[…]

பொருளாதாரம்
வர்த்தகம்

இந்தியப் பொருளாதாரம் 5% வளா்ச்சி காணும்: எஸ்பிஐ

இந்தியப் பொருளாதார வளா்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 5 சதவீதமாக இருக்கும் என எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐயின் பொருளாதார ஆராய்ச்சி துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மோட்டாா் வாகன விற்பனை தொய்வு, விமானப் போக்குவரத்து செயல்பாடுகள் குறைவு, முக்கிய எட்டு துறைகளின் வளா்ச்சி சரிவு, உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் துறை முதலீட்டில் வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும்போது, நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 5 சதவீத அளவுக்கே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய மதிப்பீடான 6.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு.

முடங்கிக் கிடக்கும் பொருளாதார வளா்ச்சியை துரிதப்படுத்த வேண்டுமெனில், ரிசா்வ் வங்கி வரும் டிசம்பா் மாதம் வெளியிடவுள்ள நிதிக் கொள்கையில் வட்டி விகிதங்களை பெரிய அளவில் குறைக்க வேண்டும்.

இருப்பினும், வரும் 2020-21-ஆம் நிதியாண்டில் சாதகமான சூழல்களால் பொருளாதார வளா்ச்சியானது 6.2 சதவீதமாக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

[…]

டிஎன்பிஎல்
வர்த்தகம்

டிஎன்பிஎல் லாபம் ரூ.21 கோடி

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்) நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.21.58 கோடியை ஈட்டியது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் ரூ.783.89 கோடி வருவாய் ஈட்டியது. இது, கடந்த நிதி ஆண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.1,014.07 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

அதேசமயம், வரிக்கு முந்தைய லாபம் ரூ.10.15 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.33.42 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.6.52 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.21.58 கோடியாகவும் இருந்தன.

செப்டம்பா் மாதத்துடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,744.52 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.1,949.31 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவான அளவாகும்.

அதேசமயம், வரிக்கு முந்தைய லாபம் ரூ.48.99 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.147.70 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.31.21 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.98.67 கோடியாகவும் இருந்தன.

நடப்பாண்டு செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் காகித உற்பத்தி 1,08,752 டன்னாகவும், காகித அட்டையின் உற்பத்தி 42,516 டன்னாகவும் இருந்தது என டிஎன்பிஎல் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

[…]

வா்த்தக அமைச்சகம்
வர்த்தகம்

இறக்குமதியை குறைக்கக்கூடிய பொருள்களை அடையாளம் காண வேண்டும்: வா்த்தக அமைச்சகம்

இறக்குமதியை குறைக்கக்கூடிய பொருள்களை அடையாளம் காணும் பணியில் அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் ஈடுபட வேண்டும் என மத்திய வா்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சகத்தின் உயரதிகாரி கூறியதாவது:

இந்தியாவின் இறக்குமதி செலவினம் கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 46,560 கோடி டாலராக (சுமாா் ரூ.32.59 லட்சம் கோடி) இருந்தது. இந்த செலவினம் 2018-19-ஆம் நிதியாண்டில் 9 சதவீதம் அதிகரித்து 50,750 கோடி டாலரை (ரூ.35.52 லட்சம் கோடி) எட்டியது.

இறக்குமதி செலவினம் வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், இறக்குமதியை குறைக்க அல்லது அதற்கு மாற்றான தயாரிப்புகளை அடையாளம் காணும்படி அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளை வா்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே பல்வேறு கூட்டங்கள் நடத்தி விவாதங்கள் நடைபெற்ற நிலையில் இந்த வேண்டுகோளை மத்திய வா்த்தக அமைச்சகம் விடுத்துள்ளது.

குறிப்பாக, தொலைத் தொடா்பு, விவசாயம், மின்னணு, உரம், தகவல் தொழில்நுட்பம், உரம், கனரக தொழில்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அமைச்சகங்கள் இறக்குமதியை குறைப்பதற்கு மாற்றானவற்றை கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்தியா அதிக அளவு இறக்குமதி செய்யும் பொருள்களில், கச்சா எண்ணெய், தங்கம், மின்னணு சாதனங்கள், பருப்பு வகைகள், உரம், இயந்திரங்கள், மருந்துப் பொருள்கள் ஆகியவை முன்னிலையில் உள்ளன. அதிக இறக்குமதி செலவினம் வா்த்தக பற்றாக்குறையை அதிகரிப்பதுடன் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஏற்படவும் வழிவகுக்கிறது. அதிக அளவிலான இறக்குமதி நாட்டின் அந்நியச் செலாவணி விகிதங்களை பாதிப்பதாக உள்ளது.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் இறக்குமதி செலவினத்தை கட்டுப்படுத்தலாம் என வா்த்தக வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து வெளிநாட்டு வா்த்தக கல்வி மையத்தின் பேராசிரியா் ராகேஷ் மோகன் ஜோஷி கூறுகையில், ‘ இறக்குமதி செலவினத்தை குறைக்க நுகா்வை கட்டுப்படுத்துவதை காட்டிலும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். மேலும், ஆடம்பர மற்றும் அத்தியாவசிய பொருள்களின் மீதான இறக்குமதி வரியை அதிகரிப்பதன் மூலமும் இறக்குமதி செலவினத்தை கணிசமாக குறைக்கலாம்’ என்றாா்.

[…]

விற்பனை
வர்த்தகம்

அக்டோபரில் கார், இருசக்கர வாகனங்களின் விற்பனை சரிவு

தொடர்ந்து சரிவில் இருந்த பயணியர் வாகன விற்பனை, அக்டோபர் மாதத்தில் சற்று உயர்வை சந்தித்துள்ளது.

இந்தியாவில் வாகன விற்பனை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இந்தநிலையில், பயணியர் வாகன விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் உயர்வை சந்தித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2 லட்சத்து 84 ஆயித்து 223 வாகனங்கள் விற்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு அக்டோபரில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 27 வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் பயணியர் வாகன விற்பனை பூஜ்ஜியம் புள்ளி இரண்டு எட்டு சதவீதம் உயர்ந்துள்ளது தீபாவளியையொட்டி, மத்திய அரசு பொதுமக்களுக்கு வழங்கிய கடன் சலுகைகளே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

[…]

அலிபாபா
வர்த்தகம்

68 விநாடிகளில் 1 பில்லியனை தொட்ட அலிபாபாவின் ஆன்லைன் வர்த்தகம்

சிங்கிள்ஸ்-டேவிற்கான சிறப்பு விற்பனையில், 9 மணி நேரத்தில் 22 பில்லியன்களுக்கு வர்த்தகம் செய்து, சீனாவின் அலிபாபா நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-11-ம் தேதியை, சீனாவின் பிரபல ஆன்லைன் - வணிக நிறுவனமான அலிபாபா சிங்கிள்ஸ்-டேவாக பின்பற்றி வருகிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து 10-வது ஆண்டாக, அந்நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

இதையடுத்து 68 விநாடிகளில் 1 பில்லியனை தொட்ட அலிபாபாவின் வர்த்தகம், 9 மணி நேர முடிவில் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாயை  எட்டியுள்ளது

இதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும் 20 முதல் 25 சதவிகிதம் அலிபாபாவின் வர்த்தகம் சிங்கிள்ஸ் டேவில் வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[…]

லக்ஷ்மி விலாஸ்
வர்த்தகம்

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் இழப்பு ரூ.357 கோடியாக அதிகரிப்பு

தனியாா் துறையைச் சோ்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு இரண்டாம் காலாண்டில் ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.357.18 கோடியாக அதிகரித்தது.

இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் வங்கி ஈட்டிய மொத்த வருவாய் ரூ.665.33 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.800.50 கோடியுடன் ஒப்பிடும்போது இது குறைவாகும்.

வட்டி வருவாய் ரூ.729.29 கோடியிலிருந்து சரிந்து ரூ.607.33 கோடியானது. கடந்த 2018-19 நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.132.31 கோடியாக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இது ரூ.357.18 கோடியாக அதிகரித்தது.

செப்டம்பா் காலாண்டு வரையில் வழங்கப்பட்ட கடன்களில் மொத்த வாராக் கடன் விகிதம் 12.31 சதவீதத்திலிருந்து அதிகரித்து 21.25 சதவீதமானது. ரூபாய் மதிப்பு அடிப்படையில் இது ரூ.2,964.89 கோடியிலிருந்து ரூ.4,091.05 கோடியானது. நிகர வாராக் கடன் விகிதமும் 6.88 சதவீதத்திலிருந்து (ரூ.1,560.08 கோடி) அதிகரித்து 10.47 சதவீதமானது (ரூ.1,772.66).

இரண்டாவது காலாண்டில் வாராக் கடன் இடா்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.146.05 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.303.07 கோடியைத் தொட்டது என லக்ஷ்மி விலாஸ் வங்கி தெரிவித்தது.

[…]

அசோக் லேலண்ட்
வர்த்தகம்

அசோக் லேலண்ட் லாபம் 92% வீழ்ச்சி

ஹிந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு லாபம் 92.61 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செபி-யிடம் கூறியுள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,929 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.7,621 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 48 சதவீதம் குறைவாகும். விற்பனையில் ஏற்பட்ட கணிசமான சரிவையடுத்து இந்த நிலை ஏற்பட்டது.

நிகர லாபம் ரூ.528 கோடியிலிருந்து 92.61 சதவீதம் சரிந்து ரூ.39 கோடியானது. நடப்பாண்டு தொடக்கத்தில் எடுக்கப்பட்ட செலவு குறைப்பு நடவடிக்கைகள் தற்போது பலன் தரத் தொடங்கியுள்ளதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

[…]

பிளாஸ்டிக்
வர்த்தகம்

இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி 6% குறைவு

சீனா மற்றும் பாகிஸ்தானுக்கான ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டதனால், நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பிளாஸ்டிக் ஏற்றுமதி 6 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடா்பாக கா்நாடக தலைநகா் பெங்களூரில் பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவா் ரவீஷ் கமத் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவின் ஏற்றுமதியில் பிளாஸ்டிக் 2.7 சதவீதமாக உள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் பிளாஸ்டிக் ஏற்றுமதி மதிப்பு ரூ. 3.27 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் இந்தியாவின் பிளாஸ்டிக் ஏற்றுமதி ரூ. 3.08 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் பிளாஸ்டிக் ஏற்றுமதி ரூ. 7.7 ஆயிரம் கோடியாக இருந்தது. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட 24 சதவீதம் அதிகம் ஆகும். ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் பிளாஸ்டிக் ஏற்றுமதி 6 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. சீனாவுக்கு அனுப்பும் பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் ஏற்றுமதியில் ஏற்பட்ட 19 சதவீத சரிவே மொத்த பிளாஸ்டிக் ஏற்றுமதி குறைவதற்கு காரணம். சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறும் வா்த்தக போரால், அடுத்த 6 மாதத்தில் பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் ஏற்றுமதி மேலும் குறைய வாய்ப்புள்ளது.

கடந்த நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் பாகிஸ்தானுக்கு ரூ. 10 கோடிக்கும் மேல் பிளாஸ்டிக் ஏற்றுமதி செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில் அது ரூ. 7 கோடியாக குறைந்துள்ளது.

காஷ்மீா் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்திய பிளாஸ்டிக் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று அவா் கூறினாா்.

[…]

பங்குச்சந்தை
வர்த்தகம்

மும்பை பங்குச்சந்தை சற்று இறங்குமுகத்துடன் வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சற்று இறக்கத்துடன், வர்த்தகத்தைத் தொடங்கியிருக்கின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று 40,684 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடித்த நிலையில், இன்று காலையில், 100 புள்ளிகள் குறைந்து, 40,584 புள்ளிகளுடன், வர்த்தகம் ஆரம்பமானது.

பின்னர் படிப்படியாக 200 புள்ளிகள் வரை குறைந்த, மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ், முற்பகல் 11.45 மணியளவில் சற்று எழுச்சி பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி நேற்று, 12 ஆயிரத்து 16 புள்ளிகளுடன் முடிவடைந்த நிலையில், இன்று, 29 புள்ளிகள் குறைந்த நிலையில், 11,987 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது.

இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 70 ரூபாய் 97 காசுகளாக இருந்த நிலையில், இன்று, 30 காசுகள் சரிந்து, 71 ரூபாய் 27 காசுகளாக உள்ளது.. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டுகளைவிட மிகவும் குறையும் என்பதால் இந்தியாவிற்கான ரேட்டிங்கை, சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான 'மூடிஸ்', குறைத்து கணித்திருப்பதால், பங்குச்சந்தையிலும், ரூபாய் மதிப்பிலும் சரிவு காணப்படுவதாக, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

[…]

எமிரேட்ஸ்
வர்த்தகம்

எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் லாபம் 3 மடங்கு உயர்வு

விமான எரிபொருள் விலை குறைந்ததால், எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் அரையாண்டு நிகர லாபம் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எமிரேட்ஸ் விமான நிறுவனம், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 2 கோடியே 35 லட்சம் டாலர் அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 282 சதவீதம் அதிகமாகும். அதே போன்று முதல் அரையாண்டில் 2 கோடியே 96 லட்சம் பயணிகள் எமிரேட்ஸ் விமானங்களில் பயணம் செய்துள்ளனர்.

இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 8 சதவீதம் உயர்வாகும். மொத்த வருவாய் 3 சதவீதம் குறைந்துள்ள போதிலும், விமான எரிபொருள் விலை குறைந்ததன் காரணமாக லாபம் அதிகரித்துள்ளதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

[…]

இன்போசிஸ்
வர்த்தகம்

சரிவர வேலை செய்யாத இன்போசிஸ் ஊழியர்கள் பலர் பணிநீக்கம்..?

இந்தியாவின் 2ஆவது மிகப்பெரிய சாப்ட்வேர் சேவை நிறுவனமான இன்போசிஸ் (infosys), பல்வேறு துறைகளிலும் சரியாக வேலை செய்யாத ஊழியர்கள் பலரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளில், இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி தவறானது என்று இன்போசிஸ் வட்டாரங்கள் மறுத்துள்ளன.

இதுகுறித்து ஐ.ஏ.என்.எஸ்.(ians) செய்தி நிறுவனத்துக்கு இன்போசிஸ் தரப்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சரிவர வேலை செய்யாத நபர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாகவே ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

மாருதி
வர்த்தகம்

பழைய வாகனங்களின் பாகங்களை மறுசுழற்சி செய்யும் நிலையங்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், பழைய வாகனங்களின் பாகங்களை மறுசுழற்சி செய்யும் பிரமாண்ட நிலையத்தை மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் இணைந்து அமைக்கவுள்ளன.

டொயோட்டாவின் கிளை நிறுவனமான டொயோட்டா சூசோ, பயன்படுத்த தகுதியற்ற பழைய வாகனங்களின் பாகங்களை பிரித்தெடுத்து அவற்றை மறு சுழற்சி செய்யும் நிலையங்களை ஜப்பானில் நடத்திவருகிறது.

இந்நிலையில் அதேபோன்ற நிலையங்களை இந்தியாவிலும் நிறுவ அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாருதி சுசுகி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில், முதற்கட்டமாக பிரமாண்ட நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது.

மாதத்திற்கு சுமார் 2000 வாகனங்களின் பாகங்களை பிரித்தெடுக்கும் வண்ணம் அமையவுள்ள இந்நிலையத்தில் சர்வதேச தொழில்நுட்பம் மற்றும்  தரத்துடன் வாகன பாகங்கள் மறுசுழற்சி செய்யப்படவுள்ளன.

[…]

சோழமண்டலம்
வர்த்தகம்

சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லாபம் ரூ.306 கோடி

முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த லாபமாக ரூ.306.94 கோடியை ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டில் ஈட்டிய லாபமான ரூ.298.74 கோடியுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம்.

ஜூலை-செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.1,702.43 கோடியிலிருந்து ரூ.2,212.48 கோடியாக அதிகரித்தது.

செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முதல் ஆறு மாத காலத்தில் வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.622.11 கோடியை நிறுவனம் ஈட்டியது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.579.36 கோடியாக இருந்தது. வருவாய் ரூ.3,345.69 கோடியிலிருந்து ரூ.4,257.76 கோடியாக அதிகரித்தது என சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

[…]

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி
வர்த்தகம்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி இழப்பு ரூ.2,254 கோடியாக அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் இழப்பு செப்டம்பா் காலாண்டில் ரூ.2,253.64 கோடியாக அதிகரித்தது.

இதுகுறித்து அந்த வங்கி செபியிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,024 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.5,348.35 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர இழப்பானது ரூ.487.26 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.342 கோடியாக குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில், செப்டம்பா் காலாண்டில் நிகர இழப்பானது ரூ.2,253.64 கோடியாக அதிகரித்தது.

இரண்டாவது காலாண்டில் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 24.73 சதவீதத்திலிருந்து (ரூ.37,109.96 கோடி), 20 சதவீதமாக (ரூ.28,673.95 கோடி) குறைந்துள்ளது.

அதேபோன்று, நிகர அளவிலான வாராக் கடன் விகிதமும் 14.34 சதவீதத்திலிருந்து (ரூ.18,876.05 கோடி), 9.84 சதவீதமாக (ரூ.12,507.97 கோடி) சரிந்துள்ளது.

இரண்டாவது காலாண்டில் வாராக் கடன் இடா்பாட்டுக்கான ஒதுக்கீட்டுத் தொகை ரூ.2,016.60 கோடியிலிருந்து ரூ.2,996.04 கோடியாக அதிகரித்தது என செபியிடம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

[…]

இண்டிகோ
வர்த்தகம்

இண்டிகோவின் சர்வர்கள் முடங்கியதால் பயணிகள் கடும் அவதி

இண்டிகோ விமான நிறுவனத்தின் சர்வர்கள் முடங்கியதால், விமான நிலையங்களில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் இண்டிகோ ஏர்லைன்சின் சர்வர்கள் இன்று காலை முடங்கின.

இதன் காரணமாக நாடு முழுவதும் அந்நிறுவனத்தின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டன. விமான நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மும்பையில், பிரதான நுழைவு வாயில் வரை பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இண்டிகோவின் விமான சேவைகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்நிறுவனம், பிரச்சனையை விரைவாக தீர்ப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ளது. 

[…]

சென்செக்ஸ்
வர்த்தகம்

சென்செக்ஸ் இன்று மேலும் ஒரு புதிய உச்சம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று மேலும் ஒரு புதிய உச்சம் தொட்டது.

பங்குச்சந்தைகளில் தொடர்ந்து ஏழாவது வர்த்தக நாளாக இன்றும் ஏற்றம் காணப்படுகிறது. இன்று காலை வர்த்தகத்தின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 318 புள்ளிகள் அளவுக்கு உயர்ந்து 40 ஆயிரத்து 483 புள்ளிகள அளவுக்கு உயர்ந்தது. இது, இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உயர்வாகும்.

கடந்த வாரத்தில் 40 ஆயிரத்து 412 புள்ளிகள் அளவுக்கு சென்செக்ஸ் உயர்ந்ததே அதிக அளவாக இருந்த நிலையில், இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி காலை வர்த்தகத்தின்போது 98 புள்ளிகள் அளவுக்கு அதிகரித்து 11,989 புள்ளிகள் வரை உயர்ந்தது.

எனவே நிஃப்டி 12 ஆயிரம் புள்ளிகளை தாண்டுமா என முதலீட்டாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலக அளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் முன்னேற்றம், உள்நாட்டில் கார்ப்பரேட் துறையில் காணப்படும் முன்னேற்றம் காரணமாக பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது.

[…]

அந்நியச் செலாவணி
வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பில் வரலாற்று உச்சம்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 44,258 கோடி டாலராக அதிகரித்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

அக்டோபா் 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 183 கோடி டாலா் (ரூ.12,810 கோடி) அதிகரித்து 44,258 கோடி டாலா் (ரூ.30.98 லட்சம் கோடி) என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதற்கு, முக்கிய கரன்ஸி சொத்துகள் மற்றும் தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பே காரணம்.

இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 104 கோடி டாலா் உயா்ந்து 44,075 கோடி டாலராக காணப்பட்டது.

கணக்கீட்டு வாரத்தில், கையிருப்பில் அதிக பங்களிப்பினைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்துகளின் மதிப்பு 164 கோடி டாலா் உயா்ந்து 41,045 கோடி டாலராக இருந்தது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 19 கோடி டாலா் அதிகரித்து 2,705 கோடி டாலராக காணப்பட்டது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 10 லட்சம் டாலா் உயா்ந்து 144 கோடி டாலராக இருந்தது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

[…]

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
வர்த்தகம்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா நிகர லாபம் ரூ.138 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இரண்டாவது காலாண்டில் ரூ.138.58 கோடியை நிகர லாபமாக ஈட்டியது.

இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.6,728.17 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.6,224.05 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கி ரூ.935.54 கோடி இழப்பைக் கண்டிருந்தது. ஆனால், நடப்பாண்டில் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரூ.121.61 கோடி லாபத்தையும், இரண்டாவது காலாண்டில் ரூ.138.58 கோடி லாபத்தையும் ஈட்டியது.

செப்டம்பா் இறுதி நிலவரப்படி மொத்த வாராக் கடன் விகிதம் 21.48 சதவீதத்திலிருந்து (ரூ.37,410.76 கோடி), 19.89 சதவீதமாக (ரூ.33,497.22 கோடி) குறைந்தது.

அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 10. 36 சதவீதத்திலிருந்து (ரூ.15,794.15 கோடி), 7.90 சதவீதமாக (ரூ.11,551.91 கோடி) சரிந்தது.

இதையடுத்து வாராக் கடன் இடா்பாடுகளை எதிா்கொள்ள ஒதுக்கீடு செய்யப்படும் தொகையும் ரூ.1,983.18 கோடியிலிருந்து ரூ.794.28 கோடியாக குறைந்தது என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

[…]

டாடா
வர்த்தகம்

டாடா அறக்கட்டளைகளின் பதிவுகள் ரத்து

டாடா நிறுவனத்துக்கு சொந்தமான அறக்கட்டளையின் கீழ் பதிவு செய்யப்பட்ட 6 அறக்கட்டளைகளின் பதிவுகளை வருமானவரித்துறை ரத்து செய்துள்ளது.

ஜாம்ஷெட்ஜி டாடா டிரஸ்ட், ஆர்.டி.டாடா டிரஸ்ட், டாடா கல்வி டிரஸ்ட், டாடா சமூக முன்னேற்ற டிரஸ்ட்,சர்வஜனிக் சேவா டிரஸ்ட் மற்றும் நவஜ்பால் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவை ரத்து செய்யப்பட்ட அறக்கட்டளைளாகும். கடந்த 2015ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளைகளைத் தொடங்குவதற்காக வருமானவரித்துறையிடம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது இந்த அறக்கட்டளைகளைத் தொடங்குவதில் விருப்பம் இல்லை என்றும் டாடா அறக்கட்டளை தெரிவித்து விட்டதால் அறக்கட்டளைகளின் பதிவுகளை வருமானவரித்துறை ரத்து செய்துள்ளது. டாடா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. 

[…]

டிரம்ப்
வர்த்தகம்

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு புதிய இடம் -அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முதல் சுற்று பேச்சுகள் தொடர்பான உடன்படிக்கயை கையெழுத்திட புதிய இடம் முடிவு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிலியில் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டுறவு மாநாடு நடைபெறுவதால் அதன் பின்னர் இந்த இடம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். சிலியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் புதிய இடத்தைத் தேர்வு செய்ய சீனாவுடன் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. 

[…]

இந்தியா
வர்த்தகம்

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 சதவீதத்திற்கும் குறைவுதானா-அமெரிக்க ஆய்வு

இந்தியாவின் வளர்ச்சி சாதகமானது அல்ல என்று அமெரிக்காவின் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

center for global development என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் இருவர் நடத்திய ஆய்வில், இந்தியாவின் வளர்ச்சி குறித்த தகவல்கள் எதிர்பாராத விதமாக மிகவும் மோசமான சூழலையே காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முக்கிய குறியீடுகள் பொருளாதார மந்த நிலையை மட்டுமல்ல, சரிவையே காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணெய் பொருட்கள் அல்லாத ஏற்றுமதி, உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான பொருள் உற்பத்தி போன்றவை மிகுந்த பின்னடைவை அடைந்திருப்பதாக ஜூலியன் டுகன், மற்றும் ஜஸ்டின் சன்டோபுர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மற்ற துறைகளின் வளர்ச்சியும் உலக வங்கி சுட்டிக்காட்டும் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பற்பசை விற்பனை மந்தமாகியுள்ளது. கார்களின் விற்பனை 11 மாதங்களாக சரிந்து வருகிறது. உள்ளாடை விற்பனைகளில் கூட சரிவு இருக்கிறது என்று அந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆடைகள் இல்லாத மன்னர் போலத்தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

[…]

சென்செக்ஸ்
வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 40 ஆயிரத்து 392 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இன்றைய வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 340 புள்ளிகள் அளவுக்கு அதிகரித்து, முதல்முறையாக 40 ஆயிரத்து 392 புள்ளிகளாக உயர்ந்தது. இருப்பினும் பின்னர் சரிந்து, வர்த்தக நேர இறுதியில் 40 ஆயிரத்து 129 புள்ளிகளில் நிலை கொண்டது. நேற்றைய வர்த்தக இறுதியுடன் ஒப்பிடும்போது இது 77 புள்ளிகள் அதிகமாகும்.

கடந்த ஜூன் 3ஆம் தேதி 40 ஆயிரத்து 268 புள்ளிகளில் சென்செக்ஸ் முடிவடைந்ததே, அதிகபட்ச உயர்வாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 37 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 881 புள்ளிகளில் நிலைகொண்டது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை வாங்கியது, மத்திய அரசு வரி விகிதங்களை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு போன்ற உள்நாட்டுக் காரணிகளாலும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பு போன்ற சர்வதேச காரணிகளாலும் பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது.

[…]

ஆப்பிள்
வர்த்தகம்

ஆப்பிள் நிறுவனத்தின் 4வது காலாண்டு நிதிநிலை முடிவு வெளியாகிறது

ஆப்பிள் நிறுவனத்தின் 4வது காலாண்டு முடிவு வெளியிடப்பட உள்ள நிலையில், எதிர்பார்த்த வருவாய் இலக்கை அந்த நிறுவனம் எட்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

4வது காலாண்டில் 6100 கோடி டாலர் முதல் 6400 கோடி டாலருக்குள் வருவாய் இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கணித்து இருந்தது. இந்த இலக்கை ஆப்பிள் நிறுவனம் எளிதாக எட்டிவிடும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மாடல், சந்தையில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது என்பதையும், நிதி நிலை முடிவு வெளிப்படுத்த இருக்கிறது. ஜேபி மோர்கன் என்ற ஆய்வு நிறுவனம், எதிர்பார்த்ததை விட ஐபோன் 11 விற்பனை அதிகமாகவே இருக்கும் என்று கணித்துள்ளது.

[…]

சென்செக்ஸ்
வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்..! முதலீட்டாளர்கள் உற்சாகம்

4 மாதங்களுக்குப் பின் சென்செக்ஸ் மீண்டும் 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டியதால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 220 புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 51 புள்ளிகளில் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 844 புள்ளிகளாக அதிகரித்தது. கடந்த 14 வர்த்தக தினங்களில் 11 நாட்கள் சென்செக்ஸ் 2500 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆதாயம் கிடைத்துள்ளது.

பெரு நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் சாதகமாக இருப்பது, பங்குகள் விற்பனை மூலம் கிடைக்கும் மூலதன ஆதாய வரியை சீரமைக்க மத்திய அரசு திட்டம் போன்ற செய்திகள் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரித்ததால் சந்தை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

[…]

பங்குச்சந்தை
வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பங்குகளை ஆர்வத்துடன் வாங்கியதால் வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 582 புள்ளிகள் உயர்ந்து, 39,832 புள்ளிகளாக அதிகரித்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 160 புள்ளிகள் அதிகரித்து 11,787 புள்ளிகளாக உயர்ந்தது.

வாகனங்கள் மற்றும் உலோகங்கள் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை 4 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

வட்டி நிர்ணயம் தொடர்பாக அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பு, நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் ஆகியவை இந்த வாரம் வர்த்தகத்தின் போக்கை தீர்மானிப்பதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரிய மாற்றம் ஏதுமின்றி 70 ரூபாய் 90 காசுகளாக உள்ளது. 

[…]

தங்கம்
வர்த்தகம்

தங்கம் விலை சரிவு..!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 168 ரூபாய் குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த கடந்த இரு மாதங்களாக தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

ஒரு கட்டத்தில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையானது. இந்நிலையில் சமீப காலமாக தங்கம் விலை குறைவதும் பின்னர் மீண்டும் உயர்வதுமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று காலையில் சவரனுக்கு 256 ரூபாய் சரிந்த தங்கம் விலை, பிற்பகலுக்கு மேல் சற்றே உயர்ந்தது. ஆனாலும் நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 168 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒருசவரன் 29 ஆயிரத்து 312 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 21 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு 60 காசுகள் வரை குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 49 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார்வெள்ளி ஒரு கிலோ 49 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

[…]

மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள்
வர்த்தகம்

தந்தேராஸ் பண்டிகையையொட்டி 600 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனை

தந்தேராஸ் பண்டிகையையொட்டி 600 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை காலங்களில் தந்தேராஸ் எனும் பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், தங்கம் உள்ளிட்ட புதிய பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு தந்தேராஸ் பண்டிகையையொட்டி, 600 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. குறிப்பாக டெல்லியில் மட்டும் சுமார் 250க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனையாகியுள்ளன.

அதேபோல, கையிருப்பில் உள்ள அனைத்து ஜி.எல்.வி எஸ்.யூ.வி (GLE SUV) ரக கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜி.எல்.வி எஸ்.யூ.வி ரக கார்கள், விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

[…]

அரசு
வர்த்தகம்

வருமான வரிச் சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு திட்டம்

வருமான வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 5 சதவீத வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. 5 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கான அதிகபட்ச வரி வரம்பு 42.74 சதவீதமாக உள்ளது.

தனிநபர் வருமான வரியில் சில சலுகைகளை அறிவிப்பதன் மூலம் நுகர்வை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆண்டுக்கு பத்துலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உடைய பிரிவினருக்கு சலுகைகளை அளிப்பதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது இப்பிரிவினர் 30 சதவீதம் வரி செலுத்தி வருகின்றனர்.

வீட்டு வாடகை வரம்பை உயர்த்துவது, வங்கி டெபாசிட்டுக்கான வரிவிதிப்பை தவிர்ப்பது போன்ற சலுகைகளை வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

[…]

இந்தியா
வர்த்தகம்

தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேற்றம்

ஜிஎஸ்டி நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகளின் 2020-ஆம் ஆண்டுக்கான பட்டியலை உலக வங்கி நேற்று வெளியிட்டது. இதில், 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு 63-ஆவது இடத்தை இந்தியா பிடித்தது.

இது தொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திவால் சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியதே இந்தப் பட்டியலில் இந்தியா முன்னேற்றமடைந்துள்ளதற்கு முக்கியக் காரணம் என்றார்.

சரக்கு-சேவை வரி நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளதாகவும், இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் தரவரிசையை மேலும் மேம்படுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்க மாநில அரசுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். 

[…]

பங்குச்சந்தை
வர்த்தகம்

6 நாட்கள் தொடர் ஏற்றத்துக்குப் பின் பங்குச்சந்தையில் சரிவு

6 நாட்கள் தொடர் ஏற்றத்துக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 334 புள்ளிகள் சரிந்து 38,963 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகள் சரிந்து 11,588 புள்ளிகளாக குறைந்தது. 2 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பது, பிரெக்சிட் விவகாரம் போன்ற காரணங்களால் சந்தை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அன்னிய செலாவணி சந்தையில் வர்த்தக நேர தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 காசுகள் அதிகரித்தது. வர்த்தக முடிவில் 18 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 96 காசுகளாக உயர்ந்தது.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை, சாதகமான கச்சா எண்ணெய் விலை போன்றவவையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

[…]

இன்ஃபோசிஸ்
வர்த்தகம்

புதிய சிக்கலில் இன்ஃபோசிஸ்?

இன்ஃபோசிஸ் சிஇஓ-வும், தலைமை நிதி அதிகாரியும் சேர்ந்து, லாபத்தை பெருக்கிக் காட்டுவதற்காக முறையற்ற வழிகளை கையாள்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டால் அந்நிறுவன பங்குகள் 16 சதவீதம் அளவுக்கு சரிந்தன.

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், உலகில் பல்வேறு நாடுகளில் கிளைபரப்பியுள்ளது. அந்நிறுவன ஊழியர்கள் சிலர், "நெறிசார்ந்த ஊழியர்கள்" என்ற பெயரில், இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுக்கும், அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்திற்கும் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், சிஇஓ சலில் பரேக்  மற்றும் சிஎஃப்ஓ நிலஞ்சன் ராய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். லாபத்தை பெருக்குவதற்கும், குறுகிய கால ஆதாயத்திற்காகவும் இருவரும் இணைந்து, கணக்குவழக்குகளில் முறையற்ற வழிகளை கையாள்வதாக அதில் புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை அளிக்க தயார் என்றும், இந்த புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த குழுவினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த புகார் குறித்து சுயேச்சையான விசாரணை நடத்தப்படும் என இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நிலகனி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் இன்ஃபோசிஸ் பங்குகள் 16 சதவீதம் அளவுக்கு சரிந்தன. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவைச் சந்தித்தன. மேலும் இந்த விவகாரம் நிறுவனத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தக்கூடும் என்றும், வர்த்தகத்தை பாதிக்கக்கூடும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப சேவைத்துறையில் இருபெரும் நிறுவனங்களாக உள்ள டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ், கடினமான வர்த்தக சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த புகார் எழுந்துள்ளது. இதனிடையே, இன்ஃபோசிஸ் சுயேச்சை இயக்குநர்களான சுந்தரம் மற்றும் பிரகலாத் ஆகியோரை, தமது உரையாடல்களில் மதராஸிகள் என சிஇஓ சலில் பரேக் கூறியதாகவும், இதேபோல மற்றொரு சுயேச்சை இயக்குநர் கிரண் மஜூம்தார் ஷா-வை குறிப்பிடும்போது "பெரிய மகாராணி என நினைத்துக் கொள்பவர்" என்றும் அவர் கூறியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. தென்னிந்தியாவை சேர்ந்தவர்களை மதிப்புக் குறைவாக குறிப்பிடும் வகையில் மதராஸி எனக் கூறும் வழக்கம் வடநாட்டவர்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

[…]

பஞ்சாப்
வர்த்தகம்

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியின் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை? வாடிக்கையாளர்கள் வேதனை

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கிகளில் பணம் முதலீடு செய்தவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக காட்சியளிக்கிறது.

அவசர மருத்துவம் மற்றும் கல்வி செலவுகளுக்குக் கூட தாங்கள் சேமித்த பணத்தை எடுக்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அண்மையில் டெல்லி மற்றும் மும்பை ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தினர்.

கிட்டதட்ட ஒருமாதமாகியும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால் பலர் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். மன உளைச்சல் மாரடைப்பு காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். சிறுக சிறுக சேமித்த பணம் அபகரிக்கப்பட்டு விட்டதாக வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொழிலதிபர்கள் சிலர் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் தர இயலவில்லை என புகார் அளித்துள்ளனர். வரிகள் மின்கட்டணம் செலுத்தவும் இயலாமல் காசோலைகள் திரும்பி விட்டதாக பலர் குமுறுகின்றனர்.

[…]

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
வர்த்தகம்

வங்கி ஊழியர்கள் சங்கங்கள் 22ம் தேதி வேலைநிறுத்தம்

வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிராக ஊழியர்கள் சங்கங்கள் வரும் 22ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக குறைக்கும் வகையில் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை 22ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் தங்களது வங்கிகளின் சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பேங்க் ஆப் மகாராஷ்டிரா, சிண்டிகேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா ஆகியவை தெரிவித்துள்ளன.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, இந்த 2 ஊழியர்கள் சங்கங்களிலும் தங்களது ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்றும், ஆதலால் பாரத ஸ்டேட் வங்கி சேவை பெரிய அளவில் பாதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

[…]

TCS ஊழியர்கள்
வர்த்தகம்

TCS ஊழியர்கள் சம்பளத்தில் மாற்றம்

லாபத்தை அதிகரித்து, சம்பள செலவினத்தை குறைக்கும் நோக்கில் டாடா கன்சல்டன்சி நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பள கட்டமைப்பில் மாற்றம் செய்து வருகிறது.

அதன்படி டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் கொண்ட இளம்பொறியாளர்களை அதிகளவில் வேலைக்கு அமர்த்தவும், ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்று பணியில் சிறப்பாக செயல்படும் அனுபவமிக்க ஊழியர்களின் ஊக்கத்தொகையை அதிகரித்து வழங்கவும் முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாது ஒப்பந்த செலவினங்களை குறைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்  தற்காலிக ஊழியர்களுக்கு பதில் முழு நேர பணியாளர்களை அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

அதனுடன் நடப்பாண்டு கூடுதலாக 26,453 ஊழியர்களை பணி நியமனம் செய்தது போல், அடுத்தாண்டும் முதல் 6 மாதங்களில் அதே எண்ணிக்கையில் புதிதாக ஊழியர்களை நியமனம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் வேலை இல்லா நிலை உருவாகாது எனவும், நிறுவனமும் புத்துணர்ச்சி பெற்று புதுப்பொலிவுடன் இருக்கும் எனவும் டிசிஎஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

ஜான்சன் அண்ட் ஜான்சன்
வர்த்தகம்

ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ்

ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதை அமெரிக்க அரசு கண்டுபிடித்ததை அடுத்து, 33 ஆயிரம் பவுடர் டின்களை அந்நிறுவனம் திரும்ப  பெற்றுள்ளது.

130 ஆண்டுகள் பழமையான, அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன், அதன் பல்வேறு தயாரிப்புகள் தொடர்பாக ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. அதன் பேபி பவுடர் உள்ளிட்ட டால்கம் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்பட்டதாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளை நுகர்வோர் தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இருப்பதை, அமெரிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது. ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட பவுடர் டின்னில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு தொகுப்பில் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இருந்ததை உறுதிப்படுத்தியுள்ள மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மற்றொரு தொகுப்பில் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இல்லை என தெரிவித்துள்ளது. எனவே, குறிப்பிட்ட அந்த தொகுப்பில் இருந்த ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரை நுகர்வோர் பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரித்தது.

இந்நிலையில், 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு அனுப்பப்பட்டு ஒரு தொகுப்பு பேபி பவுடர்களை, அதாவது 33 ஆயிரம் பவுடர் டின்களை மட்டும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னர் கூட, அமெரிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் நடத்திய சோதனையில் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இருப்பதாக கண்டறியப்படவில்லை என்றும், புதிய சோதனை முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அந்நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்தித்தன.

[…]

ரிலையன்ஸ்
வர்த்தகம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புதிய சாதனை

பங்குகள் விலை அடிப்படையிலான சந்தை மூலதன மதிப்பில் 9 லட்சம் கோடி ரூபாயை தாண்டி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய சாதனை படைத்துள்ளது.

பங்குச்சந்தையில் இன்று முற்பகல் நிலவரப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து தலா ஆயிரத்து 428 ரூபாய்க்கு விற்பனையாகின. இதனால் அந்நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பும் 9 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.

நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை முன்னிட்டு பங்கு விலைகள் அதிகரித்தன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 8 லட்சம் கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்தது. தற்போது 9 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய முதல் நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் படைத்துள்ளது.

[…]

நிர்மலா சீதாராமன்
வர்த்தகம்

இந்தியா இப்போதும் வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது-நிர்மலா சீதாராமன்

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐஎம்எஃப் மற்றும் உலக வங்கி வருடாந்திர கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக, நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் பேசிய அவர், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

சில அம்சங்களில் உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். பாதகமான சூழ்நிலைகளில் கூட இந்திய பொருளாதாரத்தின் ஆற்றலை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

கவலைப்பட்டுக் கொண்டிருப்பதைவிட தொழிற்துறையினரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அதிக கவனம் செலுத்துவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார். தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு அப்படி ஏதேனும் இருந்தால் தெரிவிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

[…]

சந்தை
வர்த்தகம்

இந்திய சில்லறை சந்தை மதிப்பு வளர்ச்சியடையும் என கணிப்பு

இந்தியாவின் சில்லறை விற்பனை சந்தை மதிப்பு, வருகிற 2021ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி டாலர்களாக உயரும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தக கூட்டமைப்பின், சேவை மற்றும் தணிக்கை அமைப்பான ஃபிக்கி-டெலாய்ட் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 2026ஆம் ஆண்டு, இந்திய சில்லறை விற்பனை சந்தையின் மதிப்பு, ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி டாலர்களாக இருக்கும் என்றும், ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று, நாட்டின், மின்னணு வணிகச் சந்தையின் மதிப்பு, வருகிற 2021ஆம் ஆண்டில், 8 ஆயிரத்து 400 கோடி டாலர்களாக இருக்கும் என்றும், அதுவே, 2026ஆம் ஆண்டில், மின்னணு வணிகச் சந்தையின் மதிப்பு, 20 ஆயிரம் கோடி டாலர்களாக உயரும் என்றும், ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனை சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகம் என்றும் அழைக்கப்படும், மின்னணு வணிக சந்தையின் ஆகியனவற்றின் வளர்ச்சி, பெரிய நகரங்கள், மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாது, சிறு, குறு நகரங்களில், நன்றாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் வணிக சந்தைகளின் நுகர்வோரின் எண்ணிக்கை தற்போது, 15 விழுக்காடு என்ற அளவில் உள்ளதாகவும், அதுவே, வருகிற 2026ஆம் ஆண்டில், 50 விழுக்காடு என்ற அளவிற்கு உயரும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

[…]

இந்தியா
வர்த்தகம்

இந்தியாதான், முதலீட்டாளர்களுக்கு உலகிலேயே சிறந்த நாடு - நிர்மலா சீதாராமன்

ஜனநாயகத்தை நேசிக்கும், முதலாளித்துவத்தை மதிக்கும் இந்தியாதான், முதலீட்டாளர்களுக்கு உலகிலேயே சிறந்த நாடு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் ஐஎம்எஃப் தலைமையகத்தில், இந்திய தொழிற்துறை கூட்டமைப்பான ஃபிக்கியும், அமெரிக்க-இந்திய கூட்டுறவு மன்றமும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, தொடர்ச்சியாக செய்யப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றுடன் ஆற்றல்மிக்க மனிதவளத்தை கொண்ட இந்தியா, தற்போதும் மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தை நேசிப்பது, முதலாளித்துவத்தை மதிப்பது என்ற சிறந்த சூழலை இந்தியா வழங்குவதாகவும், நீதிமன்ற முறைகளில் சிறிது தாமதம் இருந்தாலும், வெளிப்படையான முறைகள் பின்பற்றப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஜூலையில் பட்ஜெட் தாக்கல் செய்தாலும், அடுத்த பட்ஜெட் வரும் பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படும் வரை காத்திராமல், நெருக்கடியில் உள்ள துறைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை 10 நாள் இடைவெளிகளில் தொடர்ச்சியாக மேற்கொண்டதாகக் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். 

[…]

நிதின்
வர்த்தகம்

அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்கள் விலை மிகவும் குறையும் - நிதின் கட்காரி

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்குப் பதில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மாறுவதற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு காலவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மின்சார பைக்கை அறிமுகம் செய்த பின் பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என்பதால், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களைப் போன்று விலையும் மிக குறைவானதாக இருக்கும் என்றார்.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதும் குறையும் என்பதால், புரட்சிகரமான இந்த இயக்கத்தை தவறவிட்டு விடக் கூடாது என்றும் நிதின் கட்காரி குறிப்பிட்டார்.

[…]

பிக்சல் 4 ஸ்மார்ட்போன்களை
வர்த்தகம்

ரேடார் சென்சார் கருவியுடன் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ரேடார் சென்சார் கருவியுடன் கூடிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL ஸ்மார்ட் போன்கள் நியூயார்க்கில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

மிக மெலிதான வடிவமைப்புடன், சைகை மூலம் இயங்கும் வசதி கொண்ட இந்த செல்போன்களில், ரேடார் சென்சார் கருவிகள், கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் உயர் தர கேமரா வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

அறிமுக நிகழ்ச்சியில் புதிதாக நடுத்தர விலையில் உருவாக்கப்பட்டுள்ள Pixelbook Go laptop, வயர்லெஸ் இயர்பட்ஸ், வைபை ரூட்டர், பர்கர் அளவிலான ஸ்பீக்கர் ஆகியவற்றையும் நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட செல்போன்களின் விலை 57 ஆயிரம் ரூபாயிலிருந்து துவங்குகிறது.

[…]

டிரம்ப்
வர்த்தகம்

பொருளாதாரத்தை அழித்து விடுவோம் - துருக்கியை மிரட்டும் அமெரிக்கா

சிரியாவில் குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தும் துருக்கி அரசு மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் பொருளாதாரத்தை துரிதமாக அழிக்கப்போவதாக சூளுரைத்துள்ளார்.  

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடிய குர்து இனப் போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள் தங்கள் நாட்டிலும், எல்லையிலும் இருப்பதை துருக்கி அதிபர் டயீப் எர்டோகன் ஆபத்தாக கருதுவதே தாக்குதலுக்குக் காரணமாகியுள்ளது.

ஐந்து நாட்களுக்கும் மேலாக குர்துக்கள் மீது துருக்கியின் தாக்குதல் தொடர்கிறது- இதனிடையே சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் குர்துக்குள் அமெரிக்காவிற்கு உதவியாக இருந்தனர். இதனால் தற்போது குர்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியுள்ளது- அதன்படி, துருக்கி மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொருளாதார தடை விதித்துள்ளார்.

துருக்கியில் இருந்து இறக்குமதியாகும் எஃகு மீது 50 விழுக்காடு வரை கூடுதலாக வரி விதித்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அந்நாட்டுடனான 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவிலும் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் (Hulusi Akar), உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு (Suleyman Soylu), எரிசக்தி துறை அமைச்சர் ஃபாதி டான்மெஸ் (Fatih Donmez) 
ஆகியோரும் பொருளாதார தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

துருக்கி மீதான பொருளாதார தடையை அமல்படுத்துவது தொடர்பான அதிகாரம் அமெரிக்காவின் கருவூலத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. துருக்கி மீதான பொருளாதார தடை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், குர்துக்கள் மீதான ராணுவத் தாக்குதலால், குடிமக்களின் உயிர்களுக்கும், அமைதி மற்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

குர்துக்கள் மீதான தாக்குதலை துருக்கி அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் அந்நாட்டின் பொருளாதாரத்தை வெகுவிரைவாக அழிப்பதை தவிர வேறு வழியில்லை என்று டிரம்ப் சூளுரைத்துள்ளார்.

[…]

உலக வங்கி கணிப்பு
வர்த்தகம்

நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக சரியும் - உலக வங்கி கணிப்பு

டப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 விழுக்காடாக  குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இதன் காரணமாக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது.

ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச பண நிதியத்துடனான ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு, நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், 2017 - 2018 நிதி ஆண்டில் 7.2 விழுக்காடாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, 2018 - 19 நிதி ஆண்டில் 6.9 விழுக்காடாக குறைந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டான 2019 - 2020-ல் இது 6 விழுக்காடாகச் சரியும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

சென்ற நிதி ஆண்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 விழுக்காடாக அதிகரித்து இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நுகர்வு மந்தமாக இருந்ததாகவும், தொழில் மற்றும் சேவைகள் வழங்கல் துறையின் வளர்ச்சி வேகம் குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வரிச்சலுகைகள், கடன் வழங்கல் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளால் 2021ஆம் ஆண்டில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.9 விழுக்காட்டை அடையும் என்றும், 2022ஆம் ஆண்டில் 7.2 விழுக்காடாக உயரும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது. 

இதனிடையே மத்திய நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீத்தாராமன், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில் ஏற்கெனவே ஐந்து கட்டமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம், மற்றும் மத்திய நிதி அமைச்சகம் இடையே தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஊக்கத் தொகுப்புகள் குறித்து இதர அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முறை, பொருட்களை வாங்குவதற்கு மக்களை தூண்டும் வகையிலும், தேவையை அதிகரிக்கச் செய்யும் வகையிலும் அறிவிப்புகளை வெளியிடுவது பற்றி ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரியைக் குறைப்பது, வீடு மற்றும் வாகனங்களுக்கான இ.எம்.ஐ.யைக் குறைக்க வங்கிகளை அறிவுறுத்துவது, போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாகவும், நிதியைப் பொறுத்து மேலும் சில அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

[…]

வாகனங்கள் விற்பனை
வர்த்தகம்

தொடர்ந்து 11ஆவது மாதமாக வாகனங்கள் விற்பனையில் சரிவு

கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த மாதத்தில் 24 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. கார்களின் விற்பனை 33.4 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து 11ஆவது மாதமாக வாகனங்கள் விற்பனை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 660 பயணிகள் வாகனங்கள் விற்றன.

ஆனால் இந்த ஆண்டு செப்டம்பரில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 317 பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது 23.69 சதவீதம் அளவுக்கு சரிவாகும். கார்கள் விற்பனையை மட்டும் எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டு செப்டம்பரில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 124 கார்கள் விற்பனையாகியிருந்தன.

ஆனால் இந்த ஆண்டு  செப்டம்பரில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 281 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது 33.4 சதவீதம் சரிவு ஆகும். இதேபோல பைக்குகள் விற்பனை 23.29 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 13 லட்சத்து 60 ஆயிரத்து 415 பைக்குகள் விற்ற நிலையில், இந்த ஆண்டு செப்டம்பரில் 10 லட்சத்து 43 ஆயிரத்து 624 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக இருசக்கர வாகன விற்பனை செப்டம்பரில் 22.09 சதவீதம் குறைந்துள்ளது.

சரக்கு வாகனங்கள் விற்பனை 39.06 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 95 ஆயிரத்து 870 சரக்கு வாகனங்கள் விற்ற நிலையில், கடந்த செப்டம்பரில் 58 ஆயிரத்து 419 சரக்கு வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன.

பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் என ஒட்டுமொத்த வாகனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், கடந்த செப்டம்பரில் விற்பனை 22.41 சதவீதம் அளவுக்கு விற்பனை குறைந்துள்ளது. இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள வாகன உற்பத்தித் துறையினருடன் கலந்துரையாடி வருவதாகவும்,  ஏற்கெனவே அவர்கள் 2 முறை டெல்லியில் தம்மை சந்தித்திருப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

வாகன உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, நுகர்வோர் மத்தியில் தேவை இன்னும் அதிகரிக்கத் தொடங்கவில்லை என்று கூறியுள்ள நிர்மலா சீதாராமன், அந்த துறையினர் எப்போதும் தம்மை தொடர்புகொண்டு பேசலாம் என தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், Maruti Suzuki Vitara Brezza and Hyundai Creta போன்ற எஸ்யுவி ரக கார்கள் தள்ளுபடி விலையில் விற்கப்படுவதால், யுவி ரக வாகனங்கள் விற்பனை 5.49 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 77 ஆயிரத்து 380 யுவி ரக வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டு செப்டம்பரில் 81 ஆயிரத்து 625 யுவி ரக வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு எஸ்யுவி ரக கார்கள் விற்பனை ஏறுமுகமாக உள்ளது.

[…]

தேசிய பங்குச் சந்தை
வர்த்தகம்

தேசிய பங்குச்சந்தை முறைகேடு தொடர்பான வழக்கு - பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய பங்குச் சந்தை முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு மீது நவம்பர் 11ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேசிய பங்குச் சந்தை, செபி (SEBI), சிபிஐ, அமலாக்கப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தையில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை, குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சட்டவிரோதமாக பெறுவதற்கு தேசிய பங்குச் சந்தை அதிகாரிகள் அனுமதியளித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி-க்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரை விசாரித்த செபி, தேசிய பங்குச் சந்தைக்கு சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதித்தது. மேலும், புதிய பங்குகளை அறிமுகம் செய்யவும் தடை விதித்தது. இது தொடர்பாக செபி மட்டுமின்றி, சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஆனால், நாட்டிலேயே மிகப்பெரிய முறைகேடாக கருதப்படும் பங்குச்சந்தை முறைகேட்டை முழுமையாக வெளிக்கொண்டு வர செபி-யும், சிபிஐ-யும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை நிதிச் சந்தை மற்றும் பொறுப்புடைமை 

என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த முறைகேட்டினால், பல நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷாயி அடங்கிய அமர்வு, மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை, செபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, தேசிய பங்குச் சந்தை ஆகியவை நவம்பர் 11ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

[…]

ஜான்சன் அண்ட் ஜான்சன்
வர்த்தகம்

ஜான்சன் அன்ட் ஜான்சனுக்கு அபராதம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று 56 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத் தயாரிப்புகள் அவ்வப்போது வழக்குகளில் சிக்கி வருகின்றன. அந்த வகையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத் தயாரிப்பான ரிஸ்பெரிடால் என்ற மருந்து மன அழுத்தம், மன இறுக்கம் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண பயன்படுத்தப்படுகிறது.

இந்த மருந்தின் பக்க விளைவாக தனது உடலில் மாற்றம் ஏற்பட்டதாக நிகோல முர்ரே என்பவர் பிலடெல்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. ஆனால் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், ரிஸ்பெரிடால் மருந்து தொடர்பான தங்கள் தரப்பு ஆதாரங்களை நிதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

[…]

வட்டி
வர்த்தகம்

வட்டிகள் குறைப்பு-மூத்த குடிமக்களை பாதிக்குமா?

பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்தில் இருந்து 6 புள்ளி 9 சதவீதமாக குறைத்துவிட்டது.

ஓய்வு பெற்ற மற்றும் வயது முதிர்ந்த பலர் வங்கிகள் தரும் வட்டியில்தான் தங்கள் வாழ்வாதாரமாக கருதுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் ஒரு லட்சத்திற்கான முதலீட்டிற்கு வட்டிவிகிதத்தை 3புள்ளி 50 ல் இருந்து 3 புள்ளி 25 ஆக மாற்றி, கால் சதவீதம் குறைத்துள்ள நிலையில் இதர வங்கிகளும் இதனை பின்பற்ற உள்ளன.

கூடுதல் வட்டிக்காக மூத்த குடிமக்கள் இனி பங்குச்சந்தை போன்ற வெளி முதலீடுகளை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நாட்டில் தற்போது நான்கு கோடிக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் உள்ளனர். அவர்களின் கணக்குகளில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.வட்டி விகிதம் குறையும் போது இத்தொகை முழுவதுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் வட்டி விகிதங்கள் குறைந்துள்ள நிலையில், மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

வட்டி விகிதம் 6 சதவீதத்திற்கும் கீழாக போகும் போது வட்டியை நம்பி வாழும் மூத்த குடிமக்களிடம் அது சமூக ரீதியான அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் மல்லிகார்ஜூன ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

8 சதவீத வட்டிக்கு பழகியிருக்கும் மூத்த குடிமக்கள் தற்போது 6 முதல் 7 சதவீத வட்டிக்கு தள்ளப்பட்டுள்ளனர். பணவீக்கம் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதையும் வங்கி அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

[…]

 ஜியோ
வர்த்தகம்

பிற தொலைபேசி அழைப்புகளுக்கு 6 காசுகள் கட்டணம் - ஜியோ அறிவிப்பு

செல்போன் அழைப்புகள் இனிமேல் இலவசம் இல்லை என்றும், நிமிடத்திற்கு 6 காசுகள் வசூலிக்கப்படும் என்றும் ஜியோ நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், இதுவரை ஜியோ வாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்தின் செல்போன் எண்ணுடன் தொடர்பு கொண்டு பேசினாலும் அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிமுறைப்படி, இதர செல்போன் நிறுவனங்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 6 காசுகள் வீதம் இடைத்தொடர்பு கட்டணம் வழங்க வேண்டும் என்றும், இந்த வகையில் ஐடியா, வோடபோன், ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஜியோ 13,500 கோடி ரூபாயை கட்டணமாக வழங்கி உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தின் செல்போன் இணைப்பில் இருந்து மற்றொரு செல்போன் இணைப்பை தொடர்பு கொள்ளும் போது வசூலிக்கப்படும் கட்டணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வரும் என்று முன்னர் கூறிய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இப்போது, கட்டண முறை நீட்டிக்கப்படும் என்று கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் வேறு நிறுவன செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினால், நிமிடத்திற்கு 6 காசுகள் என்ற வீதத்தில் இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இன்று முதல் ரீசார்ஜ் செய்யும் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் இந்த கட்டண முறை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜியோ எண்ணில் இருந்து மற்றொரு ஜியோ எண்ணை தொடர்பு கொண்டால் கட்டணம் எதுவும் கிடையாது என்றும், வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு இணையாக டேட்டா வழங்கப்படும் என்பதால் வாடிக்கையாளர்களின் இழப்பு ஈடுகட்டப்படும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

[…]

இந்தியா
வர்த்தகம்

உலக பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு எண் பட்டியலில் 10 இடங்கள் பின்தங்கிய இந்தியா

உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு எண் பட்டியலில், கடந்தாண்டை விட, இம்முறை, இந்தியா, 10 இடங்கள் பின்தங்கியுள்ளது.

ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட உலக பொருளாதார அமைப்பு, ஆண்டுதோறும், GCI என சுருங்க அழைக்கப்படும், உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீடு எண் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த அறிக்கை, உலக நாடுகளின் பொருளாதரக் கட்டமைப்பை மதிப்பிடுவதில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வகையில், இந்தாண்டுக்கான, உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டு எண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், கடந்தாண்டு, சற்று பின்தங்கியிருந்த சிங்கப்பூர், இந்தாண்டு, 84 புள்ளி 8 புள்ளிகளுடன், முதலிடத்தை, தனதாக்கிக் கொண்டுள்ளது.

83 புள்ளி 7 புள்ளிகளுடன் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஹாங்காங், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகியவை, முறையே, மூன்று, நான்கு, ஐந்தாம் இடங்களை பிடித்துள்ளன.

ஜப்பான், ஜெர்மனி, சுவீடன், இங்கிலாந்து, டென்மார்க் ஆகியவை, அடுத்தடுத்த இடங்களை தனதாக்கிக் கொண்டுள்ளன.

62 புள்ளிகளுடன் கடந்தாண்டு 58ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இம்முறை, 61 புள்ளி 4 புள்ளிகளுடன், 10 இடங்கள் சரிந்து, 68ஆவது இடத்தில் உள்ளது.

ஒரு நாட்டின், பொதுத்துறை, தொழிலாளர் சக்தி, பன்முகத்தன்மை மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, உலக பொருளாதாரா போட்டித்திறன் குறியீட்டு எண் கணக்கிடப்படுகிறது.

[…]

 நானோ கார்
வர்த்தகம்

9 மாதங்களில் ஒரே ஒரு டாடா நானோ கார் விற்பனை

டாடா நிறுவனத்தின் மலிவு விலை காரான நானோ கடந்த 9 மாதங்களில் ஒரே ஒரு கார் தான் விற்பனையாகியுள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடாவின் கனவுத் திட்டமென்று கூறப்பட்ட அந்நிறுவனத்தின் மலிவு விலை காரான நானோ அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் நானோ காரின் விலை 1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் காரில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர் புகார்கள் அளித்ததையடுத்து, காரின் விற்பனையில் மந்த நிலை தொடங்கியது.

அதேபோல் டாடா நிறுவனத் தலைவராக இருந்த மிஸ்திரி, நானோ கார் உற்பத்தியின் மூலம் 1000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் பெருமைக்காக கார் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்த நிலையில், அவர் அந்த பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனையாகியுள்ளது. நானோ கார் உற்பத்திக்கு இனிமேல் முதலீடு செய்வதாக இல்லை என்றும் காரின் விற்பனை ஏப்ரல் 2020 உடன் முழுவதுமாக நிறுத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்திருந்தாலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன.

[…]

மாருதி நிறுவனம்
வர்த்தகம்

தொடந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்த மாருதி நிறுவனம்

மாருதி நிறுவனம் தொடந்து 8வது மாதமாக தனது வாகன உற்பத்தியை 17.48 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ளது.

மாருதி நிறுவன கார்களின் உற்பத்தி கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 17.37 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது. 2018 செப்டம்பரில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 659 என்ற அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்ட மாருதி நிறுவன கார்கள், கடந்த செப்டரில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 264 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஆல்டோ, வேகன் ஆர், செலரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலேனோ, டிசையர் உள்ளிட்ட சிறிய ரக கார்களின் உற்பத்தி, 98 ஆயிரத்து 337 ஆக குறைந்துள்ளது.

இதே ரக கார்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 576 என்ற அளவில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டின் உற்பத்தி 14.91 சதவீதம் குறைந்துள்ளது. அதே போல் பெரிய ரக கார்களான விடாரா ப்ரீசா, எர்டிகா மற்றும் எஸ்- கிராஸ் மாடல் கார்களின் உற்பத்தியும் 17.05 சதவீதம் குறைந்துள்ளது.

நடுத்தர அளவுடைய சிடன் சியஸ் உள்ளிட்ட கார்களோ கடந்த ஆண்டில் 22 ஆயிரத்து 226 என்ற அளவில் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு செப்டம்பரில் 18 ஆயிரத்து 435 என்ற அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

மொத்தமாக மாருதி நிறுவனத்தின் அனைத்து ரக வாகனங்களின் உற்பத்தியும், 17.48 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. மாருதியை போலவே டாட்டா மோட்டார்ஸ், மகிந்திரா, ஹூண்டாய், டொயோட்டா, ஹோண்டா என அனைத்து நிறுவனங்களின் கார் உற்பத்தியும் ஈரிலக்க சதவீதங்களில் குறைந்துள்ளது.

[…]

பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர்
வர்த்தகம்

இந்தியா - அமெரிக்கா இடையே இன்னும் சில வாரங்களில் வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா - அமெரிக்கா இடையே இன்னும் சில வாரங்களில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

இந்தியா - அமெரிக்கா இடையே, பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி, வரிவிதிப்பு தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் கிடையாது. எனவே தான் வரிவிதிப்பு தொடர்பாக இருநாடுகள் இடையே பூசல் இருந்து வருகிறது. ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியா 100 விழுக்காடு வரிவிதிப்பதாகக் குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு வழங்கி வந்த முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்தார்.

இதன் மூலம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான வரிச்சலுகை ரத்தானது. பூசல்கள் நீடிக்கும் அதேவேளையில், வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதில் இருநாடுகளும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், ஒப்பந்தம் இறுதியாவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருநாடுகள் இடையே அதிக அளவிலான பொருட்களை வர்த்தகம் செய்து கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்லி டேவிட்சன் பைக்குகள் போன்றவற்றின் மீதான வரியைக் குறைக்க இந்தியா தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் இதய ஸ்டெண்ட், கால் மூட்டு மாற்று உபகரணங்கள் ஆகிய பொருட்களுக்கான வரிவிதிப்புடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னுரிமை வர்த்தக நாடு என்ற அந்தஸ்துடன், இந்தியப் பொருட்களுக்கு மீண்டும் வரிச்சலுகை அளிக்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மாம்பழம், மாதுளைக்கு அமெரிக்கச் சந்தையில் எளிய அணுகுமுறை வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது, தகவல் தொழில்நுட்பம், மின்னணு வர்த்தகம், தரவுப் பாதுகாப்பு, அறிவுசார் உரிமைகள் ஆகியவை தொடர்பாக தனித்தனியாக பேசி தீர்க்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான அடுத்த சந்திப்பின் போது, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகளைச் சேர்ந்த வர்த்தக அமைச்சர்கள் கூட்டாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

[…]

அசோக் லேலண்ட்
வர்த்தகம்

15 நாட்கள் வரை உற்பத்தியில்லா நாட்கள் - அசோக் லேலண்ட்

இந்த மாதத்தில், 2 நாட்கள் முதல்15 நாட்கள் வரை உற்பத்தியை நிறுத்தி வைக்க அசோக் லேலண்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்த காரணத்தால், ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை நிலவுகிறது. இதன் காரணமாக, ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் உற்பத்தியில்லா நாட்களை அறிவிப்பது வழக்கமாகி வருகிறது.

தேவைக்கேற்ப உற்பத்தி செய்வதென ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முடிவு செய்து, குறிப்பிட்ட சில நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தி வைக்கின்றன. அந்த வகையில் சரக்கு வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் கடந்த மாதத்தில் 18 நாட்கள் வரை உற்பத்தியை நிறுத்தியது.

அதிகபட்சமாக உத்தரகாண்டின் பண்ட்நகரில் உள்ள ஆலையில் 18 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட், எண்ணூர், ஓசூர், ராஜஸ்தான் மாநிலம் அல்வார், மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளிலும் உற்பத்தியில்லா நாட்களை அறிவித்து இருந்தது.

அதேபோல இந்த மாதத்திலும் கணிசமாக உற்பத்தியில்லா நாட்களை அறிவிக்க அசோக் லேலண்ட் முடிவு செய்துள்ளது. பல்வேறு இடங்களில் உள்ள ஆலைகளில் 2 முதல் 15 நாட்கள் வரை உற்பத்தியை நிறுத்தி வைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

[…]

கூட்டுறவு வங்கி
வர்த்தகம்

கூட்டுறவு வங்கியில் தினமும் ரூ.10,000 வரை எடுக்க அனுமதி

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ்வங்கி தளர்த்தியுள்ளது. அந்த வங்கியின் நிதி நிலையை மேம்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நாளொன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றும் 60 சதவீத வாடிக்கையாளர்கள் முழுப்பணத்தையும் எடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதையடுத்து பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மும்பையில் உள்ள வங்கிகளின் கிளைகளிலும் ஏடிஎம் மையங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து சென்றனர். இதனிடையே வங்கி ஊழியர்கள் வங்கி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிறுவனத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

[…]

தங்கத்தின் விலை
வர்த்தகம்

நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு

நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

 கடந்த மாதம் கிடு கிடு வென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை ஒரு கட்டத்தில், சவரன் 30 ஆயிரம் ரூபாயைக் கடந்து விற்பனையானது. வரலாறு காணாத விலையேற்றத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலை அடைந்தனர்.

இதையடுத்து தங்கம் விலை மீண்டும் 29 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே சரிந்தது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைவதும், பின்னர் மீண்டும் உயர்வதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு 368 ரூபாய் வரை குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 160 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்துக்கு 928 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 20 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்து 616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 49 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 600 ரூபாய் குறைந்து 49 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

[…]

இந்திய பங்குச்சந்தை
வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி

மத்திய நிதி அமைச்சரின் வரி சலுகை அறிவிப்பின் எதிரொலியாக இரண்டாவது வர்த்தக தினத்திலும் இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி நிலவியதால், முதலீட்டாளர்களுக்கு பத்தரை லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்துள்ளது.

பொருளாதார மந்த நிலையில் இருந்து இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக கடந்த வெள்ளிக்கிழமை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்பரேட் வரி விகிதத்தை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி சலுகைகளை அறிவித்தார்.

மேலும் ஹோட்டல் அறை வாடகை கட்டணத்திலும் ஜிஎஸ்டி கவுன்சில் சலுகைகளை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக மும்பை பங்குச்சந்தை  குறியீட்டு எண் சென்செக்ஸ் 1921 புள்ளிகள் அதிகரித்து புதிய உச்சசத்தை தொட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய வர்த்தக தினத்திலும் சென்செக்ஸ் 1075 புள்ளிகள் அதிகரித்து, 39 ஆயிரத்து 90 புள்ளிகளில் நிலைகொண்டது. இது கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத உயர்வாவாக பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தது.

அதன் பலனாக தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 326 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 600 புள்ளிகளில் நிலை பெற்றது. அதாவது கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 2996 புள்ளிகள் உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு பத்தரை லட்சம் கோடி ரூபாய் ஆதாயம் கிடைத்துள்ளது. 

[…]

மோசமாகியுள்ள உள்நாட்டு கார் விற்பனை
வர்த்தகம்

உள்நாட்டு கார் விற்பனை 41 சதவீதம் சரிவு..!

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், மோசமாகியுள்ள உள்நாட்டு கார் விற்பனை, தொடர்ந்து 10வது மாதமாக சரிந்துள்ள நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் கார் விற்பனை 41 விழுக்காடு அளவுக்கு குறைந்து விட்டது.

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறை மந்த நிலையை சந்தித்துள்ளது. தேவை குறைந்த காரணத்தால் கார்கள் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. மாருதி சுசுகி, ஹூண்டாய் மோட்டார், ஹோண்டா, டாட்டா, ஆகிய நிறுவனங்களின், பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களின் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

இந்திய ஆட்டோமொபைல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 198 ஆக இருந்த உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை, இந்த ஆண்டு ஆகஸ்டில் ,ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 524 ஆக குறைந்து விட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்டில் 1,96,847 ஆக இருந்த உள்நாட்டு கார் விற்பனை, இந்த ஆண்டு ஆகஸ்டில் 1 லட்சத்து 15,957 ஆக சரிந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் 41.09 விழுக்காடு சரிவு எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, மோட்டார் சைக்கிள் விற்பனையானது, 22.33 விழுக்காடு அளவுக்கு குறைந்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் 12 லட்சத்து 7,005 மோட்டார் சைக்கிள்கள் விற்பனையானதாகவும், இந்த ஆண்டு ஆகஸ்டில் 9 லட்சத்து 37,486 மட்டுமே விற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களின் விற்பனையும் 38.7 விழுக்காடு குறைந்து விட்டதாகவும், ஏற்றுமதியைப் பொறுத்துவரை 4.2 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளதாகவும், இது 2.4 விழுக்காடு அதிகம் எனவும் இந்திய ஆட்டோமொபைல் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

[…]

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 328 ரூபாய் குறைந்துள்ளது.
வர்த்தகம்

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 328 ரூபாய் குறைந்துள்ளது. 

கடந்த ஒரு மாத காலமாகவே கடுமையாக உயர்ந்து வந்த தங்கம் விலை  பல்வேறு புதிய உச்சங்களையும் எட்டி விற்பனையானது. கடந்த புதன்கிழமை சவரன் 30 ஆயிரம் ரூபாயை கடந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு  328 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 41 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் 30 காசுகள் குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 52 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 2 ஆயிரத்து 300 ரூபாய் குறைந்து 52 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

[…]

ஏர் இந்திய நிறுவனம்
வர்த்தகம்

ஏர் இந்திய விமான நிறுவனத்தின் புதிய சேவை விரைவில் அறிமுகம்

விமான நிலையங்களில் பயணிகளுக்கு உதவி செய்யும் வகையில் ஏர் இந்திய நிறுவனம் விரைவில் வழிகாட்டி சேவையை வழங்கவுள்ளது.

இந்த வசதியை பெறுவதற்கு 2 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை  பயணிகளிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் ஏர் இந்திய விமான நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சந்திப்பு மற்றும் வாழ்த்து((Meet and Greet)) என்ற திட்டத்துக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்தது. அதன்படி நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அதன் மூலம் பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் கூடுதல் சேவைகளை வழங்க முடியும். அந்த வகையில் ஏர் இந்திய விமானத்தில் உயர் வகுப்பில் பயணம் செய்வோர் கூட இனி பார்க்கிங்கில் இருந்து விமானம் ஏறும் வரை அனைத்து நடைமுறைகளுக்கும் வழிகாட்டி ஒருவரை உடன் அழைத்து செல்லலாம்.

முதற்கட்டமான டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் அனைத்து வகை பயணிகளுக்கும் இந்த சேவை வழங்கப்படவுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகள், சிறப்பு கவனம் தேவைப்படும் பயணிகளுக்கு ஏர் இந்தியா தொடர்ந்து இலவச சேவையை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் வேறுசில தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற சேவைகளை வழங்கி வருகின்றன. சந்திப்பு மற்றும் வாழ்த்து((Meet and Greet)) திட்டத்தின் மூலம் டெல்லியில் ஓய்வறைகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனமான பிளாசா பிரீமியம் குழுமத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் பவ்யா குக்ரேஜா கூறுகையில் புதிய வசதி குறித்து பயணிகள் இன்னும் அறிந்திருக்காததால், மருத்துவமனை மற்றும் ட்ராவல் ஏஜென்ட்கள் மூலம் தங்களை அணுகுவதாக தெரிவிக்கிறார்.

இதுபோன்ற சேவைகள் மற்ற நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் கிடைக்கின்றன ஆனால் இந்தியாவில், அவை ஒழுங்கற்ற முறையில் உள்ளன என்றும் அது ஒழுங்கமைக்கப்படும் என்றும் இதன்மூலம் விமான நிலையங்களில் எளிமையான அணுகுமுறை உருவாகி கால தாமதம் தவிர்க்கப்படும் என்றும் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். 

[…]

ரிசர்வ்  வங்கி
வர்த்தகம்

கடன்களுக்கான வட்டியை உடனே குறைக்குமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு

கடன்களுக்கான வட்டியை குறைக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், கடன்களுக்கான வட்டி விகிதம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தின் பலன்கள் முழு அளவில் வாடிக்கையாளர்களுக்கு போய் சேருவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைப்பதில் எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை.எனவே வங்கிகள் தற்போது உள்ளவீட்டுக் கடன், தனிநபர் கடன், மற்றும் சிறு,குறு தொழில்களுக்கான கடன் பெற்றவர்களுக்கு உடனடியாக வட்டியை குறைக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

டிவிட்டர் சிஇஓ
வர்த்தகம்

டிவிட்டர் சிஇஓ கணக்கை ஹாக்கிங் செய்து அவதூறு பதிவுகள் வெளியீடு

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜாக் டோர்சியின் ( jack doresey ) டிவிட்டர் கணக்கு ஹாக் செய்யப்பட்டுள்ளது.

இதில், இனவெறியைத் தூண்டும் வகையிலான பதிவுகள் உள்பட ஏராளமான பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக நீக்குவதற்கு டிவிட்டர் தொழில்நுட்ப அதிகாரிகள் போராடி வருகின்றனர்.ஜாக்கையே பாதுகாக்க முடியாவிட்டால் யாரையும் பாதுகாக்க முடியாது என்றும் டிவிட் செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக போலியான டிவிட்டர் கணக்குகளை சுத்தம் செய்வதற்காக டிவிட்டர் நிர்வாகம் அண்மையில் ஏராளமான கணக்குகளை நீக்கியுள்ளது.

கால்பந்து வீரர்களுக்கு எதிராக பதிவான இனரீதியான அவதூறுகள், அரசியல் காழ்ப்புகளுடன் வெளியான பதிவுகளும் நீக்கப்பட்டன. இதன் எதிரொலியாகவே டிவிட்டர் சிஇஓவின் கணக்கு ஹாக்கிங் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.

[…]

 பணம்
வர்த்தகம்

ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் வரி பிடிக்கப்படும்

வங்கிகளில் இருந்து ஓர் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்திருந்தால்,ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் 2 சதவீதம் Tds செலுத்த நேரிடும். திங்கட்கிழமை முதல் இம்முறை அமலுக்கு வருகிறது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் சமூக ஊடகங்களில் மக்களிடம் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை கணக்கில் 2020-21ம் ஆண்டில் இருந்துதான் இது கணக்கிடப்படும் என்றாலும் இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31 வரை ஒருவர் வங்கிகளில் இருந்து ஒருகோடி ரூபாய்க்கு மேல் பணம் ரொக்கமாக எடுத்திருந்தால் அவரிடமிருந்து செப்டம்பர் முதல் தேதியில் இருந்து ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் 2 சதவீதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வங்கி கணக்கில் அல்லது பல்வேறு கணக்குகளில் இருந்தும் தபால் நிலைய கணக்கில் இருந்தும் எடுத்த பணம் மொத்தமாக கணக்கிடப்பட்டு ஒரு கோடிக்கும், அதற்குமேலும்  அதிகமாக இருந்தால், அதன் பின்னர் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போது 2 சதவீத வரிக்கு ஆளாகும் என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

[…]

வருமான வரி கணக்கு
வர்த்தகம்

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கெடு இன்றுடன் முடிவடைகிறது.

கடந்த 2018 - 19ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்துக்கான வருமான வரி படிவத்தை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாகும். அதற்குள் வருமான வரி படிவம் தாக்கல் செய்யாவிட்டால், தாமதக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த நேரிடும். வட்டி அபராதம் போன்றவற்றையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இதனிடையே வருமானவரி தாக்கல் செய்ய செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இதனை மறுத்துள்ள வருமானவரித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியானவை முற்றிலும் தவறான தகவல் என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி வருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[…]

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வர்த்தகம்

ஒன்றாக இணைகிறது பல பொதுத்துறை வங்கிகள் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பல பொதுத்துறை வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பல்வேறு பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யூனைட்டட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைகிறது. இது நாட்டின் இரண்டாவது பொதுத்துறை வங்கியாக ரூ.17.95 லட்சம் கோடி மதிப்புடன் இருக்கும்.
 

[…]

தங்கம் விலை
வர்த்தகம்

தங்கம் விலை உயர்வு...!

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து பல்வேறு புதிய உச்சங்களை எட்டி வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 14 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்து 727 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளன. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 52 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 300 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாயை நெருங்கி விற்பனையாவதால் ஏழை மற்றும் நடுத்தரமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

[…]

தங்கம் விலை
வர்த்தகம்

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 29 ஆயிரத்து 704 ரூபாயாக உயர்ந்தது

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 29 ஆயிரத்து 704 ரூபாயாக உயர்ந்தது

சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.264 உயர்ந்தது

ரூ.29,704க்கு விற்பனையாகும் நிலையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை நெருங்குகிறது

[…]

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
வர்த்தகம்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகளின் எதிரொலி

பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டதை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை அதிகரித்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிக்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

மேலும் மந்த நிலையில் உள்ள ஆட்டோ மொபைல் துறையை ஊக்கப்படுத்தவும் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்குகளை வாங்கியதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்த நேர முடிவில் 792 புள்ளிகள் உயர்ந்து, 37 ஆயிரத்து 494 புள்ளிகளில் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 228 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 57 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. பொதுத்துறை வங்கிகளுக்கு நடப்பு நிதி ஆண்டில் 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பால், எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்தன.

வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சீனா உடன் விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்ததும், இந்திய பங்குச்சந்தையின் உயர்வுக்கு காரணமாக இருந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

[…]

தங்கம்
வர்த்தகம்

தங்கம் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது...!

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பல புதிய உச்சங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 304 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டி விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 38 ரூபாய் உயர்ந்து, மூவாயிரத்து 718 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனையாகிறது.

பார் வெள்ளி ஒரு கிலோ 900 ரூபாய் அதிகரித்து, 50 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாயை வெகு விரைவில் எட்டி விடும் வேகத்தில் உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

[…]

தங்கம் விலை
வர்த்தகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துவிட்டது ...!

தங்கம் விலை உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது

இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்தது

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.29,440க்கு விற்பனை

சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ.3680க்கு விற்பனை

[…]

 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வர்த்தகம்

மோட்டார் வாகன உற்பத்தித்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை..!மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு.

கடந்தாண்டு முதல் சரிவை எதிர்கொண்டு வரும் மோட்டார் வாகன உற்பத்தித்துறை ஊக்குவிக்க நடவடிக்கைகளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். 

மத்திய மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவுகளை கருத்தில் கொண்டு, முதலமைச்சர்கள், அரசுத் துறை செயலாலர்கள், உயர் அதிகாரிகளுக்கான வாகனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வாங்கப்பட்டு வந்தன.

பத்து வருடங்களுக்கு ஒருமுறை புதிய வாகனங்கள் வாங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிட மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். மேலும், 2020 மார்ச் 31க்கு முன் வாங்கப்படும் பிஎஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்றார்.

பிஎஸ் 6 எஞ்சின் மாசு விதிகள் அமலுக்கு வந்த பிறகு, பிஎஸ் 4 எஞ்சின் வாகனங்களை இயக்குவது சட்டத்திற்கு புறம்பானதாக மாறிவிடும் என்ற ஊகங்களை தள்ளுபடி செய்ய விரும்புவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

[…]

முட்டை
வர்த்தகம்

தொடர்ச்சியாக முட்டை விலை குறைவு ..!

கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி நாமக்கல்லில் கடந்த இரண்டு நாட்களில் முட்டை விலை 28 காசுகள் குறைந்து 3 ரூபாய் 40 காசுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது.

பண்டிகைகள் மற்றும் தொடர் மழை காரணமாக நாமக்கல் மண்டலத்தில் 10 சதவீத முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாகவும், கனமழையால் கேரளாவிற்கு அனுப்ப வேண்டிய சுமார் 1 கோடி முட்டைகள் அனுப்ப முடியவில்லை என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் தொடர்ந்து அதன் விலையும் குறைய வாய்ப்புள்ளதாகவும் கோழிப்பண்ணையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்

[…]

தங்கத்தின் விலை கிடு கிடு உயர்வு
வர்த்தகம்

தங்கம் விலை மீண்டும் உயர்வு நிலையை அடைந்துள்ளது...

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து சவரன் 29 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.

ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை பல புதிய உச்சங்களையும் எட்டியது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைவதும், பின்னர் மீண்டும் உயர்வதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன், 28 ஆயிரத்து 968 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 13 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்து 621 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி நேற்றைய விலையில் மாற்றமின்றி வர்த்தகமாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 48 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 48 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

[…]

பங்குச் சந்தை வீழ்ச்சி
வர்த்தகம்

இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளது.

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் சரிந்தது. 
<br> <br>
உலகளவில் பொருளாதார மந்தநிலை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவற்றால் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கட்டுமானம், உலோகம், மோட்டார் வாகனம், பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைப் பங்குகள் இன்று சரிவைச் சந்தித்தன.
 <br> <br>
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில்  650 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிவடைந்து 36 ஆயிரத்து 391 புள்ளிகளாக குறைந்தது.
<br> <br>
பின்னர் சற்று மீண்ட போதும் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 587 புள்ளிகள் சரிவுடன் 36 ஆயிரத்து 472 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி வர்த்தக நேர முடிவில் 177 புள்ளிகள் சரிவுடன் 10 ஆயிரத்து 741 புள்ளிகளாக இருந்தது. 

[…]

இந்திய ரூபாய்
வர்த்தகம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு என தகவல்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து 72 ரூபாயாக உள்ளது.
<br> <br>
இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கிய நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மேலும் குறைந்தது. வியாழக்கிழமை மாலை 71 ரூபாய் 81 காசுகளாக முடிவடைந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலையில் வர்த்தக நேரம் தொடங்கியதும் 22 காசுகள் குறைந்து கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு 72 ரூபாய் 03 காசுகளாக வர்த்தகமானது.
 <br> <br>
பின்னர் 9.10 மணியளவில் 18 காசுகள் குறைந்து 71 ரூபாய் 99 காசுகளாக இருந்தது. இந்த மாதத்தில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 4.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், 2019ம் ஆண்டில் 3.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 <br> <br>
தொடர்ச்சியான வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் பங்குச் சந்தைகளில் நிலவி வரும் சரிவுகள் உள்ளிட்டவை ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகின்றன. அதேபோல் சீன யுவான் மதிப்பின் திடீர் வீழ்ச்சியால், வளர்ந்து வரும் சந்தைகளில் அதிகரித்துள்ள ஏற்ற இறக்கங்களும், ரூபாய் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

[…]

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்
வர்த்தகம்

கடும் பொருளாதார சிக்கலில் இந்தியா! ரகுராம் ராஜன் எச்சரிக்கை !!

இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். தற்போதைக்கு இது சீராக வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், :இந்தியாவின் பொருளாதார மந்தநிலை கவலை அளிக்கிறது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதமாக குறைந்து விட்டது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இதுதான் குறைந்த அளவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆட்டோமொபைல், ரியல்எஸ்டேட், நுகர்வோர் உற்பத்திநிறுவனங்கள் என எல்லாவற்றிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. அத்துறையினர் ஊக்கச் சலுகை கேட்கிறார்கள். இந்த நேரத்தில், பொருளாதாரத்தையும், வளர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க புதிய சீர்திருத் தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச சந்தையில் கடன்பெறுவது சீர்திருத்தம் அல்ல, அது தந்திர நடவடிக்கையாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்துறை, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரச்சனைகளை உடனடியாக களைய வேண்டும். தனியார் துறையினர் முதலீடு செய்வதைதூண்டும் வகையில் சீர்திருத்தம் இருக்க வேண்டும்.

தற்போதுள்ள கடினமான சூழ்நிலையில், ஊக்கச் சலுகைகள் நீண்டகால பலன் அளிக்காது. 2008-ஆம் ஆண்டை போன்ற பெரிய பொருளாதார வீழ்ச்சி, மீண்டும் ஏற்படாது என்று என்னால் கணிக்க முடியாது.
ஆனால்,அப்படி ஏற்பட்டால், அது வேறுகாரணங்களால்தான் ஏற்படும். தற்போதைய பிரச்சனைகளை களைந்தாலும், புதிய பிரச்சனைகள் வருவதை தடுக்க முடியாது என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். […]

வாகா எல்லை
வர்த்தகம்

இந்தியாவுடன் வர்த்தக - தூதரக உறவை முறித்தது பாகிஸ்தான்

இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டித்துள்ள பாகிஸ்தான் அரசு, வாகா எல்லையை மூடவும் முடிவு செய்துள்ளது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் தேசிய பாதுகாப்புக் குழுக்கூட்டம் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்றது. உயர் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தையடுத்து இந்தியாவுடனான உறவுகளைத் துண்டிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது குறித்து ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளிக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் இந்தியாவுடனான எல்லை தாண்டிய வர்த்தகத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. வாகா எல்லையை மூட முடிவு செய்திருப்பதுடன் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்பவும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை வரவழைக்கவும் அரசு முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அறிவித்துள்ளார்.

காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் என்றும், ஆகஸ்ட் 15ம் தேதி துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே நேற்றிரவு முதல் பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை விதித்து தமது 9 வான் வழித்தடங்களில் மூன்றை மூடிவிட்டது. இந்தியா-ஆப்கானிஸ்தான் விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்லும்படி பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. லாகூர் பகுதியில் வெளிநாட்டு விமானங்கள் 46 ஆயிரம் அடி உயரத்திற்கு கீழாக பறக்கக் கூடாது என்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடு விதித்துள்ளது. […]

ஆட்டோமொபைல்
வர்த்தகம்

ஆட்டோமொபைல் துறை கடும் சரிவு - 2 லட்சம் பேர் வேலையிழப்பு

ஆட்டோமொபைல் துறை மந்தகதியில் இருப்பதால், கடந்த 3 மாதங்களில் வினியோகஸ்தர்களிடம் பணிபுரிந்த 2 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.
கார்கள், இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதால், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளன. இதனால் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களின் லாபம் கணிசமாக குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மகிந்திரா, அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் தாக்கம் ஆட்டோமொபைல் வினியோகஸ்தர்களையும் விட்டுவைக்கவில்லை.

விற்பனையகங்களில் பணிபுரிந்த 2 லட்சம் பேர் கடந்த 3 மாதங்களில் வேலையிழந்திருப்பதாக ஆட்டோமொபைல் வினியோகஸ்தர் சங்க கூட்டமைப்பு தலைவர் ஆஷிஷ் ஹர்ஷாராஜ் தெரிவித்துள்ளார்.
இதே நிலை நீடித்தால் அடுத்து, தொழில்நுட்ப துறையில் இருப்பவர்களுக்கும் வேலை பறிபோகலாம் என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் உள்ள 15 ஆயிரம் வினியோகஸ்தர்களின் கீழ் இயங்கும் 26 ஆயிரம் ஆட்டோமொபைல் விற்பனையகங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. நாட்டின் ஜிடிபியில் ஆட்டோமொபைல் துறையின் பங்கு 8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. […]

ஜி.டி.பி. வளர்ச்சி
வர்த்தகம்

பொருளாதார ஆய்வறிக்கை ஜி.டி.பி. வளர்ச்சியடையும் பெட்ரோல், டீசல் விலை குறையலாம்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற பிரதமர் மோடியின் இலக்கை எட்ட, 8 சதவீத பொருளாதார வளர்ச்சி அவசியம் என்று, பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது முதல் பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், அதற்கு முன்னோட்டமாக, பொருளாதார ஆய்வறிக்கையை அவர் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தயாரித்துள்ள இந்த பொருளாதார ஆய்வறிக்கையில், இந்திய பொருளாதாரத்தின் நிலை மற்றும் இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தனியார் முதலீடு அதிகரிப்பு மற்றும் நுகர்வு திடமாக இருப்பதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி வேகம்பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை அடுத்த நிதியாண்டில் குறையும் என எதிர்பார்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 6.4 சதவீதமாக இருந்த பொது நிதிப் பற்றாக்குறை, 5.8 சதவீதமாக குறையும், உணவு தானிய உற்பத்தி 283.4 மில்லியன் டன்களாக இருக்கும், இறக்குமதிகள் 15.4 சதவீதம், ஏற்றுமதிகள் 12.5 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ச்சியடையும், அரசின் கொள்கைகள் அன்னிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தும், மெதுவான வளர்ச்சி, ஜிஎஸ்டி, விவசாய திட்டங்கள் நிதி சார்ந்த சவாலாக இருக்கக் கூடும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

2025ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற, இந்தியா 8 சதவீதம் என்ற பொருளாதார வளர்ச்சியில் தொடர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 55 லட்சம் முதல் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது எனவும் கூறியுள்ள பொருளாதார ஆய்வறிக்கை, அதற்கான வழிமுறைகளையும் பரிந்துரைத்துள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை முடுக்கிவிட, அவற்றை கட்டுத்தளைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது. அரசின் கொள்கைகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்ட கட்டுப்பாடுகளை அகற்றுவதன் மூலம் கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என ராஜஸ்தான் மாநில அரசை சான்று காட்டி பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தனியார் முதலீடுகள் அதிகரிக்க அனுமதிப்பதன் மூலம், நிறுவனங்கள் உற்பத்தித் திறன் மிக்கவையாக மாறி, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் என்றும், ஏற்றுமதிகள் அதிகரிக்க உதவுவதோடு, நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் போட்டியிட உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சியுள்ள, தேர்ச்சியற்ற, பகுதி-தேர்ச்சியுள்ள மற்றும் உயர் தேர்ச்சியுள்ள என 4 வகையான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலி என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை பற்றி கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 5 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கான பார்வையை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். சமூகநலத் துறைகளில் முன்னேற்றம், தொழில்நுட்பங்களை கைக்கொள்வது, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியலிடுவதாக தெரிவித்துள்ளார். […]

OLA
வர்த்தகம்

மின்சார கார்கள் திட்டத்துக்காக ஓலாவில் முதலீடு செய்யும் சாஃப்ட் பேங்க்..

அரசு விதிப்படி தங்கள் நிறுவனத்தில் இயக்கப்படும் கார்களை மின்சாரக் கார்களாக மாற்றும் இந்தியாவின் ஓலா நிறுவனத்தில் சாஃப்ட் பேங்க் நிறுவனம் முதவீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் தொடங்கப்பட்ட ஓலா நிறுவனம் நாட்டின் பிற மாநிலங்கள் மட்டுமின்றி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலும் வாடகை டேக்ஸி சேவையை மேற்கொண்டு வருகிறது. வரும் 2026-ம் ஆண்டுக்குள் வாடகைக் கார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் கீழ் இயக்கப்படும் வாகனங்களில் 40 சதவீதத்தை மின்சாரத்தால் இயங்குவதாக இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் இதற்கான நடவடிக்கையைத் தொடங்கிய ஓலா நிறுவனத்தில் மின்சாரக் கார்களுக்காக சாஃப்ட் பேங்க் நிறுவனம் 250 மில்லியன் டாலரை முதலீடு செய்வதாகக் கூறப்படுகிறது . […]

கியூ. எக்ஸ் 10 லென்ஸ்
வர்த்தகம்

சோனி நிறுவனத்தின் கியூ. எக்ஸ் 10 லென்ஸ்:

சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கியூ.எக்ஸ் 10 ( Q X 10) எனும் இந்த லென்ஸ் எந்த ஸ்மார்ட் போன் கேமராவையும் பத்து மடங்கு அதிகமான துல்லியத்துடன் புகைப்படம் எடுக்க வைக்கும்.

இதில் சென்சார் இருப்பதால் மேலும் சிறப்பாக செயல்படுகிறது. இதை எளிதாக நமது போனுடன் கொடுக்கப்பட்டுள்ள கிளிப் மூலம் இணைத்துக் கொள்ளலாம்.

ஒன் டச்சில் இது நமது ஸ்மார்ட் போனுடன் கனெக்ட் ஆகிவிடும். பெரும்பாலும் எல்லா வகை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களிலும் இது பொருந்தும். இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் லென்சுடைய செயலி மற்றும் செல்போன் ஆகிய இரண்டிலும் சேமிக்கப்படுகின்றன.

மிக குறைந்த வெளிச்சத்தில் கூட தரமான புகைப்படங்களை இந்த லென்ஸை கொண்டு எடுக்கலாம். ஒரு முழு நீள ஹெச்.டி. படத்தையே இந்த லென்ஸ் துணையுடன் எடுக்க முடியும். சிறிய வகை பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ய விரும்புவோர் இதற்கென்று பிரத்யேகமாக கேமரா ஏதும் வாங்க வேண்டியதில்லை. இந்த லென்ஸை மட்டும் வாங்கினாலே போதுமானது. […]

தங்கத்தின் விலை
வர்த்தகம்

உயரப்பறந்த தங்கத்தின் விலை இன்று குறைய்ந்தது : சவரனுக்கு ரூ. 336 குறைந்து ரூ. 26, 088 க்கும் விற்பனை

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், சவரன் 25,000க்கு குறையாமல் விற்பனையாகி வந்தது. அதன்பிறகு அதிரடியாக தங்கம் விலையில் ஏற்றம் காணப்பட்டு சவரன் 26,000ஐ தொட்டது. தொடர்ந்து, தங்கம் விலை சற்று குறைந்தது. குறைந்த வேகத்தில் மீண்டும் தங்கம் விலை தற்போது ஏற தொடங்கியது. அதாவது, கடந்த 20ம் தேதி ஒரு சவரன் தங்கம் 25,704, 21ம் தேதி 25,896, 22ம் தேதி 26,072க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 3,265க்கும், ஒரு சவரன் 26,120க்கும் விற்பனையானது.

இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ₹43 அதிகரித்து ஒரு கிராம் 3.308க்கும், சவரனுக்கு 344 அதிகரித்து ஒரு சவரன் 26,464க்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு நகை வாங்குவாரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விலை உயர்வு மாலை வரை நீடிக்கவில்லை. அதாவது, சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் மாலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது, மாலையில் கிராமுக்கு 38 அதிகரித்து ஒரு கிராம் 3,303க்கும், சவரனுக்கு 304 அதிகரித்து ஒரு சவரன் ₹26,424க்கும் விற்பனையானது.தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 720 வரை அதிகரித்துள்ளது.

இன்று கணிசமான சரிவு

இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று கணிசமான சரிவை கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 42 விலை குறைந்து ரூ. 3,261க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 336 குறைந்து ரூ. 26, 088 க்கும் விற்பனை ஆகிறது. உயரப்பறந்த தங்கத்தின் விலை இறங்குமுகம் காண தொடங்கி இருப்பது நுகர்வோருக்கு ஓரளவு நிம்மதி அளித்துள்ளது. இருப்பினும் இது தற்காலிக நிலை தான் என்று கூறும் நகை வியாபாரிகள், வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.

இன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.42 குறைந்து ரூ.3,261 ஆகவும், சவரனுக்கு ரூ. 336 குறைந்து ரூ.26,088க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை:

தூய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 8 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,566 ஆகவும், சவரனுக்கு ரூ.28,528-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் சில்லறையில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ. 40.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]

ஜிஎஸ்டி
வர்த்தகம்

இரு வேறு மாநிலங்களில் ஆபீஸ், வர்த்தகம் ஜிஎஸ்டி வரி போடுவதில் குழப்பம்: கவுன்சில் பரிசீலனை

ஒரு மாநிலத்தில் அலுவலகம், இன்னொரு மாநிலத்தில் வர்த்தகம் என்று நடத்தும் நிறுவனங்களுக்கு இரண்டுக்கும் சேர்த்து தான் ஜிஎஸ்டி வரி போடப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக அரசு விரைவில் முடிவு எடுக்க உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதன் ஒப்புதல் பெற்று இது தொடர்பாக சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விரைவில் அனுப்பப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மனித வளம், ஊழியர்களுக்கான சம்பள பட்டியல் தயாரிப்பு போன்ற அலுவலகத்திற்குள்ளான பணிகள் ஜிஎஸ்டி விதிகளின் படி தான் கணக்கிடப்படும். இந்த அலுவலகம் இன்னொரு மாநிலத்தில் உள்ள நிறுவனத்தின் அங்கம் என்றாலும், இதன் சேவைகளுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுத்த வேண்டும் என்று கவுன்சில் நினைக்கிறது.

அலுவலக சேவைக்கு தனியாக இன்வாய்ஸ் வழங்கப்பட வேண்டும். இதன்படி, நிறுவனங்கள் உள்ளிருப்பு வரி வரவு சலுகையை பெறலாம். ஆனால், விதிவிலக்கு அளிக்கப்பட்ட பிரிவில், எரிசக்தி, சுகாதாரம், மதுபானம், கல்வி போன்றவற்றிக்கு வரி சலுகை அளிக்கப்படுள்ளதா என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை.தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களுக்கு இடையே எப்படி உள்ளிருப்பு வரி வரவை பிரித்துக் கொடுப்போகிறார்கள் என்பது பற்றிய கேள்விக்கும் விடை தெரியவில்லை. அதேபோல், வரி விதிப்பு எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பது பற்றியும் விளக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் விரிவாக பேசி, முடிவு எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. அதனால், இதுபற்றி கவுன்சில் அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு எடுக்கும் என்று தெரிகிறது. […]

பெட்ரோல் விலை
வர்த்தகம்

பெட்ரோல் விலை ரூ.72.77, டீசல் விலை ரூ.67.59

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.59-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. […]

தங்கம் விலை அதிரடி உயர்வு
வர்த்தகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு..! கிராம் ஒன்றுக்கு ரூ.344 உயர்வு..!

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரன் 26 ஆயிரம் ரூபாயை கடந்தது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கடும் உயர்வு கண்டு வருவதால், பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி மீண்டும் உயர்வை கண்டு உள்ளது.

அதன் படி, ஒரு கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்து 3,308 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்து, 26 ஆயிரத்து 464 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில், இல்லாத அளவிற்கு சென்ற வாரம் ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1000 அதிகரித்து, சவரன் ரூபாய் 26 ஆயிரம் கடந்து இருந்தது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இன்றும் தங்கம் விலை அதிகரித்து சவரன் 27 ஆயிரம் ரூபாய் தொட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி கிராம் 10 காசுகள் உயர்ந்து 41.40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. […]

டேப்லட் கணினி
வர்த்தகம்

டேப்லட் கணினி தயாரிப்பைக் கைவிடும் கூகுள்..!

கூகுள் நிறுவனம் இனி டேப்லட் கணினிகள் தயாரிக்காது என்றும், அதற்கு பதில் லேப்டாப் பிரிவில் கவனம் செலுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டேப்லட் கணினி துறையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடால் கடும் போட்டி நிலவுகிறது. கூகுளின் பிக்ஸல் ஸ்லேட் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெறவில்லை எனக் கூறப்படும் நிலையில் டேப்லட் ரக கணினி உற்பத்தியை கூகுள் நிறுத்துவதாக சொல்லப்படுகிறது. அப்பிரிவில் பணியாற்றியவர்களை பிக்ஸல்புக் லேப்டாப் உற்பத்திப் பிரிவுக்கு மாற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் சாம்சங், லெனோவா, ஆசுஸ் ஆகிய நிறுவனங்களின் டேப்லட்டுகளுக்கான ஆன்ட்ராய்டு பங்களிப்பு தொடரும் எனவும் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. […]

அனில் அம்பானி
வர்த்தகம்

ரிலையன்ஸ் குழும கடன் தொகை உரிய காலத்தில் செலுத்தப்படும் : அனில் அம்பானி

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் கடனை குறித்த காலத்திற்குள் செலுத்த உறுதிபூண்டுள்ளதாக, அதன் தலைவர் அனில்அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் பவர் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை கடந்த சில வாரங்களில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அனில்அம்பானி, கடந்த 14 மாதங்களில் அசல் மற்றும் வட்டி தொகை என 35 ஆயிரத்து 400 கோடி ரூபாயை கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு செலுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் முன் எப்போதும் இல்லாத சவாலான நிதி சூழலில் இந்த தொகை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த காலத்திற்குள் கடனை செலுத்த, சொத்துக்களை விற்று பணத்தை திரட்ட திட்டுமிட்டுள்ளதாகவும் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

சில வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்காததால், தங்களது நிறுவனங்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் அனில் அம்பானி கூறியுள்ளார். […]

அசிம் பிரேம்ஜி
வர்த்தகம்

விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி ஓய்வுபெறுகிறார்

ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி, செயல் தலைவர் பதவியில் இருந்து ஜூலை 30 ஆம் தேதியுடன் ஓய்வுபெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

73 வயதாகும் இந்தியாவின் 2வது பெரிய பணக்காரரான அசிம் பிரேம்ஜி, சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனமாக இருந்த விப்ரோவை, சாப்ட்வேர், மின் உற்பத்தி போன்ற பலதுறைகளில் முன்னணிக்கு கொண்டு வந்த பெருமைக்கு சொந்தக்காரர். ஓய்வுக்குப் பின் விப்ரோ நிறுவனத்தில் செயல் தலைவர் அல்லாத அதிகாரியாக தொடர்ந்து பணியாற்ற உள்ளார்.

அசிம் பிரேம்ஜியின் மூத்த மகன் ரிஷாத் பிரேம்ஜி ஜூலை 31ஆம் தேதியில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு விப்ரோ நிறுவனத்தின் முழுநேர இயக்குனராக செயல்பட உள்ளார். தந்தையின் மறைவுக்குப் பின் 53 ஆண்டுகளாக விப்ரோவுக்கு தலைமை தாங்கிய அசிம் பிரேம்ஜி, தன்னுடைய அறக்கட்டளை மூலம், அரசு பள்ளிகளை மேம்படுத்த கோடிக்கணக்கில் நிதியுதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. […]

டொயோட்டா கிளான்ஸா.
வர்த்தகம்

விற்பனைக்கு வந்துவிட்டது டொயோட்டா கிளான்ஸா.

சுஸுகி-டொயோட்டா தொழில்நுட்பக் கூட்டணியில் முதல் காராக விற்பனைக்கு வந்துவிட்டது டொயோட்டா கிளான்ஸா. மாருதி பெலினோவின் பேட்ஜ் மாற்றப்பட்ட வெர்ஷனான இந்த கார் இரண்டு வேரியன்ட்டுகளிலும், மூன்று இன்ஜின் மற்றும் கியார்பாக்ஸ் ஆப்ஷனிலும் விற்பனைக்கு வந்துள்ளது. கிளான்ஸாவுக்கு ரூ.7.22 லட்சத்தில் இருந்து ரூ.8.90 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையை நிர்ணயித்துள்ளது டொயோட்டா.

தோற்றத்தில் இரு கார்களும் ஒன்றாகத் தெரிந்தாலும் முன்பக்க க்ரில் - ஹெட்லைட் - பேட்ஜிங் ஆகியவற்றில் சிறிய மாற்றங்கள் உண்டு. பெலினோவில் ஜீட்டா, ஆல்ஃப் வேரியன்ட் போல கிளான்ஸாவில் G,V என இரண்டு வேரியன்ட் வருகிறது. பெலினோவைப் போலவே இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் உண்டு. K12C 1.2 லிட்டர் டூயல் ஜெட் ஸ்மார்ட் ஹைப்ரிட் இன்ஜின் விலை குறைவான G வேரியன்ட்டில் மட்டுமே வருகிறது. V வேரியன்ட்டில் மாருதியின் K12B இன்ஜின் இருக்கிறது. G MT ஸ்மார்ட் ஹைப்ரிட் - ரூ.7.22 லட்சம்; G CVT - ரூ.8.30 லட்சம்; V MT - ரூ.7.58 லட்சம்; V CVT - ரூ.8.90 லட்சம் என மொத்தம் 4 வகையாக வருகிறது கிளான்ஸா.

இதில் இருக்கும் இரண்டு பெட்ரோல் இன்ஜின்களுமே பிஎஸ்-VI விதிமுறைகளுக்கு உட்பட்டவை. CVT கியர்பாக்ஸுடன் கிடைக்கும் 1.2 லிட்டர் K12B இன்ஜின் 83bhp பவர் மற்றும் 113Nm டார்க் தருகிறது. மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும் 1.2 லிட்டர் K12C டுயல் ஜெட் இன்ஜின் 90bhp பவரும் 113Nm டார்க்கும் தருகிறது. இந்த இன்ஜினில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இருப்பதால் இது அராய் டெஸ்ட்டில் 23.87 கி.மீ மைலேஜ் கொடுத்துள்ளது. K12B இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸுடன் லிட்டருக்கு 21.01 கி.மீ மைலேஜும், CVT கியர்பாக்ஸோடு 19.56 கி.மீ மைலேஜும் கொடுக்கும். மாருதி பெலினோவின் அதே மைலேஜ் தான்.

கிளான்ஸாவின் G வேரியன்ட்டில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், உயரம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடுத், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஜிபிஎஸ் நேவிகேஷன், வாய்ஸ் கன்ட்ரோல், பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, ஸ்டியரிங்கில் ஆடியோ கன்ட்ரோல், டூயல் டோன் அலாய் வீல் போன்ற வசதிகள் உள்ளன. V வேரியன்ட்டில் கூடுதலாக UV-cut கண்ணாடிகள், ஹெட்லைட்டில் LED DRL, புதிய LED டெயில் லைட், லெதர் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேடிக் ஹெட்லைட்ஸ், Follow me ஹெட்லைட், ரிவர்ஸ் கேமரா போன்ற வசதிகள் வருகின்றன. பாதுகாப்பு அம்சங்களான ABS, EBD, 2 காற்றுப்பைகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகியவை இரண்டு வேரியன்ட்டிலும் உள்ளன.
பெலினோவில் இருந்து கிளான்ஸாவை வித்தியாசப்படுத்திக் காட்டும் விஷயம் இதன் விலை மற்றும் சர்வீஸ். கிளான்ஸாவின் விலை குறைவான G Smart Hybrid MT வேரியன்ட் பெலினோவின் ஜீட்டா பெட்ரோல் ஸ்மார்ட் ஹைப்ரிட் காரைவிட ரூ.70,000 விலை குறைவு. மேலும், கிளான்ஸா 3 ஆண்டுகள்/1 லட்சம் கி.மீ வாரன்ட்டியோடு வருகிறது. 3 ஆண்டுகளுக்கு ரோடு சைடு அசிஸ்டென்ஸும் இலவசம். பெலினோ, 2 ஆண்டுகள்/40,000 கி.மீ வாரன்ட்டியோடு மட்டுமே கிடைக்கிறது. மேலும், பெலினோ உருவாகும் அதே அசெம்பளி லைனில்தான் கிளான்ஸா உருவாகிறது என்றாலும் காரின் உதிரிபாகங்களை டொயோட்டாவே பார்த்துக்கொள்கிறது. டொயோட்டாவில் கிடைக்கும் 60 நிமிட எக்ஸ்பிரஸ் மெயின்டனன்ஸ் மாருதியில் கிடையாது. […]

டாடா நிறுவனம்
வர்த்தகம்

சரிவை சந்தித்து வரும் டாடா நிறுவனம்..

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடன் சுமை 97 ஆயிரத்து 593 கோடி ரூபாயை எட்டியுள்ள நிலையில், சீனாவில் அந்நிறுவன கார்களின் விற்பனையும் சரிவை சந்தித்துள்ளது.
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனத்தை வாங்கி, ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ரக கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று காலாண்டுகளாக டாடா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் சொகுசு கார் உற்பத்தி செய்யும் அலகுகளில் தேக்க நிலை ஏற்பட்டு, சீனாவில் அந்நிறுவன கார்களின் விற்பனை குறைந்துள்ளது.
கடந்த வாரம் 1052 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, ஜாகுவார் அலகில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடன் சுமை 97 ஆயிரத்து 593 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
உப்பு முதல் மென்பொருள் வரையிலான தனது பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் டாடா நிறுவனம் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளது. […]

பங்குச்சந்தை
வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தை அதிரடி உயர்வு..!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜகவே முன்னிலையில் இருப்பதால் பங்குசந்தையும் உயர்ந்து காணப்படுகின்றன. மொத்தமுள்ள 542 தொகுதிகளில் பாஜக 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தற்போது வரை முன்னிலை வகித்து வருகிறது.

இதன் காரணமாக தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை முன்னேற்றம் அடைந்துள்ளது. அதன்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகள் அதிகரித்து உள்ளது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 200 புள்ளிகள் அதிகரித்து பங்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு 19 ஆம் தேதி வெளியான போதே அன்றைய தினத்தில் 1,400 புள்ளிகள் அதிகரித்து அன்றைய பங்கு வர்த்தகம் முடிவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இன்று காலை முதலே தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருவதால், முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து புள்ளிவிவரம் அதிகரித்து வருகிறது. அதன்படி அதானி பவர், அதானி எரிவாயு என அதானி குழுமம் அனைத்தும் அதிக லாபத்தை ஈட்டக்கூடிய பங்குகளாக இன்று உள்ளது.

அதேபோன்று ரிலையன்ஸ் குடும்ப நிறுவனங்களான ரிலையன்ஸ் பவர் ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ், உள்கட்டமைப்பு ரிலையன்ஸ், கம்யூனிகேஷன் உள்ளிட்ட ரிலையன்ஸ் குரூப் அதிக லாபத்தை ஈட்ட கூடியதாக உள்ளது. எனவே ரிலையன்ஸ் மற்றும் அதானி குரூப் பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். […]

பங்குச்சந்தையில் சரிவு
வர்த்தகம்

புதிய உச்சத்தை தொட்ட பின்னர் பங்குச்சந்தையில் சரிவு

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் காலையில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில், பிற்பகலில் சரிவுடன் நிறைவடைந்தது.

பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து கணிப்பு முடிவின் எதிரொலியாக, திங்கட்கிழமை சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக காலையிலும் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி, இதுவரை இல்லாத புதிய உச்சமாக 39 ஆயிரத்து 571 புள்ளிகளை சென்செக்ஸ் தொட்டது. அதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் லாபம் கருதி வங்கி, ஐடி, ஆட்டோ துறை சார்ந்த பங்குகளை அதிகம் விற்பனை செய்ததால், பிற்பகலில் சென்செக்ஸ் 382 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 969 புள்ளிகளில் நிறைவடைந்தது.

அதே போன்று நிப்டியும் காலையில் 11 ஆயிரத்து 883 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பின்னர் பிற்பகலில் 119 புள்ளிகள் சரிவடைந்து, 11 ஆயிரத்து 709 புள்ளிகள் நிறைவுற்றது. […]

கூகுளால் நெருக்கடி
வர்த்தகம்

கூகுளால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள ஹூவாய் நிறுவனம்.

கூகுள் நிறுவனத்தின் மூலம் நெருக்கடியை சந்தித்துள்ள ஹூவாய் நிறுவனத்துக்கு துணையாக இருப்போம் என சீன அரசு அறிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கடந்த வாரம் சீன நிறுவனமான ஹூவாய் உட்பட சில வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா வர்த்தக தடை விதித்தது.இதனையடுத்து ஹூவாய் போன்களில் கூகுளின் அப்டேட்களும், சில செயலிகளும் செயல்படாது என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.

ஆண்டிராய்ட் பயனாளர்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் சேவைகள் இல்லையென்றால் ஹூவாய் நிறுவனம் கடும் பாதிப்படையும் என்று கூறப்பட்ட நிலையில், அவை இல்லாமலேயே சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்றும், இதனால் தங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும் ஹூவாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஹூவாய் நிறுவனத்துடன் வணிகத்தை நிறுத்திக்கொண்ட கூகுள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஹூவாய் நிறுவனத்திற்கு துணையாக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். […]

கச்சா எண்ணெய்
வர்த்தகம்

தேர்தல் முடிவுக்கு பிறகே கச்சா எண்ணெய் இறக்குமதி

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் ஜாவத் ஷரீப் இருநாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.ஈரானிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 5.9 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்க விதித்துள்ள பொருளாதாரத் தடையால் கடந்த 2ம் தேதியிலிருந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முற்றிலும் நிறுத்தியது.இந்நிலையில் ஜாவத்தின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது: ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]

சஞ்சய் பூரி
varthagam

ஐ.டி.சி., தலைவரானார் சஞ்சய் பூரி

ஐ.டி.சி., நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக, சஞ்சய் பூரி, 56, நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிறுவனத்தின் செயல் சாரா தலைவர், ஒய்.சி.தேவேஷ்வர், கடந்த வார இறுதியில் காலமானார். இதைத் தொடர்ந்து, நிர்வாக இயக்குனர், சஞ்சய் பூரிக்கு, தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதாக, ஐ.டி.சி., இயக்குனர் குழு தெரிவித்து உள்ளது.கான்பூர், ஐ.ஐ.டி., மற்றும் வார்ட்டன் வர்த்தக கல்வி மைய பட்டதாரியான, சஞ்சய் பூரி, 1986ல், ஐ.டி.சி.,யில் சேர்ந்தார். கடந்த, 2001 – -06 வரை, நேபாளத்தில், ‘சூர்யா நேபாள்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார். இந்தியா திரும்பி, ‘ஐ.டி.சி., இன்போடெக்’ நிறுவனத்தில், 2009 வரை, நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்தார்.கடந்த, 2014ல், சிகரெட், அகர்பத்தி, உடனடி உணவு வகைகள் உள்ளிட்ட நுகர்பொருள் பிரிவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 2015ல், காகிதம், பேக்கேஜிங் மற்றும் வேளாண் பொருட்கள் பிரிவின் செயல் இயக்குனராக பொறுப்பேற்றார்.கடந்த, 2016ல், ஐ.டி.சி., தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும், 2017ல், தலைமை செயல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். இவர், 2021- – 22ல், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்பார் என, ஐ.டி.சி., ஏற்கனவே அறிவித்திருந்தது. தேவேஷ்வர் மறைவைத் தொடர்ந்து, தற்போது இப்பதவிக்கு வந்துள்ளார். […]

Varthagam
Varthagam

சம்மருக்கு செம ஆஃபர்!! துவங்கியது அமேசான் சம்மர் ஆஃபர்...

இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனைத்தளமான அமேசான் சம்மர் ஸ்பெஷல் ஆஃபரை இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த சம்மர் சேலில், 10 கோடிக்கும் அதிகமான பொருட்களுக்கு ஆஃபர்கள் வழங்கப்படயுள்ளன. […]