• ஜெயலலிதா காலத்தை வென்றவர்... காவியமானவர்!
  • சூடான் தீ விபத்து - தமிழர்களின் நிலை குறித்து அறிய பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • அர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம்: மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்
  • புதிய சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவில் ஸ்ருதி ஹாசன்
  • நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை என புகார்
  • ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியது

தமிழ்நாடு

  • மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

     

    சினிமா, அரசியலில் உச்சம் தொட்டவர் ஜெயலலிதா. இவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    சினிமா, அரசியலில் உச்சம் தொட்டவர் கர்நாடாகாவின் மைசூருவில் 1948 பிப்., 24ல் பிறந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். 1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி அந்தக்காலத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.கர்நாடாகாவின் மைசூருவில் 1948 பிப்., 24ல் பிறந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். 1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி அந்தக்காலத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.கர்நாடாகாவின் மைசூருவில் 1948 பிப்., 24ல் பிறந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை முடித்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். 1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி அந்தக்காலத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.ஜெயலலிதா. இவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    [...]
  • நித்யானந்தா- தனிக்கொடி, தனி பாஸ்போர்ட்
  • உள்ளாட்சி தேர்தலுக்கு தடை-  திமுக மனு

இந்தியா

வணிகம்

உலகம்

  • 30 நாட்கள் சுயநினைவின்றி இருந்த பெர்ரேயரா தன் குழந்தையின் பசி குரல் கேட்டு சட்டென்று கண் விழித்து தாய்ப்பால் கொடுத்தார்.

    அர்ஜென்டினாவில் கோமாவில் இருந்த தாய் ஒருவர் தனது குழந்தையின் பசி குரல் கேட்டு கண் விழித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பதிவு: டிசம்பர் 05,  2019 

    பியூனோஸ் அயர்ஸ்,

    அர்ஜென்டினா நாட்டின் வடக்கு மாகாணமான கோர்டோபாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் மரியா லாரா பெர்ரேயரா (வயது 42). 3 குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபரால் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்.

    பல நாட்கள் தீவிர சிகிச்சை பெற்ற பிறகும் பெர்ரேயராவுக்கு சுயநினைவு திரும்பாததால், அவர் மூளை இறப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் எனவே அவரது உறுப்புகளை தானம் செய்யும்படியும் குடும்பத்தினருக்கு டாக்டர்கள் பரிந்துரைத்தனர். இதனை கேட்டு அவரது கணவர் மார்ட்டின் டெல்கடோ அதிர்ச்சியடைந்தாலும், நம்பிக்கையுடன் தனது மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க கோரினார். அதன்படி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த வாரம் மருத்துவமனைக்கு வந்த பெர்ரேயராவின் 2 வயது இளைய மகள் பாசத்துடன் அவர் அருகில் சென்று படுத்தார். பின்னர் தனது தாயின் அவல நிலையை அறியாத அந்த குழந்தை வழக்கமாக கேட்பது போல அவரை கட்டி அணைத்து கொண்டு தனக்கு பசிக்கிறது என கூறி தாய்ப்பால் கேட்டது. அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. 30 நாட்கள் சுயநினைவின்றி இருந்த பெர்ரேயரா தன் குழந்தையின் பசி குரல் கேட்டு சட்டென்று கண் விழித்து தாய்ப்பால் கொடுத்தார்.

    இதைப்பார்த்த பெர்ரேயராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். பெர்ரேயராவின் தாய்மை உணர்வை கண்டு அவர்கள் மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டனர். ஆனால் இந்த ஆச்சரியம் சில நிமிடங்கள்தான் நீடித்தது. தனது குழந்தையின் பசியை தீர்த்துவிட்டு பெர்ரேயரா மீண்டும் கோமாவுக்கு சென்று விட்டார். எனினும் மகளின் குரலை கேட்டதும் பெர்ரேயரா கோமாவிற்கு முன் இருந்ததை போல இயல்பாக எழுந்து தாய்ப்பால் கொடுத்ததால் அவர் விரைவில் குணமடைவார் என நம்புவதாக அவரது கணவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    [...]
  • மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்
  • அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளத்தில் துப்பாக்கி சூடு

சினிமா

பொது செய்திகள்

  • நித்யானந்தா

    தலைமறைவாக உள்ள நித்யானந்தாவால் தமது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ள ஜனார்தன சர்மா, நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாவதாக புகார் அளித்துள்ளார்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு சிறுவர்களை அடைத்து வைத்து குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தியதாக நித்யானந்தா ஆசிரம் மீது புகார் எழுந்தது. சிறுவர்களை வைத்து ஆசிரமத்திற்கு நிதி திரட்டியதாகவும், அப்போது சிறுவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் நித்யானந்தாவின் பெண் சீடர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் குழந்தைகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்தது உள்ளிட்ட புகார்களில் நித்யானந்தா மீதும் அகமதாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் தான் எங்கும் தப்பிச் செல்லவில்லை என்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு நித்யானந்தா விளக்கம் அளித்தார்.

    இதனிடையே நித்யானந்தா ஆசிரமத்தில் அடைபட்டிருக்கும் தமது மகள்களை மீட்டுத் தரக்கோரி ஜனார்தன சர்மா என்பவர் புகார் அளித்திருந்தார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்தன சர்மா, பெங்களூரில் நித்யானந்தாவின் குருகுலத்தில் தமது மூன்று மகள்களையும் மகனையும் சேர்த்ததாகவும் தானும் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். நித்யானந்தாவுடன் சுற்றுப்பயணத்திற்கு தமது மகள்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறிய சர்மா, அதன்பின்னர் தமது மூத்த மகள் திரும்பவில்லை என புகார் தெரிவித்துள்ளார்

    அவரை சந்திக்க அனுமதிக்காததால் போலீசில் புகார் அளித்ததாக தெரிவித்த ஜனார்தன சர்மா, ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாக தமது மகள்கள் கூறியதாக தெரிவித்துள்ளார். தமது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் ஜனார்தன சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

    [...]
  • டிக்டாக்
  • தற்கொலை